மோனிஷா நாவல்கள்
Monisha's VET - 12
Quote from monisha on November 4, 2021, 1:57 PM12
தமிழ் அந்தச் செய்தித்தாளை மீண்டும் மீண்டும் வாசித்து பார்த்தாள். அவளால் நம்பவே முடியவில்லை.
"இது பொய்யான நியூஸா இருக்கலாம் இல்ல ரகு?" என்று அவள் நண்பனிடம் கேட்க, அப்படி இருந்துவிடக் கூடாதா என்ற கடைசி நம்பிக்கைதான் அவளுக்கு.
ரகு தாமதிக்காமல் வேகமாய் தன் கைப்பேசியை எடுத்து சில தகவல்களைக் சேகரித்தவன் சோர்வோடு அவளருகில் வந்து, "பொய்யில்லை தமிழ்... உண்மைதான்... இந்த நியூஸைப் பேப்பர்ல தந்தது ஏசிபி வீரேந்திரனோட அப்பா" என்றான்.
கொஞ்சம் நஞ்சமிருந்த அவளின் நம்பிக்கையும் முறிந்து போக அந்தச் செய்தித்தாளைக் தூக்கியெறிந்தவள், "என்னைக் கேட்காம எப்படி இந்த மாதிரி ஒரு நியூஸ் கொடுக்கலாம்?!" என்று அவள் சீற்றமானாள்.
"ரிலேக்ஸ் தமிழ்" என்று தோழியை சமாதானப்படுத்த முயன்றான்.
"இது ரிலேக்ஸாகிற விஷயமா ரகு?! யாரோட லைஃப்லயாச்சும் இப்படி எல்லாம் நடக்குமா?! எனக்கு கல்யாணம்னு நானே நியூஸ் பேப்பர்ல பார்த்து தெரிஞ்சிக்கிற மாதிரியான மோசமான நிலைமை... என்னால இதை டைஜஸ்ட் பண்ணிக்கவே முடியல... அதுவும் அந்த ஏசிபியோடன்னு நினைச்சா தலையெல்லாம் சுத்துதுடா... ஐம் கெட்டிங் மேட்" என்று படபடப்பாகப் பேசியவளுக்கு அப்போதுதான் நடந்தவை எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது.
வீரேந்திரனிடம் பேசப் போய் ஸ்வேதா சந்தேகப்பட்டது, குடி போதையில் தன் தந்தை உளறிய வார்த்தைகள், இறுதியாய் தங்கை அரண்மனைக்கு வரச் சொன்னது என எல்லாவற்றையும் தொடர்புபடுத்திப் பார்த்தாள். ஒருவாறு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை அவளால் யூகிக்க முடிந்தது.
அவள் அமைதியாய் அமர்ந்திருப்பதைப் பார்த்த ரகு, "என்ன தமிழ்... இப்ப என்ன பண்ண போற?" என்று கேட்டான்.
"எங்க ஊருக்குப் போகப் போறேன் ரகு” அவள் தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டு தன் பையை எடுத்து கொள்ள,
"ஏய் என்ன? இப்பவேவா" என்று அவன் அதிர்ச்சியாக,
அவள், "ஆமாம்" என்றாள்.
"அப்படின்னா... உனக்கு அந்த மேரேஜ் ஓகேவா?" என்று அவன் தயக்கத்தோடுக் கேட்கவும்,
"அதெப்படி… என்கிட்ட சொல்லாம என் விருப்பத்தைக் கேட்காம எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணுவாங்க... நான் அதுக்கு சம்மதிக்கணுமா" என்று அவள் உக்கிரமாகப் பேச,
"விருப்பமில்லைன்னா நீ போகாம இருந்திடு தமிழ்... அவங்க என்ன பண்றாங்கனு பார்க்கலாம்" என்றான் ரகு.
"இல்ல ரகு... பிரச்சனையைப் பார்த்து ஓடி ஒளியறது அதற்கு தீர்வு இல்ல... எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் நான் அதை நேருக்கு நேராய் ஃபேஸ் பண்ணுவேன்... அப்படிதான் என் தாத்தா எனக்கு சொல்லிக் கொடுத்திருக்காரு...
நான் போய் இதெல்லாம் நியாயமான்னு கேட்க போறேன்... அதுவும் அந்த ஏசிபி நினைச்சாலே எனக்கு அப்படியே கோபம் கோபமா வருது... அவனுக்கு இவ்வளவு திமிரும் கர்வமும் ஆகாது... எல்லோர் முன்னாடியும் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லைனு சொல்லி அவனை நிக்க வைச்சு அவமானப்படுத்தணும்... அப்பதான் என் மனசு ஆறும்"
"நல்லா யோசிச்சுக்கோ தமிழ்... அங்க போனதும் உன்னைக் கட்டாயப்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சிட்டா"
"நெவர்... அப்படி எல்லாம் என் விருப்பமில்லாம யாரும் என்னை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க முடியாது"
"அப்படி சம்மதிக்க வைச்சிட்டா?!" என்று ரகு அழுத்தம் தந்து கேட்கவும் அவனை முறைத்தவள்,
"அப்படி மட்டும் நடந்துச்சு அந்த ஏசிபி செத்தான்... அப்புறம் லைஃப் லாங் அவனுக்கு ஆயுள் தண்டனைதான்... நான் தப்பு செஞ்சிட்டன்னு அவன்கிட்ட இறங்கி போய் மன்னிப்பு கேட்டதினாலே என்னை அவன் ரொம்ப சாதாரணமா எடை போட்டுட்டான்... அவனுக்குத் தெரியாது... நான் ஒரு விஷயத்தில பிடிவாதாமா நின்னுட்டா எதுக்காகவும் யாருக்காகவும் இறங்கி வர மாட்டேன்னு" என்றாள்.
"சரி தமிழ்... போலாம்... நானும் உன் கூட வர்றேன்" என்று ரகு சொல்லவும் அவள் மறுத்துவிட்டாள்.
"வேண்டாம் ரகு... நீ மட்டும் என் கூட வராதே... உன்னைக் கூட்டிட்டுப் போய் நான் இந்தக் கல்யாணத்தை வேண்டாம்னு மட்டும் சொன்னா என் சித்தியும் ரவியும் இதான் சான்ஸ்னு நம்ம ரிலெஷன்ஷிப்பைத் தப்பா திரிச்சிருவாங்க... அதை என்னால தாங்கிக்கவே முடியாது... ஸோ இதை நானே மேனேஜ் பண்ணிக்கிறேன்" என்றவள் சொல்வது ரகுவிற்கும் ஒரு வகையில் சரியென்றே தோன்றியது.
"ஓகே தமிழ்... நான் வரல... நீ பாத்து பத்திரமா போ" என்றவன் தைரியம் சொல்லி அவளை அனுப்பி வைத்தாலும் அவனுக்கு உள்ளுர கலக்கமாக இருந்தது. எப்படி அவள் இந்தப் பிரச்சனையை சமாளிக்கிற போகிறாளோ என்று!
அதேநேரம் செந்தமிழ் காரை எடுத்துக் கொண்டு அதிவேகமாக தன் சொந்த ஊரை நோக்கிப் புற்பட்டாள். அவளின் எண்ணமெல்லாம் இந்த திருமணத்திற்கு வீரேந்திரன் எப்படி சம்மதித்திருக்க முடியும் என்பதுதான்.
'நீ ஸ்பாயில் பண்ணது என் டிக்னிட்டியை... நான் அதை லேசில விடமாட்டேன்... அதுக்காக உன்னை வாழ்க்கை பூரா வருத்தப்பட வைக்கிறேன்' என்று அவர்களின் முதல் சந்திப்பின் போது அவன் கோபமாகச் சொன்னது அப்போது அவள் நினைவுக்கு வந்தது. தன் மீதான பழிவுணர்வைத் தீர்த்துக் கொள்ளவே இந்தத் திருமணத்திற்கு சம்மதித்திருப்பானோ என்று அவளுக்கு சந்தேகம் உண்டானது.
இந்தச் சிந்தனையோடு காரை ஓட்டிக் கொண்டு வந்தவள் சிம்மவாசல் எல்லை ஆரம்பம் என்ற அந்த ஊரின் வரவேற்பு பலகையைக் கவனித்தாள். அந்தக் கணமே மற்ற விஷயங்கள் யாவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பழைய ஞாபகங்கள் அவளுக்குள் அலையென எழும்பின.
சிம்மவாசல். வறண்டப் பிரதேசமாகவும் உப்புக்காற்றும் அனலின் தாக்கமும் உள்ள ஊர் என்று அங்கே நுழைந்து மாத்திரத்திலேயே அறிந்து கொள்ளலாம். அந்த ஊரின் சிறப்பம்சமே பார்ப்பவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்த வைக்கும் ராஜசிம்மனின் அரண்மனைதான்.
அவன் சந்ததிகள் அந்த ஊரை விட்டுப் போனாலும் அந்த அரண்மனை அவனின் பெயரையும் புகழையும் இன்னும் அழியாமல் நிலைப்பெற்றிருக்கச் செய்து கொண்டிருந்தது.
அந்த ஊரை ஒட்டியுள்ள கடற்கரையைப் பார்க்கும் போதெல்லாம் அவளின் தாத்தா சொன்ன விஷயங்கள் அவளுக்கு இப்போதும் ஞாபகத்திற்கு வரும்.
பல நூற்றாண்டுகள் முன்னர் கண்டங்கள் தாண்டி பன்னாட்டு வணிக மக்கள் மலைமலையாய் பொன்னையும் பொருளையும் அரிய வகை முத்துக்களையும் பவளங்களையும் அந்த ஊரின் கடற்கரையின் வழியாக எடுத்து வந்து விற்பனை செய்வது வழக்கமாயிருந்தது எனவும், பல பிரதேசங்களின் வணிக பெருமக்கள் வியாபாரம் செய்ய நுழைவாயிலாய் அந்த இடம் இருந்ததினால் அது சிம்மவாசல் என்றழைக்கப்பட்டதாகவும் அவள் தாத்தா கூறியிருந்தார்.
இப்போதும் கூட சிம்மவாசல் கடற்கரையில் பல மரக்கலங்களும் கப்பல்களும் நின்று கொண்டிருப்பதாய் ஒரு பிரமை அவளுக்குத் தோன்றும்.
அதுமட்டுமேயன்று ராஜசிம்மனால் அன்று இது பெரு வணிக நகரமாய் அமைக்கப்பட்டதால் இதனை அவனின் பெயராலேயே தொன்றுத் தொட்டு வழங்கப்பட்டு வருவதாகவும் அவளது தாத்தா சொல்லியுள்ளார்.
அத்தகைய வம்சத்தில் பிறந்தவள் தான் என்று எண்ணுகையில் செந்தமிழுக்கு எப்போதும் புல்லரிப்பும் பெருமிதமும் ஏற்படும்.
இவ்வாறு சிந்தித்தபடி அவள் அரண்மனைக்கு வந்துவிட்டிருந்தாள். ஒரு கணம் அவள் விழிகளை அவளாலேயே நம்ப முடியவில்லை. அவளின் திருமண வைபவத்தைக் குறித்து அவள் தாத்தா சிறுவயதில் விவரித்த அனைத்தும் அபப்டியே அவள் கண்முன்னே காட்சிகளாக விரிந்திருந்தன.
தான் பார்ப்பது கனவா நிஜமா என்று ஒருமுறைக்கு இருமுறை விழிகளை மூடி மூடித் திறந்து பார்த்தாள்.
சிம்மன் அரண்மனை முற்றிலும் புது வர்ணம் பூசி ஜொலிக்கும்படியாய் வண்ண விளக்குகள் தொங்கவிடப்பட்டிருந்தன. நுழைவாசலில் இருந்து வழி நெடுக பூமாலைகள் தோரணங்களாய் அலங்கரித்திருக்க, அழகிய வண்ண கோலங்கள் ஓவியங்களாய் வாசல் முழுவதும் நேர்த்தியாய் வரையப்பட்டிருந்தது.
காவலாளிகளும் வரவேற்பவர்களும் இசை மீட்டுபவர்களும் விருந்தாளிகளும் என அரண்மனை வாசல்புறமே நிரம்பியிருக்க, தான் ராஜசிம்மன் காலத்திற்கே சென்றுவிட்டோமா என்ற எண்ணம் அவளுக்குள் தோன்றி மறைந்தது.
ராஜசிம்மனே வந்தாலும் கூட இன்று புது பொலிவோடு திகழும் தன் அரண்மனையைப் பார்த்து அசந்து போயிருப்பான் போல என எண்ணிமிட்டுக் கொண்டவள் விழிகளை எடுக்க முடியாமல் வியப்பில் மூழ்கினாள்.
மெல்ல அந்தப் பிரமிப்பின் தாக்கத்திலிருந்து விடுபட்டவள், நாளை தங்கள் சந்ததிகளுக்கே இந்த அரண்மனை உரிமையற்றுப் போகப் போகிறதே என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
அவள் விழியோரம் நீர் கசிய தான் இழக்க போவது வெறும் கற்கள் மணல்களால் கட்டியெழுப்பிய அரண்மனையை அல்ல. தன் முன்னோர்களின் ஞாபகங்களையும் பல சந்ததிகளாய் கட்டிக் காப்பாற்றிய அவர்கள் பெருமையையும் புகழையும் என்ற எண்ணம் அவள் மனதைப் பலவீனப்படுத்தியது.
மெல்ல இவற்றை எல்லாம் பார்த்து கொண்டே காரிலிருந்து இறங்கி அரண்மனைக்குள் நடந்தவள் அரண்மனையின் பிரமாண்ட வாயிற்கதவிற்கு அருகில் வண்ண பூக்களால் ராஜவீரேந்திரபூபதி வெட்ஸ் செந்தமிழ் என்ற போர்ட் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த நொடி சீற்றமானாள்.
அவள் உள்ளமெல்லாம் கொதிப்படைய அந்த நொடியே போர்ட்டில் அவனுடன் சேர்ந்திருந்த தன் பெயரைப் பிரித்து எரிய வேண்டும் என்றளவுக்கு வெறியே வந்தது.
தன் தந்தையைத் தேடிக் கொண்டு அவள் உள்ளே நுழைந்தாள். அரண்மனை உள்தோற்றமும் அமைப்பும் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு திருமணத்திற்கான வடிவமைப்பில் இருந்தது. பழமையான ஓவியங்களும் வண்ண அலங்கார விளக்குகளும் மட்டுமே பழையபடி தன்னிலையில் இருந்து மாறாமல் இருந்தன.
ஆங்காங்கே உறவினர்கள் வேலையாட்கள் நின்றிருக்க யாருடைய கவனத்தையும் ஈர்க்க விரும்பாமல் அவள் உள்ளே செல்ல, ரவிவர்மன் அவளைப் பார்த்துவிட்டான்.
அந்தத் திருமண ஏற்பாடுகளை நிறுத்த இயலாமையால் தவித்திருந்தவனுக்கு இப்போது அவளின் வருகை இன்னும் எரிச்சலைக் கிளப்பியது.
அப்போது தேவியும் தமிழைப் பார்ததுவிட்டு, "அக்கா... எங்க நீங்க வராம போயிடுவீங்களோன்னு பயந்திட்டிருந்தேன்... நல்ல வேளை... நீங்க வந்துட்டீங்க..." என்று சொல்லி அவளை அவசரமாய் அறைக்கு இழுத்து சென்று கதவை அடைத்தாள்.
“உனக்கும் எனக்கும் இனி பேசிறதுக்கு எதுவும் இல்ல தேவி... நீ போய் அப்பாவைக் கூட்டிட்டு வா... நான் அவர்கிட்ட பேசணும்" என்றவள் கோபமாக தங்கையின் கையை உதறிவிடவும், தேவி அதிர்ந்தாள்.
"அக்கா ப்ளீஸ்… என் மேல கோச்சிக்காதீங்க" என்று அவள் கெஞ்ச
"நான் ஏன் உன் மேல கோபிக்க போறேன்... அதுக்கு எனக்கு உரிமை இருக்கா இல்ல ஏதாச்சும் நமக்குள் உறவுதான் இருக்கா? "என்று அவள் அலட்சிய பார்வையுடன் சொல்ல, தேவியின் விழிகளில் தாரைத் தாரையாய் நீர் வழிந்தது.
"ப்ளீஸ்க்கா ஸாரி... என்னைப் புரிஞ்சிக்கோ... அப்பாதான்" என்று வேதனையோடு மன்னிப்பு வேண்டியவளை தமிழ் கைக்காட்டி,
"நிறுத்து தேவி... நீ எனக்கு எந்த விளக்கமும் தர வேண்டாம்... அதை நான் கேட்கவும் விருப்பப்படல..." என்று சொல்ல,
"நான் செஞ்சது தப்புதான்... என்னை மன்னிச்சிடுங்கக்கா..." என்றாள்.
"நீ செஞ்சது தப்பா தேவி... உன் மேல நான் எவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தேன்... எப்படிறி உன்னால இப்படி பண்ண முடிஞ்சிது... தாத்தாவுக்கு அப்புறம் நம்ம வீட்டில உன்னைதானடி என்னோட எல்லாம்னு நினைச்சேன்... எல்லாரும் என்கிட்ட இந்த விஷயத்தை மறைச்சிட்டாங்க... நீயும் அவங்க கூட சேர்ந்துகிட்டு மறைச்சுட்ட இல்ல... ஃபோன்ல என் கூட பேசும் போது கூட உனக்கு எதுவும் சொல்லனும்னு தோனல இல்ல...
போடி... நீயும் என்னை ஏமாத்திட்ட... யாருமே இல்லாம அனாதையா இருக்கிறது கொடுமைன்னா... எல்லா உறவுகளும் இருந்தும் அனாதையா இருக்கிறது இருக்கு பார்... அதுதான் கொடுமையிலும் கொடுமை... நான் இந்த நிமிஷம் அப்படிதான் உணர்றேன்?!" என்று தழுதழுத்த குரலில் உரைத்தவள் அங்கிருந்து இருக்கையில் அமர்ந்து உடைந்து அழைந்தாள்.
அப்போது உள்ளே நுழைந்த ரவி, "இப்பதான் நீ தனியாள்ங்கிறதை உணர்ந்தியா... டூ லேட்" என்று எகத்தாளமாகப் பேச, அவனைச் சீற்றத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் மேலும், "இவ்வளவு ஆடம்பரமான கல்யாணம்... நீ ரொம்ப லக்கிதான்... இல்லாட்டிபோனா யாரோ உட்கார வேண்டிய மணிமேடையில் நீ உட்கார வேண்டி வந்திருக்குமா?!" என்று குத்தலாகச் சொல்ல,
"ரவி போதும்... உன்கிட்ட நான் பேச விருப்பப்படல… ஒழுங்கா வெளியே போயிடு" என்றாள்.
"ஆனா நான் உன்கிட்ட சொல்ல வேண்டியது எவ்வளவோ இருக்கு... அதுக்குள்ள நிறுத்துன்னு சொன்னா எப்படி... இந்த கல்யாணம் எதனால் எப்படி முடிவாச்சுன்னு நீ தெரிஞ்சிக்க வேண்டாமா?” என்று ரவி கேட்க, தமிழ் அமைதியானாள்.
அவன் என்ன சொல்ல போகிறான் என்று அவள் யோசனையாகப் பார்க்க, "வேண்டாம் ரவி... நீ எதையாவது சொல்லி அக்காவைக் குழப்பாதே" என்று தேவி இடையிட்டாள்.
"நீ அமைதியாய் இரு... உனக்கு எதுவும் தெரியாது" என்று அவன் தங்கையை அடக்க,
"தேவி கொஞ்சம் அமைதியாய் இரு... அவன் சொல்ல வந்ததைச் சொல்லட்டும்" என்றாள் தமிழ்.
தேவிக்குப் பதட்டமானது. அவன் எங்கே இல்லாததை எல்லாம் சொல்லி பிரச்சனையைப் பெரிதாக்கி விடுவானோ என்று பயந்து உடனடியாக தந்தையை அழைத்து வர விரைந்தாள்.
ரவி அப்போது தமிழை ஏளனமாகப் பார்த்து, "இதெல்லாம் உனக்குதான் ஏற்பாடாயிருக்குன்னு மனக்கோட்டைக் கட்டிக்காதே... நீ ஏதோ இந்தக் கல்யாணத்துக்கு அவசரமா கிடைச்சிருக்கிற சப்ஸ்ட்டியூட்... அவ்வளவுதான்... இன்னும் சொல்லனும்னா அந்த வீரேந்திரன் குடும்ப கௌரவத்தைக் காப்பாத்திக்க உன்னை யூஸ் பண்ணிக்கிறாங்க
இங்க நடக்கிறது மேரேஜ் இல்ல... எல்லாருக்கும் ஒரு வகையில அவங்க அவங்க பிரச்சனையை சரி செய்ய போற சொல்யூஷன்...... உன் வருங்கால மாமனாருக்கு இந்தக் கல்யாணம் நின்னு போகாம அவர் கௌரவத்தைக் காப்பாத்திக்கனும்... உன் மூலமா இந்த அரண்மனையைச் சொந்தமாக்கிக்கனும்…
அந்த ஏசிபிக்கு தாலி கட்ட ஒரு பொண்ணு வேணும்... அதுவும் இல்லாம நீ அவனைப் பத்தி தப்பான நியூஸ் போட்டதுக்காக உன்னைப் பழியும் தீர்த்துக்கலாம் பாரு...
இதுல நம்ம அப்பாவுக்கும் லாபம்தான்... உன் வருங்கால மாமானார்கிட்ட வாங்கின கடனுக்கு உன்னையும் இந்த அரண்மனையையும் சேர்த்தே சீதனமா கொடுத்திட்டா... அவர் பாரமும் கழிஞ்சிடும்... அதான் சொன்னேன்... இது கல்யாணம் இல்ல... உன்னை வைச்சி எல்லோரோட பிரச்சனையையும் தீர்த்துக்கிறாங்க" என்றான்.
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்குள் ஈட்டியாய் பாய்ந்தது. ரவி அதோடு நிறுத்தவில்லை. மேலும் அவள் வேதனையை தம் வாரத்தைகளால் குத்திக் காயப்படுத்தினான்.
"அட்வான்ஸ் ஹேப்பி மேரிட் லைஃப் சிஸ்டர்... ப்ச்... ஹேப்பிங்கிற வார்த்தை இனிமே உன் வாழ்க்கையில வார்த்தையளவிலதான் இருக்கும்" என்று சொன்னவனுக்கு, அவளின் திருமணத்தை அப்போதைக்கு நிறுத்த முடியாமல் போனாலும் அவளை முடிந்தளவுக்குக் காயப்படுத்திவிட்டோம் என்ற குரூரமான சந்தோஷம் ஏற்பட்டது.
அவன் அங்கிருந்து அகன்றுவிட, இவற்றை எல்லாம் கேட்ட தமிழ் அவமானத்தாலும் வேதனையாலும் உடலும் மனமும் குன்றிப் போய் நின்றாள்.
தன் உணர்வுகளைப் பற்றி யாருக்கும் எந்த மதிப்பும் கவலையும் இல்லையா? என்றவள் உள்ளம் வேதனையில் துடித்தது. அந்தச் சமயத்தில் தேவியும் விக்ரமவர்மனும் அறைக்குள் நுழைந்தனர்.
விக்ரமவர்மன் தன் மகள் அருகில் வந்து, "தமிழ்" என்றழைக்க அவர் முகத்தைக் கூட பார்க்க விருப்பமின்றி, "ப்ளீஸ் நீங்க எதுவும் பேச வேண்டாம்... நானும் எதையும் கேட்க விருப்பப்படல" என்றவள் விலகிச் சென்றாள்.
"நான் சொல்றதைக் கேளு தமிழ்... நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லனும்னுதான்" என்று அவர் பேச ஆரம்பிக்க,
"அப்ப கூட சொல்லனும்னுதான் நினைச்சீங்க... என் விருப்பத்தைக் கேட்கனும்னு நினைக்கல... இல்ல" என்றவள் கோபமாகப் பாய,
"நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளு" என்றவர் தன் பக்க நியாயத்தை அவளிடம் புரிய வைக்க முனைந்தார்.
"என்ன பெரிசா சொல்லிட போறீங்க... நான் இந்த கல்யாணத்துக்கும் சம்மதிக்கனும்... அதானே... கண்டிப்பா அது மட்டும் முடியவே முடியாது" என்றாள் தீர்க்கமாக!
"நீதானே என்கிட்ட எல்லாம் உங்க விருப்பம்னு சொன்னே... இப்ப வந்து முடியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்" என்று அவரும் சீற்றமாக,
"நான் சொன்னேன்தான்... இப்ப கூட நீங்க எனக்கு கல்யாணம் பேசி முடிச்சிருந்தா நான் சம்மதிச்சிருப்பேன்... ஆனா நீங்க என்னை வைச்சு பிஸ்னஸ் இல்ல பேசி முடிச்சிருக்கீங்க?!" என்று கேட்டாள்.
"இல்ல தமிழ்... நீ நினைச்சிட்டிருக்கிறது தப்பு... நான் அப்படி மட்டும் யோசிச்சி இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கல"
"நீங்க என்ன விளக்கம் கொடுத்தாலும் இந்தக் கல்யாணம் நடக்க போறதில்ல... நடக்கவும் நடக்காது" என்று அவள் அழுத்தமாய் சொல்லி முடிக்கும் போது வீரேந்திரனின் தாய் சந்திரா அந்த அறை வாசலில் வந்து நின்றிருந்தார்.
தேவியும் விக்ரமவர்மனும் அவரைக் கண்டு பதட்டமடைந்தனர்.
அப்போது தேவி தமிழின் கரத்தைப் பற்றி, "மாப்பிள்ளையோட அம்மாக்கா... ப்ளீஸ் அப்புறம் பேசிக்கலாம்" என்று அவளை அமைதியாக்க முயல,
தமிழ் சற்றும் அசராமல், "ஓ... ஏசிபி சாரோட அம்மா நீங்கதானா?" என்று திரும்பி நின்று சந்திராவைப் பார்த்து,
"உங்க பிள்ளைகிட்ட போய் சொல்லுங்க... எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்ல... இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டாள்.
சந்திரா அதிர்ந்து நிற்க, "தமிழ்" என்று விக்ரமவர்மன் மகளை அடக்க முற்பட்டார். ஆனால் அவள் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை.
"சும்மா கத்தாதீங்கபா... நான் சொன்னா சொன்னதுதான்... நடக்காதுன்னா நடக்காது" என்று அழுத்தமான பிடிவாதத்தோடுச் சொல்லி நிறுத்தினாள்.
சந்திரா வருத்தத்துடன் அங்கிருந்து தன் அறைக்கு வந்து சேர, அங்கே வீரேந்திரன் கைப்பேசியில் அளவளாவிக் கொண்டிருந்தான்.
அவர் வேதனையுடன் படுக்கையில் அமர்ந்து கொள்ள, அவரின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. அதனைக் கவனித்தவன் கைப்பேசியைத் துண்டித்துவிட்டு அவர் அருகில் அமர்ந்து,
"என்னாச்சு ம்மா... உடம்புக்கு ஏதாவது பண்ணுதா... வேலை செய்றதுக்கு ஆளா இல்ல.. நீங்க ஏன் ஸ்டிரெயின் பண்ணிக்கிறீங்க" என்று அக்கறையாக விசாரித்தான்.
"அதெல்லாம் இல்ல வீர்" என்று சந்திரா மகனின் தோளில் சாய்ந்தபடி கண்ணீர்விட,
"ம்மா என்னாச்சு? ஏன் அழறீங்க?" என்று பதறினான்.
"இவ்வளவு ஏற்பாடுகள் செஞ்சு இந்தக் கல்யாணம் நின்னுட்டா... உங்க அப்பா" என்று பேசமுடியாமல் நிறுத்தி மீண்டும் அவர் கண்ணீர் வடித்தார்.
"என்னமா சொல்றீங்க? இந்தக் கல்யாணம் நிக்க போகுதா... ஏன் தேவையில்லாம பயந்திட்டிருக்கீங்க... அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது" என்று அவன் நம்பிக்கையோடுச் சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்தவர், "கல்யாண பொண்ணே இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லும் போது எப்படிறா இந்தக் கல்யாணம் நடக்கும்?!" என்று கேட்டார்.
"வேண்டாம்னு சொன்னாளா? இது எப்போ” என்று அவன் புரியாமல் கேட்க,
"அவங்க அப்பாகிட்ட சொல்லிட்டிருந்தா வீர்... போதாக்குறைக்கு என்னையும் பார்த்து உங்க மகன்கிட்ட போய் சொல்லுங்க... எனக்கு இந்தக் கல்யாணத்தில இஷ்டம் இல்லை... இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொன்னா வீர்" என்றவர் சொல்ல அவன் பார்வையில் கோபம் தெறித்தது.
"உங்களை நேரடியா பார்த்து அவ அப்படி சொன்னாளாம்மா?" என்று அவன் கேட்க,
"ம்ம்ம்... ஆமான்டா" என்று அவர் வருத்தமாய் தலையசைத்தார்.
சீற்றமாக எழுந்தவன், "அவ்வளவு திமிரா? இவ்வளவு தூரம் வந்த பிறகுதான் மேடம் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவாங்களாம்மா?" என்று கர்ஜித்தான்.
"பொறுமையா இரு வீர்" என்றவர் மகனிடம் நிதானமாக, "நீ எப்படியாவது அந்தப் பொண்ணுகிட்ட சமாதானமா பேசி சம்மதிக்க வை வீர்... அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சா" என்று சொல்ல அவன் கோபம் கொஞ்சமும் குறையவில்லை.
"சமாதனமா பேசிறதா... போயும் போயும் அவகிட்ட... சத்தியமா மாட்டேன்" என,
"நீதானே வீர் அவளை கல்யாணம் பண்ணிக்கனும் சொன்ன... இப்போ நீயே இப்படி பேசினா எப்படி?" என்று அவர் கேட்க,
"நான் அவகிட்ட சமாதானமா பேசமாட்டேன்தானே சொன்னேன்... அவளை சம்மதிக்க வைக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே? நீங்க டென்ஷனாகதீங்க... அவ விருப்பப்பட்டாலும் விருப்பப்படலனாலும் இந்தக் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்" என்று சொல்லிவிட்டு அவன் விறுவிறுவென வெளியேற, அவருக்குப் பதட்டமானது.
சந்திராவிற்கு இந்தத் திருமணம் நடக்குமா என்ற கவலை ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் இந்தத் திருமணம் நடந்தால் பிடிவாதத்தின் உச்சத்தில் இருக்கும் இருவரும் எப்படி ஒத்துப்போவார்கள் என்ற எண்ணம் அவரை மேலும் திகிலடையச் செய்தது.
12