மோனிஷா நாவல்கள்
Monisha's VET - 13
Quote from monisha on November 5, 2021, 9:42 PM13
விக்ரமன் கடைசி முயற்சியாய் மகளிடம், "இந்தக் கல்யாணம் நடக்கலன்னா எல்லார் முன்னாடியும் நான் தலைகுனிஞ்சு நிற்க வேண்டியிருக்கும்... உனக்கு அதை பத்தி எல்லாம் கொஞ்சங்கூட கவலை இல்லையா?!" என்று கேட்க,
"உங்களுக்கே என் மேல அக்கறையில்லன்னும் போது எனக்கு மட்டும் என்ன?! எனக்கும் எதை பத்தியும் கவலை இல்லை" என்று அவள் அலட்சியமாய் பதிலளித்தாள்.
"கொஞ்சம் யோசிச்சி பாருக்கா... இவ்வளவு தூரம் வந்துட்ட பிறகு" என்று தேவியும் தன்னால் இயன்ற முயற்சியைச் செய்து பார்த்தாள். ஆனால் தமிழ் கொஞ்சமும் இறங்கி வரவில்லை.
"என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாதே தேவி... நான் இங்கே வந்ததே இந்தக் கல்யாணத்தை நிறுத்திறதுக்குதான்" என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டு அவள் திரும்பும் போது வாசலில் வீரேந்திரன் நின்றிருந்ததை பார்த்து அரண்டு போனாள்.
அவன் வெகுநேரம் முன்பாகவே அங்கே வந்து விட்டான் என்பதை அவன் கோபப்பார்வையே அவளுக்கு எடுத்துரைக்க, அவளுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. அதிர்ச்சியிலும் கொஞ்சம் பயத்திலும் அவள் இதழ்கள் தாமாகவே பூட்டிக் கொண்டன.
அந்த நொடி விக்ரமவர்மனும் தேவியும் கூட வீரேந்திரனைப் பார்த்து திகைத்து நின்றுவிட, "நான் தமிழ்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் அங்கிள்" என்றவனின் கம்பீர குரல் அந்த அறையின் மௌனத்தைச் சிதறடித்தது.
‘ஐயோ! இவன்கிட்ட போய் தனியா மாட்டிக்கிறதா?’ என்றவள் உள்ளம் படபடக்க, "எதுக்கு பேசணும்? என்ன பேசணும்? அதான் நான் என் முடிவை தெளிவா சொல்லிட்டேன் இல்ல" என்றவள் அந்தப் பேச்சை அதோடு முடிக்கப் பார்த்தாள்.
வீரேந்திரனின் விழிகள் கோபமாய் அவளை நோக்கியது. அவளுக்கு உள்ளுர குளிர் பரவியது. அப்போது விக்ரமவர்மன் தயக்கத்தோடு, "இல்ல மாப்பிள்ளை... அவ" என்று ஏதோ சொல்ல எத்தனிக்க,
"கோபமா இருக்கா... அதானே அங்கிள்... நான் பார்த்துக்கிறேன்" என்றான் அவன் சாதாரணமாக!
"என்ன நீங்க பார்த்துக்க போறீங்க?!" என்று அவள் கேட்ட போது லேசாக அவள் குரல் நடுங்கியது.
அவன் அவளுக்கு பதில் சொல்லாமல் விக்ரமனைப் பார்க்க, அவர் தேவியைப் பார்த்து கண்ணசைக்க இருவரும் வெளியேறினர். தமிழின் உள்ளமோ கொதிகலனாக மாறியது.
அவனோ சற்றும் அசராமல் அவளை முறைத்து பார்த்துவிட்டு கதவை அடைக்க, "இப்ப எதுக்கு டோரை க்ளோஸ் பண்ணீங்க… கதவை திறங்க முதல" என்று படபடப்போடு முன்னே வரவும் அவன் வழிமறித்து நின்றான்.
"நீ பேசுறது ஊருக்கெல்லாம் கேட்கணுமா... அதான் கதவை மூடினேன்" என்று சொல்ல,
"கேட்கட்டும் ஏசிபி சார்... எல்லாருக்கும் கேட்கட்டும்... எனக்கு இந்தக் கல்யாணத்தில விருப்பமில்லைன்னு எல்லாரும் தெரிஞ்சிக்கட்டுமே?!" என்றாள் சீற்றத்துடன்!
"உன் மனசில என்ன நினைச்சுட்டிருக்க... ஏற்கனவே என்னை பத்தி தப்புதப்பா எழுதி அவமானப்படுத்தின... இப்ப ஊரையே கூட்டி வைச்சி இந்தக் கல்யாணம் வேணான்னு சொல்லி என்னை மறுபடியும் அவமானப்படுத்தப் பார்க்கிறியா?!"
"உங்களை அவமானப்படுத்தனுங்கிறது என் மோட்டிவ் இல்ல... எனக்கு இந்தக் கல்யாணத்தில விருப்பமில்ல... அவ்வளவுதான்"
"என்ன விளையாடுறியா? இவ்வளவு தூரம் வந்த பிறகு இந்தக் கல்யாணத்தில விருப்பமில்லைன்னு சொன்னா... யார் என்ன பண்ண முடியும்?"
"என்னவாச்சும் பண்ணுங்க... ஐ டோன்ட் கேர்... ஆனா எனக்கு இந்தக் கல்யாணம் நடக்க கூடாது... அவ்வளவுதான்" அவனின் கோபம் அவளின் அலட்சியமான வார்த்தைகளால் எல்லையை மீறிப் போக, அவன் குரலை உயர்த்தினான்.
"நீ நினைச்ச மாதிரியெல்லாம் செய்ய முடியாது... உனக்கு விருப்பமில்லைன்னா என்கிட்ட சென்னையிலேயே சொல்லிருக்கணும்... அதை விட்டுவிட்டு இங்க வந்து நின்னுகிட்டு வேண்டாங்கிற" என்று சீறினான்.
"முதல்ல ஒரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கோங்க... எனக்கு இன்னைக்கு காலையிலதான் கல்யாணம்ங்கிற விஷயமே தெரியும்... அதுவும் நீயூஸ் பேப்பர்ல பார்த்துதான் நானே தெரிஞ்சிக்கிட்டேன்" என்று அவள் தெளிவுப்படுத்த, அவர்களுக்கிடையில் நிகழ்ந்த அனல் தெறிக்கும் விவாதம் சற்று தணிந்தது.
அவன் தீவிரமாக யோசித்துவிட்டு பின் அவளை நோக்கி, "நீ சொல்றது கொஞ்சம் கூட நம்பிற மாதிரி இல்லையே... வீட்டில கல்யாண ஏற்பாடு பண்றது கூடவா உனக்கு தெரியாது?!" என்று சந்தேகமாகக் கேட்டான்.
"எனக்கு உண்மையிலேயே தெரியாது... நான் இரண்டு நாளா ஊர்ல இல்ல... என்கிட்டயும் யாரும் இதை பத்தி சொல்லல" என்றாள்.
"ஊர்ல இல்லாம மேடம் எங்க போனீங்க?" என்று புருவத்தை உயர்த்தி அவன் கேட்க, அந்த ஒரு நொடி ஆர்க்கியாலஜிஸ்ட் வீட்டிற்குச் சென்றதெல்லாம் கண் முன்னே தோன்றி அவளுக்குத் திகிலூட்டியது.
அச்சம் தொற்றிக் கொள்ள அவள் யோசனையாக நின்றாள். அவன் உடனே, "பொய் சொல்றியா?" என்று கேட்க, அந்த நொடி அவள் இதயதுடிப்பு எகிறியது.
"நான் பொய்யெல்லாம் சொல்லல" என்றவள் கொஞ்சம் தடுமாற,
"அப்ப எங்க போயிருந்த?!" என்றவன் விடாமல் குடைய தொடங்கினான்.
"நான் எங்கயோ போனேன்... அதெல்லாம் உங்ககிட்ட நான் எதுக்கு சொல்லணும்... என்கிட்ட கேட்கிறதுக்கு உங்களுக்கு உரிமையையும் இல்ல... எனக்கு உங்ககிட்ட சொல்றதுக்கு விருப்பமும் இல்ல" என்று அவன் முகத்திலறைந்தது போல பதில் சொல்லிவிட்டு திரும்பி நின்று கொண்டாள்.
நேர்கொண்டு பார்க்கும் அவள் விழிகள் அவனைப் பார்க்க தவிர்ப்பதைக் குறித்து கொண்ட அவன் போலீஸ் மூளை, அவள் எதையோ மறைக்கிறாள் என்று சந்தேகப்பட்டது.
அதேநேரம் அவள் உரிமை இல்லை என்று குறிப்பட்டதைப் பற்றி யோசித்தவன், 'உரிமை இல்லையாமே... இருக்கட்டும்... கூடிய சீக்கிரம் அந்த உரிமை வரும்... அப்போ உன்னைப் பார்த்துக்கிறேன்' என்று எண்ணிக் கொண்டான்.
அதன் பின் அவளிடம் பொறுமையாகவே இறங்கிப் பேசினான்.
"சரி… நீ எங்க போயிருந்தாலும் அது உன் தனிப்பட்ட விஷயம்… ஆனா இங்கே பிரச்சனையே வேற… இவ்வளவு ஏற்பாடுகள் பண்ண பிறகு இந்தக் கல்யாணத்தை நிறுத்தறதெல்லாம் சாத்தியமே இல்ல” என்றான்.
“முடியவே முடியாது... நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்ததான் போறேன்... என்னை யாராலும் தடுக்க முடியாது" என்று அவள் பிடிவாதமாக நிற்க, அவன் பொறுமை கரைந்து போனது.
"என்னடி ஓவரா பண்ணிட்டிருக்க... இந்தக் கல்யாணம் நின்னா எவ்வளவு பெரிய லாஸ் தெரியுமா?"
"இந்தக் கல்யாணம் மட்டும் நடந்தா என் வாழ்க்கையே லாஸாயிடுமே... அதை யார் திருப்பி தருவா?" என்றவள் அவனுக்குப் பதிலடிக் கொடுக்க, அந்த வார்த்தை வீரேந்திரனின் மனதை அழுத்தமாய் காயப்படுத்தவும் அவமானப்படுத்தவும் செய்தது.
மூச்சை இழுத்துவிட்டு கொண்டவன், "இப்ப என்ன... உனக்கு இந்தக் கல்யாணத்தை நிறுத்தனும்... போ... போய் நிறுத்திக்கோ... எல்லாரையும் கூப்பிட்டு நிக்க வைச்சு நீயே மைக் போட்டு சொல்லிடு... எனக்கு இந்தக் கல்யாணத்தில விருப்பமில்லைன்னு... போ" என்று அந்த இடமே அதிர கத்தினான்.
அவன் சீற்றத்தைப் பார்த்து அவள் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். "இன்னும் ஏன் நிற்கிற... போய் சொல்லு" என்றவன் மேலும்,
“நீ இப்ப என்ன செய்ய போற தெரியுமா... இந்த ஊரே பெருமையா பேசிட்டு இருக்க உங்க தாத்தாவோட பேரு உங்க குடும்பத்தோட வரலாறு பெருமை கௌரவம் எல்லாத்தையும் ஒன்னுமே இல்லாம தவிடு பொடியாக்க போற" என்றான்.
"நான் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா... எங்க தாத்தாவோட பேரையும் எங்க குடும்பத்தோட கௌரவத்தையும் கெடுத்ததாகிடுமா... புல் ஷிட்... பைத்தியகாரத்ததனமா பேசாதீங்க" என்றவள் எரிச்சலடைய,
"பின்ன ஆகாதா? இங்க உன்னோட கல்யாணம் நின்னுபோச்சுன்னா அது உனக்கும் எனக்குமான பிரச்சனை மட்டும் இல்ல... நம்ம இரண்டு பேர் குடும்ப கௌரவம் சம்பந்தபட்டது... என் குடும்பத்தைவிட... உங்க குடும்பத்துக்குதான் அதிக அவமானம்... ஏன்னா நீ நிக்கிறது உங்க ஊர்ல... உங்க அரண்மனையில... நீ எது செஞ்சாலும் சிம்மவர்மனோட பேத்தியாதான் எல்லார் கண்ணுக்கும் தெரிவ... உங்க குடும்ப வரலாறைப் பத்தி உயர்வா பேசுறவங்க... நீ இப்படி பண்ணா நாளைக்கே சிம்மவர்மனோட பேத்தி திமிரும் அகம்பாவமும் பிடிச்சவன்னு பேசுவாங்க... நீ இப்படி செய்றது உன் குடும்பத்தையும் உன்னையும் நீயே அவமானப்படுத்திக்கிற மாதிரி" என்றான்.
"போதும் நிறுத்துங்க... எந்தத் தப்பையும் செய்யாத நான் ஏன் அவமானப்படனும்"
"அதனால்தான் சொல்றேன்... இந்த கல்யாணம் நடந்தா பிரச்சனை நமக்குள்ள பெர்ஸன்லா இருக்கும்... நீ இதை நிறுத்தினும்னு நினைச்ச... நாம மட்டுமில்லாம, நம்ம இரண்டு பேருடைய குடும்ப கௌரவமும் சேர்ந்து பாதிக்கப்படும்… அதுவும் இல்லாம நீயூஸ் பேப்பர் வரைக்கும் வந்திருச்சு... இனிமே இந்தக் கல்யாணம் நின்னாலும் நடந்தாலும் இரண்டும் ஒன்னுதான்... நீ எங்க வெளிய போனாலும் என் பொண்டாட்டியாதான்.. எல்லோரும் உன்னைப் பார்ப்பாங்க" என்றான்.
அவள் கோபமாக அவனை முறைக்க, "முறைக்காதே... அதுதான் நடக்கும்... அதேதான் என் நிலைமையும்" என்றான்.
"என் பலவீனத்தைத் தெரிஞ்சு வைச்சுகிட்டு என்னை கார்னர் பண்றீங்க ஏசிபி சார்" என்று அவள் சொல்ல அவன் கைக்கட்டி நின்றபடி,
"நான் கார்னர் பண்ணல... டெசிஷன் இஸ் நவ் யுவர்ஸ்" என்றான்.
அவன் யுக்தி ஒருவகையில் நன்றாகவே வேலை செய்தது. அவளுக்கு இந்த உலகத்திலேயே மிக முக்கியமான உறவு என்றால் அவள் தாத்தாதான். அவருக்கு ஒரு அவமானத்தை அவளால் நிச்சயமாகத் தேடி தர முடியாது.
இதனால் தன் வாழ்க்கையே போனாலும் பரவாயில்லை என்றவள் மனம் அந்த நொடி அவனுடனான திருமண வாழ்க்கை ஏற்பதற்கான சாத்திய கூறுகளை யோசித்தது. ஆனால் எப்படி யோசித்தாலும் அவனுடன் வாழ்க்கை முழுவதும் என்பதை யோசிப்பதற்கே பயமாக இருந்தது.
“என்ன முடிவு பண்ணிருக்க?” என்றவன் கேட்க,
"நான் என்ன முடிவு பண்றது… அதான் நீங்களே முடிவு பண்ணிட்டீங்களே… அதுவும் பத்திரிக்கையில நியூஸ் போடுற வரைக்கும்" என்றாள்.
"நீ பத்திரிக்கையில் நியூஸ் போட்டு என் பேரைக் கெடுதத்தியே… அதை விட இது ஒன்னும் மோசம் இல்ல” என்று உரைக்க அவள் அதிர்ச்சியோடு, “இப்ப என்ன சொல்ல வர்றீங்க” என்று கேட்டாள்.
“நடந்த எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம்… நீ ஒழுங்கா விசாரிக்காம நியூஸ் போட்டதாலதான் இந்தக் குழப்பமெல்லாம் நடந்தது… இதுல மன்னிப்பு கேட்குறேன்னு என்னைத் துரத்தி வந்து ஸ்வேதாவை சந்தேகப்பட வைச்சு என் கல்யாணத்தை நிறுத்தினதுதான் மிச்சம்" என்று அவன் கூற, அவளுக்கு எரிச்சல் மிகுந்தது.
"நிறுத்துங்க போதும்... சும்மா உன்னாலதான் உன்னாலதான்... என்னையே பின்பாயின்ட் பண்ணாதீங்க.. ஸ்வேதா உங்களை சந்தேகப்பட்டதுக்கு நான் காரணம் இல்ல"
"பின்ன வேற யார் காரணமாம்... நீதான்... மேகஸின்ல என்னைப் பத்தி தப்பா எழுதினதினாலதான் அவ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டா... யூ ஆர் ரெஸ்பான்ஸிபிள்" என்றவன் அழுத்தமாகக் கூற,
"நோ ஐம் நாட்" என்று அவள் குரலை உயர்த்தினாள்.
"நீ கத்தி உன் தப்பை சரி கட்டிடலாம்னு மட்டும் பார்க்காதே"
"அய்யோ!! திரும்பியும் முதலில் இருந்து அந்தப் பிரச்சனையை ஆரம்பிக்காதீங்க... நான்தான் மறுப்பு செய்திக் கொடுத்திட்டேன் இல்ல... அது இன்னைக்கு மேகஸின்ல பப்ளிஷும் ஆகிடுச்சு... இதுக்கு மேல நான் என்னதான் பண்றது?!" என்று அவள் கடுப்பானாள்.
"நீ மறுப்பு செய்திக் கொடுத்தா எல்லோரும் நம்பிடுவாங்களா... நிச்சயமா மாட்டாங்க... நான் என் பவரை யூஸ் பண்ணிதான் போட வைச்சேன்னு நினைப்பாங்க"
அவன் மீண்டும் மீண்டும் தன்னையே குற்றாவாளியாய் நிற்க வைக்கிறானே என்று அவள் மனம் அவதியுற அவனோ,
"பட் நீ கொஞ்சம் இறங்கி வந்தா உன் தப்பை சரி செய்ய முடியும் தமிழ்" என்றான் சற்றே இறங்கிய குரலில்.
அவள் அவனைப் புருவங்கள் முடிச்சிட பார்க்க, “எழுதின நீயே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா... அப்ப எல்லாரும் நம்புவாங்க இல்ல... அதுக்கப்புறம் என்னை யார் தப்பா பேச முடியும்... ஸோ உன் தப்பைத் திருத்திக்க பாரு... இப்போதைக்கு இதுதான் ஒரே வழி" என்றான்.
அவளுக்கு அவன் வாதம் அதிர்ச்சியாக இருந்தது. "இது தப்பை திருத்திக்கிறதுக்கான வழியா எனக்கு தெரியல... இது என் தப்புக்கான தண்டனை மாதிரிதான் தெரியுது" என்றாள்.
"நீ எப்படி எடுத்துக்கிட்டாலும்... ஐ டோன்ட் கேர்... உங்க குடும்ப கௌரவமும் சரி... நீ உடைச்ச என் கௌரவமும் சரி... இரண்டுமே இந்தக் கல்யாணம் நடக்கிறதிலதான் இருக்கு" என்று சொல்ல, அவள் மனம் துவண்டது.
தன் தாத்தாவின் கௌரவத்தைப் பற்றி எண்ணி இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்க அவள் முன்னமே தயாராகிவிட்டாள். ஆனால் அவனோ தண்டனையாகவே இந்த உறவை தன் மீது திணிக்க நினைக்கிறான் என்ற போது அவள் மனம் வேதனையில் புழுங்கியது.
ஒரு வகையில் வீரேந்திரனின் நிலைமையும் கூட அதேதான். அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமே இல்லை என அவன் முகத்துக்கு நேராய் சொல்லி நிராகரிக்க, அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவளைத் தன்னுடைய உறவாக்கிக் கொள்ள வேண்டுமே என்ற மனப்போராட்டத்தில் அவளைக் கட்டாயத்திற்குள் தள்ளினான் என்பதே உண்மை.
இருவருமே ஒரே நிலையில் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் மீண்டும் மீண்டும் அவர்கள் எதிர் எதிர் துருவங்களாக நிற்கும் சூழ்நிலையே உருவாகியிருந்தது.
சில நிமிடங்கள் அந்த அறையை மௌனம் ஆட்சி செய்தது.
தமிழ் ஒருவாறு தன் மனதைத் தேற்றிக் கொண்டு, "எனக்கு இந்தத் தண்டனை தேவைதான் ஏசிபி சார்... உங்களைப் பத்தி விசாரிக்காம எழுதினது... என்னோட முதல் தப்பு... அதைவிட பெரிய தப்பு... உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்க வந்தது" என்றாள். இப்போதும் அவள் தன்னை திருமணம் செய்து கொள்வதைத் தண்டனையாய் கருதுகிறாளா என்று அவன் உள்ளம் கொதித்தது.
இருப்பினும் தன் மனநிலையைக் காட்டிக் கொள்ளாமல், "அப்போ உனக்கு கல்யாணத்துக்கு சம்மதம்... அப்படிதானே" என்றான்.
“ம்ம்ம்” என்று அவளும் சம்மதமாகத் தலையசைத்தாள். அதன் பின் அவன் மேலே பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேற போனவன் வாசல் வரை போய் நின்று,
"ஆன்.. தமிழச்சி… இந்த பேன்ட் சட்டை எல்லாம் கழட்டிப் போட்டுட்டு நல்ல புடவையாய் மாத்திக்கோ" என்று கொஞ்சம் அதிகார தொனியில் உரைத்துவிட்டு வெளியேறிவிட,
'கல்யாணத்துக்கு சம்மதிச்சி அஞ்சு செகண்ட கூட ஆகல... அதுக்குள்ள அதிகாரம் பண்றான்..' என்று அவளுக்குக் கடுப்பேறியது.
அந்தக் கணம் கோபம் வெறுப்பு அழுகை என எல்லா உணர்வுகளும் ஒன்று சேர்ந்து கொண்டு அவளை திணறடித்தது.
13