மோனிஷா நாவல்கள்
Monisha's VET - 18
Quote from monisha on November 13, 2021, 1:49 PM18
வீரேந்திரனின் கார் சென்னையை வந்தடைய மாலையாகிவிட்டது. ஆனால் அவர்கள் இருவரின் குடும்பத்தாரும் அவர்களுக்கு முன்னதாகவே வந்து சேர்ந்துவிட்டனர்.
ஆரத்தி எடுப்பது போன்ற வழமையான சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதற்கிடையில் அங்கிருந்த எல்லோரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது விரல் தடம் பதிந்த தமிழின் இடது கன்னம்தான்.
விஜயா அப்படியொரு வாய்ப்புக்காகவே காத்திருந்தார். இதுதான் சாக்கு என்று வீரேந்திரனையும் அவன் தாயையும் கேள்வி மேல் கேட்டுத் துளைத்து எடுக்க, தமிழுக்கு ஒன்றும் புரியவில்லை.
தன் சித்தியா தனக்காக அக்கறைப்பட்டு பேசுகிறார் என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது. அதனை நம்புவதற்கு ரொம்பவும் கடினமாகவும் இருந்தது.
தேவி அப்போது தன் தமக்கையை நெருங்கி, "என்னதான் நடந்தது? ஏன் மாமா உன்னை அடிச்சாரு?!" என்று அவள் காதோடு கிசுகிசுக்க,
"அதெல்லாம் அப்புறம் சொல்றேன்டி" என்றாள்.
தமிழை அந்த நொடி அச்சம் தொற்றிக் கொண்டது. சாதாரணமாகவே வீரேந்திரன் கோபத்தில் கொதிப்பான். இதில் சித்தி வேறு இப்படியெல்லாம் பேசினால் ருத்ர தாண்டவமே ஆடி விடுவானே?
இந்த இக்கட்டான நிலைமையை இப்போது எப்படி சமாளிப்பது என்று அவள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, சந்திராவும் கூட அதே யோசனையிலிருந்தார்.
“சித்தி வேண்டாம்… விடுங்க” என்று தமிழ் பொறுமையாகச் சொல்லிப் பார்க்க, அவர் எங்கே அவள் சொல்வதை காதில் வாங்கினார்.
"கல்யாணம் ஆன முதல் நாளே அடிக்கிறளவுக்குப் போயிருக்கீங்கன்னா... உங்களை நம்பி எப்படி நாங்க எங்கப் பொண்ணை விட்டுட்டு போறது" என்றவர் கேட்டு வைக்க, வீரேந்திரன் அந்த நொடியே பொங்கி எழுந்துவிட்டான்.
"போதும் நிறுத்திறீங்களா? முதல்ல என்ன ஏதுன்னு உங்க பொண்ணுகிட்ட ஒரு வார்த்தைக் கேட்டுட்டு பேசுங்க" என்று உரைத்தவன் பார்வையில் அனல் தெறிக்க, தமிழ் தன் சித்தியிடம் பேச வேண்டாம் என சைகை செய்தாள். அவரோ அவளை இம்மியளவும் மதிக்கவில்லை.
"அவகிட்ட என்ன கேட்கிறது? நீங்க பதில் சொல்லுங்க... எதுக்கு என் பொண்ணை அடிச்சீங்க? கல்யாணம் ஆன உடனே அடிக்கிறதுக்கு கூட உரிமை வந்திருதோ?!" என்றவர் அழுத்தமாக கேட்கவும் அது நியாயமான கேள்வியாகதான் பட்டது.
வீரேந்திரனும் பதில் பேச முடியாமல் மௌனமாய் நின்றான். தேவிக்கு குழப்பத்தில் தலைச் சுழன்றது.
"இப்போ பேசுறது உண்மையிலேயே அம்மாதானா?" என்றவள் தன் சந்தேகத்தை எழுப்ப, "எனக்கும் நடக்கிறது எதுவும் புரியல தேவி" என்றாள் தமிழ்.
"நீங்க சுதாரிச்சிக்கோங்க அக்கா... அம்மா ஏதோ பெரிசா பிளேன் போடுறாங்க" என்று தேவி எச்சரிக்க, தமிழின் மூளைக்கு லேசாய் அது எட்டியது.
ஆனால் அவள் சுதாரிக்கும் முன் பிரச்சனைக் கை மீறி போய்விட்டது. வீரேந்திரன் குரலை உயரத்தி, "இத பாருங்க... நான் செஞ்சது தப்புதான்... இல்லைன்னனு சொல்லல... அதே நேரத்தில நான் காரணத்தை சொன்னா அதை கேட்கிறளவுக்கான பொறுமை இப்போ உங்ககிட்ட இல்ல... அதனால உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்தா உங்கப் பொண்ணை விட்டுவிட்டு போங்க... இல்லைன்னா நீங்களே கூட்டிட்டு போயிடுங்க" என்று தடலாடியாக சொல்லிவிட்டான். எல்லோரும் அதிர்ந்து போயினர் தமிழ் உட்பட.
"என்ன பேசிற வீர் நீ?" என்று சந்திரா கோபமாக, வீரேந்திரன் அவரின் வார்த்தையைக் காதில் வாங்காமல் தமிழ் புறம் திரும்பி,
"நீயும் இதைதானே எதிர்பார்த்த... போ... நீ விரும்பினப்படி கிளம்பி போய்க்கிட்டே இரு" என்று அவளிடம் சொல்லிவிட்டு விறுவிறுவென வீட்டைவிட்டு வெளியேறி காரை எடுத்துச்சென்றான்.
ரவிக்கு இவற்றை எல்லாம் பார்த்து அதீத ஆனந்தம். அதுவும் அவளின் வீங்கிய கன்னம் அவன் பழிவுணர்வுக்குத் தீனிப் போட்டது.
விஜயா தான் எண்ணியதை ஈடேற்றிவிட்ட திருப்தியில், "அதான் சொல்லிட்டான் இல்ல... எதுவாயிருந்தாலும் அப்பா வந்ததும் பேசிக்கலாம்... நீ இங்கிருக்க வேண்டாம்... வா போகலாம்" என்று தமிழை அங்கிருந்து அழைத்துக் கொண்டு போவதில் தீர்மானமாக இருந்தார்.
வீரேந்திரன் வார்த்தைகளைக் கேட்டு சிலையென அசையாமல் நின்றிருந்தவள் மெல்ல சுயநினைவு பெற்றாள். அவனின் மீதும் அந்த திருமணத்தின் மீதும் எந்த பிடிப்பும் இல்லையென்பது உண்மைதான்.
ஆனால் அந்த வார்த்தை அவளை ரொம்பவும் காயப்படுத்தியது. திருமணம் நடந்த முதல் நாளே தான் அந்த வாழ்க்கைக்கு தகுதியற்றவளாய் தூக்கியெறியப்படுகிறோம் என்பதை ஏற்று கொள்ள அவளால் முடியவில்லை.
ஒரு விளையாட்டில் கூட தோற்றுவிடுவோம் என்று பயந்து அவள் பின்வாங்கியவள் அல்ல. இன்று மட்டும் தான் எப்படி அத்தகைய செயலை செய்வேன் என தானே சிந்தித்து கொண்டவள் தன் சித்தியிடம், "என்னை பேசவே விடாம நீங்க இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாம் சித்தி... முதல்ல என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்கோங்க... அவர் அடிச்சது என்னவோ உண்மைதான்... ஆனா நீங்க நினைக்கிற மாதிரி கோபத்தில எல்லாம் அடிக்கல... தப்பான எண்ணமும் இல்ல... அது அவ்வளவு பெரிய மேட்டரும் இல்ல... இன்னும் கேட்டா நானே அதை பெரிசா எடுத்துக்கல... நீங்க ஏன் இந்த விஷயத்தைப் பெரிசாக்கிறீங்க...ஸோ ப்ளீஸ் இத்தோடு இந்தப் பிரச்சனையை விட்டிடுங்க" என்றாள்.
இதைக் கேட்டு விஜயா மேலே எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்க, ரவிக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
அவளா இப்படிப் பேசுகிறாள். பெண் சுதந்திரம் என வாய் கிழிய பேசுபவள் இதனை அத்தனை பெரிய விஷயமில்லை என்கிறாளே என யோசித்தவனுக்கு அவளின் எண்ணத்தைக் கணிக்க முடியவில்லை.
சந்திராவிற்கோ அந்த நொடி மருமகளின் மீது அன்பும் நம்பிக்கையும் பெருகியிருந்தது.
தேவி விஜயாவிடம் மெலிதாக, "சும்மா இருந்திருக்கலாம் இல்லமா... இந்த நோஸ் கட் உங்களுக்கு தேவைதானா?" என்று ஏளனம் செய்ய, அவர் அவமானமாக உணர்ந்தார்.
"அந்த திமிரு பிடிச்சவளுக்காக பேசினதுக்கு எனக்கு இன்னமும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்" என்றவர் இத்தோடு அந்தப் பிரச்சனையை விடவில்லை.
உடனடியாக அவர் அங்கிருந்து புறப்பட எத்தனிக்க சந்திரா எவ்வளவோ அவரை தடுத்து பார்த்தார். அவர் கேட்பதாக இல்லை. தேவிக்கோ தன் தமக்கையை விட்டுப் போக மனமே இல்லை. அவள் தமக்கையைக் கட்டிக் கொண்டு அழ, விஜயா மகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார்.
தமிழ் உள்ளமும் வேதனையில் உழன்றது. பெண்ணினமே ஒரு சாபக்கேடு. இதென்ன பெண்களுக்கு மட்டும் இருவேறு விதிகள். கண்ணீருடன் செல்லும் தங்கையைப் பார்த்தபடி அவளும் கண்ணீர் சிந்த, சந்திரா அவள் தோள்களைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார்.
அப்போதைக்கு அவளுக்கான ஒரே ஆறுதல் அவர் மட்டும்தான். சந்திரா ஒரு தாய்க்கு நிகரான உறவாக அவளிடம் பழகினாலும் மனம் எல்லாவற்றையும் சட்டென்று ஏற்றுக்கொள்ளமுடியாமல் அந்நிய உணர்வு இருக்கத்தான் செய்தது.
அத்தகைய சிக்கலான மனநிலையில் அவள் இருக்கையில் சந்திரா சம்பிரதாயம் என்ற பெயரில் திருமணம் நிகழ்ந்த அன்றிரவு முதலிரவிற்கு ஏற்பாடுகள் செய்தார். அவளை அலங்கரித்து கொள்ளவும் சொன்னார்.
தமிழுக்கு பற்றிக் கொண்டு வந்தது. இத்தகைய சம்பிரதாயங்கள் உடனடியாக நிகழ்ந்தே தீர வேண்டுமா? அப்படி என்ன கட்டாயம்? என அவள் மனம் எழுப்பிய கேள்விகளை யாரிடம் கேட்பது?
இதெல்லாம் சந்திதிகளாக நடந்து கொண்டிருப்பது. யாரும் மாற்றமுடையாதது. அவளால் இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனினும் சூழ்நிலைக்கு ஒத்துப் போக வேண்டிய கட்டாயத்தால் அவள் தயாரானாள்.
ஆரஞ்சு வண்ண புடவையில் அழகே ரூபமாய் அவளை சந்திரா அலங்கரிக்க, தமிழுக்குதான் இதில் எல்லாம் கொஞ்சமும் பிடித்தமும் இல்லை. வேண்டாமென்று சொல்லவும் வாய் வரவில்லை.
சந்திராவிற்கோ மகன் கோபத்தில் சென்றிருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில் திரும்பி விடுவான் என்ற நம்பிக்கை இருந்தது. ஆதலால் அவர் தமிழை அவனின் அறையில் சென்று விட்டுவந்தார்.
மனதில் பட்டதை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருந்த அவளின் இயல்பு இன்று தொலைந்து போனது.
வீரேந்திரனின் அறைக்குள் நுழைந்துவிட்ட கணம் அவளுக்கு திக்கு திக்கென்று அடித்துக் கொண்டது.
அந்த அறை முழுக்கவும் கமிழும் நறுமணம் அவளின் நாசிக்குள் புகுந்து தலையைக் கனக்க செய்தது. படுக்கை மீது பூவெல்லாம் தூவி அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த நொடி அவள் அருவருப்பின் உச்சகட்டத்திற்கே சென்றிருந்தாள்.
ஏற்கனவே இருவரும் சண்டை கோழிகள். இதில் சித்தி வேறு தன் பங்குக்கு இல்லாததை எல்லாம் பேசி அவனைத் தூண்டிவிட்டிருக்கிறார். வந்து என்னவெல்லாம் பேசப் போகிறானோ? கோபப்படுகிறானோ? இல்லை எப்படி நடந்து கொள்வானோ என்று அவளுக்கு அச்சமாக இருந்தது.
ஆனாலும் கோபித்துக் கொண்டு சென்றவன் இப்போதைக்கு திரும்பி வரமாட்டான் என்ற நம்பிக்கையுடன் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு மெல்ல மெல்ல அந்த அறையை நோட்டமிட்டாள்.
அந்த அறையின் இடதுபுற ஓரத்தில் அமைந்த கண்ணாடி கதவு பூட்டிய புத்தக அலமாரி அவளை வெகுவாய் ஈர்த்தது. இத்தனை நேரம் அந்த வீடும் அந்த அறையும் அவளுக்கு அந்நியமாகவே தோற்றமளிக்க, புத்தகங்களைப் பார்த்ததும் அவள் மனம் பால்ய நண்பனைக் கண்டுவிட்டது போல் உற்சாகம் கொண்டது. நிலைமை இன்னதென்றெல்லாம் யோசிக்காமல் பூரிப்போடு அதனருகில் சென்றது.
அவள் விழிகள் அதனை ஆராய்ந்தன. ஆனால் ஒரேயொரு புத்தகம் கூட அவளின் விருப்பத்தோடும் எண்ணத்தோடும் ஒன்றிப் போகவில்லை.
அந்த அலமாரியில் நிரப்பியிருந்த முக்கால்வாசி புத்தகங்கள் உலக ஆளுமை அதிகார வர்க்கங்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள். உலகமே திரும்பி பார்க்கக் கூட விருப்பப்படாத போர் சரித்திரங்கள், உலகில் ஏற்பட்ட பல புரட்சிகளின் கதைகள் என அவன் புத்தகங்களும் அவனைப் போலவே அவளிடம் பகைமைப் பாராட்டியது.
அவளும் சரித்திரங்கள் படிப்பவள்தான். ஆனால் அவன் படிக்கும் சரித்திரங்கள் முற்றிலும் வேறு. அது ஆளுமையோடு கூடிய வளமையைப் பேசக் கூடியது. ஆனால் அவன் படிக்கும் சரித்திரங்கள் அகம்பாவம் கொண்ட ஆளுமைகளாகவும் அதனால் ஏற்பட்ட அழிவுகளாகவும் இருந்தது. அதுவே அவனின் குணத்தில் பிரதிபலிப்பதாக அவளுக்குத் தோன்றிற்று.
மேலும் அந்த அறையை அவள் சுற்றிப் பார்த்த போது அவளின் விழிகளில் தென்பட்டது எல்லாம் இரு கத்திகள் சொருகிய கேடயம், காவலாளி உடையில் ஈட்டியை நிமிர்த்திப் பிடித்திருக்கும் பொம்மை, துப்பாக்கியைக் கையில் ஏந்தியபடியான அவனின் ஃபோட்டோ என அது அறையா அல்லது சண்டை களமா எனச் சந்தேகம் எழுந்தது.
அந்த அறை அப்பட்டமாய் அவனின் எண்ணங்களையே பிரதிபலித்தது. எண்ணங்கள் நேர்மறையாய் இருந்தாலும் செயலால் இருவரும் ஒன்றுபட்டு நின்றனர். அவர்கள் ஒரே போல தங்கள் தங்கள் அறைகளை தங்கள் எண்ணங்களால் நிரப்பியிருந்தனர்.
இறுதியாய் அவள் பார்வை இளைஞனாய் என்சிசி உடையில் இருந்த வீரேந்திரனின் படத்தினைக் கவனிக்க, அத்தனை நேரம் மனதில் அவன் மீது நின்றிருந்த கோபமும் வெறுப்பும் எப்படி மறைந்தது என்றே அவளுக்கு தெரியவில்லை.
அந்த உடையில் அவனின் கம்பீர தோரணை, நிமிர்ந்த பார்வை அதோடு அவன் முகத்தில் இருந்த அரும்பு மீசை, என அவளை அறியாமலே அவனை ரசித்துப் பார்த்திருந்தாள்.
மீட்க முடியாமல் அவனின் விழிகளோடு பிணைந்திருந்த அவள் விழிகளைத் தாண்டி அவள் மனம் அவன் மீதான கோபத்தை நினைவுப்படுத்திக் கொண்டது. அவன் அரண்மனையில் அவளிடம் நடந்து கொண்ட முறையை எண்ணி பார்த்தாள். அவள் உள்ளம் வெறுப்பை ஊற்றாகச் சுரந்தது.
அந்த கணமே அவள் சீற்றத்துடன், 'சரியான சிடுமூஞ்சி... ஈகோஸ்டிக்... அரெகன்ட்... ஸேடிஸ்ட்’ என்று அவன் இல்லாத தைரியத்தில் சத்தமாகவே திட்டினாள்.
ஆனால் அவன் அவள் பின்னோடுதான் நின்றிருந்தான். அவள் அவன் புத்தக அலமாரியை ஆராயும் போதே அவன் அங்கே வந்துவிட்டிருந்தான்.
இருந்தும் மௌனமாய் அவள் சைகைகளை ரசித்தவன் அவன் படத்தைப் பார்த்து அவள் லயித்ததையும் கவனித்தான். இப்போது அவள் வசைப்பாடியதையும் கேட்டான்.
"இன்னும் மிச்சம் மீதி ஏதாச்சும் இருந்தா அதையும் சொல்லிடு" என்றவன் சொலல், அவன் குரல் கேட்ட நொடியே அவளின் இதயம் அதிவேகமாய் படபடத்தது.
திரும்பலாமா வேண்டாமா என்ற தயக்கத்தோடு அவன் புறம் திரும்பியவள் அவன் கைக்கட்டி அவள் பின்னோடு நின்ற தோரணையை பார்த்து விதிர்விதிர்த்து போனாள்.
"என்னடி சொன்ன... ஈகோஸ்டிக்... ஸேடிஸ்ட்... அரெகன்ட்... ம்ம்ம்... அப்புறம்... வேற என்னமோ சொன்னியே... என்னது?" என்று கேட்டவன் அவள் பதில் பேசாமல் மௌனமாய் நிற்பதைப் பார்த்து,
"என்னன்ன சொன்னன்னு ... இப்போ நீ என் கண்ணைப் பார்த்து சொல்ற" என்று மிரட்டலாய் சொல்லிவிட்டு அத்தோடு நின்றவிடாமல் கதவை மூடித் தாளிட்டுவிட்டு அவளை நெருங்கி வர,
அந்த நொடி அவள் உடலெல்லாம் உஷ்ணம் ஏறி வியர்வை துளிகள் தேகத்தில் படர்ந்து கைகள் எல்லாம் சில்லிட்டுப் போனது.
அவனோ அவளை நெருங்க நெருங்க, அவள் பின்னோடு நகர்ந்து அவனின் ஃபோட்டோவோடு போய் மோதி நின்றாள்.
அவளைக் கூர்மையாய் பார்த்தபடி இன்னும் இன்னும் அவளிடம் நெருக்கமாய் வந்து நின்றான். அவன் விரல் நுனி கூட அவளைத் தீண்டவில்லை எனினும் அவனின் முச்சுகாற்று அவள் தேகத்தை ஸ்பரிசித்துச் சென்றது.
அத்தனை நெருக்கத்தில் அவளை ஆழ்ந்து ரசித்தவனுக்கு அந்த அறையில் சூழ்ந்திருந்த மலர்களின் வாசமும் அவளது வாசமும் சேர்ந்து ஒருவிதமான கிறக்கத்தை உண்டுபண்ணியது.
18