மோனிஷா நாவல்கள்
Monisha's VET - 21
Quote from monisha on November 19, 2021, 8:06 PM21
கார் வீட்டை அடைந்துவிட அப்போது சந்திரா மகனும் மருமகளும் சேர்ந்து வருவதைப் பார்த்து வியப்பானார். அதேநேரம் மனதளவில் ரொம்பவும் மகிழ்ச்சியாக உணர்ந்தார். இவர்கள் இருவரும் எப்படி ஒத்துப் போகப் போகிறார்கள் என்ற அச்சம் அவர் மனதை விட்டு மெல்ல விலகியிருந்தது.
ஆனால் இருவரின் முகத்திலும் இருந்த வித்தியாசமான முகப்பாவனைகளைப் புரிந்து கொள்ள இயலாமல் அவர் உள்ளே வந்த மகனிடம், "வேலைன்னா வீட்டையே மறந்திருவ... பொண்டாட்டிய கூட்டிட்டு வர அளவுக்குப் பொறுப்பு வந்திருச்சா வீர்?!" என்று கேள்வி எழுப்ப,
“அது… அது வந்து… நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல ம்மா... அவ ஆஃபிஸ் வர வழியா வந்தேன்… அதான்” என்றவன் கொஞ்சம் திக்கித் திணறி பதிலளித்தான்.
“நான் நினைக்கிற மாதிரி இல்லையா? உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டு வர்றதுக்கு நான் என்னடா நினைக்கப் போறேன்”
அவன் உடனடியாகப் பேச்சை மாற்றி, “பசிக்குது ம்மா… சாப்பாடு எடுத்து வையுங்க… டிரஸ் மாத்திட்டு வந்திடுறேன்” என்று அவசரமாய் தன் அறைக்குள் சென்றுவிட்டான். மகனின் சமாளிப்பையும் திணறலையும் பார்த்து புன்னகைத்த சந்திரா பின்னோடு வந்த தமிழிடம்,
“நீயும் டிரஸ் சேஞ் பண்ணிட்டு வா ம்மா… சாப்பிடலாம்” என்றார்.
“சரிங்க ம்மா” என்றபடி அறைக்குள் சென்றவளை ஒருவிதமான பதட்டம் ஒட்டி கொள்ள, அவனிடம் பேச்சுக் கொடுக்காமல் உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்துவிட்டாள்.
இருவரும் உணவு உண்ண அமர அங்கே ஒருவித இறுக்கமான சூழல் நிலவியது. ரவி செய்த வேலை இருவரின் மனதையும் இன்னும் வருத்திக் கொண்டுதான் இருந்தது. அதுவும் அந்த சம்பவத்தால் தமிழ் மனதளவில் ரொம்பவும் நொந்து போயிருந்தாள்.
அவள் உணவு உண்ணாமல் கைகளில் சாப்பாட்டை வெகுநேரம் அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்த சந்திரா, “என்னாச்சு? ஏன் ம்மா ஒரு மாதிரி இருக்க?” என்று அக்கறையுடன் விசாரிக்க, அவளுக்கு சட்டென்று என்ன பேசுவதென்று புரியவில்லை. அவள் இன்னும் அந்த மனநிலையிலிருந்து வெளிவராத நிலையில்,
“வீர் உன்கிட்ட கோபமா நடந்துக்கிட்டானா… சண்டை ஏதாவது போட்டானா?” என்றவர் மெல்லமாகத்தான் மருமகளிடம் கேட்டார். ஆனால் அது வீரேந்திரன் காதில் விழுந்துவிட,
“யாரு… நான் சண்டை போட்டேனா… என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு எல்லாம்… சண்டைக்காரன் மாதிரியா?” என்று கொதித்தெழுந்தவன் பாதி உணவிலேயே சென்றுவிட்டான்.
“வீர் சாப்பிட்டுப் போ” என்ற சந்திராவின் அழைப்பை அவன் காதிலே வாங்கவில்லை. அவர் பெருமூச்செறிந்தபடி மருமகளிடம், "அவன் அப்படிதான்மா தொட்டதுக்கெல்லாம் கோபம் வரும்... அதுவும் அவனைப் பத்தி யாரும் குறைவா ஒரு வார்த்தைச் சொல்லக் கூடாது" என்றார்.
“நீங்க நினைக்கிற மாதிரி அவர் என்கிட்ட கோபமா எல்லாம் நடந்துக்கல ம்மா” என்று தமிழ் சொலல்வும்,
“சரி விடு… சாப்பிடும் போது தேவையில்லாததைப் பத்தி எல்லாம் யோசிக்க கூடாது… நீ சாப்பிடு… இன்னும் கொஞ்சம் வைக்கட்டுமா?” என்றவர் பரிவுடன் அவளுக்குப் பரிமாற அவள் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.
அவள் உண்டு விட்டு கைகளை அலம்பிக் கொண்டே, “நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கட்டுமா ம்மா” என, “நீ என்கிட்ட என்ன வேணா கேட்கலாம்… கேளுமா” என்றவர் புன்னகையுடன் கூறினார்.
"அது” என்று கொஞ்சம் தயக்கத்துடன் ஆரம்பித்தவள், “அவர் காலேஜ் டேஸ்ல எப்படிம்மா?” என்று கேட்டாள்.
சந்திரா புன்னகையுடன், "நீ ஏன் கேட்கிறன்னு புரியுது... அவனை எல்லோரும் பிளே பாய்னு சொல்லி இருப்பாங்க... அதானே... நீயும் அப்படிதானே புரிஞ்சிட்டிருக்க" என்றதும் அவள் என்ன பதிலுரைப்பது என்று யோசனையில் இருக்கவும்,
"அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது தமிழ்... அவனுக்கு காலேஜ்ல எல்லா பொண்ணுங்களும் ஃப்ரண்ட்ஸ்... அதுவுமில்லாம எந்தப் பொண்ணுக்குப் பிரச்சனைன்னாலும் வரிஞ்சுகட்டிட்டுப் போய் சண்டைக்கு நிப்பான்... அதனால ஆம்பள பசங்க எல்லோருக்கும் இவன் மேல கொஞ்சம் பொறாமை...
அதான் அவன் பழகிற பொண்ணுங்களோட எல்லாம் சம்பந்தபடுத்திப் பேசிடுவாங்க.. ஒரு தடவை கொஞ்சம் எல்லை மீறிப் போயிடுச்சு… அது பெரிய பிரச்சனையாகி வீர் எதிரே இருக்கிறவன் மூஞ்சியெல்லாம் உடைச்சிட்டான்... அப்போ காலேஜ்ல சஸ்பென்ஷன் வரைக்கும் போய்... அவங்க அப்பா போய் பேசி சரி பண்ண வேண்டியதாயிடுச்சு... அந்த நேரத்தில அப்பாவுக்கும் பிள்ளைக்கும் கொஞ்சம் முட்டிக்கிச்சு...
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பொண்ணுங்க கூட பேசிறதையே விட்டுவிட்டான்... அப்பவும் ஏதாவது ஒரு பொண்ணுக்குப் பிரச்சனைனா இன்னைக்கும் முன்னாடி நிற்பான்... போலீஸ் டிரெயினிங் போன பிறகு கோபத்தை எல்லாம் கூட ஒரளவுக்கு கன்ட்ரோல் பண்ணிட்டான்" என்றார்.
"கோபத்தை கன்டிரோல் பண்ணிட்டாரா?" என்று அவள் அதிர்ச்சியாய் கேட்கும் போதே அவள் கண் முன்னே ரவிக்கு நேர்ந்த கதி நினைவுக்கு வர,
சந்திராவோ, "ஆமாம் தமிழ்... இப்ப அவன் எவ்வளவோ பரவாயில்லை" என்றார். அவளோ உதட்டைப் பிதுக்கியபடி எழுந்து அறைக்குச் செல்லும் போதே சந்திரா சொன்னவற்றை எல்லாம் யோசித்துப் பார்த்தாள்.
அதுவும் அவனைப் பற்றி தவறான செய்தி பரப்பியது முதற்கொண்டு அவனுக்குப் பிடிக்காத எல்லாவற்றையும் தான் வரிசையாய் செய்திருக்கிறோம்.
இத்தனையும் தான் செய்த பின்னும் அவன் தனக்காக தன் இயல்பை விட்டு இறங்கி வந்திருக்கிறான். ஆனால் தான் அவனைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்திவிட்டோமே என்ற குற்றவுணர்வு அவள் மனதை வெகுவாய் அழுத்தியது.
இன்னொரு புறம் அவனின் மேன்மையான காதலை கலங்கப்படுத்தியது போல் பேசியதற்கு அவன் தன்னை என்ன செய்தாலும் தகும் என எண்ணியபடி அறைக்குள் நுழைந்தவள், சுற்றும் முற்றும் விழியை அலைபாயவிடப் பின்னிருந்து அறைக் கதவு மூடி தாழிடும் சத்தம் கேட்டது.
அவள் திரும்பி நோக்க அவன் புருவத்தை உயர்த்திப் புன்னகைக்க... அது உண்மையிலேயே காந்தப் புன்னகைதான். அவளை மொத்தமாய் அவன் வசம் இழுத்தப் புன்னகை. அவன் அவளை நோக்கி நடந்து வரப் படபடப்பாய் துடிக்கும் இதயத்தோடுப் பின்நோக்கி நகர்ந்தாள்.
"ஸ்டே தேர்" என்றான் அவன் அதிகார தோரணையில்!
வீரேந்திரன் அருகில் வரவும் நாணமா? பயமா? ஏதோ ஒன்று அவள் விழிகளை மூடிக் கொள்ளச் செய்ய அவனோ அவளின் ஒற்றைக் கன்னத்தைப் பற்றிக் கொள்ள உடலெல்லாம் சிலிர்க்க ஆரம்பித்தது அவளுக்கு.
"ஏ அடங்காபிடாரி" என்றவன் அழைக்க, அந்த நொடியே அவள் காதல் உணர்வுகள் எல்லாம் மாயமாகி அவனைக் கோபமாய் பார்த்தாள்.
கோபத்தில் பெரிதாய் மாறிய அந்த கண்களை ரசித்தவன், "என்ன முறைக்கிற? நேத்து நீ செஞ்ச தப்பை சரி பண்ணு" என்றான்.
அவள் புரியாமல் விழிக்க அவன், "நீ என்னை கிஸ் பண்ணனும்" என்றான் அழுத்தமாக!
"என்ன?" என்றவள் அதிர,
“நேத்து நீ என்னலாம் பேசுனன்னு மறந்துட்டியா?” என்றவன் பார்வை அவளை கூர்ந்து நோக்க, “அது… அப்படிப் பேசி இருக்க கூடாதுதான்… ஐம்… ஐம் சாரி… அதை நீங்க மறந்திட… லாமே… ப்ளீஸ்” என்றவள் இறைஞ்சுதலாகக் கூற அவன் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு,
“ம்ம்ம்ம்… மறந்திடலாம்… நீ அந்த தப்பை சரி பண்ணிடு… மறந்திடலாம்” என்றான்.
“எப்படி… சரி பண்…றது”
“அதான் சொன்னேனே… கிஸ் மீ”
“ஹான்” என்றவள் அவன் முகத்தை விழித்து பார்த்திருக்க,
“என்ன அப்படியே பார்த்திட்டு இருக்க… நான் சொன்னது புரியல” என்றவன் பார்வை அவளை கல்மிஷமாகச் சீண்ட,
“உஹும்… என்னால முடியாது” என்றவள் மறுக்க அவன் முகம் இறுகியது.
"அப்போ முடியாது?" என்றவன் அவளை ஆழமான பார்வைப் பார்த்துவிட்டு அவளை விட்டு விலகி நின்று கொண்டான்.
இவனையும் இவன் கோபத்தையும் கையாள்வது மிகவும் கடினம் என்று எண்ணி மூச்சை இழுத்துவிட்டு கொண்ட அதேநேரம் அமைதியாக தன் நிலையை அவனிடம் உரைக்க எண்ணினாள்.
"ஏன் வீர்? நீங்க எல்லா பொண்ணுங்ககிட்டயும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகுவீங்கன்னு இப்பதான் அம்மா சொன்னாங்க... என்கிட்ட மட்டும் ஏன் இப்படி?" என்று சுயபச்சாதாபத்தோடு அவள் பேச,
"அம்மா சொன்னாங்களா இல்ல நீயா கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டியா?" என்றவன் அவளை அளவெடுத்து பார்த்தான்.
"எப்படி இருந்தா என்ன? இரண்டுமே ஒன்னுதானே" என்றாள் அவள்.
"இப்ப நீ என்ன சொல்ல வர்ற"
"என்னையும் நீங்க ஒரு நல்ல தோழியா பார்க்கலாமே"
"உன்னை... தோழியா... நடக்காத காரியம்... நாட் எவர்" என்றவன் அழுத்தமாக மறுக்க,
"ஏன்?" என்று கேட்டாள்.
"நம்ம ஃபர்ஸ்ட் மீட்டிங்கை யோசிச்சி பாரு"
"அதெல்லாம் இப்ப எதுக்கு?"
"நீ கேள்விபட்டதில்லயா... முதல் கோணல் முற்றும் கோணல்... நீ என் கண்ணு முன்னாடி வந்த போதே நீ எனக்கு எதிரியாதான் வந்த... இன்னும் கேட்டா நான் எதிரியா பார்த்த ஒரே பொண்ணு நீதான்"
"அப்போ நீங்க என்னை லவ் பண்றன்னு சொன்னதெல்லாம்"
"உண்மைதான்... எனக்கு உன் மேல எவ்வளவு லவ் இருக்கோ... அவ்வளவு வெஞ்சன்ஸும் இருக்கு" என்று சொல்ல அவள் இந்தப் பதிலை அவனிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அப்போது அவன் இதழ்களில் தவழ்ந்த புன்னகை தேன் கலந்த விஷம். அவன் தன் எண்ணத்தை எல்லாம் ஈடேற்றிக் கொள்ளும் சந்தர்ப்பமா இது என்று அவள் யோசிக்கும் போது அவன் கரம் அவள் இடுப்பை வளைத்துக் கொள்ள, "வீர்" என்று அதிர்ந்தாள்.
"நீ ஆல்ரெடி நம்ம கன்டிஷனை மீறி நிறையக் கேள்வி கேட்டுட்ட... நோ மோர் க்வ்ஷின்ஸ்... ம்ம்ம்... கேட்டதைக் கொடு" என்றான்.
அவளோ மனதிற்குள் 'என்ன பொழப்புடா... இவன் சொல்றதெல்லாம் நாம ஏன் கேட்கணும்... ஒரு சின்ன தப்பு... அது சின்னதில்லதான்... இருந்தாலும்' என்று யோசித்தபடி அவள் தயங்கி நிற்கவும் அவன் அவள் காதோரம் நெருங்கியபடி மெலிதாய்,
"என்னை உனக்கு பிடிக்கலயா தமிழச்சி?" என்று கேட்க அவள் அவன் விழிகளை ஆழ்ந்து பார்த்து, "பிடிக்காமலா உங்கப் பின்னாடியே வந்தேன்" என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு அவன் மனம் இன்பத்தில் திளைக்க இருவருமே அந்த நொடி ஒருவருக்குள் ஒருவரை உணர்ந்து கொண்டனர்.
அவள் மேலும்,"நீங்க ரவி விஷயத்தில நடந்துகிட்ட விதம்... எனக்காகப் பேசின விதம்... கோபப்பட்டதுன்னு.... நான் என்ன சொல்றதுன்னு தெரியல... நான் தேடி இருந்தாலும் உங்களை மாதிரி ஒருத்தரை கணவனா அடைஞ்சிருக்கவே முடியாது" என்றவள் தன் மனதை வெளிபடுத்தினாள்.
அவளின் விழிகளில் மின்னிக் கொண்டிருந்த காதல் அவன் மனதை மொத்தமாய் நிறைத்துவிட்டது.
"அப்புறம் ஏன்டி தயக்கம்?" என்றவன் ஆவலுடன் கேட்க, அவளுக்கு அவன் தவிப்பும் எதிர்பார்ப்பும் புரியாமல் இல்லை.
அந்த நொடி அவன் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய எண்ணியவள் அவன் உயரத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு மலைப்பாக, "இப்படி நீங்க போஸ்ட் கம்பம் மாதிரி நின்னா எப்படி வீர் முடியும்?" என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தவன், "நான் இந்தத் தடவை இறங்கி வர மாட்டேன்... நீதான் என் கிட்ட வரணும்" என்று சற்றும் தலைவணங்காமல் அவன் உரைத்தான். அவள் முகம் சுருங்கிப் போனது.
‘நேற்று தான் செய்த வேலைக்கும் பேசின பேச்சுக்கும் தனக்கு இந்தத் தண்டனை தேவைதான்’ என்று எண்ணியவள் மெல்ல அவள் கரங்களால் அவன் கழுத்தில் பின்னிக் கொண்டு அவன் உயரத்தை எட்டிபிடிக்க முயற்சி செய்ய, அவனோ மீண்டும் வாய்விட்டுச் சிரித்தான்.
தமிழ் தவிப்போடு, "ம்ம்க்குக்ம்... ம்க்கும்... முடியல" என்றாள் சிணுங்கியபடி.
"முயற்சித் திருவினையாக்கும்... நீ படிச்சதில்லயா" என்றான்.
"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்"
"நாம சம்பந்தபடுத்திக்க வேண்டியதுதான்"
"நீங்க குனியலன்னா கூடப் பரவாயில்லை... ப்ளீஸ் இப்படி பேசிக் கொல்லாதீங்க"
"ரைட்... பேசினா டிஸ்டர்பன்ஸா இருக்கு இல்ல... யூ கன்டின்யூ" என்றான்.
அவன் விழிகள் அவளையே பார்த்திருக்க அந்த கூர்மையான விழிகளை எதிர்கொள்ள முடியாமல், "ப்ளீஸ்ஸ்ஸ்...கண்ணை மூடிக்கோங்களேன்" என்று கேட்கவும்,
"ஒரு கிஸ் கொடுக்க ஓராயிரம் கன்டிஷனா?" என்றவன் சலித்துக் கொண்டு, கண்களையும் மூடிக் கொண்டான்.
அவள் எட்டி கால்களின் முனையில் நின்று அவன் இதழ்களை நெருங்க அவன் கரம் அவள் இடையைச் சுற்றிவளைத்திருப்பதால் அவள் விழாமல் அவன் உயரத்தோடு ஒருவாறு சமமாகி நின்றாள். கிட்டதட்ட அவள் முத்த முயற்சியில் வெற்றி கிட்டும் சமயத்தில் ஒரு தடங்கல்.
வீரேந்திரனின் கைப்பேசி அழைப்பு அந்த அறையின் நிசப்தத்தைக் கலைத்தது. அந்தக் கணம் கொஞ்சமும் யோசிக்காமல் அவன் கைப்பேசியை எடுக்க நகர்ந்துவிட அவள் நழுவி தரையில் விழுந்தாள்.
‘அடப்பாவி... ஒரே நிமிஷத்தில இப்படி கைவிட்டுட்டு போயிட்டானே... எவ்வளவு கஷ்டப்பட்டு கிட்ட வந்தேன்... ஜஸ்ட் மிஸ்’ என்று கடுப்பானவள்,
பின் தலையிலடித்தபடி, 'சே... இப்ப கிஸ் மிஸ்ஸானது ரொம்ப முக்கியம்... நேத்து நடந்ததுக்கு வேணும்டே பழித் தீர்த்திட்டிருப்பான்… சரியான சேடிஸ்ட்' என்று அவனை மனதார திட்டிக் கொண்டே அவள் எழுந்து கொள்ள முயற்சி செய்ய, அது சாத்தியப்படவில்லை.
அவள் வலியால் அவதியுற்றாள். அவள் இடையின் ஒரு பக்கம் பிடித்துக் கொண்டது. அவனோ இவளைக் கவனிக்காமல் அழைப்பை ஏற்றுப் பேசி முடித்துவிட்டுத் திரும்பினான்.
அவள் தரையில் கிடப்பதை பார்த்து ஏதும் அறியாதவன் போல அதிர்ச்சியடைந்து, "என்னடி ஆச்சு... கீழே விழுந்திட்டியா... எப்படி?" என்று விசாரிக்க,
"இது உலக மகா நடிப்புடா சாமி" என்றாள் அவள் முறைத்தபடி.
"சத்தியமா தெரியல... ஒரு எமர்ஜென்சி கால் வரவேண்டி இருந்துச்சா... அதனாலதான்" என்றவன் தன்னிலையை உரைக்க,
"என் நிலைமையும் இப்போ எமர்ஜென்சிதான்" என்று அவதியோடு அவள் தன் இடையைப் பிடித்தபடி உரைத்தாள்.
"நான் ஹெல்ப் பன்றேன்... டோன்ட் வொரி" என்று சொல்லி அவளைத் தூக்க அவன் முற்பட,
அவள் கையெடுத்து கும்பிட்டபடி, "வேண்டாம் சாமி... நீங்க செஞ்சதெல்லாம் போதும்... போதாக்குறைக்கு தூக்கிட்டதுக்கு அப்புறம் எமர்ஜென்சி கால் வந்துச்சுன்னா... என் நிலைமை... நோ... வெந்த புண்ல வேல பாய்ச்சாதீங்க... ப்ளீஸ் போயிடுங்க" என்றாள்.
அவன் அவள் சொல்வதைப் பொருட்படுத்தாமல் அவளை தன் கரத்தில் தூக்கிக் கொள்ள, "ஆ... வலிக்குது... நான் என்னங்க பாவம் செஞ்சேன் உங்களுக்கு" என்று வலியோடுக் கேட்க,
"அதெல்லாம் நிறைய செஞ்சிருக்க" என்றவன் கூற, அவள் கோபமாக தன் கரத்தால் அவன் மார்பில் குத்தவும் அவன் சற்றும் அலட்டிக் கொள்ளாமல்,
"நம்புடி... நான் எதையும் பிளான் பண்ணி பண்ணல" என்றான்.
"நம்பிட்டேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளைப் படுக்கையில் படுக்க வைத்தவன் அவளின் இதழ்களை நெருங்கியபடி,
"ஜஸ்ட் மிஸ்.... இப்படி உன் லிப் கிட்ட வரும் போதுதான் ஸ்லிப்பாகணுமா?!" என்று கேட்டு ஏக்கப் பெருமூச்சுவிட அவளோ முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"ரொம்ப வலிக்குதா?" என்று அவன் வருத்தமாகக் கேட்க அவள் எரிச்சலோடு, "உயிர் போகுது வலி" என்றாள்.
"நான் ஏதாச்சும் ஆயின்மன்ட்" என்று அவன் கேட்கும் போதே இடைமறித்தவள், "ஆணியே புடுங்க வேணாம்... ப்ளீஸ்" என்றாள்.
அதற்கு மேல் அவளைத் தொந்தரவு செய்யாமல் விட்டு விலகிச் சென்றவன் அந்தப் பக்கமாய் படுத்துக் கொண்டு இவளை ஏக்கமாய் பார்க்க, அதனை விரும்பாமல் திரும்பி படுத்துக் கொள்ளலாம் என்றவள் எண்ணிப் புரளவும் இடை ஒத்துழைக்க மாட்டேன் என வலியைக் கூட்ட, எந்தப் பக்கமும் திரும்பிப் படுக்க முடியாமல் அப்படியே மல்லாக்காகப் படுக்க வேண்டிய நிலையில் கிடந்தாள்.
'எல்லாம் என் நேரம்... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு சும்மாவா சொல்லிருக்காங்க... எனக்கு தேவைதான்' என்று மனதிற்குள்ளேயே அவள் புலம்பியபடி வலியால் அவதியுற, வீரேந்திரனோ தன் விழியைப் பெயரளவில் கூட அவள் மீதிருந்து அகற்றவில்லை.
இரவெல்லாம் அவன் விழிகள் எத்தனை நேரம் அப்படி தவம் கிடந்ததோ?! ஆனால் அவளோ அந்த வலியின் வேதனையுடனே உறங்கிப் போனாள்.
சூரியனின் கதிர்கள் அந்த அறை ஜன்னல் வழியே மெல்ல எட்டிப் பார்க்கவும்தான் அவள் உறக்கம் கலைந்தது. விழித்து கொண்ட அவள் விழிகள் அவனைச் சுற்றிலும் தேடியது.
அவன்தான் பூகம்பம் வந்தாலும் வேலைக்குப் போகிறவனாயிற்றே என எண்ணிக் கொண்டவளுக்கு எழுந்திருக்க முடியாத வலி.
ஆனால் இரவிருந்ததை விட பரவாயில்லைதான் எனத் தோன்ற அவள் முயன்று எழுந்து கொள்ளும் போது அவள் அருகில் படுக்கையில் கலர் பேப்ரால் சுத்தியிருந்த பரிசு பொருளும் அதோடு ஒரு பூங்கொத்தும் வலிக்கான மருந்தும் வைக்கப்பட்டிருந்தது.
கூடவே ஒரு மடிக்கப்பட்ட வெள்ளை காகிதம். அவன் எழுதி வைத்த கடிதமோ என ஆர்வமாய் பிரித்தாள்.
21