மோனிஷா நாவல்கள்
Monisha's VET - 24
Quote from monisha on November 25, 2021, 8:13 PM24
தமிழ் அந்தச் சத்தத்தைக் கேட்டுவிட்டு தரையில் விழுந்தது என்னவென்று கவனிக்க எத்தனித்த போது வீர் குளியலறையிலிருந்து குரல் கொடுத்தான். "தமிழச்சி டவல்”
அவள் உடனடியாக தன் கையிலிருந்த அவன் காக்கிச் சட்டையை ஹேங்கரில் மாட்டிவிட்டுத் துண்டை எடுத்து கொடுக்க, அவன் அவள் மெல்லிய கரத்தைப் பற்றி இழுத்தான்.
"வீர் கையை விடுங்க" என்று தவிப்புடன் அவன் முயற்சியை முறியடித்து அவள் விலகி வந்தாள்.
அந்தப் பதட்டத்தில் கீழே விழுந்த பொருள் என்னவென்று அவள் கவனிக்க மறந்திருக்க, வீரேந்திரன் குளியலறை விட்டு வெளியே வந்தான். டிரேக் பேண்ட் அணிந்து கொண்டு கழுத்தில் துண்டைப் போட்டிருந்தவன் கலவரத்துடன் படுக்கையில் அமர்ந்திருந்தவள் அருகில் நெருங்கி அமர, அவள் விலகிச் செல்ல எத்தனித்தாள்.
ஆனால் அவளை நகரவிடாமல் அவள் மடியில் அவன் தலைசாய்த்து படுத்துக் கொண்டான். அவளின் பார்வை அவனைக் குனிந்து நோக்கியது. அவனின் கட்டமைப்பான புஜங்களும் அகண்ட தோள்களும் அவளை வெகுவாய் வசீகரித்தது.
அவனோ மோக புன்னகையோடு, "ம்ம்ம்.. நேத்துவிட்டதை கன்டின்யூ பண்ணுவோமாடி என் தமிழச்சி" என்று கேட்க,
"என்ன விளையாடிறீங்களா? நான் எவ்வளவு கஷ்டப்பட்டு கிட்ட வந்தேன்... எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணது நீங்கதான்" என்றவள் கோபமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"அதான் உனக்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்துட்டேனே டி... இனிமே நீ கொஞ்சம் இறங்கி வந்தால்தான் என்ன?" என்று அவன் சொன்னதும் அவள் முகத்தில் புன்னகை அரும்ப,
அவளும் அவன் இதழ்களோடு இறங்கி நெருங்கி வந்தாள். அந்த சமயத்தில்தான் அறை கதவு தட்டும் ஓசைக் கேட்க வேண்டுமா?
இருவரின் முகத்திலும் ஒருவித சலிப்பு ஏற்பட வெளியே இருந்து வேலைக்கார பெண்மணி, "அம்மா... டைனிங் டேபிள்ல சாப்பாட்டு எடுத்து வைச்சுருக்கேன்... சாப்பிடுங்க ம்மா... நான் கிளம்பட்டுமா?!" என்று பணிவோடுக் கேட்டாள்.
"ம்ம்ம்... சரி சரி புறப்படுங்க" என்று தமிழ் உள்ளிருந்தபடியே பதிலளிக்க, வீரேந்திரனோ அக்கணத்தில் அவளிடம் தன் காதல் லீலைகளை செய்து கொண்டிருந்தான்.
"முதல்ல எழுந்திருங்க வீர்" என்றவள் சொல்ல,
"எதுக்கு? முடியாது" என்றான் தீர்க்கமாக!
"ப்ச்.... நான் போய் டோர் லாக் பண்ணிட்டு... அப்படியே நமக்கு டின்னர் எடுத்துட்டு வர்றேன்" என்றாள்.
"டோர் லாக் பண்ணலன்னா இப்ப என்ன? வெளியே செக்யூரிட்டி இருக்கான்... அதுக்கு மேல இந்த ஏசிபி இருக்கேனே... எவன் என் வீட்டுக்குள்ள தைரியமா நுழைஞ்சுருவான்" என்று கேட்க,
"அதானே... சிங்கத்தோட கூண்டில எவனாச்சும் தானா தலையைக் கொடுப்பானா? அந்த ஒன் அன் ஒன்லி இளிச்சிவாய் நான் மட்டும்தான்" என்றாள்.
"என்னைய நீ மனுஷங்க லிஸ்ட்லயே சேர்க்க மாட்டியாடி?" என்றவன் வாஞ்சையுடன் கேட்க,
"அப்படி ஒரு நாளும் நீங்க நடந்துக்கலியே வீர்" என்றவள் இதழ்கள் விரிய கூறினாள்.
அந்த புன்னகை அவனை வசியம் செய்தது. "அப்படியா சொல்ல வர்ற... அப்ப மிருகமா மாறிட வேண்டியதுதான்" என்று சொல்லி வஞ்சமாய் புன்னகைத்தவன் அவளை இழுத்து வலுக்கட்டாயமாகத் தன்வசப்படுத்தி, அவள் இதழ்களை தம் இதழ்களால் இணைத்துக் கொண்டான்.
அவளை எழவிடாமல் அவன் கரம் அவளை அழுந்திப் பிடித்திருந்தது. காத்திருந்து கிடைத்த தருணத்தை அவன் அத்தனை சீக்கிரத்தில் விடுவதாக இல்லை. அவனிடமிருந்து மீள முடியாமல் அவள் சிக்கியிருந்தாள்.
இறுதியாய் வீரேந்திரனின் கைப்பேசி அழைத்து அவனிடமிருந்து அவளைக் காப்பாற்றிவிட்டது. மொத்தமாய் இன்பத்தில் திளைத்திருந்தவன் அடுத்த கணமே அவசரமாய் அவளை விடுத்து எழுந்து தன் கைப்பேசியைச் செவியில் நுழைத்துக் கொண்டான்.
தப்பித்தோம் என்ற உணர்வு ஏற்பட்டாலும் அவன் அத்தனை சாதாரணமாய் ஒவ்வொரு முறையும் உதறிவிட்டுப் போவதை எண்ணியவளுக்குக் கோபம் பொங்கியது.
'அப்படியே இவர்தான் போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டைத் தூக்கி நிறுத்தப் போறாராக்கும்' என்று வாய்க்குள்ளே முனகியவளுக்கு லேசாய் இதழ்கள் வலிக்க, என்னவென்று எழுந்து கண்ணாடியில் பார்த்தாள்.
அவளின் இதழோரம் சிவந்த தடயம். அவள் சீற்றத்துடன் அவன் புறம் திரும்ப, அவன் அப்போதுதான் அழைப்பைத் துண்டித்துவிட்டு அவளை நோக்கினான். அவள் ஆக்ரோஷமாய் அவன் மார்பின் மீது குத்தியபடி,
"நீ மனுஷனே இல்லடா" என்று கடிந்து கொள்ள அவன் புன்னகைத்து அவளை இழுத்து அணைத்தபடி,
"லவ் ப்ளஸ் வெஞ்சன்ஸ்... என்ன பண்ண சொல்ற?" என்று சொல்லிக் கண்ணடிக்க, அவள் முகம் வாடியது. அவன் பிடியிலிருந்து விலக முற்பட்டுக் கொண்டே, "போடா ராஸ்கல்... இப்படி பண்ணி வைச்சிருக்க... நாளைக்கு நான் எப்படிறா ஆஃபிஸ் போவேன்" என்று தவிப்புற,
"ச்ச்சோ... அதை பத்தி நான் யோசிக்கவே இல்லையே... பேசாம நீ ஒன்னு பண்ணு" என்றவன் அவள் முகத்தருகே நெருங்கி,
"நீயும் பதிலுக்கு என்னை அதே இடத்தில கடிச்சுறேன்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான். அவள் எரிச்சலோடு அவனைத் தள்ளிவிட்டு நகர்ந்து போக,
"ஏ தமிழச்சி" என்றழைத்தபடி அவள் பின்னோடு சென்றவன் பாதத்தில் ஏதோ தட்டுப்பட்டது. அவன் கீழே குனிந்து அதனை எடுத்து பார்த்தான். அது அந்த சிங்க முக டாலர்.
அத்தனை நேரமிருந்த வீரேந்திரனின் முகம் வேறு பரிமாணத்திற்கு மாற்றமடைந்தது. அவன் கோபமாய் அவள் தோள்களைப் பற்றித் திருப்ப அவளுக்கு அவனின் திடீர் முகமாற்றம் குழப்பமடையச் செய்தது.
"உன்னை சட்டையைப் பத்திரமாதானே மாட்ட சொன்னேன்... நீ என்ன பண்ண? தூக்கிக் கீழே போட்டியா?" என்று அவன் முறைப்புடன் வினவவும், 'நேர்ல பார்த்த மாதிரியே சொல்றானே' என்ற எண்ணத்தோடு அவள் மௌனமாய் நிற்க,
"உன்னைதான்டி கேட்கிறேன்... பதில் சொல்லு" என்று மிரட்டினான்.
அவள் புரியாமல், "இப்ப என்னாயிடுச்சுன்னு இவ்வளவு டென்ஷன் வீர்" என்று கேட்டாள்.
அப்போது அவன் அந்த டாலரை அவளிடம் காண்பித்து, "முக்கியமான எவிடன்ஸ் இது... கீழே கிடந்தது... என் பேக்கெட்ல இருந்து எப்படிறி கீழே விழும்" என்று கேட்க, அவள் அதிர்ந்தாள். மேலும் அதனை அவன் 'எவிடென்ஸ்' என்ற குறிப்பிட்டது அவளை அச்சமுற செய்ய, அவள் நெற்றியில் முத்து முத்தாக வியர்வை துளிகள் அரும்பியது.
காஞ்சிபுரத்திற்கு அவன் சென்றதைப் பற்றி யோசித்தவளுக்கு அவன் எவிடன்ஸ் என்று உரைத்ததன் அர்த்தம் ஒருவாறு விளங்கிற்று. இது தர்மாவின் வீட்டிலிருந்து கிடைத்திருக்க வேண்டும் என யூகித்தவள் இந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கலானாள்.
அவள் ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் கவனித்தவன் அவள் தோள்களைப் பிடித்து உலுக்கி, "ஏய் தமிழச்சி..." என்றழைக்க அவனை நிமிர்ந்து பார்த்தவள், தானே அவனிடம் தன் மனநிலையைக் காட்டுவது சரியல்ல என எண்ணிக் கோபமாக இருப்பது போல பாவனை செய்து அவனைக் கடந்து சென்று படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
"இப்ப என்னாயிடுச்சுன்னு இப்படி வந்து படுத்துக்கிட்ட?" என்றவன் கடுப்புடன் கேட்க, அவள் அவன் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல், "வேலைன்னு வந்துட்டா நீங்க பக்கா செல்ஃபிஷ்ஷா மாறிடிறீங்க இல்ல... எதிர்ல நிற்கிறது யாருன்னு உங்களுக்குத் தெரியமாட்டேங்கது" என்றாள்.
"நீ ஷர்ட்டை ஒழுங்கா எடுத்து வைச்சிருந்தா... டாலர் கீழே விழுந்திருக்காது... நானும் டென்ஷனாயிருக்க மாட்டேன்"
"நீங்க உங்க பாக்கெட்ல முக்கியமான எவிடன்ஸ் வைச்சிருப்பீங்கன்னு எனக்கென்ன ஜோசியமா தெரியும்... அதுவும் இல்லாம பொறுப்பானவரா இருந்தா... பேக்கெட்லயா வைச்சிருப்பாங்க?!" என்று அவள் கேட்க, அவனும் பதிலுக்கு கோபத்துடன்,
"நான் எதை எங்க வைக்கணும்னு எல்லாம் நீ கிளாஸ் எடுக்காதே... எனக்கு நம்பிக்கையான இடத்திலதான் நான் வைச்சுக்க முடியும்... அப்புறம் ஒரு சாதாரண விஷயத்துக்கு நீ இவ்வளவு ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியமேயில்லை" என்றான்.
"சரி... சாதாரணமான விஷயமாவே இருக்கட்டும்... ஆனா இப்போ என் மனசு சரியில்ல... நான்" என்று அவள் இழுக்கும் போதே, "படுத்துக்கோ... நல்லா நிம்மதியா தூங்கு" என்றவன் தன் தோளின் மீதிருந்த துண்டை விட்டெறிந்துவிட்டு தானும் போய் படுக்கையில் சரிந்தான்.
அந்த டாலரை பார்த்த நொடி ஏற்பட்ட மனஉளைச்சல் அவளின் மொத்த நிம்மதி சந்தோஷத்தைக் களவாடியிருந்தது. அவன் எவிடன்ஸ் எவிடன்ஸ் என்று சொன்ன வார்த்தை மட்டுமே அவள் மனதை அப்போது சுற்றிச் சுழன்றுக் கொண்டிருந்தது.
நூலறுந்த காற்றாடியை அவள் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கையில் அதனை ஒரு நிலைப்பாட்டில் இழுத்து வந்து அவனுடன் உறவாடுவது அவளுக்குச் சாத்தியமே இல்லை.
அதுவுமின்றி தன் மனநிலையை அவன் கண்டறிந்து கொண்டால் அது இன்னும் பாதகமாகிவிடும் என்று தோன்றியது.
இவற்றை எல்லாம் தாண்டி ஒவ்வொரு முறையும் தன்னைக் கட்டாயப்படுத்தாமல் அவன் விலகிப் போய்விடுவதைப் பார்க்கும் போது அவனைப் போய் தன் உணர்வுகளை மதிக்கத் தெரியாதவன் என்று எண்ணினோமே எனக் குற்றவுணர்வும் உண்டானது.
வீரேந்திரனுக்கு ஒவ்வொரு முறையும் அவளால் கிட்டியது ஏமாற்றம்தான். அவள் தன்னை நிராகரிக்கிறாளா இல்லை தான்தான் அவள் மனதைக் காயப்படுத்திவிடுகிறோமோ என்ற யோசித்தவனுக்குப் பதில் கிடைத்தபாடில்லை.
போதாக்குறைக்கு தான் அவளிடம் அந்த டாலருக்காக அந்தளவுக்குக் கோபம் கொண்டிருக்கக் கூடாதோ என தன்னைத்தானே கடிந்தும் கொண்டான். கிட்டத்தட்ட இருவரின் மனநிலையும் ஒரே பாதையில் ஒரே போலவே பயணித்தாலும் இணையா கோடுகளாகவே அவர்கள் நின்றிருந்தனர்.
வீரேந்திரனின் மனச்சோர்வும் உடல் சோர்வும் அவனைத் விரைவாகவே உறங்கச் செய்திருந்தது. ஆனால் தமிழ் உறங்கவில்லை. எங்கே தான் உறங்கிவிட்டால் அவள் விரும்பாத தர்மாவின் நினைவுகள் கனவாய் வருமோ என்ற அச்சம் அவளுக்கு.
ஆதலால் தூங்கக் கூடாது... தூங்கக் கூடாது... என வெகு நேரம் அவள் மனதிற்குள் ஜபித்திருந்த போதும் அவள் முயற்சியை அவள் மூளை முறியடித்து அவளை உறங்கச் செய்துவிட்டது.
எதைக் குறித்து அவள் நினைக்க விரும்பவில்லையோ அதுவே அவளுக்குள் கனவாய் உதித்தது.
*
ஒரு மாலை நேரம். தர்மாவின் வீடு.
எகத்தாளமாய் தர்மா சிரித்துக் கொண்டிருந்தார். நாற்பதுக்கும் ஐம்பதுக்குமான இடைப்பட்ட வயது. உயரமான கட்டமைப்பான உருவம்.
அவர் முகத்தில் நினைத்தவற்றை எல்லாம் சாதித்துவிட்டோம் என்கிற வெற்றி களிப்பு. அந்த அறையினை நிரப்பிய அவரின் சிரிப்பின் ஒலியில் கர்வம் எதிரொலித்தது.
அவரின் எதிரே ஆதியும் தமிழும் கோபத்தின் உச்சத்தில் நின்று கொண்டிருக்க அவர் தன் சிகரெட்டைப் பற்ற வைத்தபடி அந்த தோழிகளிடம்,
"நீங்க பக்கம் பக்கமா ஆதாரம் திரட்டி எடுத்துட்டு போய் கொடுத்தாலும் என்னை எல்லாம் யாரும் ஒன்னும் பண்ண முடியாது... நீங்க கொடுத்த பேப்பர்ஸ் எல்லாம் என்கிட்டதான் இருக்கு..." என்று சொல்லி அதனை எல்லாம் காண்பித்துவிட்டு தன் லைட்டரில் அவற்றைப் பற்ற வைத்தவர்,
"நீங்க போலீஸ்ல போய் என்னைப் பத்தி பத்த வைச்சீங்களே... அந்த நெருப்புதான்... நல்லா எரியுதா?!" என்று கேட்டு பயங்கரமாய் சிரித்தார்.
24