மோனிஷா நாவல்கள்
Monisha's VET - 27
Quote from monisha on December 4, 2021, 9:55 PM27
இந்தக் காதல் எல்லாம் கனவாய் கலைந்துவிடுமா என்ற யோசனையோடு வீட்டின் வாயிலேயே நின்றிருந்தவளின் முகமாற்றத்தை அவன் கவனித்தான்.
"ஏன்டி ஒரு மாதிரியாகிட்ட? போன தடவை நடந்ததெல்லாம் யோசிச்சு பார்க்கிறியா... விடு... அதெல்லாம் நானும் மறந்துட்டேன்... நீயும் மறந்திடு" என்றவன் அவள் தோள்களை அணைத்தபடி உள்ளே அழைத்து வந்தான்.
அவனின் அந்த மாற்றத்தை பார்த்து அவளுக்குப் பூரிப்பாகவும் வியப்பாகவும் இருந்தது. அவனிடம் தானே உண்மையைத் தெரியப்படுத்திவிடுவதே நல்லது என்று எண்ணியவளுக்கு அவனின் கோபத்தை விடவும் அவன் கொண்ட காதலும் நம்பிக்கையுமே அவளைச் சொல்லவிடாமல் பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது.
நடப்பது எதுவாயினும் தான் அதனை எதிர்கொள்ள வேண்டும் என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவனோடு உள்ளே நுழைந்தவளை, விஜயா அத்தனை ஆர்வமாய் வரவேற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இருவரையும் அவர் நலம் விசாரித்து அமரச் சொல்லிவிட்டு உள்ளே சென்று வேலையாட்களிடம் ஏதோ பணித்துக் கொண்டிருக்க,
வீரேந்திரன் தமிழின் புறம் தலை சாய்த்து, "ம்ம்ம்... உன் தம்பியை அடிச்ச அடி... உன் சித்திக்கும் உறைச்சிருக்கும் போல" என்றான். அவளுக்கோ நடப்பது எதையும் நம்ப முடியவில்லை.
வீரேந்திரன் அந்தப் பிரமாண்டமான சோபாவில் கம்பீரமாய் அமர்ந்து, யோசனையோடு நிற்பவளின் கரத்தைப் பிடித்து அருகில் அமர்த்தினான்.
அவள் உள்ளமோ அப்போதைக்கு தன் அறைக்குச் செல்ல வேண்டும் என்று பரபரத்தது. அவள் பார்த்து பார்த்து வடிவமைத்த அவளுடைய அறை. இனி தான் அங்கே வசிக்கவே முடியாது என்ற எதார்த்தத்தை ஏற்பது சற்றே அவளுக்கு சிரமமாகத்தான் இருந்தது. எனினும் ஒவ்வொரு பெண்ணும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை அது.
அவனோ அவளின் தவிப்பினை உணராமல், "இப்போ ஹேப்பியா இருக்க இல்ல தமிழ்" என்று கேட்கவும் அவள் பதில் பேசாமல் தலையை அசைத்து பெயருக்கு என்று புன்னகைத்தாள்.
அதேசமயம் ரவி அவர்கள் முன்னிலையில் வந்து நின்றான்.
"எப்போ வந்தீங்க?! அப்பா ஃபோன்ல சொன்னாரு... நீங்க வருவீங்கன்னு... எனக்குதான் நீங்க வருவிங்களோன்னு" என்று குற்றவுணர்வால் பேச முடியாமல் அவன் தலைகவிழ,
தமிழ் அவனின் மனவுணர்வுகளைப் புரிந்து கொண்டு, "பழசை எல்லாம் விடு ரவி... அவரும் எல்லாத்தையும் மறந்திட்டாரு... நீ அதெல்லாம் பத்தி மறந்துட்டு... இனிமே அப்பாவுக்கு ஸப்போர்ட்டா பிஸ்னஸ்ஸைக் கவனிச்சிக்கோ" என்றாள். மேலும் அவன் முகத்திலிருந்த காயங்களையும் கைக்கட்டையும் பார்த்தவள் கணவனை முறைத்து வைக்க,
"நான் லேசாதான் அடிச்சேன் பட் அடி கொஞ்சம் பலமா விழுந்திருச்சு" என்றவன் இயல்பாகத் தோள்களைக் குலுக்கினான்.
"இருந்தாலும் இது ரொம்ப டூ மச்தான்” என்றவள் சொல்ல,
ரவி தமக்கையிடம், "இல்ல… மாமா அடிச்சது நியாயம்தான்... நான் செஞ்ச தப்பு அந்த மாதிரி... கொஞ்சங்கூட வாய் கூசாம உன் மேல பழிப்போட்டு உன் வாழ்க்கையைக் கெடுக்கப் பார்த்தேன்... பெரிய தப்பு... உன் மேல இருந்த பொறாமை... தாத்தா எப்பவுமே உன்னையே தலையில தூக்கி வைச்சு கொண்டாடுறாரேன்னு கோபம்... உன்னை நிம்மதியா இருக்க விடாம என்னன்னவோ பண்ணேன்... அதெல்லாம் தெரிஞ்சும் நீ என்னை மன்னிச்சியே... மாமா அடிச்ச அடியைவிட அதுதான் எனக்கு ரொம்ப வலிச்சுது" என்றான்.
அவனின் மனமாற்றம் தமிழைக் கலங்க வைத்தது. ரவிக்கு ஆரம்பத்திலிருந்தே தமிழ் மீதான பொறாமையும் தவறான எண்ணமே அவனை அந்தளவுக்குத் தீயவனாக மாற்றியிருந்தது.
அதற்கு ஒருவிதத்தில் விஜயாவும் முக்கிய காரணம். அப்படி இருக்கும் போது தமிழ் அந்தச் சூழ்நிலையில் அவனை மன்னித்தது அவளின் மீதான தவறான கண்ணோட்டத்தை அவனுக்கு முற்றிலும் மாற்றியிருந்தது. அதுவே அவனின் மனமாற்றத்திற்கும் காரணமாய் அமைந்தது.
விஜயா அவர்கள் இருவருக்கும் குளிர்பானத்தை எடுத்து வந்து கொடுத்துவிட்டு தமிழின் கைகளைப் பற்றியபடி, "நான் உன்னை ஒரு மக மாதிரி நடத்தினதே இல்லயே... எப்படி எப்படியோ அவமானப்படுத்தினேன்... நீ அதை எல்லாம் மனசுல வைச்சுக்காம ரவியை மன்னிச்சுட்ட... அப்பாவுக்கு மட்டும் இது தெரிஞ்சா ரவியை வீட்டை விட்டு வெளியவே அனுப்பிடுவாரு... ஆனா நீ இப்பவரைக்கும் எதுவும் சொல்லலயேம்மா" என்று கண்ணீர் விட்டார்.
"ப்ளீஸ் சித்தி...இந்த விஷயத்தை இதோட விடுங்க... நானும் அப்பாகிட்ட சொல்ல மாட்டேன்... நீங்களும் எதுவும் சொல்ல வேண்டாம்" என்றாள்.
இத்தனை நாளாய் அவளுக்குக் கிட்டாத அன்பெல்லாம் மொத்தமாய் அன்று கிடைக்கப்பெற கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனாள்.
ரவியும் விஜயாவும் பேசியவற்றை எல்லாம் வீரேந்திரனும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அவர்களின் மனமாற்றம் அவனுக்கும் ஆச்சர்யத்தைக் கூட்டியது.
தமிழ் அந்த சமயம் தேவியைத் தேடியபடி ரவியிடம் விசாரிக்க, "அவ எப்பவும் ரூம்லதான் இருக்கா? என்னைதான் பண்றாளோ?! உன்னைப் பத்தின ஞாபகமா... என்னன்னு ஒன்னும் தெரியல" என்றான்.
"நான் போய் தேவியைப் பார்த்துட்டு வர்றேன்... நீங்க ரவியோடுப் பேசிட்டிருங்க" என்றவள் செல்ல அவன், "தமிழ்" என்றான். அவள் கவனிக்காமல் சென்றுவிட, அவனுக்கு எரிச்சலானது.
'அம்மா வீட்டுக்கு வந்தா இந்தப் பொண்ணுங்க புருஷனை மறந்திடுவாங்களே!’ என்றவன் உள்ளுர பொருமியபடி ரவியைப் பார்க்க அவன் அஞ்சியபடியே நின்றிருந்தான்.
"இன்னும் என்னைப் பார்த்து உனக்கு என்ன பயம் ரவி?! நடந்த விஷயத்தை எல்லாம் மறந்திடு... புரிஞ்சிதா"
ரவி ரொம்பவும் பவ்யமாக, "சரிங்க மாமா" என்றான். இப்போதும் தன் மீதான பயம் அவனுக்கு மாறவில்லை என்பதை அறிந்தவன் எழுந்து ரவியின் தோள் மீது கைப்போட்டு, "இயல்பா இரு... ரவி" என்று கூற,
"சரிங்க மாமா" என்றான் மீண்டும் அதே பவ்யத்துடன்.
வீரேந்திரன் அவனை சலிப்பாகப் பார்த்துவிட்டு அந்த முகப்பறையைச் சுற்றி அளவெடுத்தான். அப்போது அவனின் பார்வை சிம்மவர்மனின் படத்தை கவனித்தது.
அவன் அதனை அருகில் சென்று பார்த்திருக்க ரவி, "எங்க தாத்தா சிம்மவர்மன்" என்றான்.
அவரைதான் அவனுக்கு ஏற்கனவே தெரியுமே. ஆனால் இம்முறை அவன் விழிகள் கவனித்தது அவர் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த சிம்ம இலட்சனைப் பொறித்த டாலரை. அவன் பார்வை அத்தனைக் கூர்மையாய் அதன் மீதே பதிந்திருந்தது.
அப்போது தர்மாவின் வீட்டில் கிடைத்த டாலர் இவர்கள் குடும்பத்தோடு தொடர்புடையது என்று முடிவுக்கு வந்தவன் ரவியை சந்தேக கண்ணுடன் பார்த்தான். ஆனால் அது குறித்து அவனிடம் கேட்க முற்படவில்லை.
அப்போதைக்கு அவன் எண்ணமெல்லாம் தமிழ் ஏன் அந்த டாலரைப் பார்த்து எதுவும் கூறாமல் அமைதி காத்தாள் என்பதுதான். அவன் குழப்பத்தோடு இருக்கையில் அமர்ந்துவிட அவனுடைய போலீஸ் மூளை துரிதமாய் நடந்த நிகழ்வுகளை மீண்டும் ஒரு முறை பின்னோக்கிச் சென்று யோசித்தது.
அப்போது மேஜை மீதிருந்த தமிழின் கைப்பேசி அடித்து அவன் சிந்தனையைத் தடை செய்ய, அதனை அவன் கையில் எடுத்தான்.
அதில் ரகு என்ற பெயர் ஒளிர அவனுக்கு இன்ஸ்பெக்டர் ரகுவின் முகம் நினைவுக்கு வந்தது. தன்னுடைய சந்தேகத்தை தெளிவுப்படுத்திக் கொள்ள எண்ணி அந்த அழைப்பை ஏற்று அவன் காதில் வைத்தான்.
கணவனாகத் தான் செய்ய நினைக்கும் செயல் தவறெனினும் போலீஸ்காரனாக தன் செயலில் தவறில்லை என்று தனக்குத்தானே ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டவன் அந்தக் குரல் ரகுவினுடையதுதானா எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருக்க, எதிர்புறத்தில் ரகுவின் குரல் அழுத்தமான பாணியில் கேட்டது.
"ஏ தமிழச்சி... என்னடி நினைச்சிட்டிருக்க?!" 'தமிழச்சி' என்ற ஒற்றை அழைப்பே வீரேந்திரன் இதயத்தை இரண்டாய் பிளந்துவிட்டது.
ரகுவோ தன் தோழியிடம் பேசுவதாக எண்ணி, "ஆமாம்... யாரைக் கேட்டு நீ நான் பேசிட்டிருக்கும் போதே ஃபோனை கட் பண்ண? நீயா கால் பண்ணுவன்னு பார்த்தா அதுவும் இல்ல... நான் சொல்றதை ஒழுங்கா கேளு... அந்த டைரியை என்கிட்ட கொடுத்திரு... அப்புறம் உனக்குதான் பிரச்சனை" என்றான்.
வீரேந்திரனுக்கு அதிர்ச்சி ஒரு பக்கமும் கோபம் மறு பக்கமும் ஆட்டிப் படைக்க, அவன் உள்ளம் கொதிப்படைந்தது.
"......."
"ஏன்டி ஸைலன்ட்டா இருக்க...?!"
'எத்தனை டி போடுவான்? ராஸ்கல்' என வீரேந்திரன் மனதிற்குள் திட்டியபடியே மௌனமாய் இருந்தான்.
ரகு மேலும், "ஏ தமிழச்சி பேசுடி" என்றான்.
"....." வீரேந்திரன் உடலெல்லாம் உஷ்ணம் ஏறியது.
"தமிழ்" என்று அழைக்க அப்போதும் பதில் இல்லை.
கடைசியாய் கோபம் குறைந்து அமர்த்தலாய் பேசினான்.
"என்னாச்சுடி?! போன தடவையும் பதில் பேசாம கட் பண்ணிட்ட.... உன் ஏசிபி புருஷன் பக்கத்தில இருக்கானா?!... சரி சரி நீயா அப்புறமா கால் பண்ணிப் பேசு" என்று சொல்லிவிட்டு ரகு அழைப்பைத் துண்டிக்க வீரேந்திரன் விழிகள் எரிமலை குழம்பமாய் மாறியிருந்தது. அவன் எதிரே வந்து யார் அப்போது நின்றாலும் அடுத்த நொடியே சாம்பல்தான்.
27