மோனிஷா நாவல்கள்
Monisha's VET - 29
Quote from monisha on December 9, 2021, 10:12 PM29
தமிழின் மனம் ஆனந்தத்தில் உயர உயரப் பறந்து கொண்டிருக்க, அவளின் விதி விரைவிலேயே அவளை அதலபாதாளத்தில் தள்ளக் காத்திருந்தது.
சந்தோஷத்தில் திளைத்திருந்தவளுக்கு கணவனின் நினைவு வரவும் ரவியை நோக்கி, "அவரை தனியா விட்டுவிட்டு வந்துட்டியா ரவி?" என்று கேட்டாள்.
"இல்ல க்கா... உங்க ரூமை பார்க்கனும்னு சொன்னாரு" என்றதும் அதிர்ந்தவள் தேவியின் புறம் திரும்பி, "என் ரூம் கீ உன்கிட்டதானே இருக்கு" என்று கேட்டாள்.
"அது நீங்க வரப் போறீங்கன்னு அம்மா சொன்னாங்க... க்ளீன் பண்றதுக்காக ரூமை நான்தான் திறந்தேன்... அப்பதான் இந்த ஃபோட்டோ கிடைச்சது?" என்று இழுத்தவளைக் கோபமாய் முறைத்தவள், ஏதோ தவறாய் நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு உணர்த்தவும் பதட்டத்துடன் தன் அறைக்கு ஓடினாள்.
அப்போது அவள் விழிகள் கண்ட காட்சியை அவளால் நம்பவே முடியவில்லை. தன் அறை முழுவதும் பார்வையை படரவிட்டவளின் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.
அப்போது அவனின் குரல் கணீரென்று அந்த அறை முழுக்கவும் எதிரொலித்தது.
"வாடிடிடிடி... என் தமிழச்சி... வா... உனக்காகதான்டி... காத்துட்டிருக்கேன்" என்று பற்களைக் கடித்துக் கொண்டு அவன் சீற்றத்துடன் பேச, அவள் திடுக்கிட்டாள். சில நிமிடங்கள் முன்புவரை காதலோடு அவள் கரத்தை அழுந்தப் பிடித்து கொண்டவனா அவன் என்று உற்று நோக்கியவளுக்கு ஏமாற்றம்தான் மிச்சம்.
வீரேந்திரன் அவள் மீது கொண்ட அத்தனை கோபத்தையும் மொத்தமாய் அந்த அறையின் மீது காட்டி அதனை துவம்சம் செய்திருந்தான்.
அவன் உள்ளே நுழைந்ததும் அவனை அதிசயிக்க வைத்து, திகைக்க வைத்து, ஏன் ஒரு நொடி அவள் மீதான மரியாதையைக் கூட அவனுள் அதிகரிக்க வைத்தது அந்த அறை.
யாரும் சொல்லாமலே அவளுக்கு அந்த அறை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பார்த்தவுடனே உணர்ந்த கொண்ட நொடி அந்த அறையை நிர்மூலமாக்கவும் முடிவெடுத்தான்.
தர்மா சம்பந்தப்பட்ட ஏதாவது ஒன்று அந்த அறையில் இருக்கிறதா என்று தேடுவது அவனுக்குக் கிடைத்த ஒரு காரணம் மட்டுமே. அந்தக் காரணத்தை வைத்துக் கொண்டு அந்த அறையை முற்றிலுமாய் சர்வநாசம் செய்திருந்தான்.
தமிழ் மீண்டுமே ஒரு முறை அவள் அறையைச் சுற்றிப் பார்த்தாள். அவள் ரசித்து ரசித்துப் படித்த புத்தகங்கள் எல்லாம் கேட்பாரின்றி கீழே சரிந்து கிடந்தன. அவள் தேடித் தேடிச் சேகரித்த பழமையான வரலாற்றைப் பறைசாற்றும் பொக்கிஷங்கள் எல்லாம் துச்சமாகத் தூக்கி எறியப்பட்டிருந்தன. அவள் படுக்கைக் கூடப் பாரபட்சமின்றி கலைத்தெறியபட்டிருந்தது.
தாய்மை உறவையே கண்டிராத அவளுக்கு அந்த அறைதான் பல நேரங்களில் அவளின் உணர்வுகளைச் சுமந்து கொண்ட தாய் மடி. அவள் தாத்தாவின் மறைவிற்குப் பிறகு அந்த அறை அவள் உலகமாக மாறியிருந்தது.
யாரையும் அவள் அனுமதியின்றி அந்த அறைக்குள் நுழையக் கூட விடமாட்டாள். அவளைத் தவிர்த்து வேறு யாரும் அங்குள்ள பொருட்களைத் தீண்டவும் விடாமல் அவள் பாதுகாத்து வைத்திருந்தாள். ஆனால் கொஞ்சமும் யோசிக்காமல் அவன் அத்தனையும் சேதாரம் செய்திருந்தான்.
அவன் தன் கணவனாகவே இருப்பினும் அதனை அவளால் ஏற்க முடியவில்லை.
அதே நேரத்தில் தன் மொத்த கோபத்தையும் வெளிக்காட்டி அந்த உறவைக் காயப்படுத்திவிடவும் மனம் வராமல் அந்நிலையை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்து நின்றவளின் முகத்தில் சரேலன்று ஒரு புத்தகத்தைத் தூக்கி வீசியெறிந்து அவள் கவனத்தைத் திருப்பினான்.
அவனின் செயலால் அவமானப்பட்டும் காயப்பட்டும் நின்றவளிடம், "எங்கடி அந்த டைரி?" என்று கோபத்தோடு அவன் கேட்க,
அவனுக்கு எங்கனம் டைரியைப் பற்றித் தெரிந்திருக்கும் என்று குழம்பியவள் அப்போதுதான் கீழே விழுந்த புத்தகத்தை கவனித்து அதிர்ந்து போனாள்.
அது அவளின் மரியாதைக்குரிய பாரதியார் கவிதைகள். அதனைக் குனிந்து எடுக்கப் போனவளின் கண்களில் பட்டது இந்த வரிகள்தாம்.
'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே'
அதைப் படித்த நொடி அவள் உணர்வுகள் கிளர்த்தெழுந்துவிட அந்தப் புத்தகத்தை மூடி எடுத்து மேஜையின் அருகில் வைத்தவள் சுவரில் எழுதப்பட்டிருந்த பாரதியின் ஓவியத்தைக் கண்டாள். அந்தக் கூர்மையான விழிகள் அவளை நிமிர்வாய் பார்த்தன.
'எதை உடைத்தாலும் உன் மனோதிடத்தை அவனால் உடைத்தெறிய முடியாது' என்று நம்பிக்கை தந்தது.
அவள் தன் கோபத்தையும் வேதனையையும் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக நிற்க, பொறுமையிழந்தவன் அவள் கரத்தைப் பற்றி மூர்க்கமாக தன்னருகில் இழுத்து, "கேட்டுட்டே இருக்கேன்... நீ பாட்டுக்கு திமிரா நின்னுட்டிருக்க ... கில்டியாவே இல்லையாடி உனக்கு" என்றான்.
"எதுக்கு கில்டியாகணும் நான் என்ன தப்பு செஞ்சேன்"
"பொய் சொல்றதும் திருட்டுத்தனம் பண்றதெல்லாம் உனக்கு தப்பில்லையோ?!"
"என்னைப் பொறுத்த வரைக்கும் நியாயமான விஷயத்திற்காக இதெல்லாம் செஞ்சா தப்பில்லை" என்றவளை அவன் கூர்ந்து நோக்க அவள் சற்றும் அசராமல் நின்றிருந்தாள்.
"உன் நியாயத்தை பத்தின விளக்கம் எல்லாம் எனக்கு வேணாம்... எனக்கு தேவை அந்த டைரி?" என்று அவன் அழுத்திச் சொல்ல,
"எந்த டைரி?" என்று கேட்டு ரொம்பவும் நிதானமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் விழிகளில் கனலேறியது.
"அடிங்க... அந்த தர்மா வீட்டில இருந்து நீ எடுத்த டைரி”
"யார் அந்த தர்மா வீர்?" என்று அவள் தெரியாதது போல் கேட்கவும் அவன் உள்ளம் கொதிகலனாக மாறியது.
அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்து, "யார் தர்மான்னு உனக்கு தெரியவே தெரியாது இல்ல" என்று வினவ, "தெரியாது" என்று பதிலளித்தாள்.
அவன் அவள் கழுத்தை விடுத்து வேகமாகப் பின்னோடு தள்ள, அவள் படுக்கையின் மீது வீழ்ந்தாள்.
வீரேந்திரன் ஒற்றை காலை அதன் மீது வைத்து, "நான் என்ன கேட்கிறேன்? எதை பத்தி கேட்கிறேன்னு சும்மா தெரியாத மாதிரி நடிக்காதே... கொன்றுவன்" என்று மிரட்ட அவள் எழுந்து உட்கார்ந்தபடி,
"உங்க போலீஸ் திமிரை காட்டிறீங்களா? உங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்படற ஆள் நான் இல்ல" என்றாள்.
"என்ன பேசிட்டிருக்க? யார்கிட்ட பேசிட்டிருக்கோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா?" என்றவன் கடுகடுத்தான்.
"ஏன் தெரியாம? ஏசிபி ராஜ வீரேந்திர பூபதி... கரெக்ட்" என்றவள் சொல்ல,
"இல்ல... இந்த நிமிஷம் வரைக்கும் நான் ஏசிபியா நடந்துக்கல... என்னை அப்படி நடந்துக்க வைச்சுறாத... அப்புறம் நீ பெரிய பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்" என்றான்.
"அப்போ என் ரூமை இப்படி கலைச்சுப் போட்டது... ஏசிபி இல்ல... என் ஆருயிர் கணவன் வீர்... அப்படிதானே" என்றவளின் பார்வையில் அத்தனை வலி. அவளின் கோபத்திற்கும் இந்த எகத்தாளத்திற்கும் காரணம் இந்த அறையின் மீது தான் செய்த தாக்குதல்களா என எண்ணும் போதே அவள் அவனை நோக்கி,
"உங்க யூனிஃபார்ம் கசங்கிட கூடாதுன்னு அப்படியே துடிச்சிங்க... அந்த மாதிரிதான் என் ரூமும்... இங்க இருக்கிற ஒவ்வொரு பொருளும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்... இன்னும் கேட்டா எல்லாமே எனக்கு உயிர்... நான் பார்த்து பார்த்து சேகரிச்சது" என்று சொல்லியவளின் கண்கள் கலங்கின.
அந்த நீரை வெளியே வரவிடாமல் துடைத்தவள், "உங்களுக்கு என்ன கேட்கணும்னாலும் என்னைக் கூப்பிட்டு ஒரு வார்த்தைக் கேட்டிருக்கணும்... திஸ் இஸ் அட்டிராஸ்ஸியஸ்... என்னால ஜீரணிக்கவே முடியல" என்று உணர்ச்சிவசத்தால் நிறுத்தியவள்
மீண்டும் சினம் பொங்க, "நானே உங்ககிட்ட எல்லாதையும் சொல்லிடலாம்னு நினைச்சேன்... ஆனா இப்ப மாட்டேன்... நீங்க தலைகீழா நின்னாலும் என்கிட்ட இருந்து ஒரு வார்த்தை வாங்க முடியாது... உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க... நான் அதை ஃபேஸ் பண்ணிக்கிறேன்... போங்க" என்று சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
வீரேந்திரன் அவள் சொன்னதைக் கேட்டு மேலும் கோபமடைந்தவனாய், "இதெல்லாம் உடைச்சுட்டன்னு உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இல்ல... என் நம்பிக்கையை உடைச்சுயே... எனக்கு எப்படிறி இருக்கும்?! அன்னைக்கு கீழே விழுந்த டாலரைப் பார்த்துட்டு எதுவும் தெரியாத மாதிரி இருந்துட்ட இல்ல... அதுவும் அரண்மனையில அன்னைக்கு நீ தாத்தா ஃபோட்டோவைதான் எடுக்க போனேன்னு... என்னமா நடிச்ச... மொத்தத்தில என்னை முட்டாளக்கிட்ட இல்ல...?! என்னாலயும அதை ஜீரணிக்கவே முடியலடி" என்று வெடித்தவன் அடுத்த நொடியே சுவற்றில் மாட்டியிருந்த கோவில்களின் படம் ஒன்றைக் கைகளில் எடுத்தான்.
"வேண்டாம் வீர்... அதை வைச்சிருங்க" என்று அவள் சொல்லும் போதே அதனை அவன் தூக்கி எறிய, அது கீழே விழுந்து கண்ணாடி துகள்கள் சிதறியது. அவள் சொல்ல சொல்ல கேட்காமல் அவன் வரிசையாய் ஒவ்வொரு படங்களாக உடைத்து நொறுக்கினான்.
அவனை நிறுத்த முடியாமல் செவிகளைப் பொத்திக் கொண்டு கண்களையும் இறுகி மூடிக் கொண்டாள்.
அப்போது கதவைத் தட்டிய ரவி, "என்னாச்சுக்கா? என்ன சத்தம்?" என்று கேட்க, தன் தம்பி உள்ளே வந்துவிடுவானோ என எண்ணிக் கதவைத் தாளிட்டவள், "ஒன்னுமில்ல ரவி" என்று சொல்லும் போதே வீரேந்திரன் ஒரு ஃபோட்டோவை வீம்புக்கென்றே உடைத்தான்.
"அக்கா கதவை திறங்க" அவன் பதற அவள் சமாளிப்பாக,
"ஃபோட்டோஸ் கைத்தவறி உடைஞ்சிடுச்சு" என்றாள்.
வீரேந்திரன் எகத்தாளமான புன்னகையோடு, "சும்மா கதவைத் திறடி... என்னை உன் தம்பி என்னதான் பண்றான்னு பார்க்கலாம்?" என்று சொல்லிக் கொண்டே மற்றும் ஒன்றை கீழே போட்டு நொறுக்கினான்.
அந்த ஃபோட்டோக்கள் எல்லாம் அவள் ஆசையாய் பல தொல்பொருள் ஆய்வுகளிலும் கோயில்களிலும் எடுத்தவை.
ரவி விடாமல், "ஏதாச்சும் பிரச்சனையா?" என்று கேட்டபடி வெளியே நின்று கதவைத் தட்டவும்,
"முடியல... உன் பாச மலர் தம்பி அப்படியே உருகுறான்... திடீர்னு அக்கா மேல பாசம் பொங்கி வழியுது" என்று பரிகாசமாய் உரைத்தவனை முறைத்தவள்,
ரவியிடம் தீர்க்கமாக, "ரவி... நீ போ.... இது எங்க பெர்ஸ்னல்... தேவையில்லாம நீ தலையிடாதே" என்றாள். அதற்கு மேல் ரவியின் குரல் கேட்கவில்லை.
தமிழ் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு வீரேந்திரனை நோக்கி, "உடையுங்க... ஏன் நிறுத்திட்டீங்க வீர்... உடைங்க... எல்லாமே நான் பார்த்து பார்த்து எடுத்த ஃபோட்டோஸ்... கன்டின்யூ பண்ணுங்க" என்று சொல்லி கைகளைக் கட்டி அமைதியாக நின்றாள்.
அவள் பிடிவாதத்தை உடைக்க முடியாத கடுப்போடு அவளை நெருங்கியவன், "அப்போ நீ எதுவும் சொல்ல மாட்ட?!" என்று கேட்க,
'மாட்டேன்' என்பது போல் அவள் மறுப்பாகத் தலையசைத்தாள்.
"இவ்வளவு நெஞ்சழுத்தம் ஆகாதுடி" என்றவன் எரிச்சலாய் சொல்ல அவள் மௌனமாகவே நின்றாள்.
சற்று நேரம் மௌனமாய் நின்றவன் பின் அவளைப் பார்த்து வஞ்சமாக புன்னகைத்து, "லாஸ்ட்டா என்கிட்ட இன்னொரு ஆயுதம் இருக்கு டார்லிங்... அதுல நீ விழுந்தே ஆகணும்" என்றான்.
அவள் புருவங்கள் முடிச்சிட அவனைப் பார்க்க வீரேந்திரன் அவள் கைப்பேசியை எடுத்து காண்பித்தான்.
இது எப்படி அவன் கையில் என்று யோசித்தவளிடம், "ரகுகிட்ட இப்பதான் ஜஸ்ட் நவ் பேசினேன்... நீ வேணா பேசிறியா?!" என்று கேட்கும் போதே அவள் அவசரமாக தன் கைப்பேசியைப் பறித்துக் கொண்டாள்.
"இனிமே வாங்கி... உன் ரீல் அந்து போச்சுடி" என்றான்.
டைரியைப் பற்றி ரகுவை தவிர வேறு யாரும் சொல்லி இருக்க முடியாது என எண்ணியவளுக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்து போனது. அவள் யோசனையுடன் நிற்க, "ம்ம்ம்... இப்பவாச்சும் சொல்றியா?!" என்று கேட்டான்.
தமிழ் அவனை கோபமாய் நோக்கி, "என் ஃபோனை எடுத்து எப்படி நீங்க பேசலாம்... கொஞ்சங் கூட மேனேர்ஸே தெரியாதா உங்களுக்கு" என்றாள்.
"ஓ தெரியுமே... அதான் நான் பேசல... ஜஸ்ட் கேட்டேன்... அந்த ராஸ்கல் ரகு பேசினதை... அவன் மட்டும் என் பக்கத்தில நின்னு அப்படி பேசி இருக்கணும்... என்கிட்ட சிக்கி சின்னாபின்னமா ஆகியிருப்பான்"
'அப்படி என்னத்தைப் பேசித் தொலைச்சிருப்பான்' என்று சிந்தித்தவளின் தலையை நிமிர்த்திப் பார்க்க வைத்தவன் ஏளனத்தோடு,
"நீ எதுவும் சொல்ல வேண்டாம்... நான் அந்த ரகுவை உள்ளே வைச்சு மிதிமிதின்னு மிதிச்சா நீ சொல்ல வேண்டியதையும் சேர்த்து அவனே சொல்லிடுவான்" என்றான்.
அளவில்லா கோபத்தோடு வீரேந்திரனின் சட்டையைப் பிடித்தவள்,
"ரகு மேல கை வைச்சீங்க... நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது" என்றாள்.
"என்னடி பண்ணுவ... அப்படி அவன் யாருடி உனக்கு?" என்று கேட்க தமிழ் அடங்காத கோபத்தோடு, "அவன் என்" என்று சொல்லும் போதே,
வீரேந்திரன் குறுக்கிட்டு "உன்..." என்று அழுத்தமாய் கேட்டான்.
அவள் பேச எத்தனிக்கும் போது மீண்டும் அவளைப் பேசவிடாமல்,
"ஃப்ரண்டுன்னு மட்டும் சொல்லி என்னை ஏமாத்த பார்க்காதே தமிழ்" என்றான்.
அவன் வார்த்தை அவளை ஊமையாக்கிவிட, அவள் அப்படியே நிலைகுலைந்துவிட்டாள். அவர்கள் நட்பைத் தவறான கண்ணோட்டத்தோடு பலரும் பேசிய போது, அவர்களுக்கு விளக்கம் கூற கூட விருப்பமில்லாமல் அலட்சியமாய் தூக்கி எறிந்தவளால், இன்று அவ்விதம் முடியவில்லை.
ரவி அவளைப் பற்றி தவறாய் சொன்ன போது ஒரு வார்த்தை கூட விளக்கம் கேட்காமல் தன்னைப் புரிந்து கொண்டவனாயிற்றே. அந்த நம்பிக்கைதானே அவர்களுக்குள் உறவுப் பாலத்தைக் கட்டமைத்து அவளை அவனிடம் இணைத்தது. அந்த நம்பிக்கை இப்போது இல்லாமல் போனதா?
இந்த வேதனையைக் கடந்து அவன் அப்படிப் பேசுபவன் அல்லவே என்று அவள் மனம் கணவன் மீதான நம்பிக்கையையும் விட்டொழிக்காமல் பிடித்திருந்தது. அவள் இப்படி சிந்தனையில் மூழ்கியிருந்த காரணத்தால் அத்தனை நேரம் ரணகளப்பட்டு கொண்டிருந்த அந்த அறை நிசப்தமாய் மாறியிருந்தது.
வீரேந்திரன் அந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாய், "தமிழ்" என்றழைக்கவும் அவள் அவனை நிமிர்ந்து நோக்கினாள். அவள் அழவில்லை. ஆனால் அவள் முகம் முற்றிலுமாய் வெளுத்துப் போயிருந்தது. உதடுகள் துடித்திருக்க அவளின் விழிகள் கனல் ஏறியிருந்தது. அந்தக் கூர்மையான விழிகள் அவனைக்குறி வைத்துத் தாக்கியபடி,
"ஏன் வீர்? என் ரூம்ல இருக்கிற திங்ஸை எல்லாம் உடைச்சும் கூட உங்க மனசு ஆறலயா?! என்னையும் உடைச்சி வேதனைப்படுத்திப் பார்த்தாதான் உங்க மனசு ஆறும்... இல்ல" என்று கேட்டவள் மேலும் தாங்க முடியாமல் அவன் சட்டையை பிடித்து, "ஏன் சிலை மாறி நிக்கிறீங்க?! சொல்லுங்க நானும் ரகுவும் ஃப்ரண்டு இல்லன்னா... அப்புறம் வேறென்ன? அதையும் உங்க வாயாலயே சொல்லிடுங்க... நீங்க இதுவரைக்கும் எனக்கு செஞ்ச அவமானத்தோட சேர்த்து அந்த அவமானத்தையும் நான் தாங்கிக்கிறேன்" என்று படபடவேன பொறிந்து தள்ளினாள்.
அத்தனை நேரம் கோபத்தின் உச்சத்தில் நின்றவன் சட்டென்று அவளது வலி மிகுந்த பார்வையில் கரைந்து விட்டான். "இல்லடி... நீ தப்பா புரிஞ்சிகிட்ட… நான் அப்படி" என்று பொறுமையாய் அவன் எடுத்துரைக்க எண்ணி, அவள் கன்னங்களை அவன் கரம் தழுவியது.
அவள் அந்த கணமே அவன் கைகளை அவசரமாய் தட்டிவிட்டு,
"தொடாதீங்க... ஐ ஹேட் யூ" என்று சொல்லி விலகி நின்று கொண்டாள்.
அவளின் அந்த நிராகரிப்பைத் தாங்க முடியாதவன் அவளை வீம்புக்கென்றே தன்னருகில் இழுத்து அவள் இடையை அழுத்தமாய் வளைத்துக் கொண்டான்.
"என்னை விடுங்க" என்று தவித்தவளிடம்,
"சரியான அவசர குடுக்கை... எல்லாதிலயும் அவசரமா டி உனக்கு" என்று கேட்டபடி அவள் உச்சந்தலையில் அடிக்க,
"ஆ... வீர்ர்ர்" என்று அவள் வலியால் தலையில் தேய்க்க,
"என்னை அவ்வளவு சீப்பான மென்டாலிட்டியானவன்னு நினைச்சிட்ட இல்ல... லூசு... நான் சொன்ன அர்த்தம் வேற... நீ புரிஞ்சிக்கிட்ட அர்த்தமே வேற" என, அவள் புருவங்கள் நெரிந்தன.
"மாற்றி பேசாதீங்க... ஃப்ரண்டுன்னு சொல்லி ஏமாத்த பார்க்காதன்னு தானே என்கிட்ட சொன்னிங்க" என்றவள் அவனை நோக்கி கேள்வி எழுப்ப,
"ஆமாம் சொன்னேன்... அதுக்காக... நான் உன்னை அந்த இடியட் ரகுவோட சேர்த்து வைச்சு சந்தேகப்படறன்னு அர்த்தமா?!" என்றான்.
தமிழ் யோசனையோடு அவனையே பார்த்திருக்க வீரேந்திரன் அதே கோபத்துடன் தொடர்ந்தான். “நம்மோட முதல் சந்திப்புல ஆரம்பிச்சு இந்த செகண்ட் வரைக்கும் நீ என்னைத் தப்பாவே புரிஞ்சுட்டிருக்கடி”
அவள் பதிலின்றி அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
"உன்னை விட நட்பு மேல எனக்கு மரியாதை அதிகம் தமிழ்... எனக்கும் காலேஜ்ல நிறைய கேர்ள் ஃப்ரண்ட்ஸ்... அது உனக்கும் தெரியும்... ஏன்? என் காலேஜ் மெட் ஒருத்தன் என்னையும் என் ஃப்ரண்டையும் இணைச்சு தப்பா பேசிட்டான்னு அவன் மூஞ்சி முகரை எல்லாம் உடைச்சு காலேஜ்ல சஸ்பென்ஷன் வரைக்கும் போயிருக்கேன்... அதுமட்டுமா! அந்த ஸ்வேதா... உன்னையும் என்னையும் தப்பா சேர்த்து வைச்சு பேசின ஒரே காரணத்துக்காக எதை பத்தியும் யோசிக்காம கல்யாணத்தை நிறுத்தினவன்... அதெப்படிறி நானே அப்படி ஒரு தப்பை செய்வேன்னு நீ நினைச்ச" என்று கேட்டவன் விழிகள் அவளை எரிப்பது போல் பார்த்தன.
'ஏன் எனக்கு இப்படி நடக்குது? நான்தான் மறுபடியும் தப்பா புரிஞ்சிக்கிட்டேனா?!' என்று எண்ணியவளுக்கு உள்ளூர அவன் அப்படி யோசிக்கவில்லை என்பது நிம்மதியாய் இருந்தது.
வீரேந்திரனை நிமிர்ந்து நோக்கியவள், "நான் வேணும்டே உங்களை தப்பா நினைக்கல வீர்.... நீங்க பேசின டோன் அப்படி இருந்துச்சு... அதுவும் ஃப்ரண்டுன்னு சொல்லி ஏமாத்தாதேன்னு சொல்லும் போது... பதினைஞ்சு வருஷ நட்பு... சட்டுன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு... அதுவும் வேற யார் சொல்லி இருந்தாலும் பரவாயில்லை... நீங்க சொல்லும் போது" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.
"இப்பவும் அதேதான்டி சொல்றேன்... நீங்க இரண்டு பேரும் என் கண்ணு முன்னாடியே ஒருத்தரை ஒருத்தர் தெரியாத மாதிரி நடிச்சுருக்கீங்க... இப்ப திடீர்னு ஃப்ரண்டுன்னு சொன்னா... நான் நம்பணுமா?!" என்று கேள்வி எழுப்பியவன் கோபத்தோடு அவள் இடையை வளைத்திருந்த அவன் கரத்தை இறுக்கினான்.
"வலிக்குது வீர்... விடுங்க"
"நீ எனக்கு ஏற்படுத்தின காயத்தைவிடவா இது பெரிய வலி?" என்று சொல்லும் போது அவள் இடையை நெரித்தியிருந்த கரத்தால் அவதியுற்றபடி,
"ரொம்ப அரெகன்ட்டா நடந்துக்கிறீங்க" என்றாள்.
"நீதானே என்னை அரெகன்ட் ஸேடிஸ்ட் ஈகோஸ்டிக்னு சொல்லுவ... நான் அப்படிதான் நடந்துப்பான்" என்றான் அழுத்தமாக!
"உங்க கோபம் நியாயம்தான்... ஆனா உங்களை ஏமாத்தணும்ங்கிறது எங்க எண்ணம் இல்ல... எங்க சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு" என்றாள்.
"அப்படி என்னடி பெரிய சூழ்நிலை?!
அன்னைக்கு ஸ்டேஷ்னல அவன் உன்கிட்ட பேசிட்டிருக்கிறதைப் பார்த்து... கேட்டதுக்கு... உன்னை யாருன்னே தெரியாதுன்னு அப்பட்டமா பொய் சொல்லிட்டான்... இதுதான் பதினைந்து வருஷ நட்பா?" என்று அவன் கேட்கவும்,
"அன்னைக்கு இருந்த நிலைமைக்கு அவன் மட்டும் என்னை ஃப்ரண்டுன்னு உங்ககிட்ட சொல்லி இருந்தா... நீங்க அவனைக் கடிச்சிக் கொதறி இருப்பீங்க?" என்றாள்.
"என்ன சொன்ன? என்ன சொன்ன? கடிச்சிக் கொதறிடுவேனா... என்னைப் பார்த்தா எப்படிறி தெரியுது இரண்டு பேருக்கும்... சிங்கம் புலி மாதிரியா"
'ஆமாம்னு சொன்னா அதுக்கு வேற என்னை இன்னும் டார்ச்சர் பண்ணுவானே' என்று அவள் மனதில் எண்ணியபடி மௌனமாக நிற்க அவன் மேலும்,
"சரி... நாம மூணு பேரும் காஞ்சிபுரத்தில மீட் பண்ணோம்ல... அப்ப நீ சொல்லியிருக்கலாமே?!" என்று கேட்டான்.
"சொல்லி இருக்கலாம்... ஆனா நம்ம கல்யாணத்துனால நான் ஏற்கனவே அப்செட்டா இருந்தேன்... அந்த நேரத்தில நான் அவனை வேற அறிமுகபடுத்தி உங்ககிட்ட வாங்கி கட்டிக்க சொல்றீங்களா? அதுவும் இல்லாம அந்த ரகுவுக்கு வேற உங்களைப் பார்த்து கொஞ்சம் பயம்... அதான்" என்றாள்.
"யாரு?! அவனுக்கு பயமா?! நான் அன்னைக்கு உன்னை அடிச்சதை தப்பா புரிஞ்சுகிட்டு அந்த ராஸ்கல் என்னைப் பார்த்து என்ன கேட்டான்னு தெரியுமாடி?!"
"என்ன கேட்டான்?" என்றவள் அவனைப் பயத்தோடு நோக்க,
"ஹ்ம்ம்ம்... பொண்டாட்டிய கை நீட்டி அடிக்கிறவன் எல்லாம் ஆம்பிளையான்னு கேட்டான்... அதுவும் நேரடியா கேட்காம யாரையோ கேட்கிற மாதிரி"
'அடப்பாவி ரகு... இப்படி சனியனைத் தூக்கி தானே பனியன்ல போட்டுக்கிட்ட... இந்தக் கோபத்தை எல்லாம் மனசுல வைச்சுகிட்டுதான் இவன் என்னைப் போட்டு இப்படி ஜூஸ் பிழியிறானா… ஃப்ரண்டுன்னு ஒரு அரை லூசு... புருஷன்னு ஒரு முழு லூசு... இரண்டுக்கும் இடையில் நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்... என்ன பொழப்புடா?!' என்று அவள் மனதில் புலம்பிக் கொண்டிருக்க,
அவன் அவள் முகபாவங்களை உற்று கவனித்தபடி, "ஏதோ மனசுக்குள்ள திட்டுறன்னு தெரியுது... ஆனா என்னன்னு தெரியல... என்னடி நினைச்ச?" என்று கேட்டான்.
"நான் ஒரு மண்ணும் நினைக்கல... முதல்ல என்னை விடுங்க ப்ளீஸ்... மெண்டல் டார்ச்சர் தர்றது பத்தாதுன்னு... இப்படி பிஸிக்கல் டார்ச்சர் வேற பண்றீங்க" என்றாள்.
அவன் சிரித்துவிட்டு, "போலீஸ் விசாராணைன்னா இப்படிதான்டி என் தமிழச்சி!" என்றான்.
"எது? இது விசாரணையா? எந்த ஊர்ல ஏசிபி சார் இப்படி கட்டிப்பிடிச்சிட்டு விசாரணை பண்ணுவாங்க? முதல்ல என்னை விடுங்க" என்று அவனிடம் இருந்து விலக முயற்சித்தவளை அந்தக் கோபத்திலும் ரசித்தவன், சற்று நிதானமாய் தன் பிடியை விலக்கி பின்னே வந்தான்.
அவனது கரத்திலிருந்து விடுபட்ட பிறகே இதுவரை தடைப்பட்டிருந்த அவளது தேகத்தின் ரத்தம் ஓட்டம் சீரானது போல உணர்ந்தவள் அவள் உடலை நெளித்தபடி விலகி வந்த போது, அவள் பாதத்தில் அவன் உடைத்த படங்களின் கண்ணாடி துகள்கள் குத்தி குருதி வழியத் தொடங்கியது.
"ஸ்ஸ்ஸ்.. ஆ..." என்று அவள் வலியால் துடிக்க அவன் பதறிவிட்டான். அவள் கரத்தைப் பற்றி படுக்கையில் அமர வைத்தவன்,
"அறிவில்லடி உனக்கு... பார்த்து கால் வைக்க மாட்டியா?" என்று கடிந்து கொள்ள,
"நான் பார்த்து கால் வைக்கிறது இருக்கட்டும்... நீங்க செஞ்ச வேலையாலதான் எனக்கு இப்படியாயிடுச்சு... நீங்க செஞ்ச தப்புக்கு என்னை திட்டுறீங்களாக்கும்" என்று அவள் பதிலுக்குக் கேட்டாள்.
அவன் தரையில் அமர்ந்து அவள் காலில் இருந்த கண்ணாடித் துகளைத் துடைத்து தன் கைகுட்டையால் ரத்தம் வராமல் கட்டினான்.
அத்தனை நேரம் கோபத்தில் அவளைப் படாய்படுத்தியவனா இவன் என எண்ணும் அளவிற்காய் அவன் செயல் அவளைத் திகைப்புறச் செய்தது.
"வா... டாக்டர்கிட்ட போயிட்டு வரலாம்... ஸெப்டிக் ஆகிட போகுது" என்றவன் சொல்ல, அவள் கோபம் மீண்டும் தலைத் தூக்கியது.
"உங்க அக்கறையே வேண்டாம் சாமி... என்னை ஆளை விடுங்க... திடீர்னு எப்படி ஒரு சேஞ்ச் ஓவர்... நீங்க என்ன ஸ்ப்லிட் பர்ஸ்னாலிட்டியா... எப்ப அந்நியனா மாறீங்க எப்போ ரெமோவா மாறீங்கன்னு எனக்கு சத்தியமா தெரியல"
"என்னடி கிண்டலா?!" என்று கேட்டபடி எழுந்து நின்றவன் அவளைக் கோபமாய் முறைக்க,
"சீர்யஸா சொல்றேன்... அப்பப்போ நீங்க காட்டுற அக்கறையும் காதலும் எனக்கு புல்லரிக்குது... அதே நேரத்தில உங்க கோபம்... என்னைக் கொல்லுது" என்றவள் மெல்ல எழுந்து கொள்ள, பாதத்தை ஊன்ற முடியாமல் தடுமாறப் போனவளின் கரத்தை அவன் பிடிக்க வர அதனை விரும்பாதவளாய் அவனை விட்டு ஒதுங்கி நின்றுகொண்டாள்.
அவனோ அவளின் நிராகரிப்பை பார்த்து பதில் பேசாமல் அமைதியாய் அவளையே பார்த்திருக்க, "உங்களுக்கு என்ன? தர்மா கேஸ் விஷயத்தில நீங்க கேட்கிற கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்லணும்... அவ்வளவுதானே... நான் சொல்றேன்...
பட் இன்னைக்கு என்னால முடியாது... நாளைக்கு இந்த கேஸ் பத்தி டீடைலா எல்லாத்தையும் சொல்றேன்... நீங்க இப்போ இங்கிருந்து கிளம்பிடுங்க வீர்... நானும் டென்ஷனா இருக்கேன்... நீங்களும் என் மேல கோபமா இருக்கீங்க... தேவையில்லாம நமக்குள்ள பிரச்சனை வளர வேண்டாம்" என்று அவள் உரைக்க அவனின் கோபம் அதிகரித்தது.
இருந்தும் அவள் சொன்னது போல பிரச்சனையை வளர்க்க விரும்பாமல், "போறேன்டி... ஆனா நாளைக்கு நீ பதில் சொல்லல... இன்னும் மோசமான வீரை பார்க்க வேண்டியிருக்கும்... எனக்கு என் கடமைதான் முக்கியம்... அதுக்கிடையில யார் வந்தாலும் இந்த ரூம் மாதிரிதான் அவங்க நிலைமையும்" என்று அவளை எச்சரித்துவிட்டு வேகமாக வெளியேறினான்.
தமிழ் அவன் சொன்னதைக் கேட்டு கோபம் வந்தாலும் மறுபுறம் அவள் பாதத்தைப் பிடித்துக் கட்டுப் போட்டவனும் அவன்தானே என எண்ணமும் வர அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்போடு அமர்ந்திருந்தாள்.
வீரேந்திரன் கீழே போனதும் அவனை ரவியும் விஜயாவும் போகவிடாமல் வழிமறித்து நின்று கொண்டு அவனைச் சங்கடத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தனர்.
அவர்கள் சொல்லும் எதையும் காதில் வாங்காமல் அவன் தப்பிப் போக எண்ண, அவர்கள் விடாமல் சாப்பிட்டுப் போகச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தனர்.
தேவி அந்தச் சமயத்தில் தன் அக்காவைப் பார்க்க அவள் அறைக்குள் புகுந்தாள். அங்கே சென்று பார்த்தவளுக்குப் பேரதிர்ச்சி.
அவள் இரு கருவிழிகளும் அசைவின்றி நின்றுவிட்டது. அவள் பார்த்து பார்த்து வியந்த அறை அத்தனை அலங்கோலமாய் மாறியிருந்தது.
தேவி இதுப்பற்றி தன் அக்காவிடம் கூட கேட்காமல் நேராகச் சென்று வீரேந்திரனை வழிமறித்து, "ஏன் மாமா இப்படி செஞ்சீங்க?" என்று கேட்கும் போதே அவள் கண்கள் கலங்கியிருந்தன.
அதோடு நிறுத்தாமல் அவள் மேலும், "அக்கா அவ ரூமை எப்படி வைச்சிருப்பான்னு தெரியுமா? எப்படி உங்களால இப்படிச் செய்ய முடிஞ்சிது... யாரும் அவ ரூம்ல ஒரு பொருளைக் கூடத் தொடவிடமாட்டா" என்று கேட்க, வயதில் சிறியவள் எனினும் அவள் கேள்வி வீரேந்திரன் மனதைக் குத்தி துளையிட்டது.
ரவிக்கு ஓரளவுக்கு என்னவென்று புரிந்தது."தேவி கொஞ்சம் அமைதியா இரு” என்றவன் தங்கையை அமைதிப்படுத்த முயன்றான்.
அப்போது அறையை விட்டு வெளியே வந்த தமிழ் நடப்பதைப் பார்த்து, "தேவி... நிறுத்து... நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்ல... நான்தான் எல்லாத்தையும் கலைச்சுப் போட்டேன்... நீ முதல்ல வழிவிடு... அவருக்கு வேலை இருக்கு... புறப்படட்டும்" என்றாள்.
அந்தச் சமயத்தில் விஜயா குறுக்கிட்டு, "என்ன தமிழ்? நீயே இப்படி பேசிற... உங்களுக்குள்ள பிரச்சனையா இருந்தால் அதைப் பேசித் தீர்த்துக்கலாம்... இப்படி அவரை தனியா அனுப்புறது சரியில்லை... நாளைக்கு உங்க அப்பா வந்த பிறகு பார்த்துப் பேசிட்டு இரண்டு பேரும் ஒன்னா கிளம்புங்க...
ஏதோ எனக்குத் தோனுச்சு சொல்லிட்டேன்மா... நான் சொல்றதை நீ கேட்கணும்னு நினைச்சா கேளு" என்றார்.
அவளின் சித்தி இத்தனை நாள் அல்லாது இன்று அவளின் நலனுக்காகப் பேச, அவளால் மறுத்து பேச முடியாமல் வீரேந்திரனைத் தவிப்போடுப் பார்க்க, அவன் என்ன செய்யட்டும் என்பது போல் கேள்வியாய் அவளைப் பார்த்தான்.
அவள் தயக்கத்தோடு யோசித்தவள் பின் அவனிடம் போக வேண்டாம் என விழிகளாலேயே சமிஞ்சை செய்ய, அவள் மீது அத்தனை கோபம் இருந்தாலும் அவள் சொல்வதை நிராகரித்துச் செல்ல முடியாமல் ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது. அதன் பிறகு வேறு யோசனையின்றி அங்கேயே தங்க சம்மதித்தான்.
அவனைத் தடுத்தது வேறொன்றுமில்லை. காந்தமாய் இழுக்கும் அவளின் விழியின் மீதான ஈர்ப்புதான்.
அத்தனை நேரம் அவர்கள் தடுத்த போது பிடிக் கொடுக்காமல் பிடிவாதமாய் செல்ல பார்த்தவன் அவளின் ஒற்றை விழியசைவில் நின்றுவிட்டான் என்பதை கண்டு மூவருமே வியந்தனர்.
வீரேந்திரன் தமிழுக்கும் கூட அவர்கள் உறவு ஒரு ஆச்சர்யம்தான். எப்போது அவர்கள் எந்நிலையில் இருப்பார்கள் என்பதை அவர்களாலேயே தீர்மானிக்க முடியவில்லை.
29