மோனிஷா நாவல்கள்
Monisha's VET - 30
Quote from monisha on December 13, 2021, 9:14 PM30
வீட்டின் தோட்டத்திலிருந்த நீண்ட இருக்கையில் கால் மீது கால் போட்டு தலையைப் பின்புறம் சாய்த்தபடி அமர்ந்திருந்தான் வீர். அவன் பார்வை என்னவோ நட்சத்திரங்கள் மீதிருந்தாலும் மனம் முழுக்க தன்னவளின் நினைவில்தான் லயித்திருந்தது.
அந்த சமயம் பார்த்து தேவி அவன் அருகில் வந்து நின்று, "மாமா" என்றழைக்க, தலையை நிமிர்த்தியவன் அவளை பார்த்ததும் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு, "சொல்லு தேவி" என்றான்.
"அது... சித்தி சாப்பிட கூப்பிட்டாங்க... உங்களை" என்றவள் தயக்கத்துடன் சொல்ல,
"ம்ம்ம்... வர்றேன்" என்று அவன் தலையசைத்தான்.
ஆனால் அவளோ புறப்படாமல் ஏதோ சொல்ல தயங்கிக் கொண்டிருக்க, "என்ன தேவி? வேற ஏதாச்சும் சொல்லணுமா?" என்று அவனாகவே கேட்டான்.
"ம்ம்ம்" என்று தலையசைத்து கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தவளைப் அவன் புருவத்தை உயர்த்திப் பார்க்க, அவள் அமைதியாகவே நின்றிருந்தாள்.
"என்னாச்சு தேவி... சொல்லு?" என்று அவன் கேட்க,
"சாரி மாமா" என்றபடி அச்சத்தோடு அவனை நோக்கினாள்.
"எதுக்கு சாரி?"
"அது... நான்ன்ன்... உங்ககிட்ட அப்படி பேசினதுக்கு"
அவன் மிதமாகப் புன்னகைத்து அவள் தலையை அழுத்தியவன், "அதெல்லாம் நீ பேசினதில ஒரு தப்பும் இல்ல.... நானும் அதை தப்பா எடுத்துக்கல... இதுக்கெல்லாம் போய் சாரி கேட்பியா? ஏன்? உங்க அக்காகிட்ட நீ உரிமையா பேசமாட்டியா? இல்ல சண்டை போடமாட்டியா... அப்படிதான் நானும் உனக்கு... சரியா?!"என்றான். அவள் முகம் மலர்ந்தது.
"சரிங்க மாமா" என்று அவள் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, "தேவி... ஒரு நிமிஷம்" என்றழைத்தான்.
"என்ன மாமா? சொல்லுங்க"
வீரேந்திரன் யோசனையுடன், "அது.. ஒன்னுமில்லை... உங்க தாத்தா ஃபோட்டோல ஒரு சிங்க முகத்தில டாலர் போட்டிருக்காரே... அது உங்க ஃபேம்லி டாலரா தேவி?!" என்று கேட்டுவிட்டு அவள் முகத்தையே ஆராய்ந்து பார்க்க,
"ஆமாம் மாமா... ஆனா நாங்க யாரும் அந்த மாதிரி டாலர் போட்டிருக்கல... அக்கா மட்டும் போட்டிருந்தா" என்றாள்.
"அப்படியா?! ... ஆனா நான் உங்க அக்கா கழுத்தில அந்த மாதிரி ஒரு டாலரைப் பார்த்ததேயில்லையே"
"எப்பவும் போட்டிருப்பாங்களே..." என்று சொன்னவள் சட்டென்று நினைவு வந்தவளாய்,
"ஆ... கல்யாணத்துக்காக அக்கா அரண்மனைக்கு வந்த போதுதான் தொலைஞ்சு போச்சு... நானும் அக்காவும் எவ்வளவோ தேடிப் பார்த்தோம்... ஆனா கிடைக்கவே இல்லை" என்றாள்.
'எப்படி கிடைக்கும்... தொலைஞ்ச இடத்தை விட்டுட்டு வேற இடத்தில தேடினா' என்று தனக்குள்ளேயே சொல்லியவன் மீண்டும் தேவியை நோக்கி,
"கிடைக்கலயா... அப்படின்னா உங்க அக்கா வேறெங்கயோ விட்டிருப்பாளா இருக்கும்... அவ்வளவு பொறுப்பு மேடமுக்கு" என்றான்.
"இல்ல மாமா... அக்கா எப்பவுமே எந்தப் பொருளையும் அவ்வளவு சீக்கிரம் தொலைக்கமாட்டா... எப்படி மிஸ் பண்ணாங்கன்னே தெரியல.. "
"ம்ம்ம்... அது அவளோட பேட் டைம்" என்றான்.
அவன் சொன்னதின் அர்த்தத்தை அவள் உணர்ந்திருக்கவில்லை.
அவனே மேலும், "நான் சும்மாதான் கேட்டேன்... உங்க அக்காகிட்ட இதை பத்தி எல்லாம் சொல்லிட்டிருக்காதே... அப்புறம் திரும்பியும் டாலரை தொலைச்சதைப் பத்தி நினைச்சு வருத்தப்படப் போறா" என்று சாதுரியமாய் பேசி அவளை அனுப்பிவிட்டான்.
அதன் பின் நடந்தவற்றை மீண்டும் யோசித்து பார்த்தவன், 'கேடி... அப்போ கல்யாணத்துக்கு முன்னாடி காஞ்சிபுரத்தில தர்மா வீட்டிற்குப் போயிருக்கா... அதுக்கப்புறம்தான் அவங்க தாத்தா ரூம்ல அந்த சிலையோட ஓவியத்தைப் பார்க்கணும்னு தேடியிருக்கா' என்று எண்ணிக் கொண்டான். அதுமட்டுமல்லாது அன்று அலமாரி மீது தமிழின் ஃபோட்டோவை தேடும் போது எதச்சையாய் அந்த இறைவி சிலையின் ஓவியத்தைப் பார்த்த நினைவிருந்தது.
அதனால்தான் தர்மா வீட்டில் அந்தச் சிலையின் ஓவியம் அவனுக்குப் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது.
அதோடு நிற்காமல் அவன் மூளை தீவிரமாய் அந்த டைரியைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது.
'டைரி இங்கே இல்லன்னா வேற எங்க வைச்சிருப்பா... காஞ்சிபுரத்தில இருந்து நேரா அரண்மனைக்கு வந்தவ... அப்புறம் கல்யாணம் முடிஞ்சு நேரா எங்க வீட்டுக்குதானே போனோம்... அங்க வைச்சிருப்பாளா... ம்ஹும்... எனக்காக பயந்தாச்சும் அவ அங்க வைக்க மாட்டா... ஒய் நாட்... அவ ஆஃபிஸ்ல... எஸ்... அவ கேபின்ல...சேன்ஸ் இருக்கு... ஹ்ம்ம்ம்.. அதனாலதான் காலையில என்னை ஆஃபிஸ்ல பார்த்ததும் அவ்வளவு டென்ஷனானியாடி... என் தமிழச்சி' என்று யூகங்களை அடுக்கியபடியே வீட்டிற்குள் நுழைந்தான்.
எல்லாவற்றையும் நடந்த நிகழ்வுகளோடு நினைவுபடுத்தி ஒப்பிட்டு விடையை அறிய முற்பட்டுக்கொண்டிருந்தான். ஆனால் மேலோட்டமாக மட்டுமே அவனால் கண்டுபிடிக்க முடிந்தது.
ஆழ்ந்து எல்லாவற்றையும் தெளிவுபடுத்த வேண்டுமெனில் அது அவளால் மட்டுமே சாத்தியம். ஆனால் சொல்வாளா?
நிச்சயம் மாட்டாள்? என்றே அவனுக்கு தோன்றியது.
அவள் மீது ஒரு வித நம்பிக்கையற்ற நிலை அவனுக்குள் உருவாகியிருந்தது.
அடுக்கடுக்காய் இத்தனை பொய்கள் அவளிடமிருந்து... தன்னை முட்டாளாக்கிவிட்டாள் என்ற எண்ணமே அவனைப் பித்து பிடிக்கச் செய்திருந்தது. அவன் மனதை இறுகச் செய்திருந்தது. எவ்வளவு கோபமிருந்தாலும் அவள் மீதான காதலுமே அபரிமிதமாய் இருந்தது. அவன் வீட்டினுள் நுழைந்தான்.
விஜயா அவர்களுக்கு விருந்து உபசாரம் எல்லாம் தடபுடலாய் ஏற்பாடு செய்திருந்தார். வீரேந்திரன் உணவு உண்ண அமர, தேவி கிண்டலும் கேலியுமாய் அவனிடம் பேச ரவியும் கூட அவர்கள் உரையாடலில் ஆர்வமாய் கலந்து கொண்டான்.
விஜயாவும் அவற்றை எல்லாம் கண்டு மனமகிழ்ந்திருக்க, தமிழ் மட்டும் இறுக்கமாகவே அமர்ந்திருந்தாள். அவளுக்கு அந்த உணவு கொஞ்சமும் ருசிக்கவில்லை. மாறாய் நாளை அவனை எப்படிச் சமாளிப்பது என்ற யோசனை.
அவன் இங்கே இல்லாமல் இருந்தால் ஆதியிடம் நிலைமையை எடுத்துரைத்திருக்கலாம். அதற்கும் வழியில்லை. ரகுவிற்கு அழைப்புவிடுத்து சரமாரியாய் திட்டலாம் என்ற எண்ணமும் ஈடேறவில்லை.
அதற்குமே இடைஞ்சலாய் அவன் தன்னோடு இருக்கிறான்.
அதுவும் தன்னாலயே...
இப்படியாக அவள் மனதில் சிந்தனைகள் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்க, அவன் விழிகளோ அவ்வப்போது அவளை அளவெடுத்துக் கொண்டிருந்தன. அப்படி அவள் என்னதான் சிந்திக்கிறாள் என்ற யோசனை அவனுக்கு!
வீரேந்திரன் உணவெல்லாம் முடிந்து சிறிது நேர உரையாடலுக்குப் பின் அவளின் அறைக்குள் நுழைந்தவன் வியந்து நின்றுவிட்டான். அவள் அறையின் பொருட்கள் எல்லாம் பழைய நிலைக்கு மாறியிருந்தது. முடிந்தளவு எல்லாவற்றையும் சரி செய்திருந்தாள்.
இருப்பினும் அவன் ஏற்படுத்திய தாக்கம் அந்த அறையில் ஆங்காங்கே தென்பட அவற்றை எல்லாம் கவனித்திருந்தவனின் விழிகள் ஸ்டூல் மீது ஏறி புத்தக அலமாரியை மும்முரமாய் அடுக்கிக் கொண்டிருந்த மனைவியின் மீது விழுந்தது.
அதேநேரம் காயம்பட்டிருந்த அவள் பாதத்தைப் பார்த்தவன் அக்கறையுடன், "நான் எடுத்து வைக்கிறேன்... நீ இறங்கு... ஏற்கனவே காலில் அடிப்பட்டு இருக்கு" என்றான்.
"தேவையில்லை... எனக்கு என் புக்ஸை அடுக்கிக்க தெரியும்... நீங்க போய் உங்க வேலையை பாருங்க" என்று அவள் கோபமாய் பதிலுரைக்க,
"அப்புறம் உன் இஷ்டம்" என்று நகர்ந்து கொண்டவன் யோசனையோடு படுக்கையில் அமர, சட்டென்று அவளின் அலறல் சத்தம் கேட்டது.
ஸ்டூல் ஆட்டம் கண்டு லேசாய் சரிய அவள் அலமாரியினைப் பிடித்து விழாமல் காப்பாற்றிக் கொண்டவள் மெல்ல ஒருவாறு சமாளித்து நிலைப்படுத்திக் கொண்டதை வீரேந்திரனின் பார்வையும் கண்டது.
கொஞ்சம் குரூரமாய் விழுந்திருக்கலாமே என்று அவன் மனம் எண்ணிய அடுத்த நொடி 'ஸேடிஸ்ட்' என்று தன்னைத்தானே கடிந்தும் கொண்டான்.
அதே சமயத்தில் தானே சுதாரித்து கொண்டவளை மெச்சியபடி, "மேடம்... உயர உயரமான கோயில் மேல ஏறி ஆராய்ச்சி பண்ணுவங்களாச்சே... அதுவும் இல்லாம அலமாரி மேல எல்லாம் ஏறி பழக்கம் வேற... ப்ச்... அதான் கரெக்ட்டா பேலன்ஸ் பண்ணிட்டீங்க" என்று கேட்டு எள்ளலாய் சிரித்தான்.
"விழலன்னு ரொம்ப வருத்தமா இருக்கோ?!" என்று கேட்டு அவள் முறைப்பாய் பார்க்க, தன் மனதின் எண்ணத்தைத் தெளிவாய் படித்துவிட்டாளே எனத் திகைத்தான்.
அவள் மீண்டும் பழையபடி புத்தகங்களை அடுக்கத் தொடங்கினாள்.
"நீ பெரிய வீராங்கனைதான்டி... ஆனா சொல்றதைக் கேளு... இறங்கு... நான் அடுக்கி தரேன்" என்றான் மீண்டும் அக்கறையோடு.
அவள் அவனை பாராமலே, "வேண்டாம்... நானே அடுக்ககினாதான் கரெக்டா இருக்கும்" என்றாள்.
"சரி நான் ஸ்டூலை ஸ்டெடியா பிடிச்சிக்கிறேன்... நீ அடுக்கு" என்று பிடித்துக் கொண்டவனை கவனியாமல்,
"நீங்க ஒன்னும் பிடிச்சிக்க வேண்டாம்... எமெர்ஜென்சி கால் வந்ததும் யாருக்கு என்னன்னு விட்டுவிட்டு போயிடுவீங்க" என்று அவள் குத்தலாய் பேசுவதைக் கோபமாய் பார்த்தான்.
"என் மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்ல வர்றியா? !" என்று கேட்க,
"நம்ப விருப்பமில்லைன்னு சொல்ல வர்றேன்" அலட்சியமாகப் பதிலுரைத்தாள்.
"ஏன்.... நீ மட்டும்... என் நம்பிக்கையை உடைக்கலயா... அதுவும் என்கிட்ட நீ பேசினதெல்லாம் பொய்தானடி" என்று அவன் வார்த்தை கோபமாய் வந்து விழ,
"இதுக்கு மேல ஒரு வார்த்தைப் பேசாதீங்க" என்றவள் சீற்றமானாள்.
"என்னடி? உண்மையைச் சொன்னா கசக்குதா?"
"வீர்ர்ர்ர்... போதும்... நான் ஒன்னும் பொய் எல்லாம் சொல்லல... நான் ஜர்னலிஸ்ட்... நீங்க போலீஸ்... ஸோ எனக்கு ஜாப் சம்பந்தபட்டு நிறைய பெர்ஸ்னல் இருக்கும்... எல்லாத்தையும் நான் உங்ககிட்ட சொல்ல முடியுமா... அதை நீங்க உடனே பொய்... ஏமாத்துறதுன்னு எடுத்துக்கிட்டா எப்படி...?!" என்று கேட்டாள்.
ஏளனமாய் புன்னகைத்தவன், "இது நல்ல சமாளிப்பு" என்றான்.
"நீங்க எப்படி எடுத்துக்கிட்டாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை" என்று சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
ஏற்கனவே திமிரின் உச்சாணிக் கொம்பில் நின்றிருப்பவள், இன்று உச்சமாய் வேறு மேல் நின்றபடி பேசிக் கொண்டிருக்க, தான் அவளை நிமிர்ந்து பார்ப்பதா என அவனின் ஆண்மையும் ஈகோவும் தூண்டப்பட்டது.
அப்பொழுதுதான் அவள் மீதான பார்வைக் கொஞ்சம் மாறியது.
அவள் நின்ற மார்க்கத்தில்... எட்டி எட்டி புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருக்க அவளின் சிவப்பு நிற நைட் டிரஸ்ஸில் அவளின் தங்க நிற இடை எட்டி எட்டிப் பார்த்து அவனிடம் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது.
வேண்டாம் வேண்டாம் என்று அவன் மூளை கட்டுப்பாடு விதிக்க அவனின் விழிகள் கேட்கமாட்டேன் என அவளை அங்கம் அங்கமாய் ரசித்துக் கொண்டிருந்தது.
காதல் எனும் எல்லைக்குள் இருக்கும் வரைதான் கண்ணியம்.
இப்போது அத்தகைய எல்லையை அவன் உள்ளம் உடைத்தெறியச் சொல்ல, அந்த எல்லையை மீறி அவனின் காதல் மோகமாய் மாறி மெல்ல மெல்ல அவனைத் தன்னிலை மறக்கச் செய்திருந்தது.
உள்ளுக்குள் அவளின் மீது எரிந்து கொண்டிருந்த கோபத்தீயெல்லாம் மோகத்தீயால் சூழ்ந்து கொண்டது.
இறுதியாய் அவள் அடுக்கி முடித்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்து நின்றவளைக் கொஞ்சம் குரூரமாய் பார்த்தவன் தன் காலால் ஸ்டூலை அசைத்துவிட்டான்.
“ஆ… வீர்” என்றபடி தடுமாறி விழப் போனவளை தன் இருகாரங்களால் அவனே முன்புறம் அணைத்தபடித் தாங்கிக் கொண்டான்.
அவன் பிடிக்குள் இருந்தவளிடம் புன்னகையோடு, "பார்த்தியா... நான் இல்லன்னா நீ கீழே விழுந்திருப்ப" என்று நல்லவன் வேஷம் போட அவள் அவனை சந்தேகமாகப் பார்த்தாள்.
அவன் இதுதான் சந்தர்ப்பம் என்று அவள் இதழிடம் நெருங்கி செல்ல, அவள் அவன் அணைப்பைத் தள்ளிவிட்டு விலகி வந்து, "என்னை ஏமாத்த பார்க்காதீங்க... நீங்கதானே ஸ்டூலை அசைச்சு விட்டீங்க" என்று கேட்டாள்.
அவன் உதடில் தவழ்ந்த அந்தப் புன்னகையில் வஞ்சம் இழையோட, சீற்றமடைந்தவள் எல்லா கோபத்தையும் மொத்தமாய் மனதில் ஏற்றிக் கொண்டு தன் மொத்த பலத்தோடு,
"இடியட்... ராஸ்கல்.. பொறுக்கி" என்று திட்டியபடி அவனை அடித்துக் கொண்டிருந்தாள்.
அவனோ அசையாமல் அவளையே பார்த்திருக்க அவள் நிறுத்தாமல், "எனக்கு தெரியும்டா... உன் லவ்வும் தெரியும்... உன் வெஞ்சன்ஸும் தெரியும்" என்றாள். உடனடியாக அவளை தன் கரத்தில் இழுத்து அணைத்தவனை முட்டி மோதிக் கொண்டு, "விடுடா" என்று வெளியே வரத் தவித்தவளைப் பார்த்து,
"அதென்னடி திடீர் திடீர்னு மரியாதை தேயுது... டா...ங்கிற..." என்று கேட்டான்.
"ஆமான்டா... அப்படிதான்டா கூப்பிடுவேன்... விடுடா" என்று தன்னவனின் கரத்தின் சிறையிலிருந்து மீள முடியாமல் அவள் தவிக்க அவன் புன்னகை ததும்ப,
"நீ இப்படி கூப்பிடும் போதுதான்டி... ரொமான்டிக்கா இருக்கு... கூப்பிடு" என்றவனை எரிச்சலாய் பார்த்தாள்.
அவனைத் தள்ளிவிட பார்த்த அவள் முயற்சி ஒன்றும் பலனளிக்கவில்லை. அவன் கரத்திலிருந்து மீள முடியாது என்பதை உணர்ந்தவள் தன் முயற்சியைக் கைவிட்டு,
"மேல் சவனிஸ்ட்... உங்க விருப்பப்படி எல்லாம் நான் நடந்துக்கணும்... அதெப்படி வீர்... எதுவுமே நடக்காத மாதிரி பேசுறீங்க" என்றாள்.
"நடந்ததெல்லாம் சரி... ஆனா காலையில் இருந்து நீயும் நானும் எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்... அதெல்லாம் மறந்து போச்சா உனக்கு" என்று உணர்ச்சிப் பொங்கக் கேட்டான்.
“ஆமாம்... மறந்து போச்சு... கொஞ்சங் கூட யோசிக்காம என் ரூமை நாஸ்தி பண்ணீங்களே... அப்பவே மறந்து போச்சு" என்றாள்.
"உங்க தாத்தா கழுத்தில இருந்த அந்த டாலர்... அப்புறம் அந்த ரகு பேசினது... எல்லாத்தையும் கேட்டு ரொம்ப அப்சட்டாயிட்டேன் தமிழ்... யோசிச்சு பாருடி... உனக்கு என் கோபத்தில இருக்கிற நியாயம் புரியலயா?!"
"ஹ்ம்ம்ம்... உங்க கோபம் நியாயம்தான்... நான் அதை தப்பு சொல்லல... அதை நீங்க காட்டின விதம்தான் ரொம்ப தப்பு"
"சரி... தப்பு... நீதான் எவ்வளவு பெரிய தப்பையும் அஸால்ட்டா மன்னிச்சிடுவியே... என்னையும் அப்படி மன்னிச்சுரலாமே"
"மன்னிப்பு... அதுவும் உங்களுக்கா? நோ சேன்ஸ்... அன்னைக்கு பீச்ல மன்னிப்பு கேட்க வந்த போது என்ன எப்படி எல்லாம் இன்ஸல்ட் பண்ணிங்க... உங்க பின்னாடியே அலைய வைச்சீங்களே... மறந்து போச்சா" என்றவள் சொல்லவும் அவன் முகம் இறுகியது.
"அதெல்லாம் இப்பதான் சொல்லி குத்தி காட்டணுமா?" என்ற போது அவன் பிடியின் இறுக்கம் தளர்ந்திருப்பதை உணர்ந்தவள் அவனை விலக்கிவிட்டு நகர்ந்தாள்.
"வெஞ்சன்ஸ் உங்களுக்கு மட்டும்தானா... ஏன் எனக்கில்லையா?" என்று கேட்டவள் தரையில் மெத்தையை விரிக்க அவன் அதிர்ந்து,
"ஏய்... கீழே படுக்கிறதெல்லாம் டூ மச்... என்ன புதுசா... ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு கூட சண்டைப் போட்டுகிட்டோம்... அப்போ கூட நீ கீழே படுக்கலயே" என்றான்.
"நான் கீழே படுத்துக்க போறேன்னு உங்ககிட்ட சொன்னேன்?.... உங்க வேலைய பாருங்க" என்றவள் தலையணை ஒன்றை நடுவில் வைத்துவிட்டு கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
"ஏய் நீ லூசாடி... கீழே அப்புறம் எதுக்கு பெட்டை போட்ட?" என்று கேட்டபடி அவனும் படுக்கையில் படுத்தான்.
அவள் அவனை பாராமலே, "நான் உருண்டு கீழே விழுந்தா அடிபடாம இருக்க" என்றாள்.
அவன் சிரித்தபடி நடுவில் இருந்த தலையணையைத் தூக்கிப் போட்டுவிட்டு அவளை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டான்.
"அய்யோ வீர்" என்று அதிர்ந்தவளை தன் புறம் திருப்பியவன்,
"சண்டை போலீஸுக்கும் ஜர்னலிஸ்ட்டுக்கும்தானே... வீருக்கும் தமிழுக்கும் இல்லயே" என்று தன் செயலுக்கு நியாயம் கற்பித்தான்.
"விடுங்க வீர்" என்று ஒதுங்கிச் செல்ல பார்த்தவளை இன்னும் இறுக்கமாய் தன் கரத்தில் பிணைத்துக் கொண்டான். அவளை மொத்தமாய் முத்தத்தில் மூழ்கடித்தவன் அவளின் உணர்வுகளுக்குள் உள்ளார்ந்து சென்றான்...
அவனின் முரட்டுத்தனத்திற்கும் காதலிற்கும் இடையில் வெகு நேரம் போராடியவளின் உணர்ச்சிகள் மெல்ல மெல்ல அவனிடம் வசப்படவே நேர்ந்தது.
வறண்டப் பூமியைத் தீண்டிய மழைத்துளிகளால் எழும் மண்வாசத்தை நுகர்ந்த உணர்வு... அந்த ஊடல் தீர்ந்து காதலாய் கூடும் போது...
அவர்களின் கோபத்தின் தொடக்கவுரைக்கு மோகம் முடிவுரை எழுதிவிட்டது. அவனோடு தன்னிலை மறந்தவள் உறக்கத்தில் ஆழ்ந்து கனவுக்குள்ளும் மூழ்கினாள். தன்னை மறந்து அவள், "ஆ" என்று அலற அதிர்ந்து எழுந்தவன் அவள் உறங்குவதைப் பார்த்து சற்றுக் குழம்பினான்.
'இப்படி தூக்கத்தில் கத்தி கத்தி என்னை தினைக்கும் தூங்கவிடமாட்டா போல... என்ன பழக்கமோ?!' என்று எண்ணி மீண்டும் படுத்துக் கொண்டவன் அவள் முனங்குவதைக் கேட்டு எரிச்சலடைந்தான்.
"ஏ தமிழச்சி" என்று எழுப்ப முற்பட்ட போது இது அவளின் இயல்பு என்று மீண்டும் அவளை அணைத்தபடி உறங்க எண்ணிய போது அவள் உதிர்த்த வார்த்தைகள் செவியைத் துளைத்து அவன் மூளையை விழப்படையச் செய்தது.
அன்று அலமாரியில் ஏறி நின்று அவனிடம் செய்த வாக்குவாதங்கள்தான் அவளின் உளறல்கள் என்பதை நினைவுபடுத்தியவன் மறுகணமே நேற்று அவள் உளறிய வார்த்தைகளை நினைவுபடுத்தினான்.
'என்னை விடு... நான் அவனை கொல்லணும்'
இப்படி அவள் ஆவேசமாய் சொன்னது வெறும் கனவில் வந்த கற்பனையா? இல்லை நிஜத்தில் நடந்த நிகழ்வா?
சட்டென்று எழுந்தமர்ந்தவன் மொத்தமாய் தன் உறக்கத்தைத் தொலைத்திருந்தான். தர்மாவின் கொலைக்கும் அவளுக்குமே சம்பந்தம் இருக்குமென அவன் இதுவரையில் எண்ணிக்கொள்ளவில்லை.
மாறாய் தன் பத்திரிக்கைக்காக அவள் அவனைக் குறித்து செய்தி சேகரிக்க சில துடுக்குத்தனமான செயல்களில் ஈடுபட்டிருப்பாள் என்ற வரையறைக்குள்தான் அவன் சிந்தனை நின்றிருந்தது. ஆனால் இப்போது ஏனோ அவள் கொலை செய்திருப்பாளா? இந்தக் கேள்வி அவனை விதிர்த்துப் போகச் செய்தது.
முதல் முறையாய் அவள் மீதான காதலால் தன் கடமையில் தவறிவிட்டோமோ என்ற குற்றவுணர்வு அவன் தொண்டையை அடைத்தது.
இல்லை... இவை எல்லாம் தன் யுகம்தான் என எண்ணியவன் அவளையே விழிக்கச் செய்து தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாமா என்று யோசித்து பின் அது முட்டாள்தனம் என அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.
யதார்த்தபடி ஒற்றைப் பெண்ணாக தர்மாவை அவள் கொல்வது சுலபமல்ல. அதே நேரம் ரகுவின் துணையோடு செய்திருப்பாளோ என்ற எண்ணமும் தோன்றியது.
அவள் முகத்தைப் பார்த்தவன் அப்படி அவள் செய்யக்கூடியவள் அல்ல என்று தெளிந்தான். அப்போது அவன் உடலெல்லாம் வியர்த்துப் போயிருந்ததை உணர்ந்து எழுந்து சென்று முகத்தை அலம்பிக் கொண்டு வந்தான்.
அவனால் உறங்க முடியவில்லை. அவன் அந்த அறைக்குள்ளேயே யோசனையோடு நடந்திருக்க அந்த அறையின் பொருட்கள் அவன் கவனத்தை ஈர்த்தது.
முன்னே கோபமாய் பார்க்கும் போது கவனிக்காமல் விட்டதை எல்லாம் இப்போது நிதானமாய் பார்வையிட்டான்.
அது ஒரு சிறு அருங்காட்சியகம்தான்.
பாரம்பரியத்தின் மீதான...பழமையின் மீதான... இலக்கியங்கள் மீதான... அவளின் தீராத காதலை அந்த அறை அழுத்தமாய் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
அவன் சாதாரணமாய் தூக்கிப் போட்டு உடைத்த புகைப்படங்கள் போலப் பல படங்கள் சுவரில் மாட்டியிருக்க ஒவ்வொன்றிலும் கல்வெட்டுகளும் பாரம்பரிய பொருட்களும் பழமையான கோயில்களும் அதன் அரிய சிலைகளும் ஒரு ஆழமான கதைகளை எடுத்துரைத்துக் கொண்டிருந்தது.
அவள் பத்திரிகைக்காரி என்பதைத் தாண்டி, பாரம்பரியத்தை நேசிப்பது அவன் அறியாத அவளுடைய இன்னொரு முகம் என்று எண்ணியவனுக்குத் தர்மாவின் இன்னொரு முகமும் நினைவுக்கு வந்தது.
தர்மா பல வரலாற்றுப் பொக்கிஷங்களை விலைப்பேசி விற்பவன் எனத் தமிழுக்கு தெரிந்திருந்தால்... அது கொலையில் சென்று முடியுமா???
இல்லை... இருக்காது... ஆனால் அவள் உணர்ச்சிவசப்பட்டால் கொலையும் செய்யக் கூடியவள்தான் என்று அவன் போலீஸ் மூளை அறிவுறுத்தியது.
அதற்குச் சாட்சியாய் கோபத்தில் ஒருமுறை தன்னையே அவள் யோசிக்காமல் அறைந்தவள்தானே? என்ற எண்ணமும் சேர்ந்து கொண்டது.
அவனின் சிந்தனை ஓட்டம் இப்படி அதிவேகமாய் ஓடிக் கொண்டிருக்க, அவன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வழி என்னவென்று நடந்தபடியே சிந்தித்தான்.
தர்மாவைக் கொன்ற கத்தியிலிருந்த கைரேகையைப் பற்றிய நினைவு வர, அவளின் கைரேகையும் ரகுவின் கைரேகையும் அதனோடு ஒத்துப் பார்த்தால் என்ன? என்று எண்ணிய மறுகணம் அவளின் கைரேகை பதிந்த பொருட்கள் ஏதாவது ஒன்றை எடுக்க எத்தனித்தான். அவளுக்கே தெரியாமல்....
அந்த நேரத்தில் ஒலித்த அவனின் கைப்பேசி, அந்த அறையின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்க, அவள் விழித்துவிடுவாளோ என்ற அச்சத்தில் அவசரமாய் அந்த அழைப்பை ஏற்றான்.
அதில் வந்த தகவல் வீரேந்திரனைப் பதறச் செய்தது.
*
இரவு நடுநிசி நேரம்... அந்தப் பெரிய மருத்துவமனையோ ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட ஒன்றிரண்டு செவிலியர்கள் மட்டுமே ஆங்காங்கே தென்பட்டனர்.
அந்த மருத்துவமனையின் ஒரு அறையில் ஆதி நெற்றியில் கட்டுமாய், வலது புற கரத்தில் ஏற்பட்ட சிராய்ப்பால் மருந்து தடவப்பட்டுக் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
அவள் காயப்பட்டதை எண்ணிக் கூட சிறிதளவும் வருந்தப்படவில்லை. ஆனால் அவள் முகத்தில் பரவியிருந்த திகில் முழுக்க, பக்கத்து இருக்கையில் அமைதியே உருவமாய் அமர்ந்திருந்தவனின் முகத்தைப் பார்த்துத்தான்.
அசாத்திய தைரியம் கொண்ட அவளின் தைரியத்தை அசைத்துப் பார்க்க கூடிய வல்லமை அவனுக்கு மட்டுமே உண்டு. எப்போது வேண்டுமானாலும் அந்த எரிமலை வெடிக்கக் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு…
"வி..ஷ்..வா" என்று ரொம்பவும் நிதானமாக அவள் கணவனின் பெயரை அழைத்தாள்.
30