மோனிஷா நாவல்கள்
Monisha's VET - 33
Quote from monisha on December 19, 2021, 11:43 AM33
ரகுவிற்கு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்க, வீரேந்திரன் அங்கும் இங்குமாக பதட்டத்துடன் நடைபயின்று கொண்டிருந்தான்.
அந்தச் சமயத்தில் ரகுவின் அம்மா ஒரு நர்ஸின் வழிகாட்டுதலோடு அங்கே வந்திருந்தார். அவர் முகமெல்லாம் இருளடர்ந்திருக்க, கன்னங்களெல்லாம் கண்ணீரின் தடங்கள்.
சில வருடங்களுக்கு முன்புதான் அவர் தன் கணவனை இழந்தார். அப்படி இருக்க மகனுக்கும் விபத்து என்று கேள்விப்பட்ட நொடி அவருக்கு உயிரே போய்விட்டது. தனக்கான ஒரே துணையை இழந்து விடுவோமோ என்ற துயரத்துடனும் பதட்டத்துடனும் அவர் வீரேந்திரன் அருகில் வந்து நின்றார்.
அவன் போலீஸ் என்பதை அறிமுகமின்றி அறிந்து கொண்டவருக்கு அவனிடம் என்ன கேட்பதென்று தெரியவில்லை. மகனுக்கு என்னவானதோ என்ற கேட்க கூட அவர் மனதிற்குத் தெம்பில்லை.
அனால் வீரேந்திரன் அவரை பார்த்துமே,"நீங்கதான் ரகுவோட அம்மாவா?" என்று கேட்டான். அந்த கணமே அவர்கள் விழிகளில் கண்ணீர் நீரூற்றென பெருகி ஓடியது.
"நீங்க ஒன்னும் பயப்படாதீங்கம்மா... டாக்டர்ஸ் ட்ரீட்மென்ட் பண்ணிட்டு இருக்காங்க… ரகு நல்லாயிடுவான்" என்றவன் அவருக்கு தைரியம் கூற,
அவர் சற்று நிம்மதியடைந்து, "எங்க இருக்கான்? நான் அவனைப் பார்க்கணும்" என்றார்.
அவன் உள்ளம் நடுங்கினாலும் முகத்தில் அதனைக் காட்டிக் கொள்ளாமல், "கண்டிப்பா பார்க்கலாம்... நீங்க முதல்ல இப்படி உட்காருங்க" என்று சொல்லி அவரை இருக்கையில் அமர வைத்தவன்,
தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து, "நீங்க ரொம்ப டென்ஷனா இருக்கீங்க... தண்ணீர் குடிங்க" என்றான்.
ஒரே மகனை இழந்துவிடப் போகிறோமோ என்ற அவரின் அவஸ்தை கண்களில் அப்பட்டமாய் தெரிந்தது. அவர் தண்ணீரைப் பருகாமல், "இல்ல தம்பி... எனக்கு இப்போ ரகுவைப் பார்த்ததான் நிம்மதி... அவன் எங்க இருக்கான்?" என்று விழி நீரைத் துடைத்தபடிக் கேட்டார்.
"அவனுக்கு ஒன்னும் இல்லம்மா... நீங்க முதல்ல தண்ணி குடிங்க.. ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் உள்ளே போய் பார்க்கலாம்" என்று நிதானமாய் சொல்ல, அவன் சொன்ன விதத்தில் அவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. தண்ணீரை வாங்கிப் பருகிவிட்டு அமைதியாக மூச்சு இழுத்துவிட்டு கொண்டு காத்து கிடந்தார்.
தான் சொன்னது பொய்யாக இருப்பினும் அது ரகுவின் அம்மாவிற்கு தைரியத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்து அப்போதைக்கு நிம்மதிப்பெற்றான். நேரம் கடந்து கொண்டே போக ஆப்ரேஷன் நல்லபடியாய் நடந்து முடிய வேண்டுமே என அவன் தவிப்புற்றிருந்தான்.
அப்போது ஒரு நர்ஸ் அவனருகில் வந்து நின்று, "நீங்கதானே ஏசிபி வீரேந்திரபூபதி" என்று கேட்டாள்.
"எஸ்"
"உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு... ரிசப்ஷ்னல"
குழப்பமாய் பார்த்தவன் பின் வேகமாய் ரிசப்ஷனிற்கு சென்று அங்கே இருந்து தொலைப்பேசி ரிசீவரை எடுத்து காதில் வைத்து,
"ஹெலோ" என்றான்.
"நான் எத்தனை தடவைதான் கால் பண்றது... ஏன் என்னை இப்படி டென்ஷன் படுத்துறீங்க?" என்று தமிழ் கேட்கவும், அவளுக்கு எப்படி தெரிந்திருக்கும் என யோசனையில் நின்றவனை அவள் குரல் மீண்டும் மீட்டெடுத்தது.
"ப்ளீஸ் சொல்லுங்க வீர்.... ரகு எப்படி இருக்கான்?" என்று படபடப்புடன் கேட்டாள். அழுகையில் ஒலித்த அவள் குரல் அவன் மனதை என்னவோ செய்தது.
"தமிழ் அழாதே... நீ டென்ஷன் ஆகற அளவுக்கு ஒன்னுமில்லை..."
அவள் விசும்பலோடு, "பொய் சொல்லாதீங்க வீர்... எனக்கு தெரியும்... ரகுவிற்கு ரொம்ப சீரியஸா இருக்கு... அது என்கிட்ட சொல்ல முடியாமதான் என் ஃபோனை அட்டென்ட் பண்ண மாட்றீங்க" என்றாள்.
"சரி... நானே உன் லைனுக்கு வர்றேன்... நீ கட் பண்ணு" என்று சொல்லியவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு தனியே வந்து தன் கைப்பேசி எடுத்து அழைத்தான்.
அவள் ஏற்றதும் அவன் நிதானமாக நிலைமையை எடுத்துரைத்தான்.
"ரகுவுக்கு இப்போ கொஞ்சம் சீரியஸ் கன்டிஷன்தான்... ஹெட் இஞ்சுரி... ஆப்ரேஷன் நடந்திட்டிருக்கு... ரகுவோட அம்மா வேற ரொம்ப உடைஞ்சு போயிருக்காங்க... எனக்கே என்ன செய்றதுன்னு புரியல"
அவன் குரலில் இருந்த தைரியமற்ற நிலையை உணர்ந்தவள் உள்ளுர மொத்தமாய் உடைந்து போனாள். அவள் விசும்பல் சத்தம் கேட்டுக் கொண்டிருக்க, "அழாதே தமிழ்... ப்ளீஸ்... என்னால தாங்க முடியாது... நீ இப்படி உடைஞ்சு போயிடுவன்னுதான் நான் உன்கிட்ட சொல்லாமகூட புறப்பட்டு வந்துட்டேன்?!" என்று அவன் தைரியம் உரைக்க அவள் ஒருவாறு சமாதானமானாள். இருப்பினும் அவள் மனதில் ஓர் ஓரமாய் பயமும் ஒட்டிக் கொண்டிருக்க,
"ரகுவிற்கு எதுவும் ஆகாதில்ல வீர்" என்று தவிப்புடன் கேட்டாள்.
"கண்டிப்பா ரகுவிற்கு ஒன்னும் ஆகாது... நீ தைரியமா இரு" என்றான்.
மெல்லத் தன்னைத் தேற்றிக் கொண்டவள், "வீர்..." என்று அழைத்தாள்.
"சொல்லு தமிழ்"
"ரகுவோட அம்மா ரொம்ப பாவம் வீர்... அவனைத் தவிர வேற யாரும் அவங்களுக்கு இப்போ ஸப்போர்ட் கிடையாது... நீங்க கொஞ்சம் பக்கத்திலிருந்து" என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னரே,
"புரியுது தமிழ்... நான் அவங்க கூட இருந்து பார்த்துக்கிறேன்" என்றான்.
"சரி... நான் முடிஞ்சளவுக்கு சீக்கிரம் வந்திடுறேன்" என்றாள்.
"அது சரி... உனக்கெப்படி ரகுவிற்கு ஆக்ஸிடென்ட்னு தெரியும்" என்றவன் யோசனையுடன் கேட்க, "தெரியும் வீர்" என்றாள்.
"அதான் எப்படி? அதுவும் இந்த ஹாஸ்பெட்டில்னு எப்படி தெரியும் உனக்கு"
"ரகுவுக்கு கால் பண்ண போது... லைன் போகல... அதான் நான் ஸ்டேஷனுக்கு கால் பண்ணேன்... அங்கே விசாரிச்சி போதுதான்... இப்படின்னு தெரிஞ்சிக்கிட்டேன்" என்றாள். ஆனால் அந்த மிரட்டல் கடிதத்தைப் பற்றி அவள் எதுவும் உரைக்கவில்லை.
அவள் சொல்வதில் முழு உண்மை இல்லையோ என்று சந்தேகித்தவன், "நீ என்னை காதலிக்கிற... பட் என்னை நம்பவே மாட்ட இல்ல" என்று மனதில் உதித்த எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்லிவிட்டான்.
அவன் சொன்னதைக் கேட்டு அவள் அமைதியாய் இருக்க அவனே மேலும், "என்னை ஏசிபியா பார்க்காதே தமிழ்... உன் ஹஸ்பெண்ட்டா பாரு... அட்லீஸ்ட் ஒரு வெல் விஷ்ஷரா பாரு... எந்த விஷயமா இருந்தாலும் என்கிட்ட வெளிப்படையா சொல்லிடு" என்றான்.
அவன் பேசிய விதத்திலேயே அவனுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்தவள் நிதானித்து, "சொல்றேன் வீர்... ஆனா ஃபோன்ல வேண்டாம்... நான் எல்லாத்தையும் நேர்ல வந்து சொல்றேன்... நீங்க ஆப்ரேஷன் முடிஞ்சதும் எனக்கு மறக்காம கால் பண்ணுங்க" என்றாள்.
அவனும் ஆமோதித்து அழைப்பைத் துண்டித்தான்.
மனமெல்லாம் அவள் என்ன சொல்வாளோ எனக் கவலையில் ஆழ்ந்துவிட, அந்த சமயத்தில் ஆப்ரேஷன் முடிவுற்று டாக்டர் அவனை அழைத்திருந்தார்.
அவர் வீரேந்திரனிடம், "நத்திங் டு வொர்ரி... ஹீ இஸ் ஆல்ரைட் நவ்... இப்போதைக்கு ஐசியூல வைச்சிருக்கோம்... நாளைக்கு இல்ல ஈவனிங் கூட நார்மல் வார்டுக்கு மாத்திரலாம்" என்றார்.
அவனின் மனதின் பாரம் இறங்கியதாகப் பெருமூச்சுவிட்டவன் உடனே தமிழுக்கும் அழைத்து இந்த செய்தியைச் சொல்லியிருந்தான்.
ரகு தீவிர சிகிச்சை பிரிவில் மயக்க நிலையில் இருக்க, தலையிலும் மற்றும் உடம்பிலும் ஆங்காங்கே கட்டுக்கள் போடப்பட்டிருந்தது. சுவாசக் குழாய் பொருத்தப்பட்டிருந்த நிலையில் மகனைப் பார்த்த ரகுவின் தாய் அழுது அரற்ற ஆரம்பித்தார். அத்தனை நேரம் இருந்த தைரியமெல்லாம் நொறுங்கிப் போயிருந்தது அவருக்கு
வீரேந்திரன் அவரைத் தேற்றி நிலைமையை விளக்கிப் புரிய வைத்தான். மெல்ல மெல்ல அவரும் அவனின் நம்பிக்கையான வார்த்தைகளால் தன் துக்கத்திலிருந்து மீண்டு வந்தார்.
வீரேந்திரனுக்கு மாறி மாறி அழைப்புகள் வந்து வேலைகள் குவிய, ஸ்டேஷனிலிருந்து ஒரு பெண் கான்ஸ்ட்டெபிளை வரவழைத்து ரகுவின் அம்மாவிற்குத் துணையாக விட்டுச் சென்றான்.
அவன் ஸ்டேஷனுக்கு சென்று குளித்து முடித்து வேலையில் ஈட்டுப்பட்டாலும் மனம் ஒரு பக்கம் பாஃரன்ஸிக்(forensic) ரிப்போர்ட் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.
அவனால் முழுமையாய் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
அவள் மருத்துவமனைக்கு வந்திருப்பாளா என்ற எதிர்பார்ப்பும் காத்திருப்பும் உள்ளுக்குள் இருந்தது. மாலை நேரம் எட்டியிருந்த நிலையில் மருத்துவமனையில் ரகுவை நார்மல் வார்டுக்கு மாற்றியிருந்தனர்.
அவன் கண் விழித்தாலும் சுயநினைவு பெறமுடியாமல் ஒருவித மௌன நிலையிலேயே இருந்தான். அவன் உடல் எந்தவித செயலையும் செய்ய முடியாதபடி கட்டுண்டு கிடந்தது. அவன் அம்மாவின் குரலையும் கண்ணீரையும் அவனால் உணர முடிந்ததே ஒழிய ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் தவிப்புற்றவன் தன்னிலை மறந்து மீண்டும் மயக்க நிலைக்குச் சென்றிருந்தான்.
மருத்துவமனையிலிருந்த கான்ஸ்டபிள் வீரேந்திரனிடம் ரகு வார்டுக்கு மாற்றப்பட்ட தகவலை தெரிவிக்க, அவன் அங்கே புறப்பட்டுச் செல்லவிருந்த சமயத்தில் எஸ். ஐ சண்முகம் அந்த பாஃரன்ஸிக்(forensic) ரிப்போர்ட்டை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார்.
அதனைக் கையில் பெற்றுக் கொண்ட மாத்திரத்தில் அவனுக்குள் ஒருவித படபடப்பும் நடுக்கமும் தொற்றிக் கொண்டது.
முதல் முறையாய் தன் யூகம் பொய்யாகிவிட வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டே அந்த ரிப்போர்ட்ஸைப் பிரித்து பார்க்கலானான்.
*
ரகுவின் மூளை தன்னை மீட்டுக் கொள்ள போராட அப்போது அரை மயக்க நிலையிலேயே நிகழ்ந்த அந்தக் கோரமான விபத்து அவன் நினைவுக்கு வந்தது.
ஒரு பெரிய வண்டி கட்டுப்பாடில்லாத வேகத்தோடு வந்து அவன் வாகனத்தில் மோதிய மாத்திரத்தில் தான் தூக்கியறியப்பட்டது நினைவுக்கு வர, மரணத்தைத் தொட்ட உணர்வு அவனுக்கு.
அது நிச்சயம் எதிர்பாராத விபத்தல்ல என்று யோசித்திருந்தவனுக்கு அவன் கரத்தில் ஒருவித சில்லிட்ட உணர்வு. அந்த நிலையிலும் அவன் செவிகள் நன்றாகவே வேலை செய்தன.
"ஐ லவ் யூ ரகு" என்ற வார்த்தை ஒலிக்க, இப்படி யார் தன்னிடம் சொல்ல முடியும். கனவாக இருக்கக் கூடுமோ என்று எண்ணி அவன் சிரமப்பட்டு விழித்துக் கொள்ள முயற்சி செய்தான்.
அவன் விழிகள் விரிந்தாலும் காட்சிகள் மங்கியிருந்தன. ரொம்பவும் அக்கறையாக ஒரு குரல், "உங்களுக்கு ஒன்னும் இல்ல ரகு... நல்லாயிடும்" என்று அவனுக்கு நம்பிக்கையூட்டியது.
ஆழமாக யோசித்தால் பரிட்சையமான குரல் போலவும் இருந்தது. பரிட்சையமாகாத குரல் போலவும் இருக்கிறதே என்று எண்ணியவனின் விழிகள் இப்போது தெளிவாய் பார்க்க முடிந்திருந்தது.
33