மோனிஷா நாவல்கள்
Muran kavithaigal - 4
Quote from monisha on September 4, 2022, 7:00 PM4
நிரு என்கிற நிரஞ்சன்.
மாதவன் ரேணு தம்பதியின் இரண்டாவது மகன்.
ஐஐடியில் ஆர்கிடெக்ட் முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்தான். அவன் திறமையை அங்கீகரித்து ஆறு மாத காலத்திற்கு சிங்கப்பூருக்கு ஒரு ப்ரொஜெக்ட் விஷயமாக அனுப்பி வைத்த போதுதான் கொரானா லாக்டௌனில் மாட்டிக் கொண்டான்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் விமானச் சேவை தொடங்கியதில் எப்படியோ அடித்துப் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தவன் பதினைந்து நாள் குவாரன்டைன் எல்லாம் முடிந்து அன்றுதான் வீட்டிற்கு வந்திருந்தான்.
நிரஞ்சன் உள்ளே நுழைந்ததும் அவன் குடும்பம் மொத்தம் அவனை தடபுடலாக வரவேற்று உபசரித்தது. ரேணு மகனுக்காகப் பார்த்துப் பார்த்து அவனுக்குப் பிடித்தமான உணவாக சமைத்து வைத்து அவனைத் திக்குமுக்காடச் செய்துவிட்டார்.
தன் குடும்பத்தின் உணர்வுபூர்வமான அன்பை அந்த மூன்று மாத நரக வாழ்விற்குப் பிறகு உளமார அவன் உணர்ந்த தருணம் அது. ரேணு அவனை அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்த போது அவன் கண்களிலும் நீர் சுரந்துவிட்டது.
அதன் பிறகு அப்பாவின் நல விசாரிப்பு அக்கா மகன்களுடன் அரட்டை, தங்கை மகளைத் தூக்கிக் கொஞ்சிய மனநிறைவுடன் தன் அறைக்கு வந்தவனின் கண்கள் நேராக சென்று நின்றது அவள் அறையில்தான்.
நான்கு வருடம் முன்பாகதான் தன் தந்தையிடம் அனுமதி கேட்டு அவன் சொந்த செலவில் அவனுக்கென்று பிரத்தியேகமாக அவனே வடிவமைத்து மாடியிலிருக்கும் தனி அறையைக் கட்டிக் கொண்டான். இடம் போதாமை தனக்கான சௌகரியம் எல்லாம் தாண்டி அவன் ஒரு தனிமை விரும்பி என்று அவர்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரியும். ஆனால் இது எதுவும் அந்த அறையை அவன் கட்டிக் கொள்ள உண்மையான காரணம் இல்லை.
ஜோ…. ஜோஷிகா!
பள்ளிக் காலத்தில் தொடங்கிய அவர்கள் நட்பும் அதனுடன் இணைந்து வளர்ந்த அவர்கள் காதலும்தான் காரணம்.
ஆனால் அதற்கு முன்பாக நிரஞ்சன் ஒரு அம்மா பிள்ளை. அவன் பிறந்ததிலிருந்தே நிறைய ரேணுவைதான் சார்ந்திருந்தான். ரேணுவும் மற்ற குழந்தைகளைவிட அவனுக்கு அதிகச் சலுகைகள் வழங்கினாள். அதற்கு காரணம் அவன் உடலளவில் சற்றே பலவீனமான குழந்தை.
போதாக்குறைக்குப் பார்க்க மிகவும் ஒல்லியாக இருப்பான். முன் பற்கள் எடுப்பாகத் தெரியும்.
ரேணு நல்ல நிறம். மாதவன் கருப்பு. அவன் அப்படியே மாதவனை கொண்டு பிறந்திருந்தான். ஆனால் மிருதுளாவும் சாதனாவும் அம்மா போல நிறமாக இருப்பார்கள்.
காலங்காலமாக நிறத்தின் மீது நிகழ்த்தப்படும் அரசியல் எத்தனை பேரை தங்கள் தோற்றத்தின் மீதான மதிப்பை இழக்க வைத்து மனஉளைச்சலுக்குள் தள்ளுகிறது. நிரஞ்சனும் கூட அதில் சிக்கிக் கொண்டவன்தான்.
விவரம் தெரிந்த நாளிலிருந்து அவன் தன் தோற்றத்தைக் குறித்த தாழ்வுமனப்பான்மைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அமிழ்ந்து கொண்டிருந்தான்.
அதுவும் உறவினர்கள் நண்பர்கள் அவனுடைய குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் போது அல்லது ஒதுங்கிச் செல்லும் போது அவன் ரொம்பவும் கூனிக்குறுகிப் போவான்.
வளர வளர அவனுடைய இந்த மனப்பான்மை அதிகரித்ததே ஒழிய குறையவில்லை. தன் குறையைச் சுட்டிக் காட்டி பேசிவிடுவார்களோ என்று பயந்தே அவன் யாருடனும் நட்பு பாராட்டுவதில்லை. அவன் அக்கா தங்கையிடம் கூட அவன் அதிகம் பேசிப் பழகமாட்டான்.
எல்லோரும் தன்னை ஒதுக்குகிறார்கள்.நெருங்கிப் பழக மறுக்கிறார்கள் என்று அவனாக ஒரு கற்பனையை செய்து கொண்டு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு ஒரு கூட்டிற்குள் தன்னை அடைத்துக் கொண்டான்.
அவனுடைய அதிகபட்ச உரையாடல் எல்லாம் அவன் அம்மாவிடம் மட்டும்தான். இந்த மனநிலை அவனின் படிப்பு, செயல்பாடுகள் என்று எல்லாவற்றிலும் எதிரொலித்தது.
மிருதுளாவும் சாதனாவும் நன்றாகப் படிக்கக் கூடியவர்கள். ஆனால் நிரஞ்சன் சராசரிக்கும் குறைவான மதிப்பெண்களைதான் எடுப்பான். பள்ளியில் அவன் ஆசிரியர்கள் அவன் யாரிடமும் வாய் திறந்து எதுவும் பேசுவதில்லை,கேள்விக்குப் பதில் சொல்வதில்லை போன்ற குற்றச்சாட்டுக்களை அடுக்க, மாதவனுக்கு மகன் மீது அதீத கோபமும் வெறுப்பும் உண்டானது.
இதனால் மகன் தந்தைக்கு இடையிலான உறவும் சுமுகமாக இல்லை. எப்போதும் அவர் மகனிடம் எரிந்து விழ, அவன் அதற்கும் அமைதியாகதான் இருப்பான். மாதவனுக்கு வெறுத்துப் போனது. ஆனால் ரேணு மகனை விட்டுக்கொடுக்கவே மாட்டார்.
‘எல்லாம் அவன் வளர வளர சரியாகிடுவான்’ என்ற ரேணுவின் வார்த்தைகளை மாதவனால் ஏற்கவே முடியாது.
‘இதென்ன மாயாஜாலமா அவன் வளர்ந்ததும் மாறிடறுதுக்கு’ என்றவர் நம்பிக்கையின்றிப் பேச,
‘அதெல்லாம் தெரியாது… அவன் மாறிடுவான்’ என்று ரேணு உறுதியாகச் சொல்வார். அவருக்குத் தெரியும். அவன் பொறுப்பில்லாதவனோ படிக்காதவனோ கிடையாது.
அவனுக்குள் இருக்கும் மனத்தடை அவன் திறமைகளை முடக்கிவிட்டிருக்கிறது. அந்த மனத்தடை என்றாவது ஒரு நாள் நீங்கிவிடும் என்று அவர் ஆழமாக நம்பினார்.
அது நடந்தது. அவன் பன்னிரெண்டாவது முடிக்கும் போது நிரஞ்சனுடைய மாற்றத்தைக் கண்டு எல்லோருமே வியப்புற்றனர். மாதவனுக்கும் கூட வியப்பாகதான் இருந்தது.
பிள்ளைகள் குறித்த தாயின் கணிப்பு எப்போதும் தவறிப் போவதில்லை.
ஆனால் அந்தக் கணிப்பைச் சரியாக்கியதில் முக்கியப் பங்கு ஜோஷிகாவிற்குதான். அவள் அவன் பள்ளியில் பதினோராம் வகுப்பில் சேர்ந்திருந்தாள். சரளமாக ஆங்கிலம் பேசும் அவள் திறமை… இயல்பாக எல்லோரிடமும் பழகும் விதம்… இதெல்லாம் தாண்டி அவளுடைய கவர்ச்சிகரமான தோற்றம் என்று ஆசிரியர் முதற்கொண்டு மாணவர்கள் வரை அவள் வந்த சில நாட்களிலேயே எல்லோருக்கும் பிடித்தமான மாணவியாக மாறிவிட்டாள்.
அதிலும் வகுப்பிலிருந்து ஆண்கள் எல்லோருக்கும் அவள் மீது தனி ஈர்ப்பு இருந்தது நிரஞ்சன் உட்பட. ஆனால் அவள் தன் கைக்கு எட்டாத கனி என்று எண்ணிக் கொண்டு தேவையில்லாத கற்பனைகளை அவன் வளர்த்துக் கொள்ளவில்லை.
அவள் தன் வீட்டிற்கு எதிரே குடியிருப்பது கூட அவனுக்குத் தெரியாது. ஒரு நாள் அவன் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்லும் போது,
“ஹாய்” என்று புன்னகைத்தவள் தன் மிதிவண்டியில் அவனுடன் சேர்ந்து ஓட்டிக் கொண்டு வர, அவன் பதிலுக்குப் புன்னகைக்க கூட இல்லை.
அவளை அவன் நம்பாமல் பார்த்திருக்க அவள் அவனிடம் சகஜமாகப் பேசினாள்.
“அந்த க்ரீன் ஹவுஸ்தான் உங்களோட வீடா” என்று கேட்ட போதுதான் அவன் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்து அவள் கேள்விக்குப் பதிலுரைத்தாள்.
“ஆ… அது… ஆமா… உனக்கு எப்படி?”
“ஏய் நான் ஆபோஸிட்லதான் இருக்கேன்… அந்தப் புது வீடு” என்றதும்தான் புதிதாகக் கட்டி முடித்த எதிர் வீட்டின் கிரஹப்பிரவேசத்திற்கு அவன் அம்மா அப்பா சென்று விட்டு,
“வீடு பெருசா பங்களா மாதிரி இருக்கு” என்று ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டது அவன் நினைவில் தட்டியது. அந்த வீடு இவளுடைய வீடா என்றவன் எண்ணமிட்டிருக்கும் போதே,
“பரவாயில்ல… எனக்கு ஸ்கூலுக்குப் போக ஒரு கம்பெனி கிடைச்சிருச்சு” என்றாள்.
நிரஞ்சனோ அந்த நொடி மிதவண்டியை மிதிக்கும் உணர்விலேயே இல்லை. வானத்தில் மிதக்கும் உணர்வில் இருந்தான்.
ஆனால் அவனுக்குள் இருக்கும் தாழ்வுமனப்பான்மை அவனுடைய கற்பனை குதிரையை அதிக தூரம் செல்ல விடாமல் இழுத்துக்கட்டி வைத்தது. அவள் நட்புணர்வுடன் பேசியதை எந்த கல்மிஷமும் இல்லாமல் அவன் ஏற்றுக் கொண்ட போதும் மனம் அவ்வப்போது கட்டுப்பாடில்லாமல் தவிக்கும்.
எல்லோரும் அவனை ரஞ்சன் ரஞ்சு என்றழைத்த போது அவள் மட்டும் நிரு என்று அழைக்க, அவன் மனம் ஏதேதோ கற்பனையில் உழலும். ஆனால் கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்க்கும் போதே அவன் ஆசைகள் எல்லாம் சுக்குநூறாகிவிடும்.
ஒல்லியான அவன் தேகமும் பற்களில் அணிந்திருந்த க்ளிப்பும் ஒரு மாதிரி அவலட்சணமாக இருப்பதாக எண்ணி மனதால் குறுகிப் போவான். ஆனால் அவள் அதை எல்லாம் பொருட்படுத்தியதாகக் கூட இருக்காது.
எப்போதும் அவனைப் பார்த்த மாத்திரத்தில் அவள் உதட்டில் தவழும் புன்னகையிலும் கண்களில் காட்டும் நட்புணர்விலும் அவனுக்கு அவளின் மீது தனி மதிப்பு உண்டானது. அவனுடன் பயிலும் எந்த மாணவிகளும் இதுவரையில் அவனிடம் பேசியதில்லை. பேச விழைந்ததுமில்லை.
ஆனால் ஜோ அவர்களைப் போல் அல்ல.
ஒரு நாள் கூட அவனைக் குறையைச் சுட்டிக் காட்டிப் பேசவோ… ஏன் அவ்வாறு பார்க்கக் கூட செய்தது இல்லை. அவள் தனித்துவமானவள்.
“ஹே நிரு… உன் கையெழுத்து ரொம்ப அழகா இருக்குடா” என்றவள் பாராட்டிய போதுதான் முதல் முறையாக தன் கையெழுத்து அழகாக இருப்பதை அவன் உணர்ந்தான்.
“நீ பேஸ்கெட் பால் டீம்ல சேர்ந்துக்கலாம் இல்ல”
“எனக்கு ஸ்போர்ட்ஸ் எல்லாம் வராது ஜோ… நான் கொஞ்சம் வீக்”
“அதெல்லாம் ஒன்னுமில்ல… நீ சும்மா ட்ரை பண்ணு… நீ ஹைட்டா இருக்க நிரு… உனக்கு அது ஒரு அட்வான்டேஜ்… கண்டிப்பா வரும்” அவள் தெரிந்து சொன்னாலோ அல்லது தெரியாமல் சொன்னாலோ. ஆனால் அவள் சொன்னது போலவே நடந்தது.
முதல் முறையாக அவன் பள்ளியில் உள்ள கூடைப்பந்து குழுவில் கலந்து கொண்டு விளையாடிய போது அவன் உடற்கல்வி ஆசிரியர் அவனுக்குத் திறமை இருப்பதாகத் தெரிவித்தார். அடுத்தடுத்து அவன் கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் அவனுக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.
அவனும் ஒரு தனி மனிதனாக அங்கீகரிக்கப்பட்டான்.
இப்படி அவனுடைய நேர்மறையான விஷயங்களை அவள் ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டத் தொடங்கியதில் அவன் நிறையவே மாறினான்.
மண்ணுக்குள் இறங்கும் வேர்கள் போல ஆழமாக அவனுக்குள் மாற்றங்கள் நடந்தன.
இதெல்லாம் தாண்டி அவனுக்கும் ஜோவிற்கும் இருக்கும் நட்பு மாணவர்களிடம் ஒருவித பொறாமை உணர்வை வளர்த்ததில் நிரஞ்சனுக்கு கர்வமாக இருந்தது.
இந்த நிலையில் தேர்வுகள் ஆரம்பிக்க ஜோ அவனிடம், “நான் உன் வீட்டுக்கு வரேன்… நாம இரண்டு பேரும் சேர்ந்து படிக்கலாம்” என்று சொல்ல அவன் முகம் மாறியது.
“சாரி ஜோ… எங்க வீட்டுல கேர்ள்ஸ் கிட்ட எல்லாம் சகஜமா பேசுறதை சரியா எடுத்துக்கமாட்டாங்க… அதுவும் இல்லாம எங்க வீட்டுல இரண்டு சிஸ்டர்ஸ் இருக்காங்க… அது சரியாவும் வராது” என்று மறுத்துவிட,
“அப்போ நீ என் வீட்டுக்கு வா” என்றாள்.
“ஐயோ வேண்டாம்… அப்படி வந்தாலும் அம்மாவுக்குத் தெரிஞ்சுடும்” என்றவன் அவளைத் தயக்கத்துடன் பார்த்து, “சாரி” என,
“இட்ஸ் ஓகே… எனக்கு உன் நிலைமை புரியுது” என்றாள்.
“ஆமா ஜோ… உங்க அப்பாகிட்ட நீ என்னைப் பத்தி சொல்லி இருக்கியா”
“அவருக்கு நிறைய வொர்க்… எனக்கும் அவருக்கும் பேசவே டைம் கிடைக்காது… ஆனா சொல்லணும்னு நினைப்பேன்” என்றவள் சொன்ன நொடி,
“வேணாம் ஜோ… சொல்லாதே” என்றான்.
“எங்க அப்பா அதெல்லாம் கேஸுவலா எடுத்துப்பாரு நிரு”
“அது இல்ல… வேண்டாம்” என்றவன் ஒருவேளை தன் தோற்றத்தைப் பார்த்து அல்லது அவர்கள் குடும்ப நிலையை வைத்து அவர் தன்னிடம் பழகக் கூடாது என்று சொல்லிவிடுவாரோ என்ற பயம்.
அதை நேரடியாகச் சொல்லாமல் அவன் மழுப்ப, அவளும் சரியென்று விட்டாள்.
தன் அக்கா தங்கைகளிடம் கூட அவர்கள் நட்பு தெரிந்துவிடாமல் பொத்திப் பொத்தி மிக ரகசியமாக ஒரு பொக்கிஷம் போல பாதுகாத்தான்.
பள்ளி முடிந்து வந்ததும் மொட்டை மாடிக்குப் படிக்கச் செல்வது போல ஹாய் ஜோ என்று இவன் இங்கிருந்து கையசைத்தால் அவள் தன் அறையிலிருந்து ஹாய் நிரு என்பாள். இருவரும் சைகை பாஷையில் பேசிக் கொள்வார்கள்.
இப்படியாக வளர்ந்த அவர்கள் நட்புடன், காதல் உணர்வும் இணைந்து கொண்டது. பன்னிரெண்டாம் வகுப்புத் தொடங்கிய சில மாதங்களில் ஜோ அவனிடம், “எனக்கு இது சரியா தப்பான்னு எல்லாம் தெரியல நிரு… நான் உன்னை லவ் பண்றேன்னு நினைக்கிறேன்… உனக்கும் அதே போல ஃபீலாகுதா?” என்று கேட்க, அவனக்குதான் பேச்சே வரவில்லை.
ஏதோ உலக அதிசயத்தில் ஒன்று போலதான் அவள் காதலைப் பார்த்தான். தன்னைப் போன்ற ஒருவனை எப்படி இப்படி ஒருத்தி காதல் செய்ய முடியுமென்று அவனுக்கு காதலைவிடவும் வியப்புதான் உண்டானது.
அதேநேரம் அவளுக்கு தான் தகுதியானவன்தானா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். அவசரப்பட்டு அவள் காதலைக் ஏற்றுக் கொள்ளவில்லை அவன்.
“நம்ம ஸ்கூல் முடியிற வரைக்கும் இந்த லவ் பத்தி எல்லாம் யோசிக்க வேண்டாம் ஜோ… எக்ஸாம்ஸ் முடிச்சுட்டு இதைப் பத்தி பேசிக்கலாம்” என்றவன் பதிலைக் கேட்டு அவளுக்கும் சரியென்றுபட்டது.
ஆனால் அவன் அப்படி சொன்னதன் பிண்ணனியில் தன் தகுதிகளைப் படிப்பிலாவது உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று எண்ணம்தான். அதற்காகவே வெறித்தனமாகப் படித்தான். அவன் மதிப்பெண்களைப் பார்த்து ஒட்டுமொத்த பள்ளியும் ஆச்சரியம் கொண்டது.
இடையில் ஐஐடி நுழைவு தேர்விற்குப் பயின்று அவன் அந்தத் தேர்வையும் எழுதி முடித்து ஆர்க்கிட்டெக் சேர்ந்த போது மாதவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. கனவு போலதான் எல்லாம் நிகழ்ந்தது.
இத்தனையும் அவன் ஜோவிற்காகதான் செய்தான். அவள் காதலை ஏற்றுக் கொள்ளவதற்காகவே சாதித்தான். ஆனால் உண்மையில் ஜோ ஒரு தூண்டுகோல் மட்டும்தான். அவனுக்குள்ளே அத்தனை திறமைகளும் ஒளிந்துக் கொண்டிருந்தன.
நிரஞ்சனின் தகுதிகளும் தன்னம்பிக்கையும் உயர்ந்த போது இயல்பாகவே அவன் தோற்றத்திலும் புது பொலிவும் கம்பீரமும் உண்டானது.
ஜோ எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் சேர்ந்தாள். இருவரும் கல்லூரி விடுமுறை நாட்களில் ரகசியமாக சந்தித்து கொண்டு ஊர் சுற்றுபவர்கள் அவர்களின் வீட்டின் முனைக்கு வந்ததும் அந்நியர்கள் போல நடந்து கொள்வார்கள்.
படிப்பு முடிந்து அவன் பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த போது ரேணுவிற்கு அதிக மனவருத்தமானது. ஆனால் கூட்டிற்குள் இருந்த பறவை தம் சிறகுகளை விரித்து வானம் நோக்கிப் பறக்கும் போது அதனை விடுவித்துதானே ஆக வேண்டும். மனசஞ்சலத்துடன்தான் அவனை அனுப்பி வைத்தார்.
ஜோஷிகா டிகிரி படித்துக் கொண்டிருக்கும் போது ஒயில்ட் ஃபோட்டோகிராபிதான் தன் விருப்பம் என்று முடிவெடுத்துவிட்டாள். பூங்காவிற்குச் சென்று மிருகங்களைப் படமெடுப்பதில் தொடங்கியவள் பின் காடுகளுக்குப் பயணிக்கத் தொடங்கினாள். ஜோசப்பும் மகள் விருப்பத்தை ஏற்று அனுப்பி வைத்தார்.
இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக தங்கள் குடும்பத்தையும் வீட்டையும் விட்டுப் பிரிந்து வந்தவர்கள், தங்கள் காதலின் அடுத்தப்படி நிலையை எட்டியிருந்தார்கள்.
விடுமுறை நாட்களில் அவளுடன் அவன் காடுகளுக்குப் பயணித்த போது ஒருமுறை மழையில் இருவரும் மாட்டிக் கொள்ள நேரிட்டது. ஒதுங்கிக் கொள்ள இடம் தேடிய போது சிறு குகை போலிருந்த பாறைக்குள் நெருக்கமாக ஒண்டிக் கொண்டனர்.
இருவரின் உடலும் குளிரில் நடுங்கியது. நெருங்கி நின்றவர்களின் கண்கள் சங்கமித்த கணத்தில் உதடுகளும் உணர்வுகளும் சங்கமித்தன. மழை நின்று அவர்கள் தங்கள் அறைக்குத் திரும்பிய போது உள்ளுர தாப உணர்வு கொழுந்துவிட்டிருந்தது.
அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில் கதவை அடைத்துவிட்டு திரும்பியவனைப் பின்புறமாக அவள் அணைத்துக் கொள்ள, அவனுக்குள் ஏறிக் கொண்ட மோகமென்ற போதை அவர்கள் மூளைகளை மழுங்கடித்தன. அவன் அவள் கரங்களுக்குள் நெகிழ, அவளோ அவன் இதழ்களில் கரைந்தாள்.
நேரங்களைத் தின்றுக் கொண்டிருந்த அவர்களின் காதல் கணங்களில் எல்லாவற்றையும் மறந்து போயினர். மனதின் எல்லைகளை கடந்து அவர்கள் உடலால் பேசிக் கொண்டனர். உணர்வுப்பூர்வமாக கலந்துவிட்டனர்.
அன்றிலிருந்து இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்க, ஒருவரை ஒருவர் அதிகமாகச் சார்ந்திருக்கத் தொடங்கினார்கள். ஜோ அவனுடன் பெங்களூர் வீட்டிலேயே வசிக்க ஆரம்பித்தாள்.
விடுமுறை நாட்களில் இருவரும் காட்டிற்குள் பயணிப்பதும் அருவிகளில் குளிப்பதும் என்று காதலும் களவுமாக உற்சாகத்துடன் தங்கள் பொழுதுகளைக் கழித்தனர்.
இரண்டு வருடத்திற்கு மேலாக அவர்கள் உறவு இப்படியே நீட்டித்துக் கொண்டிருந்தது.
ஆனால் இவர்களின் இந்த உறவும் உணர்வும் சுக்கு நூறாக உடைந்தது நிருவின் தாழ்வுமனப்பான்மை மீண்டும் தலைத்தூக்கிய போதுதான்.
அன்று இரவு மும்முரமாக தன் லேப்டாப்பில் ஒரு கட்டடத்தின் கட்டமைப்பை வடிவமைத்து முடித்து படுக்கையில் விழுந்தவன் அவளை இழுத்து உதட்டில் முத்தம் பதிக்க,
“நிரு ப்ளீஸ் விடு… எனக்கு டையர்டா இருக்கு” அவள் அவனை விலக்கிவிட்டாள். இப்படியாக இரண்டு வாரங்களாக அவனிடம் அவள் இணக்கம் காட்டவில்லை.
அவள் தன்னை விட்டு விலகிப் போவது போல அவன் கவலையுற்றான். இதுவல்லாது ஜோவின் செல்பேசியில் எதேச்சையாக அவன் பார்த்த தகவல் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
“ஜோ… யாரது உன் ஃபோன்ல… அருண்னு” என்றவன் மெல்ல அவளிடம் கேட்க,
“அருண்… நம்ம க்ளாஸ் மெட்” என்றதும் அவன் யோசனையுடன்,
“அருண்னு எனக்கு யாரும் ஞாபகத்துக்கு வரலயே” என்றான்.
“ப்ச்… டேய்… அதான் நம்ம க்ளாஸ்ல செம்ம ஸ்மார்ட்டா ஹைட்டா இருப்பானே” என்றதும் அவன் முகம் சுருங்கிப் போனது.
“ஆமா அவன் எதுக்கு உனக்கு மெஸேஜ் பண்றான்?”
“போன வாரம் ஃபேஸ் புக்ல ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் கொடுத்தான்… நான் அக்செப்ட் பண்ணேன்… அப்புறம் மெஸேஞ்சர்ல வந்து சாட் பண்ணான்… நம்பர் கேட்டான்… கொடுத்தேன்” என்றவள் சொல்வதைக் கேட்டு அவனுக்கு உள்ளுர எரிந்தது.
‘நம்பர் கேட்டா உடனே இவ கொடுத்திருவாளாமா?’ என்றவன் எரிச்சலடைய, அவள் அது ஒரு பெரிய விஷயம் இல்லை என்பது போல அருணைப் பற்றி மேலே எதுவும் பேசவில்லை.
அன்றும் அவன் சகஜமாக அவளை நெருங்கிய போது, “நிரு ப்ளீஸ் ஐம் நாட் இன் மூட்” என்று விலகிப் படுத்துக் கொண்டாள்.
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போல அவளுடைய விலகலையும் அருணுடனான நட்பையும் இணைத்து அவன் மூளை தானாக ஒரு முடிச்சைப் போட்டது.
இதற்கிடையில் அலுலவகத்தில் இருந்த நிருவிற்கு, “நான் அருண் கூட டின்னர் போறேன்… நைட் லேட்டாகும் வர” என்பது போல அவள் அனுப்பிய தகவலை அவன் தாமதமாகதான் பார்த்தான். அதைப் பார்த்த நொடியில் அவனுக்கு உள்ளுர பயப்பந்து உருளத் தொடங்கியது.
ஜோ அவனை விட்டு விலகிச் செல்வதை அவனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
திரும்ப திரும்ப, “அருண் ஹைட்டா ஸ்மார்டடா இருப்பான்” என்று அவள் சொன்னதுதான் அவன் மூளைக்குள் குத்திக் குடைந்தது. முக நூலிலிருந்த அருணின் புகைப்படத்தைத் தேடி எடுத்துப் பார்த்தவனின் முகம் விழுந்துவிட்டது. அவன் இப்போது அதீத ஆண்மையுடன் இருந்தான்.
அவன் தோற்றத்தைப் பார்த்ததும் நிரஞ்சனின் உடலெல்லாம் ஒருவித உஷ்ணம் பரவியது. கண்கள் ஈரமாயின.
அதன் பின் அவனால் வேலையில் ஈடுப்படவே முடியவில்லை. ஜோவின் அலைப்பேசிக்கு அழைத்த போது அவள் ஏற்கவில்லை. விரைவாக வீடு திரும்பினான். அவள் வந்திருக்கவில்லை.
ஒரு மாதிரி பித்துப் பிடித்தவன் போன்ற மனநிலையை எட்டினான். ஃபிரிஜ்ஜில் வைத்திருந்த விஸ்கியை எடுத்து முழுவதுமாகத் தொண்டையில் சரித்துக் கொண்டான். மனமும் உடலும் எரிந்தது.
அப்போது வீட்டு வாயிலில் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
ஜன்னல் வழியாக அவன் எட்டிப் பார்க்க, ஜோ அந்த காரிலிருந்து இறங்கினாள். அவளைப் பார்த்த நொடி அவன் கண்கள் கோபத்தில் சிவந்தன. அவன் விறுவிறுவென வாயிலுக்கு நடந்த போது அருண் இறங்கி, சாதாரணமாக அவள் கைகளைப் பற்றிக் குலுக்கிப் பேசிக் கொண்டிருந்தான்.
அந்தக் காட்சியைப் பார்த்த நிருவின் கோபம் உச்சத்தைத் தொட்டது. அந்த நொடியே அவன் அருணை சரேலென்று அறைந்து கீழே தள்ள, ஜோ அதிர்ந்தாள்.
“நிரு ஸ்டாப் இட்” என்றவள் அவனை நிறுத்த, அவன் அவளை ஒரு பொருட்டாக மதியாமல் அருணை அடித்துத் துவைத்துவிட்டான்.
“இன்னொரு தடவை உன்னை நான் ஜோவோட பார்த்தேன் கொன்னுடுவேன் ஜாக்கிரதை” என்று மிரட்ட, ஜோ நடப்பது ஒன்றும் புரியாமல் குழம்பிப் போயிருந்தாள்.
அருண் தப்பித்தால் போதுமென்று அவன் காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட, “அறிவில்லடா உனக்கு… இப்படியா நடந்துப்ப?” என்று கேட்க, அவன் அவள் கரத்தைப் பற்றி தரதரவென்று இழுத்து வந்து உள்ளே தள்ளினான்.
“இடியட்… ஏன்டா இப்படி பைத்தியம் மாதிரி நடந்துக்கிற?” என்றவள் கேட்கவும்,
“ஆமான்டி… நான் பைத்தியம்தான் நான் பைத்தியம்தான்” என்று கத்தினான்.
அவள் அவன் செய்கையைப் பார்த்து மிரண்டுப் போயிருக்க அவன் மேலும், “அந்த அருண் பார்க்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கான் இல்ல ஜோ” என்று ஒரு மாதிரி எள்ளல் நகைப்புடன் கேட்டு வைத்த போதுதான் அவன் செயல்களின் காரண காரியமே அவளுக்குப் புரிந்தது.
அவன் மேலும் அவள் கரத்தை மூர்க்கமாகப் பற்றி இழுத்து, “நான் உனக்கு அலுத்துப் போயிட்டானாடி?” என்று கத்தினான். அவள் அவனை அதிர்ச்சியாகப் பார்க்கும் போதே,
“நான் உனக்கு அலுத்துப் போயிட்டேன் இல்லடி… நான் உனக்கு அலுத்துப் போயிட்டேன்” என்று மீண்டும் மீண்டும் வெறிப் பிடித்தவன் போல கத்த, அவள் உடல் நடுங்கியது. அவள் கண்கள் கலங்கின.
“நிரு ஸ்டாப் இட்” என்றவள் அவனைத் தள்ளிவிட்டு,
“நான்சென்ஸ் மாதிரி பேசிட்டு இருக்க… அவன் பெங்களூர் வந்திருக்கேன்னு கால் பண்ணான்… டின்னருக்குப் போலாம்னு கேட்டான்… நான் போனேன்… அவ்வளவுதான்… மத்தபடி நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல” என்றவள் தெளிவுப்படுத்திவிட்டு,
“சை… நீ என்னை எவ்வளவு கீழ்த்தரமா நினைச்சிட்ட” என்றவள் உடைந்து அழுதாள்.
அப்போதுதான் நிரஞ்சனுக்கு யாரோ சம்மட்டியால் அடித்தது போல தன் தவறு உரைத்தது.
“ஜோ” என்றவன் அவள் தோளைப் பிடிக்க, அவள் பட்டென்று அவன் கையைத் தட்டிவிட்டு நிமிர்ந்து. “உஹும்… இனி ஒரு நிமிஷம் கூட உன் கூட இருக்கமாட்டேன்… நெவர்” என்றவள் அவசர அவசரமாக தன் பொருட்களை எடுத்து வைத்தாள்.
“ஜோ… நான்” என்றவன் அவள் கைகளைப் பிடித்து தடுக்க முற்பட்ட போது அவள் பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்து,
“நீ எனக்கு அலுத்துப் போயிட்ட டா… ஆமா அலுத்துப் போயிட்ட… காட் இட்” என்று அவன் கண்களைப் பார்த்துக் கூறினாள்.
“சாரி ஜோ” என்றவன் மன்னிப்பு கோரியபடி அவள் கரத்தைப் பற்ற அசூயையாக அவன் பிடியை உதறியவள்,
“என்னைத் தொட்ட கொன்னுடுவேன் உன்னை” என்று சீறலாகச் சொல்லும் போதே அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. அவள் அழுது அவன் பார்த்ததே இல்லை. எதற்காகவும் அழமாட்டாள். இட்ஸ் ஓகே என்று எப்பேர்ப்பட்ட பிரச்சனையையும் மிகச் சாதாரணமாக ஒதுக்கிவிட்டுப் போகக் கூடியவள்.
அவள் அழுகிறாள் எனில் தான் எந்தளவுக்கு அவளைக் காயப்படுத்திவிட்டோம் என்று அவனுக்குப் புரிந்தது.
“ஜோ ப்ளீஸ் நான் சொல்றதை ஒரு நிமிஷம்” என்றவன் கெஞ்சும் போது அவள் தன் பையினை எடுத்துக் கொண்டு,
“டோன்ட் எவர்… எவர் ட்ரை டூ கான்டெக்ட் மீ… குட் பை” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்து வெளியேறிவிட்டாள். ஒரு நிமிட கோபமும் வெறுப்பும் அவர்கள் உறவைச் சில்லுசில்லாக நொறுக்கிவிட்டது.
காதலிக்கத் தொடங்கிய நாளிலிருந்து சிறியதாகக் கூட இருவருக்குள்ளும் மனவருத்தங்களோ சண்டைகளோ ஏற்பட்டதில்லை. அதுவும் ஜோவை நிரஞ்சன் தன் வாழ்வில் வந்த தேவதை போலதான் பார்த்துக் கொண்டான்.
எல்லாவற்றையும் ஒரு நொடியில் அவனுடைய தாழ்வுமனப்பான்மை சிதறடித்துவிட்டது.
நிதானமாக அவன் யோசித்து பார்த்த போதுதான் தான் எத்தனை பெரிய தவறைச் செய்துவிட்டோம். எவ்வளவு கீழ்தரமாகப் பேசிவிட்டோம் என்று உரைத்தது. ஆனால் அவன் தவறை உணர்ந்தும் ஒன்றும் பயனில்லை.
ஜோ அவன் எண்ணை பிளாக் செய்துவிட்டாள். அவன் வேறு யாருடைய எண்ணிலிருந்து பேசினாலும் அடுத்த நொடியே அந்த எண்ணையும் ப்ளாக் செய்தாள்.
வீட்டிற்கு வந்தாலும் அவளைப் பார்க்க முடியவில்லை. எங்கே இருக்கிறாள் எதுவும் தெரியாமல் அவன் தவித்துப் போனான். இதற்கிடையில் தங்கையின் கல்யாணம் சிங்கப்பூர் பயணம் என்று நாட்கள் படுவேகமாக நகர்ந்தன. இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன.
இந்த கொரானா லாக்டௌனில் அவன் உண்மையிலேயே நரகத்தைப் பார்த்தான். ஜோவுடன் இருந்த ஒவ்வொரு நாளையும் அவர்கள் படம் பிடித்து வைத்திருந்த ஒவ்வொரு சின்னச் சின்ன நினைவுகளையும் பார்த்து பார்த்து… நினைத்து நினைத்து வருந்தினான். குற்றவுணர்வில் செத்தான்.
இன்னும் ஒரு மாதம் அதிகப்படியாக அவன் அந்த தனிமையை அனுபவித்திருந்தால் கூட குற்றவுணர்வில் தற்கொலை செய்து கொண்டிருப்பான்.
இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் அவளை நேரில் பார்த்த போதுதான் அவன் உணர்வுகள் எல்லாம் உயிர்பித்துக் கொண்டன. ஆனால் இன்றும் அவள் அவனை மன்னிக்க தயாராக இல்லை. அந்த மூடிய கதவுகள் அவளின் கோபத்தையும் வேதனையையும் அவனுக்குச் சொல்லாமல் சொன்னது.
நிரஞ்சன் அந்த மூடிய கதவுகளை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தான்.
4

Quote from Marli malkhan on May 7, 2024, 4:31 PMSuper ma
Super ma