மோனிஷா நாவல்கள்
Muran Kavithaigal - 6
Quote from monisha on September 7, 2022, 12:27 PM6
ஜோ கிண்ணத்திலிருந்த நூடல்ஸை சாப்பிடாமல் அதனை ஸ்பூனால் அலைந்தபடி இருந்தாள். ஜோசப் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “இன்னும் டேடி மேல இருக்க கோபம் போகலயா ஜோஷி” என்று கேட்கவும் அவரை நிமிர்ந்து பார்த்தவள்,
“உங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்ல டேடி” என்றாள்.
“சீரியஸ்லி’’ அவர் புருவத்தை நெறிக்க,
“சீரியஸ்லி” என்றவள் இயல்பாகத் தலையசைத்துப் புன்னகைத்தாள்.
“சரி… அப்படின்னா நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்னு நினைச்சேன்” என்றவர் அவளிடம் ஒரு காகித உரையினைக் கொடுத்தார்.
“என்ன டேடி” என்றவள் அதனை எடுத்துப் பிரிக்க,
“வயநாடு போகணும்னு சொல்லிட்டு இருந்த இல்ல… அதுக்கான இ-பாஸ்… நம்ம கார்லயே போயிடு… இப்போதைக்கு அங்கே ஹோட்டல் ரிஸார்ட்ஸ் எல்லாம் ஓபன் ஆகல… அதான் அங்கே நீ தங்க ஒரு வீடு பார்த்திருக்கேன்… அங்கேயே உனக்கு எல்லாம் ஃபெஸிலிட்டியும் இருக்கும்… பக்கத்துல ஒரு பறவைகள் சரணாலயம் கூட இருக்கு… மாடில இருந்து பார்த்தா உனக்கு செம வியூ கிடைக்கும்…” என்று அவர் சொல்லி முடிக்கும் போது அவள் கொண்டாட்டமாக எகிறிக் குதித்தாள்.
“வாவ்… டேடி… தாங் யூ… தாங்க யூ ஸோ மச்… ஐ லவ் யூ” என்றவர் அவர் தோளைப் பின்புறமாக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு,
“நான் இப்பதான் நினைச்சிட்டு இருந்தேன்… நீங்க செஞ்சுட்டீங்க… யூ ஆர் அமேஸிங்” என்று ஆர்பரித்தாள்.
“ஏ… ஐ நோ யூ டியர்… உனக்கு எப்போ என்ன வேணும்னு எனக்கு தெரியாதா… உனக்கு நிச்சயமா இந்த மாதிரி ரூம்ல அடைஞ்சு கிடக்கிறது எல்லாம் செட்டே ஆகாது… யூ ஆர் ஆ எக்ஸ்ப்ளோரர்… நீ இந்த உலகம் பூரா சுத்தி வரணும்… புதுசா புதுசா நிறைய விஷயங்களைப் பார்க்கணும்… தேடணும்…. வித்தியாசமா ஏதாச்சும் சாதிக்கணும்… எனக்கு தெரியும்… நீ சாதிப்ப… பெண்களால இந்த மாதிரி ப்ரொஃபஷன்ல சாதிக்க முடியாதுங்குற எண்ணத்தை எல்லாம் உடைச்சு… நீ ஒயில்ட் லைஃப் ஃபோட்டோகிராபில சாதிச்சு காட்டணும் ஜோஷிமா” என்றவர் உத்வேகத்துடன் பேச, அவள் விழிகள் வியப்பில் விரிந்தன.
ஒரு முறை கூட அவர் நீ இப்படியெல்லாம் சாதிக்க வேண்டும் என்று எவ்வித எதிர்பார்ப்புகளையும் எண்ணங்களையும் அவள் மீது திணித்ததில்லை. முழு சுதந்திரத்தை அவளுக்குக் கொடுத்திருந்தார். உன் விருப்பப்படி இருந்து கொள். உனக்கு பிடித்ததைச் செய் என்றவர். முதல் முறையாக அவர் மனதிலிருந்த விருப்பத்தை வெளியிடுகிறார் என்று தோன்றியது அவளுக்கு. அதனை எப்படி ஏற்பதேன்று அவளுக்குத் தெரியவில்லை.
இலக்குகளும் இலட்சியங்களும் கொண்டு தன் பாதையைக் குறுக்கிக் கொள்ள அவள் விரும்பியதில்லை. எதுவும் யாரும் நிறுத்த முடியாத வேகத்துடன் காட்டருவி போல பாய்ந்தோட வேண்டும்.
கண்களில் எதிர்பார்ப்பைத் தேக்கிக் கொண்டு பார்த்த தந்தையிடம், “ஃபைன் டேட்… நீங்க நினைச்ச மாதிரி நான் ஏதாவது செய்றேன்” என்றாள்.
அலட்சியத்துடன் அவள் தோளைக் குலுக்கிச் சொன்ன விதத்தில் ஜோசப்பின் உத்வேகம் வடிந்தது. மகளின் தோளில் தட்டிக் கொடுத்தார். அவள் தனக்கான ஒரு தனிதத்துவமான அடையாளத்தை என்று ஏற்படுத்திக் கொள்வாள் என எழுந்த எண்ணத்தை அடக்கிக் கொண்டு,
“அப்புறம் ஜோஷி… நாளைக்கு இயர்லி மார்னிங் கிளம்பணும்… இப்பவே உனக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் எடுத்து வைச்சுக்கோ” என்றார்.
“டன்” என்றவள் உற்சாகமாக மாடியேறிச் சென்று தன்னுடைய பொருள்களை அடுக்கத் தொடங்கினாள். அந்த நொடி நிரஞ்சன் என்பவன் அவள் நினைப்பில் கூட இல்லை.
சட்டென்று நிரஞ்சன் மாடியேறி வருவதும் அவன் விழிகள் அவளை நோக்கித் திரும்புவதையும் கண்ட நொடி அவளின் சந்தோஷம் வடிந்து போனது. உள்ளுர ஏதோ ஒரு உணர்வு உடைய தொடங்கியது.
அவன் வேண்டாமென்று முடிவெடுத்த பின் இதென்ன மாதிரி தவிப்பு என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள் அவனைப் பார்த்தும் பார்க்காமல் தன்னுடைய உடைகளை எடுத்து வைத்து பெட்டியை மூடி வைத்தாள்.
தெள்ளத்தெளிவாக அவள் செயல்கள் அவன் கண்களுக்குப் புலப்பட்டன.
அவளோ இம்முறை நீ இருந்தால் எனக்கு என்ன? நீ இல்லாமல் போனால் எனக்கு என்ன? என்ற அலட்சியத்துடன் நடந்து கொண்டாள். அவள் என்ன செய்கிறாள் என்று உற்றுக் கவனித்தவனுக்கு அவள் எங்கேயோ புறப்படத் தயாராகிறாள் என்று மட்டும் நன்றாகப் புரிந்தது.
அவளோ பெட்டியை மூடிவிட்டு வேண்டுமென்றே அவன் பார்வையில் படும்படியாக வைத்தாள்.
அவனுக்குப் புரிந்து விட்டது. அவள் அங்கிருந்து போகப் போகிறாள். அவன் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. சற்று முன்புதான் அவன் தந்தை அவன் திருமணத்தைப் பற்றிப் பேசினார்.
“மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு சம்பந்தம் பேசினோமே… அவங்க கேட்டுட்டே இருக்காங்க ரஞ்சன்” என்றவர் சாப்பிடும் போது மெல்ல ஆரம்பிக்க, அவன் திருதிருவென்று விழித்தான்.
“அந்தப் பொண்ணு நல்லாதான் இருந்தா… நீ வேற சிங்கப்பூர்ல போய் மாட்டிக்கிட்டியா… அதான் அவங்களுக்கு என்ன சொல்றதுன்னு யோசிச்சிட்டே இருந்தேன்”
“பேசாம இந்த வாரத்துல அவங்க வீட்டுக்குப் போய் பார்த்திட்டு வந்துடலாமா?” என்று மகனைப் பார்த்துக் கேட்டார்.
அவன் சாதாரணமாகவே தன் தந்தையிடம் அதிகம் பேசமாட்டான். இப்போது எப்படி அவர் முகத்திற்கு நேராக மறுப்புத் தெரிவிப்பது என்று தவித்துப் போயிருக்க,
உதய் உடனே, “சீக்கிரமா பேசி முடிச்சிருங்க மாமா… இரண்டாவது அலை வருது அது இதுன்னு பயமுறுத்திட்டு இருக்காங்க… அப்புறம் திரும்பவும் தள்ளிப் போயிடும்” என்றவன் சொல்ல,
‘இந்த மாமா வேற’ என்று நிரஞ்சன் எரிச்சலடைந்தான். இந்த திருமணப் பேச்சை எப்படி தவிர்ப்பது என்று அவனுக்குப் புரியவில்லை. அவன் தவிப்பு புரியாமல் எல்லோரும் மிகுந்த உற்சாகத்துடன் அவன் திருமணத்தைக் குறித்து கிண்டலும் கேலியுமாகப் பேசிக் கொண்டனர்.
அவசர அவசரமாக தட்டிலிருந்த உணவை அவன் காலி செய்து எழுந்து கொள்ள,“என்னடா ரஞ்சு… நீ என்ன சொல்ற” என்று ரேணு நிறுத்திப் பிடித்து அவனைக் கேட்கவும் அவன் அவஸ்த்தையுடன் நெளிந்தான்.
அவர் மீண்டும், “ஏதாவது சொல்லு… நாம போய் பார்த்துட்டு வந்துடுவோமா” என்று நெருக்க வேறுவழியின்றி அவர் முகத்தை நிமர்ந்து பார்த்தவன்,
“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க மா… நான் யோசிச்சு சொல்றேன்” என்றான்.
எல்லோரும் அவனைக் குழப்பத்துடன் ஏறிட அவன் கைக் கழுவிக் கொண்டு மேலே வந்துவிட்டான். ஆனால் அங்கே அவனுக்கு வேறொரு அதிர்ச்சிக் காத்திருந்தது. அவள் அவனைவிட்டுப் போக நினைக்கிறாள்.
இந்த நொடி அவன் கையை விட்டு இந்த உலகமே நழுவிப் போகும் உணர்வு. அவள் இல்லாமல் போனால் தான் ஒன்றுமே இல்லாமல் போய்விடுவோம். தோற்றுப் போய்விடுவோம் என்றவன் மனம் தவிப்பில் ஆழ்ந்தது.
ஒரு வேளை அவள் எங்காவது புறப்பட்டுப் போய்விட்டால் மீண்டும் அவளைத் தொடர்பு கொள்ள முடியாமலே போய்விடலாம் என்ற எண்ணம் எழுந்து அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்தது. தன் மன்னிப்பை அவளிடம் சேர்க்க முடியாமல் மூச்சு முட்டி செத்துப்போய் விடுவோமோ என்று இதயம் படபடத்துக் கொண்டது.
“ஜோ ஐம் சாரி… என்னை விட்டுப் போகாதே… ஐ லவ் யூ… ஐ நீட் யூ” என்று சத்தமாகக் கத்தி அழ வேண்டும் போல தோன்றியது. ஆனால் அவனால் முடியவில்லை.
அந்த மாதிரி காட்சிகள் எல்லாம் சினிமாக்களுக்குதான் பொருந்தும். நிஜ உணர்வுகளை அப்படி எல்லாம் பறைசாற்றிவிட முடியாது.
அறைக்குள் வந்து கதவை மூடிக் கொண்டு வெகுநேரம் இப்படியும் அப்படியுமாக நடந்து யோசித்துக் கொண்டிருந்த போது தருண் வந்து நின்றான்.
“மாமா ஒரே ஒரு கேம் விளையாடிட்டுப் போயிடட்டுமா?”
“போடா டேய்… நானே டென்ஷன்ல இருக்கேன்” என்று நிரு அவனை விரட்ட,
“ப்ளீஸ் மாமா… ஒன்னே ஒன்னு” என்று கெஞ்சவும் அவனுக்கு எரிச்சலானது. அப்போது மின்னலடித்தது போல ஒரு யோசனை உதிக்க,
“சரி… ஆனா அதுக்கு முன்னாடி நான் சொல்றதை நீ செய்யணும்” என்றான்.
“என்ன செய்யணும்?” என்றவன் ஆர்வமாகக் கேட்க அவன் அவசரமாக தன் பெட்டியைத் திறந்து அதன் அடியில் வைத்திருந்த புத்தகம் ஒன்றை எடுத்து அதன் மீது மடமடவென்று ஒரு காகிதத்தை வைத்து தன் மனதில் உள்ள எண்ணங்கள் அனைத்தையும் எழுதி முடித்தான்.
இதுதான் கடைசி முயற்சி. ஒரு வேளை இதுவும் பலனளிக்கவில்லை என்றால் தன் வாழ்வில் இனி அவள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆனால் அது அவனால் முடியுமென்று தோன்றவில்லை.
கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “இந்த புக்கை எதிர் வீட்டுல இருக்க ஜோ அக்கா கிட்ட கொடுத்துட்டு வர்றியா?” என்று கேட்க,
“ஐய்யய்யோ… அம்மம்மாவும் அம்மாவும் அடிப்பாங்க” என்றவன் மிரள,
“உனக்கு நான் நிறைய புது கேம்ஸ்லாம் இன்ஸ்டால் பண்ணித் தரேன்… ப்ளீஸ் தருண்” என்றவன் இறங்க்கி கேட்கவும் அவன் முகம் மாறியது.
“நிஜமா வாங்கி தருவீங்களா?”
“சத்தியமா வாங்கி தருவேன்” என்றவன் உறுதியாகச் சொல்ல,
“ஓகே கொடுக்கிறேன்” என்றவன் ஒரு வழியாக சம்மதித்துவிட்டு,
“ஆனா எனக்கு ஒரு டவுட்” என்று நிற்க,
“டவுட் எல்லாம் அப்புறம் கேட்கலாம்… முதல போய் கொடுத்துட்டு வா” என்றான்.
“இல்ல நான் கேட்டே ஆகணும்” என்றவன் மேலும் கீழுமாகப் ஒரு பார்வை பார்த்து, “நீங்க அந்த ஜோ அக்காவை லவ் பண்றீங்களா?” என்று கேட்டு வைக்க, அவன் அதிர்ந்து,
“உன் வயசுக்கு இந்தக் கேள்வி ரொம்ப அதிகம்டா” என்றான்.
“எனக்கு தெரியும் மாமா… நான் படத்துல எல்லாம் பார்த்திருக்கேன்”
“ஐயா சாமி…. நீ எதுவும் கொடுக்க வேண்டாம்… அதை என்கிட்ட கொடுத்துட்டுக் கீழே போ” என்றதும்,
“இல்ல இல்ல… நான் போய் கொடுத்துட்டு வரேன்… நீங்க எனக்கு கண்டிப்பா புது கேம் இன்ஸ்டால் பண்ணித் தரணும்” என்றவன் அதிகாரமாகச் சொல்லிவிட்டு மெல்ல இறங்கி வாசலில் யாருமில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு வெளியே வந்து எதிர் வீட்டு கேட்டினைத் திறந்தான்.
தருண் உள்ளே செல்ல, நிரஞ்சனின் இதயத் துடிப்பு எகிறிக் கொண்டிருந்தது.
“ஜோ” என்று தருண் அழைத்துக் கொண்டே கதவருகே வர,
“யார்றா அது?” ஜோசப் வந்து எட்டிப் பார்த்தார்.
அப்போது ஜோஷிகா அவனைப் பார்த்துவிட்டு, “ஏ தருண்… வா… உள்ளே வா” என்று ஆவலுடன் அழைக்க,
“இல்ல இல்ல நான் கிளம்பணும்… அம்மம்மா நான் இங்கே வந்ததைப் பார்த்தா அடிப்பாங்க” என்று படபடப்போடு பேசியவன்,
“இந்த புக் உங்களோடதாமே… மாமா கொடுக்கச் சொன்னாரு” என்றவன் அந்தப் புத்தகத்தை நீட்ட அவள் முகத்தில் பலவிதமான உணர்வுகள் தோன்றி மறைந்தன.
“இந்தாங்க வாங்கிக்கோங்க” என்றவன் அந்தப் புத்தகத்தை நீட்டிக் கொண்டு நிற்க, அவள் தயங்கினாள்.
“என்ன புக்?” என்று ஜோசப் அதனை வாங்கப் போகவும்,
“அது என்னோட புக்தான்… தேங்க்ஸ்” என்றவள் அவசரமாக அதனைப் பெற்றுக் கொண்டுவிட்டாள்.
“ஓகே பை ஜோ” என்றவன் அந்த நொடியே அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.
“உன் புக் எப்படி அந்தப் பையனோட மாமாகிட்ட” என்றவர் யோசனையுடன் கேட்க,
“நாங்க இரண்டு பேரும் ஒரே க்ளாஸ்தானே… ஒரு முறை நான் அவனுக்கு இந்த புக்கை கொடுத்தேன்… அப்புறம் வாங்கவே இல்ல… இப்ப நான் அதைக் கேட்கவும் அவன் தேடி எடுத்துக் கொடுத்து அனுப்பி இருக்கான்” என்றவள் சொன்ன விளக்கம் அப்பட்டமான சமாளிப்பு என்று ஜோசப்பிற்குப் புரிந்தது.
அதுவுமில்லாமல் அவள் அடுத்த கணமே அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு தன்னறைக்குச் சென்றுவிட, மகள் செல்வதைக் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு நின்றார்.
ஜோஷி உள்ளே வந்து கதவை மூடிவிட்டு தன் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தாள்.
“ஷேக்ஸ்பியர் எழுதிய ஒத்தேலோ”
அது மிக சோகமான காதல் நாடகம். ஆங்கில நாவல்கள் மற்றும் இலக்கியங்கள் படிப்பது அவளின் பிடித்தமான பொழுதுபோக்கு. நிறைய இதுபோன்று அவள் வாங்கி வைத்துப் படித்திருக்கிறாள். இதுவும் அவளுடையதுதான். அவள் விட்டு வந்த நிறைய பொருட்களில் இதுவும் அவனிடம் தங்கியிருக்க வேண்டும். ஆனால் இதை மட்டும் அவன் எதற்காகத் திருப்பிக் கொடுத்தனுப்ப வேண்டும்.
சந்தேகத்துடன் மீண்டும் அந்தப் புத்தகத்தை உயர்த்திப் பார்த்தாள்.
“ஒத்தேலோ ஒரு இராணுவ வீரன்… அவன் மனைவி டெஸ்டமெனோ… ஒரு பணக்காரரோட மகள்… அவ பார்க்க ரொம்ப அழகா இருப்பா… அவ கொஞ்சமும் யோசிக்காம கருப்பா இருந்த இந்த ஒத்தேலோவோ காதலிச்சு கல்யாணம் செஞ்சிக்கிட்டா…
இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷமாதான் இருந்தாங்க… ஆனா அவன் கூட இருந்தவங்க செஞ்ச குழப்பத்துல அவன் தான் மனைவியை சந்தேகப்பட ஆரம்பிச்சான்… கடைசியா அந்த சந்தேகத்துல அவளைக் கொலையே செஞ்சுட்டான்… ஆனா கடைசியாதான் அவ தப்பு எதுவும் செய்யலன்னு அவனுக்குத் தெரிய வந்தது… தெரிஞ்சதும் அவன் தன்னைத் தானே குத்திக்கிட்டு இறந்து போயிட்டான்” என்றவள் அவன் தோளில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு அந்தக் கதையின் சுருக்கத்தைச் சொல்ல,
மிக மும்முரமாகக் கட்டட வடிவமைப்பை தன் லேப்டாப்பில் செய்து கொண்டிருந்த நிரஞ்சன், “ஓஹோ” என்றான்.
அவள் சரலென்று நிமிர்ந்து, “நான் எவ்வளவு சீரியஸா இந்தக் கதையைச் சொல்லிட்டு இருக்கேன்… நீ வெறும் ஓஹோன்ற… நான் சொன்னதைக் கவனிச்சியா இல்லையா?” என்று அவன் கன்னங்களைப் பிடித்து தன் புறம் திருப்ப,
“கவனிச்சேன் ஜோ” என்றான்.
“என்ன கவனிச்ச… கதை சொல்லு பார்ப்போம்”
“ம்ம்ம்… அந்த ஒத்தேலோ ஒரு மடையன்… முட்டாள்… தான் மனைவியை சந்தேகப்பட்டு தன் வாழ்க்கையை அழிச்சுக்கிட்டான்… அவனுக்கு இந்த ட்ராஜிக் என்ட் கரெக்ட்தான்” என்றான்.
“ஒத்தேலோ மடையன் முட்டாள்னு நான் எப்போ சொன்னேன்… அவன் உண்மையாதான் தன் மனைவியை நேசிச்சான்… ஆனா அவனுடைய அதிகப்படியான காதல் அவனை இப்படி எல்லாம் செய்ய வைச்சிருச்சு” என்றவள் விளக்க,
“இதுக்குப் பேர்தான் மடத்தனம்… அந்த ஒத்தேலோ ஒரு மடையன்தான்… அப்புறம் எனக்கு தெரிஞ்சு இதுக்கு பேர் எல்லாம் காதல் இல்ல” என்றான்.
இருவருக்கு இடையிலும் ஒத்தேலோ நல்லவனா கெட்டவனா என்ற வாக்குவாதம் நிகழ,
“நீ இந்த டிராமாவை முழுசா படிச்சிருந்தா இப்படி சொல்ல மாட்ட நிரு” என்றாள்.
“நான் இதெல்லாம் படிக்கவே மாட்டேன் பா… இந்த மாதிரி சோக முடிவை எல்லாம் என்னால படிக்கவும் முடியாது… சந்தோஷமா கடைசி வரை வாழ்ந்தாங்கனு ஏதாவது கதை இருந்தா சொல்லு… நான் படிக்கிறேன்” என்றான்.
அன்று தங்களுக்குள் நிகழ்ந்த வாக்குவாதத்தை இப்போது நினைத்து கொண்டவளுக்கு அவர்கள் காதலும் கூட ஒத்தேலோ நாடகம் போல முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கவில்லை.
ஒரு நீண்ட பெருமூச்சுடன் அந்தப் புத்தகத்தைப் புரட்டிய போது அதில் ஒரு கடிதம் இருந்தது.
எப்போதும் நிதானமாகவும் தெளிவாக எழுதப்பட்டிருக்கும் நிரஞ்சனின் கையெழுத்து தாறுமாறாக வளைந்து இருந்தது. பதட்டத்திலும் அவசரத்திலும் எழுதி இருக்கிறான் என்பதை உணர்ந்தவள் ஆங்கிலத்தில் இருந்த அந்தக் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினாள்.
“For She had eyes and, chose me -
True love is when people accept you for who you are” என்று ஒத்தேலோவின் மிகப் பிரபலான வாக்கியத்திலிருந்து அவன் கடிதத்தைத் தொடங்கியிருந்தான்.
இந்த லாக்டௌன் காலக்கட்டத்தில் நான் திரும்ப திரும்ப படிச்சது இந்தப் புத்தகத்தை மட்டும்தான். எனக்கு அதைப் படிக்கும் போதெல்லாம் தோன்றுகிற விஷயம் என்ன தெரியுமா?
நானும் ஒத்தேலோ மாதிரி மடையன், முட்டாள்.
‘ஒத்தெலோ செஞ்ச தப்பைதான் நானும் செஞ்சிருக்கேன்… அவன் தன்னை உண்மையா நேசிச்ச அவனை அவனாகவே காதலிச்சு ஏத்துக்கிட்ட அவன் மனைவி டெஸ்டமெனோவை சந்தேகப்பட்டுக் கொன்னுட்டான்… நானும் அவன போலவேதான்… ஆனா நான் என் காதலைக் கொன்னுட்டேன்… இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லதான்.
ஆனா ஜோ… இப்போ நான் என் தப்பைத் திருத்திக்க நினைக்கிறேன்… இன்னும் நம் உறவில அந்தச் சின்ன நம்பிக்கை இருக்குன்னு நான் நம்புறேன்… நீ நினைச்சா ஒத்தேலோ மாதிரி நம்ம காதலுக்கும் சோகமான முடிவு ஏற்படாம காப்பாத்த முடியும்…
நான் நிச்சயம் என் தப்பைத் திருத்திப்பேன் ஜோ… திரும்பியும் இப்படியொரு முட்டாளத்தனத்தைச் செய்யவேமாட்டேன்… சத்தியமா செய்யமாட்டேன்.
ப்ளீஸ் ஜோ… கடைசியா கேட்கிறேன்… எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு” என்றவன் உருக்கமாக எழுதி அனுப்பிய அந்த கடிதம் அவள் மனதை அசைத்து பார்த்தது.
அந்த கணமே அவள் உணர்வுகள் எல்லாம் பிரவாகமாகப் பொங்கி கண்ணீராகப் பெருகின.
“ஐ லவ் யூ நிரு… என்னாலயும் நீ இல்லாம இருக்க முடியாதுடா” என்று சொல்லியபடி அந்தக் கடித்தத்தை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
அதன் ஒவ்வொரு வரிகளும் அவன் காதலின் ஆழத்தை அவளுக்கு உணர்த்தியது. அவர்கள் இருவரும் இணக்கமாக வாழ்ந்த நாட்களை அவளுக்கு நினைவூட்டியது. என்னவோ அந்த கணமே அவன் மீதான அவள் கோபம் வருத்தம் எல்லாம் அர்த்தமில்லாததாகிப் போனது.
அந்த ஒரு நாளை தவிர்த்துவிட்டால் அவர்கள் காதிலில் மிக மோசமான நினைவுகள் என்று எதுவுமே கிடையாது. ஒரு முறை கூட நிரு அவளை அவமதிப்புடன் நடத்தியதாக அவள் நினைவில் இல்லை.
அவனை மன்னிப்பது கூட அவசியமில்லை என்று அவளுக்குத் தோன்றியது. தன்னுடைய அதிகப்படியான காதலினால்தான் அவன் அப்படி நடந்து கொண்டான் என்று அவள் மனம் சமாதானமடைந்துவிட்டது.
அவ்வளவுதான். அந்த நொடியே அவனை நேரில் பார்க்க வேண்டுமேன்ற உந்துதல் ஏற்பட, அவள் எழுந்து வந்து பால்கனி வழியே எட்டிப் பார்த்தாள். அவன் அவள் கண்களுக்குப் புலப்படவில்லை. உடனடியாக தன் கைப்பேசியைத் தேடி எடுத்து அவனுடைய எண்ணிற்கு அழைத்தாள்.
அறைக்குள் படுத்திருந்தவன் தன் கைக்பேசியில் அவளின் எண்ணைப் பார்த்த கணம் அவசரமாக தன் அறையினை விட்டு வெளியே வந்தான்.
“ஹாய் நிரு” என்றவள் புன்னகையாகக் கையை உயர்த்த, அவன் ஆச்சரியாத்திலும் சந்தோஷத்திலும் அப்படியே நின்றுவிட்டான்.
“நான் ஃபர்ஸ்ட் டைம் உன்னைப் பார்த்து ஹாய் சொன்ன போது கூட நீ இதேபோலதான் பே-ன்னு என்னைப் பார்த்து முழிச்சிட்டு இருந்த” என்றவள் அவனிடம் கைப்பேசியில் சொன்னது அவன் செவிகளைத் துளைத்து அதன் அர்த்தம் மூளையைச் சென்றடைந்த நொடி அவன் பக்கென்று சிரித்துவிட்டான்.
அவன் கண்களில் கண்ணீரும் உதட்டில் புன்னகையும் ஒன்றாகத் தவழ்ந்தன.
6

Quote from Marli malkhan on May 7, 2024, 4:44 PMSuper ma
Super ma