You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 17

Quote

17

புயலடித்து ஓய்ந்தது

வீ பேலஸ். பிரமாண்டமான அந்த ஹோட்டலிற்குள் பல விலையுயர்ந்த கார்கள் போவதும் வருவதுமாக இருக்க ஒரு பெரிய நீளமான வெள்ளை ஆடி காரில் வந்திறங்கினாள் ஜென்னியும் அவளின் காரியதரிசி ரூபாவும்.

ஜென்னி அவள் உடலமைப்போடு இறுகிய வொயிட் ஷர்ட்டும் பிளாக் ஷார்ட் ஸ்கர்டும் முழங்கால் தெரிய அணிந்து கொண்டு ஹெ ஹீல்ஸில்  நிமிர்வாய் நடந்துவந்த தோரணையில் அங்கிருந்த எல்லோரின் பார்வையும் அவள் புறம் அனிச்சையாய் திரும்பிப் பார்த்தன.

ரூபா அந்த ஆடம்பரமான ஹோட்டல் அமைப்பைப் பார்த்து வியந்தபடி,"ஓ எம் ஜி !!! இது ராகவ் சார் ஹோட்டலா?!" என்றாள்.

"நோ ரூப்ஸ்... மிஸ்டர்.வாசன்ஸ்" என்று அலட்சியமாக உரைக்க

"என்ன ஜென்னி? அவர் ராகவ் சாரோட ஃபாதர்தானே... அப்படின்னா இது ராகவ் சார்து தானே"

"இல்ல ரூப்ஸ்... சில விஷயங்கள் ஒரே மாதிரி தெரியலாம்... ஆனா ஒண்ணு இல்ல" என்று ஜென்னி சொல்ல, ரூபா உள்ளுக்குள் குழம்பினாலும் வெளியே புரிந்தது போல் தலையாட்டிவிட்டாள். மேலே கேள்வி கேட்டால் அதற்கும் புரியாமல்தான் ஜென்னியிடம் இருந்து பதில் வரும்.

அதுவும் இல்லாமல் ஜென்னி இப்படிப் புரியாமல் பேசுவதும் இவள் புரிந்துவிட்டது போல் தலையசைப்பதும் இருவருக்கும் வழக்கமாகிப் போனது.

"மிஸ்.ஜெனித்தா வந்துட்டாங்க பாஸ்" என்று மனோ ஹோட்டலின் மேல்தளத்தில் இருந்த அலுவலக அறையில் நின்றிருந்த ராகவிடம் அறிவிக்க, அவனோ அதற்கு முன்னதாகவே அவள் வந்துவிட்டதைப் பார்த்துவிட்டான்.

அங்கிருந்த 75 இஞ்ச் டிவியின் மூலம் ஜெனித்தா லாபியில் காத்து கொண்டிருப்பதை ராகவ் இங்கிருந்தபடியே கவனித்திருந்தான். அவன் முகமெல்லாம் பலநூறு வால்ட் பல்புகளின் பிரகாசத்தில் மின்னிக் கொண்டிருந்தது.

ஜென்னி உள்ளே நுழைந்த மாத்திரத்தில் இருந்து, அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் உயரமும் கச்சிதமான உடல் அமைப்பும் தலை வணங்காத பார்வையும், நிமிர்ந்த நடையும் அவனைக் கட்டியிழுக்க சட்டென்று தன்னை அறியாமலே,

'அரேபிய குதிரை டி நீ' என்று சொல்லிவிட, அருகில் இவனையே நோட்டம் விட்டிருந்த மனோவின் காதில் அவன் சொன்னது தெள்ளத்தெளிவாய் விழுந்தது.

"கரெக்ட்தான் பாஸ்" என்று சொல்லி மனோவின் முகம் ஒளிர்ந்தது.

அந்தக் கணம்தான் தன்னிலைக்கு மீண்டு வந்தவன், மனோ இருப்பதைக் கவனிக்காமல் அப்படி ஒரு வார்த்தையை விட்டுவிட்டோமே என்று துணுக்குற்று,

"எப்போ நீ உள்ளே வந்த மனோ ?" என்று வினவ,

"என்ன பாஸ்? நீங்கதானே கம்மின்னு சொன்னீங்க" என்றதும் ராகவ் குழப்பமாய் யோசிக்க,

மனோ மீண்டும், "நான் ரொம்ப நேரமா இங்கதான் இருக்கேன்... நீங்கதான் இங்க இல்லை போல" என்க, ராகவின் முகம் கோபத்தால் சிவந்தது.

"மனோ யூ ஆர் க்ராஸ்ஸிங் யுவர் லிமிட்ஸ்" என்று சொல்லி அவன் கடுப்பானான். மனோ மிரட்சியோடு,

"பாஸ் டென்ஷனாகதீங்க... நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்" என்று அவன் சரணடைந்துவிட,

"உன் விளையாட்டெல்லாம் இருக்கட்டும்... வந்தவங்களை வெல்கம் பண்ண சொல்லி... விஐபி ரூம்ல உட்கார வைக்கச் சொன்னியா?" என்று கேட்டான்.

"அதெல்லாம் சொல்லிட்டேன் பாஸ்... இப்ப நீங்கதான் வரணும்... அவங்க அங்கே வெயிட்டிங்"

ராகவ் குரூரமான பார்வையோடு, "கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டுமே... என்ன இப்போ?!" என்றான்.

மனோவிற்கு தன் பாஸின் செய்கை ஓரளவு புரிந்தது. இங்கே அவளை வரவழைக்கச் சொன்னதே அவன் ஸ்டேட்டஸை அவளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத்தான்.

இன்னொரு பக்கம் அவளை பார்க்க விருப்பமிருந்தாலும் தன் ஈகோவை விட்டு இறங்கிப் போய்விடக் கூடாது என்ற கர்வமும் இருந்தது.

ஆனால் இதே ராகவ் ஒருநாள் அவனின் கர்வம் ஈகோ கௌரவம் என எல்லாவற்றையும் விடுத்து அவள் ஒருத்திக்காகத் தவம் கிடக்கப் போகிறான் எனக் கனவிலும் எண்ணியிருக்கமாட்டான். என்ன செய்ய? அதுதான் அவனுடைய விதி.

ராகவ் இன்னுமும் விழி எடுக்காமல் அவள் காத்திருப்பதை டிவியில் பார்த்தபடி உள்ளூர ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போது மனோவின் அலைப்பேசி அழைத்தது.

அதனை எடுத்த பேசியவன் ராகவிடம், "பாஸ்... சையத் சார் வந்துட்டாராம்... அவரும் விஐபி ரூமுக்கு போயிட்டிருக்காரு" என்றான்

ராகவின் முகம் இருளடர்ந்து போனது. தனக்கு முன்னதாக சையத் அவளிடம் அறிமுகமாவதா. கூடவே கூடாது? அவன் மனம் எச்சரிக்கை ஒலியை எழுப்ப, அவசர அவசரமாய் தன் அறையைவிட்டு வெளியேறினான்.

 மனோ அவன் எண்ணம் புரியாமல், "பாஸ் என்ன?" என்று கேட்டபடி பின்னோடு ஓடி வந்தான். அந்த குளுகுளு அறையில் நடுநாயகமாய் போட்டிருந்த ராட்சத சோபோவில் கால் மீது கால் போட்டபடி நிமிர்ந்து அமர்ந்திருந்தாள் ஜெனித்தா.

அந்த அறையில் ஒருவித மெல்லிய இசை ஒலித்துக் கொண்டிருக்க, அதனைக் கேட்டபடி அவள் கண்கள்மூடி லயித்திருந்தாள்.

அவள் பின்னோடு நின்றிருந்த ரூபா நெருங்கி, "என்ன ஜென்னி?... ராகவ் சார் உங்ககிட்ட பேசணும்னு அவ்வளவு ஆர்வமா இருந்தாரு... இப்ப என்னடான்னா இவ்வளவு நேரம் வெயிட் பண்ண வைக்கிறாரு... அதுவும் அவர் சொன்ன டைமுக்குதானே வந்திருக்கோம்" என்று காதோடு முணுமுணுத்தாள்.

அவள் கண்களை திறவாமலே, "விடு ரூப்ஸ்... இதெல்லாம் சகஜம்... நான் அவருகிட்ட சீன் போட்டு என் கெத்தை காண்பிச்சேன்... இப்போ மிஸ்டர். ராகவ் அந்த ஃப்லீமை திருப்பி எனக்கு ஓட்டுறாரு" என்றாள்.

ரூபா அதிர்ந்து அவளைப் பார்த்தாள். அப்போது அவள் அன்று வேண்டுமென்றேதான் அப்படி பேசினாளா? ஜென்னியின் செயல்களைக் கூடவே இருக்கும் ரூபாவாலும் கணிக்க முடிவதில்லை.

அருகாமையில் இருப்பவளுக்கே அவளைக் கணிப்பது சாத்தியம் இல்லை எனும் போது எதிரே இருப்பவர்களுக்கு எவ்விதம் சாத்தியம்?

இவ்விதம் ரூபா சிந்தித்து கொண்டிருக்கும் போதே சையத் எந்தவித தங்குதடையுமின்றி விஐபி அறைக்குள் நுழைந்தான். அவன் ராகவின் நெருங்கிய தோழன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாயிற்றே. அதற்கு பின் அவனை யார் தடுப்பது.

அவன் உள்ளே வருவதைப் பார்த்த ரூப்ஸ், "என்ன ஜென்னி? ராகவ் சார் வருவாருன்னு பார்த்தா இவர் யாரு?" என்று ஹிந்தியில் கேட்க,

விழிகளைத் திறந்தவள் அவனைப் பார்த்து, "இவர் டைரக்டர். சையத்... ராகவ் சாரோட க்ளோஸ் ப்ரெண்ட்... இவரோட அடுத்த படத்துக்காகத்தான் என்னை புக் பண்ண வர சொல்லி இருக்காங்க ரூப்ஸ்" என்று உரைத்திருக்கும் போதே அவன் இவர்கள் அருகில் வந்தான்.

சையத் தன் கரத்தை நீட்டியபடி, "ஹாய் ஜென்னி... ஐம் டைரக்டர். சையத்... ராகவோட க்ளோஸ் ஃப்ரெண்ட்" என்று அறிமுகப்படுத்திக்

கொள்ள, அவளும் மரியாதையோடு எழுந்து நின்று அவன் கரத்தோடு கோர்க்க ராகவ் அந்த காட்சியைப் பார்த்தபடி அறைக்குள் நுழைந்தான்.

உள்ளூர அவனுக்குள் பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

ஜென்னி சையத்தை தெரியாதது போல, "நைஸ் டூ மீட் யூ சையத்... பட் உங்களைப் பத்தி மிஸ்டர். ராகவ் எதுவும் சொல்லவே இல்லையே" என்றவள் ரூபாவின் புறம் திரும்பி,

"அப்படி எதாவது சொன்னாரா ரூப்ஸ்?" என்று வினவ வியப்புகுறி அடங்காமல் அவள் தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.

எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு தெரியாதது போல் நடிப்பானேன். ரூபா தானே குழம்பிக் கொண்டாள்.

ராகவ் தன் தவிப்பை எல்லாம் சிரமப்பட்டு மறைத்தவன் சையத் ஜென்னி அருகாமையில் வந்து நின்றபடி,

"சாரி மிஸ்.ஜென்னி... ஒரு முக்கியமான கால் பேசிட்டிருந்தேன்... அதான் லேட்டாயிடுச்சு... ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைச்சிட்டேனா?!" என்று பொய்யுரைத்தவன் சமாளிக்க,

ஜெனித்தா புன்னகை ததும்ப,"இட்ஸ் ஒகே" என்றாள்.

மனோ உள்ளூர 'பாஸோட நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கணும்' என்று எண்ணிக் கொண்டான்.

இயல்பான புன்னகையோடு எல்லோரும் அந்த சோபாவில் முக்கோண வடிவத்தில் அமர்ந்து கொள்ள,

சையத் இயல்பான பாவனையோடு இருந்தாலும் ஓவியமாய் பார்த்தவளை உயிரும் உணர்வுமாய் பார்த்து உள்ளுக்குள் பிரமித்துதான் போயிருந்தான்.

அதே நேரம் ராகவின் பார்வையும் கூர்மையாய் அவளின் அழகைக் குறி வைத்து ரசித்திருக்க, ஜென்னியோ எதையும் காட்டிக் கொள்ளாமல் அளவான புன்னகையோடும் உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடும் அமர்ந்திருந்தாள்.

அங்கிருந்த பணியாளர்கள் அவர்களுக்கு வகை வகையான உணவும் டிரிங்ஸ் போன்றவற்றையும் பரிமாறினர்.

ஜென்னி சங்கடமாய், "இஃப் யூ டோன்ட் மைன்ட்... அல்கஹாலிக் ட்ரிங்ஸை எல்லாம் எடுத்திட சொல்லுங்க.. எனக்கு அந்த ஸ்மெல் அலர்ஜி" என்றாள்.

"எஸ் எஸ்... மேடமுக்கு அலர்ஜி" என்று ரூபாவும் எடுத்துரைக்க,

"ஏன் அப்படி?" ராகவ் வியப்புக்குறியோடு அவளைக் கேட்டான்.

"அதப்படிதான்?! சில ஸ்மெல்ஸ் எல்லாம் என்னால டாலரேட் பண்ணிக்க முடியாது" என்று சொல்லவும் ராகவ் உடனடியாய் அங்கிருந்த பணியாட்களை வரவழைத்து அவ்விதமே ஹாட் ட்ரிங்ஸ் எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல சொன்னான்.

ஜென்னி உணவருந்திக் கொண்டே ராகவிடம், "உங்களோட எல்லா படமும் பிளாக் பஸ்டர் ஹிட்டாகுது... அது என்னதான் ஸீக்ரட்" என்று கேள்வி எழுப்ப அவன் உள்ளுக்குள் குளிர்ந்து போனான்.

ஆனால் அவையடக்கத்தோடு, "அதுக்கு நான் மட்டும் காரணமில்ல... இட்ஸ் அ டீம் வொர்க்.. டைரக்டர்ஸ்... ஸ்க்ரிப்ட்னு நிறைய இருக்கு... அதிலயும் என்னோட பல வெற்றிகளுக்கு சையத் என் கூட இருந்ததும் முக்கிய காரணம்" என்று நண்பனை சுட்டிக்காட்டினான்.

சையத் உடனே, "எனக்கு டைரக்டர்ங்கிற அங்கீகாரத்தைக் கொடுத்ததே ராகவ்தான்... ராகவ் மட்டும் இல்லன்னா?" என்று உரைக்க

அவள் புருவங்கள் சுருங்க, "அப்போ உங்க வளர்ச்சிக்கு மிஸ்டர்.ராகவ் தான் காரணம்... வேறு யாருக்கும் பங்கில்லையா?" என்று சையத்தைப் பார்த்துக் கேட்க ஏனோ அந்த வார்த்தை அவனைச் சுருக்கென்று குத்தியது.

அப்படிக் குத்தி காட்டவே கேட்டாளோ என்று தோன்ற ராகவ் அவளிடம்,

"என்ன சொல்ல வர்றீங்க ஜென்னி?" என்றான்.

"நத்திங்... உங்களோட ஃப்ரண்ட்ஷிப்பை . பார்க்கும் போது ஜெலஸியா இருக்கு"

இப்படி பேசிக் கொண்டே மூவரும் உணவருந்தி முடித்தனர்.

சையத் அப்போது, "கேட்கணும் நினைச்சேன்... நீங்க ஒரு மும்பை மாடல்... ஆனா எப்படி நீங்க இவ்வளவு நல்லா தமிழ் பேசுறீங்க?" என்று ஜென்னியிடம் கேட்க,

ராகவும் நிமிர்ந்தபடி, "அதானே" என்றான்.

ஜென்னி புன்னகை ததும்ப, "நான் படிச்சது வளர்ந்ததெல்லாம் ஊட்டிலதானே... அன்ட் என் ஃபாதர் விக்டரும் சென்னையிலதான் படிச்சாரு... அப்புறம் தமிழ் பேசாம இருக்க முடியுமா?!" என்று அவர்கள் சந்தேகத்தை அவள் தெளிவுபடுத்த,

"ஓ" என்று சையத் ஆச்சர்யப்பட்டுவிட்டு இதற்காகவாவது அவளைத் தன் படத்தில் நடிக்க எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என்று சிந்தித்தவன் ராகவை அது குறித்துப் பேசச் சொல்லி கண்ணசைத்தான்.

ராகவும் நண்பனின் எண்ணம் புரிந்து தலையசைத்துவிட்டு, "ஜென்னி... ஒரு விஷயம் கேட்கலாமா?! " என்றவன் ஆரம்பிக்க,

அவளும் புன்முறுவலோடு "கேளுங்க மிஸ்டர். ராகவ்" என்றாள்.

"உங்களுக்கு மூவி பண்ற ஐடியா" என்று சொல்லும் போதே,

"நாட் அட் ஆல்" என்று மறுதலித்தாள்.

முதல் பதிலே அவர்களுக்குச் சாதகமாக இல்லையே என்று இருவரும் முகம் சுருங்க ராகவ் அவளிடம், "மாடலிங் பண்ணும் போது மூவிஸ் பண்றதுல என்ன?" என்றான்.

"இல்ல மிஸ்டர்.ராகவ் மூவிஸ்... அது லாங் டைம் கமிட்மென்ட்... தேவையில்லாத ஸ்ட்ரெஸ்... எனக்கு அது சரிப்பட்டு வராது"

"கமிட்மென்ட்னு யோசிக்காதீங்க... இது ரொம்ப இன்டிரஸ்ட்டிங்கான ஸ்க்ரிப்ட்... ரொம்ப சேலஞ்சிங்கும் கூட... ஹீரோயின் சப்ஜெக்ட்... எல்லோருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு அமையாது" என்றான் சையத்.

"நீங்க இந்தளவுக்குக் கேட்கும் போது முடியாதுன்னு சொல்ல கஷ்டமாதான் இருக்கு... பட் ஸாரி... ஐ கான்ட்" என்றாள்.

ஆனால் ராகவும் சையத்தும் விடுவதாக இல்லை. ஏதேதோ சொல்லி அவளைச் சம்மதிக்க வைக்கப் போராடிக் கொண்டிருந்தனர். அவளும் அசறாமல் வேறுவேறு பாணியில் தன் சம்மதமின்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அவள் சம்மதிப்பாள் என்ற நம்பிக்கை ஒரு நிலையில் சையத்திற்கு விட்டுப் போக ராகவிற்கு அவளைச் சம்மதிக்க வைத்தே தீர வேண்டும் என்ற பிடிவாதம்.

இறுதியாய், "இத பாருங்க ஜென்னி... தமிழ் சினிமா இன்டஸ்ட்ரீல... ஏன் இந்திய சினிமாலயே எந்த நடிகைகளும் வாங்காத ஸேலரியை நான் உங்களுக்குத் தர்றேன்... என்ன சொல்றீங்க?" என்று கேட்டுவிட சையத் வியப்பின் விளம்பில் பார்வைகள் விரியப் பார்த்திருந்தான்.

அவர்களின் பேச்சுவார்த்தைகள் அடங்கி சிறிதுநேரம் மௌனம் சூழ்ந்து கொள்ள, ஜென்னி தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டாள்.

"இத பாருங்க மிஸ்டர். ராகவ்... மனி இஸ் நாட் அ மேட்டர்... என்னோட விருப்பம்... தட்ஸ் த மேட்டர்... எனக்கு விருப்பமில்லாத விஷயத்தைக் கடவுளே இறங்கி வந்து சொன்னாலும் நான் செய்ய மாட்டேன்... சாரி..." என்றவள்,

"தேங்க்ஸ் ஃபார் யுவர் லஞ்ச்" என்று சொல்லிவிட்டு பின்னாடி நின்றிருந்த தன் செகரட்ரியைப் பார்த்து, "ரூப்ஸ் லெட்ஸ் மூவ்" என்றாள்.

சையத் உடனடியாக எழுந்து,  "வெயிட் ஜென்னி... இப்படி எதையும் தெளிவா புரிஞ்சுக்காம பேசிக்கிட்டு இருக்கும் போதே எழுந்து போறது மேனர்ஸ் இல்ல. அதுவும் இல்லாம ராகவ் இப்போ என்ன தப்பா சொல்லிட்டாரு... இன்னும் கேட்டா அவர் சொன்னது உங்களை பெருமைபடுத்துற மாதிரிதான்" என்று விளக்கமளித்தான்.

"இஸ் இட்" என்று ஆச்சர்யப்பட்டவள் ராகவின் புறம் திரும்பி,

"நீங்க என்னை பெருமை படுத்த எல்லாம் வேண்டாம்... உங்க மனி ஸ்டேட்டஸ் எல்லாத்தையும் வேறு யார்கிட்டயாவது காண்பிங்க... நான் அதுக்கான ஆளில்ல" என்றாள்.

ராகவ் தன் இருக்கையில் இருந்து எழுந்திருக்காமல் அமர்ந்தபடியே நடந்தவற்றைப் பார்வையாளனாகவே பார்த்திருந்தான். அவளின் அந்த கோபம் நேரடியாய் அவனைப் பாதித்திருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ள கூடாதென்கிற இறுக்கம் அவன் முகத்தில் வெளிப்பட்டது.

புறப்படுவதற்கு முன் அவள் சையத்தை ஆழமாய் பார்த்து, "உங்க சுயவிருப்பத்துக்காக நீங்க உங்க ஃபேம்லியையே தூக்கிப் போட்டது சரி... ஆனா அதே மத்தவங்களுக்குன்னு வந்தா மேனர்ஸ் இல்லாம நடந்திருக்காங்கன்னு சொல்வீங்களா?!" என்று கேட்டவள் மேலும் அவர்களிடம் எதுவும் கேட்கவோ பேசவோ விரும்பாமல் விரைவாய் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

புயலடித்து ஓய்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவர்கள் இருவரின் மனமும். அவளின் குத்தலான வார்த்தையால், சையத்தை குற்றவுணர்வு பீடித்துக்கொண்டது.

சுயவிருப்பத்திற்காக மற்றவர்களை உதாசீனப்படுத்துவதின் வலி. அதுவும் பெற்றோரை உதாசீனம் செய்வது எந்தளவுக்கான பெரும் வலி. அவள் அழுத்தமாய் அந்த நொடி அவன் தவற்றைப் புரிய வைத்துவிட்டாள்.

அதே நேரம் சிலையென அமர்ந்திருந்த ராகவிற்கோ மீண்டும் மீண்டும் அவள் தன்னை அலட்சியப்படுத்திப் போகிறாளா என்று கோபம் எழுந்தது. இதற்கு மேலயும் அவளை தன் படத்திற்காக கமிட் செய்ய வேண்டுமா? என்று யோசித்தவனுக்கு வேறு விபரீத ஆசை உதித்திருந்தது.

ரூபாவும் ஜென்னியும் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

"சையத் சார் பத்தி உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?" என்று குழப்பத்தோடு கேட்க

"என்ன ரூப்ஸ்... இதெல்லாம் ஒரு கேள்வியா? சையத் பாப்புலர் பர்ஸனாலிட்டி... அவரோட பேமிலி பத்தி தெரிஞ்சிருக்கதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல" என்று அலட்சியமாய் உரைக்க,

ரூபாவும், "ஆமாம் இல்ல" என்று தலையசைத்தாள்.

ஆனாலும் இதையெல்லாம் அவள் எப்போது எதற்காக ஆராய்ந்து தெரிந்து கொண்டிருக்கிறாள் என்று ரூபாவிற்கு மனதில் கேள்வி எழுந்தது. அப்போது ஜென்னியின் கைப்பேசி ஒலிக்க யாரென்று பார்த்தவள்முகமலர்ச்சியோடு அழைப்பை ஏற்று, "டேவிட்" என்றாள்.

எதிர்புறத்தில் அமைதி நிலுவ, "ஹலோ டேவிட் கேட்குதா?" என்றாள்.

"மேடம் ரொம்ப பிஸியோ?" கோபமாய் வந்தது அவனின் குரல்.

"அப்படி எல்லாம் இல்லயே"

"அப்புறம் ஏன் சென்னைக்கு வந்த விஷயத்தைப் பத்தி என்கிட்ட சொல்லல"

சட்டென்று யோசித்து நிமிர்ந்தவள் குரலைத் தாழ்த்தி, "சாரி... திடீர்னு அப்படி சிட்சுவேஷன் அமைஞ்சு போச்சு" என்றாள்.

"என்ன அப்படி ஒரு சிட்சுவேஷன்?" டேவிட் அழுத்தமாகக் கேட்டான்.

"அதெல்லாம் நான் நேர்ல சொல்றேனே டேவிட்" என்றாள்.

"அப்படின்னா... நைட் டின்னருக்கு நான் வீட்டுக்கு வரவா?"

"ஷுவர்" என்றாள். அதோடு அவர்கள் உரையாடல்கள் முடிவுற அழைப்பை இருவரும் துண்டித்தனர்.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

Quote

buy priligy australia The use of prednisone can cause adverse side effects

You cannot copy content