மோனிஷா நாவல்கள்
Naan Aval Illai - 32
Quote from monisha on November 29, 2020, 8:42 PM32
வடிகால்
மகிழ் மருத்துவமனையில் ஜென்னியைப் பார்த்ததிலிருந்து ரொம்பவும் இறுக்கமான மனநிலையோடு இருந்தான். ஓரிரு வார்த்தைகள் பேசுவது கூட ஆச்சர்யம்தான். வீட்டிலும் சூழ்நிலை இயல்புத்தன்மைக்கு மாறவில்லை.
வேந்தனோ எங்கே சென்றான் என்றே தெரியவில்லை. ஆனால் இப்போது வேந்தனைக் குறித்து யாரும் கவலைப்படத் தயாராக இல்லை. ஞானசேகரன் உடல்நிலை தேற வேண்டுமென்பதே எல்லோரின் கவலையாய் இருந்தது. அந்தச் சூழ்நிலையில் மாயாவும் மகிழும் அங்கயே தங்க வேண்டியதாய் போயிற்று.
எழிலால் எத்தனை நாள் கணவனை விட்டுப் பிரிந்து தாய்வீட்டில் இருக்கமுடியும். அவள் தமையனின் திருமணம் என்று சொல்லி வீட்டிலிருந்து வந்தே பத்து நாட்கள் கடந்து இருக்கும். ஆதலால் அவள் புறப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்க, மாயா வள்ளியம்மைக்கு துணையாய் மகிழின் தந்தையை கவனித்துக் கொண்டாள்.
அதே நேரம் மகிழ் தன் வீட்டிலேயே இருந்தாலும் அவன் வேற்றொருவன் போலவே நடந்து கொண்டான். அவன் தன் அழுகையோ கோபமோ சோகமோ எதையும் வெளிப்படையாக யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனாலும் அந்த உணர்வுகள் எல்லாம் அவனை மூழ்கடித்துக் கொண்டிருப்பதை மாயா நன்கு அறிவாள்.
அவன் நிலையைப் புரிந்தாலும் அவளால் என்னதான் செய்ய முடியும். அவனிடம் கணவனென்ற முழு உரிமை இருந்தாலாவது எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம். ஆனால் அத்தகைய உரிமையை எடுத்துக் கொள்ள அவளுக்கும் இன்னும் தயக்கமாகவே இருந்தது.
இந்தக் கோபத்தில்தான் மாயா ஜென்னியைப் பார்க்க புறப்பட்டுவந்தது. உள்ளுக்குள் இருந்த வெறுப்பை எல்லாம் மொத்தமாகவே அவள் காண்பித்த அதே நேரம் ஜென்னியின் வார்த்தைகள் அவளை ரொம்பவும் காயப்படுத்தியிருந்தது.
தன் தோழி மரணித்துவிட்டாள் என்ற வலியை விட அவள் தன்னை உதாசீனப்படுத்திவிட்டாள் என்ற வலி ரொம்பவும் பெரியது. அதே நேரம் மகிழுக்கு நடந்தவை தெரிந்தால் அவனால் தாங்க முடியாதே என்று தனக்குள்ளேயே எல்லாவற்றையும் புதைத்துக் கொண்டாள்.
அந்தச் சமயம் மாயாவின் பெற்றோர் மகிழின் தந்தையின் உடல்நிலையறிந்து பார்க்க வந்திருந்தனர். மகிழும் அவர்களோடுதான் இருந்தான்.
எல்லோரும் இயல்பாக பேசிக் கொண்டிருக்க, மாயாவின் முகம் மட்டும் வாட்டமுற்று, அவ்வப்போது அவள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிடுவதை, மகிழின் பார்வை கவனித்துக் கொண்டிருந்தது.
மாதவனும் யாழ்முகையும் அவர்களிடம் விடைபெற்று கொண்டு புறப்பட்ட பின்னர் அறைக்குள் வந்த மாயாவின் பின்னோடு நுழைந்தான் மகிழ்.
"மாயா" என்று அவள்அழைக்க,
"ஹ்ம்ம்" என்றாள் திரும்பாமலே படுக்கையைச் சரி செய்து கொண்டபடி!
"ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க?... அம்மா அப்பாகிட்ட கூட சரியா பேசக் காணோமே... ஏதோ யோசனையில இருந்த மாதிரி இருந்த என்னாச்சு?"
இதைக் கேட்டதும் அவன் புறம் கோபமாய் திரும்பியவள், "நீங்களும் கூடதான் டல்லாவே இருக்கீங்க... நான் ஏதாவது உங்களைக் கேட்கிறேனா? நீங்க மட்டும் ஏன் என்னைக் கேட்குறீங்க?" வார்த்தைகளை அவன் மீது வாளாய் வீசினாள். அவளிடமிருந்து வந்தது அவன் கேட்ட கேள்விக்கான பதில் அல்ல. அவள் மனதில் ஆழப் புதைத்து வைத்திருந்த ஆதங்கம்.
அவன் யோசனைக்குறியோடு, "நீ எங்கயோ வெளியப் போயிட்டு வந்ததிலிருந்துதான் இப்படி அப்சட்டா இருக்க மாயா... எங்க போன?!" என்று அவள் நிலையைப் புரிந்து கொள்ள கேட்டவனை கோபமாய் முறைத்தவள்,
"எங்கயோ போனேன்... அது எதுக்கு உங்களுக்கு?" என்றாள்.
அவன் தன் பொறுமையை இழக்கக் கூடாதென்ற தீர்க்கத்தோடு, "உனக்கு என்னதான் ஆச்சு... ஏன் இப்படி யாரோ மாதிரி பேசுற?" என்று வினவினான்.
"ஆமாம்... நான் யாரோ மாதிரிதான் பேசுறேன்... ஏன்னா நான் யாரோதானே உங்களுக்கு?" அழுத்தமாய் அவள் கேட்கவும்,
"அப்படி எல்லாம் இல்ல மாயா" என்று மறுத்தான்.
"அப்படின்னா சொல்லுங்க மகிழ்... நான் யாரு உங்களுக்கு?"
இந்த கேள்விக்கு சற்று தடுமாறி, "நீ... நீ என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் மாயா" என்க,
அவள் சீற்றமடைந்து, "நான்ஸென்ஸ்... நான் உங்க வொய்ஃப் மகிழ். அது எப்போதான் உங்க மரமண்டைக்கு உறைக்கப் போகுது" என்று அவள் கேட்க,
அவன் திகைப்போடு நின்றுவிட்டான். அவளே மேலும் உணர்ச்சிவசத்தோடு,
"நம்ம கல்யாண உறவு பொய்யா ஆரம்பிச்சிருக்கலாம்... ஆனா நான் இப்போ அதை உண்மையாவே விரும்புறேன்... நான் உங்களை ரொம்ப காதலிக்கிறேன் மகிழ்" என்றாள்.
அவன் ஆழமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு பதில் பேசாமல் யோசனைக்குறியோடு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அந்த அறையில் சூழ்ந்த நிசப்தத்தை மாயாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
"இன்னும் உங்களால சாக்ஷியை மறக்க முடியல இல்ல மகிழ்" என்று அவள் வேதனையோடு வினவ,
அவன் கோபமாய் நிமிர்ந்து, "அவளைப் பத்தி பேசாதே மாயா" என்றான்.
"நீங்க அவளைப் பத்தியே சதா சர்வகாலமும் நினைச்சிட்டிருக்கலாம்... ஆனா நான் அவளைப் பத்தி பேச கூடாதோ?!" மாயாவும் அதே அளவுக்கான கோபத்தோடு கேட்டாள்.
"அவளைப் பத்தி நினைக்க என்ன இருக்கு? ஒரு மண்ணும் இல்ல... அவளை நான் அடியோடு வெறுக்கிறேன்" என்றவனின் வார்த்தையிலும் முகத்திலும் அவளின் மீதான வெறுப்பு ஆழமாய் வேரூன்றியிருந்தது.
"ஹ்ம்ம்... நீங்க காதலிச்சாலும் அவதான்... வெறுத்தாலும் அவதானா?மொத்தத்தில உங்க நினைப்பு ஏதோ ஒரு விதத்தில அவள தான் சுத்திட்டு இருக்கு இல்ல?!" என்று அவள் கேட்க
"இல்ல... அவ என் நினைப்பில இல்ல... நான் அவளை நினைக்கவும் மாட்டேன்" தீர்க்கமாகச் சொன்னவனை அலட்சியமாய் பார்த்து,
"அது உங்களால முடியாது மகிழ்?... அவளை நினைக்காம ஒரு நிமிஷம் என்ன? ஒரு செகண்ட் கூட இருக்க முடியாது... அந்தளவுக்கு நீங்க சாக்ஷி மேல பைத்தியமா இருக்கீங்க" என்று சொல்லிவிட்டு அவள் திரும்பிக் கொள்ள,
அவள் சொன்னது உண்மைதானே என்று அவன் மனமே ஏற்றுக் கொண்டு அமைதியானது. வெறுப்பதாகச் சொன்னாலும் கூட அவன் மனம் ஆழமாய் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறது. நொடிக்கு நொடி அவள் நினைவு அவனைத் தவிப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தது.
அவளை அத்தனை சீக்கிரத்தில் அவனால் மறந்துவிட முடியும் என்று அவனுக்கேத் தோன்றவில்லை. அதே நேரம் அவளை மறந்தே தீர வேண்டுமென்று முரண்டும் பிடித்தது.
போதாக் குறைக்கு அவன் அலுவலகத்தில் உள்ள எல்லோரும் ஜெனித்தாவையும் டேவிடையும் சேர்த்து வைத்துப் பேச, அது பொய்யோ உண்மையோ? அவனால் அதனை தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை.
சட்டென்று தன்னிலை மறந்து, "நீ சொல்றதுதான் சரி... நான் அவ மேலே பையத்தியமாதான் இருக்கேன்... அவ என்னை பைத்தியமாக்கிட்டுப் போயிட்டா... அவளை என்னால மறக்க முடியும்னு தோணல" என்று உணர்ச்சிவசப்பட்டு தன் கட்டுப்பாடை மீறி பேசிக் கொண்டிருந்தவனிடம்,
"ஆனா அவதான் உங்களை மறந்துட்டாளே மகிழ்... அதுவும் இல்லாம அவ சாக்ஷி இல்ல, இப்ப ஜெனித்தாவாம்... டேவிட் அவளோட
ஃப்ரெண்டாம்... உண்மையை சொல்லணும்னா உங்க கண்ணீருக்கும்
காதலுக்கும் அவ கொஞ்சம் கூட தகுதியானவளே இல்ல" என்றதும் அவன் முகம் மாறுதலடைய, மாயா தான் சொல்லக் கூடாதென்று நினைத்ததை உளறிவிட்டோமே என உதட்டை கடித்துக் கொண்டாள்.
அவளை நெருங்கியவன், "நீ சாக்ஷியை போய் மீட் பண்ணியா?!" என்று கேட்க அவள் பதிலின்றி நின்றாள்.
"மாயா... என்னை டென்ஷன் படுத்தாம உண்மையைச் சொல்லு" என்க, அவன் விழி கோபத்தில் சிவந்தது. அவள் அச்சத்தோடு நடந்தவற்றை விவரிக்க, அவன் சிலையாய் சமைந்துவிட்டான்.
அவன் முகம் எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் வெறுமையாய் இருக்க, "மகிழ் ப்ளீஸ்... உங்க உணர்வுகளை மதிக்காதவளுக்காக நீங்க இப்படி உடைஞ்சு போகக் கூடாது... ஜஸ்ட் த்ரோ அவுட் ஹெர் ப்ஃரம் யுவர் லைஃப்" என்று சீற்றமாய் உரைத்தாள்.
அவன் உடனே அந்த அறையை திறந்து கொண்டு வெளியேற, அவள் புரியாமல் பின்னோடு சென்றவள் அதிர்ச்சியானாள்.
"மகிழ் என்ன பண்றீங்க ?" என்று கேட்டு அவன் கையில் வைத்திருந்த மாத்திரை பாட்டிலைப் பறித்தாள். அது தூக்க மாத்திரை. அவனின் தந்தையினுடையது.
"அதை கொடு மாயா... ப்ளீஸ் " என்றவனைத் தவிப்போடு பார்த்தவள்,
"பைத்தியம் மாதிரி நடந்துக்குறீங்க மகிழ்"
"ஐ டோன்ட் வான்ட் டூ லிவ்" என்க,
"ஏன் இப்படி பேசுறீங்க ?... சாக்ஷி இன்னைக்கு நேத்தா உங்க வாழ்க்கையில இல்ல... அவ மூணு வருஷத்துக்கு முன்னாடியே உங்க வாழ்க்கையை விட்டுப் போயிட்டா"
"ஆமாம் போயிட்டா... அவ போனாலும் நான் அவளை மறக்கணும்னு நினைக்கல... ஆனா இன்னைக்கு நினைக்கிறேன்... அவளை மறந்தாகணும்னு ... அதுக்கு இதுதான் ஒரே வழி... என் நினைப்பிலிருந்து அவளை நான் மொத்தமா அழிக்கணும்" என்று உணர்ச்சிவசப்பட்டு அவன்
குரலை உயர்த்த, அப்போது வள்ளியம்மை அவர்களின் சத்தம் கேட்டு தன் அறை விட்டு வெளியே வந்தார்.
"என்னாச்சு மகிழ்?" என்று அவர் கேட்கும் போதே மாயா மாத்திரை பாட்டிலை பின்னோடு ஒளித்து வைத்தாள்.
அவன், "ஒண்ணுமில்லம்மா நீங்க போய் படுங்க" என்றதும் அவர் இருவரையும் ஆழமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அகன்றுவிட, மாயா அந்த சந்தர்ப்பத்தில் அதனை தன் கரத்தோடு எடுத்துக் கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தாள்.
அவள் பின்னோடு வந்து, "அதை கொடு... ஜஸ்ட் ஒன் டேப்ளட்... அவ்வளவுதான்... அவளை மறந்து கொஞ்ச நேரமாவது நான் தூங்கணும்" என்று கெஞ்சலாய் அவன் கேட்க அவள் அவனை நம்பாமல்,
"தரமாட்டேன்" என்று தீர்க்கமாய் சொல்லி பின்னோடு நகர்ந்தாள். அவன் கோபமாய் முறைத்து,
"நான் ரிலேக்ஸ்டா கொஞ்ச நேரம் தூங்கணும்னு நினைக்கிறேன்... அது உனக்கு பொறுக்கலயா?" என்று கேட்க
"நீங்க என்ன சொன்னாலும் முடியாது" என்று அவள் பிடிவாதமாய் மறுக்க, அவன் வலுக்கட்டாயமாய் வாங்க முற்பட அந்தப் பாட்டில் அவர்களின் போராட்டத்திற்கு இடையில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது.
அவன் உச்சபட்ச கோபத்தோடு, "ஏன் மாயா இப்படி பண்ண?" என்று கேட்டவனிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவள் விழித்திருந்தாள்.
அவளையே அவன் கூர்மையாய் பார்த்திருக்க அவள் அவன் பார்வையின் தாக்கத்தில் மிரண்டவள், "மகிழ் ஸாரி... உங்க நல்லதுக்காகதான்" என்றவள் தவிப்புற,
"என் நல்லதுக்காகவா? அவ்வளவு அக்கறை இருக்கவ... என் பிரச்சனைக்கு இப்போ ஒரு தீர்வு சொல்லு" என்றான்.
"என்ன தீர்வு சொல்லணும்?"
"நான் இப்போ ரிலேக்ஸாகணும்" என்று கேட்க, அவள் நகத்தைக் கடித்தபடி தரையில் நொறுங்கிக் கிடந்த பாட்டிலயே வெறித்திருந்தாள்.
அவன் அந்த கணம் அவளை மட்டுமே பார்த்திருந்தான். அவள் விழிகளோ யோசனையோடு அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் அலைப்பாய்ந்தன.
என்றுமில்லாமல் இன்று அவளின் முகம் அவனைச் சலனப்படுத்தியது. அவனுக்கு சாக்ஷியின் மீது கொண்ட காதல் தாபத்தைத் தணிப்பதற்கான வடிகால் தேவைப்பட்டது.
அவனுக்கு வேறுவழியும் புலப்படவில்லை. மாயாவை தன் கரத்தில் ஏந்திக் கொண்டான்.
"மகிழ்" என்று அவள் அதிர்ச்சியுற,
"என் பிரச்சனைக்கான தீர்வு நான் எங்ககேயோ தேடிட்டு இருந்தேன்... ஆனா அது நீதான் மாயா" என்றவன் அவளைப் படுக்கையில் கிடத்திவிட, அவனின் அந்த அவசரகதியான தொடுகை அவளை வெகுவாக அச்சப்படுத்தியது.
"மகிழ்... என்ன நீங்க திடீர்னு இப்படியெல்லாம்" என்று கேட்கவும்,
"நான் ஒண்ணும் மகாத்மா இல்ல... நானும் மனுஷன்தானே... எனக்கும் உணர்ச்சிகள் எல்லாம் இருக்கு" என்றவனின் கண்களில் தெரிந்தது காதலோ காமமோ இல்லை.
சாக்ஷியின் மீதான அழுத்தமான கோபம். அவள் மீது தான் கொண்ட தூய்மையான காதலைக் கலங்கப்படுத்திவிட வேண்டுமென்ற எண்ணம். அவன் அந்த நொடி மாயாவின் இதழ்களை தன் இதழ்களோடு பிணைத்துக் கொண்டான். இருவருமே அனுபவித்திராத அந்தப் புதுமையான உணர்வில் மூழ்கித் திளைக்க, அந்த முத்தம் அவனின் காதலுக்காக ஏங்கிக் கொண்டிருந்தவளுக்கு இன்பத்தை நல்கியிருந்தது.
அதே சமயம், அவன் உள்ளூர தேக்கி வைத்திருந்த உணர்வுகளை எல்லாம் அவளிடம் திணிக்க, மாயா அவனின் உணர்வுகளோடு அவளின் உணர்வுகளை சமன்படுத்த முடியாமல் திண்டாடினாள்.
அவன் தொடுகையில் காதல் இல்லையென்பதை அவள் உணர்ந்தாலும் அவனுக்காகவே ஏங்கியிருந்த பெண்ணவளுக்கு அந்தக் கணம் இன்பகரமாகவே இருந்தது. அவன் தனக்கே உரியவனாகிவிட்டான் என்ற பெருமிதமும் கூட. அவளுடனான அந்தக் கூடல் கொதிகலனாய் இருந்த மகிழின் மனதைத் தணித்திருந்தது.
32

Quote from Muthu pandi on June 30, 2021, 10:59 AMNice
Nice