மோனிஷா நாவல்கள்
Naan Aval Illai - 35
Quote from monisha on November 29, 2020, 8:45 PM35
நட்பின் முறிவு
சையத் தன்னிலை மறந்தவாறு கனத்த மனதோடு வீட்டிற்குள் நுழைந்தான். நுழைந்த மாத்திரத்தில் அவன் "மது" என்று ஓங்காரமாய்
அழைக்க, அவள் அவசரமாய் ஓடிவந்து அவன் முன் நின்றாள்.
அவன் தன் எண்ணங்களை வெளி காட்டிக் கொள்ளாமல் தலையைக் கோதியபடி , "நீ உடனே இந்த வீட்டோட டாகுமென்ட்ஸை எடுத்து வை" என்றான்.
அவன் சொல்வதற்கு செவி சாய்க்காமல் அவன் முகம் வாட்டமுற்றிருப்பதைக் கூர்ந்து கவனித்தவள் பதட்டமாக, "சார் என்னாச்சு ?" என்று வினவ,
"ஒண்ணுமில்ல... நீ போய் டாக்குமென்ட்ஸை எடுத்து வை" என்றான்.
அவள் குழப்பமாக, "எதுக்கு சார் ?" என்றவளை கோபமாய் முறைத்து,
"ப்ச் சொன்னதை செய் மது" என்று குரலை உயர்த்தி அதிகாரமாய் உரைக்க, அவள் அச்சத்தோடு அவனை ஏறிட்டவள் மேலே பேசி அவன் கோபத்தை அதிகரிக்காமல் அங்கிருந்து விலகிச் சென்றாள்.
அவன் வீட்டிற்குள் நுழையும் போதே அவனைக் குற்றவுணர்வு குத்தியது. இந்த வீடு ராகவ் பரிசளித்தது. இனி இங்கு இருக்க அவன் மனம் ஏற்காது.
அதே நேரம் இருளடர்ந்து போன அவன் முகம் காட்டிய உணர்வுகள் சாஜிம்மாவையும் அஃப்சானாவையும் கவலைக்குள்ளாக்க, அவனருகில் வந்தவர்கள் என்னவோ ஏதோ என்று பதட்டத்தோடு விசாரித்தனர்.
ஆனால் அவன் யாருக்கும் பதில் சொல்லும் நிலையில் இல்லை. அவன் உணர்வுகள் எல்லாம் தன்னோடு புதைத்துக் கொண்டான்.
உயிரற்ற தேகம் போலவே நடந்துவந்தவன் அவர்களைக் கவனிக்காமலே தன் அறைக்குள் புகுந்து கதவை தாழிட்டான். காதல் மட்டுமல்ல. நட்பும் ஆழமானதுதானே! அது காயப்படும் போதும் உள்ளம் உடைந்து போகவே செய்யும்.
மனதளவில் உடைந்து நொறுங்கிப் போய்தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். ராகவ் அவனையும் அவன் நட்பையும் சேர்த்து உடைத்து நொறுக்கிவிட்டான். ராகவின் மீது அவன் கொண்டது நட்புணர்வு மட்டுமல்ல. நன்றியுணர்வு கலந்த அதீத மரியாதை.
அவன் வாழ்வில் ரொம்பவும் முக்கியத்துவம் வாய்ந்தவனாகக் கருதப்பட்டவன். அவன் இலட்சியம் வெற்றி பெற கை கொடுத்து உதவியவன். கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்பட்டவன்.
இன்று விதியின் வசத்தால் தான் அவன் கழுத்தையே நெறிக்கும் சூழ்நிலை உருவாகும் என்று அவன் கற்பனை கூடச் செய்ததில்லை. இந்த எண்ணங்களோடு தன் படுக்கையில் துவண்டு சரிந்தவன் முகத்தை மறைத்தபடி முழுங்கையை தலை மீது வைத்துப் படுத்திருக்க, அவன் எண்ண அலைகள் நிதானமற்று பொங்கிக் கொண்டிருந்தது.
ஜென்னி தன் படத்தில் கதைநாயகியாக நடிக்க ஒத்துக் கொண்ட சந்தோஷமான தகவலை தன் நண்பனிடம் நேரிலேயே பார்த்து சொல்ல வீட்டிற்குச் சென்றான். வாயிலைத் தாண்டி வந்ததும் வாசன் வரவேற்பு அறையில் அமர்ந்திருப்பதை சையத் பார்க்க நேர்ந்தது.
அவரும் அவன் நுழைவதைக் கவனித்துவிட்டு, "வா சையத்... எப்படி இருக்க?" என்று கம்பீரமாய் அமர்ந்தபடி கேட்க,
"நல்லா இருக்கேன் சார்" என்று பவ்வியமாக நின்றபடி பதிலளித்தான்.
அவர் முன்னாடி சையத் அமரக் கூட மாட்டான் அத்தனை பயம் கலந்த மரியாதை. அவரும் யாரையும் சரிக்கு நிகராய் வைத்துப் பார்க்கும் குணம் கொண்டவர் அல்ல.
எல்லோருமே எட்டி நின்றே அவரிடம் பேச வேண்டும். அதுவும் ராகவ் தன் தகுதிக்கு குறைவான சையத்திடம் நட்பு பாராட்டுவதில் அவருக்குத் துளியும் விருப்பமும் இல்லை.
அதை மகனிடமும் தெரிவித்திருக்க, அவனோ சையத்தின் நட்பை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. அவனுக்கு சையத்தின் மீது எதனாலோ ஒரு பிடிப்பு ஏற்பட்டிருக்க, அது மெல்ல அழகான நட்பாகவும் மலர்ந்திருந்தது.
நாளடைவில் வாசனும் அவர்களின் நட்பைப் பார்த்து வியந்தவர், அவர்களைப் பிரிக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். சையத்தின் நடவடிக்கை திறமையெல்லாம் பார்த்து அவருக்கும் அவன் மீது மரியாதை ஏற்பட்டிருந்தது.
அவர் அதிசயமாய் மனம் வந்து, "உட்காரு சையத்" என்க,
"இருக்கட்டும் சார்... நான் ராகவை பார்த்துட்டு வந்திடுறேன்" என்றவனை யோசனையாய் பார்த்தவர்,"ஹ்ம்ம்.. மேலே ரூம்லதான் இருக்கான்" என்றார்.
"ஹ்ம்ம்" என்று தலையசைத்து செல்லப் பார்த்தவனை, "சையத்" என்று அழைக்க அவன் திரும்பி அவர் புறம் வந்து, "சொல்லுங்க சார்" என்றான்.
வாசன் பெருமூச்செறிந்து, "என்னன்னு தெரியல சையத்... ராகவோட போக்கே கொஞ்ச நாளா சரியில்லை... கமிட்மென்ட் பண்ணபடி எதுவும் செய்ய மாட்டேங்குறான்னு அரசல் புரசலா ஏதேதோ பேசுறது காதில விழுது... அவன்கிட்ட நீ கொஞ்சம் என்னன்னு விசாரி" என்க,
அவன் அதிர்ச்சியான பாவனையில் பார்த்துவிட்டு, "சரிங்க சார்" என்று சொன்னவன் மாடியேறி அவன் அறைக்கு சென்றான்.
யாரும் அவன் அறைக்கு நேராகச் செல்ல மாட்டார்கள். மனோ அதற்குப் பிறகாய் சையத்திற்குதான் அந்த உரிமை. அவன் பெற்றோர்கள் வாசன் மற்றும் ஷைலஜா கூட அந்த விதி மீறல்களை செய்ய மாட்டார்கள். ஷைலஜாவிற்கு மகனை கவனிக்கவெல்லாம் நேரம் கிட்டாது. மாதர் சங்கங்களை கவனிப்பதில்தான் நேரம் அதிகம். அத்தனை பொறுப்பான தாய்.
சையத் ராகவின் அறைக் கதவை தட்ட, மனோ உள்ளிருந்து யாரென்று கேட்டபடி திறந்தவன், அவனைப் பார்த்ததும் விலகி நின்று உள்ளே வர அனுமதித்தான்.
ராகவ் தன் அறையில் பின்புறம் பால்கனியில் கால் மீது கால் போட்டபடி எங்கயோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவன் முன்னே விஸ்கி பாட்டிலோ அவனுக்காகவே காத்திருந்தது போல் காட்சியளித்தது.
அவன் சிந்தனை ஓட்டம் எதைக் குறித்தது என்பதை அறிய மனோவின் காதோரம், "ராகவ் ஏன் எப்படி இருக்காரு? ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்டான்.
சொல்லிவிட வேண்டும் என்று அவன் உதடுகள் துடித்தாலும் அந்த எண்ணத்தை தனக்குள்ளேயே விழுங்கியவன், "அப்படி எதுவும் இல்லையே சையத் சார்" என்று பொய்யாக மறுத்தான்.
பின்னர் அவன் நண்பர்களுக்கு இடையூறாக இல்லாமல் அறையை விட்டு வெளியேற, சையத் யோசனைகுறியோடு ராகவை நெருங்கினான்.
ராகவின் மனக்கவலையெல்லாம் அவன் அலைப்பேசியில் பகிரப்பட்ட புகைப்படங்கள். ஜென்னி டேவிடின் பழக்கம் குறித்து அவன் விசாரிக்கச் சொன்னதின் விளைவு.
கடற்கரையில் இருவரும் நிற்பது நடப்பது பேசுவது கை கோர்த்திருப்பது வரை அவன் அலைப்பேசியில் வந்தடைய அவனின் மனமோ அவற்றை எல்லாம் பார்த்து தவறான கண்ணோட்டத்தில் எண்ணிக் கொண்டுவிட்டது.
நல்லவனின் பார்வைக்கு எல்லாம் நல்லதாகவே தெரியும். தீயவனின் பார்வைக்கு எல்லாமே தீயதாகவே தெரியும். ஆதலாலேயே அவர்களின் தூய நட்பினை அவனால் அடையாளம் காண முடியவில்லை. தவறாக மட்டுமே சிந்தித்தவனுக்கு அவர்கள் சேர்ந்திருக்கும் புகைப்படமெல்லாம் பொறாமைத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்தது. அதோடு அவன் பொறுமையையும் தீயிட்டுக் கொளுத்தியது.
அந்த நெருப்பிற்கு எண்ணை வார்க்கப் போகிறோம் என்ற தெரிரயாமலே சையத், "ராகவ்" என்று அழைக்கலானான்.
அந்தக் குரல் அவன் காதில் விழுந்ததும் அவன் சிந்தனையிலிருந்து மீண்டு வர எழுந்து நண்பனை கட்டிக் கொண்டு, "என் ஞாபகமெல்லாம் கூட உனக்கு இருக்கா?" என்று குத்தலாய் கேட்க, சையத்திற்கு சுருக்கென்றது.
"என்ன ராகவ் நீங்க? இப்படி கேட்டீங்க?"
உடனடியாக அவன் தன் பேச்சை மாற்றி "ஜஸ்ட் பாஃர் பஃன்" என்று செல்லமாய் அவன் தோளில் குத்தினான்.
சையத் மனநிம்மதியடைய, ராகவ் தன் நண்பனை எதிரே இருந்த இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு தானும் அமர்ந்தான்.
சையத் தான் சொல்ல வந்ததை ஆரம்பிக்கும் போதே ராகவ் புன்னகைத்து, "கம்மான் சையத்...லெட்ஸ் ஹேவ் அ டிரிங்" என்றபடி மது பாட்டிலை திறக்க, சையத் அவசரமாக மறுப்பு தெரிவித்தான்.
"வீட்டில அம்மாவும் தங்கச்சியும் இருக்காங்க... ட்ரிங்ஸ் சாப்பிட்டுட்டு போனா அவங்களை யார் சமாளிக்கிறது?!" என்க,
ராகவ் ஆங்காரமாய் சிரித்து, "சரியான கவர்ட் சையத் நீ" என்றான்.
எப்போதாவது சையத்திற்கு குடிக்கும் பழக்கம் உண்டுதான். ஆனால் அதுவும் ராகவின் பழக்கத்தினால் வந்த வினை. சையத் அப்போது குடிக்க மறுத்ததால் தானும் குடிக்காமல் மீண்டும் பாட்டிலை மூட, சையத் தான் வந்த விஷயத்தை விவரித்தான்.
"உங்களுக்கு சர்பிரைஸ் நியூஸ் ஒண்ணு கொண்டு வந்திருக்கேன்" என்றதும் அவன், "என்ன?" என்று கேட்டு புருவங்கள் நெறித்துப் பார்த்தான்.
அவன் ஆனந்தத்தோடு, "ஜென்னி நம்ம படத்தில ஆக்ட பண்ண ஒத்துக்கிட்டாங்க ராகவ்" என்று சொல்லி குதூகலித்தான்.
ராகவிற்கு ஏற்பட்டது அதிர்ச்சியின் உச்சக் கட்டம். அன்று அவன் அவளிடம் தவறாக நடந்து கொண்டதற்கு, அவள் தன்னைக் கண்டு பயந்திருக்க வேண்டும் அல்லது கோபம் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் அவள் இரண்டையும் செய்யாமல் படத்தில் நடிக்கச் சம்மதிப்பானேன். அவள் தன்னை வெறுப்பேற்றிப் பார்க்கவே மீண்டும் இவ்விதம் செய்கிறாளோ? அவளைப் பற்றி யோசிக்க யோசிக்க அவன் மூளை சூடேறியது.
இவ்வாறாக ராகவ் சிந்தித்திருக்க, சையத்தோ ஜென்னி வீட்டிற்கு வந்த கதையெல்லாம் சொல்லி இன்புற்றுக் கொண்டிருந்தான். அவன் மனம் அவற்றை எல்லாம் கேட்டு இன்னும் இன்னும் அதிகமாய் பற்றி எரிந்து கொண்டிருக்க, அதை கவனியாத சையத் மேலும் நடந்தவற்றை விவரித்தான்.
"ஜென்னி போகும் போது உங்ககிட்ட மறக்காம படத்தில நடிக்க ஒத்துக்கிட்ட விஷயத்தை சொல்ல சொன்னாங்க" என்று இயல்பாகவே அவன் கூற,
ராகவ் தாங்க முடியாமல் எரிமலையாய் வெடித்து எழுந்தான்.
"ஸ்டாப் இட்" என்று சொல்லி சீற, உண்மையிலேயே சையத்திற்கு அவன் கோபத்திற்கான காரணம் புரியவில்லை.
"ராகவ்" படபடத்த குரலில் அவன் அழைக்க, ராகவின் முகம் சிறுத்துப் போயிருந்தது. அவன் தன் சீற்றம் அடங்காமல்,
"அவ என்னைப் பத்தி என்னதான் நினைச்சிட்டிருக்கா? நான் யாருன்னு தெரியாம விளையாடுறாளா?!" என்று அவன் எரிச்சலோடு பேசிக் கொண்டிருக்க,
சையத் புரியாமல், "இப்ப என்ன நடந்துச்சுன்னு இவ்வளவு கோபம்? எனக்கு புரியல" என்றவன் வினவ,
"ஹ்ம்... உனக்கு புரியாது... அவதான் உன்னை அந்தளவுக்கு மயக்கி வைச்சிருக்காளே!" என்று எகத்தாளமாய் கேட்டு எள்ளலாய் புன்னகையித்தான்.
"ஸ்டாப் இட் ராகவ்... நீங்க பேசுற விதமே தப்பா இருக்கு... அதுவும் மரியாதையில்லாம அவ இவன்னு சொன்னதில்லாம தப்பு தப்பாவே பேசுறீங்க" என்று கோபக்கனலாய் அவனும் வார்த்தைகளை உதிர்த்தபடி எழுந்து கொண்டான்.
ராகவ் ஆச்சர்யமாகப் பார்த்தபடி , "என்கிட்ட நீ கோபப்பட்டு இப்பதான் நான் முதல் தடவை பார்க்கிறேன் சையத்" என்று அழுத்தமாய் உரைத்தான்.
சையத் அடுத்த நொடியே தன் குரலைத் தாழ்த்தி, "ஸாரி... நீங்க அப்படி பேசுனதும் என்னை அறியாம" என்று இறங்கி வர,
ராகவ் முகம் மலர, "இட்ஸ் ஒகே... நீ என்னதான் இருந்தாலும் என் க்ளோஸ் ஃப்ரெண்ட்" என்றபடியே எழுந்து அவன் தோள் மீது கைப் போட்டான்.
சையத்திற்கு ஏனோ அதற்கு மேல் அவனிடம் பேச மனம் ஒப்பவில்லை. புறப்பட்டு விடலாம் என்று எண்ணும் போது ராகவ் அவனிடம், "ஜென்னிதான் உன் படத்தோட ஹீரோயினா பண்ணனும்னு நீ ரொம்ப ஆசைப்படுற இல்ல சையத்" என்று நிதானித்துக் கேட்டான்.
"ஆமா... அவங்க பண்ணாதான் நல்லா இருக்கும்... அந்த கேரக்டர் உயிரோட்டமா இருக்கும்" என்க,
"சூப்பர்... பண்ணட்டுமே... என் நண்பனோட படம் நல்லா வந்தா எனக்குதான் அதுல முதல் சந்தோஷம்" என்றவனின் இதழ்களில் தவழ்ந்த புன்னகையில் வஞ்சம் இழையோடியது. அதை சையத் அப்போது கவனிக்கவில்லை.
ராகவ் மேலும், "உன் கனவு படத்துக்காக நான் எவ்வளவு வேணா செலவு பண்ணத் தயாரா இருக்கேன்... நீ தைரியமா அந்தப் படத்தை ஸ்டார்ட் பண்ணு... ஆனா" என்று நிறுத்தியவனை ஆழ்ந்து பார்த்து,
"ஆனா என்ன ராகவ்?" என்று ஆர்வமாய் கேட்கவும்,
"ஒண்ணுமில்லை... ஜெனித்தாவை நீ என்னோட ஈசிஆர் கெஸ்ட் ஹவுசுக்கு கூட்டிட்டு வரணும்" என்று அவன் தன் வக்கிரத்தையும் வன்மத்தையும் கொட்ட ஆரம்பிக்க, அவன் சொன்னதைக் கேட்டு சையத்தின் இரத்தமெல்லாம் உறைந்து போனது.
ராகவ் தன்னை ரொம்பவும் வசீகரிக்கும் பெண்களை அங்கே வரவழைப்பதும், அவனின் தோற்றத்திற்கும் பணத்திற்கும் மயங்கி அங்கே அவர்கள் வருவதும் இவன் தன் இச்சையை தீர்த்துக் கொள்வதும் சகஜம்தான்.
ராகவிற்கு இப்படியான பழக்கங்கள் இருக்கிறதென்று தெரிந்தாலும் அதை அவன் சையத்திடம் காட்டிக் கொள்ள மாட்டான். இவனும் கேட்டுக் கொள்ள மாட்டான். அவர்களின் நட்பென்ற அந்த எல்லைக் கோடு அவற்றை எல்லாம் தாண்டி போனதில்லை. ஆனால் இன்று அந்த எல்லை உடைந்து போய்விட்டதோ?!
சையத்தால் நம்ப முடியவில்லை. அதே எண்ணத்தோடா ஜென்னியை அழைத்து வரச் சொல்கிறான். உடலெல்லாம் நடுக்கமுற்று அவனின் உணர்வுகளெல்லாம் உஷ்ணம் ஏறிக் கொண்டிருந்தது.
ராகவ் தன் நண்பனின் மௌனத்தைச் சாதகமாக எடுத்துக் கொண்டு,
"டோன்ட் ஹெஸிட்டேட்... ஜஸ்ட் ஒன் டே... அவ எனக்கு செஞ்ச அவமானத்திற்கெல்லாம் நான் அவளை ஆசை தீர பழித் தீர்த்துக்குறேன்... அப்புறமா அவளை உன் படத்தில ஹீரோயினா போட்டுக்கோ" என்று சொன்ன மறுகணம் ராகவின் கரத்தை உதறிவிட்டு இப்படி ஒருவனிடமா இத்தனை நாள் நட்பு பாராட்டினோம் என்ற அருவருப்பாய் பார்த்தான்.
"என்ன மனுஷன்டா நீ... சே" என்று ஈனமாய் அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டுப் புறப்பட எத்தனிக்க,
"சையத்... நில்லு" என்றழைத்தவன் அவனிடம்,
"நல்லா யோசிச்சுக்கோ என்னை விட்டா உன் படத்தை பிரொடியூஸ் பண்ண எவனும் வரமாட்டான்" என்க,
சையத் முகமெல்லாம் சிவப்பேற, "அதுக்கு என் தன்மானத்தையும் ஒரு பொண்ணோட மானத்தையும் விற்கணுங்கிறியா?!!அந்த மாதிரியான ஈன பொறப்பு நான் இல்ல" என்றவனை ராகவ் ஏளனமாய் பார்த்து,
"இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்த சீன் போடுற... ஊரு உலகத்தில இதெல்லாம் நடக்கலயா... என்ன?!" என்று கேட்டான்.
"வேண்டாம் ராகவ்... இதுக்கு மேல பேசினா தப்பாயிடும்... விட்டுடு" என்றவன் வெளியேற விறுவிறுவென நடந்தான்.
"போடா... அந்த ஜெனித்தாவை எப்படி வர வைக்கனும்னு எனக்கு நல்லா தெரியும்" என்று அவன் சொன்ன அடுத்த நொடி சையத்தின் கோபம் அழுத்தமாய் தூண்டப்பட்டது.
அவன் முன்னே வந்து நின்று, "ஜென்னி அந்த மாதிரியான பொண்ணு இல்ல ராகவ்... வேண்டாம்" என்று அமைதியான பாவனையில் உரைத்தான்.
ராகவ் எள்ளலான பார்வையோடு, "ஓ... உனக்கும் அவ மேல இன்டிரஸ்ட் இருக்கு இல்ல... ப்ச்... அதை நான் மறந்துட்டேன்... இப்ப என்ன? அவளைக் கூட்டிட்டு வா... நான் அவளை யூஸ் பண்ணதும் நீயும் யூஸ் பண்ணிக்கோ... சிங்கிள் பாட்டிலை இரண்டு பேரும் ஷேர் பண்ணிக்கிட்டதில்ல" என்ற போது சையத்தின் கோபம் தன் எல்லையை மீறியது.
அவனின் ஒவ்வொரு வார்த்தையும் உடம்பெல்லாம் புழு நெளிந்தது போன்ற உணர்வு. உடலின் செங்குருதி வேகமாய் பாய்ந்து அந்தக் கணமே ரௌத்திரமாய் மாறியவன் அவன் கழுத்தை இறுக்கி சுவற்றில் தள்ளினான்.
அவன் பேச கூட முடியாதபடி அவன் குரல்வளையை இறுக்கி,
"அடிங்க!... நானும் பொறுத்து பொறுத்து போயிட்டிருக்கேன்... நீயும் ஓவரா பேசிக்கிட்டே போற... என்னடா நினைச்சிட்டிருக்க மனசுல... கொன்னு புதைச்சிடுவேன்... இன்னும் ஒரு வார்த்தை நீ ஜென்னியை பத்தி பேசுனீனா?" என்று அழுத்தமாய் எச்சரித்தவன்
மேலும், "உன்னைத் தவிர வேற யாராச்சும் மட்டும் இப்படி பேசி இருந்திருந்தாங்க.. உயிரோடவே இருந்திருக்க மாட்டாங்க" என்று ஆவேசமாய் உரைத்துவிட்டு அவன் கழுத்தை விடுவித்தான்.
அப்போது ராகவ் தடைப்பட்ட மூச்சை வெளியே விட்டு இருமினான். நண்பனின் சினம் கண்டு ராகவின் முகம் வெளிறிப் போனது. நிலைதடுமாறி நின்றவனிடம் சையத், "ஜென்னி என் தேவதை ராகவ்... அவளை பத்தி நீ உன் கனவில கூட நினைக்காதே" என்றவன் மறுகணமே அறைக் கதவை படாரென மூடிவிட்டு வெளியேறினான்.
"தேவதை" என்ற ஒற்றை வார்த்தையில் அவன் காதலின் தீவிரம் ராகவிற்கு புரிந்தது. நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்திருந்த சையத்திற்கு எதையும் நம்ப முடியவில்லை. தன் எண்ண அலைகளில் இருந்து வெளிவந்தவன் அவளின் ஓவியத்தைப் பார்க்கலானான்.
அந்த நொடி அவளுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று மனமெல்லாம் சஞ்சலப்பட ஆரம்பித்தது.
ராகவின் எண்ணம் அவளுக்கு என்ன தீங்கு விளைவித்துவிடுமோ என்று உள்ளூர பதட்டம் அதிகரித்தது. ஜெனித்தாவிடம் இது குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று மனம் கடந்து தவிக்க, அவளின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான். ஆனால் பதிலில்லை.
ரூபாவிற்கு அழைக்க, "மேடம் பிஸியா இருக்காங்க... அவங்க ஃப்ரீயானதும் நானே கால் பண்ண சொல்றேன் சார்" என்றுரைக்க அவன் மனதின் தவிப்பு அடங்கவில்லை.
இரவு நேரம் என்பதால் அவளை நேரில் சென்று பார்க்க தயக்கப்பட்டு தன் உணர்வுகளைப் பிரயத்தனப்பட்டு கட்டுபடுத்திக் கொண்டிருந்தான்.
ஆனால் விடியலைத் தொடுவதற்கு முன்பாக ராகவ் அவள் மீதான வன்மத்தையும் துவேஷத்தையும் தீர்த்துக் கொள்ள எத்தனிப்பான் என்று அவன் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டான்.
விதி ஜென்னியின் மூலமாக ஒரு விபரீதமான விளையாட்டை ஆட ஆரம்பித்தது. அதில் எல்லோருமே ஒரு வகையில் காயப்படவே போகிறார்கள்.
35

Quote from Muthu pandi on June 30, 2021, 11:21 AMNice
Nice