மோனிஷா நாவல்கள்
Naan Aval Illai - 36
Quote from monisha on November 29, 2020, 8:46 PM36
காதலின் அரங்கேற்றம்
எப்போதும் நேரம் கழித்து வீட்டுக்கு வரும் மகிழ் அன்று சீக்கிரமாகவே வந்திருந்தான். நேற்றிரவு நடந்த நிகழ்வு அந்த நொடி அவனை அமைதியடையச் செய்திருந்தாலும், அது பின்னர் அவன் மனதில் பெரும் புயலையே வீசச் செய்தது. அவன் பாதுகாத்து வைத்திருந்த கண்ணியத்தை ஒரு நொடியில் உணர்ச்சிவசப்பட்டு விடுவானா அவன்?
நடந்தவற்றை எண்ணிப் பார்க்கும் போதே அவன் தேகமெல்லாம் தீ பரவிய உணர்வு. அதோடு மாயாவின் புனிதமான காதலுக்கும் பெண்மைக்கும் களங்கம் விளைவித்துவிட்டோம் என்ற எண்ணம் வேறு அவனைக் கொன்று தின்று கொண்டிருந்தது.
அதே நேரத்தில் செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்க எண்ணினாலும் அவளை எதிர்கொள்ளும் தைரியம் வரவில்லை. உணவு உண்ணும் போது
கூட அவளை நிமிர்ந்து கூட பாராமலே சாப்பிட்டுக் கொண்டிருப்பதை
மாயாவின் விழிகள் கவனிக்கத் தவறவில்லை.
அவன் நேற்று தன்னிடம் நடந்து கொண்ட விதத்திற்காகத்தான் வருத்தம் கொள்கிறான் என்பதை அவள் கண்டுகொண்டாள். உணவு முடிந்து கைகழுவி எழுந்து கொண்ட பின் வள்ளியம்மை ஞானசேகரனை அறையில் படுக்க வைக்கச் சென்று விட, மாயாவை எப்படி எதிர்கொள்வது என்ற யோசனையில் முகப்பு அறையில் அமர்ந்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
அப்போது அவன் அருகில் வள்ளியம்மை வந்து நின்றார். கணவர் உறங்கிப் போன பின் மகனிடம் பேசிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு!
அவனோ அவரை கவனியாமல் எங்கேயோ சிந்தித்திருக்க அவர், "மகிழ்" என்றழைத்தார்.
அவர் முகத்தில் எதையோ சொல்ல வேண்டுமென்ற துடிப்பு. அதைக் கணித்தவன், "என்னம்மா... என்ன விஷயம்?" என்று விசாரிக்க,
"அண்ணனைப் பத்தி ஏதாச்சும் தெரிஞ்சுதா?" என்று கேட்டார்.
அவன் கோபத்தோடு பதில் பேசாமல் நிற்க,
வள்ளியம்மை மீண்டும், "என்னடா? பதில் பேச மாட்டேங்குற... அவன் என்னதான் இருந்தாலும் உன் அண்ணன் டா" என்றார். தன் தாயை விரக்தியாய் பார்த்து புன்னகைத்தான். என்னதான் இருந்தாலும் பெற்ற மனமாயிற்றே. மகனுக்காகத் துடிக்கிறது. ஆனால் அவனால் தமையனின் ஒழுக்கமற்ற செயலை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
மகிழ் தன் தமையன் மீது கொண்டிருந்த பாசம் மரியாதையெல்லாம் அவனைப் பற்றிய விஷயம் தெரிந்த பின் உடைந்து போனது.
"என்னதான் பெத்த பையனா கூட இருக்கட்டும்... எப்படி உங்களால அவனை மன்னிக்க முடிஞ்சுது... இது மட்டும் அப்பாவுக்குத் தெரிஞ்சா" என்று அவன் கேட்கவும்,
அவர் பதட்டத்தோடு, "வேணான்டா அப்பாவுக்கு தெரிஞ்சா கொன்னே போட்டுருவாரு" என்றவர் சொல்லவும்
அவன் இறுகிய பார்வையோடு, "தெரியுது இல்ல விடுங்க" என்க,
"எப்படிறா விடுறது... அவன் எங்க இருக்கான் என்னன்னு தெரியாம மனசெல்லாம் பதறுது... ஒரு பக்கம் இருக்கானோ இல்லையான்னு" என்ற வார்த்தையை சொல்லும் போது அவர் உடைந்து அழ அவன் உள்ளமும் துடித்துப் போனது.
தன் தாயை அணைத்துப்பிடித்தபடி, "நீங்க பயப்படற மாதிரி அண்ணனுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது... எங்கயாச்சும் ஃப்ரெண்ட் வீட்டிலதான் இருப்பாரு... நான் விசாரிக்கிறேன்" என்று அவன் சொல்லவும் அவர் மனம் ஒருவாறு சமாதானமடைந்தது.
மகிழ் அவரைத் தேற்றி அறைக்கு அனுப்பி வைத்தான். பின்னர் அவனும் தன் அறைக்குள் நுழைந்தவன் மாயா தரையில் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ந்தான்.
திருமணமான இந்த மூன்று மாதத்தில் இருவரும் படுக்கையில் ஒன்றாக உறங்குவதுதான் வழக்கம். ஒரே ஒரு முறை கூட தவறான கண்ணோட்டத்தோடு அவன் அவளைப் பார்த்ததோ அல்லது தீண்டியதோ கூட கிடையாது. அந்தளவுக்குத் தான் காப்பாற்றிய கண்ணியத்தைத் தானே கலங்கப்படுத்தி விட்டோம்.
அவள் தரையில் படுத்திருப்பதைக் காணும் போது, அவளுக்கு தன் மீதான நம்பகத்தன்மை மொத்தமாய் உடைந்துவிட்டதோ?! என்று எண்ணம் தோன்ற மனம் நொந்து அவள் அருகில் வந்து நின்றவன், "மாயா" என்றழைக்க,
அவளோ அவன் அழைப்பு கேட்டும் கேட்காதது போல போர்வையை எடுத்து முகம் வரை மூடிக் கொண்டாள். அவளின் செய்கையே அவள் கோபமாக இருக்கிறாள் என்பதை எடுத்துரைத்தது. அதே நேரம் அவள் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்று அவன் மனமும் ஆமோதித்தது.
சாக்ஷியின் மீது கொண்ட கோபத்திற்காகத் தான் மாயாவின் உணர்வுகளைக் காயப்படுத்தியது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்றெண்ணியவன் மீண்டும் அவள் அருகில் அமர்ந்தவாக்கில்,
"ப்ளீஸ் மாயா... என்னை மன்னிச்சிடு... நான் செஞ்சது பெரிய தப்புதான்... அப்போ இருந்த மனநிலையில" என்று அவன் அவஸ்தையோடு சொல்லிக் கொண்டிருக்க,
போர்வை விலக்கி கோபமாய் எழுந்தமர்ந்தவள், "என்ன சொன்னீங்க?" சீற்றமாய் கேட்டாள்.
பெரிதாய் விரிந்த அவள் விழிகளைப் பார்த்து சற்று அச்சம் கொண்டவன், "மன்னிச்சிடுன்னு" என்று மேலே சொல்லாமல் அவன் தவிப்போடு பார்க்க,
அவள் கோபம் குறையாமல், "நானும் வந்ததிலிருந்து பார்த்துகிட்டிருக்கேன்... நீங்க நடந்துக்குற விதமே சரியில்லை... இப்ப என்னடான்னா சும்மா படுத்திட்டிருந்தவளை எழுப்பி மன்னிப்பு கேட்குறீங்க" என்று மூச்சு விடாமல் பேசியவளைப் பார்த்து சற்று மிரண்டுதான் போனான்.
அவளே மேலும், "ஆமா... அப்படி என்ன நீங்க தப்பு செஞ்சீங்க?" என்று அவள் கேள்வி எழுப்ப,
அவன் தடுமாற்றத்தோடு, "நேத்து நான் உன்கிட்ட..." என்றவனை ஆழ்ந்து பார்த்தவள், "என்கிட்ட" என்று அவள் திரும்பக் கேட்க அவன் மௌனமானான்.
"சொல்லுங்க மகிழ்... என்கிட்ட தப்பா நடந்துகிட்டீங்க... அப்படிதானே?!" என்று கேட்க,
அவள் கண்களைப் பார்க்காமல் வேறெங்கோ வெறித்தபடி தலையசைத்தான்.
"என்னை கொஞ்சம் பார்க்குறீங்களா?" என்று அவள் கேட்க அவன் தயக்கத்தோடு அவள் புறம் பார்வையை திருப்பினான்.
"முதல்ல ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோங்க... நான் யாரோ எவளோ இல்ல... உங்க மனைவி... நீங்க என்கிட்ட உரிமை எடுத்துகிட்டதுல எந்தவித தப்பும் இல்லை... நடந்தது எதுவும் என் சம்மதமில்லாமலும் நடக்கல...
நமக்குள்ள ஏற்பட்ட இந்த உறவை நினைச்சு நீங்க சந்தோஷப்படலன்னாலும் பரவாயில்லை... ஆனா இப்படி கில்டியா பீஃல் பண்ணி என்னை அசிங்கப்படுத்தாதீங்க... ப்ளீஸ்" என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
அவள் எடுத்தெறிந்து பேசிய விதத்தில் அவனுக்கும் கோபம் தலைதூக்க, "நேத்து நடந்தததை நீ பெருசா எடுத்துக்கலன்னும் போது ஏன் கீழே படுக்கணும்?" என்று இறுக்கமாய் பார்த்துக் கேட்க,
அவள் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு, "வந்ததிலிருந்து நானும் பார்க்கிறேன்... ஏதோ கொலை குற்றம் பண்ணிட்ட மாதிரி நீங்களும் ரியாக்ட் பண்ணிட்டிருக்கீங்க... எனக்கு கஷ்டமா இருக்காதா?! அதான்" என்று அவள் தன் ஆதங்கத்தை உரைத்தாள்.
அவள் தன்னை தவறாக எண்ணிக் கொள்ளவில்லை என்று மனம் நிம்மதியடைந்தாலும் அவளை மீண்டும் மீண்டும் தான் காயப்படுத்துகிறோமோ என்று எண்ணி எழுந்து நின்றவன் வலியோடும் வேதனையோடும் படுக்கையில் அமர, அவள் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்தாள்.
அவன் மீண்டும், "மாயா" என்றழைக்க, "என்ன மகிழ்?" என்று சலிப்போடு முகத்தைக் காட்டாமலே கேட்டாள்.
"உன் மனசை ரொம்ப கஷ்டபடுத்துறேன் இல்ல" என்று கேட்க,
"ரொம்ப ரொம்ப" என்றாள்.
அப்போதும் அவள் போர்வையை விலக்கவில்லை.
"சரி... நான் என்ன பண்ணா நீ சமாதானமாவ?" அவன் பரிதாபமாய் கேட்க,
"நான்தான் கோபமாவே இல்லயே... அப்புறம் ஏன் நான் சமாதானமாகணும்?" என்று கேட்டதும் அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது,
"அப்படின்னா சரி... நீ மேலே வந்து படு" என்க,
"வேண்டவே வேண்டாம் சாமி... நான் இந்த விளையாட்டுக்கு வரல"
"அப்ப எந்த விளையாட்டுக்கு வர்றன்னு சொல்லு ... அந்த விளையாட்டை விளையாடுவோம்?" என்று மகிழ் குறும்புத்தனமாய் சொன்னதும் அவள் போர்வை விலக்கி நிமிர்ந்து பார்க்க, அவன் படுக்கை மீது தலையணையை நிமிர்த்திப் போட்டு அமர்ந்திருந்தான்.
"தூக்கம் வரலயா?!" என்று அவள் படுத்த மேனிக்கே அவனைப் பார்த்து கேட்க, "உம்ஹும்" என்றான் தலையசைத்தபடி!
அவள் புருவத்தை சுருக்கிப் பார்த்தவள் தன் படுக்கையிலிருந்து எழுந்து வெளியே சென்றுவிட, அவள் எங்கே சென்று விட்டு வருகிறாள் என்று யோசித்திருக்கும் போதே அவன் அருகாமையில் வந்து நின்றவள்,
"இந்தாங்க பிடிங்க" என்று மாத்திரையை அவன் கையில் வைத்தாள். அவன் அதை உற்றுப் பார்க்க,
"அதே மாத்திரைதான்... காலையில வாங்கிட்டு வந்து வைச்சிட்டேன்... ஒண்ணு போட்டாலே நல்லா தூக்கம் வரும்... இந்தாங்க தண்ணி பாட்டில்... போடுங்க... போட்டுட்டு தூங்குற வழியப் பாருங்க" என்று அவள் சொல்ல மாத்திரையை தூக்கியெறிந்துவிட்டு அவளை இழுத்து தன் மடியில் கிடத்தினான்.
"மகிழ் விடுங்க" என்று அவன் கரத்தில் இருந்து நெளிந்தவளை இறுக்கிப் பிடித்தவன், "ரொம்ப ஓவரா பேசுற நீ" என்றான்.
"யாரு நானா?" என்று அவள் அதிர்ச்சியாய் கேட்க,
"ஆமாம் பின்ன... கொஞ்ச நேரத்துல என்னை துவைச்சுக் காயப் போட்டுட்ட... உன்னை" என்று தன் உதடுகளால் அவள் முகமெல்லாம் முத்த தூரல்களை போட்டான்.
சங்கடமாய் அவனை விலக்கி விட்டவள் நாணத்தில் முகத்தை மூடிக் கொண்டே "இதுவும் நேத்து மாதிரி இல்லையே" என்று அவள் கேட்க,
"இந்த முத்தமெல்லாம் என் மாயாவோடு காதலுக்காக" என்க, அவள் மனம் எத்தனை களிப்புற்றதென்று சொல்ல வார்த்தைகளே இல்லை.
அவளின் மூடியிருந்த முகத்தை ஏக்கமாய் பார்த்தவன், "ஏ மாயா" என்று காற்றோடு அவன் அழைக்க, "ஹ்ம்ம்ம்" என்று ராகமாய் இசைத்தாள்.
"கையை எடு ப்ளீஸ்" என்று கெஞ்சலாய் கேட்க, முகத்தைத் திறந்து அவனை ஏறிட்டாள். அவன் அதற்காக காத்துகிடந்தவன் போல அவளைப் பார்த்தபடியே நெருங்கியவன் அவள் இதழ்களை தன் வசப்படுத்திக் கொள்ள, காதலுக்கும் மோகத்துக்குமான அந்த எல்லை கோட்டில் அவர்களின் உணர்வு ஒன்றெனக் கலந்தது.
மகிழ் தன் இதழ்களால் தன் முத்த அணிவகுப்பை நடத்திக் கொண்டிருக்க, நாணத்தாலும் பூரிப்பாலும் அவள் முகம் உணர்ச்சிக் குவியலாய் மாறியது. அவனோடு அவள் சிலாகித்து மகிழ்ந்து புணர்ந்து ஒன்றாய் கலந்தாள்.
உணர்வைத் தீண்டி உறவாகும் சில காதல். இது உடலைத் தீண்டி உணர்வுகளில் கலந்து உறவெனும் நிலையை எட்டிப் பிடித்து கொள்ள, மகிழ் மாயாவின் காதலின் அரங்கேற்றமாய் அவர்களின் தாம்பத்யம் நிகழ்ந்து முடிந்தது.
இருவரும் தங்களை மறந்து உறக்கத்தை எட்டிப்பிடிக்கும் நிலையில் அவன் தோளை தலையணையாய் கொண்டு படுத்திருந்தவள், "மகிழ்" என்று மெலிதாய் அழைக்கவும், "ஹ்ம்ம்ம்" என்றான்.
"எப்பவும் என்னை விட்டு நீங்க போக மாட்டீங்க இல்ல" என்று தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்து ஏக்கமாய் கேட்க,
"இனி இந்த மகிழ் எப்பவும் உனக்குதான்... உனக்கு மட்டும்தான் மாயா... தேவையில்லாம மனசைப் போட்டு குழப்பிக்காதே" என்று உறுதியளித்து அவன் கரத்தால் அவள் தேகத்தோடு இறுக்கமாய் அணைத்துக் கொண்டுவிட்டான்.
அவள் விழிகளில் நீர் கசிந்து அவன் மார்பகத்தை நனைக்க, அவன் அந்த நொடி அவள் உணர்வுகள் புரிய அவள் நெற்றியில் அழுத்தமாய் தன் இதழ்களைப் பதித்தான்.
அவன் உணர்வுப்பூர்வமான வார்த்தையிலும் முத்தத்திலும் நெகிழ்ந்தவள் அந்த நொடி அவளின் பெண்மையின் தேவைகள் முழுவதுமாய் பூர்த்தியாகிவிட்டதாய் உணர்ந்தாள்.
உணர்வுகளால் ஒன்றிணைந்து இருவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர். ஆனால் அத்தகைய உறக்கமும் நிம்மதியும் இந்த மூன்று வருடத்தில் ஜென்னிக்கு கிடைக்கப்பெறவில்லை எனினும் அந்த இரவு முற்றிலும் மாறுப்பட்டது. அந்த இரவில் அவளுமே தன் நித்திரையை நிராகரித்துவிட்டுப் புணர்ந்திருந்தாள். அவள் வீணையோடு...
36

Quote from Muthu pandi on June 30, 2021, 11:27 AMNice
Nice