மோனிஷா நாவல்கள்
Naan Aval Illai - 37
Quote from monisha on November 29, 2020, 8:47 PM37
உயிர்பெற்ற வீணை
விக்டரை விமான நிலையத்தில் விட்டுவந்த பின் அவளின் பழைய நினைவுகள் அவளை ஆட்கொண்டது. அவளை ஜெனித்தா என்ற பெயரில் மருத்துவமனையில் டேவிட் சேர்க்க, அங்கே அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் அவள் மூளையில் இரத்தக் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எப்படியோ அறுவை சிகிச்சையின் மூலம் அவள் உயிரைக் காப்பாற்றிவிட்டனர். ஆனால் அவள் நினைவுகள்... அவள் மறக்கக் கூடாதவற்றை எல்லாம் மறந்து, நினைக்கக் கூடாதவற்றை மட்டும் நினைவு வைத்திருந்தாள்.
அவளை பலாத்காரம் செய்த நிகழ்வைத் தவிர வேறொன்றுமே அவள் நினைவில் நிற்காமல் போக, பார்வையற்ற அவளின் நிலைமைக்கு நிகரான பரிதாபம் ஏதும் இல்லை.
அவ்வப்போது வீலென்று அலறுவதும், மூச்சுத் திணறி மயங்கி விழுவதும், யாரோ அவளிடம் தவறாக நடந்து கொள்ள எத்தனிப்பதாக கற்பனை பண்ணி மிரண்டு ஓடுவதும் என அவள் ஒரு மனநோயாளியாகவே மாறியிருந்தாள்.
டேவிட் அவளின் உண்மையான விவரம் அறிந்த போதும் அவளுக்கென்று உறவுகள் இல்லை என்ற காரணத்தால் அவளை அனுப்ப மனம் வரவில்லை. இந்த நிலையில் அவளை அனுப்பினாலும் அது தவறாகவே போகும்.
ஆதலால் அவளுக்குச் சிறப்பான சிகிச்சை அளித்து அவள் நினைவுகளை மீட்டுவிட எத்தனித்தவன் அதே நேரம் அவளுக்குப் பார்வை வருவதற்கான அறுவை சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தான்.
ஜென்னிக்கு பார்வை கிட்டிய போது உண்மையிலேயே அவள் யாரைப் பார்க்க வேண்டும் என்பது கூட அவளுக்கு நினைவில் இல்லை.
டேவிட் அவளை தன் தந்தைக்குத் தெரியாமல் ஊட்டியில் அவன் படித்த பள்ளியோடு இணைந்திருந்த மாதா கோவிலில் இருந்த சிஸ்டர்கள் ஆதரவோடு அவளைப் பாதுகாத்தான்.
அங்கே அவளுக்குக் கிடைத்த அமைதியும் அன்பும் அவள் மனநிலையை ஒருவாறு மாற்றியிருந்தது. ஆறு மாதங்கள் உருண்டோடிவிட அவ்வப்போது மோசமான நினைவுகளால் அவள் உக்கிரமாய் நடந்து கொள்வதும் மாறிவிடவில்லை.
அப்படி ஒரு நாள் அவள் ஆர்ப்பாட்டம் செய்து ஓடி மலைச்சரிவில் விழப்பார்த்தவளை விக்டரின் மனைவி ஜெனிஃபர் காப்பாற்ற நேர்ந்தது. அவர்களை அறியாமலே அவள் மீது அன்பும் அக்கறையும் ஊற்றெடுத்தது. அதற்குக் காரணம் ஜெனித்தா என்ற பெயர்.
அவரின் மகள் ஜெனித்தா இதே ஊட்டியில் தன் பாட்டி தாத்தாவுடன் தங்கியிருந்து பள்ளி முடித்தவள், பின்னாளில் பெரிய மாடலாக வேண்டுமென்று கனவோடு உலகையே சுற்றி வந்தாள்.
ஒருமுறை ஊட்டியில் இருந்த பாட்டி தாத்தாவை காண வந்து காரோடு மலைச்சரிவில் ஓர் விபத்தில் உருண்டு விழ, அவள் இறந்த உடல் கூட கிடைக்காமல் மாண்டு போனாள்.
ஒரே மகளை இழந்த விக்டரும் ஜெனிஃபரும் இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு வருடமும் அவள் இறந்த நாளன்று அங்கே வந்து அஞ்சலி செலுத்தவது அவர்களுக்கு வழக்கம்.
அப்போது அவர்கள் சாக்ஷியை பார்த்த நொடி ஜெனித்தாவாகவே தோன்றினாள். அவளை மானசீகமாய் தன் மகளாக பார்க்க ஆரம்பித்தவர்கள் டேவிடின் மூலமாக அவள் கதையறிந்து அவளைத் தத்தெடுத்துக் கொள்ள விழைந்தனர்.
ஜெனிபஃர் ஒரு மருத்துவர் என்பதால் அவளுக்கு வேண்டிய எல்லாவிதமான சிகிச்சைகளையும் அளித்துக் குணப்படுத்துவதாக வாக்கு கொடுக்க, டேவிடும் அவர்களைப் பற்றி அறிந்து அதற்கு சம்மதித்தான்.
சாக்ஷி முதலில் சம்மதிக்கவில்லை எனினும் பின் டேவிடின் வற்புறுத்தலால் மும்பைக்குப் பயணித்தாள். அந்தப் பயணம் அவள் வாழ்க்கையை மாற்றியமைத்தது.
அதே நேரம் விக்டர் ஜெனிஃபரின் அக்கறையால் அவள் இயல்பு நிலைக்குத் திரும்பினாள். பழைய நினைவுகளையும் மீட்டெடுத்துக் கொண்டாள்.
அவள் உலகமே முற்றிலுமாய் மாறியிருந்தது. காதலனையும் தோழியையும் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் ஆசையும் மலையாய் வளர்ந்து போது அவர்கள் அவளின் இழப்பிலிருந்தே மீண்டு வந்திருந்தனர்.
ஏனோ அவர்கள் வாழ்க்கையில் நுழைந்து மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த அவள் விரும்பவில்லை. முக்கியமாக மகிழைப் பார்த்தால் அவளுக்கு நேர்ந்த கதியை சொல்லாமல் இருக்க முடியாது.
அதோடு அவளை அன்பாக அரவணைத்துப் பார்த்துக் கொண்ட விக்டருக்கும் ஜெனிபருக்கும் மீண்டும் ஒரு இழப்பைக் கொடுக்க விரும்பாமல் அவர்களோடு ஜென்னியாகவே வாழ்வதென முடிவெடுத்தாள்.
அவர்களின் நெருங்கிய உறவுகளைத் தவிர அவளைத் தத்து மகள் என்ற உண்மை வேறு யாரும் அறியப்படாத ரகசியமாகவே புதைந்து போனது.
ஜெனித்தா விக்டர் என்ற அடையாளத்தை அவளின் உண்மையான அங்கீகாரமாகவே மாற்றிக் கொண்டாள். அதை இனி அவளே நினைத்தாலும் மாற்ற முடியாது. அவள் பிரபலமாகிட எல்லோருமே அவளை விக்டரின் மகளாகவே நம்பினர். ஆனால் அவள் வாழ்வில் சாத்தியப்படாத ஒன்று மன அமைதி.
அதை மறைத்துக் கொண்டு வாழ்ந்தவளுக்கு அவள் மாயாவின் மூலமாகக் கேள்விப்பட்ட மகிழின் இன்றளவிலும் மாறாத அவன் காதலும், அதே நேரம் அந்தக் காதலின் விளைவால் தொலைந்து போன மாயாவின் நட்பும் அவளை பெரும் மன உளைச்சலுக்கு ஆட்படுத்தியிருந்தது.
இந்த வேதனையை அவள் டேவிடிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் அவன் நண்பனாய் தோள் கொடுக்காமல் காதலனாய் கரம் கோர்க்கிறேன் எனும் போது அவனிடம் இயல்பாகப் பேச முடியாத தயக்கம் ஏற்பட்டிருந்தது.
அவளின் மனநிலையை டேவிட் பார்வையாலேயே உணர்ந்து கொண்டான். ஜென்னி காரில் வரும் போதே அவளுக்கு அழைப்பு விடுக்க, அவள் கோபத்தோடு "நான் உங்ககிட்ட பேச போறதில்லை... ஃபோனை வைங்க" என்றாள்.
"ஆனா நான் உன்கிட்ட பேசணுமே" என்று அவன் நிதானித்துச் சொல்ல,
"ஒண்ணும் வேண்டாம்... நான் பேச மாட்டேன்" என்ற போதும் அவள் அலைப்பேசியின் அழைப்பைத் துண்டிக்கவில்லை.
"சரி நீ பேச வேண்டாம்... நான் பேசுறதைக் கேட்டா மட்டும் போதும்" என்க, அவள் அமைதியானாள்.
"நான் உனக்காக ஒரு கிஃப்ட் அனுப்பியிருக்கேன்... நீ வீட்டுக்குப் போனதும் அந்த கிஃப்டை பார்த்துட்டு கால் பண்றியா?!" என்று கேட்க,
அவள் அப்போது வீட்டிற்கே வந்திருந்தாள்.
"நான் வீட்டுக்கு வந்துட்டேன்"
"அப்போ இப்பவே பார்த்துட்டு சொல்லு... நான் லைன்ல வெயிட் பண்றேன்" என்க,
அவள் காரிலிருந்து இறங்கியவள், "எனக்கு கிஃப்டெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... நான் அதை உங்களுக்கேத் திருப்பி அனுப்பிடுறேன்" என்றபடி வீட்டிற்குள் விறுவிறுவென நடந்தாள்.
"ஜென்னி ப்ளீஸ் அப்படி எல்லாம் பண்ணாதே" என்று கெஞ்சலாய் அவன் கேட்கவும்
"என்கிட்ட கேட்காம உங்களை யார் கிஃப்ட் அனுப்ப சொன்னது?" என்று அவள் கோபமானாள். அதேநேரம் அவள் உள்ளே நுழைந்ததும் சமிஞ்சையாலயே ரூபாவிடம் அதென்ன பரிசு என்று விவரிக்க, அவளோ ஜென்னியின் அறை நோக்கி கை காண்பித்தாள்.
இதற்கிடையில் டேவிட், "ஜென்னி" என்றழைக்க,
"நீங்களும் ஒரு சராசரியான ஆள் மாதிரி நடந்துக்குறீங்க டேவிட்" என்று சொல்லியபடி அறையைத் திறந்து உள்ளே நுழைந்து பார்த்தவள் ஸ்தம்பித்து நின்றாள். அது ஒரு அழகான வேலைப்பாடு கொண்ட வீணை. பார்த்ததுமே அவள் விரல்கள் எல்லாம் அவளை அறியாமல் பரபரக்க,
அவன் அவளைப் பார்க்காமலே அவள் எண்ண ஓட்டத்தை அறிந்து,"கிஃப்ட் பிடிச்சிருக்கா ஜென்னி?!" என்று கேட்டான். அவள் கண்களில் நீர் சூழ்ந்து கொண்டது.
அவன் மீண்டும், "ஜென்னி" என்றழைக்க "ஹ்ம்ம்ம்" என்றாள்.
"ஹ்ம்ம்னா... பதில் சொல்லு" என்றான்.
அவள் உடனே விழி நீரைத் துடைத்தபடி, "எனக்கு இந்த கிஃப்ட் வேணாம்? நான் திருப்பி அனுப்பிடுறேன்" என்றாள்.
"இது ஒண்ணும் என் காதல் பரிசில்ல... ஒரு நண்பனோட பரிசு... நம்ம பெயரையும் பெற்ற குழந்தைகளையும் கூட மறக்கலாம்... ஆனா நாம கத்துகிட்ட கலை... மரணம் வரைக்கும் மறக்காது... நீ இந்த கிஃப்டை திருப்பி அனுப்பினா அது என் நட்பை நிராகரிக்கிற மாதிரி... அப்புறம் உன் இஷ்டம்" என்றவன் அழுத்தமாய் சொல்ல,
ஜென்னி வேதனையோடு, "ஏன் இப்படி என்னை எல்லா விஷயத்திலயும் லாக் பண்றீங்க? ப்ளீஸ் இந்த கிஃப்ட் எனக்கு வேண்டாம்... நான் பழைய விஷயங்கள் எதையும் நினைச்சு பார்க்க கூட விருப்பப்படல" என்று வினவினாள்.
"நீ சாக்ஷி இல்லன்னு சொன்னாலும் சாக்ஷியோட நினைவுகள் உன்னை விட்டுப் போகாது... அதை நீ சுமந்துதான் ஆகணும்... அதுவும் இல்லாம இது நீ ஆசைப்பட்டு கத்துகிட்ட கலை... இதை நீ நிராகரிக்கக் கூடாது?" என்று அவன் அதிகாரமாய் உரைக்க, அவள் மனமெல்லாம் வேதனை சூழ்ந்து கொண்டது.
"ஏன் டேவிட் என்னை இப்படி இமோஷனலா வீக்காக்குறீங்க ?" என்று அவள் அழாத குறையாக கேட்க,
"நிச்சயமா இல்ல... உன் பலம் எது பலவீனம் எதுன்னு நீ புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன்... முக்கியமா நான் எது பண்ணாலும் உனக்காகவும் உன் நல்லதுக்காகவும்தான்"
"வேண்டாம்... எனக்காக நீங்க எதுவும் பண்ண வேண்டாம்" எரிச்சல் மிகுதியோடு அவள் சொல்ல,
"உனக்காகன்னா அது எனக்காகவும்தான்... அதை நீ எப்போ புரிஞ்சுக்க போற" என்று அவன் சூசகமாக சொல்ல,
"டேவிட்" என்று அவள் கோபமாய் பல்லைக் கடித்தாள்.
"உன் ஃப்ரெண்ட் மாயாவுக்காக உன் உயிருக்குயிரான உன் காதலனை விட்டுக் கொடுத்த... எனக்காக உன் காதலை கொடுக்கக் கூடாதா?!"
அவன் சொன்னதைக் கேட்டவள் தலையில் கைவைத்தபடி அமர்ந்து கொள்ள அவன் மேலும், "எனக்கு பெருசா ஆசையெல்லாம் இல்லை ஜென்னி... நீ நான் நமக்குன்னு ஒரு அஞ்சு ஆறு பசங்க... அவ்வளவுதான்" என்றதும் அதிர்ந்தவள்,
"வாட் ? அஞ்சு ஆறா" என்று கேட்க,
"சரி... அப்போ ஒரு நாலு மூணு"
"ரொம்ப ஓவரா போறீங்க"
"அப்போ இரண்டே போதுங்குறியா?!" என்று கேட்க அவள்,
"டேவிட் என்னை டென்ஷன் படுத்தாம ஃபோனை வைக்கிறீங்களா?" என்று கேட்க,
"சரி நான் வைக்கிறேன்... ஆனா நீ யோசிச்சு சொல்லு" என்றான்.
"என்ன யோசிக்கணும் ?"
"எத்தனை பசங்கன்னுதான்?"
"அய்யோ டேவிட்... ப்ளீஸ்" என்று அவள் கடுப்பாக,
"ஓகே ஒகே... ஐ வில் கால் யூ லேட்டர்" என்று சிரித்தபடி அழைப்பைத் துண்டித்தான். அவள் பார்வை அந்த நொடி வீணையின் புறம் திரும்பியது.
'நான் விரும்பின எல்லாத்தையும் உதறிட்டேன்... நீ மட்டும் என் கூட இருந்து என்ன பண்ண போற?' என்று அவள் விரக்தியான பார்வையோடு கேட்க, அது ஊமையாகவே இருந்தது.
'நீ பேச மாட்ட... ஏன்னா உன்னை நான் தொட மாட்டேன்' என்றாள்.
அவளுக்குத் தெரியும், அவள் தொட்டால் மட்டுமே அது உயிர் பெறும். தொட மாட்டேன் என்று சவாலாய் உரைத்தவளுக்குத் தெரியாது. சில மணிநேரங்கள் கூட அவளின் சாவலை அவளால் காப்பாற்ற முடியாமல் போகும் என்று.
இரவு படுத்துறங்கும் போது அவளால் ஏனோ உறங்க முடியவில்லை. அவள் அறையிலிருந்த வீணை அவளை அழைக்காமல் அழைத்துக் கொண்டிருந்தது.
குழந்தையை கண்ட தாய் அதனை எத்தனை நேரம் நிராகரிக்க முடியும். ஆரத்தழுவிக் கொள்ள துடித்த அவள் மனதைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் தவிப்புற்றாள்.
அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அவள் எழுந்து வந்து அந்த வீணையின் தந்திகளை விரலால் மீட்ட அது ரீங்காமரிட்டு அவள் உணர்வுகளை எழுப்பிவிட்டது.
அந்த நொடியே அமர்ந்து தன் மடியில் அந்த வீணையை கிடத்தினாள். வெகு நாட்கள் பிரிந்த குழந்தையை மடியில் கிடத்தி முளைப்பால் தரும் போது அது அந்த தாய்க்கு எத்தகைய இன்பத்தை நல்கும் என்று வார்த்தைகளால் சொல்லிப் புரிய வைக்க முடியாது.
அப்படிதான் இருந்தது அவள் உணர்வுகளும்... உயிரற்ற அந்த வீணையை அவள் மீட்டிய நொடி அது உயிர்பெற்று அவளுக்குள் மூழ்கியிருந்த உணர்வுகளை வெளிக் கொணர,
காதலும் சோகமும் ஏக்கமும் தீராத ஆசைகளும் தவிப்புகளும் அவள் விரலின் வழியே அந்த வீணையின் நரம்புகளில் ஊடுருவி உருவாக்கிய இசையைக் கேட்போர் யாராயினும் உருகி மருகிதான் போவர்.
37

Quote from Muthu pandi on June 30, 2021, 11:36 AMNice
Nice