மோனிஷா நாவல்கள்
Naan Aval Illai - 43
Quote from monisha on November 29, 2020, 8:55 PM43
மனவெம்மை
ட்விட்டர், வாட்ஸ் அப், பேஃஸ்புக் போன்ற எல்லா ஸோஷியல் மீடியாக்களும் விவாதிக்க ஒரு அற்புதமான விஷயம் கிட்டிவிட்டது.
ராகவ் தன்னிலை மறந்து தன் காதலிக்காகச் சாலையில் நின்று அற்பமாய் சண்டையிட்டார். அதுவும் வீடியோவோடு...
ராகவின் கார் மட்டுமல்ல. அவன் பொத்திப் பொத்திப் பாதுகாத்த இமேஜும் சேர்ந்து டேமேஜானது. உப்புக்கு பெறாத விஷயமெனினும் இதை உலகம் பூராவும் பரப்பி ஒரு கூட்டம் விவாதித்துக் கொண்டிருக்க, தலைப்புச் செய்திகள் ராகவின் தலையை உருட்டிக் கொண்டிருந்தன.
அந்த விபத்துக்கு முக்கியக் காரணமோ ஜென்னி. ஆனால் அவள் அந்தக் காட்சியில் முக்கியத்துவம் வாய்ந்தவகளாக கருதப்படவில்லை என்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.
காரணகர்த்தாக்களை விட்டு விட்டு கண்ணில் பட்டவர்களைக் காரணிகளாய் மாற்றிவிடுவது இன்றைய காலகட்ட மக்களின் ஆட்டுமந்தை புத்தி. ஆனால் ஜென்னியின் மனம் அந்த விபத்தைப் பெரிதாகக் கருதவில்லை. அதில் அவள் தவறு இருந்ததைக் கூட அவள் உணரவில்லை.
அவன் குரல்...
தீட்சண்யமாய் ஒலித்த குரல்...
அவள் ஓயாமல் ரசித்த குரல்...
கேட்க வேண்டும் எனத் தினமும் ஏங்கிக் காத்திருந்த குரல்...
அந்தக் குரல் சாக்ஷி என்றழைத்த மறுகணம் அவளின் தேகத்தின் ஒவ்வொரு செல்லும் சிலிர்ப்படைய, உள்ளுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த அவள் காதல் பொங்கித் தளும்பிய உணர்வு அவளுக்கு!
அந்த உணர்வுகளை அவளால் எப்படி மறைத்துக் கொள்ள முடியும். ஒரு வார்த்தை பேசினாலும் தன் மனதைக் கண்டறிந்துவிடுவானோ என்ற அச்சத்தில் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்று ராகவ் புரிந்து கொள்ள முடியாமல் குழம்பியவன், உடனடியாக இறங்கி தன் காரின் நிலையைப் பார்த்தான்.
காரின் பின்புற லைட் உடைந்து நசுங்கியிருக்க, எங்கிருந்ததுதான் அவனுக்குக் கோபம் வந்ததோ. இடித்தவனைப் போட்டு வறுத்தெடுக்கத் தொடங்கினான். அந்த காரின் ஓட்டுநர் ராகவை பார்த்துத் திகைத்து நின்றதால் கேள்வி ஏதும் கேட்கவில்லை. ஆனால் அவன் தன் மீதே பழி போடுகிறான் என்று உணர்ந்ததும் அவன் யார் என்னவென்பதெல்லாம் மறந்து சரிக்கு சரியாய் சண்டையிட, ராகவின் ஈகோ கொஞ்சம் அதிகமாகவே தலைதூக்கிவிட்டது.
அங்கே கூடிய கூட்டமெல்லாம் ராகவின் சினத்தைப் பார்த்து ஸ்தம்பித்துப் போயிருக்க, இறுதியாக போலீஸ் வந்து சமரசம் பேசி முடித்தனர். ஆனால் இது எதிலும் ஜென்னி பெரிதாக பங்கேற்கவில்லை.
மகிழ் எதற்காக அழைக்க வேண்டுமென்ற கேள்வி ஒருபுறம் அவன் திரும்பி அழைத்துவிடக் கூடாதே என்ற அச்சம் மறுபுறமும் அவளை வாட்டி வதைத்தது. அப்போதைக்குப் பேசியை அணைத்து வைத்துவிட்டாள். ஆனால் எத்தனை நாளைக்கு அவள் ஓடி ஒளிய முடியும்.
இந்தப் பிரச்சனைகளால் ராகவ் நினைத்தது எதுவும் நடக்காமல் வேறுவழியின்றி அவளைக் கொண்டு வந்து வீட்டில் இறக்கினான்.
அவளோ ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனமாகவே இறங்கிச் செல்ல, அவளின் அந்த அழுத்தத்தைப் பார்த்து ராகவிற்கு கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது. தன்னை இத்தனை பெரிய சிக்கலில் சிக்க வைத்து விட்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் போவது அவனுக்கு நெருடலாய் இருக்க,
அந்த நொடி அவன் மனஎண்ணத்தை உணர்ந்ததாலோ என்னவோ,
ஜென்னி மீண்டும் அவனிடம் திரும்பி வந்து, "ஐம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி ராகவ்... உங்க ப்ரஷியஸ் காரை டேமேஜ் பண்ணிட்டேன்" என்றாள்.
அத்தனை நேரம் அவன் அவள் மீது கொண்டிருந்த கோபம் எல்லாம் மறைந்து போனது. அவள் அவனை நேர்கொண்டு பாராமல், "ஓகே ராகவ்... பை... " என்று இறுகிய முகத்தோடு சொல்லிவிட்டு அவள் செல்ல பார்க்க,
"ஸாரி கேட்டா என் காரோட டேமேஜ் சரியாயிடுமா?" என்க, அவள் புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனோ தன் காரில் சாய்ந்தபடி குறும்பாய் புன்னகைக்க அவள் எதுவும் பேசுவதற்கு முன்னதாக, "கம்பன்ஸேஷன் வேணும்... என் காருக்கு ஏற்பட்ட டேமேஜுக்கும் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும்" என்றவன் அவள் உதடுகளைப் பார்க்க, தன் நிலை புரியாமல் இப்போது பார்த்து இவன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள நினைக்கிறானே என்று அவள் எரிச்சலுற்றாள்.
இருந்தும் அந்த எண்ணத்தை மனதில் தேக்கி வைத்துக் கொண்டவள் ரொம்பவும் நிதானமாக, "ராகவ் ப்ளீஸ் கிளம்புங்க... மத்ததெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்" என்றாள்.
அவளிடமிருந்து ஒற்றை முத்தம் பெற முடியாதா என்று ஏங்கிப் பார்த்தவன் சற்று இறங்கி வந்து, "ஒகே கம்பன்ஸேஷனை வேணா குறைச்சுக்குவோம்... என் லிப்ஸுக்கு கிடைக்காத பாக்கியம் என் கன்னங்களுக்குக் கிடைச்சாலும் ஒகே" என்றான்.
அவன் பேசுவதைக் கேட்க கேட்க அவளுக்கு அருவருப்பாய் இருந்தது. அவள் ரொம்பவும் பொறுமையாக,
"ப்ளீஸ் ராகவ்... நான் வேற பிரச்சனையில இருக்கேன்... லீவ் மீ நவ்" என்று அழுத்தமாய் உரைத்தாள்.
அவளின் மறுப்பு அவனுக்குப் புதிதல்ல. ஆனால் அது தொடர்ச்சியாக நடக்கும் போது அது அவளின் நிராகரிப்பாகவே அவனுக்கு ஏற்கத் தோன்றியது.
அவளை பார்வையாலயே அளவெடுத்தவன், "இப்ப என்ன? நான் கிளம்பணும் அதானே... ஃபைன்... நான் கிளம்பறேன்" என்று எரிச்சலோடு உரைத்தான்.
அவள் என்றாக இருந்தாலும் தன்னுடையவள். அப்படி இருக்க அவளிடம் முரண்டு பிடித்து எதையும் பெற வேண்டிய அவசியமில்லை என்று எண்ணிக் கொண்டவன் அதற்கான சூழ்நிலை தானாக வரும் வரை பொறுமையாய் இருத்தல் வேண்டும் என்று முடிவெடுத்து வேகமாய் தன் காரில் ஏறிக் கொண்டு புறப்பட்டுவிட்டான்.
வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைப்பார்களா என்ன? அந்த எண்ணம்தான் ராகவிற்கு. ஆனால் மகிழின் அழைப்பு ஜென்னிக்கு அப்படிதான் இருந்தது. தாழியை உடைத்துவிட்டது போன்று. அவனின் குரல் அவளை பலவீனமாக்குவதாக உணர்ந்தாள். இத்தனை நாளாய் அவனை விட்டு விலகி இருந்ததெல்லாம் பயனில்லாமல் போய்விடுமோ என்று தோன்றியது. இப்படியான சிந்தனைகளில் உழன்றவள், நேராகத் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
ஜென்னி ராகவோடு வந்திறங்கியதைப் பார்த்த தாமஸிற்கோ உள்ளம் கொதித்தது. அவர்கள் காதலிக்கிறார்கள் என்ற செய்த அவருக்கும் எட்டியிருந்தது. அது அவர் மனதை ரொம்பவும் பாதித்திருக்க, இதுவரையில் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொன்ன டேவிட் ஜென்னியை மணக்க சம்மதித்திருக்கும் போது அவள் எப்படி இப்படி ஒரு முடிவை எடுக்கலாம் என்று அவள் மீது அதீத கோபம் பொங்கியது.
ஜென்னி வீட்டிற்குள் நுழைந்து தன் அறைக்குள் சென்றவள் நேராக குளியலறைக்குள் சென்று தண்ணீரில் இறங்கி சற்று நேரம் அவள் மனவெம்மை அடங்கும்வரை இளைப்பாறினாள்.
பின் உடையெல்லாம் மாற்றிக் கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சித்தாள். ஆனால் மனம் ஏனோ சஞ்சலப்பட்டுக் கொண்டே இருந்தது. மகிழின் நினைப்பு அவளை அலைக்கழித்துக் கொண்டே இருந்தது. அவனை ஒரு போதும் நேர் கொண்டு சந்தித்து விடக் கூடாதே என்ற உறுதி உடைப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தொற்றிக் கொண்டது.
மகிழ் எதற்குத் தன்னை அழைக்க வேண்டும் என்று எண்ணியவள், தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். அது அணைப்பிலேயே கிடந்தது. அதனை உயிர்ப்பித்து கடைசியாய் வந்த எண்ணை உற்றுப் பார்த்தாள். மகிழுக்கு எப்படி தன்னுடைய எண் கிடைத்திருக்கக் கூடும்.
அப்போது புகழுக்கு ஒரு முறை அவள் கைப்பேசி எண்ணைக் கொடுத்தது நினைவுக்கு வர, தான் பெரிய தவறிழைத்துவிட்டோம் என்று தலையிலடித்து கொண்டாள்.
மகிழ் மீண்டும் தன்னை அழைத்தால் என்ன செய்வது? அந்த எண்ணிலிருந்து தனக்கு அழைப்பு வராமல் தடை செய்தால் என்னவென்று யோசித்தவள், மகிழ் வேறெண்ணில் இருந்து தன்னை அழைக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம் என அந்த யோசனையைக் கைவிட்டாள்.
அவள் இப்படிக் குழம்பிக் கொண்டிருக்க, அவள் அறைக்கதவு தட்டும் ஓசை கேட்டது. எழுந்து கதவை திறந்த போது தாமஸ் தன் வாக்கிங் ஸ்டிக்கோடு தயங்கியபடி நிற்க வியப்பானவள் அவர் உள்ளே வர வழிவிட்டு,
"நீங்க ஏன் அங்கிள் கஷ்டப்பட்டு வந்தீங்க... நீங்க கூப்பிட்டு அனுப்பியிருந்தா நானே உங்க ரூமுக்கு வந்திருப்பேனே!" என்றாள்.
அவர் மௌனமாக நடந்து வந்து அங்கிருந்து இருக்கையில் அமர்ந்து கொண்டு அவளை ஆழ்ந்து பார்க்க... அவள் தயக்கத்தோடு, "ஸாரி அங்கிள்... காலையில வந்தவுடனேயே உங்களை வந்து பார்த்திருக்கணும்... டேவிட்தான்" என்று நிறுத்த, அவர் சொல்லவொண்ணா வேதனையோடு அவளை நோக்கினார்.
ஜென்னி அவரிடம், "ஏதாச்சும் நீங்க என்கிட்ட பேசணுமா அங்கிள்?" என்று வினவினாள்.
அவர் பெருமூச்செறிந்தபடி, "ஆமா ஜென்னி... நான் உன்கிட்ட கொஞ்சம் முக்கியமா பேசணும்" என்றவர் அவளை அமரச் சொல்லி முன்னிருந்த இருக்கையைக் காண்பித்தார்.
"இருக்கட்டும் அங்கிள்... பரவாயில்லை... நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க" என்றாள் நின்றபடியே!
அவர் யோசனைகுறியோடு அவள் முகத்தை ஏறிட்டவர், "டேவிடை நீ ரிஜெக்ட் பண்ண என்ன காரணம்?" என்று கேட்டதும் ,அவரை எதிர்கொண்டு பார்க்க முடியாமல் அவள் தடுமாறினாள்.
அவரே மேலும், "எதனால உனக்கு டேவிடைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை?" என்று அடுத்த கேள்வி கேட்டு அவளை சங்கடத்தில் ஆழ்த்த அவள் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் திகைத்தாள்.
"பதில் சொல்லு ஜென்னி" என்று அவர் மீண்டும் கேட்க,
அவருக்கு பதில் சொல்லவேண்டிய நிர்பந்தத்தோடு, "இல்ல அங்கிள்... நான் டேவிடை வெறும் ஃப்ரெண்டா மட்டும்தான் பார்த்தேன்" என்று தட்டுத்தடுமாறி அவள் சொல்ல, அவர் முகத்தில் ஓர் வறட்சியான புன்னகை வெளிப்பட்டது.
"ஆனா அவன் உன்னை ப்ரெண்டா பார்க்கலயே ம்மா... அவன் வாழ்க்கையில அவன் நேசிச்ச பழகின முதல் பொண்ணு நீதான்" என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லி அவர் வருத்தமுற்றார். அவருக்கு பதிலுரை கொடுக்க முடியாமல் அவள் தடுமாறி கொண்டிருந்தாள்.
அவர் மீண்டும், "அந்த ராகவைதான் நீ கல்யாணம் பண்ணிக்க போறன்னு" என்று கேட்டபடியே அவளை நோக்க, தயக்கத்தோடு அவரைப் பார்த்தவள் ஆமாம் என தலையசைத்து ஆமோதித்துவிட்டாள்.
அவர் அந்தக் கணமே குரலை உயர்த்தியபடி, "என் மகனை விட... எந்த விதத்தில ஜென்னி அந்த ராகவ் ஒஸ்தி... அந்தஸ்த்திலயா பணத்துலயா இல்லை குணத்துலயா?" என்றவர் கொஞ்சம் கோபமாகவே கேட்க,
ஜென்னி மௌனமாகவே நின்றாள். அப்போது டேவிட் பின்னே வந்து நின்றபடி, "பாயின்ட்... நியாயமான கேள்விதான்" என்றான்.
ஜென்னி அதிர்ச்சியோடு, "டேவிட்" என்க, தாமஸும் அவன் வருகையை எதிர்பார்க்கவில்லை.
அவன் அந்த அறைக்குள் நுழைந்தபடி, "ஆமாம்... நீங்க கேட்ட கேள்வி சரிதான்... ஆனா மகன்னு சொன்னீங்களே... அது யாரு?" என்று கேட்டு கூர்மையாய் அவரைப் பார்க்க, தாமஸின் முகம் இருளடர்ந்து போனது.
அவர் சற்று நிதானித்து, "நான் உன் விருப்பம் நிறைவேறணும்தான் ஜென்னிகிட்ட பேசிட்டிருக்கேன் டேவிட்" என்க,
"ஓ! என் விருப்பம் நிறைவேறவா டேட்... அது சரி... எனக்குன்னு வாழ்க்கையில நிறைய விருப்பம் இருந்ததே... ஆனா அதைப் பத்தி எல்லாம் நீங்க இதுவரைக்கும் கவலை பட்டதே இல்லயே... இப்ப மட்டும் என்ன?" என்று கேட்டு இகழ்ச்சியாகப் புன்னகைத்தான்.
அவர் வேதனையோடு அவனை ஏறிட்டு, "உண்மைதான் டேவிட்... அது நான் செஞ்ச பெரிய தப்பு... அதெல்லாம் இனிமே சரி செய்யவும் முடியாது... ஆனா அதுக்கெல்லாம் பரிகாரமாய் இனி நீ வாழப் போற வாழ்க்கையாவது சந்தோஷமா இருக்கணும்னு நான் விரும்புறேன்... அதுக்காகதான் நீ விரும்பின ஜென்னி உன் கூட இருக்கணும்னு ஆசைப்படுறேன்... அது தப்பா?" என்று கேட்டபடி அவனை நோக்க,
டேவிட் தீர்க்கமான பார்வையோடு, "தப்பில்லை... உங்க ஆசை ரொம்ப நியாயமானது" என்றவன்,
அவரைக் கோபமாய் பார்த்து, "அதே போல அவளுக்கும் வாழ்க்கையில நிறைய நியாயமான ஆசைகளும் கனவுகளும் இருந்துச்சு டேட்... ஆனா அதையெல்லாம் நீங்க கொஞ்சங் கூட மனசாட்சியே இல்லாம அழிச்சிட்டு... இப்ப எந்த முகத்தை வைச்சுக்கிட்டு உங்க ஆசையை நிறைவேத்தணும்னு அவகிட்ட கேட்கறீங்க" என்க, தாமஸ் ஒன்றும் புரியாமல் விழித்தார்.
ஜென்னி அதிர்ச்சியாய் அவனை நோக்கியவள், "வேண்டாம் டேவிட்... அதெல்லாம் இப்போ பேச வேண்டாம்" என்று மறுக்க,
டேவிட் அவள் சொல்வதை கேட்காமல், "இப்பவும் கேட்கலன்னா வேற எப்போ?" என்றான் முறைப்போடு!
"ப்ளீஸ் டேவிட்... விட்டுடுங்க" என்றவள் அவஸ்தையாய் அவனைப் பார்க்க
அவன் சீற்றத்தோடு, "இல்ல ஜென்னி... அவருக்கு தெரியணும்... அவர் செஞ்ச தப்பு தெரியணும்... உனக்கு அவர் செஞ்ச அநியாயத்தை அவர் தெரிஞ்சுக்கணும்" என்றான்.
"டேவிட் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்... நான் உங்களைக் கெஞ்சி கேட்டுக்குறேன்" என்று அவள் சொல்லும் போது ஆக்ரோஷமான பார்வையோடு திரும்பியவன்,
"நான் உன்னைக் கெஞ்சி கேட்டுக்குறேன்... நீ கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா?" என்று கத்தினான்.
அவனின் அந்தக் கோபத்தைக் கண்டு மிரண்டவள் மறுவார்த்தை பேசாமல் அமைதியாகிவிட, தாமஸுக்கோ அவர்களுக்கு இடையில் நடக்கும் சம்பாஷணைகள் புரியவில்லை.
அப்படியென்ன விஷயமாக இருக்கும் என்று குழப்பமாய் இருந்தது.
டேவிட் கொந்தளித்தபடி தன் தந்தையைப் பார்த்து,"ஏன் டேட்? இன்னைக்கு ஜென்னி என் வாழ்க்கையில இருந்தா சந்தோஷமா இருப்பேன்னு சொன்னீங்க இல்ல... ஆனா அதே வாய்... மூன்று வருஷத்துக்கு முன்னாடி என்ன சொல்லிச்சு தெரியுமா?!" என்று சொல்லி நிதானித்து அவரைப் பார்த்தவன்,
"அவ என் வாழ்க்கையில வந்த அடையாளம் கூட தெரியாத மாதிரி சிதைச்சிட சொல்லிச்சு" என்றான்.
அவர் அதிர்ச்சியுற்று, "என்ன உளர்ற டேவிட்? நான் எப்போ அப்படி சொன்னேன்?" என்று வினவினார்.
அவன் தன் கோபம் அடங்காமல், "எப்ப சொன்னீங்களா? மூன்று வருஷத்துக்கு முன்னாடி நான் கன்டிரோல் இல்லாம குடிச்சிட்டு ஒரு பொண்ணை இடிச்சி ஆக்ஸிடென்ட் பண்ணேனே? மறந்துட்டீங்களா டேட்... அந்த ப்ளைன்ட் கெர்ள்" என்றவன் கேட்ட நொடி தாமஸ் அதிர்ந்து போனார். அவராலும் அந்த சம்பவத்தை மறக்க முடியாது.
டேவிட் மீண்டும், "அந்த ப்ளைன்ட் கெர்ள்தான்... இந்த ஜெனித்தா விக்டர்" என்று அழுத்தமாய் சொன்னான்.
அவர் ஜெனித்தாவின் புறம் பார்வையைத் திருப்பியவர், ஒரு நொடி அவளை நம்ப முடியாமல் ஏற இறங்கப் பார்க்க, அவள் தவிப்போடு நின்று கொண்டிருந்தாள்.
"என்னால நம்ப முடியல டேவிட்... அப்போ விக்டரோட மக ஜென்னி இல்லையா?!" என்று கேட்டார்.
"அதான் விதி... நீங்க அவ அடையாளத்தை அழிச்சீங்க.. ஆனா கர்த்தர் அவளுக்குன்னு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்காரு"
"எனக்கு புரியல டேவிட்... இதெல்லாம் எப்படி நடந்துச்சு?" என்றவர் குழப்பமாய் கேட்க, டேவிட் அப்போது அவளைக் காப்பாற்ற தான் செய்தவற்றை அனைத்தையும் அவரிடம் விளக்கமாய் விவரித்தான். அவர் அதிர்ச்சி தாங்காமல் இருக்கையில் சரிந்துவிட ஜென்னியும் தலை மீது கைவைத்தபடி படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அவன் தன் தந்தையிடம் மேலும், "அன்னைக்கு என்கிட்ட என்ன சொன்னீங்க?.. நல்லவனெல்லாம் இந்த உலகம் சிலுவையில அறைஞ்சிடும்... இல்ல... ஹ்ம்ம்... அறைஞ்சிடும்தான்... ஆனா நல்லவன் அவ்வளவு சீக்கிரம் சாகமாட்டான்... திரும்பி உயிரோட மீண்டு வருவான்?! அதை நீங்க மறந்துட்டீங்க" என்று அவன் சொல்லவும் மகனை நிமிர்ந்து பார்த்தவர்,
"உன்னை காப்பாத்தணும்னுதான் டேவிட் அன்னைக்கு நான் அப்படி ஒரு காரியத்தை செஞ்சேன்" என்றார்.
"உங்க தப்பை நியாயப்படுத்தாதீங்க டேட்... என்னை உண்மையிலயே நீங்க காப்பத்தணும்னு நினைச்சிருந்தீங்கன்னா நான் குடிப் பழக்கத்துக்கு அடிமையாயிருந்த போது அதுல இருந்து என்னை மீட்டு காப்பத்திருக்கணும்... தனிமையில கஷ்டப்பட்டனே... அப்ப எனக்கு துணையாயிருந்து என்னை தனிமையில இருந்து காப்பாத்தி இருக்கணும்… அப்ப எல்லாம் விட்டுவிட்டு... பாவம் டேட்... ஜென்னி..." என்று கண்ணீர் திரள நிறுத்தியவன்,
"நான் செஞ்ச தப்புக்காக... என்னைக் காப்பாத்த நினைச்சு அவ வாழ்க்கையை அழிச்சிட்டீங்களே... உங்களால அவ என்னவெல்லாம் தொலைச்சிருக்கா தெரியுமா? அவ அடையாளத்தை... அவ நட்பை... அவ வாழ்க்கையை... முக்கியமா அவ உயிருக்கு உயிரா நேசிச்ச காதலை"
அவன் கேட்டுக் கொண்டே இருக்க ஜென்னிக்கு அழுகை வர பார்த்தது. முடிந்தளவுக்கு அவள் அதனைக் கட்டுபடுத்த முயன்று கொண்டிருந்தாள்.
டேவிட் தன் தந்தையிடம், "சொல்லுங்க... ஏதாச்சும் ஒண்ணை நீங்க அவளுக்குத் திருப்பி தர முடியுமா?!" என்று அவரை அழுத்தமாய் கேட்க, தாமஸால் பதில் சொல்ல முடியவில்லை. உறைந்து போயிருந்தார்.
"பதில் சொல்ல முடியல இல்ல... ஹ்ம்ம்... கண்டிப்பா முடியாது... உங்க சுயநலத்துக்காக நீங்க கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம செஞ்ச தப்போட விளைவு... அதை இனிமே மாற்ற முடியாது... ஆனா அந்த பாவத்துக்கான தண்டனையை நீங்க அனுபவிச்சுதான் ஆகணும்... அதையும் மாற்ற முடியாது”
“நீங்க விருப்பப்பட்ட உங்க மகனோட கல்யாணத்தை இந்த ஜென்மத்துல நீங்க பார்க்க முடியாது... ஏன்னா நான் ப்ரீஸ்டாகப் போறேன்... இந்த தடவை நீங்களே நினைச்சாலும் என்னைத் தடுக்க முடியாது" என்றதும் அவர் தலையை நிமிர்த்தி, "டேவிட்" என்று அதிர்ந்தார்.
அவன் இறுதியாய் சொன்ன வார்த்தை ஜென்னியையும் காயப்படுத்தியது. தாமஸ் மனவேதனையோடு மகனைப் பார்த்துவிட்டு, தள்ளாடியபடி எழுந்து அந்த அறையை விட்டு வெளியேறிவிட, அவரின் மனநிலை ரொம்பவும் மோசமாயிருந்தது. எதுவும் பேச அவருக்கு வார்த்தைகள் வரவில்லை.
அவர் நிலையைப் பார்த்த ஜென்னி டேவிடின் அருகாமையில் சென்று,
“என்ன டேவிட் நீங்க... பாவம் மன்சொடுஞ்சி போறாரு... ப்ளீஸ் போங்க... போய் அப்பாவை சமாதானப்படுத்துங்க" என்றாள்.
அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, "அவர் செஞ்ச தப்பைதான் நான் சொல்லிக் காட்டினேன்... தன் வாழ்க்கையில முழுக்க முழுக்க பாவத்தை மட்டுமே சேர்த்து வைச்சிட்டிருக்காரு... அதை அவர் இப்பவும் தெரிஞ்சிக்கலன்னா வேற எப்போ? அதுவும் அவர் உனக்கு செஞ்சதுதான் மன்னிக்க முடியாது பாவம்" என்றான் உதடுகளெல்லாம் துடிக்க!
"இருக்கட்டும் டேவிட்... அதுக்காக இப்ப அவர் இருக்கிற நிலைமையில இதையெல்லாம் சொல்லி அவரை கஷ்டப்படுத்தணுமா? !" என்று கேட்டவளை
ஆழ்ந்து பார்த்தவன் "அவரோட நிலைமையை எண்ணி நீ பரிதாபப்படுற... ஆனா அன்னைக்கு நீ உயிருக்காக போராடிட்டிருந்த போது அவர் உன் நிலைமையை எண்ணி பரிதாபப்படலியே ஜென்னி" என்றான் அதே கோபத்தோடு!
அவள் ஸ்தம்பித்து அவன் விழிகளையேப் பார்த்தவள் மீள முடியாத ஈர்ப்போடு, "நீங்க உண்மையிலயே ப்ரீஸ்டாகணும்னு விருப்பப்டுறீங்களா டேவிட்?!" என்று கேட்டாள்.
அந்த கேள்வி அவளை அறியாத ஏக்கத்தோடு வெளிப்பட்டுவிட, "ஹ்ம்ம்" என்றான்
அவள் ஏதோ சொல்ல எத்தனிக்க அவன் பெருமூச்செறிந்தபடி, "நீ சொன்ன மாதிரி அதுதான் கர்த்தரோட விருப்பம் போல!" என்க, அவள் மனம் தவிப்புற்றது.
அவளுக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்றே புரியவில்லை. அவள் மௌனமாய் நிற்க,
டேவிட் அவள் உணர்வுகளைக் கவனியாதவன் போல், "சரி அதை விடு... ராகவோட கார் ஆக்ஸிடென்டாயிடுச்சாமே... நீதான் அந்த காரை டிரைவ் பண்ண அது இதுன்னு... நீயூஸ் சேனல் எல்லாம் ஏதோ சொல்லிட்டிருக்காங்க ஆக்சுவலி என்ன மேட்டர்?" என்று அவன் சந்தேகமாய் கேட்கவும்,
"நத்திங் டேவிட்... சின்ன பிரச்சனைதான்... தேவையில்லாம சேனல்ஸ் எல்லாம் இதை பெரிசு பண்ணிட்டிருக்காங்க" என்றான்.
"யூ ஆர் ரைட்... சின்ன மேட்டரை பெரிசாக்குறதுதான் இன்னைக்கு மீடியாக்களோட ஒரே வேலை... அதுக்கு என் சேனலும் விதிவிலக்கில்ல" என்று சொல்லி சிரித்தான்.
அவளோ அவன் சொல்லிய எதற்கும் செவி சாய்க்காமல் சோர்வோடு நிற்க அவன், "ஜென்னி" என்றழைத்தான்.
"ஹ்ம்ம்" என்றாள்.
"நான் போய் ஃபிரெஷாகிட்டு வந்திடுறேன்... நம்ம இரண்டு பேரும் டின்னர் சேர்ந்து சாப்பிடலாம்... ஒகேவா " என்று கேட்க,
"ஹ்ம்ம்" என்று அவள் சிரத்தையின்றி தலையசைக்க, அவன் அந்த இடம்விட்டு நகர்ந்தான்.
அவளுக்குப் பிரச்சனைகளெல்லாம் ஒன்றன் பின் ஒன்று வரிசையாக அணிவகுத்து நிற்க, எதை எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள். ஆனால் மகிழின் நிலைமையோ முற்றிலும் வேறு. அவனுக்கிருக்கும் ஒரே தீர்க்க முடியாத பிரச்சனை சாக்ஷி மட்டும்தான். அவனின் பிரச்சனைக்கான ஓரே தீர்வும் அவள் மட்டும்தான்.
ஒரு வார்த்தை கூட பேசாமல் அவள் அணைப்பைத் துண்டித்ததிலிருந்து உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது. அமைதியில்லாமல் அல்லும் பகலும் அலைபாயும் அந்தக் கடலலைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
தன் தமையன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளைக் கேட்ட போது அவன் மேல் செந்தழலை ஊற்றியது போன்ற உணர்வு. அங்கே வீசிக் கொண்டிருந்த சில்லென்று காற்று கூட அவன் உடலைத் தீண்டிய பின் வெப்பமாய் மாறிவிடும் போல.
அந்தளவுக்கு அவன் தேகமும் அகமும் எரிமலைக்கு நிகராய் கொதித்துக் கொண்டிருந்தது. இரவு நடுநிசியைக் கடந்திருக்க, மீண்டும் அவளிடம் பேச வேண்டி அவளுக்கு அழைத்துப் பார்த்தான்.
எதிர்புறத்தில் அவள் கைப்பேசி ரீங்காரமிட உறக்கமில்லாமல் படுத்துக் கிடந்தவள் திடுக்கிட்டுப் போனாள். உதிரமெல்லாம் அதிவேகமாய் பாய்ந்த உணர்வு.
வந்த அழைப்பின் எண்ணைப் பார்த்தவள் கண்டிப்பாக இது மகிழாகதான் இருக்க முடியுமென்று கணித்தாள். அழைப்பைத் துண்டிப்பதும் அணைத்து வைப்பதும் இதற்குத் தீர்வல்ல.
பேசினால்தான் இந்தப் பிரச்சனை சரியாகும் என்று எண்ணியவள், அழைப்பை ஏற்று, "ஹலோ" என்றாள்.
ஏற்கனவே கோபத்தில் திளைத்திருந்தவன் அவள் குரல் கேட்டதும் உக்கிரத்தோடு, "என்கிட்ட பேச மாட்டியோ?!" என்று நேரடியாகக் கேட்க,
"யார் நீங்க?" அவனை முடிந்தளவு தவிர்த்துவிட வேண்டி அவள் பேச,
"தெரியாது இல்ல உனக்கு"அவன் உக்கிரமாய் கேட்டான்.
"நீங்க யார்னு சொன்னாதானே தெரியும்"
"ஆனா சாக்ஷிக்கு நான் யாருன்னு சொல்லாமலே தெரியும்"
"ஸாரி... இங்க சாக்ஷின்னு யாருமே இல்லை... ஃபோனை வைங்க"
"ஃபோனை கட் பண்ண... உன்னைக் கொன்றுவேன்டி" அத்தனைக் கடுமையாக அவன் வார்த்தைகள் அவள் செவியில் பாய்ந்தது.
அவள் மௌனமாய் இருக்க, "எல்லாதையும் மறந்துட்ட இல்லடி நீ... ஆனா நான் மறக்கல.. எதையும் மறக்கல..." என்றான்.
அவள் மௌனத்தைக் கலைக்கவில்லை. அவன் குரலைக் கேட்க கேட்க அவள் விழிகளில் பெருகிய கண்ணீரைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் வாயை மூடியபடி வெதும்பிக் கொண்டிருந்தாள்.
"நீ மறந்ததை நான் ஞாபகப்படுத்தட்டுமா?!" என்று கேட்டவன் சில நொடி மௌனத்திற்குப் பின், "காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு" என்றான்.
அந்த வார்த்தைகளைக் கேட்டதுமே அவள் கதறி அழத் தொடங்கினாள். அவளின் இறுகிப் போன உணர்வுகளை உடைக்கும் சக்தி அவன் குரலுக்கு மட்டுமே உண்டு. ஆதலாலேயே அவனிடம் பேசக் கூட அவள் பயந்திருந்தாள். ஆனால் அது நிகழ்ந்துவிட்டது.
43

Quote from Muthu pandi on June 30, 2021, 12:30 PMNice
Nice