மோனிஷா நாவல்கள்
Naan Aval Illai - 44
Quote from monisha on November 29, 2020, 8:56 PM44
மாயக்கண்ணாடித் திரை
மகிழின் செவிகளில் அவளின் அழுகுரல் கேட்க, "அழறியா சாக்ஷி?... ஹ்ம்ம் ஆச்சர்யமா இருக்கு... உனக்கு மத்தவங்களை அழ வைச்சுதானடி பழக்கம்" என்று அவன் வெகுஇயல்பாய் கேட்டான்.
"போதும் நிறுத்துங்க மகிழ்... என்னைப் பேசி பேசி கொல்லாதீங்க" என்றவள் வேதனை தாளமால் விசும்பலோடு உரைத்தாள்.
மறுகணமே அவன் கோபத்தோடு, "யாரு? நானாடி உன்னை கொல்றேன்?" என்றவன் வெடித்தெழ, அவனின் கோபத்திற்கான சரியான காரணம் அவளுக்குப் புரியவில்லை. அவள் ஒருவாறு அமைதியடைந்து தெளிந்த குரலில்,
"இப்ப என்னதான் மகிழ் வேணும் உங்களுக்கு?!" என்று கேட்க,
"எனக்கு உன்னை பார்த்து... பேசணும்" என்றான்.
"எதுக்கு?" அதிர்ந்தாள் அவள்.
"ஏன்? எதுக்குன்னு சொன்னாதான் வருவியா?!" என்று சீற்றமாய் வினவினான்.
அவள் அவனை எப்படியாவது தவிர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு, "நாம பேசுறதுக்கும் பார்க்குறதுக்கும் இனி என்ன இருக்க மகிழ்?" தீர்க்கமாய் கேட்டாள்.
"எதுவும் இல்லைதான்.... இப்போ நீ எனக்கு காதலும் இல்லை... நான் உனக்கு காந்தமும் இல்லை... ஆனா நாம பேச வேண்டிய சில விட்டுப்போன விஷயங்கள் இருக்கு... அது எனக்குத் தெரிஞ்சாகணும்"
அவனுக்கு அப்படியென்ன தெரியவேண்டி இருக்கிறது என்று யோசித்தபடி அவள் மௌனமாக, "நீ என்னைப் பார்க்க வருவியா மாட்டியா?!" என்று அழுத்தம் திருத்தமாய் மீண்டும் வினவினான்.
"மாட்டேன்" என்றாள் முடிவாக!
"ஏன் ?"
"ஏன்னா நீங்க என்கிட்ட கேட்குறதுக்கும் எதுவும் இல்லை... நான் உங்ககிட்ட சொல்றதுக்கும் எதுவும் இல்லை... நமக்குள்ள இருக்கிற உறவு என்னைக்கோ முடிஞ்சு போச்சு" என்று அவள் படபடவென்று பொறிந்து தள்ள,
அவன் அலட்சியமாய் சிரித்துவிட்டு, "நமக்குள்ள இனி எந்த உறவுமில்லைன்னு எனக்கே தெரியும்... அதை நீ சொல்ல தேவையில்லை... என் வாழ்க்கையில இனி மாயாவைத் தவிர வேற யாருக்கும் இடமுமில்லை" என்று சொல்லியவனின் குரலிலிருந்த அழுத்தம் ஜென்னியின் மனதை வேதனைப்படுத்தியது.
'நீ ரொம்ப லக்கி மாயா' என்று மனதிற்குள் சொல்லி உளமார மகிழ்ந்தாலும் உள்ளூர கொஞ்சம் வலிக்கவும் செய்தது. அவள் பேச முடியாமல் மௌனியாயிருக்க,
அவன் மேலும், "சாந்தோம் பீச்சுக்கு கிளம்பி வா... நான் உனக்காக வெயிட் பண்ணிட்டிருப்பேன்" என்றான்.
"இப்பவா?" என்று அவள் அதிர்ச்சியோடு கேட்க,
"வேற எப்போ... இப்பதான்" என்றான்.
"இது மிட் நைட் மகிழ்"
"என்ன? இருட்டா இருக்குன்னு பயமா இருக்கா?" என்க,
"ஹ்ம்ம்... என் வாழ்க்கையில நான் பார்க்காத இருட்டா மகிழ்?!" என்றவள் சுலபமாக சொன்னாலும் அது எத்தனை வலி நிறைந்த வார்த்தை என்று மகிழ் அப்போதைக்கு உணர்ந்திருக்க மாட்டான்.
"அப்புறம் என்ன... வா" என்றான் மீண்டும்.
"முடியாது மகிழ்... நான் வர மாட்டேன்" என்று அவள் மறுத்துவிடவும்,
அவன் சீற்றத்தோடு, "என்னைக் கோபப்படுத்தாதே சாக்ஷி... கிளம்பி வா" என்று பிடிவாதமாய் அவளை அழைத்தான்.
"முடியவே முடியாது... நான் வர மாட்டேன்... ஃபோனை கட் பண்ணுங்க... அன் டோன்ட் கால் மீ எனிமோர்" என்று அவள் தெளிவோடு சொல்லி அவர்கள் சம்பாஷணையை அத்தோடு முடிக்க எத்தனிக்க,
அவன் உடனே குரலை உயர்த்தி, "இப்ப நீ வரல... என் பிணத்தைக் கூட நீ பார்க்க முடியாது சாக்ஷி?!" என்று அவன் சொன்ன மாத்திரத்தில் அதிர்ந்து போனவள்,
"மகிழ்... என்ன பேசறீங்க?" என்றாள்.
"என்னை உயிரோட பார்க்கணும்னு நினைச்சா கிளம்பி வா... இல்லன்னா?" என்று சொல்லும் போதே அவள் இடைமறித்து,
"அய்யோ மகிழ்... அப்படி எல்லாம் பேசாதீங்க... நான் வர்றேன்" என்று அவள் அழுது கொண்டே சம்மதித்தாள்.
"வெயிட் பண்ணிகிட்டிருப்பேன்... சீக்கிரம் வா" என்று சொல்லி அவன் அழைப்பைத் துண்டித்தான்.
அவனிடம் பேசும் போதே அவள் உணர்வுகள் எல்லாம் நெருப்பிலிட்ட மெழுகு போல் உருகிப் போய் கொண்டிருக்க, நேரில் சந்தித்தால் என்ன நேருமோ என்ற அச்சம் அவளை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்டது.
அந்த நொடியே தாமதிக்காமல் நேராகச் சென்று டேவிடின் அறைக்கதவைத் தட்டி அழைக்க,
அவள் குரல் ஒலித்த சில கணங்களிலேயே கதவைத் திறந்தவன், அவளின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்து புருவங்கள் முடிச்சிட்ட வண்ணம், "என்னாச்சு ஜென்னி?" என்று கேட்டான்.
"வெளியே போகணும்... கொஞ்சம் என் கூட வர முடியுமா?!" முகத்தில் வியர்வை துளிகள் அரும்பக் கேட்டவளை ஆழமாய் பார்த்தவன்,
"சரி வெயிட் பண்ணு... வர்றேன்" என்றவன் சில நொடிகளில் கிளம்பித் தயாராகி அவளோடு வந்தான். இருவரும் காரில் ஏறிப் புறப்பட்டனர். அவளின் எல்லாப் பிரச்சனைகளிலும் உடனிருந்தவன் அவன் மட்டும்தான்.
இம்முறையும் அவனைத் தவிர்த்து வேறு யாரும் தனக்கு துணையாய் வர முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஆதலால் டேவிடை உடன் அழைத்துக் கொண்டு அவள் புறப்பட, அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி காரை இயக்கினான். எங்கே எதற்கு என்று கேட்காமல் அவன் அமைதியாக வர, அவனை அதிசயத்துப் பார்த்தவள்,
"இந்த மிட்நைட்ல நான் எங்க கூப்பிடுறேன்னு கூட கேட்காம நீங்க பாட்டுக்கு காரை ஒட்டிட்டு வந்துட்டிருக்கீங்க" என்று கேட்க,
அவன் சலனமற்ற முகத்தோடு, "எங்கன்னு சொல்லு ஜென்னி... போவோம்?!" என்றான்.
அவள் சற்று நேரம் மௌனமாய் இருந்தவள் பின் மகிழ் அழைத்துப் பேசிய விவரத்தை முழுவதுமாய் உரைத்தாள்.
டேவிட் அதிர்ந்து, "நிஜமாவா? மகிழா உன்கிட்ட இப்படி பேசுனது" என்க, அவள் விழியில் கசிந்த நீரைத் துடைத்தபடி, "ஹ்ம்ம்" என்றாள்.
"எனக்கு புரியல ஜென்னி... மகிழ் ஏன் உன்னை பார்க்கணும்னு சொல்றாரு... அதுவும் இந்த நேரத்துல" என்று வியப்பாய் அவன் கேட்க,
அவள் இடம் வலமாய் தலையசைத்தபடி, "ம்ஹும்.. எனக்கும் தெரியல டேவிட்” என்றவள்,
“ஆனா ஒரு விஷயம்... மகிழ் ரொம்ப இமோஷனல் டைப்... அவர் அன்பு வைச்சாலும் காதலிச்சாலும்.. ஏன் நட்புல கூட ...டூ அன் எக்ஸ்டென்ட்”
“அவர் எதை நேசிச்சாலும் ரொம்ப ஆழமா நேசிப்பாரு" என்று சொல்லிக் கொண்டிருந்தவளின் விழியில் நீர் சூழந்திருந்தது.
"எனக்கு நடந்ததெல்லாம் மகிழுக்கு தெரிஞ்சா... அவர் தாங்க மாட்டாரு டேவிட்" என்றவள் தன் மனக்கவலையை வெளிப்படுத்த,
"நீ என்னைக்கா இருந்தாலும் மகிழை ஃபேஸ் பண்ணிதான் ஆகணும் ஜென்னி... எந்த விஷயத்தை சொன்னா மகிழ் ஹர்ட்டாவாருன்னு பயப்படுறியோ அதை நீ சொல்லலன்னாலும் மகிழ் ஹர்ட்டாவாரு இல்லையா?" என்றவன் நிறுத்த அவனை யோசனையாய் ஏறிட்டாள்.
டேவிட் மேலும், "நம்ம விரும்பினவங்க காரணமில்லாம நம்மள விட்டு விலகிப் போற வலி... அதை வார்த்தையால சொல்ல முடியாது... இப்போ மகிழோட பிரச்சனையும் அதுதான்னு நினைக்கிறேன்" என்க, அவள் அந்த நொடி டேவிடின் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.
அவன் இயல்பாகவே பார்வையை சாலை மீது பதித்தபடி காரை ஓட்டிக் கொண்டு வர, அவன் பேசிய வார்த்தை அவனுக்கானதாகவே அவளுக்குத் தோன்றியது.
அவன் மனவேதனை புரிந்தும் அதனை ஆற்றமுடியாத கையறுநிலையில் இருந்தவள் அவனிடம் மேலும் எதுவும் பேசாமல் மௌனமாய் வந்தாள்.
மகிழை எப்படி எதிர்கொள்வது என்ற ஒரே கவலைதான் இப்போது அவளுக்கு.
***********
அந்தக் கடற்கரை இருளால் மூழ்கியிருக்க, சாலையோர விளக்கின் வெளிச்சம் மட்டும் அந்த இடத்தின் இருளை விலக்கி லேசாய் வெளிச்சமூட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அத்தகைய அளவுக்கான வெளிச்சம் கூட மகிழின் மனதில் இல்லை. பாதையில்லாத இருளில் பயணிப்பது போலவே இருந்தது. வழி தெரியாத பாதையில் லேசாய் ஓர் ஒளி படராதா என்ற காத்திருப்புதான் இப்போது அவனுக்கு.
சாக்ஷி வந்தால் மட்டுமே அவனை மிரட்டிக் கொண்டிருக்கும் அந்த இருளிற்கு ஓர் முடிவு கிடைக்கும். ஆனால் அவள் வருவாளா என்ற எதிர்பார்ப்பும், அவள் வந்தால் அவளை எப்படி எதிர்கொள்வது என்ற தவிப்பும் அவனை அவதியுறச் செய்து கொண்டிருந்தது.
எல்லாம் வேந்தனை சந்தித்ததினால் வந்த வினை. அவனைச் சந்தித்திருக்கவே கூடாது என்று ஒருபுறம் எண்ணிக் கொண்டாலும், கடைசிவரை சில உண்மைகள் தான் தெரிந்து கொள்ள முடியாமலே போயிருக்குமே!
மருத்துவமனையிலிருந்து வேந்தனை பின்தொடர்ந்து அவன் தங்கியிருந்த வீட்டை அடைந்ததினாலயே சில உண்மைகள் அவனுக்குத் தெரிய வந்திருந்தது.
அந்த வீட்டினுள்ளே நுழையும் போதே சிகரெட்டின் நெடி நாசிக்குள் புகுந்து அவனை எரிச்சல்படுத்த என்னவென்று சொல்ல முடியாத ஏதோ ஓர் உணர்வு அவனுக்கு. எதையோ அவன் மனம் நினைவுபடுத்தி கொள்ள நினைக்கிறது. ஆனால் அது எதுவென்று தெரியவில்லை.
இத்தகைய சிந்தனையில் மகிழ் உள்ளே நுழைந்ததைப் பார்த்த வேந்தன் ஆக்ரோஷமாக, "ஏன்டா என் பின்னாடி வந்த? நான் நிம்மதியா இருக்குறது உனக்குப் பிடிக்கலையா?" என்று கேட்டு அவன் சட்டைக் காலரைப் பிடித்து உலுக்கினான்.
அந்த வார்த்தை மகிழின் மனதை மேலும் காயப்படுத்த, அருகாமையில் நின்றிருந்த வேந்தனின் நண்பன் சரவணன் அவன் கரத்தை பிடித்துத் தடுத்த, "டேய் அவன் உன் தம்பிடா" என்றான்.
"எனக்கு தம்பி தங்கச்சி குடும்பம்னு எதுவும் இல்லை... அவனை வெளியே போகச் சொல்லு" என்று இம்மியளவு கூட தன் கோபத்திலிருந்து இறங்கி வராமல் அவன் சொல்ல, மகிழ் கண்களில் கண்ணீர் தளும்பியது.
"ஏண்ணா இப்படி எல்லாம் பேசுறீங்க?... உங்களுக்கு இப்படியாயிடுச்சேன்னு நினைச்சு நான் எவ்வளவு வேதனைப்பட்டுபட்டு இருக்கேன் தெரியுமா?!" என்று கேட்க,
வேந்தன் வெறுப்பை உமிந்தபடி, "உன் பரிதாபமும் வேண்டாம்... எனக்கு நீ இறக்கம் காட்டவும் வேண்டாம்... இங்கிருந்து ஒழுங்கா போயிடு... உன் முகத்தைப் பார்க்கக் கூட நான் விருப்பப்படல" என்றான்.
மகிழ் தன் தமையனைத் தவிப்பாய் பார்த்து, "ஏண்ணா... அப்படிச் சொல்றீங்க? நான் என்னண்ணா தப்பு செஞ்சேன்? நீங்க தப்பான வழில போனதுக்கு நானா காரணம்?" என்று கேட்டான்.
"இன்னைக்கு நான் கெட்டு சீரழிஞ்சு போய் நிற்கிறதுக்கு நீதான்டா காரணம்" என்று அழுத்தமாய் உரைத்தான் வேந்தன்.
மகிழ் தன் பொறுமையிழந்து, "சும்மா எல்லோர் மேலயும் பழி போடாதீங்கண்ணா... நீங்க மட்டும் சரியானவரா இருந்திருந்தா உங்களுக்கு இப்படி எல்லாம் நடந்திருக்காது" என்று அவன் சொல்லிவிட,
"ஆமான்டா... நான் சரியானவன் இல்லைதான்... இன்னைக்கு நேத்தில்லை... ரொம்ப காலமா இப்படிதான்... தம் அடிப்பேன்... தண்ணி அடிப்பேன்... எனக்கு பிடிச்சிருந்தா... தேவைப்பட்டா நான் சில பொண்ணுங்களோட செக்ஷுவல் ரிலேஷன்ஷிப்லயும் இருந்திருக்கேன்...
இதெல்லாம் உலக மகா குத்தம்னு நீ சொல்லப் போறியா?!" என்று கொஞ்சமும் குற்றவுணர்வில்லாமல் கேட்டவனை அருவருப்பாய் பார்த்து முகத்தைச் சுளித்துக் கொண்டு மகிழ்,
"நம்ம அப்பா அம்மா... நம்மள நல்லபடியா தானே வளர்த்தாங்க... ஆனா நீங்க எப்படி இப்படி எல்லாம்... என்னால நம்பவே முடியல" என்று சோர்ந்து போனான்.
"நல்லபடியாதான் வளர்த்தாங்க... நல்லது சொல்லிக் கொடுத்தாங்க... ஆனா எனக்காக நேரம் ஒதுக்குனாங்களா? என்னை தனியா விட்டுட்டு வேலை வேலைன்னு வேலை பின்னாடி ஓடுனாங்க... எனக்காக யார் நேரம் ஒதுக்குனாங்களோ அவங்க கூட நான் இருந்தேன்... அவங்க சொல்லிக் கொடுத்ததை எல்லாம் கத்துக்கிட்டேன்... எனக்கு நான் செஞ்ச எதுவும் இப்பவும் தப்பா தெரியல" என்று அவன் அழுத்திச் சொல்ல, மகிழ் அவனின் மனநிலையைப் பார்த்து மிரட்சியடைந்தான்.
இளம் வயதில் கிடைக்கும் தனிமை எத்தனை ஆபத்தானது என்பதற்கான சான்றுதான் தன் தமையனின் இந்த நிலைமை. அவன் உடல்நிலையையும் மனநிலையையும் இனி சரி செய்வது சாத்தியமா என்று மகிழ் கேள்விகுறியோடு அவனைப் பார்த்து, "சரி ண்ணா... நடந்ததெல்லாம் போகட்டும்... இனிமேயாச்சும் நீங்க செஞ்ச தப்பையெல்லாம் திருத்திக்க பாருங்க" என்றதும்,
வேந்தன் விரக்தியாய் புன்னகைத்துவிட்டு, "ப்ச்... அதான் சாகணும்னு முடிவாயிடுச்சுல்ல... இனிமே திருந்தி என்னவாகப் போகுது... போடா வேலையைப் பார்த்துக்கிட்டு... கிளாஸ் எடுக்க வந்துட்டான்" என்று சொல்ல மகிழுக்கு அவனிடம் பேசுவது வீண் என்று புரிந்தது.
விரக்தி அவனை இன்னும் விபரீதமான பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்க வேந்தன் அதீத கோபத்தோடு மகிழிடம்,
"போடா வெளியேன்னு சொல்றேன் இல்ல" என்று மீண்டும் சொல்ல,
மகிழ் அப்போதைக்கு எதுவும் செய்ய முடியாத இயலாமையோடு வெளியேறினான். அமைதியாக இந்தக் காட்சிகளைப் பார்த்திருந்த சரவணன் மகிழின் வேதனையைப் பார்த்து வேந்தனிடம்,
"உன் தம்பி என்னடா பண்ணான்? அவன்கிட்ட எதுக்குடா இவ்வளவு கோபப்படுற?" என்று கேட்க,
"அவன்தான்டா என் வாழ்க்கையில அந்த சாக்ஷியை திரும்பிக் கொண்டு வந்தவன்... அவளை மட்டும் நான் திரும்பிப் பார்க்காம இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது..." என்று சொல்ல,
வாசல் புறத்தை அடைந்திருந்த மகிழின் செவியில் அவன் சொன்ன வார்த்தைகள் சென்று சேர, அதிர்ந்தவன் செல்லாமல் மீண்டும் தன் தமையனின் முன்னே வந்து நின்றான்.
"இப்ப நான் வெளியே போகும் போது என்ன சொன்னீங்க?" மகிழ் முகத்தில் புரியாத குழப்பமும் லேசான கோபமும் பிரதிபலிக்க,
சரவணனும் வேந்தனும் ஒருவரை ஒருவர் கலக்கமாய் பார்த்துக் கொண்டனர்.
மகிழ் மீண்டும், "சாக்ஷின்னு ஏதோ சொன்னீங்க இல்ல" என்று அவன் கூர்மையான பார்வையோடு தன் தமையனை நோக்கினான்.
சரவணன் தவிப்போடு, "மகிழ் எதுவாயிருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்... இப்போ நீ போ" என்று அவனை அனுப்பி விட முயற்சிக்க,
அவன் பிடிவாதமாக, "முடியாது ண்ணா... எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்... சாக்ஷிக்கும் இவருக்கும் என்ன இருக்கு... இவரு ஏன் சாக்ஷியைப் பத்தி பேசணும்" என்று வேந்தனை ஊடுருவிப் பார்த்தபடி சரவணனிடம் கேட்க,
வேந்தன் எல்லையற்ற கோபத்தோடு, "நான் அவளை பத்தி பேசுவேன்டா... நீ யாருடா கேட்க...? உனக்கு முன்னாடி அவளைப் பார்த்தது நான்தான்... அவ வீணை வாசிச்ச அழகை அணுஅணுவா ரசிச்சது நான்தான்... இன்னும் கேட்டா அவளை பார்த்தவுடனே எனக்கே எனக்குன்னு சொந்தமாக்கிக்க நினைச்சுதும் நான்தான்... நீ எனக்கப்புறம்தான்டா" என்று சொல்ல, மகிழ் நொறுங்கிப் போனான்.
அவன் உடலின் அத்தனை பாகங்களும் செயலிழந்து போனது. தன் காதில் கேட்டவற்றை எல்லாம் உண்மைதானா என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.
வேந்தன் மேலும் அவனிடம், "என்னடா ஷாக்காயிட்ட...? நம்ப முடியலயா?" என்று வினவ, அவன் பேச்சற்று நின்று கொண்டிருந்தான்.
வேந்தன் நிறுத்தாமல் சாக்ஷியை கோவிலில் பார்த்த நிகழ்வை விவரிக்க, மகிழ் விழியில் நீர் வழிந்தோடியபடி இருந்தது.
வேந்தன் இறுதியாய், "ஆனா நான் வாழ்க்கையிலயே செஞ்ச பெரிய தப்பு... அந்த திமிரு பிடிச்சவளை பார்த்ததுதான்" என்க, மகிழுக்கு சினம் பொங்கியது,
"அப்போ இதே வக்கிரத்தோடதான் அன்னைக்கு நான் கூட்டிட்டு போன கச்சேரில சாக்ஷியைப் பார்த்தீங்களா?" என்று கேட்டு அவனை எரிப்பது போல் பார்க்க,
வேந்தன் சற்று தடுமாறி, "அப்ப நீ அவளை லவ் பண்றன்னு எனக்கு தெரியாது மகிழ்" என்றான்.
"அப்போ தெரியல சரி... தெரிஞ்ச பிறகு" என்று அவன் கேட்க, வேந்தன் மௌனமாய் நின்றான்.
அவனின் அந்த அமைதி மகிழின் மனதில் ஏதேஏதோ சிந்தனைகளை நிரப்ப எரிச்சல் தொனியில், "இவ்வளவெல்லாம் சொல்லிட்டு இப்ப ஏன் யோசிக்கிறீங்க? அப்படின்னா" என்று இழுத்தவன்
படபடப்போடு, "அவகிட்ட தப்பா ஏதாச்சும் நடந்துக்கிட்டீங்களா?" இந்தக் கேள்வியை கேட்கும் போதே மகிழுக்கு உள்ளூர நடுங்கியது.
அப்போதும் வேந்தன் மௌனமாயிருக்க... இத்தனைக்குப் பிறகும் மகிழ் தன் தமையனை அந்தளவுக்குத் தரம் தாழ்த்தி யோசிக்க முடியாமல்,
"அப்படி எல்லாம் இல்லைதானே ண்ணா" என்று மீண்டும் கேட்க,
"நான் அப்படி அவகிட்ட நடந்துக்கிட்டேன்னே வைச்சுக்கோ... இப்ப அதனால என்னாயிடுச்சு" என்று வேந்தன் அலட்சியமாய் பதிலளித்தான்.
அந்த நொடி கடைசி கடைசியாய் அவன் பிறந்த நாளன்று சாக்ஷியை சந்தித்த அந்த நாள் அவன் நினைவுகளுக்கள் நிழலாடியது. சிகரெட் வாசத்தை அவள் முகர்ந்து சொன்னது மகிழுக்கு இப்போது நினைவுக்கு வந்தது. அதைத் தான் அலட்சியமாய் மறுத்ததை நினைவு கூர்ந்தவன், அன்று அவளைத் தனியே விடுத்துச் சென்றதை யோசித்த போது எண்ணி உள்ளுற பதறினான். அவனால் தாங்க முடியவில்லை.
மகிழ் ரௌத்திரமாய் வேந்தனை தாக்கி, "மனுஷனே இல்லடா நீ... இத்தனை நாளா உன்னைப் போய் அண்ணன்னு கூப்பிட்டனேன்னு எனக்கு அசிங்கமா இருக்கு... உன்னை மாதிரி கேவலமான பிறவியை நான் பார்த்ததேயில்லை" என்றவன் உணர்ச்சி பொங்க கத்த, சரவணன் அவனைத் தடுத்து தள்ளிவிட்டான்.
மகிழ் மூச்சு வாங்கியபடி, "உன்னைக் கொன்னாதான்டா என் ஆத்திரம் தீரும்" என்க, சரவணன் அவனைப் பிடித்துக் கொண்டு, "அவன் ஏற்கனவே கேன்ஸர் பேஷண்ட்...மகிழ்" என்று உரைக்க,
"இல்ல இல்ல... அவன் கேன்ஸரால எல்லாம் சாகக் கூடாது. என் கையாலதான் சாகணும்" என்று மீண்டும் அவனைத் தாக்க முற்பட்டவனை வேந்தன் தடுத்து கீழே தள்ளிவிட்டுவிட்டு தன் உதட்டோரம் வழிந்த உதிரத்தைத் துடைத்தவன் சீற்றத்தோடு,
"போயும் போயும் அவளுக்காகவாடா நீ இப்படி துடிக்கிற... அவதான் நீ வேணான்னு உன்னைத் தூக்கிப் போட்டுட்டு... பணக்காரங்களா பார்த்து வளைச்சுப் போட்டுட்டு சுத்துறா இல்ல?" என்றவன் அதோடு நிறுத்தாமல் சில இழிவான வார்த்தைகளைச் சொல்லி ஜென்னியை நிந்தித்தான்.
மகிழ் உக்கிரமாய் எழுந்து அவனைக் கொலை வெறியோடு தாக்க, சரவணனால் கூட அவனைத் தடுக்க முடியவில்லை. அவன் வேறுவழியின்றி வெளியே சென்று சிலரை உதவிக்கு அழைத்து வந்து மகிழைத் தடுத்து பிடித்துக் கொண்டான். ஆனால் மகிழுக்குள் எரிந்து கொண்டிருந்த கோபம் துளி கூட இறங்கவில்லை.
வேந்தன் வாய்வழி உதிரமாய் வழிந்தோடியது. அவன் முகம் முழுக்க காயம் பட்டு சிவப்பாய் மாறியிருக்க, சரவணன் அவன் அருகில் வந்து அவன் முகத்தைத் துடைக்க மகிழ் கோபத்தோடு, "உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போவனே தவிர... உன்னை உயிரோட விடமாட்டேன்" என்று ஆவேசமாய் சூளுரைத்தான்.
வேந்தன் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு தம்பியை ஏளனமாய் பார்த்தவன், "என்னை கொல்லணுமா... கொல்றா... ஆனா நான் அவளைப் பத்தி சொன்னதெல்லாம் பொய்னு ப்ரூஃப் பண்ணிட்டு என்னைக் கொல்றா" என்க, "டே வேண்டாம்" என்றவன் அனலாய் தன் தமையனைப் பார்க்க,
வேந்தன் மேலும், "சும்மா உணர்ச்சிவசப்படாதே... யோசிச்சு பாரு... எங்கிருந்து அவளுக்கு இவ்வளவு பணமும் காசும் வந்தது... அவளோட மூலதனம் என்னவா இருக்கும்னு நினைக்கிற" என்று உரைத்தவனை மகிழ் அருவருப்பாய் பார்த்தான்.
"உன் புத்தியே சாக்கடை புத்திடா... அதான் கண்ட மேனிக்கு யோசிக்குது... உன்கிட்ட இவ்வளவு நேரம் பேசிட்டிருக்கேன் பாரு... என்னையெல்லாம்" என்றவன் அவனைத் தடுத்துப் பிடித்திருந்தவர்களைப் பார்த்து,
"விடுங்க என்னை ... இவனை எல்லாம் அடிச்சா எனக்கு தான் அசிங்கம்" என்க, அவர்கள் அவன் கரத்தை விடுத்தனர்.
அவன் அங்கிருந்து வெளியேற எத்தனிக்க, "ப்ரூஃப் பண்ணுன்னு சொன்னதும் தெறிச்சு ஓடுறியா?!" என்று வேந்தன் எள்ளலாய் உரைக்க, மகிழ் அந்த வார்த்தைகளைக் கேட்டு திரும்பி வந்து,
"வேண்டாம்... என்னை வெறியேத்தாதே" என்றான்.
"இன்னும் உனக்கு அவ மேல இருக்குற மயக்கம் தீரல... அதான் இன்னும் நீ அவளை நம்பிட்டு திரிஞ்சிட்டிருக்க... நான் சொன்னதை நிதானமா யோசிச்சுப் பாரு... உனக்கே புரியும்" என்று அவன் சொல்லும் போதே வெறியோடு விரல்ளை மூடி கோபத்தை கட்டுபடுத்திக் கொண்டவன்,
"உன்னை என்ன பண்றதுன்னே எனக்கு தெரியல... ஆனா இந்த விஷயத்தை நான் இப்படியே விடப் போறதில்லை... நீ சொன்னதை நான் இல்லன்னு ப்ரூஃப் பண்ணிட்டு... அப்புறம் வந்து உன்னை வைச்சுக்கிறேன்" என்று சொல்லிவிட்டு வேகமாய் அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டான்.
எந்த வேலையும் அவனுக்கு ஓடவில்லை சாக்ஷியின் தொலைப்பேசி எண்ணை தன் தமக்கை எழிலிடம் வாங்கி அழைத்தான். ஆனால் அவளிடம் தான் என்ன கேட்பது? எப்படிப் பேசுவது? என்று அவன் யோசித்து மனதளவில் நொந்து கொண்டிருந்தான்.
பிரிந்த காதலை மீண்டும் நேர்கொண்டு சந்திப்பது போன்ற துயரம் வேறொன்றுமில்லை. தவிப்போடு உணர்வுகளற்ற நிலையில் மணல் மீது அமர்ந்திருந்தவனை, "மகிழ்" என்ற அழைப்பு உயிர் பெற செய்தது. அவனை அழைத்தது டேவிட்தான். எழுந்து நின்றவன் டேவிடைப் பார்த்து ஆச்சர்யமானான்.
அதோடு அவன் அருகாமையில்தான் அவள் நின்றிருந்தாள். அவன் நினைவுக்குள் அழியா சித்திரமாய் இருக்கும் அவள் முகத்தை அந்த இருளிலும் கண்டு அவன் உள்ளம் சிலாகிக்க, அவளின் பார்வை தன்னைப் பாராமல் வேறெங்கோ பதிந்திருந்ததையும் கவனிக்கலானான்.
அவர்களுக்கிடையில் நிலுவிய மௌனத்தை ஜென்னி கலைத்தாள்.
அவள் டேவிடின் புறம் திரும்பி, "ஏதோ பேசணும்னு சொன்னாரு இல்ல... சீக்கிரம் பேசச் சொல்லுங்க டேவிட்" என்று அவள் சொல்ல,
அவளின் பாராமுகத்தில் சற்று கோபமானவன் டேவிடிடம், "தப்பா எடுத்துக்காதீங்க டேவிட் சார்... நான் சாக்ஷிகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்க,
அவள் உடனே, "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... நீங்க இங்கயே இருங்க" என்றாள் டேவிடைப் பார்த்து!
மகிழ் அவளைக் கோபமாய் முறைத்தான். டேவிட் அவர்களுக்கிடையில் நிற்பதைச் சங்கடமாய் உணர்ந்து, "இல்ல ஜென்னி நான்" என்று ஏதோ சொல்ல எத்தனிக்க,
ஜென்னி டேவிடை பார்த்த பார்வையில் அவன் மேலே பேசாமல் அமைதியாய் நின்றான். மகிழுக்கு வியப்பாய் இருந்தது. அத்தனை பெரிய சேனல் எம்.டி. இவளின் ஒற்றை பார்வைக்கு அடங்கி நிற்பதைப் பார்க்க!
மகிழ் அமிழ்ந்த குரலில், "சாக்ஷி புரிஞ்சுக்கோ... நான் உன்கிட்ட கொஞ்சம் பர்ஸனலா பேசணும்" என்றவனை அவள் திரும்பியும் பாராமல்,
"அவர் என்கிட்ட பர்ஸனலா பேசுறளவுக்கு என்ன இருக்கு டேவிட்" என்று கேட்டவளை டேவிட் புரியாத பார்வையோடு,
"என்கிட்ட கேட்காம... அங்க நேரடியா கேளு ஜென்னி" என்றான்.
"அவசியமில்ல... அவர்தான் என்கிட்ட பேசணும்னு சொன்னாரு... நான் இல்ல" என்று அவள் சொல்ல, டேவிட் மகிழைப் பார்த்தான்.
அவன் சீற்றத்தோடு, "சாக்ஷி கொஞ்சம் என்னைப் பார்த்து என்கிட்ட பேசுறியா?!" என்றவன் கேட்க
அவள் எரிச்சலான பாவனையோடு, "அவரை என்னை சாக்ஷின்னு கூப்பிட வேணாம்னு சொல்லுங்க டேவிட்" என்றான்.
மகிழ் கோபத்தோடு, "நான் அப்படிதான்டி கூப்பிடுவேன்" என்றதும் டேவிடின் முகம் மாற்றமடைந்தது.
"இது சரிபட்டு வராது... நீங்க வாங்க டேவிட் போலாம்" என்று சொல்லி அவள் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, டேவிடுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
"ஜென்னி நில்லு" என்று டேவிட் அழைக்க,
"இப்போ வரப் போறீங்களா இல்லையா?" என்று நடந்து கொண்டே கேட்டாள்.
மகிழ் குரலைஉயர்த்தி, "நீ கோபத்துல போகல... பயத்தில ஓடுறன்னு எனக்கு நல்லா தெரியுது" என்றதும் அவள் திரும்பி நின்று,
"யாருக்கு பயம்?" என்று கேட்டவளை மகிழ் நெருங்கி வந்து,
"பயம் இல்லைன்னா என் கண்ணைப் பார்த்து பேசு" என்றான்.
அவள் மௌனமாய் நிற்க டேவிட் அப்போது ஜென்னியிடம், "பேசிட்டு வா ஜென்னி... நான் கார்கிட்ட வெயிட் பண்றேன்" என்க,
மகிழ் உடனே, "வேண்டாம் டேவிட் சார்... நீங்க இருங்க... அப்பதான் ஜென்னி மேடமுக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்" என்று எள்ளலாய் உரைத்தான்.
ஜென்னி கைகளைப் பிசைந்து கொண்டு தலையைக் கவிழ்ந்து நிற்க, டேவிடுக்கு அவர்கள் இடையில் நிற்பதில் கொஞ்சமும் உடன்பாடில்லை.
அவன் தவிப்புற்றிருக்க மகிழ் அவனை நோக்கி, "இவங்க கண்டிப்பா சாக்ஷி இல்லை டேவிட் சார்... ஏன்னா சாக்ஷிக்கு பயம்னா என்னன்னு தெரியாது... பார்வையில்லாத போது கூட எதிர்க்கே நிற்கிறவங்களோட குரல் வர திசையை வைச்சே அவங்க முகத்தைப் பார்த்து பேசுவா... ஆனா மிஸ். ஜென்னிக்கு கண்ணிருந்தும் ஒருத்தங்களை நேரா பார்த்து பேச பயமா இருக்கு" என்று உரைத்தான்.
"போதும் அவரை நிறுத்த சொல்லுங்க டேவிட்?" என்று அவள் டேவிடிடம் கோபமாகி உரைக்க,
"நீ முதல்ல நிறுத்து ஜென்னி... எதுக்காக இந்த கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிட்டிருக்க... மகிழ்கிட்ட நேரடியா பேசு... நான் கார்ல வெயிட் பண்றேன்" என்று அதிகாரமாய் சொல்லிவிட்டு அவன் விறுவிறுவென நடந்து அவர்களை விட்டு விலகி வெகுதூரம் சென்றுவிட, ஜென்னி அப்போதும் மகிழைப் பார்க்காமல் கடலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் நினைவில் இப்போதும் ஆழமாய் அழுத்தமாய் பதிந்திருப்பது அவன் குரல் மட்டும்தான். அவள் உயிராய் நேசித்த அந்தக் குரலுக்குரிய முகத்தை இனி பார்த்து என்னவாகப் போகிறது ?
அந்த எண்ணம்தான் அவளுக்கு. அவனைப் பார்க்க தவிர்த்திருந்தவளை அவனும் பார்க்க முடியாத தவிப்போடு கடலலைகளைப் பார்த்த வண்ணம்தான் நின்றிருந்தான்.
இருவருக்குமே அவர்கள் எத்தகைய உறவோடு ஒருவரை ஒருவர் எதிர்கொள்வதென்ற தயக்கம்தான். காதலோடு பழகிவிட்டு அதை மறந்து அல்லது மறுத்து நட்போடு பேசிக் கொள்ள முடியுமா?
அவர்களுக்கு இடையில் தொட்டு உணர முடியாத ஓர் மாயக்கண்ணாடி திரை நின்றிருக்க, அதை இருவருமே ஒருபோதும் உடைத்துவிடாமல் இருக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்படி அந்த கண்ணாடித்திரை உடைந்துவிட்டால் அது இருவரின் உணர்வுகளையும் ஒருசேரக் காயப்படுத்திவிடலாம். ஆனால் அது எத்தனைத் தூரம் சாத்தியம்?
44

Quote from Muthu pandi on June 30, 2021, 12:38 PMNice
Nice