மோனிஷா நாவல்கள்
Naan Aval Illai - 47
Quote from monisha on November 29, 2020, 9:00 PM47
சிதறிய இரு நெஞ்சங்கள்
மகிழ் பரபரப்பாய் அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். தேடித் தேடி ஒவ்வொரு பொருளையும் எடுப்பதற்குள் அவனுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. ஆதனாலயே காலதாமதமானது.
தன் அறையை விட்டு தயாராகி வெளியே வந்தவன் டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு, "மாயா... டிபன் எடுத்துட்டு வா" என்று கத்தலாய் அழைக்க,
சமையலறையில் இருந்து வெளியே வந்த அவன் தாய் வள்ளி தட்டில் தோசையை எடுத்து வந்து வைக்க, அவன் முகம் சுருங்கிப் போனது.
'சே மாயாதான் இல்லையில்ல' என்றவன் நெற்றியில் தேய்த்துக் கொள்ளவள்ளி அவனிடம் , "சாப்பிடுப்பா" என்றார்.
ருசி பசி அறியாமல் பெயருக்கென்று அந்த தோசையை விழுங்க முடியாமல் விழுங்கியவனுக்கு ஒருநிலைக்கு மேல் அது தொண்டைக்குள் இறங்க மறுத்தது.
அறைகுறையாய் சாப்பிட்டுவிட்டு கைகளை அலம்பிக் கொண்டு,"நான் புறப்படறேன் மா" என்க,
அவர் மெலிதான குரலில், "மகிழ்" என்றழைத்தார்.
"ம்ம்ம்... சொல்லுங்கம்மா" என்று அவன் பேகைத் தோளில் மாட்ட,
அவர் தயக்கத்தோடு, "மாயாவை" என்று இழுக்க,
அனலாய் பார்த்தவன், "அவ பெயரைக் கூட நான் கேட்க விரும்பல" என்றான்.
"அப்புறம் எதுக்குடா மாயா மாயான்னு தொட்டுதுக்கெல்லாம் அவ பேரைக் கூப்பிடுற" என்றவர் கோபமாகவே கேட்க,
அவன் எரிச்சலோடு, "பழகிப் போச்சு... அதான் கூப்பிட்டேன்... ஆனா அந்த பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்க பார்க்குறேன்" என்றதும் அவர் அதிர்ந்து போனார்.
"என்ன மகிழ் இப்படி சொல்ற?" என்று அவர் கேட்க,
"மா ப்ளீஸ்... நான் ஆபீஸ் கிளம்பணும்... என்னை இரிடேட் பண்ணாதீங்க" என்று சொல்லிவிட்டு வாசல்புறம் சென்று மறைந்துவிட்டான்.
இரண்டு நாள் முன்பு, இருவருக்கிடையில் வாக்குவாதம் முற்றி மாயா வீட்டை விட்டே வெளியேறிவிட்டாள். மகிழ் அவளைத் தடுக்கவும் முற்படவில்லை. இந்த நிகழ்வால் வள்ளியும் ஞானசேகரனும் உள்ளூர ரொம்பவும் காயப்பட்டனர். இருந்தாலும் இந்த நிலைமை சரியாகிவிடும் என்று அவர்கள் நம்பியிருக்க, மகிழின் பதில் அவரின் நம்பிக்கையை தூள்தூளாய் நொறுக்கியிருந்தது.
மருமகளையும் மகனையும் எப்படி ஒன்றிணைக்கப் போகிறோம் என வள்ளியும் ஞானசேகரனும் செய்வதறியாது திகைத்திருந்தனர். அதே நிலைமைதான் மாயாவாவின் பெற்றோருக்கும். மகள் கணவனோடு பிரச்சனை செய்துவிட்டு வந்திருக்கிறாள் என்பது புரிந்தது. எதனால் என்ற காரணம்தான் இருவருக்கும் புரியவில்லை.
அன்று மகிழ் கடற்கரையில் ஜென்னியை பார்த்துவிட்டு புறப்பட்டவன் வீட்டினை வந்தடைந்த போது நேரம் இரவு மூன்றாகியிருந்தது. அவன் இரவு தாமதமாய் வருவதெல்லாம் புதிதல்ல.
கதவைத் திறந்துவிட்டவள் அவன் உள்ளே நுழைந்ததும் "சாப்பிட்டீங்களா?" என்று கேட்க,
"ஹ்ம்ம்" என்றவன் அவளை நேர்கொண்டு பார்க்காமல் நேராக தன் அறைக்குள் நுழைந்து குளித்து உடைமாற்றிக் கொண்டிருக்க,
மாயா அவனிடம், "ஏன் இவ்வளவு நேரமாச்சு?" என்று வினவினாள்.
"என்ன புதுசா கேட்குற? நைட்ல ஷுட் இருக்கும் போது இந்த டைம் ஆகிடும்தானே"
அவள் முகத்தைப் பாராமலே உரைத்துவிட்டு அவன் சோர்வாய் படுக்கையில் சரிந்தபடி, "லைட் ஆஃப் பண்ணு மாயா... டயர்டா இருக்கு... தூங்கணும்" என்றான்.
"அதுக்குள்ள படுத்துட்டா எப்படி? உங்க முன்னாள் காதலி என்ன சொன்னான்னு சொல்லவே இல்லையே" என்க, மகிழுக்கு அந்த வார்த்தை சுருக்கென்றது.
அதிர்ந்தபடி அவளைப் பார்க்க அவளோ ரொம்பவும் இயல்பான புன்முறுவலோடு நின்றாள். அவன் அவளை எதிர்கொள்ள முடியாமல், "மாயா... அது" என்று தடுமாற,
அவன் அருகாமையில் வந்து நின்றவள், "ஈவனிங் எழில் அண்ணி வீட்டிற்கு வந்திருந்தாங்க... ஏதோ முக்கியமா பேசணும்னு ஜெனித்தாவோட நம்பரை வாங்குனீங்களாமே?" என்றாள்.
'இப்படி பண்ணிட்டியே எழில்' என்று மனதிற்குள் அவன் புலம்பிக் கொள்ள அவள் மேலும்,
"ஈவனிங் உங்க கொலிக் ஷிவாகிட்ட பேசினேன்... நீங்க காலையிலயே ஷுட் முடிச்சிட்டு ஏதோ அவசரமான வேலை இருக்குன்னு கிளம்பிட்டீங்களாம்" என்றவள் சொன்னதும்,
அவன் சீற்றமான பார்வையோடு, "எது கேட்கிறதா இருந்தாலும் நீ என்னை இல்ல கேட்டிருக்கணும்... உன்னை யாரு ஷிவாவுக்கு கால் பண்ண சொன்னது" என்றவன் சீற்றமானான்.
"நீங்க கேட்டிருந்தா அப்படியே உண்மையைச் சொல்லி இருப்பீங்களா?ஏன் ... இப்போ கூட ஏன் லேட்டுன்னு கேட்டேனே... நீங்க என்ன பதில் சொன்னீங்க?" என்று அவள் கூர்ந்து அவனை நோக்க,
"நான் எதையும் மறைக்கணும் நினைக்கல மாயா... அப்புறமா உன்கிட்ட சொல்லலாம்னுதான்" என்றான்.
அவள் புருவத்தை ஏற்றி, "அதென்ன அப்புறமா? அவளைப் பார்க்கணும்னு நீங்க முடிவு பண்ண போதே என்கிட்ட சொல்லி இருக்கணும்" என்றாள்.
"ஆமாம்... நான் சொல்லி இருக்கணும்... ஆனா நான் அப்போ இருந்த மனநிலை அப்படி... அதை நான் உனக்கு எப்படி புரிய வைப்பேன்" என்றவன் தவிப்புற,
அவள் உக்கிரமான பார்வையோடு, "நீங்க எதையும் புரிய வைக்க வேண்டாம்... எனக்கே எல்லாம் நல்லா புரியுது" என்றாள்.
"அவசரப்படாதே மாயா... நானே நடந்ததை உனக்கு தெளிவா சொல்றேன்" என்று அவன் பொறுமையாக எடுத்துரைக்க,
"நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்... உங்க முகமும் கண்ணுமே சொல்லுதே... என்ன நடந்திருக்கும்னு" என்று சொல்லி அவள் தாங்க முடியாமல் முகத்தை மூடி அழுதாள்.
"ப்ளீஸ் மாயா... நீயா எதையாச்சும் கற்பனை பண்ணிக்காத... ஆக்சுவலா நான் அவளைப் பார்க்க போன ரீஸன் என்னன்னு தெளிவா சொல்றேன்... நீ முதல்ல உட்காரு... நாம நிதானமா பேசுவோம்" என்று அவளைத் தேற்றி கரத்தைப் பிடித்து அவன் அமர வைக்க எத்தனிக்க,
அவள் அவன் கரத்தை உதறிவிட்டு அழுதுவடிந்த விழிகளோடு,
"என்ன ரீஸன்னு நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... அது எனக்கே தெரியும்" என்றாள்.
அவளின் செய்கை அவனைக் கோவப்படுத்திவிட சத்தமாய் "என்னடி தெரியும் உனக்கு?" என்று கேட்க,
"அவ ராகவை கல்யாணம் பண்ணிக்க போறது உங்களுக்கு பொறுக்கல... அதைப் பத்தி கேட்கதான் போயிருப்பீங்க" என்று குரலை உயர்த்தினாள்.
எரிச்சலானவன், "மண்ணாங்கட்டி... அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்ல" என்றான்.
"ப்ச்... சும்மா சமாளிக்காதீங்க மகிழ்... அவ உயிரோடு இல்லாதிருந்த போதே அவ மேல பைத்தியமா இருந்த ஆள் நீங்க... இப்போ வேற அவ உயிரோடு உங்க கண் முன்னாடியே இருக்கும் போது உங்க மனசு அவ பக்கம் சாயாமலா இருக்கும்" என்க, அவனின் சீற்றம் அதிகரித்தது.
அவளே மேலும், "பரவாயில்லை... உங்களுக்கு அவதான் வேணுங்குற பட்சத்தில கோஅஹெட்... நிச்சயமா உங்க காதலுக்கு இடையூறா நான் இருக்க மாட்டேன்... நாம வேணா விவாகரத்து பண்ணிக்கலாம்" என்று அவள் பொறிந்து தள்ள அவன் ரௌத்திரமானான்.
அவள் கன்னத்தில் பளீரென்று அறைந்துவிட்டு அவன் மூச்சுவாங்கி நிற்க, அவளோ மிரட்சியடைந்தாள். அந்த அறை முழுவதும் சில நிமிடங்கள் நிசப்தம் ஆக்கிரமித்துக் கொள்ள, அதிர்ச்சியிலிருந்து மீண்டவள் உடனடியாக ஒரு பேகை எடுத்து அதில் அவள் துணிகளை நிரப்பினாள்.
அவன் அவள் கரத்தைப் பிடித்து, "என்னடி பண்ணிகிட்டிருக்க?" என்று கேட்க,
"பார்த்தா தெரியல" என்று சொல்லி அவன் கையை உதறியபடி அவளின் உடைகளைத் திணிக்க ஆரம்பித்தாள்.
"எது பண்றதா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு பண்ணு" என்றவன் பொறுமையோடு சொல்ல,
அவனைப் பார்வையாலயே தாக்கியவள், "நீங்க என்னை அடிக்கும் போது யோசிச்சீங்களா?" என்று கேட்டாள்.
"நீ வார்த்தையை விடறதுக்கு முன்னாடி யோசிச்சியா?" என்றவன் கேட்க,
அவள் கோபம் பொங்க, "நீங்க சாக்ஷியை பார்க்கிறதுக்கு முன்னாடி என்னைப் பத்தி ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சீங்களா?" என்றவள் அழுத்தமாய் வினவ, அவர்களின் வாக்குவாதம் வளர்ந்து கொண்டே இருந்ததே ஒழிய நிற்கும் நிலையில் இல்லை.
அவன் பதில் பேசாமல் மௌனமாய் நிற்க, அவள் தன் பேகை மூடி கையில் ஏந்திக் கொண்டாள்.
அவன் அவளை வழிமறித்து நின்றபடி, "எதுவாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம் மாயா" என்றான்.
"தேவையில்லை... வழிவிடுங்க" என்றவளின் முகமோ முற்றிலும் இறுகியிருந்தது.
"ஸாரி... உன்னை நான் அடிச்சிருக்கக் கூடாது... தப்புதான்... ஆனா அதுக்காக எல்லாம் நீ இவ்வளவு பெரிய முடிவெடுக்குறது சரியில்லை" என்றவன் இறங்கி வர,
"நீங்க அடிச்சதுக்காக நான் புறப்படல... இனிமே உங்க லைஃப் லவ் இரண்டுக்கும் தொந்தரவா நான் இருக்க கூடாதுன்னுதான் போறேன்"
"இரண்டுமே நீதானடி" என்று அவன் சொல்லவும் அவள் கண்ணீரோடு அவனை ஏறிட்டாள்.
அவன் அவள் கன்னங்கள் தழுவியபடி, "நான் உன்கிட்ட பொய் சொன்னது தவிர வேறெந்த தப்பும் செய்யலடி" என்று அவன் தெளியப்படுத்த எத்தனிக்க,
"உங்க கண்ணியத்தைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் மகிழ்"என்றாள்.
அவன் சற்று நிம்மதியடைய அவள் மேலும், "அதே சமயம்... இவ்வளவு நாளுக்கு பிறகு நீங்க உயிருக்கு உயிரா நேசிச்ச சாக்ஷியை பார்த்து கண்ணியமா நடந்திருப்பீங்கன்னு எனக்கு தோணல" என்க, அந்த நொடி நம்பிக்கை என்ற அவர்களின் உறவின் பாலம் முறிந்து வீழ்ந்தது.
மாயா அவள் கன்னத்திலிருந்து அவன் கரத்தை விடுவிக்க எத்தனிக்க, அவன் அவளை பிடிவாதமாய் கட்டியணைத்துக் கொண்டு, "நீ எனக்கு வேணும் மாயா... ப்ளீஸ் டோன்ட் கோ" என்று கெஞ்ச, அவள் மனம் அவனிடம் இறங்க மறுத்தது.
அவன் காதோரம், "உங்களுக்குக் காதலிக்க அவ... மத்ததுக்கெல்லாம் நானா?!" என்றவள் வெறுப்போடு கேட்க, அவள் உதிர்த்த வார்த்தைகள் அவன் மேல் தீயை வாரி இறைத்தது போல் இருந்தது.
அவளை விட்டுப் பின்வாங்கியவன் முகத்தைச் சுளித்தபடி, "நீ புறப்படு" என்று வழிவிட்டு நின்றான். அவன் விழிகள் கனலேறி இருக்க அவள் போகாமல் அவனை நோக்கினாள்.
மகிழ் உச்சபட்ச கோபத்தோடு அவள் நிற்பதைப் பார்த்தவன், "எதுக்குடி நிற்கிற?... போகணும்னு முடிவு பண்ணிட்டல்ல போயிடு" என்றான்.
வேந்தனில் ஆரம்பித்து சாக்ஷி வரை எல்லோருமே அவன் மனதைக் காயப்படுத்தியிருக்க, மாயாவும் அந்த வேலையை செவ்வனே செய்துவிட்டாள். அவன் நிலையைக் கவனிக்காமல் மாயா முன்னேறிச் செல்ல அவள் அறை வாசலை எட்டிய போது,
மகிழ் அவளிடம், "நான் சொல்றதைக் கேட்டுக்கோ.... தப்பித் தவறி கூட உன்னை நான் தேடி வருவேன்னு நினைக்காதே... அது இந்த ஜென்மத்துல நடக்காது" என்றான் உக்கிரத்தோடு!
அவளும் சீற்றமாய் திரும்பி, "நீங்களும் நானா திரும்பி வருவேன்னு கனவில கூட நினைக்காதீங்க... அதுவும் இந்த ஜென்மத்துல நடக்காது" என்றவள் கதவைத் திறந்து வேகமாய் வெளியேறினாள்.
வீராவேசமாய் சவால் விட்டுப் புறப்பட்டு வந்தாலும் மாயாவால் அவன் இல்லாத அந்த இரண்டு நாட்களைக் கடப்பதே ரொம்பவும் சிரமமாயிருந்தது. மனமெல்லாம் அவன் நினைவாலேயே உழன்று கொண்டிருக்க அவள் பொழுதெல்லாம் அழுது வடிந்தபடியே கிடந்தாள்.
யாழ்முகைக்கு மகளை எப்படித் தேற்றுவதென்றே புரியவில்லை. மகிழுக்கு பேசியின் மூலம் அழைத்து அவர் பேச, அவன் சுருக்கமாய் "நான் உங்க பொண்ணை அனுப்பல ஆன்ட்டி அவளாதான் புறப்பட்டு போனா" என்றான்.
அவர்களின் பிரச்சனை எதுவென்று தெரியாமல் யாழும் மகிழிடம் அது குறித்து பெரிதாய் கேட்டுக் கொள்ளவில்லை.
மாயா விட்டத்தைப் பார்த்தபடி அவள் படுக்கையில் கிடக்க, அவளின் இருவிழிகள் கண்ணீரை உதிர்த்திருந்தது.
யாழ்முகை மெதுவாய் உள்ளே நுழைந்து, "மாயா" என்று குரல்கொடுக்க, அவள் அவசரமாய் எழுந்து அமர்ந்து தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
"ஏன்டி இப்படி இருக்க? என்னதான்டி பிரச்சனை... வாயைத் திறந்து சொல்லித் தொலையேன்" என்று கோபமாக கடிந்து கொண்டாலும் அவர் முகமோ வருத்தமுற்றிருந்தது.
"சொன்னா மட்டும் என் பிரச்சனை தீர்ந்திருமா?" என்று கேட்டு முறைப்பாய் அவள் பார்க்க,
"அப்படி என்னதான்டி தீராத பிரச்சனை" என்று மீண்டுமே அவர் வினவ,
"வேண்டாம்மா... விட்டுடுங்க... என் பிரச்சனை என்னோட போகட்டும்" என்றவள் சற்று கண்டிப்பாகவே தன் தாயை பார்த்து சொல்லவும், அவர் ஏக்கப்பார்வையோடு மகளின் அறையை விட்டு வெளியேறினார்.
வாசலில் மாதவன் நின்றிருக்க யாழ்முகை ஆதங்கத்தோடு, "இவ என்னங்க இப்படி பிடிகொடுக்காம பேசுறா" என்றார்.
மாதவன் மனைவியை நிதானித்த பார்வையோடு, "நீ ஏன் இவ்வளவு டென்ஷனாகுற? இதெல்லாம் கணவன் மனைவிகளுக்குள்ள சகஜம்தான்" என்றவர் சொல்ல,
யாழ் அச்சத்தோடு, "எனக்கென்னமோ அப்படி தோணல" என்றார்.
மாதவன் அவர் கரத்தை ஆதரவாகப் பற்றி, "உன் பொண்ணு வந்ததிலிருந்து மகிழை பத்தி ஒரு குறை கூட சொல்லல... கவனிச்சியா?!" என்றவர் கேட்க, "ஹ்ம்ம்" என்று யாழும் ஆமோதித்தார்.
"மகிழுக்கு ஃபோன் பண்ணி பேசுனியே... அவர் மாயாவைப் பத்தி ஏதாவது குறை சொன்னாரா?" என்றவர் வினவ யாழ்முகை யோசனையோடு இல்லை என்பது போல் தலையசைக்க,
"இதுக்கு பேர் சண்டையில்ல... அதீத காதலால வர்ற ஊடல்... நீ வேணா பார்த்துக்கிட்டே இரு... அவங்களே சரியாயிடுவாங்க" என்றவர் சமாதானம் உரைக்க, யாழ்முகையின் மனம் ஏனோ நிம்மதி பெறவில்லை.
அவர்கள் இருவரும் கணவன் மனைவியாய் உண்மையில் வாழ்கிறார்களா என்ற சந்தேகம் அவருக்கு இருக்க, இந்தப் பிரச்சனையால் அவர்களின் உறவு மொத்தமாய் முறிந்துவிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு இடையில் நிகழ்ந்தது ஈகோவினால் ஏற்பட்ட மோதல் அல்ல. உணர்வுகளால் உணர்வுப்பூர்வமாய் ஏற்பட்ட மோதல்.
கண்ணாடித் துண்டுகளாய் சிதறிய இரு நெஞ்சங்களும் மீண்டும் இணைவதும் இணைக்கப்படுவதும் அத்தனை சுலபம் அல்ல.
47

Quote from Muthu pandi on June 30, 2021, 1:13 PMNice
Nice