மோனிஷா நாவல்கள்
Naan Aval Illai - 5
Quote from monisha on November 29, 2020, 8:06 PM5
காந்தமானவள்
மகிழ் ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளர். சிறுவயதிலிருந்தே அவன் பேசுவதில் வல்லவன். படிக்கிறானோ இல்லையோ... ஓயாமல் பேசி ஆசிரியர்களிடம் தண்டனை பெறுவான். எல்லோருமே அவனிடம் குறையாய் சொன்ன விஷயத்தை அவன் தன் நிறையாய் மாற்றிக் கொண்டான்.
அவனின் துருதுருப்பான பேச்சை தன் வேலையாக, வாழ்க்கையாகவே மாற்றிக் கொண்டான். எல்லோருமே அவன் வசீகரமான குரலிலும், அடை மழையாய் கொட்டித் தீர்க்கும் அவன் பேச்சிலும் கவர்ந்திழுக்கப்பட, அவள் மட்டும் விதிவிலக்கா என்ன?
அவளுக்கு அவன் நிகழ்ச்சியைக் கேட்பதில் அலாதியான இன்பம். அவன் ஆண்மை நிறைந்த குரல்... அவன் பேசும் விதத்தில் இருந்த நேர்த்தி மற்றும் தெளிவு என அவளின் ரசனைக்குரியவனாய் அவன் மாறியிருந்தான்.
மகிழ் எப்போதும் போல் அன்று நிகழ்ச்சியைத் தொகுத்து கொண்டிருந்தான். அது காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி
"நீங்க கேட்டுட்டு இருக்கிறது ரேடியோ ஸ்கை... 95.5... நான் உங்க மகிழ்... இன்னைக்கு நாம பேசப் போற விஷயம் காதல் காதல் காதல்... காதல்னு சொன்னதுமே எல்லோர் மனசிலும் பட்டாம்பூச்சி பறக்குமே... காதல் அனுபவமே ஒரு சுவராஸ்யம்”
“ஆனா காதல் அனுபவமே இல்லாதவங்களுக்கு அது இன்னும் இன்னும் சுவராஸ்யம்... ஏன்னா... தெரியாத விஷயத்திலதானே ஆர்வமும் ஈர்ப்பும் அதிகமாயிருக்கும்... எனக்கும் அப்படிதான்”
“ஸோ லிஸனர்ஸ் எல்லாரும் டபுள் த்ரீ... டபுள் த்ரீ... டபுள் சிக்ஸ் டபுள் சிக்ஸுக்கு கால் பண்ணி என்கிட்ட
உங்க இறந்த கால காதல்... நிகழ் கால காதல்... அப்புறம் வருங்கால காதல்னு எந்த மாதிரியான காதல் அனுபவமா இருந்தாலும் ஷேர் பண்ணிக்கலாம்" என்று அவன் படபடவென பேசி முடிக்க, வரிசையாய் நிறைய நேயர்களோடு பேசிய போதுதான் முதல் முறையாய் சாக்ஷி அவனிடம் பேசினாள்.
"ம்ம்ம்... சொல்லுங்க சாக்ஷி.. என்ன பண்ணிட்டிருக்கீங்க?"
"கச்சேரிகளில் வீணை வாசிக்கிறேன்"
"சூப்பர்... வீணைன்னு சொன்னதும் நம் பாரதியாரோட ஒரு அழகான காதல் கவிதை ஞாபகத்துக்கு வருது... என்னம்மா எழுதியிருப்பாருன்னு தெரியுங்களா?"
"தெரியுமே"
"அப்போ சாக்ஷி நம்ம நேயர்களுக்காக அந்த கவிதையை சொல்லலாமே... பாடினாலும் ஒகேதான்... உங்க வாய்ஸ் வேற ஸ்வீட்டா இருக்கு"
"அய்யோ... பாடத் தெரியாது... வேண்ணா சொல்றேன்"
"வீணை வாசிக்கும் சாக்ஷி நமக்காக வீணையடி நீ எனக்கு கவிதையை சொல்லப் போறாங்க... ம்ம்ம்... சொல்லுங்க சாக்ஷி"
"பாயு மொளி நீ யெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சுறையமுதே! கண்ணம்மா!
வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!
வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி, நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!
வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!
வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!" என்றவள் அங்கே நிறுத்துவிட,
"ம்ம்ம்... இன்னும் முடியலயே" என்று அவன் ஆர்வமாய் கேட்டான்.
"முழுசா சொல்லிட்டிருந்தா ஷோ முடிஞ்சிருமே"
"பரவாயில்லை... நீங்க சொல்லிட்டிருந்தா... கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு... கன்டினியு பண்ணுங்க"
"இல்ல... அவ்வளவுதான் நினைவு இருக்கு"
"என்ன சாக்ஷி நீங்க?... எனக்கு பிடிச்ச வரியை சொல்லாம விட்டுட்டீங்களே... காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு... என்னம்மா ரசிச்சு எழுதி இருக்காருயா... சரி பாரதியோரோட காதல் இருக்கட்டும்… சாக்ஷியோட காதலைப் பத்தி சொல்லாமே" என்றவன் கேட்க லேசாய் ஒரு மௌனம்.
"அருவியா கவிதையெல்லாம் கொட்டிட்டு... காதல்னதும் சட்டுன்னு சைலன்ட்டாயிட்டீங்க... சொல்லுங்க ஃ ப்யூச்சரா... பாஸ்ட்டா... ப்ரசன்ட்டா?!"
அவள் தன் மௌனத்தைக் கலைக்க,
"ஹ்ம்ம்... எனக்கு ப்ரசன்ட்தான்... ஆனா ஃப்யூச்சரான்னு நீங்கதான் சொல்லணும்" தொடர்ச்சியாய் பேசிக் கொண்டிருந்தவன் அவள் சொன்னதன் அர்த்தம் புரியாமல் சற்று நிதானித்து,
"என்ன சொல்ல வர்றீங்க சாக்ஷி ?" என்று கேட்க,
"உங்களை மாதிரி ஒருத்தர் கிடைச்சா காதலிக்கலாமே" என்று அவள் பளிச்சென்று உரைத்துவிட்டாள். அந்த நொடி மகிழுக்கு உண்மையிலேயே பட்டாம்பூச்சி பறந்த உணர்வுதான். அவள் யாரோ? என்னவோ? சட்டென்று சுதாரித்து கொண்டவன்,
"கவலைப்படாதீங்க... கண்டிப்பா என்னை மாதிரி தொண தொணன்னு பேசுற ஒருத்தரை நீங்க மீட் பண்ணுவீங்க சாக்ஷி... இது சாபமா வரமா தெரியல... எனி ஹவ்... ஆல் தி பெஸ்ட்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தவன்,
"இன்னும் நிறைய பேசுவோம்... நிறைய பேரோட பேசுவோம்... ஒரு காதல் பாடல்... உங்களுக்காக" என்று தன் உரையை முடித்து பாடலை ஒலிக்க செய்தான்.
"காதல் மழையே காதல் மழையே
எங்க விழுந்தாயோ...
கண்ணில் உன்னைக் காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ!"
இந்தப் பாடல் பாடிக் கொண்டிருக்க மகிழின் மனமும் காதல் சாரல் பட்டு நனைந்தது. இப்படி பலர் அவன் குரலை பற்றிப் புகழ்ந்திருந்தாலும்... அவள் குரலில் ஏதோ மாயம் இருப்பதாகத் தோன்றிற்று. காந்தமாய் அவளிடம் அவனை ஈர்த்துச் சென்றதே!
அவன் செவியில் ஓயாமல் அந்தக் கவிதை ஒலித்துக் கொண்டே இருந்தது. அதுவும் அவளின் குரலில்... பாரதியின் விரல்நுனியில் உதித்த வரியின் மாயமா அல்லது தேமதுரமாய் இனித்த அவளின் குரலின் மாயமா?!
ஒரு பெண்ணை பார்த்து ஈர்ப்பு வருவது இயல்பு. அவளின் குரலிலும் பேசிய விதத்திலும் கூட ஈர்ப்பு வருமா!
அப்போது அவனுக்கு வள்ளுவனின் குரல் ஒன்று நினைவுக்கு வந்தது.
"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள"
ஒரு பெண்ணால் மட்டுமே ஐந்து புலன்களுக்கும் இன்பம் நல்க முடியுமாம். வள்ளுவர் அனுபவபூர்வமாய் உணர்ந்தே இந்த வரிகளை வடித்திருப்பார் போல. கடைசியாய் அவள் சொன்னதை நினைவுபடுத்திப் பார்த்தான்.
'உங்களை மாதிரி ஒருத்தரா இருந்தா காதலிக்கலாமே!'
அந்த வார்த்தைகள்தான் அவளைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டிற்று. அவள் அழைத்த எண்ணை வைத்தே அவளிடம் பேசிவிடலாம். மனம் ஏனோ அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அது தவறும் கூட. ஆனால் அந்தக் குரலையும் அவள் பேசியதையும் மறக்கவும் முடியவில்லை.
அவன் அலுவலகம் முழுக்க 'சாக்ஷி சாக்ஷி சாக்ஷி' என்று அவள் பெயரே ஒலித்துக் கொண்டிருந்தது. ரேடியோ ஸ்கை அலுவலகத்தின் அப்போதைய ஹாட் டாபிக் சாக்ஷிதான்!
அந்தளவுக்கு மகிழ் தன் அலுவலகம் முழுக்க அவளைப் பற்றியே பேசினான். அவளை பார்க்க வேண்டும். மீண்டும் அவள் குரலைக் கேட்க வேண்டுமென்ற ஆர்வம் நாளடைவில் அவனுக்கு அதிகரித்துக் கொண்டே போனது.
ஒவ்வொரு முறை அவன் நிகழ்ச்சி தொகுக்கும் போதும், மீண்டும் அவள் தன்னிடம் பேசமாட்டாளா? என்ற எதிர்பார்ப்போடு தொடங்கி ஏமாற்றமாய் முடிந்தது அவனுக்கு.
அனுபவித்திராத பார்க்காத விஷயங்களில்தான் ஈர்ப்பும் ஆர்வமும் அதிகம் என்ற அவனின் வார்த்தையே அவனுக்குள் எதிரொலித்தது. அவளைப் பார்த்துவிட்டால் இந்த ஈர்ப்பும் ஆர்வமும் அடங்கிவிடலாம் என்று தோன்றியது. அதே நேரத்தில் அவனைச் சுற்றியிருந்த நண்பர்களும் அந்த முடிவிற்குத் தூண்டுதலாய் அமைந்திருந்தனர்.
கொஞ்சம் ரசனையோடும் அளவிடமுடியாத கற்பனைகளோடும் அவளைத் தேடும் முயற்சியில் தீவிரமாய் இறங்கினான் மகிழ். சென்னையில் நிகழும் அத்தனை கச்சேரிகளின் பட்டியலும் ரேடியோ ஸ்கையில் குவிந்திருந்தது. சுலபமான தேடலாக இல்லையெனினும் அது சுவராஸ்யமாகத்தான் இருந்தது.
அவனுடைய அலுவலகத் தோழி ஷாலினி நேரடியாக இதுபற்றி அவனிடம், "யாரு என்னன்னு தெரியாத அந்த பொண்ணுக்காக இவ்வளவு சீன் தேவையா? ஜஸ்ட் லீவ் திஸ் மேட்டர் மகிழ்" என்றாள்.
"முடியல ஷாலு... அவ கிட்ட நான் பேசி ஒன் மன்த் ஆயிடுச்சு... அதுக்கப்புறம் எவ்வளவோ ஷோஸ்ல எத்தனையோ நேயர்கள்கிட்ட பேசிட்டேன்... ஆனா அவ வாய்ஸ்... அவ கூட பேசினதை என்னால மறக்கவே முடியல... ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது... அவ வாய்ஸ்ல ஏதோ மேஜிக் இருக்குனு தோணுது" என்றவனின் முகத்தில் வெளிப்பட்ட தவிப்பை ஷாலினி உற்றுக் கவனித்தாள்.
அவன் அவளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் ஏதோ விளையாட்டுத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறான் என்றே எண்ணியிருந்தாள். ஆனால் இத்தனை ஆழமாய் அவனை அவள் பாதித்திருப்பாள் என்பதை ஷாலினியால் நம்பவேமுடியவில்லை.
அருகாமையில் இருந்தும் தான் அவன் மனதை ஈர்க்காமல் போனதன் காரணம் என்ன? இந்தக் கேள்வி அவள் மனதை துளைத்தெடுத்தது.
மகிழைப் பார்த்த முதல் நாளிலேயே ஷாலினிக்கு அவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. அவன் பேசினாலோ கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்ற வசீகரம். என்னதான் ஒருவன் ஆண் அழகனாய் இருந்தாலும் அவனோடு பொருந்தும் ஆண்மை நிறைந்த குரல்நயம் அவனை இன்னும் ஆளுமையோடு காட்டுமே!
அதோடு அல்லாமல் அவன் கண்ணியமாய் பழகும் விதமும் கலகலப்பாய் பேசும் விதமும் என எல்லாப் பெண்களையும் கவரும் குணவியல்பு கொண்டவன்.
அந்த அலுவலகத்தின் கண்ணன் என்று கூட சொல்லலாம். அங்கே இருந்த எல்லாப் பெண்களுக்கும் அவன் மீது ஈர்ப்பு! அவன் பழகியவிதத்தில் ஷாலினிக்கு எப்போது அவன் மீதான ஈர்ப்பு காதலாய் உருவெடுத்தது என்று அவளுக்கே தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஏனோ காதலை சொல்ல முடியாமல் தயங்கியிருந்தாள்.
அவனுடனான நட்புறவு பறி போய்விடுமோ என்ற பயம். ஆனால் ஒரே ஒரு முறை பேசிவிட்டு யாரென்றே தெரியாத பெண் அவள் காதலனைத் தட்டிப் பறிக்கப் பார்க்கிறாள். பார்க்காமலே சாக்ஷி என்ற பெண்ணின் மீதும் அந்தப் பெயரின் மீதும் அதீத வெறுப்பு ஏற்பட்டிருந்தது ஷாலினிக்கு !
இத்தனை விதமான யோசனையில் ஆழ்ந்திருந்த ஷாலினியின் தோள்களைப் பிடித்து உலுக்கினான் மகிழ்.
"என்னாச்சு ஷாலு?"
அவனை நிமிர்ந்து பார்த்து சுதாரித்தவள், "நத்திங்" என்றாள்.
யோசனையோடு அவளைப் பார்த்தவன் பின் இயல்பு நிலைக்குத் திரும்பி, அவளிடம் தன் கையிலிருந்த டிக்கெட்ஸைக் காண்பித்தான்.
"என்ன மகிழ் இது?" என்று வியப்பாக அவள் கேட்க,
"கச்சேரி டிக்கெட்ஸ்... அனிதா ராமகிருஷ்ணன் கச்சேரி... சாக்ஷின்னு ஒரு பொண்ணு இந்த கச்சேரில வீணை வாசிக்கிறதா நம்ம சரண் விசாரிச்சு டிக்கெட்ஸ் வாங்கிட்டு வந்து தந்தான்"
ஷாலுவிற்கு இதைக் கேட்டு இடியே விழுந்தது தலையில். சரண் மட்டும் இப்போது கையில் சிக்கினால் அதோகதிதான். மனதிற்குள்ளேயே அவனை வறுத்து எடுத்தபடி மீண்டும் மௌனமானாள்.
"ஏ ஷாலு... என்ன பிரச்சனை உனக்கு?... நான் பேசிட்டே இருக்கேன்... நீ பாட்டுக்கு பேட்டரி காலியான ஃபோன் மாதிரி தானே ஆஃபாயிடிற... என்ன விஷயமாயிருந்தாலும் வாயை திறந்து சொல்லித் தொலை... எதுக்கு இப்படி மைன்ட் வாய்ஸ்லயே பேசிட்டிருக்க?!" அவள் முகபாவனையாலும் மௌனத்தாலும் எரிச்சலாகக் கேட்டவனை அப்பாவியாய் பார்த்தவள்,
"அதில்ல மகிழ்? நீ தேடுற சாக்ஷி அந்த பொண்ணாதான் இருக்குமான்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன்"
"அதை வாய திறந்து சொல்லி இருக்கலாம் இல்ல... இதுல என்ன உனக்கு மைன்ட் வாய்ஸ் ?" என்றவன் சற்று நிதானித்து,
"நீ கேட்குறதிலயும் பாயின்ட் இருக்கு... ஆனா நான் அந்த பொண்ணுக்கிட்ட பேசினா கண்டிப்பா கண்டுபிடிச்சிருவேன்... அவ வாய்ஸ் நல்லா எனக்கு ஞாபகம் இருக்கு" என்று அவன் சொல்லி முடிக்க அவள் உள்ளுக்குள் காயப்பட்டு நின்றாள். ஆனால் அவனிடம் அதனைக் காண்பித்து கொள்ளவில்லை. பொறுமையாய் அவன் முகத்தை ஏறிட்டவள்,
"நான் கேட்கிறனேன்னு தப்பா எடுத்துக்காதே மகிழ்... நீ அவளை லவ் பண்றியா ?!" என்றதும் மகிழ் இயல்பாய் புன்னகையித்து,
"சே... இல்ல... ஜஸ்ட் ஒரு க்யூரியாஸிட்டி... அவளை பார்க்கணும் அவ்வளவுதான்" என்றான்.
"அவ்வளவுதானா?!"
"ஹ்ம்ம்ம்" என்று தோள்களைக் குலுக்கினான். ஷாலினியின் மனதின் பாரம் முற்றிலுமாய் இறங்கியது. அவன் தெளிவாகத்தான் இருக்கிறான். தான்தான் குழம்புகிறோம் என்று எண்ணியவள் நிம்மதியடைந்து,
"ஒகே... போய் பார்த்துட்டு வா... குட் லக்" என்றாள்.
"என்ன விளையாடுறியா? நீயும் என் கூட வர்ற" என்றான் அதிகாரமாக!
"நானா?" என்றவள் விழிகள் அகல விரிய,
மகிழ் தீர்க்கமாய், "எஸ்... நாளைக்கு ஈவினிங் ஃபைவ் ஓ க்ளார்க்... உன் வீட்டிலயே வந்து பிக்அப் பண்ணிக்கிறேன்... ரெடியா இரு" என்று சொல்லியபடி வெளியேறியவன் மீண்டும் கதவருகில் நின்று,
"ஷாலு மறந்துடாதே... நாளைக்கு ஈவனிங்" என்றான்.
"ஹ்ம்ம்" என்று ஆர்வமாய் தலையை அசைத்தாள்.
அவனுடன் வெளியே செல்லப் போகிறோம் என்று அவள் மனம் குதூகலித்திருந்தது. ஆனால் நாளைய அந்தச் சந்திப்பு அவள் மகிழ் மீது கொண்ட காதலின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் என்று எதிர்பார்த்திருப்பாளா?!
இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அந்தப் பெரிய அரங்கிற்குள் இருவரும் நுழையும் போதே நேரம் கடந்திருந்தது.
ஷாலினியும் மகிழும் அவர்களின் இருக்கையைத் தேடி அமர்ந்தனர். இருக்கை சற்று பின் தள்ளியிருக்க மேடையில் அமர்ந்திருப்பவளை எப்படிப் பார்ப்பது என்று ஏக்கமாய் அமர்ந்திருந்தான். அவன் எண்ணம் புரிந்தவளாய்,
"கச்சேரி முடிந்ததும் மீட் பண்ணி பேசிட்டு போகலாம்... டோன்ட் வொர்ரி" என்று சொல்லித் தன் கரத்தை அவன் கரம் மீது வைத்தாள்.
நட்பு ரீதியான தொடுகை என்று அவன் இயல்பாக எடுத்துக் கொண்டாலும், ஷாலினி காதல் உணர்வோடுதான் அவன் கரத்தைப் பற்றியிருந்தாள்.
அந்த அரங்கம் முழுக்கவும் கர்நாடக இசையின் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. தீட்சண்யமான ஒரு குரல் பாட்டிசைத்துக் கொண்டிருக்க அந்தப் பாடலின் பின்னிருந்து மீட்டப்பட்ட வீணையின் நாதம் உணர்வில் கலந்து உயிரை வருடிச் சென்றது.
ஒவ்வொரு நாடி நரம்புகளிலும் மீட்டப்படும் வீணையின் இசையே கேட்க அதன் தாளகதியில் மகிழ் தன்னிலை மறந்துகிடந்தான்.
இசை நிகழ்ச்சி முடியும் வரை அவன் விழிகள் திறக்கப்படாமல் அதனோடு இயைந்திருந்தான். முடிவுற்ற பிறகும் சிலிர்ப்போடு மெய்மறந்திருந்தவனை, "மகிழ்" என்று அழைத்து ஷாலினி இயல்பு நிலைக்கு இழுத்து வந்தாள்.
இயந்திரத்தனமான நம் வாழ்க்கையை இசையால் மட்டுமே உயிரோட்டமாய் வைத்திருக்க முடியும். அத்தகைய இசைகளோடு தினமும் தன் நாட்களைக் கடப்பவன் எனினும் இந்த இசை அவனுக்கு ரொம்பவும் புதிது. கொட்டும் அருவியில் நீராடி விட்டு வந்ததைப் போல தெளிவுப் பெற்ற மனதோடு விழிகளைத் திறந்தவனிடம்,
"கச்சேரி முடிஞ்சிடுச்சு" என்று ஷாலினி அறிவுறுத்தினாள்.
சட்டென மீண்டெழுந்தவன் சாக்ஷியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலோடு, அரங்கத்திலிருந்து வெளியேறி இசை நிகழ்ச்சி கலைஞர்களை காண ஓடினான். ஏதோ ஒரு உணர்வு சொல்லிற்று. அந்த வீணையை மீட்டியவள் அதே சாக்ஷிதான் என்று.
அவள் குரலில் மட்டுமல்ல... அவள் விரலிலும் ஏதோ மாயம் இருக்கிறது. அங்கே நின்றிருந்த ஒரு இசைக்கலைஞரிடம் சாக்ஷியை பற்றி விசாரிக்க, அவர் முன்னே சென்றிருந்த இரு பெண்களை சுட்டிக்காட்டினார்.
அந்த இருபெண்களில் ஒருத்தி உயரமாய் சிவப்பு நிற பட்டு சேலையில் சென்று கொண்டிருக்க, அவன் அந்தப் பெண்களை நோக்கி முன்னேறிச் செல்வதற்கு முன்னே ஷாலினி அவன் கரத்தைப் பற்றி நிறுத்தினாள்.
"நான் முதல்ல போய் பேச்சுக் கொடுக்குறேன்... நீ பொறுமையா இரு" என்றாள்.
"ஷாலு" என்று தவிப்பில் கிடந்தவனை விடாமல் மேலும்,
"ரொம்ப முக்கியமான விஷயம்... நீதான் மகிழ்... அவளை நீ தேடி வந்திருக்கன்னு தெரிய வேண்டாம்... சும்மா நார்மலா பேசுற மாதிரி பேசிட்டு போயிடுவோம்" என்றாள்.
ஷாலினி சொன்னதை எல்லாம் கேட்டு மகிழின் மனதிலிருந்து ஆர்வமும் உற்சாகமும் வெகுவாய் குன்றிப் போனது. அவன் நடையின் வேகம் குறைய ஷாலினி முன்னேறிச் சென்று,"சாக்ஷி" என்றழைக்க அந்த இருப்பெண்களும் அந்த அழைப்பை ஏற்றுத் திரும்பினர்.
அவர்களில் ஒருத்தி இயல்பான பாணியில் சுடிதார் அணிந்திருக்க, அவளருகில் சிவப்பு நிற சேலையில் நின்றிருந்தவள்தான் சாக்ஷி என்று கணித்தனர்.
பெண்களின் இயல்பான உயரத்தை மிஞ்சிய உயரம். அழகின் அத்தனை அம்சமும் நிறைந்த அந்த முகத்தின் வசீகரத்தைப் பார்த்து ஷாலினி அசந்து நிற்க மகிழ் அவளின் காதோரம், "பேசு ஷாலு" என்றான்.
ஷாலினியும் புன்னகை ததும்ப "நீங்கதான் மிஸ். சாக்ஷியா? " என்று கேள்வியோடு தொடங்க, சாக்ஷி தன் தோழி மாயாவின் புறம் திரும்பி குழப்பமாய் யாரென்று கேட்டாள்.
அவள், "தெரியலையே" என்று சொல்லிவிட்டு ஷாலினியிடம்,
"நீங்க யாரு?" என்று கேள்வி எழுப்பினாள்.
ஷாலினி ஆர்வமாய், "அது... அவங்க வாசிப்புக்கு நானும் என் ஃப்ரண்டும் ஃபேன்ஸாயிட்டோம்... அவ்வளவு நல்லாயிருந்துச்சு" என்றதும்
மகிழும் தன் தோழியோடு சேர்ந்து, "ஆமாம்... உங்க மியூசிக் அப்படியே மெஸ்மரைஸ் பண்ணிடுச்சுங்க... இட்ஸ் அ கிரேட் ஃபீலிங்... ரொம்ப நல்லா இருந்துச்சு" என்றான்.
அடுத்த கணமே சாக்ஷியின் முகமெல்லாம் பொலிவுற, "ஹே... நீங்க ஆர் ஜே மகிழ்தானே?!" என்று கேட்டாள்.
ஷாலினியின் முகம் வியப்பாய் மாற, அப்போது மகிழின் முகம் குழப்பமாய் பார்த்தது. சாக்ஷியின் பார்வை அவனை நேர்கொண்டு பார்க்கவில்லை என்பதுதான் அந்த குழப்பம். அருகில் நின்றிருந்த அவள் தோழியிடம் அவன் சமிஞ்சையால் அவள் பார்வையை பற்றிக் கேட்க மாயாவும் அவன் கேள்வி புரிந்து ஆமோதித்தாள். இதனை ஷாலினியும் உணர்ந்து கொள்ள, இருவரும் அதிர்ச்சியில் நின்றனர்.
அவர்களின் மனநிலையை உணர்ந்திராத சாக்ஷி, "நான் தப்பா கேட்டுட்டேனா நீங்க மகிழ் இல்லையா?!" என்று கேட்கவும்
அவன் சற்று நிதானித்து, "எப்படி கண்டுபிடிச்சீங்க?!" என்று கேட்கவும்,
"அப்போ நீங்கதான் மகிழா?" என்று கேட்டு கன்னங்களில் குழி விழக் குழந்தைத்தனமாய் புன்னகைத்தாள்.
"ஆமாம் நான்தான் மகிழ்" என்றவன் சொல்ல,
மாயா திகைப்பாய் பார்த்தபடி, "நிஜமாவா?!... என்னால நம்பவே முடியல... உங்க ஷோஸ் எல்லாம் சாக்ஷி மிஸ் பண்ணாம கேட்பா... எங்களையும் கேட்கச் சொல்லி டார்ச்சர் பண்ணுவா" என்றதும் தோழியின் கரத்தைக் கிள்ளினாள் சாக்ஷி.
"பொய் சொல்றா... எங்க ஹோம்ல இருக்குற எல்லோருக்குமே உங்க ஷோஸ்னா ரொம்ப பிடிக்கும் மகிழ் சார்... ரொம்ப நல்லா நடத்துறீங்க... ஐ லவ் இட்"
அந்த இருதோழிகள் ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்க, அவனோ அவள் பார்வையற்றவள் என்பதை ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியில் நின்றிருந்தான்.
சாக்ஷி நிறுத்தாமல், "நான் கூட உங்ககிட்ட ஒரு தடவை பேசியிருக்கேன்... லாஸ்ட் மன்த் நடத்துனீங்களே... அந்த லவ்வர்ஸ் டே ஷோ... வீணையடி நீ எனக்கு கவிதை... ஞாபகம் இருக்கா?" என்று கேட்கவும் மகிழின் முகத்தில் புன்னகை அரும்பியது. அவளிடம் பேசியதை அவன் மறந்தால்தானே ஞாபகப்படுத்திக் கொள்ள!
மாயா தன் தோழியிடம், "அவருக்கு எப்படி ஞாபகம் இருக்கும்... எவ்வளவு பேரோட பேசுறாரு" என்றாள்.
"ஆமாம் இல்ல" என்று தன் தோழி சொன்னதை ஏற்ற சாக்ஷியின் முகம் அப்போது வெளிப்படுத்திய ஏமாற்றத்தை அவன் கூர்ந்து கவனித்தான். அவளின் முகம் உணர்ச்சி பெட்டகம்தான். அவளின் மனஉணர்வுகளையும் எண்ணங்களையும் அப்படியே அப்பட்டமாய் பிரதிபலித்தது.
சாக்ஷி அந்த ஏமாற்றத்தைத் தனக்குள் மறைத்துக் கொண்டவள் அவனிடம், "என்ன மகிழ் சார்... படபடன்னு பேசுவீங்க... இப்போ எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க" என்று கேட்டாள்.
"உங்க ம்யூசிக்கை கேட்டதிலிருந்து எனக்கு பேச வார்த்தையே வரல சாக்ஷி... ஐ பிகேம் டம்ப்" என்றான் மகிழ்.
"நீங்க என்னை போய் புகழ்ந்திட்டிருக்கீங்க... பாட்டு பாடினது அனிதா மேடம்தான்... நீங்க நியாயமா அவங்களைதான் பாராட்டணும்"
"அந்த குரலுக்கே உயிர் கொடுத்தது நீங்கதான் சாக்ஷி... அதாவது உங்க வீணையும் அதை மீட்டின உங்க விரலும்தான்"
இந்தப் புகழ்ச்சியை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாத நாண உணர்வு.. அதுவும் மகிழ் குரலில் கேட்கும் போது அவள் திக்குமுக்காடித்தான் போனாள்.
அவள் அவனிடம், "ஒரு கலைஞனுக்கு பாராட்டும் கைதட்டலும்தான் பெரிய ஊக்கம்... இந்த நிமிஷம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மகிழ் சார்... அதுவும் நீங்க புகழும் போது எனக்கு அப்படியே பறக்கிற மாதிரி உணர்வுதான்... தேங்க் யூ ஸோ மச்" என்றாள்.
அப்போது மாயா அவள் கரத்தைப் பற்றி, "டைமாச்சு சாக்ஷி கிளம்பலாமா?" என்று மெலிதாய் கேட்க, ஷாலினிக்கு இப்போதுதான் மனம் நிம்மதி பெற்றது.
அவளும் மகிழிடம், "போலாம் மகிழ்" என்றாள். ஆனால் மகிழுக்கும் சாக்ஷிக்கும் ஏனோ அந்தப் பிரிவை ஏற்க முடியாத தவிப்பு.
இருந்தாலும் வேறு வழியின்றி சாக்ஷி, "இப்போ நாங்க கிளம்பறோம்... இன்னொரு சமயம் பேச வாய்ப்பு கிடைச்சா நிறைய பேசுவோம்" என்றாள்.
அவன் பதிலேதும் சொல்லவில்லை. ஷாலு மட்டும் புன்னகையோடு,
"நாங்களும் புறப்படறோம்...நீங்க சொல்ற மாதிரி இன்னொரு தடவை மீட் பண்ண முடிஞ்சா... பார்க்கலாம்" என்றாள்.
இரு தோழிகளும் தங்கள் வழியே திரும்பி நடக்க மகிழ்,"சாக்ஷி" என்று குரல் கொடுத்து அவர்களை நிற்கச் செய்தான்.
ஷாலினி அவன் கரத்தைப் பிடித்து, "என்ன மகிழ்?" என்று கேட்கும் போதே மாயாவும் சாக்ஷியும் அவன் புறம் திரும்பினர். ஷாலினியின் கையை விலக்கிவிட்டு அவன் முன்னேற,
சாக்ஷி புன்முறுவலோடு, "என்ன மகிழ் சார்?" என்று கேட்டாள்.
அவன், "சாக்ஷி" என்று சொல்லி லேசாய் தயங்க, "சொல்லுங்க" என்றாள்.
"அது... நான் உங்களைத் தேடிதான் இங்க வந்தேன்" என்றான்.
மாயா அவனைப் புரியாமல் பார்க்க சாக்ஷி குழப்பத்தோடு, "என்னை தேடி வந்தீங்களா... எதுக்கு?" என்றவள் கேள்வி எழுப்ப,
"இந்த வீணை நாயகி எப்படி இருப்பீங்கன்னு பார்க்கலாம்னு" சாக்ஷியால் அவன் எண்ணத்தைக் கணிக்க முடியாமல் நின்றாள்.
"என்னை மாதிரி ஒருத்தர் கிடைச்சா காதலிக்கலாமான்னு கேட்டீங்களே... ஏன் என்னை மாதிரி ஒருத்தர்?... உங்களை தேடி இந்த மகிழே வந்திருக்கேன்... காதலிக்கலாமா சாக்ஷி?!" என்றவன் மின்னல் வெட்டியது போல் அவன் மனஎண்ணத்தை பளிச்சென்று அவளிடம் கேட்டுவிட, சாக்ஷி அதிர்வோடு நின்றாள்.
மாயா அவன் பரிகசிக்கிறானோ என்று எண்ணி, "அவ ஏதோ விளையாட்டுக்கு சொல்லிட்டா மகிழ் சார்... ப்ளீஸ் தப்பா எடுத்துக்க வேண்டாம்... நான் வேணா அவளுக்குப் பதிலா மன்னிப்பு கேட்டுக்குறேன்" என்று சொல்லவும் சாக்ஷி மௌனமாய் நின்றிருந்தாள்.
அவன் அந்த இருதோழிகளையும் நோக்கி, "ஏன் மன்னிப்பு கேட்கணும்... மனசுல பட்டதை சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கு... அதே போல என் மனசுல பட்டதை சொல்ல எனக்கும் உரிமை இருக்கு?" என்றதும் என்ன பேசுவதென்றே புரியாமல் இருவரும் நிற்க அவனே மேலும் தொடர்ந்தான்.
"உங்க முடிவை நீங்க பொறுமையா யோசிச்சு சொல்லுங்க சாக்ஷி... நீங்க என்னோட ஷோவுக்கே கால் பண்ணி சொன்னாலும் சரி... இல்லன்னா என் பெர்சன்ல் நம்பருக்கு கால் பண்ணாலும் சரி" என்று சொல்லி தன் கைப்பேசி எண்ணை அவளின் மனதில் பதியுமாறு ஒவ்வொரு எண்ணாய் உரைத்தான்.
சாக்ஷி தன் மௌனத்தைக் கலைக்காமல் அழுத்தமாகவே நின்றாள்.
"நான் கிளம்பறேன் சாக்ஷி" என்றவன் சாக்ஷியின் தோழியின் புறம் திரும்பி, "உங்க பேர்?" என்று கேட்க அவள், "மாயா" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
"ஒகே மாயா... சீ யூ" என்றவன் ஷாலினியின் புறம் திரும்பிப் போகலாம் எனத் தலையசைத்துவிட்டு முன்னேறிச் செல்ல, தன் தோழியின் விழிகளில் தேங்கி நின்ற கண்ணீரை அப்போது அவன் கவனிக்கத் தவறினான். அவன் மனமோ முழுமையாய் சாக்ஷியின் மீதான காதலில் திளைத்திருந்தது.
ஷாலினிக்கு நடந்தவை எதுவும் விளங்கவில்லை. வெறும் க்யூரியாஸிட்டி என்று சொல்லிவிட்டு இப்போது அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் காதலிக்கிறேன் என்று சொல்வானேன்? அதுவும் பார்வைற்றவள் என்று தெரிந்தும் அவன் அப்படிச் சொன்னதை ஷாலினியால் ஏற்கவே முடியவில்லை. அவளின் மனம் அடங்காத கொந்தளிப்பில் கிடக்க, அதுபற்றிய எந்த விவாதமும் செய்யாமல் அவனுடன் மௌனமாய் புறப்பட்டாள்.
சாக்ஷியின் நினைப்பில் இருந்து மகிழால் விடுபடவே முடியவில்லை. அவள் இல்லையென்பதை முழுமையாய் அவன் மனதால் ஏற்கவும் முடியவில்லை. அவளின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தவன் சட்டென்று சாக்ஷியின் தோழி மாயாவை பற்றி எண்ணிக் கொண்டான்.
இருவரும் ஓர் கருவில் ஜனித்திருக்கவில்லை. மற்றபடி ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகள் போல எப்போதும் ஒன்றாகவே இருந்தனர்.
மாயாவுக்கும் சாக்ஷியின் மரணம் பேரிழப்பாய் இருக்கும் என்றெண்ணி அவன் வருந்தமுற்ற அதே நேரத்தில் சாக்ஷியின் விபத்து குறித்து மாயாவால் மட்டுமே சரியாக சொல்ல முடியும் என்று எண்ணம் தோன்ற, அவளைப் பார்க்க அவசரமாய் புறப்பட்டான்.
அவன் சகோதரி எழிலோ அவனை வெளியே செல்ல அனுமதியாமல் எங்கே ஏதென்று ஆயிரம் கேள்விகள் கேட்டு குடைந்தெடுத்தாள். அவன் விரக்தியில் ஏதேனும் தவறாய் செய்து கொள்வானோ என்ற முன்னெச்சரிக்கை கொண்டே அவள் அப்படி நடந்து கொள்ள, எப்படியோ சாதுரியமாய் சகோதரியை சமாளித்துவிட்டு மகிழ் சாரதா இல்லத்தை வந்தடைந்தான்.
அந்த இல்லமே சாக்ஷியின் இறப்பால் சோகத்தில் மூழ்கியிருந்தது. அவன் வேதனையோடும் வலியோடும் அந்த இல்லத்தைப் பார்வையிட்டபடி நடந்து வந்தான்.
அவன் வந்து கொண்டிருப்பதை மாயாவின் விழிகள் கண்டுகொள்ள, அவளுக்குள் அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் ரௌத்திரமாய் எழ ஆரம்பித்தது. அவனை நோக்கி சீற்றமாய் வந்தவள் அவனின் சட்டையைப் பிடித்து உலுக்கியபடி, "சாக்ஷியை என்ன பண்ணீங்க மகிழ்?" என்று அழுகையோடு கேட்க, அவன் அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டான்.
5

Quote from Muthu pandi on June 29, 2021, 8:53 PMNice
Nice
Quote from Marli malkhan on May 31, 2024, 10:45 PMSuper ma
Super ma