மோனிஷா நாவல்கள்
Naan Aval Illai - 56
Quote from monisha on November 29, 2020, 9:10 PM56
பேரிடியாய் இறங்கியது
மகிழ் டேவிடை சந்திக்க அவனின் அலுவலக அறைக்குள் வர அனுமதி கோரவும்,"எஸ் கம்மின்" என்றான் டேவிட்.
டேவிடிடம் பேசிவிட வேண்டும் என்று ஒருவாரமாக முயன்று அவனுக்கு இப்போதுதான் அதற்கான வாய்ப்புகிட்டியது. வேந்தன் சொன்னவற்றை எல்லாம் கேட்ட பின்னர் மகிழின் மனநிலை இன்னும் மோசமாகியிருந்தது.
சாக்ஷி ஏன் அன்றே இது பற்றி தன்னிடம் சொல்லவில்லை என்ற கேள்வியும், அவள் இன்னும் என்னவெல்லாம் மறைத்திருக்கிறாளோ என்ற யோசனையும் அவனைத் தவிப்புற செய்திருக்க, அவளை அன்றி வேறொரு சிந்தனையே இல்லை அவனுக்கு.
அன்று அவள் வேண்டுமென்றே பேச்சை திசைதிருப்பி தன்னை கோபமூட்டியிருக்கிறாளோ என்று எண்ணத் தோன்றியது. அவள் அந்தளவுக்கு ஒருவிஷயத்தை மறைக்க முற்படுவது அவனுக்குள் சந்தேகத்தையும் பயத்தையும் பெருக்கியது.
மனம் போன போக்கில் அவன் சிந்தனை வரையறையின்றி பயணிக்க, அவளுக்குத் தவறாக எதுவும் நேர்ந்திருக்கக் கூடாதே என்கிற கவலை அவனை எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபட விடாமல் முடக்கியிருந்தது.
இறுதியாய் உண்மையைத் தெரிந்து கொள்ள டேவிடை சந்திக்க முடிவெடுத்தவன், பிரயத்தனப்பட்டு அவனைப் பார்க்க அனுமதியும் பெற்றான்.
மகிழ் டேவிடின் முன்னிலையில் ஒரு வித அச்சத்தோடு நிற்க,
"உட்காருங்க மகிழ்... நமக்குள்ள என்ன பாஃர்மாலிட்டி?" என்று டேவிட் உரைத்து புன்முறுவல் செய்யவும்,
"நீங்க எனக்கு பாஸ்... பாஃர்மலிட்டி பார்க்காம எப்படி?" என்றவன் கேட்டான்.
அவன் சிரித்து கொண்டே, "நான் உங்களை ஃப்ரெண்டாதான் நினைக்கிறேன் மகிழ்" என்றவன் மேலும்,
"ஹ்ம்ம்... நீங்க என்கிட்ட பெர்ஸனலா பேசணுமா... இல்லை அபிஃஷியலாவா?!" என்று யோசனையோடு கேட்க மகிழ் நிதானித்து, "பெர்ஸனலாதான்" என்றான்.
"அப்போ ஆபீஸ்ல வேண்டாம்... நாம ஈவனிங் வெளியே போய் பேசுவோமே" என்று அவன் சொல்ல, "ஒகே சார்" என்று தலையசைத்து சம்மதம் தெரிவித்தான்.
********
வாசனின் வீடு. மனோ வாசனிடம் வகையாய் சிக்கிக் கொண்டிருந்தான். அவன் அச்சத்தில் நடுக்கமுற, வாசன் கொந்தளிப்போடு காட்சியளித்தார்.
"யாரை கேட்டுறா கல்யாண ஏற்பாடெல்லாம் நடக்குது? அதுவும் கிறிஸ்துவ முறைப்படி நடக்கப் போகுதாம்" என்றவர் கேட்டதும்,
"பாஸ்தான்... ஜென்னி மேடம் விருப்பம்னு" என்று தயங்கிய பார்வையோடு சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "நடக்காதுரா... இந்தக் கல்யாணத்தை நான் நடக்க விட மாட்டேன்" என்று அவர் ரௌத்திரமாய் உரைத்தார்.
அப்போது ஆங்காரமாக, "அப்படி ஏதாச்சும் பண்ணி வைச்சீங்க... நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்" என்று ராகவ் சொல்லியபடி வீட்டிற்குள் நுழைய, மனோவிற்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. தப்பிப் பிழைத்தோம் என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க,
ராகவ், "வா மனோ போலாம்" என்றழைத்தான்.
வாசனுக்கு கோபம் அதிகரித்த போதும் சற்று அமர்த்தலாகவே மகனிடம், "நீ அவசரப்படுற ராகவ்... பெரிய பிரச்சனையில சிக்க போற" என்றார்.
"பிரச்சனையா?!" என்றவன் எகத்தாளமாய் சிரித்துவிட்டு,"எனக்குப் பிரச்சனை கொடுக்குற ஒரே ஆள் நீங்க மட்டும் தான்" என்றான் ராகவ்.
வாசன் முறைப்போடு, "அந்த ஜெனித்தா உன்னை முட்டாளாக்குறா ராகவ்... நீ நினைக்கிற மாதிரி விக்டரோட சொந்த மக இல்ல அவ" என்றவர் சொல்ல,
ராகவ் அவர் வார்த்தையை நம்பாமல் எள்ளலாய் நகைத்தபடி, "இப்படி எல்லாம் சொல்லிக் கல்யாணத்தை நிறுத்துறதுக்கு ஐடியாவா?!" என்றதும் அவர் சீற்றத்தோடு அவர் வைத்திருந்த சில போட்டோக்களை தூக்கி அவன் மேல் எறிந்தார்.
ராகவ் புரியாமல் அவற்றை எல்லாம் பார்க்க, அதில் வீணையோடு அமர்ந்திருந்தவளைக் கூர்ந்து பார்த்து, "ஜென்னி" என்க,
அவர் அப்போது, "அவ பெயர் ஜென்னி இல்லை... சாக்ஷி" என்றார்.
அவன் தன் தந்தையை குழப்பமாய் நோக்க, மனோவும் அதிர்ச்சியோடு அந்த போட்டோக்களைப் பார்த்தான். இதே தோற்றத்தில் ஜென்னியை சில நாட்கள் முன்பு பார்த்த நினைவு இருந்தது ராகவிற்கு. ஆனால் அதற்கு முன்னரே அவளை எங்கேயோ பார்த்த நினைவும் அவனின் நினைவில் ஒளிந்து கொண்டிருந்தது. எங்கே எப்போது என்று அவனால் நினைவுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அவன் அந்த யோசனையில் சிலையாய் நின்றுவிட வாசன் மகனிடம்,
"உன்னை அவ முட்டாளாக்கிட்டிருக்கா ராகவ்... ஆனா ஏன் எதுக்குன்னுதான் எனக்கு தெரியல" என்றவர் சொல்ல அவன் பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்த ஒரு போட்டோவை தன் கையில் எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
அவனால் அவர் சொன்னதை எல்லாம் முழுவதுமாய் நம்ப முடியவில்லை.. அந்தளவுக்கு அவளை நேசித்துவிட்டான். ஆனால் அவள் தன்னை நேசிக்கிறாளா? இந்தக் கேள்வியை தனக்குத்தானே கேட்டு கொண்டவனுக்கு உண்மையிலேயே அதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அவளை தன்னவளாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் கண்மூடித்தனமாய் இருந்துவிட்டோமோ என்று எண்ணமுற்றவனுக்கு அவனைச் சிந்திக்கவிடாமல் மறக்கடித்திருந்த காதலென்ற மோகத்திரை மெல்ல விலகிக் கொண்டிருந்தது.
டேவிடின் கார் சாரதா இல்லத்தின் வாசலில் நிற்க, மகிழ் குழப்பமானான். அவன் இறங்காமல் தயக்கமாக பார்க்க, "என்ன மகிழ் யோசிக்கிறீங்க... இறங்குங்க" என்றான் டேவிட்.
அவன் தவிப்போடு, "இங்கே எதுக்கு?" என்று கேட்கவும் டேவிட் புன்னகைத்துவிட்டு,
"பழக்கப்படாத இடத்துக்கு வந்த மாதிரி இப்படி யோசிக்கிறீங்க" என்று கேள்வி எழுப்பியவன் மேலும்,
"நீங்க இறங்கி உள்ளே போங்க மகிழ்... நான் காரை பார்க் பண்ணிட்டு வந்துடுறேன்" என்றான்.
மகிழுக்கு வேறுவழி இருக்கவில்லை. உள்ளே சென்றே தீர வேண்டும் என்ற இக்கட்டோடு அவன் நுழையக் காவலாளி முதற்கொண்டு அங்குள்ள குழந்தைகள் வரை அன்பாய் அவனை நலம் விசாரித்து அவனின் இறுக்கமான மனநிலையைத் தளர்த்திவிட்டிருந்தனர்.
அதற்குள் அவன் வந்திருக்கும் செய்தி மாயாவின் செவிக்கு எட்டியிருக்க, கணவனைப் பார்க்கும் ஆர்வத்தில் அவசரமாய் ஓடி வந்தவள் மகிழை நேரெதிரே பார்த்தபடி நின்றுவிட்டாள்.
உடல் இளைத்து வாட்டமுற்றிருந்த அவளின் தோற்றம் அவன் மனதை ஏதோ செய்ய அவள் தாமதிக்காமல் அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள். அவளுக்குள் இருந்த ஏக்கத்தையும் தாபத்தையும் அவளின் தழுவலில் அவன் நன்காகவே உணர்ந்து கொண்டான்.
ஜென்னி ராகவின் கல்யாணம் பற்றிய செய்தி பரவலாய் பேசப்பட்டுக் கொண்டிருக்க, மகிழை தான் தவறாக எண்ணிக் கொண்டுவிட்டோமோ என்று வேதனையுறத் தோன்றியது அவளுக்கு. அவன் இல்லாத அந்த நாட்கள் அவனுடன் இருந்த நாட்களை மட்டுமே நினைவுபடுத்த அதீத காதலில் அவள் செய்த தவறுதான் அது.
அவற்றை எல்லாம் தாண்டி அவனை அப்படி அணைத்துக் கொள்ள வேறொரு காரணமும் இருந்தது. அவனுக்காக ஏங்கி தவித்த தவிப்போடு அவனின் உயிரைச் சுமக்கின்ற பூரிப்பும் கூட சேர்ந்துவிட்டதென்றே சொல்ல வேண்டும்.
இதை உணராத மகிழ் அவளை விலக்கிவிட்டு, "மாயா ப்ளீஸ்... நான் என் பாஸ் டேவிட் சாருக்காக இங்கே வந்திருக்கேன்" என்றான்.
"அப்போ என்னைப் பார்க்க வரலயா?!" ஏமாற்றமாய் மாறிய அவளின் விழிகளை நேர்கொண்டு பார்க்காமல், "இல்லை" என்க, அவள் மனமுடைந்து கண்ணீரோடு அங்கிருந்து அகன்றுவிட, அவளின் வலி மிகுந்த பார்வை அவனின் மனதையும் வேதனையில் மூழ்கடித்தது.
பின்னோடு நடந்து வந்த டேவிட் அவனின் முகமாற்றங்களைப் பார்த்து, "என்னாச்சு மகிழ்?" என்று வினவ, அவன் ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தான்.
பின்னர் டேவிடும் மகிழும் முன்னேறி மாயாவின் வீட்டிற்குள் நுழைய, யாழ்முகைக்கு மகிழைப் பார்த்ததும் உள்ளம் இன்பத்தில் திளைத்திட உடன் டேவிட் வருவதைப் பார்த்து தன் மன உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இருவரையும் வரவேற்று முகப்பு அறையில் அமர வைத்தார்.
மகிழ் அவரிடம், "இவர்தான் எங்க சேனல் எம்.டி" என்று அறிமுகம் செய்யவும் யாழ்முகையும் மாதவனும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். டேவிட் அவர்களை நலம் விசாரித்து இயல்பாகப் பேச்சு கொடுக்க, அவனின் பேச்சிலும் நடவடிக்கையிலும் வெகுவாய் ஈர்க்கப்பட்டனர்.
டேவிட் பேச்சு வாக்கில், "மாயா எங்கே?" என்று கேட்க மகிழின் முகத்தில் அத்தனைத் தவிப்பு, யாழ்முகை மகளிடம் விஷயத்தை சொல்ல, அவள் மறுப்பு தெரிவிக்க எண்ணினாலும் டேவிட் அழைக்கும் போது அப்படி தவிர்க்க முடியவில்லை.
டேவிடுடனான முதல் சந்திப்பில் அவன் தன்னை எத்தனை மரியாதையாக நடத்தினான் என்பதை அந்த நொடி நினைவுகூர்ந்தவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு அவள் அழுத சுவட்டை மறைத்தபடி வெளியே வந்து அவனை நலம் விசாரித்தாள்.
அதோடு அவன் தந்த நன்கொடை பணத்தைப் பற்றிய விவரங்களைக் கேட்க வந்தானோ என எண்ணி அதனைப் பார்வையற்றவர்களின் சிகிச்சைக்காக பயன்படுத்திய விவரங்களைக் கூறியவள் அவனிடம்,
"வெயிட் பண்ணுங்க சார்... நான் போய் பில்ஸ் எல்லாம் எடுத்துட்டு வர்றேன்" என்றவள் சொல்லி உள்ளே செல்லப் போக,
"மாயா வெயிட்... நான் அதுக்காக வரல" என்றான்.
அவள் யோசனைக்குறியோடு அவனைப் பார்க்க, "எனக்கு சாக்ஷியோட திங்க்ஸ் எல்லாம் பார்க்கணும்... முடியுமா?!" என்று கேட்க, மகிழுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
காரில் வரும் போதே மகிழ் சாக்ஷிக்கு நிகழ்ந்தது என்ன என்று கேள்வி எழுப்ப, "சொல்றேன் மகிழ்... நாம போக வேண்டிய இடத்துக்குப் போன பிறகு சொல்றேனே" என்றவன் சாரதா இல்லத்திற்கு அழைத்துவந்து அவன் மனைவி முன்னிலையில் அமர்த்தி சங்கடத்தில் ஆழ்த்துவான் என்று எதிர்பார்க்கவில்லை.
அதோடு அல்லாமல் அவன் சாக்ஷியின் பொருட்களைப் பார்க்க வேண்டுமென்று சொல்ல அவனுக்கு உள்ளூர கோபத்தை ஏற்படுத்த, மாதவனும் யாழ்முகையும் நடப்பவற்றைக் கவனித்து வியப்படைந்தனர்.
அங்கே சூழ்ந்து கொண்ட மௌனத்தைக் கலைத்தபடி, "ஏன் மாயா யோசிக்கிறீங்க... முடியாதா?" என்று ஏக்கப் பார்வையோடு டேவிட் கேட்க அவள் தன் கணவனை ஏறிட்டாள்.
சாக்ஷியின் பொருட்களை எல்லாம் தன் தோழியின் நினைவாகப் பாதுகாத்து வைத்தது அவளாக இருந்தாலும் அவற்றின் மீது பித்து பிடித்திருந்தவன் அவன்தானே!
மகிழ் மாயாவின் பார்வை புரிந்து அவனே டேவிடிடம், "பார்க்கலாம்... வாங்க" என்று வழிகாட்டி அழைத்துக் கொண்டு போக டேவிட் புன்முறுவலோடு, "நீங்களும் வாங்க மாயா" என்றழைத்தான்.
சாக்ஷியின் அறையைப் பார்த்து டேவிட் மெய்மறந்து ரசித்திருந்தான். ரொம்பவும் சிறிய அறைதான் எனினும் அது அத்தனை சீராக அடுக்கிவைக்கப்பட்டிருக்க, நிறைய பாடல் சீடி, அதுவும் பாரதியார் கவிதைகள், க்ளாஸிக்கல் மியூசிக் என ஒவ்வொன்றும் தனித்தனியாக வரிசையாய் வைக்கப்பட்டிருந்தன.
அவன் உண்மையிலேயே தேடிவந்தது சாக்ஷியின் வீணையைத்தான்.
அதனைப் பார்த்த சிலாகிப்பில் தொட்டு அந்த வீணையின் தந்தங்களை மிதமாக வருடியவன், "இந்த வீணையை எனக்குத் தர முடியுமா மாயா?!" என்று கேட்க இருவரும் ஒரு சேர அதிர்ந்தனர்.
மாயா இறுக்கமான பார்வையோடு, "நீங்க இதை கேட்குறீங்களா இல்ல சாக்ஷி கேட்டாளா?" என்று வினவ,
"அவளுக்காகதான் நான் கேட்கிறேன்" என்றான்.
"நீங்க யாரு அவளுக்கு?" பளிச்சென்று வெளிப்பட்டது மாயாவிடம் இருந்து அந்தக் கேள்வி. இதே கேள்வியை சாக்ஷி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த போது கேட்கப்பட்டது டேவிடுக்கு அப்போது நினைவுக்கு வந்தது.
அதற்கு அன்று அவளின் கணவன் என்று விடையளித்ததையும் எண்ணிக் கொண்டவன் இப்போது அப்படிச் சொல்ல முடியாமல், "நான் ஜென்னியோட ஃப்ரெண்ட்" என்று பதிலளிக்க,
"நானும் ஒரு காலத்தில அவளுக்கு ஃப்ரெண்டாதான் இருந்தேன்... அதுவும் பெஸ்ட் ப்ரெண்ட்... ஆனா இப்போ யாரோவாயிட்டேன்" என்று மாயா இளக்காரமான புன்னகையை இதழ்களில் தவழ விட்டுச் சொல்ல,
"நீங்க இப்பவும் அவளுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்தான் மாயா... இன்னும் கேட்டா அவ உங்களை ஃப்ரெண்டுக்கும் மேல ஒரு அம்மான்னுதான் சொல்லியிருக்கா?" என்றவன் சொல்லிக் கொண்டிருக்க மாயாவின் முகம் அதிர்ச்சியோடு மாற்றமடைய,
அவன் மேலும், "நீங்கதான் மாயா அவ நட்பை மறந்துட்டீங்க" என்றான்.
அவள் கோபம் எழ, "நான் மறந்தேனா? திஸ் இஸ் டூ மச்... மறக்குறவளா இருந்தா அவளோட ரூமை அவளோட திங்க்ஸை ஏன் இப்படிப் பார்த்து பார்த்து பாதுகாக்கணும்... எங்கயோ அவ பாட்டுக்கு போயிட்டு.. எங்களை எல்லாம் மறந்துட்டா... என்னைத் தேடி வரணும்னு கூட அவளுக்குத் தோணலயே... அப்புறம் என்ன.. மண்ணாங்கட்டி பெஸ்ட் ஃப்ரெண்ட்?" என்று மாயா தன் மனவேதனையைச் சினத்தோடு கொட்டித் தீர்க்க,
"மாயா கொஞ்சம் பொறுமையா பேசு... இந்த அவசர புத்திதான் உன் பிரச்சனை?" தன் மௌனத்தைக் கலைத்தபடி மகிழ் அவளிடம் உரைக்கவும்,
"நீங்க பேசாதீங்க மகிழ்... நான் உங்களுக்கும் நல்ல ஃப்ரெண்டாதானே இருந்தேன்... நல்ல மனைவியா இருக்கவும் முயற்சி செஞ்சேன்... ஆனா எல்லாமே பொய்யா போயிடுச்சே”
“எல்லோருக்குமே நான் இரண்டாம் பட்சமாதான் போயிட்டேன்... என் காதல் நட்பு எதுக்கும் மரியாதை இல்லையே" உணர்ச்சிவசத்தால் கண்ணீர் வழிந்தோடக் கூறியவளைப் பார்த்த மகிழுக்கு அவள் மீது இரக்கம் பிறந்தது. ஆனால் இப்படி டேவிட் முன்னிலையில் எல்லாலற்றையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா என அவன் வருத்தமுற நிற்க,
டேவிட் இருவரையும் பார்த்து விட்டு, "நீங்க நினைக்கிற மாதிரி இல்லை மாயா... ஜென்னி என்கிட்ட எல்லோரையும் விட மாயாதான் முதல்லன்னு சொல்லி இருக்காங்க" என்க,
மாயா அவனை நிமிர்ந்து பார்த்து, "இதை நான் நம்பணுமா?" என்றவள் அலட்சியமாய் கேட்டாள்.
"நான் ஏன் பொய் சொல்லணும்?"
"நீங்க ஏன் அவளுக்காகப் பேசணும்... ஏன் அவளுக்கு வாயில்லையா? ஊமையாயிட்டாளா என்ன? பார்வையில்லாம இருந்த போது மனசுல இருந்து பார்த்தா... இன்னைக்கு பார்வை இருக்கு... ஆனா அவக்கிட்ட மனசு இல்ல" வெறுப்போடு அவள் சொல்ல,
"அவ மனசுல இருந்து பார்த்தா... அதே மனசு அன்னைக்கு அவளைப் பார்த்தவனுக்கு இல்லையே... ஊமையிட்டாளான்னு கேட்டீங்க இல்ல? ஊமையாதான் ஆயிட்டா... அவ உணர்வுகளை வெளிக்காட்ட முடியாத ஊமையாயிட்டா... எங்க அவளுக்கு நடந்ததெல்லாம் சொன்னா நீங்க தாங்க மாட்டீங்களோன்னு ஊமையாயிட்டா" என்று ஆதங்கத்தோடு விழியில் நீர் சூழ டேவிட் உரைக்க,
மகிழ் படபடப்போடு, "என்ன சொல்றீங்க டேவிட் சார்?" என்று கேட்க, அவன் தன் கண்ணீரைக் காட்டாமல் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.
அந்த அறையை நிசப்தம் சூழ டேவிட் தன் கணீர் குரலில் அந்த மௌனத்தை உடைத்து, "அன்னைக்கு இங்கிருந்து கிளம்பிப் போன சாக்ஷிக்கு என்னாச்சுன்னு தெரியுமா மாயா உங்களுக்கு?!" என்றவன் கேட்க, அவன் என்ன சொல்லப் போகிறானோ என மாயாவின் முகம் வெளிறிப் போனது. மகிழ் முகமெல்லாம் வியர்வைத் துளிர்விட்டது.
டேவிட் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, "அவளுக்கு நடந்தது வெறும் ஆக்ஸிடென்ட் மட்டும் இல்லை" என்று நிறுத்தியவன்,
குரலைத் தாழ்த்தி சற்று அழுத்தமாய் "ஷீ வாஸ் ப்ரூட்டலி ரேப்ட்" என்றான்.
மாயா மகிழ் இருவருமே அவன் சொன்னதைக் கேட்ட மாத்திரத்தில் பேச்சற்றுப் போய் நின்றனர். அந்த வார்த்தை பேரிடியாய் வந்திறங்கியது.
மாயா தன் இரு காதுகளையும் பொத்திக் கொண்டு உணர்வுகள் பொங்க வெடித்தழ ஆரம்பித்தாள். அவள் கைகள் உதறலெடுக்க உதடுகள் துடிக்க கண்ணீர் வெள்ள பெருக்காய் மாறியிருக்க,
"சாக்ஷி" என்றபடி அவள் அழுது கொண்டிருந்தாள். ஆனால் மகிழ் துளியளவும் கலங்கவேயில்லை. அவனோ தன் புலன்கள் அனைத்தும் செயலிழந்து போன நிலையில் நின்றிருந்தான்.
வரிசையாய் நிறைய அதிர்ச்சிகளையும் காயங்களையும் கடந்து வந்துவனுக்கு அவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்றளவுக்காய் மாறியிருந்தது இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பின்.
உள்ளூர அவன் உணர்வுகள் சிதில் சிதிலாய் நொறுங்கிக் கொண்டிருக்க, அழுவதற்கான எந்தவித சாத்தியக்கூறுகளும் அவன் விழிகளில் தென்படவில்லை.
இருவருமே சாக்ஷியை அந்தளவுக்கு நேசித்தவர்கள். ஆதலாலேயே ஜென்னிக்கு அவர்கள் இருவரிடமும் இந்த விஷயத்தைத் தெரிவிக்க மனம் வரவில்லை. ஆனால் டேவிடுக்கோ ஜென்னியின் மீது அவர்கள் கொண்ட தவறான புரிதல் மாற வேண்டும் என்று எண்ணியே அந்த உண்மையை வெளிப்படுத்தினான்.
இப்போது அவர்கள் இருவரின் வேதனையைப் பார்த்த பின்னர் அவன் மனம் ரொம்பவும் கனத்துப் போனது. யாரைச் சமாதானம் செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. மாயா கதறி அழுதுகொண்டிருக்க, மகிழ் உணர்வே இல்லாத நிலையில் நின்று கொண்டிருந்தாலும் மனதளவில் நொறுங்கிப் போயிருந்தான் என்பதை அவன் விழிகள் உணர்த்தின.
இருவரும் வெவ்வேறு நிலையில் இருக்க, வலி என்னவோ ஒன்றுதான். அழுகைதான் நம் சோகத்தின் வடிகால் எனும் போது மகிழ் தன் வேதனையை வெளியேற்றாமல் இருப்பதைப் பார்த்து டேவிட் அவன் அருகாமையில் வந்து "மகிழ்" என்றழைக்க,
"யார் என் சாக்ஷியை இப்படிப் பண்ணது டேவிட் சார்?" என்றவன் கேட்டபடி மெல்ல தன் உணர்வுகள் பெற்று கண்ணீரை உகுக்கத் தொடங்கியிருந்தான்.
************
ராகவ் தன் வீட்டின் படுக்கை அறையில் அமர்ந்து ஒரு விஸ்கி பாட்டிலை திறந்து குடிக்கப் போக மனோ அதிர்ந்து,
"வேண்டாம் பாஸ்... மேடமுக்கு நீங்க டிரிங்க் பண்ணா பிடிக்காது" என்று அவனைத் தடுக்க முற்பட்டான்.
"அந்த மேடமுக்கு என்னையே பிடிக்குமான்னு தெரியலயே" என்று வேதனை நிரம்ப பார்வையோடு சொல்லியவன், அதிர்ச்சியின் மொத்த உருவமாய் அமர்ந்திருந்தான்.
"பாஸ் நீங்க அவசரப்படுறீங்க... அப்பா சொன்னதெல்லாம் பொய்யா கூட இருக்கலாம்" என்று மனோ உரைக்க,
அவன் கூரிய பார்வையோடு சாக்ஷியின் போட்டோவைப் பார்த்து,
"இல்ல... மனோ... டேட் பொய் சொல்ற மாதிரி தெரியல... அவதான் என்னை முட்டாளாக்கி விளையாடிட்டிருக்கா?" என்றவன் சொல்லிமுடித்த மறுகணம் அந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடாக விஸ்கி பாட்டிலை திறந்து ஒரே மடக்கில் குடித்து முடித்தான். மனோ அவனைத் தடுக்க முடியாத இயலாமையோடு பார்க்க,
ராகவின் தலை கிறுகிறுவென சுழல ஆரம்பித்தது. ஜென்னியை சந்தித்ததிலிருந்து நடந்தேறிய நிகழ்வுகள் மாறி மாறி அவன் நினைவுகளுக்குள் அலைமோதிக் கொண்டிருக்க,
எப்போது சாக்ஷி என்பவள் தன் வாழ்க்கையில் நுழைந்திருப்பாள் என்ற கேள்வியே அவன் மனதைச் சுற்றி சுழன்று கொண்டிருந்தது. அதீத போதை நிலையில் அவன் நினைவு தப்பிக் கொண்டிருந்த போதும் அவன் யோசனை தடைபடவில்லை.
அன்று...
ராகவின் மூன்றாவது படம் வெளியாகக் காத்திருந்தது. பிரபல இயக்குநர் நந்தகுமாரின் படம். படம் வருவதற்கு முன்னதாக அதன் வெற்றியை எல்லோரும் பறைசாற்றிக் கொண்டிருக்க, புகழின் உச்சாணிக் கொம்பைத் தொட்டுவிடும் துடிப்பில் இருந்தான் அவன்.
அதிவிரைவில் அவனுக்கான தனி அங்கீகாரம் அந்தப் படத்தின் மூலமாகக் கிடைக்க போகிறதென்பதில் அவனுக்கு ஐயப்பாடில்லை. வாசனின் மகன் ராகவ் என்பது மாறி ராகவின் தந்தை வாசன் என்று சொல்லப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
அதுதான் அவனின் கனவும் கூட.
அந்தப் படத்தின் டிரெயிலரும் பாடல்களும் மக்களுக்கிடையில் பலத்த வரவேற்பை பெற்றுவிட்டதாகத் தகவல். அதுவே படத்தின் வெற்றியைக் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட, ராகவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
56

Quote from Muthu pandi on June 30, 2021, 3:48 PMNice
Nice