You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 58

Quote

58

ஆழமான வலி

ராகவின் கண்களில் அத்தனை வெறியும் கோபமும் இருந்தது. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷமும் தன்னை அவள் முட்டாளாக்கி  இருக்கிறாள் என்று எண்ணும் போதே அவன் உள்ளமெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

அன்று அவளுக்குத் தான் செய்த  வன்கொடுமை குறித்து இந்நிலையிலும் அவன் வருந்தத் தயாராக இல்லை. அவனுக்கு அவனும் அவன் உணர்வுகள் மட்டுமே முக்கியம்.

 அதைத் தாண்டி வேறெதையும் அவன் துளியளவும் மதிப்பவன் அல்ல. அவனின் வெறியே அவள் தன் உணர்வுகளோடு விளையாடியிருக்கிறாள் என்பதுதான். அப்படி இருக்கும் போது அவளை சும்மா விடத் தோன்றுமா அவனுக்கு?

இப்போதும் அவள் மீதான மோகத்தீ அவனுக்கு அணைந்தபாடில்லை. அது இன்னும் உக்கிரமாகவும் உஷ்ணமாகவும் எரிந்து கொண்டிருக்க, அன்று அவளை நாசம் செய்தது போல் இன்னும் நூறு மடங்காய் செய்ய வேண்டும் என்று அவன் மனம் அடங்கா ஆத்திரத்தோடு பொருமிக் கொண்டிருந்தது.

உள்ளூர அவள் மீதான கோபத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்காய் கூர்தீட்டி கொண்டு அவன் காத்திருக்க அந்தச் சமயம் ராகவுக்கு ஜென்னியிடமிருந்து அழைப்பு வந்தது.

எடுத்துப் பேசியவன், "எத்தனை மணிக்கு ஏர்போர்டுக்கு வரணும்?" என்று கேட்க,

"நீங்க வர வேண்டாம்.. நானே வந்து உங்களை மீட் பண்றேன்" என்று உரைக்க, அவள் சுதாரித்துக் கொள்கிறாளோ என்று எண்ணியவன்,

"ஏன்டி திடீர்னு பிளானை மாத்துற?"என்று கேட்டான்.

"ஃப்ளைட் லேட்டாகுமாம்...  நீங்க எதுக்கு ஏர்போர்ட்ல வந்து வெயிட் பண்ணிட்டு... நானே வந்திடுறேன்... எங்க வரணும்னு சொல்லுங்க" என்றவள் சொல்லவும்  அவளிடம் தானே வருவதாக அடம் பிடித்தால் அவளுக்குச் சந்தேகம் வந்துவிடலாம் என்று எண்ணியவன்,

"என் ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸுக்கு வந்துடு" என்றான்.

"டன்" என்றவள், "வந்துட்டு கால் பண்றேன்" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள். அவள் எப்போது வந்து சேர்வாள் என்று பித்து பிடித்தவன் போலக் காத்திருந்தான்.

அவனைப் பொறுத்துவரை அவளை உண்மையிலேயே காதலித்தான். அந்தக் காதலை அவள் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு என்னவெல்லாம் செய்தாள்என்று எண்ணும் போதே கனலாய் எறிந்து கொண்டிருந்தது அவனுக்கு.

அவளுக்கு அவன் செய்த கொடுமைகள் எல்லாம் அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அவள் தன்னை முட்டாளக்கிவிட்டாள். அவள் தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்.

இப்படியாகவே அவன் மனம் ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருக்க, அவளுக்காக அவன் காத்திருப்பு முடிவில்லாமல் நீண்டு கொண்டே போனது. அவள் வராமல் போய்விடுவாளோ என்று  உள்ளூர படபடப்பாகவும் இருந்தது.

அதே நேரம் அவள் எங்கே சென்றாலும் அவளை விடக் கூடாது என்று அவன் சூளுரைத்து கொண்ட போது ஜென்னி வீட்டிற்குள் நுழைந்த தகவல் ராகவை வந்தடைந்தது.

அவள் அவன் அறைக்கதவை தட்ட திறந்தவன், "உள்ளே வா" என்று தன் கோபத்தை மறைத்துக் கொண்டு அழைக்க,

"வெளியவே உட்கார்ந்து பேசலாமே" என்றாள் அவள்.

உடனடியாக கோபத்தை காட்டிவிடக் கூடாது என்ற எண்ணத்தோடு, "உன்கிட்ட நம்ம மேரேஜுக்கான டெக்கரெஷன் டிசைன்ஸ் லாம் காட்டணும்... வா" என்றவன் அவள் கரத்தைப் பற்றி உள்ளே இழுக்க,

அவன் கோபத்தை காட்டிவிடக் கூடாதென்று எண்ணினாலும் அவன் கரம் அவள் கரத்தை இறுகப் பற்றியது.

“கையை விடுங்க ராகவ்... நானே வர்றேன்" என்றவள் உள்ளே நுழைய,

மறுகணமே அவன் அறைக்கதவை மூடி தாழிட்டான். அவள் துணுக்குற்று திரும்பிப் பார்த்தாள்.

"நம்ம பெர்ஸனலா பேசும் போது யாரும் டிஸ்டர்ப் பண்ணிட கூடாது... அதுக்குதான்" என்றவன் மேலோட்டமாய் புன்னகைத்து சமாளிக்க,

"தட்ஸ் ஒகே" என்று எந்தவித பதட்டமுமின்றி உள்ளே நுழைந்தாள்.

அவன் தன் படுக்கையில் அமர்ந்துவிட்டு அவளிடமும், "உட்காரு ஜென்னி" என்று அருகில் அழைத்து அமரச் சொன்னான்.

அவள் எதிர்புறத்தில் நின்றபடி, "டைம் இல்ல ராகவ்... நீங்க டிசைன்ஸை காண்பிங்க... நான் கிளம்பறேன்" என்றாள்.

"ஏன் ? இங்கே உட்கார்ந்தா பழசு எல்லாம் ஞாபகத்துக்கு வந்திருமோ?!" என்று கூறியவன்  வன்மமாய் ஒரு புன்னகையை உதட்டில் தவழவிட,

"என்ன ஞாபகம் வரும்? புரியலயே" என்றவள் முகத்தைக் குழப்பமாய் வைத்துக் கொண்டு கேட்டாள்.

அவன் எரிச்சலான பார்வையோடு , "இங்க என்ன ஆஸ்கார் அவார்டா கொடுக்குறாங்க... இப்படி ஆக்ட் பண்ணிட்டிருக்க" என்க,

"ஆக்டிங் எல்லாம் என்னை விட உங்களுக்குதான் நல்லா வரும் ராகவ்... நான் உங்களுக்கு ஜுனியர்தான்" என்றவள் எள்ளலாய் நகைத்துக் கூறவும் அவனுக்கு கடுப்பானது.

"ஏய்... உன் மேட்டரெல்லாம் எனக்கு நல்லா தெரியும் டி" என்று சொல்லும் போதே

இடைமறித்தவள், "என் மேட்டரா?  அதென்ன ராகவ்?" புரியாத பார்வையோடு அவள் கேட்டாள். அவளைக் கோபத்தோடு நெருங்கியவன்,

"உன் உண்மையான பேரு சாக்ஷிதானே" என்க,

"யாரு சாக்ஷி?" என்றவள் கேட்க, உச்சபட்சமான கோபத்தை எட்டியவன் அவள் முகத்தில் பளாரென்று அறைந்துவிட்டான்.

"என்ன கடுப்பேத்துறியா?" என்று வினவ, அவள் எந்தவித எதிர்வினையும் காட்டாமல் சிலையாய் சமைந்திருந்தாள். அவள் பார்வையில் எந்தவித உணர்வுகளும் தென்படவில்லை. அது கோபமோ வலியோ எதையுமே காட்டிக் கொள்ளாமல் அவள் வெறுமையான விழிகளோடு அவனைப் பார்க்க,

அவன் வியப்போடு, "என்னடி? அடிச்சிருக்கேன்... ரியாக்ட் பண்ணாம... அப்படியே மரம் மாதிரி நிக்கிற" என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டவனை,

ஆழ்ந்து நோக்கியவளின் பார்வையில் அத்தனை சீற்றம்.  நிதானமாய் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவள்,

  "நீதான் என் உணர்ச்சிகளை எல்லாம் கொன்னுட்டியே... அப்புறம்... மரம் மாதிரி நிற்காம... வேறெப்படிடா?" அவள் உதடுகள் உதிர்த்த வார்த்தைகளை விடப் பார்வையில் அத்தனை வெறி.

அதோடு அவள் விழிக்குள் நின்றிருந்த கண்ணீர் எரிகுழம்போ என்றவளுக்கு உஷ்ணமாய் அவனை சாம்பலாக்கிட காத்திருக்க, "அப்போ நீதான் அந்த ப்ளைன்ட் கெர்ள் சாக்ஷி... இல்ல"  என்றவன் கேட்டான்.

"இல்லை" என்றாள் அழுத்தமாக!

"என்னடி... பொய் சொல்றியா?"

"நீதானடா சாக்ஷியை கொன்ன? மறந்துட்டியா?" என்றவள் கேட்டு அனலாய் அவனைப் பார்க்க,

குழப்பமாய் தலைமுடியை பிய்த்துக் கொண்டவன், "என்னடி உளறிட்டிருக்க?" என்று வினவினான்.

"உளறல... நான் அவ இல்லைன்னு சொல்றேன்... அவளை நீ சாகடிச்சிட்டேன்னு சொல்றேன்... அவ மனசை... அவ உடம்பை... அவ கனவை... அவ காதலன்னு... எல்லாத்தையும் கொன்னுட்ட...

நவ் ஷீ இஸ் நோ மோர்... ப்ளடி பாஸ்டட்" என்று சொல்லியவளின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறி சீற்றமாய் அவன் சட்டையை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

அவள் முகத்தில் அத்தனை வேதனையும் தவிப்பும் வலியும் தெரிந்தது.  அவள் எந்தளவுக்குக் காயப்பட்டிருக்கிறாள் என்பதை அவள் முகம் அப்பட்டமாய் காட்டிக் கொடுக்க, மெல்ல அவள் விழியிலிருந்து இறங்கி வர இருந்த கண்ணீரை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் அவன் சட்டையை அவசரமாய் விடுத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அவளின் கோபம் அவன் சாக்ஷியிடம் நடந்து கொண்டதை அவன் கண்முன்னே நிறுத்த அவன் மௌனமாய் நின்றுவிட்டான். அவளோ தன் கண்ணீரை அந்த நொடி உள்வாங்கிக் கொண்டிருந்தாள். அவன் முன்னே ஒருபோதும் உடைந்துவிடக் கூடாதே என்றவள் தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டிருக்க,

ராகவ் அவள் முன்னே வந்து நின்று, "நான்தான் உன்னை ரேப் பண்ணேன்னு உனக்கெப்படிடீ தெரியும்?" என்றவன் குழப்பமாய் கேட்டான்.

"சாக்ஷி ப்ளைன்ட்தான்... ஆனா அவ இயர்ஸும் ப்ரைனும் செம ஷார்ப்" என்று அவனைக் கூர்மையாய் பார்த்து உரைத்தவள் அவளே தொடர்ந்தாள்.

"சென்னைக்கு நான் ரீஓபனிங்காகவோ சையத்தை பார்க்கவோ வரல... ஐ கேம் ஜஸ்ட் பாஃர் யூ... அஃப்சானா சையத்தைப் பத்தி சொன்னதும் அவர் படத்தை தேடிப் பார்க்க போய்தான் படத்துல உன் குரலைக் கேட்டேன்... அப்பவே மண்டையில உறைச்சது... நீதான் அவன்னு”

“ஆனா வெறும் குரலை மட்டுமே வைச்சு நீதானான்னு ஸ்டிராங்கா என்னால அப்படி யோசிக்க முடியல... உன்னைப் பத்தி விசாரிச்சேன்... ஆனா உன்னைப் பத்தி ராங்கா ஒரு விஷயம் கூட என் காதுல விழல... அங்கதான் நான் கன்புஃயூஸ் ஆனேன்... இவ்வளவு பெரிய ஹீரோ எப்படின்னு”

“அதனாலதான் உன்னை நேரடியா பார்க்கணும்னு நான் நினைச்சேன்... அதுக்காகதான் சென்னை ரீஓபனிங்கு வர ஒத்துக்கிட்டேன்... அதுக்குள் நீயா என் செகரட்ரிக்கு கால் பண்ண... உன் குரலை ஃபோன்ல் கேட்க நான் விருப்பப்படல... அது இன்னும் எனக்கு பழைய விஷயங்களை ஞாபகபடுத்துமே... அதனாலதான் உன்கிட்ட பேசாம அவாய்ட் பண்ணேன்...

 “அட் தி சேம் டைம் உன்னைப் பார்க்க வந்தேன்... நம்ம பர்ஸ்ட் மீட்டிங்கலயே எனக்கு உன் மேல நல்ல அபிப்ராயம் வரல... அதுக்கப்புறம் நடந்த மீட்டிங் எல்லாமே நான் ப்ளான் பண்ணது... ரீஓபனிங் பங்கஷன் உட்பட... அங்கதான்டா நீதான்னு கன்பர்ஃம் பண்ணேன்... நீ என் கையை பிடிச்சுகிட்டு தாறுமாறா பேசினியே அப்பவே நான் ஸ்டிராங்கா முடிவு பண்ணிட்டேன்”

“அப்புறம் சையத்தோட வந்த அன்னைக்கு என்னை நீ கிஸ் பண்ண வந்தியே... அப்போ உன் நெருக்கம் உன் மேல வீசுன வாசனைன்னு முடிவே பண்ணிட்டேன்... அதுக்கப்புறம்தான் சையத் படத்தில நடிக்க ஓத்துக்கிட்டேன்... ஆனா இதுல நான் எதிர்பாராம நடந்தது நீ என்னை வீடு தேடி திரும்பியும் ரேப் பண்ண வந்தது" என்றவள் அளவில்லா கோபத்தில் நிறுத்தி அவனைப் பார்க்க, அவன் நடந்தவற்றைக் கேட்டபடி திகைப்புற்றிருந்தான்.

அவள் மேலும், "அன்னைக்கு திரும்பியும் அப்படி ஒரு நாள்... சாக்ஷி மாதிரி உணர்ச்சிவசப்படக் கூடாதுன்னு ரொம்ப கேர்புஃல்லா உன்னை டீல் பண்ணேன்... ஆனா அன்னைக்கும் நீ என்னை கெஞ்ச வைச்சிட்ட" கண்ணீரோடு பேச முடியாமல் நிறுத்தியவள் மீண்டும் அவனை நோக்கி,

"தோற்றுப் போயிட்டோமோன்னு நான் நினைக்கும் போதுதான்... நீ பையத்திக்காரனாட்டம் காதலிக்கிறேன்னு... என் முன்னாடி வந்து நின்ன...  உன்னை அடிக்கிறதுக்கான ஆயுதத்தை நீயே எடுத்து கொடுக்கும் போது அதை நான் யூஸ் பண்ணாம எப்படி விடறது?!" என்றவள் சொல்லி வெறி கொண்டு சிரிக்க அவனுக்குப் பற்றி எரிந்தது.

"நீ என் காலில் விழல... அவ்வளவேதான்... மத்தபடி நான் எப்படியெல்லாம் ஆட்டிவைச்சேனோ அப்படியெல்லாம் ஆடின"

என்றவள் மேலும் பரிகசித்துப் புன்னகையிக்க, அவன் முகமெல்லாம் கோபத்தில் சிவந்து கொண்டிருந்தது.

உள்ளூர அவமானத்தில் அவன் துடித்தாலும் தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்துவன் இறங்கிய குரலில், "பைஃன்... அன்னைக்கு நான் அப்படி உன்கிட்ட நடந்திருக்க கூடாதுதான்... அது தப்புதான்... நீ வேற அன்னைக்கு என்னை ரொம்ப இரிடேட் பண்ணிட்டியா? 

அதனாலதான் கொஞ்சம் அரகென்ட்டா நடந்துக்கிட்டேன்... இல்லாட்டி போனா நான் அவ்வளவு மோசமானவன் எல்லாம் இல்ல" என்று சமாளிப்பாய் பேசியவன் எதற்காக அடி போடுகிறான் என்ற நோக்கம் புரியாமல் அவள் மௌனமாய் நிற்க அவன் மேலே தொடர்ந்தான்.

"அந்த இன்சிடென்டுக்காக நீ என்கிட்ட என்ன காம்பன்சேஷன் கேட்டாலும் தர்றேன்" என்று குற்றவுணர்வே இல்லாமல் அவளின் வலிக்கும் அவன் சீரழித்த அவள் பெண்மைக்கும் விலை பேச, அவளுக்கு அவனை கொன்றுவிடலாமா என்றளவுக்கு ஆத்திரம் பொங்கியது.

அவள் பொறுமையோடு, "என்ன மாதிரியான காம்பேன்ஸேஷன் கொடுப்பீங்க மிஸ்டர். ராகவ்?" என்றவள் எகத்தாளமாய் அவனை பார்த்துக் கேட்க,

"என்ன வேணா கேளு தர்றேன்?... ஆனா இந்த பட டயலாக் மாதிரி என் பறிபோன கற்பைத் திருப்பி கொடுன்னு மொக்கையா ஏதாச்சும் கேட்காதே... கொஞ்சம் பிராடிக்க்கலா கேளு" என்று திமிரான பார்வையோடு அவன் சொல்ல,

அவனை நிதானமாய் ஏறிட்டவள், "யூ ஆர் ரைட்...  இந்த இமோஷன்ஸ்...  ஃபீலிங்ஸ்... இதெல்லாம் டோட்டல் வேஸ்ட்... ஸோ பிராக்ட்டிக்கலா யோசிக்கிறதுதான் பெஸ்ட்...  நீயே எனக்கு என்ன காம்பன்ஸேஷன் கொடுக்க முடியும்னு சொல்லு... அதை அக்செப்ட் பண்ணிக்கிறதா வேண்டாமான்னு நான் முடிவுபண்றேன்" என்றாள்.

அந்தக் கணமே அவளிடம் நெருக்கமாய் வந்தவன், "நான் உன்னைக் கல்யாண பண்ணிக்கிறேன் பேபி... அதை விட பெட்டர் காம்பென்ஸேஷன் என்ன இருக்க முடியும்?!" என்றவன் சொல்லும் போதே அவள் மீதான காமவெறி இன்னும் அவனுக்குள் தேங்கி நின்று கொண்டிருப்பதை அவன் பார்வை பளிச்சிட்டது.

அவள் பயங்கரமாய் சிரிக்க, அவன் முகம் வெறுப்பாய் மாற தன் சிரிப்பை பிரயத்தனப்பட்டு கட்டுபடுத்தியவள்,

"என்ன ராகவ் நீ ? பிராக்டிக்லா கேளுன்னு சொல்லிட்டு நீ இப்படி ஒரு மொக்கை கம்பன்ஸேஷனை கொடுக்கிறேங்கிற... கெடுத்தவனையே கல்யாணம் பண்ணிக்கிறதெல்லாம்  ஓல்ட் ஸ்டைல்" என்றாள்.

அவளின் பேச்சும் செயலும் அவனுக்குப் பிடிபடவேயில்லை. மீண்டும் மீண்டும் அவள் வலையில் தான் சிக்கிக் கொள்கிறோமோ என்று அவன் யோசித்திருக்க அவள் அவனிடம் இருந்து நகர்ந்து வந்து,

அவன் படுக்கையில் கால் மீது கால் போட்டு அமர்ந்தவள், "ரொம்ப யோசிக்காதே ராகவ்... நீ எனக்கு என்ன மாதிரியான கம்பேன்ஸேஷன் கொடுக்கனும்ங்கிறதை நான் எப்பவோ டிசைட் பண்ணிட்டேன்" என்றாள்.

அவன் மனம் பதட்டத்தை ஆட்கொள்ள, "என்னடி அது?" என்றவன் தவிப்புற கேட்க,

"சொன்னா எப்ஃக்ட் இருக்காது... அதை பிக்சைரஸ் பண்ணாதான் நல்லா இருக்கும்" என்று அவள் அந்த அறையை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு டிவி ரிமோட்டை எடுத்து ஆன் செய்தாள்.

அவன் நகத்தை கடித்துக் கொண்டு என்னவென்று யூகிக்க முடியாமல் விழிகளை கூர்மையாய் மாற்றிக் கொண்டு பதட்டத்தின் உச்சத்தில் நிற்க, ஆன் செய்த டிவியில் ஜே செய்திகளில் ஜென்னி பேசி கொண்டிருந்தது ஒளிபரப்பானது.

சேனலுக்கு கீழே 'பிரபல நடிகர் ராகவை திருமணம் செய்ய விருப்பமில்லை -   ஜெனித்தா பேட்டி' என்று ஓடிக் கொண்டிருந்தது.

அவன் அதிர்ந்து அவளைப் பார்க்க அவள் புன்னகை ததும்ப, "வாட்ச் இட்" என்றாள். அவன் பார்வையை மீண்டும் டிவியின் புறம் திருப்ப ஒரு பெண் நிருபர் ஜென்னியிடம்,

"திடீர்னு  ஆக்டர் ராகவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றீங்களாமே... அப்படியா?" என்றவள் கேட்க,

"எஸ்" என்றாள் தீர்க்கமாக!

"ஏன்? உங்க இரண்டு பேருக்குள்ள மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்கா?” என்று அங்கே நின்றிருந்த வேறொரு சேனல் நிருபர் கேட்க,

"அதெல்லாம் இல்ல... நான் மிஸ்டர். ராகவை ரொம்ப நல்லவர் ஒழுக்கமானவர்னு... நம்பி ஏமாந்துட்டேன்... ஆனா அவர் அப்படி இல்லை" என்றாள்.

அங்கே இருந்த பத்திரிக்கையாளர்கள் தொலைக்காட்சி நிருபர்கள் எல்லோரும் அதிர்ந்து, "என்ன சொல்ல வர்றீங்க.? ஆக்டர் ராகவோட கேரெக்டர் சரியில்லைன்னா?" என்று கேட்க,

"எஸ்... அவருக்கிட்ட இல்லாத கெட்ட பழக்கமே இல்லை... மோரோவர் பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப ரொம்ப மோசமானவர்... அப்படி ஒரு ஓழுக்கங்கெட்ட ஒருத்தரை என்னால மேரேஜ் பண்ணிக்க முடியாது... இதுக்கு மேல எந்த கேள்வியும் கேட்காதீங்க... நானே ரொம்ப நொந்து போயிருக்கேன்" என்று அவர்களை கடந்து செல்ல பார்க்கவும்,

"ஒன் லாஸ்ட் க்வஸ்டின்" என்று அங்கிருந்தவர்கள் கேட்கவும், அவள் ஒரு நொடி நின்று அவர்களைப் பார்த்தாள்.

"நீங்க ஆக்டர் ராகவ் பத்தி சொல்றதெல்லாம் உண்மைதானா? அதை எப்படி நாங்க நம்பிறது... ஆக்டர் ராகவோட பேரைக் கெடுக்க நீங்க இப்படி பண்றீங்களா?" என்று அழுத்தம் திருத்தமாய் கேட்க,

"அவர் பேரைக் கெடுக்கிறதுனால எனக்கென்ன யூஸ்? நான் ஜஸ்ட் நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்... இதுக்கு மேல எதுவாயிருந்தாலும் நீங்க ராகவ்கிட்ட கேட்டுக்கோங்க" என்றவள் முடிக்க ராகவின் இரத்த நாளங்கள் வெடித்து சிதறியது போலிருந்தது.

அவன் இந்த உலகத்திலயே அதிகமாய் நேசிப்பது தன்னையும் தன் இமேஜையும்தான். அதை இப்படி அவள் தரைமட்டமாக்குவாள் என்று கனவிலும் அவன் எதிர்பார்க்கவில்லை.

"எவ்வளவு திமிரு இருந்தா என்னை பத்தி மீடியால தப்பு தப்பா சொல்லி இருப்ப" என்று கேட்டு அவன் வெறியோடு பார்க்க.

அவள், "இதேதானே நீ சையத்துக்கு பண்ண... அப்போ அவருக்கு வலிக்கும்னு நீ யோசிக்கலயே... அதென்ன? உனக்கு வந்தா இரத்தம்...  மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா?" என்று கிண்டலான பார்வையோடு கேட்டாள்.

கோபத்தின் உச்சத்தைத் தொட்டவன் "அடிங்க... உன்னை" என்று அவளை நெருங்கி கழுத்தை நெறித்துப் படுக்கையின் மீது தள்ளி வெறியோடு அழுத்த அவள் சிரமப்பட்டு,

"இது வெறும் ட்ரெயலர்தான் ராகவ்... மெயின் பிக்சர் இன்னும் ரிலீஸாகல... அதுக்குள்ள இவ்வளவு டென்ஷனான்னா எப்படி?" என்று கேட்க அதிர்ச்சியில் தன் கரத்தை சற்று தளர்த்தி,

"வேறென்னலாம்டி பண்ணி வைச்சிருக்க?" என்று அச்சம் மேலிட அவன் வினவினான் .

"முதல்ல கழுத்தை விடுடா... சொல்றேன்" என்றாள்.

அவன் மூச்சிறைக்க அவளை முறைத்தபடி விலகிவந்து நின்று  "சொல்லு டி" என்றான்.

அவள் எழுந்து சம்மேளம் போட்டு அமர்ந்து, "கதையில சஸ்பென்ஸை உடைச்சிட்டா இன்ட்ரஸ்டா இருக்காது ராகவ்" என்றவள் சொல்ல,

அவன் கடுப்பாகி, "இதோட உன் விளையாட்டை நிறுத்திக்கோ... நான் சொன்னதெல்லாம் தப்புன்னு மீடியா முன்னாடி ஒத்துக்குற... இல்லன்னு வைச்சுக்கோ"

"இல்லைன்னா?!" என்றவள் எகத்தாளமாய் அவனை பார்த்து சிரிக்க,

அவன் அவள் முகத்தின் அருகில் வந்து, "ஏய்... இப்ப நீ டிவில  சொன்னதெல்லாம் ஜஸ்ட் நத்திங்... நான் ஊதி தள்ளிட்டு போயடுவேன்.. ஆனா நான் உன் இமேஜை டேமஜ் பண்ண நினைச்சேன்னு வைச்சுக்கோ... வெளியே நீ தலைகாட்ட முடியாது... அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நிற்ப”

“உன் போட்டோஸை மார்ஃப் பண்ணி அசிங்க அசிங்கமா  ட்விட்டர்ஸ் பேஸ் புக் வாட்ஸ்அப்னு எல்லா சோஷியல் மீடியாவிலயும் உலாவ விடுவேன்... பார்த்துக்கோ?!" என்றவன் மிரட்டி அவளை குரூரமாய் பார்த்தவனை அவள் சலனமே இல்லாமல் எதிர்கொள்ள, அவள் பார்வையில் அச்சமோ கோபமோ இல்லை. மாறாய் அலட்சியம் தென்பட,

அவன் மீண்டும், "என்னடி? செய்ய மாட்டேன்னு நினைக்கிறியா ?!" என்று அவன் வன்மமாய் சிரித்து கொண்டே கேட்டான்.

"நீ எதையும் செய்வடா... என்னை இல்ல... உன் சொந்த அம்மாவை கூட மார்ஃப் பண்ணி போடுவ... அப்படிபட்ட கேடுகெட்ட பிறவிடா நீ" என்றவள் கடுப்பாய் சொல்ல அவன் கோபம் அதிகரித்து அவள் கன்னத்தில் அறைந்துவிட அவள் படுக்கையில் விழுந்தாள்.

அவன் வெறியோடு, "நீ அடங்கமாட்ட... உன்னை எப்படி அடக்கணும்னு எனக்கு தெரியும் டி.. உன் வீக்னஸ் என்னன்னும் எனக்கு நல்லா தெரியும்...  உன்னை அணுஅணுவா சித்ரவதை செஞ்சு உன்னை அனுபவிக்கிறேன்டி" என்றவன் தன் மேல்சட்டையை களைந்து அவளை நெருங்கிவர, அவள் துளியளவும் பயமின்றி அவனைப் பார்த்து சிரித்தாள்.

அவன் புரியாத பார்வையோடு, "எதுக்குடி சிரிக்கிற?" என்று கேட்க அவள் வஞ்சமாய் புன்னகைத்து,

"யூ கான்ட் ஈவன் பிளக் மை சிங்கிள் ஹெர் டேமிட்" என்று வெடித்து அவள் சொன்ன விதத்தில் தெரிந்த தீவிரமான துணிச்சல் அவனை மிரட்சிக்குள்ளாக்கியது.

அவளின் இந்தத் தைரியத்திற்கும் நிதானத்திற்கும் பின்னணியில் வேறேதோ இருக்கிறது என்று பட்டது அவனுக்கு. அவளை நெருங்க முடியாமல் உள்ளூர ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருக்க, உணர்ச்சிவசப்பட்டுத் தான் எதையாவது செய்ய போக அது தன் பேருக்கும் புகழுக்கும் இழுக்காகிவிட்டால் என்று அவளிடமிருந்து பின்வாங்க,

அவனின் பலம் அவளின் மனோபலத்தில்  முன்னிலையில் குன்றி கொண்டே வந்தது. அவள் பேசும் பேச்சுக்கு அவளை  எதுவும் செய்ய முடியாத இயலாமையில் நிற்கிறோமே என்று அவமானமாகவும் வலியாகவும் இருந்த அதே சமயம் நடப்பது நடக்கட்டும் என்று அவளைச்  சிதைத்துவிட சொல்லி ஒரு குரல் உள்ளே வெறி கொண்டு கத்தியது.

அவள் மெல்ல எழுந்து அமர அவன் குழப்பமுற்று நெற்றியைத் தேய்த்தபடி அவளையே உற்றுப் பார்த்தவன், "என்னடி ப்ளான் பண்ணிட்டிருக்க?" என்று கூர்மையான பார்வையோடு அவளை நோக்க,

"சொல்ல மாட்டேன்" என்று வஞ்சமாய் புன்னகைத்தாள்.

அவன் முகமெல்லாம் வியர்த்திருந்தது. ஏதோ அவனுக்கு எதிராய் பெரிய சதி நடக்கின்றது என்பது மட்டும் அவன் மூளைக்கு உறைக்க, அவள் என்ன யோசிக்கிறாள் என்பதைக் கூட அவள் முகம் பிரதிபலிக்காததில் அவன் ரொம்பவும் மனஉளைச்சலானான்.

இவ்விதம் அவன் யோசித்தபடி அந்த அறைக்குள்ளேயே நடக்க, அந்த அறையை நிசப்தம் சூழ்ந்து கொண்டது.

ஜென்னியின் காதில் இருந்த ப்ளூடூத்தில், "ஜென்னி போதும்.. அங்கிருந்து கிளம்பு" என்றது டேவிடின் குரல்.

அவள் "ம்ஹும்" என்று மெலிதாய் உரைத்தாள்.

"உனக்கெதாவது பிரச்சனை வந்திடப் போகுது... முதல்ல கிளம்பு" என்று டேவிட் பதட்டமாய் சொல்ல அவள் பதிலுரைக்காமல் இருக்க, ராகவ் அவளைப் பார்த்தபடி அந்த அறையைக் கடந்து சென்றான்.

ஜென்னி மெலிதான குரலில், "எனக்கெந்த பிரச்சனையும் வராது டேவிட்... நான் பார்த்துக்குறேன்" என்று உரைத்தாள்.

"வேண்டாம் நீ கிளம்பு" என்று அவன் கட்டளையாய் உரைக்க,

"நோ...டேவிட்... எனக்கு பத்தல... அவனை ஏதாச்சும் பண்ணனும்... அவன் நான் துடிச்ச மாதிரி துடிக்கணும்"

"உணர்ச்சிவசப்படாதே... ப்ளீஸ்... நீ கிளம்பு"

"முடியாது" என்றவள் நிறுத்தி மேலும்...

"இந்த ரூம்ல இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஐம் கெட்டிங் மேட்... என்னைக் குடிக்க வைச்சு... என்னைத் துடிக்க துடிக்க"என்று அழுதவள்,

மேலும் "ரொம்ப வலிச்சுது... ஆனா அதை வாய்விட்டு சொல்ல முடியாம பிணம் மாதிரி கிடந்த என்னை... சே... இப்ப நினைச்சாலும் என் உடம்பெல்லாம் நடுங்குது... அருவருப்பா இருக்கு" என்றவள் தழுதழுத்த குரலில் சொல்லி வேதனயுற்றாள்.

அப்போது மகிழ், "சாக்ஷி" என்று துடிக்க அவள் தேகமெல்லாம் பதறியது.

மகிழ் அப்போது டேவிடுடன்தான் இருந்தான். ஜென்னி வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்ததில் டேவிட் தன் கைப்பேசியை மகிழிடம் கொடுத்து பேசச் சொல்ல அப்போதுதான் அவள் தன் வலியை விவரித்தாள்.

யாரிடம் சொல்லக் கூடாது என்றிருந்தாளோ இப்போது அவனிடமே எல்லாவற்றையும் போட்டு உடைத்த வேதனையில் அவள் உள்ளம் வெதும்ப, அவள் சொன்னதைக் கேட்ட அவனுக்கும் உயிர் போகும் வலி உண்டானது. அவன் மௌனமாய் கண்ணீரில் கரைய,

அவள் அதனை உணர்ந்து, "மகிழ்" என்று அழைத்தாள்.

ராகவ் பின்னோடு வந்து அவள் முடியைப் பற்றி "என்னடி சொன்ன?  யூ கான்ட் ஈவன் ப்ளக் மை ஹேர் இல்ல" என்று சொல்லி அவள் காதிலிருந்த ப்ளூடூத்தை பிடுங்கி எறிந்தான்.

அதோடு அல்லாது அதனைத் தன் காலால் மிதித்துவிட்டு, அவள் பேகிலிருந்த ஃபோனை எடுத்துத் தூக்கியடிக்க அது சிதறியது. அதோடு அவள் பேகையும் தூக்கி வீசிவிட்டு படுக்கையின் மீது தன் ஒற்றைக் காலைத் தூக்கி வைத்தவன்,

"இப்ப காட்டுடி உன் ஹேட்டிட்யூடையும் திமிரையும்" என்க,

அவள் அப்போதும் சிரித்த முகத்தோடு, "நீ இதை எல்லாம் உடைச்சிட்டா.. என் தைரியமும் உடைஞ்சிடும்னு நினைச்சியா?! அது உன்னால முடியாதுடா... திரும்பியும் சொல்றேன்... யூ கான்ட் ஈவன் ப்ளக் மை ஹேர்" என்றாள் இன்னும் அழுத்தமாக!

அவன் தன் விரல்களால் சுடக்கிட்டபடி, "இப்ப உடைச்சு காட்டுறேன்டி உன் தைரியத்தை" என்றவன் வேகமாய் கதவை திறந்து வெளியேறி நொடிப் பொழுதில் திரும்பி வர, அவன் தன் கரத்தில் எடுத்து வந்ததை அவளும் கவனிக்கலானாள்.

"என்னதுன்னு தெரியுதா?!" என்றவன் வினவ, அவள் பதில் பேசாமல் மௌனமாய் நின்றாள்.

"இப்போ பயமா இருக்கா?!" என்றவன் கேட்க, அவள் கூர்மையாய் அவனையே பார்த்திருக்க,

"உன் மூஞ்சில இந்த ஆசிடை ஊத்தினேன்னு வைச்சுக்கோ... உன் முகம் சர்வநாசமாயிடும்... இந்த அழகு ஒண்ணுமே இல்லாம உருக்குலைஞ்சு போயிடும்... இந்த அழகுதானேடி என்னை  மயக்குச்சு...இருக்கக் கூடாது... அந்த அழகு இனி உனக்கு இருக்கக் கூடாது" என்று அவன் வெறியோடு வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, அவள் அசறாமல் நின்றபடி,

"செய் ராகவ்... ஆனா அதுக்கு முன்னாடி ஒரு செகண்ட் நான் சொல்றதைக் கேட்டுட்டு செய்" என்றதும் அவன் தலையசைத்து,

"மாட்டேன்டி... நீ பேசுறது எதையும் கேட்க மாட்டேன்... உன் முகத்தில இதை ஊத்தி நீ அணுஅணுவாய் துடிக்கிறதை ரசிச்சு பார்க்கிறதுதான் எனக்கு நிம்மதி" என்று சொல்லும் போது மனோ அவசரமாய் ஓடிவந்தான்.

"பாஸ் வேண்டாம்" என்று தடுத்து நிறுத்த,

அவன் எரிச்சலோடு, "மனோ இங்கிருந்து போ" என்று மிரட்டலாய் உரைத்த மறுகணம்,

"பாஸ் நீங்க இந்த ரூம்ல பேசுறது ஜென்னி மேடமை அடிச்சதெல்லாம் லைவ்வா ஜே சேனலில் டெலிக்காஸ்ட் ஆகுது" என்றான்.

ராகவ் அதிர்ச்சியுற ஜென்னி புன்முறுவலோடு, "நீ என் மூஞ்சில ஆசிட் ஊத்தினா அதுவும் டெலிகாஸ்ட்டாகும்... லைவ் ரிலே... ஆனா கொஞ்சம் டீலே... ராகவை ஹீரோவா பார்த்தவங்க எல்லோரும் வில்லனா பார்த்திருப்பாங்க" என்றவள் உரைக்க, அவனுக்கு அப்போதுதான் ஆரம்பித்திலிருந்து நடந்தவை எல்லாம் புரிந்தது.

அவள் ஒவ்வொரு இடத்திலும் வரிசையாய் அவனைக் கோபப்படுத்தி அடிக்க வைத்து தவறாக நடந்து கொள்ள வைத்திருக்கிறாள் என்பதை அறிந்தவன் முகமெல்லாம் வியர்வைத் துளிகள் படர நடுக்கமுற்று நின்றான்.

மனோ அந்த அறையைச் சுற்றி கேமராவைத் தேடிக் கொண்டிருக்க, "இனிமே அதை எடுத்து என்ன பண்ண போற... உன் பாஸோட வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடுச்சே" என்றவள் மேலும்,

"அன்னைக்கு உன் ரூமுக்குள்ள வந்தேனே... ஞாபகம் இருக்கா?  அப்பவே கேமராவை வைச்சுட்டேன்... அன்பார்ச்சுனேட்லி நேற்று நீ என்னைப் பத்தின உண்மையெல்லாம் கண்டுபிடிச்சு மனோகிட்ட பேசிட்டிருந்தியே... அது கூட ரெகார்டாயிருந்ததே" என்றாள்.

ராகவ் அதீத உக்கிரத்தோடு, "இதெல்லாம் நீயும் டேவிடும் பண்ண வேலையா?" என்று கேட்க,

"ப்ளேன் என்னோடது... ஆனா இம்பிளிமன்ட் பண்ணது டேவிட்" என்றாள்.

ராகவுக்கு எல்லாம் தன் கைமீறிப் போய்விட்டது என்று புரிந்தது. இதற்குப் பிறகும் எதை காப்பாற்றிக் கொள்ள பொறுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணியவன் நிமிர்ந்து அவளை வெறிகொண்டு நோக்கியவன்,

" என் இமேஜை நீ ஒட்டுமொத்தமா டேமேஜ்  பண்ணிட்ட இல்ல... உன்னை நான் டேமேஜ் பண்ணாம விடப் போறதில்லை" என்று  சொல்லும் போது மனோ,

"பாஸ் ரெகார்ட் ஆகுது வேண்டாம்" என்று தடுக்க, ராகவ் கேட்காமல் அதனை அவள் முகத்தில் ஊற்ற எத்தனித்தான். அந்த சில நொடிகளில் அந்த அறையில் பெரிய களேபரமே நிகழ்ந்து முடிந்தது.

ராகவின் பின்னே வந்த டேவிட் அவனைக் கீழே தள்ளிவிட அதை எதிர்பாராதவன் ஆசிட் பாட்டிலோடு தரையில் சரியப் பாட்டில் நொறுங்கி அந்த ஆசிட் அவன் முகத்திலேயே தெறித்தது.

"ஆஆஆஆஆ ....அம்மா... எறியுதே" என்றவன் துடித்து வலியால் கதற ஆரம்பித்தான்.

ஜென்னியோ அவன் அமிலத்தை ஊற்றப் போகிறானோ என தன் முகத்தை மூடிக் கொண்டவள் அவன் அலறல் கேட்டு விழிகளைத் திறந்தாள்.

மகிழ் அப்போது அவளை நெருங்கி, "உனக்கு ஒண்ணுமில்லையே சாக்ஷி" என்று தவிப்போடு கேட்க, அவள் அவனை அதிர்ச்சியாய் பார்த்தாள்.

அதோடு ராகவ் தரையில் துடித்துக் கதறுவதையும் பார்த்தாள்.

மனோ ராகவ் அருகில் அமர்ந்து, "பாஸ்" என்று பதறி

டேவிட் தாமதிக்காமல் ஆம்புலன்ஸிற்கு தன் கைப்பேசியின் மூலமாய் அழைப்பு விடுத்தான். ஜென்னி மகிழை ஏறிட்டுப் பார்க்க அவன் முகத்தில் ஆத்தனை கலவரம்.

"எனக்கு ஒண்ணுமில்லை மகிழ்... நீங்க டென்ஷனாகாதீங்க" என்று சொல்லியவள் மெல்ல ராகவின் அருகில் சென்று அவன் வலியால் துடிப்பதைப் பார்த்தாள்.

அவளுக்குத்  துளி கூட இரக்கம் வரவில்லை. மாறாய் களிப்புற்றவள் ராகவிடம், "இது சத்தியமா என் ப்ளான் இல்ல ராகவ்... உனக்கு நீயே போட்டுக்கிட்ட ப்ளான்... இதே இடத்தில நான் வலில துடிச்சு அழுத போது என்ன சொன்ன? தன் வினை தன்னைச் சுடும் இல்ல”

“இப்ப உன்னை சுடுது உன் வினை... நீ எடுத்த ஆயுதம் உனக்கே திரும்பிடுச்சு பார்த்தியா?" என்றவள் சொல்லிக் குரூர புன்னகையோடு அவன் துடிப்பதை ஆழ்ந்து ரசிக்க,

டேவிட் ஜென்னி தோளைப் பற்றி "ஜென்னி போகலாம்" என்றான்.

அவனை நிமிர்ந்து நோக்கியவள், "இன்னைக்குதான் எனக்கு கண்ணு வந்ததுக்காக நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுறேன் டேவிட்" என்றரைக்க, அந்த சந்தோஷத்தில் தெரிந்ததும் அவளின் ஆழமான வலிதான்.

மகிழும் அந்த நொடி கோபத்தோடு ராகவ் வலியால் துடித்து அவதியுறுவதை ரசித்து நிம்மதி பெருமூச்சொன்றை வெளியேவிட்டான்.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content