மோனிஷா நாவல்கள்
Nee Enbathe naanaga - 22
Quote from monisha on November 12, 2020, 2:18 PM22
இன்பத்தின் எல்லை
செழியன் மீனாவோடு வீட்டு வாயிலிற்குள் நுழைய அதற்குள் அன்பு தன் பாட்டி தாத்தாவிடம் நடந்தவற்றை கதை கதையாக சொல்லி கொண்டிருந்தாள்.
செழியன் பார்வை ஜானவியை தேட அப்போது சந்தானலட்சுமி, “இரண்டு வாண்டுங்களும் சமாதானம்மாயிட்டாங்களாமே?” என்று ஆர்வமாக கேட்டார்.
“நான் அப்பவே சொன்னேன் இல்ல ம்மா... குழந்தைங்க சண்டை ஒன்னும் பெரிய விஷயம் இல்லன்னு... நீங்கதான் பயந்துட்டீங்க” என்று செழியன் சொல்லும் போதே பாண்டியன் வருத்தாமாக, “இதுக்கு போய் உங்க அம்மா ரெண்டு நாளா என்னை வைச்சி வைச்சி செஞ்சா டா” என்றார் அவர்.
செழியன் தன் அப்பாவை பார்த்து சிரிக்க சந்தானலட்சுமி, “ம்ம்கும்... அப்படி என்ன இவரை சொல்லிட்டாங்க... பிள்ளைங்கள பொறுப்பா பார்த்துக்க கூடாதான்னு கேட்டேன்” என்று நொடித்து கொண்டார்.
“போதும் விடுங்க ம்மா... அந்த பிரச்சனை முடிஞ்சு போச்சு” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே ஜானவி அறையை விட்டு வெளியே வந்தாள்.
செழியன் பார்வை அவள் முகத்தை ஆர்வமாக முற்றுகையிட ஜானவி வேண்டுமென்றே அவனை பார்க்க தவிர்த்துவிட்டு, “கதை அளந்தது போதும்... வாங்க டிரஸ் சேஞ் பண்ணிக்கலாம்” என்று மகள்களை அழைத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டாள்.
‘பார்றா... முகத்தை கூட பார்க்காம போறதை... அவ்வளவு கோபமா?’ என்று செழியன் மனதில் எண்ணி புன்னகைத்து கொள்ள,
சந்தானலட்சுமி அப்போது மகனிடம், “ஆமா... அன்பு நீங்கெல்லாம் சாப்பிட்டீங்களா பா?” என்று கேட்க,
“அதான் ஃபோன்லயே சொன்னேனே ம்மா... ஆசிரமத்திலேயே சாப்பிட்டோம்னு” என்றான்.
“அப்படின்னா சரி” என்று சந்தானலட்சமி வாயில் கதவை பூட்டி கொண்டு தன்னறைக்குள் நுழைந்தார்.
அப்போது பாண்டியன் செழியனை குழப்பமாக பார்த்து, “என்னடா... ஜானு முகம் ஏதோ மாதிரி இருக்கு... புள்ளைங்கள சமாதானம் பண்ணிட்டு நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டீங்கங்ளா என்ன?” என்று சரியாக கணித்து கேட்டார்.
“புருஷன் பொண்டாட்டிக்குள் ஆயிரம் இருக்கும்... அதெல்லாம் நீங்க ஏன் கேட்குறீங்க? போய் படுங்க ப்பா” என்று தன் தந்தையிடம் கடுப்பாக பதிலளித்தான்.
“அப்போ ஏதோ இருக்கு... சரி விடு” என்றவர், “அடி வாங்காம இருந்தா சரி” என்று சொல்லி கொண்டே தன் அறைக்கு சென்றுவிட்டார்.
செழியன் யோசனையோடு, “அடி வாங்குவோமா... அவ்வளவு சீரியஸா போகுமா என்ன ?” என்றவன் தனக்குத்தானே, “ஹ்ம்ம்.. எதுவா இருந்தாலும் சமாளிப்போம்” என்றபடி மனதை திடப்படுத்தி கொண்டு மெதுவாக தன் அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.
ஜானவி அப்போது குழந்தைகள் இருவருக்கும் உடை மாற்றிவிட்டு கொண்டிருந்தாள். அவன் அவளை பார்த்து கொண்டே நுழைய அவளோ அவனை கண்டுகொள்ளவே இல்லை.
அவள் முகமோ இறுகி போயிருக்க, “என் மேல கோபமா ம்மா” என்ற கேட்ட மீனாவிடம்,
“டிரஸ் மாத்தியாச்சு இல்ல... கம்னு போய் படு” என்று முறைப்பாக கூறினாள்.
“நாங்க இன்னைக்கு பாட்டி தாத்தா ரூம்ல படுத்துக்க போறோம்” என்று மீனா கூற ஜானவி அவளை ஏறஇறங்க பார்த்து,
“அதெல்லாம் ஒன்னும் நீங்க அவங்கள போய் தொந்தரவு பண்ண வேண்டாம்... இங்கயே படுங்க” என்று அழுத்தமாக உரைத்தாள்.
“உஹும்... நாங்க இன்னைக்கு பாட்டி கூடத்தான் படுத்துப்போம்” என்று மீனா பிடிவாதமாக சொல்ல, ஜானவி இருவரின் முகத்தை புரியாமல் பார்த்தாள்.
“விடு ஜானு... அவங்கதான் ஆசை படுறாங்க இல்ல... போய் படுத்துக்கட்டுமே” என்று செழியன் இடையில் பேச,
‘இதெல்லாம் உங்க வேலையா?’ என்பது போல் ஜானவி அவனை முறைப்பாக பார்க்க அவன் கண்சிமிட்டி புன்னகைத்தான்.
ஜானவி கோபத்தோடு மகள்களை பார்த்துவிட்டு, “சரி அன்பு... மீனா அங்க படுத்துக்கட்டும்... நீ அம்மா கூட படுத்துக்கோ” என்று கூறி அவளை தன்னோடு இருக்க வைக்க பார்த்தாள்.
“உஹும்... நான் மீனா கூடத்தான் படுத்துப்பேன்” என்று அன்பு திட்டவட்டமாக கூற,
“அப்புறம் அம்மா கூட யார் படுத்துப்பா” என்ற ஜானவி கேட்டதும் மீனா முந்தி கொண்டு, “அதான் உங்க கூட அப்பா இருக்காரு இல்ல ம்மா” என்றாள்.
“ம்ம்கும்” என்றவள் நொடித்து கொள்ள,
“என் புத்திசாலி பசங்க... போய் பாட்டி தாத்தாவை தொல்லை பண்ணாம சமத்தா படுத்து தூங்கணும்” என்று அப்போது செழியன் மகள்களிடம் கூற, “ஹம்ம ஓகே” என்று இருவரும் அழகாக தலையசைத்துவிட்டு கதவை திறந்து வெளியேறிவிட அவர்களை அனுப்பிவிட்டு செழியன் கதவையடைத்தான்.
ஜானவி என்ன செய்வதென்று புரியாமல் அப்படியே நின்றாள்.
செழியன் திரும்பி நேராக அவளிடம் வருவதை பார்த்தவள் அவனை முறைத்து பார்த்துவிட்டு, பின் அவனை கண்டும் காணாதவளாக நடந்து சென்று வாட்ரூபில் இருந்த தன் மாற்று உடையை எடுத்துவிட்டு கதவை மூடும் போது அவள் சற்றும் எதிர்பாராமல் அவன் அவள் பின்னோடு ரொம்பவும் நெருக்கமாக நின்றான். ஒருபுறம் அவனின் கரம் அந்த வாட்ரூப் கதவின் மீது படிந்திருக்க, அவன் தேகமோ அவளை உரசி கொண்டிருந்தது.
அவன் மூச்சு காற்று அவள் முதுகுபுறத்தில் பட்டு உஷ்ணமேற்றி கொண்டிருக்க, சில நொடிகள் இருவருமே மௌனகெதியில் அப்படியே நின்றனர். அவனும் விலக முற்படவில்லை. அவளும் அவனை விலக்கிவிடவில்லை.
“ஜானு” என்றவன் குரல் அவள் செவிகளை தீண்டிய அதேநேரம் அவன் மீசை அவள் முதுகுபுறத்தில் குத்தி கொண்டிருக்க, அவள் உடல் முழுவதும் சிலிர்த்து கொண்டது.
அவள் பேச்சற்று நின்றுவிட படபடவென வேகமெடுத்து துடிக்கும் இதயத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் பெண்ணவள் தவிப்புற்று கொண்டிருந்ததாள்.
“என் மேல ரொம்ப கோபமா?” என்றவன் கெஞ்சலாக கேட்டு கொண்டே தம் உதடுகளால் அவள் பின்னங்கழுத்தில் உரச
அதற்கு மேல் முடியாமல், “செழியன் ப்ளீஸ்... தள்ளி போங்க...” என்று நடுங்கிய குரலோடு அவள் சொல்ல, “முடியாது” என்று பிடிவாதமாக சொல்லி அவள் தோளை பற்றி தன் புறம் வலுகட்டாயமாக திருப்பி நிறுத்தினான்.
அவனை அத்தனை நெருக்கத்தில் பார்க்க முடியாமல் அவள் தலையை கவிழ்ந்து நிற்க, “ஜானவி என்னை பாருங்க” என்று அவன் தன் விரலை கொண்டு அவள் முகத்தை உயர்த்தி பிடித்தான்.
அப்போதும் அவள் அவனை பார்க்காமல் தம் விழிகளை வேறுபுறம் திருப்பி கொள்ள, அவனுக்கு கடுப்பானது.
அவள் முகவாயை அழுந்த பிடித்து தன்புறம் திருப்பியவன், “இப்ப என்னாயிடுச்சுன்னு இவ்வளவு கோபம்? மீனா கேட்டான்னுதானே நான் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனேன்” என்று வாஞ்சையாக கேட்க,
“அது ஒன்னும் என் வீடில்ல” என்று அவள் ஆவேசமாக பதிலளித்துவிட்டு,
“நான் அவ்வளவு தூரம் வேண்டாம்ன்னு சொல்லியும் உங்களை யார் அவளை அங்க கூட்டிட்டு போக சொன்னது... அப்போ என் வார்த்தைக்கும் என் உணர்வுக்கும் மதிப்பில்லை... அப்படிதானே?!” என்று கேட்டு அவனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன், “இன்னைக்குத்தான் நாம நம்ம பசங்ககிட்ட மன்னிப்பு கேட்டா மன்னிக்கணும்னு கத்து கொடுத்தோம்... இப்ப நாமளே அதை மறந்து இப்படி கோபத்தையும் விரோதத்தையும் வளர்த்துக்க சொல்லி தரலாமா ஜானவி?” என்று கேட்கவும்,
“எனக்கு யார் மேலயும் எந்த கோபமும் இல்ல.... விரோதமும் இல்ல... இன்னும் கேட்டா அவங்க எனக்கு எந்த உறவும் இல்ல... அப்படி எனக்கே அவங்க எந்த உறவும் இல்லன்னும் போது உங்களுக்கும் மீனாவுக்கும் அவங்க யாரு செழியன்... எந்த உரிமையோடு நீங்க அவங்க வீட்டுக்கு போனீங்க” என்று அவள் அழுத்தமாக கேட்க செழியனுக்கு இம்முறை அவள் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.
அவன் மெளனமாக நிற்க அவள் அவன் முகம் பார்த்து, “பதில் சொல்லுங்க செழியன்... ஏன் அப்படியே நிற்கறீங்க... எல்லாத்துக்கும் நல்லா வியிக்கியானம் பேசுவீங்க இல்ல” என்று கடுப்பாக கேட்க,
“சரி... நான் செஞ்சது தப்புதான்... அதுக்கு இப்ப நான் என்ன பண்ணணும்ங்கறீங்க... உங்க காலில் சாஷ்டாங்கமா விழுந்து மன்னிப்பு கேட்கணுமோ?” என்று அவனும் சரிக்கு சரியாக அவளிடம் மமுறைத்து கொண்டு நின்றான்.
அவன் அப்படி கேட்டதும் அவள் உதட்டில் லேசாக புன்னகை எட்டி பார்க்க அதனை மறைத்து கொண்டவள் கோபமான பாவனையோடு,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... வழியை விடுங்க... நான் குளிச்சிட்டு டிரஸ் சேஞ் பண்ணனும்” என்றாள்.
“நான் வேணா கம்பெனி கொடுக்கவா?” என்றவன் விஷமபுன்னகையோடு நெருக்கமாக அவளருகில் வர, அவனை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்து உக்கிரமாக முறைத்தாள்.
“இப்ப கண்டிப்பா இந்த கோபம் வேணுமா?” என்றவன் கிறக்கமாக கேட்டு கொண்டே அவள் இதழ்களில் முத்தமிட வரவும் அவசரமாக அவனை விலக்கி நிறுத்தியவள்,
“இன்னைக்கு வேண்டாம்... ப்ளீஸ்” என்றாள்.
செழியன் அதிர்ச்சியோடு பின்வாங்கி, “ஜானவி... திஸ் இஸ் டூ மச்... இன்ஸ்டன்ட் காபியெல்லாம் கொடுத்து மனுஷனை உசுப்பேத்தி விட்டுட்டு... இப்ப முடியாது... வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்” என்று கேட்டான்.
“நான் சந்தோஷமான மூட்லதான் வந்தேன்... நீங்கதான் என் மூடை ஸ்பாயில் பண்ணிட்டீங்க” என்றவள் கடுப்பாக அவனை முறைத்து கொண்டே உரைத்தவள் அவனை மேலே பேச விடாமல்,
“யார் வீட்டு வாசலில நான் நிற்க கூடாதுன்னு நினைச்சேனோ அங்கேயே என்னை கொண்டு போய் நிறுத்தி... யாரெல்லாம் நான் பார்க்க கூடாதுன்னு நினைசேன்னோ... அவங்கள எல்லாம் பார்க்க வைச்சி என்னை பயங்கரமா கடுப்பேத்திவிட்டுட்டு இப்ப வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்ன்னா கேட்கறீங்க” என்று பட்டாசு போல அவள் வெடித்து சிதறிவிட்டு அவனை கடந்து சென்றாள்.
“ஜானவி கூல்... அந்த விஷயத்தை விடுங்க” என்று அவன் நிதானமாக உரைத்து கொண்டே அவளை வழிமறித்து முன்னே சென்று நிற்க,
அலட்சியமாக அவனை கடந்து சென்றவள், “கூலெல்லாம் ஆக முடியாது... வேண்டாம்னு நான் அவ்வளவு தூரம் சொல்லியும் மீனாவை அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போனீங்க இல்ல.... போங்க” என்று சொல்லிவிட்டு குளியலறை கதவை திறந்து நுழைய பார்த்தவளிடம்,
‘ரொம்ப ஓவரா இருக்கே... கூலாக முடியாதாமே... இப்ப நான் கூல் ஆக்கி காட்டிறேன்’ என்று கள்ளதனத்தோடு மனதில் எண்ணிய மறுகணம் அவளை குளியலறை உள்ளே தள்ளி கொண்டு அத்து மீறி அவனும் நுழைந்து கதவையடைத்தான்.
“செழியன் என்ன பண்றீங்க?” என்று ஜானவி படபடக்க அவளை உள்ளே தள்ளி ஷவரை திறந்து அவளை தண்ணீரில் நனைய செய்தான். அவளின் ஆடைகள் மொத்தமாக நனைந்துவிட, திக்குமுக்காடி கொண்டிருந்தவள் சுதாரிக்கும் முன்னர் செழியனின் கரம் அவள் மெல்லிய இடையை வளைத்து பிடித்து அவள் தேகம் முழுக்க முத்தமழையால் நனைய செய்து கொண்டிருந்தது.
நீர் துளிகள் படர படர பெண்ணவளின் அங்கங்கள் குளிர்ந்து கொண்டிருக்க அவனின் இறுக்கமான அணைப்பும் தொடுகையும் அவளுக்குள் உஷ்ணமேற்றி கொண்டிருந்தது. இருவரும் தங்களின் நிலையை மறந்து ஒன்றோடு ஒன்றாகி போன தருணம் அது.
அவன் முத்தங்களில் கிறங்கி போதையுண்ட மயக்கத்தில் பெண்ணவள் அவன் செய்கைக்கெல்லாம் தானாகவே உடன்பட்டு கொண்டிருந்தாள். எப்போது அவள் ஆடைகள் அவளிடமிருந்து நழுவி சென்றது என்பதை உணர கூட முடியாமல் அவனோடு பின்னி பிணைந்து கொண்டிருந்தாள். அவனுக்குமே அதே நிலைதான்.
இன்பம் இவ்வளவுதானா என்று முடிவுறாமல் அதன் எல்லை கோடுகளை அவன் விரிவாக்கம் செய்து கொண்டே இருந்தான். மெதுவாக அவன் அவளை விட்டு விலகும் போதுதான் அவள் தன்னிலை உணர்ந்து நாணத்தின் உச்சம் தொட்டு தம் கரங்களால் விழிகளை மூடி கொண்டு நின்றாள்.
அவன் மென்னகையோடு அங்கிருந்த துண்டை எடுத்து அவள் மீது போர்த்திவிட்டவன் அவள் காதோரம், “கோபம் போயிடுச்சா என் ஜானுக்கு” என்று கிசுகிசுக்க அவன் முகம் பார்க்க முடியாமல்,
“சீ போங்க!” என்று சொல்லி அந்த துண்டை சரி செய்து கொண்டு அவள் வெளியே வந்து தம் ஆடைகளைஅணிந்து கொண்டு கட்டிலில் தன் உடலை குறுக்கி படுத்து கொண்டாள்.
அவன் காட்டிய தீவிரமான தாபமும் மோகமும் அவள் தேகத்தில் இன்னும் செறிந்து கொண்டிருக்க, அவளால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. அவள் கை கால்கள் யாவும் சில்லிட்டிருந்தது. கூந்தலின் ஈரம் சொட்டி கொண்டிருக்க, “ஜானவி” என்ற செழியன் குரல் கேட்டதும் அவள் உள்ளம் படபடத்து.
படுக்கையில் அவளருகில் வந்தமரந்தவன், “முடியெல்லாம் ஈரமா இருக்கு ஜானு... துவட்டிட்டு படுங்க... அப்புறம் தலைவலி வரும்” என்று சொல்லி கொண்டே அவள் தோள்களை பற்றி தூக்கி ஒரு குழந்தைக்கு செய்வது போல் அவள் கூந்தலை ஈரம் போக துவட்ட அவன் முகத்தையே மயக்கமாக பார்த்து கொண்டிருந்தாள் அவள்.
அவள் பார்வையை அளந்து கொண்டே இருந்தவன் தன்னையும் மறந்து தம் இதழ்களோடு அவள் இதழ்களை இணைத்திருந்தான். அவள் மனமும் அதற்காகவே ஏங்கியது போல அந்த முத்தத்தில் லயித்து கொண்டிருந்தது.
அவன் உதடு பிரிக்கவும் அவன் முகம் பார்த்து, “செழியன்” என்றழைக்க அவளை தன் தோள் மீது கிடத்தி கொண்டபடி,
“சொல்லுங்க ஜானவி” என்றான்.
“சாரி... நான் உங்களை ரொம்ப ஹார்ட் பண்ணிட்டேனா? என்னால நீங்க அங்க போனதை தாங்க முடியல” என்றவள் மனம் வருந்தி பேச,
“உங்க கோபத்தில நியாயம் இருக்கு ஜானவி... அதேசமயும் நான் மீனாவை அழைச்சிட்டு போனதுக்கான காரணத்தை புரிஞ்சிகோங்க” என்றவன் நிதானமாக சொல்ல அவள் விழிகளை உயர்த்தி அவனை கேள்வியாக பார்த்தாள்.
“நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்... மீனா மெச்சூர்ட் சைல்ட்... அவ கிட்ட நீங்க வேணாம்னு ஒரு விஷயத்தை ஃபோர்ஸ் பண்ணி திணிக்கும் போது அவளுக்கு அது மேல இருக்கு பிடிப்பு அதிகமாகும்... அது அப்புறம் நமக்குதான் கஷ்டம்” என்றவன் சொல்ல அவனை யோசனையாக பார்த்தாள் ஜானவி!
அவன் சொல்வது ஒருவகையில் அவளுக்கு சரியென்றே பட்டது. அவன் மேலும், “மீனாவை நான் அங்கே கூட்டிட்டு போனேன்தான்... ஆனா நான் வீட்டுக்குள்ள போகல” என்றதும் அவள் அதிர்ந்து பார்த்து, “நிஜமாவா?” என்று கேட்க,
“என் ஜானு இல்லாம நான் மட்டும் எப்படி உள்ளே போவான்?!” என்றவன் கேட்க, அவளுக்கு சந்தோஷத்தில் வார்த்தைகள் வரவில்லை. அவனை இமைக்காமல் அவள் பார்த்திருக்க, “நீங்களும் நானும் வேற வேற இல்லன்னும் போது உங்களுக்கு நடந்த அவாமானம் எனக்கு நடந்த அவமானம் இல்லையா?” என்று இயல்பாக சொல்லி முடிக்கும் போது விவரிக்க முடியாத இன்பத்தில் திளைத்திருந்தாள்.
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல செழியன்” என்றவள் நெகிழிச்சியோடு அவன் முகம் பார்க்க,
“வார்த்தையால எதுவும் சொல்ல வேண்டாம்” என்றவனின் கல்மிஷமான புன்னகை அவளை மயக்கியது. அவன் கரங்கள் அவள் தேகத்தில் இறுகியது. அவனுக்குள் அவள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி போய் கொண்டிருந்தாள்.
எல்லையில்லா காதலோடு களவு கொள்வதல்லவோ இன்பம்!
அந்த இன்பத்தை அவர்கள் திகட்ட திகட்ட பெற்று கொண்டிருந்தது. போதுமென்ற உணரவே வரவில்லை இருவருக்கும். மனம் காதலெனும் மயக்கத்தில் கிடந்தது. அவர்கள் உடல் உணர்வுரீதியாக தங்களையும் மறந்து பயணித்து கொண்டிருந்தது. தேகத்தின் தாபம் தணிந்த நிலையில் இருவருமே அயர்ந்த உறக்க நிலைக்கு சென்றிருந்தனர்.
விடிந்த சில மணித்துளிகளில் அவன் அவள் காதோரம் சீண்ட, “செழியன் போதும்” என்றவள் உறக்கத்திலேயே புலம்ப,
“ஜானு கண்ணை திறங்க” என்றான் மெலிதான குரலோடு!
“எதுக்கு?”
“திறங்கன்னு சொல்றேன் இல்ல” என்றவன் தீர்க்கமாக சொன்ன நொடி அவள் விழிகளை சிரமப்பட்டு திறந்து பார்த்தாள். ஏதோ மங்கலாக தெரிய மீண்டும் கண்களை கசக்கி கொண்டு அவள் விழிகளை நன்றாக திறந்த சமயம் அவள் ஸ்தம்பித்துவிட்டாள்.
அவள் இதழ்கள் விரிய அவனை பார்க்க, “எப்படி இருக்கு?” என்று புருவத்தை உயர்த்தி கேட்டான் அவன். சில நொடிகள் மௌனமாக அந்த காட்சியை ஆற தீர ரசித்துவிட்டு, “செழியன்... எப்படி இப்படியெல்லாம்” என்று அதிசயித்தாள்.
அந்த அறையின் சுவர் முழுக்க மீனாவும் அன்புவும் இருப்பது போன்ற புகைப்படங்கள். அதோடு இடையில் ஜானவியோடு மீனா அன்பு இருப்பது போல் ஓர் படம் பெரிதுப்படுத்தி மாட்டப்பட்டிருந்தது.
அவள் மீண்டும் அவனை விட்டு விலகி எழுந்து அந்த படங்களை உற்று பார்த்து கொண்டிருக்க, “எப்போ இதெல்லாம் செஞ்சீங்க?” என்று கேட்க,
அவன் பின்னோடு வந்து அவளை தன்னோடு இறுக்கமாக அணைத்து கொண்டு,
“இதை நான் செய்யணும்னு முன்னாடியே யோசிச்சேன்... ஆனா தள்ளி போயிட்டே இருந்துது... எப்போ நம்ம அன்புவும் மீனாவும் சண்டை போட்டங்களோ அப்பவே முடிவு பண்ணிட்டேன்... இதை உடனே செய்யணும்னு... அதான் எல்லா ஒகேஷன்ல்யும் எடுத்த போடோஸ்லயும் பெஸ்ட்டானதா பார்த்து செலெக்ட் பண்ணி பிரேம் போட சொன்னேன்... பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.
அவள் வார்த்தையாக சொல்லாமல் அவன் கன்னத்தில் அழுந்த முத்தம் பதிக்க, “இந்த சல்பி முத்தமெல்லாம் எனக்கு வேண்டாம்... எனக்கு என் காபி வேணும்... ஸ்ட்ராங்கா வேணும்” என்க,
“பிரஷ் பண்ணல” என்று முகம் சுணங்கினாள்.
“அதான்... ஜானு கிக்கே” என்றவன் அவள் இதழ் நோக்கி இறங்க, “போங்க செழியன்” அவள் விலக முற்பட்டு கொண்டிருக்க,
“டே அன்பு!” என்று ஒரே கத்து கத்தினார் சந்தானலட்சுமி!
“என்ன? அத்தை கத்துறாங்க” என்று ஜானவி புரியாமல் கேட்க, செழியன் கள்ளத்தனமாக சிரித்தான்.
“உங்க ரியாக்ஷனே சரியில்லையே” என்றவள் வேகமாக தன் மாமியார் அறை நோக்கி செல்ல, அங்கே சந்தானலட்சுமி உக்கிர கோலத்தில் நின்றிருந்தார்.
பாண்டியன் முகத்தில் புன்னகை வழிந்தோடி கொண்டிருக்க, “என்னாச்சு அத்தை?” என்று கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தவள் கொல்லென்று சிரித்துவிட்டாள்.
பாண்டியன் சந்தானலட்சுமியின் கன்னத்தை கிள்ளுவது போலவும் அவர் நாணுவது போலவும் இருந்தது அந்த அறையின் சுவற்றிலிருந்த பாடம்.
“உன் புருஷன் என்ன வேலை பண்ணி வைச்சிருக்கான் பார்த்தியா?” என்று அவர் ஜானவியிடம் கேட்க செழியன் அடக்கப்பட்ட புன்னகையோடு உள்ளே நுழைய,
“என்னடா வேலை இது?” என்று கேட்டு சந்தானலட்சுமி முறைத்தார்.
அவன் பதில் சொல்லாமல் தன் அப்பாவை பார்க்க அவர் மகனிடம், “எப்படா இதை படம் புடிச்ச?” என்று கேட்க,
“உங்க கல்யாண நாள் போதுதான் ப்பா” என்று புன்னகையோடு சொன்னான்.
சந்தானலட்சமி கோபத்தோடு, “அன்பு என்கிட்ட அடி வாங்குறதுக்கு முன்னாடி ஒழுங்கா இந்த போட்டோவை கழட்டு”என்க,
“ஏன் ம்மா நல்லாதானே இருக்கு” என்று செழியன் சொல்ல, “ஆமா அத்தை நல்லாத்தான் இருக்கு... நீங்க செமையா வெட்கப்படுறீங்க” என்றாள் ஜானவி!
“ஆமா இல்ல” என்று பாண்டியனும் மருமகளுடன் சேர்ந்து கொள்ள, “கொஞ்சம் கூட விவஸ்த்தையே இல்ல உங்களுக்கு” என்று கணவரை முறைத்தவர்,
“டே அன்பு! இந்த போட்டோவை கழட்டுடா” என்று கெஞ்சலாக கேட்க அதில் வெட்கமும் கலந்திருந்தது.
செழியன் தன் அம்மாவின் தோள் மீது கை போட்டு, “இருக்கட்டும் ம்மா... ப்ளீஸ்... இந்த போட்டோ இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் உங்க அன்யோன்யத்தை காண்பிக்குது... அப்பா ஒரு தடவை சொன்னாரு... நல்ல கணவன் மனைவியாலதான் நல்ல அம்மா அப்பாவாகவும் இருக்க முடியும்னு... அது ரொம்ப உண்மையான வாரத்தை ம்மா...உங்களை பார்த்துதான் நான் அதை கத்துக்கிட்டேன்... நானும் ஜானவி கூட கடைசி வரைக்கும் இப்படிதான் இருக்க ஆசை படுறேன்” என்று சொல்லி அவன் பார்வை ஜானவியை பார்க்க அவள் நாணத்தோடு தலையை தாழ்த்தி கொண்டாள்.
“இல்ல டா அன்பு... யாராச்சும் சொந்தாக்காரங்க வந்து பார்த்தா”
“அடுத்தவங்களுக்காக நம்ம சந்தோஷத்தை ஏன் மாத்திக்கணும்... நாம நாமளா இருப்போம் ம்மா” என்று சொல்ல சந்தானலட்சுமி முழுவதும் சம்மதம் சொல்லவில்லை என்றாலும் மெளனமாக இருந்துவிட்டார். ஆனால் அந்த படத்தை பார்த்து மனதார ரசித்து கொண்டார்.
ஆனால் இத்தனை களேபரத்திலும் அந்த வாண்டுகள் இரண்டும் உறங்கி கொண்டிருக்க, அவர்கள் எழுந்த பிறகு நிச்சயம் அந்த படங்களை எல்லாம் பார்த்து ஆனந்தத்தில் குதுகலிக்கத்தான் போகிறார்கள்.
ஜானவிக்கு காதலோடு அழகாக ஓர் குடும்பம் அமைந்தது. ரசித்து அனுபவித்து வாழ்க்கையை வாழ கற்று கொண்டாள்அவள்!
மாதங்கள் உருண்டோடியது. மனநிறைவாக அவள் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள் என்று சொன்னாலும் செழியன் மனதில் ஓர் குற்றவுணர்வு தங்கியிருந்தது.
அன்று குழந்தைகள் உறங்கியதும் ஜானவி, “ஏதோ சொல்லணும்னு சொன்னீங்களே!” என்று அவனருகில் வந்து அமர்ந்து கொள்ள,
“நான் உங்களை சந்தோஷமா வைச்சிருக்கேனா?” என்று கேட்க அவனை குழப்பாமாக பார்த்தாள்.
பின் அவள் சிரித்துவிட்டு, “என்ன கேள்வி இதெல்லாம்?” என்க,
“எனக்கு பதில் வேணும்” என்றவன் பிடிவாதமாக கேட்டான்.
“ நான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று உற்சாகமாக பதிலளித்தாள்.
“அப்போ நான் ஓரிடத்துக்கு கூப்பிட்ட நீங்க வருவீங்களா?”
“நீங்க எங்க கூப்பிட்டாலும் கண்ணை மூடிட்டு வருவேன்”
“அப்போ நாம நாளைக்கு உங்க அம்மா அப்பா வீட்டுக்கு போகணும்” என்று சொன்ன நொடி அவள் அதிர்ச்சியோடு எழுந்து கொள்ள, ‘ஜானவி’ என்றவளை போக விடாமல் கரம் பிடித்து கொண்டான்.
“நீங்க சொன்ன வார்த்தை உண்மைன்னா... எனக்காக நீங்க வரணும்” என்று ரொம்பவும் சுருக்கமாக சொல்லிவிட்டு, “போய் படுத்து தூங்குங்க... காலையில நீங்க நான் பசங்க... ஒரு பத்து மணிக்கா கிளம்பணும்” என்று முடிவாக சொல்லி அவள் கரத்தை அவன் விடவும் அவள் கோபமாக முறைத்து கொண்டே நின்றாள்.
வரமாட்டேன் என்றும் சொல்ல முடியவில்லை. வருகிறேன் என்றும் அவளால் சொல்ல முடியவில்லை. அவன் மீது கொண்ட நம்பிக்கையை அல்லவா அவன் ஆயுதமாக பயன்படுத்திவிட்டான்.
அவன் சொன்னதை மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் காலை அவனுடன் புறப்பட்டாள். அவளிடம் ஒருவித ஒட்டா தன்மை இருந்தது. அதை கவனித்து கொண்டேதான் காரை இயக்கினான்.
ஜானவி ஒரே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இருவருக்கும் இடையில் மௌனம் மொழியானது. அவளின் அந்த மௌனத்தை கூட ரசித்து கொண்டே வந்தான். அதிலும் அவள் அவன் மீது கொண்ட ஆழமான காதலும் நம்பிக்கையும்தான் தெரிந்தது.
அந்த இடத்தின் மௌனத்தை உடைத்தது செழியனின் பேசி!
‘நீ என்பதே... நான் தானடி
நான் என்பதே... நாம் தானடி
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி’ என்ற வரிகளோடு ரீங்காரமிட்டது.
22

Quote from Muthu pandi on June 29, 2021, 3:14 PMNice
Nice