மோனிஷா நாவல்கள்
Nijamo Nizhalo - Episode 18
Quote from monisha on June 7, 2023, 1:56 PM18
வெங்கடேஸ்வர் மற்றும் ஸ்ரீலக்ஷ்மி திருமண வரவேற்பிற்கான ஆயத்தங்கள் துவங்கியிருந்தன.
வண்ண விளக்கு தோரணங்களால் மின்னி கொண்டிருந்த பிரமாண்டமான வேதா மண்டபத்தின் வாயிலை தாண்டி உள்ளே நுழைந்தது ஹமீதின் கார். அவன்தான் வெங்கட்டின் ஒரே நெருங்கிய நண்பன்.
இருவரும் இளங்கலை மற்றும் முதுகலையை ஒன்றாக பயின்ற காரணத்தால் அவர்கள் மிக நெருங்கிய நண்பர்களானார்கள். அவன் இப்போது பெங்களூரிலிருக்கும் பிரபல மருத்துவமனையில் பணிபுரிகிறான். எனினும் இருவருக்கும் இடையிலான தொடர்பு விட்டு போகவில்லை.
“வந்துட்டேன்… உள்ளே வந்துட்டேன் டா… அஞ்சே நிமிஷம் வந்துடுவேன்” என்று நண்பனிடம் அலைபேசியில் தகவல் கூறி கொண்டே வந்தவன், பிரமாண்டத்துடன் நின்றிருந்த அந்த பதாகையை பார்த்து திகைப்பிலாழ்ந்தான்.
ஸ்ரீயும் வெங்கட்டும் சேர்ந்து நிற்பது போன்ற பேனர் அது.
ஏற்கனவே அந்த மண்டபத்தின் விசாலமான வாயிற் புறத்தை பார்த்தே பிரம்மிப்பலிருந்தவனுக்கு இந்த உயரமான பேனர் இன்னும் வியப்பை கூட்ட, “புளியங் கொம்பா பிடிப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்… நீ பெரிய புளிய மரத்தை பிடிச்சிருப்ப போல” என்றான்.
“வீட்டுல அம்மா பார்த்து பிக்ஸ் பண்ணதுதான் ஹமீத்” என்று வெங்கட் பதில் சொல்ல,
“அம்மா பார்த்து பிக்ஸ் பண்ணதுதானாலும்… உங்க இரண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் சும்மா அள்ளுது” என்றான்.
“ஜோடி பொருத்தமா? எப்ப நீ ஸ்ரீயை பார்த்த” என்றவன் குழப்பமாக கேட்க,
“அதான் பெருசா பேனர் கட்டிறாங்களே… நீங்க இரண்டு பேரும் சேர்ந்து நிற்கிற மாதிரி” என்றவன் கூறவும், “பேனரா… நான் பார்க்கலயே… அதுவும் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து நின்னு போட்டோஸ் எதுவும் எடுக்கலயே… இரண்டு நாள் முன்னாடி தனியாதான் போட்டோ எடுத்தாங்க” என்றான் வெங்கட்.
“அப்படியா… அப்போ இது கிராபிக்ஸா இருக்கும்… ஆனா பார்த்தா அப்படி தெரியல… ரொம்ப ரியலஸ்டிக்கா இருக்கு… இப்பதான் ஜஸ்ட் நவ் பேனர் கட்டிட்டு இருக்காங்க” என்று அந்த பேனரை பார்த்து கொண்டே கடந்தவன் ஏதோ அவன் நினைவுக்கு வர, காரை நிறுத்திவிட்டான்.
அவன் பேச்சற்று பேனரிலிருந்த ஸ்ரீ முகத்தை அதிர்ச்சியாக பார்த்திருக்க, “என்னடா பேச மாட்டுற?” என்று வெங்கட்டின் குரல் அவன் காதில் விழவில்லை.
ஏதோ பார்க்க கூடாததை பார்த்தது போல அதிர்ச்சியில் இருந்தவன் நண்பன் பேசியில் குரல் கொடுக்கவும் இயல்பு நிலையை எட்டினான்.
அந்த நொடியே, “நான் வந்து பேசுறேன்” என்று அவசரமாக வெங்கட்டின் இணைப்பை துண்டித்துவிட்டு பேனரிலிருந்த ஸ்ரீயின் முகத்தை தன் பேசியில் படம் எடுத்து கொண்டான்.
பின் காரை ஒட்டி கொண்டு வந்து ஓரமாக நிறுத்தியவன் உடனடியாக அந்த போட்டோவை தன்னுடன் பணிபுரியும் நண்பனுக்கு அனுப்பிவிட்டு அவனிடம் கைபேசியில் பேசினான்.
சில நிமிட உரையாடலுக்கு பின், “ப்ளீஸ் எனக்கு இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு” என, எதிர்புறத்தில் அவன் ரொம்பவும் தயங்குவது போல தெரிந்தது.
“அது ரொம்ப கான்பெடன்ஷியில் பைல்… டாக்டருக்கு தெரிஞ்சா” என்றவன் இழுக்க,
“நீ ஒன்னும் பண்ண வேண்டாம்… நான் சொன்ன பைல இருக்க பொண்ணோட போட்டோவும் நான் அனுப்பின பொண்ணோட போட்டோவும் ஒண்ணான்னு மட்டும் பார்த்து சொன்னா போதும்… ப்ளீஸ்” என்று ஹமீத் அவனை விடாமல் நச்சரிக்க, “சரி பார்க்கிறேன்” என்று வேறுவழியின்றி அவனும் சம்மதிக்கலானான்.
ஹமீதிற்கு நிச்சயமாக தெரிந்திருந்தது. அது அவளேதான். பெயரும் ஸ்ரீலக்ஷ்மி என்று இருந்ததாகவே நினைவு.
இருந்தாலும் சந்தேகத்தின் அடிப்படையில் எந்த தீர்மானத்திற்கும் வர வேண்டாம் என்று எண்ணினான். அப்போது கார் பார்க்கிங்கில் நின்றிருந்த அவனை பார்த்துவிட்ட நந்தா, “நீ வெங்கட்டோட பிரண்ட் ஹமீத்தானே… என்ன தம்பி இங்கே நிற்குறீங்க? உள்ளே வாங்க” என்று அவனை மண்டபத்திற்குள் அழைத்து கொண்டு வந்தார்.
வெங்கடேஸ்வர் வெட்ஸ் ஸ்ரீலக்ஷ்மி என்று வண்ண பூக்களால் பொறிக்கப்பட்டிருந்ததை பார்த்த ஹமீதிற்கு உள்ளுர ஏதோ நெருடியது. நண்பன் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வந்துவிட கூடாது என்று எண்ணி கொண்டே நடந்தான்.
அதேநேரம் வெங்கட் அறைக்குள் நுழைந்த மல்லி, “சீக்கிரம் டிரஸ் சேஞ் பண்ணிக்கோ வெங்கட்… கெஸ்ட் எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க” என்று பரபரப்புடன் அவன் அணிந்து கொள்ள கோட் சூட் எடுத்து கொடுக்க, அதனை பெற்று கொண்டவன் அவரை ஆழமாக ஒரு பார்வை பார்த்தான்.
“நேரமாச்சுன்னு சொல்லிட்டு இருக்கேன்… நீ என்னடா அப்படியே பார்த்துட்டு நிற்குற” என்றவர் மகனிடம் காய அவன் தன் பார்வையை எடுக்காமல்,
“ம்மா ஏதாவது பிரச்சனையா? என்கிட்ட ஏதாவது சொல்லாம மறைக்கிறீங்களா?” என்று விசாரிக்கவும் மல்லி திகைத்துவிட்டார். அந்த நொடி அவருக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.
அவர் உடனடியாக தன் முகத்தில் படர்ந்த கவலையை மறைக்கும் வண்ணம் செயற்கையாக புன்னகையை வரவழைத்து கொண்டு, “எனக்கென்னடா பிரச்சனை… கொஞ்சம் கல்யாண டென்ஷன்… அவ்வளவுதான்” என்று சமாளிக்க,
“முதல நான் கூட கல்யாண டென்ஷன்தான் நினைச்சேன்… ஆனா எனக்கு இப்ப அப்படி தோணல… கல்யாண மண்டபத்துக்கு வந்துட்டோம்… ஆனா இப்ப கூட உங்ககிட்ட பழைய உற்சாகம் இல்ல… என்னமோ நீங்க என்கிட்ட மறைக்கிற மாதிரி” என்று அவன் பேசி கொண்டே போக, அவர் படபடப்பானார்.
“நான் என்ன உன்கிட்ட மறைக்க போறேன்… எனக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா… உங்க அப்பாவுக்கு சொந்தகாரங்களோட நின்னுக்கிட்டு கதை அடிக்கவே சரியா இருக்கு… நான்தான் எல்லா வேலையும் செய்யணும்… எதை மறந்துடுவேனோன்னு நானே பதட்டத்துல இருக்கேன்… நீ என்னடான்னா” என்று படபடவென பேசிவிட்டு,
“இந்த மாதிரி ஏதாவது உளறிட்டு இல்லாம டிரஸ் மாத்திர வழிய பாரு… டைமாச்சு” என்றவர் அந்த நொடியே வேலை இருப்பதாக சொல்லி அவனிடமிருந்து நழுவிவிட்டார்.
இப்போது கூட வெங்கட்டிற்கு மல்லி ஏதோ பதட்டத்தில் பேசியது போலவே தோன்றிய போதும்,
‘நம்ம ரொம்ப யோசிக்கிறோம்னு நினைக்கிறேன்… அம்மா என்ன நம்மகிட்ட மறைக்க போறாங்க’ என்று அவனுக்கு அவனே சமாதானம் கூறி கொண்டான்.
சரியாக அதே சமயத்தில் நந்தா ஹமீதை அவன் அறைக்கு அழைத்துவந்தார். நண்பனிடம் இயல்பாக நலம் விசாரித்து பேசி கொண்டிருந்தாலும் ஹமீதின் மனதை அந்த சந்தேகம் குடைந்து கொண்டே இருந்தது.
மற்றொரு புறம் மல்லி மகனிடமிருந்து தப்பி வந்த உணர்வில் தன் நெற்றி வியர்வையை துடைத்து கொண்டார்.
அப்போது விருந்தினர்களை வரவேற்று கொண்டிருந்த தணிகாச்சலத்தை பார்த்த மல்லி அவரிடம் சென்று, “சார்… பிரச்சனை ஒன்னும் வராது இல்ல” என்று கவலையுடன் கேட்க,
“இன்னும் நீங்க அதை பத்தியே நினைச்சுட்டு இருக்கீங்களா? விடுங்க… அதெல்லாம் முடிஞ்சு போச்சு… நீங்க டென்ஷன் இல்லாம கல்யாண வேலையை பாருங்க” என்று கூறினார். ஆனால் அந்த பதில் மல்லிக்கு திருப்திகரமாக இல்லை.
மல்லியின் மௌனத்தை பார்த்த தணிகாச்சலம், “உங்க தங்கை பொண்ணு நல்லா இருக்கா இல்ல” என்று விசாரிக்க,
“நல்லா இருக்கா… அதிர்ச்சில கொஞ்சம் உடம்பு சரியில்லாம போயிடுச்சு… இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க” என்றார்.
“நல்லது” என்றவர், “அப்புறம் அந்த பேய் வீடு… அதை டெமாலிஷ் பண்ண ஏற்பாடு பண்ணியாச்சு… நீங்க இனிமே கவலையே பட வேண்டாம்… எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சு… நீங்க நிம்மதியா கல்யாண வேலையை பாருங்க” என்றவர் சொல்லிவிட்டு சென்றார்.
இதுவரை பேசியதிலேயே மல்லிக்கு அந்த செய்திதான் கொஞ்சம் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. நிம்மதியாக மூச்சை இழுத்துவிட்டு கொண்டவர் இனி எந்த பிரச்சனையும் இருக்காது என்ற நம்பிக்கையுடன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்களை அழைப்பதில் ஆர்வம் காட்டினார்.
ஆனால் உண்மையான பிரச்சனையே இப்போதுதான் ஆரம்பித்திருந்தது.
ஹமித் தன் அலைபேசியில் வந்த தகவலை கேட்ட பின் சோர்ந்து அமர்ந்துவிட்டான். எப்படி அதனை வெங்கட்டிடம் சொல்வதென்று அவனுக்கு புரியவில்லை.
“என்னடா ஒரு மாதிரி இருக்க… ட்ரேவல் பண்ணிட்டு வந்த டையர்டா… கூல் ட்ரிங்க்ஸ் ஏதாவது குடிச்சியா… எடுத்துட்டு வர சொல்லட்டுமா?” வெங்கட் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகி கொண்டே நண்பனிடம் கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… அங்கிள் வரும் போதே எல்லா கொடுத்துட்டாரு” என்றவனுக்கு தன் மனதில் உள்ளதை நண்பனிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டுமென்ற பதட்டம் கூடி கொண்டே போனது.
‘சொல்லியே தீரணும்… இப்ப சொல்லலன்னா தப்பாகிடும்’ என்று இறுதியாக பல மன குழப்பங்களுக்கு இடையில் திடமாக முடிவெடுத்தவன்,
“வெங்கட்… நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்று ஆரம்பித்தான்.
“என்ன ஹமித்… சொல்லு” என்று வெங்கட் அவன் புறம் திரும்ப,
“அது வந்து… நான் இப்போ இந்த விஷயத்தை சொல்ல கூடாது… அது தப்பும் கூட… ஆனாலும் என்னால சொல்லாம இருக்க முடியல… ஏன் னா நீ என் ப்ரண்டு… உன் லைப் எனக்கு முக்கியம்… ஒரு வேளை இதை நான் தெரிஞ்சும் சொல்லாம மறைச்சா உனக்கு துரோகம் செஞ்ச மாதிரியாகிடும்” என்றவன் பீடிகை போட,
வெங்கட் சத்தமாக சிரித்துவிட்டு, “டேய் டேய்… உன்னை பத்தி எனக்கு தெரியும்டா… நீ இப்படி சுத்தி வளைச்சு ஓவரா ஹைப் கொடுத்து பேசுவ… நானும் சீரியஸான ஏதோ சொல்ல போறன்னு கேட்க ஆரம்பிச்சா மொக்கையா ஏதாவது சொல்லி என்னை நோஸ் கட் பண்ணுவ… இந்த விளையாட்டுக்கு நான் வரலபா” என்றான்.
“சத்தியமா இல்ல வெங்கட்… இது கொஞ்சம் சீரியஸான விஷயம்தான்” என்று ஹமித் சொல்ல,
“நீ முதல சொல்லு… அப்புறம் அது சீரியஸா இல்லையான்னு நான் முடிவு பண்றேன்” என்றான்.
நண்பனை ஆழமாக பார்த்த ஹமித் சொல்ல துவங்கினான்.
“வெளியே பேனர்ல ஸ்ரீலக்ஷ்மியோட போட்டோ பார்த்தேன்… அவங்க… அவங்க எங்க ஹாஸ்பெட்டில் சீப் டாக்டர்கிட்ட சைக்காட்டிரிக் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருந்திருக்காங்க… நான் கொஞ்ச நாள் முன்னாடி சாரோட கப்போர்ட்ல வேற பைலை எடுக்கும் போது ஸ்ரீயோட பைலை பார்த்தேன்… பேஸ் ரொம்ப அட்டிராக்டிவா இருந்ததால ஒரு கியூராஸிட்டிலதான் சும்மா படிச்சேன்
கொஞ்சம் பெகுயிலர் கேஸ் மாதிரி இருந்துச்சு… ஹெலோசினேஷன் மாதிரியான பிரச்சனை அவங்களுக்கு இருக்கிறதா எழுதியிருந்தது… ஆனா ரிபோர்ட்ஸ்ல எதுவும் க்ளியரா இல்ல”
அவன் சொல்லி முடித்த பிறகு வெங்கட் நண்பனை பார்த்து, “நீ சொல்ற இந்த ரிபோர்ட் ஸ்ரீலக்ஷ்மிதுன்னு உனக்கு உறுதியா தெரியுமா?” என்று கேட்க,
“நான் திரும்பவும் ஹாஸ்பெட்டில இருக்க என் ப்ரண்டுகிட்ட செக் பண்ணி கன்பார்ம் பண்ணிட்டுதான் உன்கிட்ட இதை பத்தி சொல்றேன்” என்றதும் வெங்கட் அடுத்த வார்த்தை பேசவில்லை.
தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். ஸ்ரீயிடம் பேசியவரை அவனுக்கு அப்படி எதுவும் தெரியவில்லை. அவளிடம் வயதிற்கு ஏற்ற பக்குவம் இல்லை. கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டாள். ஆனால் அதை கூட அவன் ஒரு குறையாக பார்க்கவில்லை. அப்போது நண்பனின் தோளில் கை வைத்த ஹமித்,
“உனக்கு இதை பத்தி பொண்ணு வீட்டுல எதுவும் சொல்லலயா?” என்று கேட்க, அதற்கும் வெங்கட் அமைதியாகவே இருந்தான்.
“சொல்லல… அப்படிதானே” என்று கேட்ட ஹமித் கோபத்துடன், “ரொம்ப தப்பு வெங்கட்… இதை நீ விட கூடாது… இப்பவே ஏதாச்சும் ஒரு முடிவு எடுத்தாகணும்” என்று சீற,
“என்ன முடிவெடுக்க சொல்ற?” என்று தன் மௌனத்தை உடைத்து நண்பனிடம் கேட்ட வெங்கட், “இவ்வளவு தூரம் வந்த பிறகு கல்யாணத்தை நிறுத்த சொல்றியா?” என்றான்.
அவன் குரலில் கடினம் இருந்தது.
“இது உன் வாழ்க்கை பிரச்சனை வெங்கட்”
“இது என் வாழ்க்கை பிரச்சனை மட்டுமில்லை வெங்கட்… ஸ்ரீயோட வாழ்க்கையும் இதுல அடங்கி இருக்கு… நீ சொல்றதை மட்டுமே வைச்சு ஒரு முடிவுக்கு வர என்னால முடியாது” என்றவன் தீர்க்கமாக கூற,
“இல்ல வெங்கட்… என்னதான் இருந்தாலும் ஸ்ரீலக்ஷ்மிக்கு சைக்காட்டிரக் ப்ராபளம் இருக்கிற விஷயத்தை உன்கிட்ட சொல்லி இருக்கணும்… இது சீட்டிங்” என்று ஹமித் பொறுமினான்.
“அப்படி பார்த்தா நான் கூடத்தான் சைக்காட்டிரிக் ட்ரீட்மென்ட்ல கொஞ்ச நாள் இருந்தேன்… அதை பத்தி எங்க அம்மா அவங்ககிட்ட சொல்லலயே” என்றான்.
“என்னடா பேசிட்டு இருக்க? உன் பிரச்சனை வேற… ஸ்ரீலக்ஷ்மி பிரச்சனை வேற” என்று ஹமித் சொல்ல,
“என்ன பிரச்சனையா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன் ஹமித்… நீ இதை பத்தி யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்” என்றவன் மிக சாதாரணமாக கைக்கடிகாரத்தை கட்டி கொண்டே,
“டைமாவது… நீயும் கிளம்பு” என்றான்.
ஹமித் அதிர்ச்சியுடன், “வெங்கட்… நீ புரியாம பேசிட்டு இருக்க… ஒரு பேஷன்டை ட்ரீட் பண்றது வேற… அதே பேஷன்ட் லைப் பாட்னரா வர்றதுங்குறது வேற… இந்த டெஷின் உன் லைபே ஸ்பாயிலிக்கிடும்… எதுவா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு பண்ணு வெங்கட்” என்றான்.
“இனிமே யோசிக்க எல்லாம் எதுவும் இல்ல… இவ்வளவு தூரம் வந்த பிறகு என்னால கல்யாணத்தை நிறுத்த முடியாது” என்று திட்டவட்டமாக சொன்னவன்,
“சும்மா பேசிட்டு உட்கார்ந்தில்லாம சீக்கிரம் ரெடியாகு… இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை அழைப்புக்கு கூப்பிடுவாங்க” என்றான்.
“டேய்” என்று ஹமித் நண்பனை முறைக்க,
“கிளம்புடா” என்றான் வெங்கட் சாதரணமாக.
ஹமீதிற்கு ஒரே நேரத்தில் அதிர்ச்சியாகவும் இருந்தது. கவலையாகவும் இருந்தது.
கிட்டத்தட்ட திலகாவும் இதே மாதிரி மனநிலையில்தான் இருந்தார். ஆனால் ஸ்ரீ விஷயத்தில் நிலைமை தலை கீழாக இருந்தது.
சந்தோஷமாக உறவினர்களை வரவேற்று கொண்டிருந்த திலகாவிடம் பரப்பரபாக ஓடி வந்த அவர் அண்ணன் மகள் இந்து, “அத்தை… ஒரு நிமிஷம் தனியா வாங்களேன்?” என்று அழைத்து, அவள் காதோடு ரகசியம் பேசினாள்.
திலகாவிற்கு விஷயத்தை கேட்டு நெஞ்சு வலியே வந்துவிடும் போலிருந்தது.
“என்ன சொல்ற இந்து?”
“மதியம் தூங்கி எழுந்ததும் ஒரு மாதிரி புரிஞ்சு புரியாமலே பேசிட்டு இருந்தா… திடீர்னு நம்ம ஏன் கல்யாண மண்டபத்துல இருக்கும்… யாருக்கு கல்யாணம்னு ஒரு கேள்வி கேட்டா பாருங்க… நான் அப்படியே ஷாக்காயிட்டேன்” என்றவள் விவரிக்க பதட்டத்துடன் கேட்டிருந்த திலகா,
“நீ என்ன சொன்ன… அவ என்ன சொன்னா” என்று அச்சத்துடன் கேட்க,
“நான் அவகிட்ட உனக்குதான்டி கல்யாணம்னு சொன்னேன்… அவ்வளவுதான்… யாரை கேட்டு இதெல்லாம் ஏற்பாடு பண்ணீங்கன்னு சாமி வந்த மாதிரி ஒரே காச் மூச்னு கத்தி கலாட்டா பண்ண ஆரம்பிச்சிட்டா… இவ பண்ண கலட்டாவுல மேக் அப் போட வந்த பியுட்டிஸியன்ஸ் இரண்டு பேரும் தலை தெறிக்க ஓடிட்டாங்க” என்று சொல்லி முடிக்க, திலகாவிற்கு படபடப்பு அதிகமானது.
சற்று முன்புதான் இந்த திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டுமென்று மண்டபத்தின் வாசலிலிருந்த பிள்ளையார் கோவிலில் வேண்டி கொண்டு வந்தார். ஆனால் அந்த வேண்டுதலுக்கு ஆயுள் அரைநாள் கூட நீடிக்கவில்லை.
18

Quote from Marli malkhan on May 11, 2024, 4:04 PMSuper ma
Super ma