மோனிஷா நாவல்கள்
Nijamo Nizhalo - Episode 23
Quote from monisha on July 1, 2023, 11:24 AM23
வெங்கட்டும் ஸ்ரீலக்ஷ்மியும் அன்று மாலை வேதா விலாஸ் வந்து விட்டிரு ந்தனர். அங்கே அவர்களுக்கான சிறப்பான வரவேற்புகள் விருந்துகள் மற்றும் உபசரிப்புகள் நடந்தேறி முடிய, அதன் பிறகு உடை மாற்றி கொண்டு வருகிறேன் என்று அறைக்கு சென்ற ஸ்ரீ கீழே இறங்கி வரவேயில்லை.
வேதவல்லியோ வெங்கட்டை அவருடைய ஆங்கில புலமையால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அறுத்து ஊற்றி கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாது அவர்களின் மருத்துவ கல்லூரியில் அவனை மருத்துவராக சேர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்தி சங்கடத்தில் ஆழ்த்த, அவன் நாசூக்காக அவரிடம் மறுத்து கொண்டிருந்தான்.
இவர்களின் இந்த பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த சமயத்தில் திலகா மகளின் அறை கதவை தட்ட… திறந்தவள் அவரை வாசலிலேயே நிற்க வைத்து பேசினாள்.
“நீ இன்னும் ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்க… மாப்பிளை கீழே இருக்காரு”
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நீ போறியா”
“எல்லா நாள் மாதிரியும் பண்ணாதே சாரு… உனக்கும் மாப்பிளைக்கும் வேற ரூம் ரெடி பண்ணி வைச்சு இருக்கோம்”
“எதுக்கு வேற ரூம்… அதெல்லாம் வேண்டாம்… நான் என் ரூமை விட்டு வர மாட்டேன்”
“இந்த ரூம்ல எப்படிறி மாப்பிளையை தங்க வைக்கிறது… அதுவும் பேய் ஆத்மான்னு நீ வைச்சு இருக்க புக்ஸ் எல்லாம் பார்த்தாலே பயமா இருக்கு… இந்த ரூம் வேண்டாம்… நான் அண்ணன் ரூம் பக்கத்துல இருக்க கெஸ்ட் ரூமை ரெடி பண்ணி வைச்சு இருக்கேன்… நீ அங்கே வந்துடு” என்று சொன்னவரை கோபமாக பார்த்தவள்,
“முடியாது மா… வேணா உன் மாப்பிளையை அங்கே தங்க வை” என்று சொல்லி கதவை அறைந்து சாத்திவிட்டாள்.
“பைத்தியமாடி உனக்கு” என்றவர் கதவை பலமாக தட்ட,
“அப்படிதானே எனக்கு நீங்க எல்லாம் முத்திரை குத்தி வைச்சு இருக்கீங்க” என்றவள் குரல் மட்டும் உள்ளிருந்து வந்தது.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள். தான் செய்த பாவங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக தனக்கு மகள் ரூபத்தில் வந்து சேர்ந்திருக்கிறது என்று எண்ணி தலையிலடித்து கொண்டவருக்கு இவளை வைத்து கொண்டு என்னதான் செய்வது என்று புரியவில்லை.
திலகா இவ்வாறாக யோசித்து குழம்பி கொண்டிருக்கும் போதே தணிகாச்சலத்தின் மகன் விக்ரம், “பாட்டி வெங்கட்டை ரூமுக்கு கூட்டிட்டு போக சொன்னாங்க… எந்த ரூம் அத்தை?” என்று கேட்க,
சில நொடிகள் யோசித்தவர், “நீ அவரை சாருமதி ரூமுக்கு அழைச்சிட்டு போ” என, அவன் அதிர்ச்சியானான்.
“அந்த ரூமுக்கா? என்ன அத்தை… யோசிச்சுதான் சொல்றீங்களா? பாட்டி என்னவோ வேற ரூமுன்னு சொன்னாங்க” என்றவன் சந்தேகமாக கேட்க,
“நீயும் என்னை படுத்தாதேடா… கூட்டிட்டு போ” என்றவர் அதற்கு மேல் என்ன செய்வதென்று புரியாமல் அங்கிருந்து அகன்றுவிட்டார்.
‘அந்த பேயோட ரூமுக்கா’ என்று எச்சிலை விழுங்கி கொண்டவன் அதன் பின் தயங்கி தயங்கியே வெங்கட்டை அவள் அறைக்கு அழைத்து சென்றான். அதற்குள் அவனுக்கு வியர்த்து வடிந்துவிட்டது.
“சென்ட்ரலஸ்ட் ஏசிலயும் உங்களுக்கு ஏன் இப்படி வியர்த்து கொட்டுது” என்று வெங்கட் அவனை விசாரிக்க,
“அது எனக்கு எப்பவும் அப்படிதான்” என்று சமாளித்தவன்,
“நீங்க உள்ளே போங்க… இதான் ஸ்ரீயோட ரூம்” என்றவன் ஓரடி எட்டி நின்றே அவனுக்கு காண்பித்து சொல்லிவிட்டு ஓடியேவிட்டான்.
அவன் செய்கையை விசித்திரமாக பார்த்த வெங்கட் பின் மூடியிருந்த கதவின் புறம் திரும்பினான். சில நொடிகள் தயங்கி நின்றவன் பின் மெல்ல கதவை தட்டினான். திறக்கவில்லை.
மீண்டும் தட்ட இம்முறை படாரென்று கதவை திறந்தவள்,
“ஏன் மா இப்படி கதவை தட்டி தட்டி என் உயிரை எடுக்குற?”என்று உச்சஸ்ததியில் ஏறியருந்த அவள் குரல் எதிரே வெங்கட்டை பார்த்ததும் சராலென்று இறங்கிவிட்டது.
அப்போதைக்கு அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை.
அவள் பேச்சற்று நின்றுவிட, “உள்ளே வரலாம் இல்ல” என்று கேட்டவனுக்கு வழி விடாமல் தயக்கமாக நின்றிருந்தாள்.
“என்ன… வழி விடமாட்டியா? ரொம்ப பெர்ஸனலா ஏதாச்சும் வைச்சு இருக்கியா என்ன?” என்றவன் பார்வை அவளை ஆழமாக அளவெடுக்க,
ஆமாம் இல்லையென்று குழப்பமாக தலையசைத்தவள் வேறுவழியின்றி அவனை அறைக்குள் விட்டாள்.
உள்ளே வந்தவனுக்கு அந்த அறையின் கோலத்தை பார்த்து தலை சுற்றியது. புத்தகங்கள் காகிதங்கள் மேஜை மீதிருந்த பொருட்கள் தலையணை முதற் கொண்டு தரையில் கிடந்தது.
“இப்படியொரு பர்ஸ்ட் நைட் ரூமை நான் பார்த்தே இல்லபா” என்றவன் அந்த அறையை சுற்றி பார்த்து அதிர்ச்சியான பாவனையில் சொல்ல,
“எது? பர்ஸ்ட் நைட் ரூமா?” என்று அவனை மேலும் கீழுமாக பார்த்தாள்.
“இல்லையா பின்ன?” என்றவன் கேட்டு புன்னகை செய்த விதத்தில் அவளுக்கு கோபம் வருவதற்கு பதிலாக வெட்கம் வந்து தொலைத்தது.
பட்டென்று முகத்தை திருப்பி கொண்டவள், ‘ஐயோ இப்படி சிரிச்சே கொல்றானே… அந்த மல்லியை ஏத்திவிட்டா ஏதாவது பிரச்சனை நடக்கும்னு பார்த்தா… புஸ்வானம் அளவுக்கு கூட நாம போட்ட வெடி புகையலயே… இப்போ என்ன பண்ணுவேன் நான்…
எப்படி இவனை சமாளிப்பேன்… காதலிச்சிட்டு என்னை கோர்த்துவிட்டுட்டு போயிட்டா பாவி பாவி’ என்று புலம்பி கொண்டே இறைந்து கிடந்த புத்தகங்களை எடுத்து வைக்கும் சாக்கில் அவன் புறம் அவள் திரும்பவே இல்லை.
“எதையோ தீவிரமா தேடி இருக்க போல” என்று பின்னிருந்து வெங்கட் கேட்கவும் அவளுக்கு பதட்டம் கூடியது. அவன் கணிப்பு சரி. மாயா ஏதாவது தனக்கு குறிப்பு விட்டு சென்றிருக்கிறாளா என்று அவள் தீவிரமாக தேடி பார்த்தாள். ஒரு சிறு காகிதத்தை கூட விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் பார்த்துவிட்டாள். ஒன்றும் கிடைக்கவில்லை.
அந்த கடுப்பில் அவள் இருக்க அவனோ, “நானும் ஹெல்ப் பண்றேன்” என்று சில புத்தகங்களை கையிலெடுத்து கொடுக்க எத்தனித்த போதுதான் கவனித்தான். அவையெல்லாம் ஏதோ ஆத்மா பேய் ஆவி சம்பந்தட்டவை என்று.
“இந்த மாதிரி புக்ஸ் எல்லாம் படிக்குறியா நீ?” என்று கேட்டபடி அதனை அவளிடம் கொடுக்க,
“நான் இந்த ஆத்மாக்கள் பத்திதான் ரிசெர்ச் பண்ணிட்டு இருக்கேன்” என்றவள் அவற்றை வாங்கி அடுக்கினாள்.
அவள் சொன்ன பிறகுதான் கவனித்தான். அங்கிருந்த முக்கால்வாசி புத்தகங்கள் இந்த ஆத்மாக்கள் சம்பந்தப்பட்டவைதான். அதனை ஆராய்ச்சியாக பார்த்து கொண்டிருந்தவனுக்கு அப்போது அவன் அம்மா அவள் ஏதோ ஆராய்ச்சி செய்து அது குறித்து புத்தகம் எழுதியிருப்பதாகவும் சொன்னது நினைவுக்கு வந்தது.
“எங்க ம்மா… நீ ஏதோ ரிசெர்ச் பண்றதாகவும் புக்ஸ் எழுதி இருக்கிறதாகவும் சொன்னாங்க… ஆனா இதை பத்தின்னு சொல்லலயே” என்றவன் சொல்ல,
“கோவிலில மேடமை பார்த்த போது நான் என் ரிச்ர்ச் பத்தி சொன்னேன்… ஆனா என்ன ஏதுன்னு சொல்ல விடாம எங்க அம்மா நடுவுல புகுந்து பேச்சை மாத்திட்டாங்க… அன்னைக்கே சொல்லி தொலைச்சு இருந்தே இந்த பொண்ணே வேண்டாம்னு உங்க அம்மா ஓடி போயிப்பாங்க… எனக்கும் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது… நானும் நிம்மதியா இருந்திருப்பேன்” புத்தகங்களை அடுக்கி கொண்டே அவன் முகத்தை கூடாமல் அவள் பாட்டுக்கு பேச,
வெங்கட் அதிர்ச்சியானான். அவன் மௌனமாக நின்றுவிட்டதில் அந்த அறையையும் அமைதியாகிவிட்டது சில நிமிடங்கள்.
அதன் பின் வெங்கட்டின் “ஸ்ரீ” என்ற அழைப்பில் கூடியிருந்த அழுத்தம் அவளுக்கு ஒருவித கலக்கத்தை கொடுத்திருக்க அவள் அவன் புறம் திரும்பவில்லை.
“ஸ்ரீ என் பக்கம் திரும்பு” என்றவன் கூற, அவள் நின்றபடியே நின்றாள்.
“ஸ்ரீ” என்றவன் அவள் தோள்களை பற்றி திருப்ப, அவள் விழிகள் அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தடுமாறியது.
“தெளிவா சொல்லு… இப்போ நீ எதை பிரச்சனைன்னு சொல்ற… நமக்கு நடந்த கல்யாணத்தையா… இந்த கல்யாணம் நடந்ததாலதான் உன் நிம்மதி போச்சா?” என்று நிதானமாகவே கேட்டான்.
“ஆமா அப்படித்தான்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?” என்று அவள் தயங்கி தயங்கி சொல்ல,
“உன் பிரச்சனை என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டு அதை சால்வ் பண்ணுவேன்” என்று அவனும் கூலாக பதில் சொல்ல, அவளுக்கு வியப்பாக இருந்தது.
தான் விதாண்டவாதமாக பேசுகிறோம் என்று தெரிந்தும் இவன் ஏன் கோபப்படாமல் அல்லது கத்தாமல் இப்படி அமைதியாக பேசி தொலைத்து தன்னை சிக்கலில் சிக்க வைக்கிறான் என்று அவளுக்கு தவிப்பாக இருந்தது.
அவனோ கீழே கிடந்த தலையணையை படுக்கையில் போட்டு அதனை சரி செய்துவிட்டு, “இப்படி வந்து உட்காரு வா” என்று அவள் கையை பிடித்து அழைத்து வந்து அமர வைத்தவன்,
“இப்போ சொல்லு… என்ன பிரச்சனை உனக்கு… என்கிட்ட ஏதாவது பிரச்சனையா? இல்ல எங்க வீட்டுல யார்க்கிட்டயும் ஏதாவது ஒத்து போகலையா? ம்ம்ம்… ஏன் நீ இவ்வளவு டென்ஸ்டா இருக்கு” என்று பொறுமையாக விசாரிக்க, அவளுக்கு அழுகை வந்துவிட்டது.
அவனிடம் கோபப்படுவது அவளுக்கு ஏனோ சாத்தியபடவே இல்லை. அதற்கு மேல் முடியாமல் உடைந்து அழுதுவிட்டாள்.
“ஸ்ரீ என்ன… ஏன் அழுற?” என்று அதிர்ந்தவன் அவளை நெருங்கி அமர்ந்து அவளை சமாதானம் செய்தான்.
யாரையும் இப்படி ஒரு நாளும் அவள் காயப்படுத்தியதில்லை. ஒரு பாவப்பட்ட ஜீவனாகதான் இதுவரை இருந்திருக்கிறாள். அனாவசியமாக பேச கூடாது. சிரிக்க கூடாது. விளையாட கூடாது என்று ஒன்றிரண்டு கட்டுபாடுகள் அல்ல அந்த வீட்டில்
எப்போதும் படி படி படி…. என்று அவள் குழந்தை பருவமே கொடுமையாகத்தான் இருந்தது.
அம்மா காதலித்து ஓடி போய் திருமணம் செய்தது. பின்பு அப்பா கடனாளியாக வேதவல்லியிடம் அபயமாக வந்து நின்றது என்று நடந்த சம்பவங்கள் எதற்கும் இவள் நேரடி பொறுப்பாளி இல்லையென்ற போதும் இவள்தான் பலியாடாக மாற்றப்பட்டாள்.
சாருமதி என்று அம்மா அப்பா வைத்த பெயரை கூட வேதவல்லி மாற்றி வைத்ததில் தொடங்கி அவரின் அதிகாரம் அவளின் ஒவ்வொரு செயலிலும் தொடர்ந்தது.
தனியாக சிந்திக்க, பேச, செய்ய எதற்கும் அவளுக்கு அனுமதி கிடையாது. போதாகுறைக்கு ஓடி போனவள் மகள் என்றும்… வக்கிலாதவர் மகள் என்றும் மாமிகள் மற்றும் அவர்களின் மகன் மகள்களிடமிருந்து வரும் குத்தி காட்டல்கள் அவமானங்கள் என்று நிறைய நிறைய… யாரிடமும் இதெல்லாம் சொல்ல முடியாமல் தனியாக அழுதிருக்கிறாள்.
வேதவல்லிக்கு மற்ற பேத்தி பேரன்கள் எல்லாம் ஒன்று. இவள் மட்டும் வேறுதான். சிறைக்கும் அவள் அறைக்கும் பெரிய வித்தியாசமில்லை. அம்மாவிற்கோ மகள் வசதியாக வாழ்ந்தால் போதும். அப்பா என்ற ஒருவர் எங்கே இருக்கிறார் என்று கூட அவளுக்கு தெரிந்ததில்லை.
தனிமை மட்டுமே துணையாக இருந்தவளுக்கு மாயா என்ற தோழமை ஒரு கிடைத்தற்கரிய பொக்கிஷமாகவே அவளுக்கு தோன்றியது. அவளுடன் சில நிமிட நேரங்கள் இருந்தால் போதும் அத்தனை பிரச்சனைகளும் மறந்துவிடும்.
மனம் விட்டு தன்னுடைய அனைத்து பிரச்சனைகளையும் அவளிடம் மட்டும பகிர்ந்து கொண்டிருக்கிறாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “அந்த கெழவி மண்டையில பெரிய கல்லா தூக்கி போட்டுடு” என்பாள்.
அடுத்த நிமிடமே இவள் கவலையெல்லாம் மறந்து சிரிப்பு வந்துவிடும்.
“நீ எப்பவும் என் கூடவே இருக்கணும் மாயா” என்று இவள் சொல்ல,
“உன் கூடவே இருந்த உன் உயிரை நான் எடுத்துட்டே இருப்பேன் டோன்ட் வொர்ரி” என்று அவள் சொல்லுவாள்.
பள்ளி இறுதி காலம் நெருங்க நெருங்க மாயாவை பிரிந்துவிடுவோமோ என்ற பயம் ஸ்ரீ மனதை ஆக்கிரமித்து கொள்ள,
“நாம காலேஜ் கூட ஒரே காலேஜ் சேருவோம்டி” என்றாள்.
“நீ பயங்கரமா படிச்சு மார்க் எடுப்ப… பெரிய காலேஜ் சேருவ… நான் எடுக்குற மார்க்குக்கு நீ சேர்ற காலேஜ்ல கிடைக்கவே கிடைக்காது… நிறைய பணம் கட்டி எல்லாம் சேரணும்னா… மை தாத்தா பாவம்”
ஸ்ரீ உடனே, “நீ எவ்வளவு மார்க் எடுப்பியோ நானும் அவ்வளவு மார்க்குக்குதான் எழுதுவேன்… நீ கவலைபடாதே… நாம் ரெண்டு பேரும் டிகிரியே சேர்ந்துடலாம்” என,
“இது ஒரு நல்ல யோசனை… ஆனா நான் ஒரு வேளை பெயிலாகிட்டா” என்று யோசனையாக பார்த்த மாயாவை,
“எருமை எருமை பாஸாகிற அளவுக்கு கூட எழுத மாட்டியா?” என்று ஸ்ரீ அவளை கொட்டி வைக்க,
“கொட்டாதடி வலிக்குதுடி… பிட் அடிச்சாவது பாஸாகிடுறேன்… விடுடி” என்று அடிதாங்காமல் மாயா சொல்ல,
“அப்ப கூட படிக்க மாட்ட” என்று மீண்டும் இரண்டு அடி போட்டாள்.
“படிப்பேன்தான்… ஆனாலும் பயமாத்தான் இருக்கு… பேசாம ஒன்னு பண்ணுவோம்” என்று மாயா ஸ்ரீயை தீவிரமாக பார்த்து,
“பேசாம நாம இரண்டு பேரும் ஒண்ணா பெயிலாகிட்டா… இதே ஸ்கூல் அடுத்த வருஷ சேர்ந்தே படிப்போம்” என்றாள்.
ஸ்ரீ அழுது விடும் நிலையில், “பெயிலான அந்த கெழவியை என்னை போட்டு தள்ளிடும்டி” என்று சொல்ல,
“அந்த கெழவியை முதல நாம போட்டு தள்ளிடுவோம்” என்று சொன்ன மாயாவின் மண்டையில் ஒரு அடி போட்டவள்,
“அதெல்லாம் நடக்கிற காரியாமா?… நீ ஒழுங்கா பாஸாகுற வழியை பாரு… ப்ளீஸ்டி” என்று ஸ்ரீ கோபமாக ஆரம்பித்து கெஞ்சலாக முடிக்க,
“நீ காலேஜ் சேர்ற நான் படிக்கணுமா? என்ன கொடுமை சரவணா இது?” என்று மாயா தலையிலடித்து கொள்ள, ஸ்ரீ கோபமாக முகத்தை திருப்பி கொண்டாள்.
“ஒகே ஒகே… நீ சொன்ன மாதிரி நாம ஒரே காலேஜ்ல சேர்றோம்… ஒண்ணா கட் அடிக்கிறோம்… படத்துக்கும் போறோம்… டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி” என்றவள் சொல்ல, ஸ்ரீ பக்கென்று சிரித்துவிட்டாள்.
“படிக்கறோம்னு வார்த்தைக்கு கூட சொல்ல மாட்டியா?”
“சொன்னா வந்துடுமா? வராது இல்ல… அதை விடு” என்றவள் எதையோ யோசித்துவிட்டு,
“எனக்கு ஒரு டவுட்டு… கேட்கவா… கேட்டா அடிக்க கூடாது” என்று மாயா பீடிகை போட,
“எக்ஸாம் எழுதாம எப்படி பாஸாகுறதுன்னு கேட்டு வைச்ச… உன்னை கொன்னுடுவேன்” என்றாள்.
“பாஸாகுற மேட்டரை விடு… இது வேற மேட்டரு”
“காலேஜ் ஒண்ணா சேரலாம்னு சொன்னா மாதிரி… நாளைக்கு கல்யாணம் கூட ஒரே ஆளா பண்ணிக்கலாம்னு சொல்லிடாதே… நான் அதுக்கு மட்டும் ஒத்துக்கவே மாட்டேன்பா… என் வெங்கி எனக்கு மட்டும்தான்” என்று மாயா சொல்ல,
“என்னை பார்த்து எப்படி தெரியுதுடி உனக்கு” என்று ஸ்ரீ அவளை மொத்து மொத்து என்று மொத்தி விட்டு,
“யாருக்கு வேணும் உன் வெங்கி மங்கி… அவனை நீயே வைச்சுக்கோ… கூடவே இலவச இணைப்பா… மல்லின்னு ஒரு வில்லி வரும்… அதையும் பார்த்துக்கோ” என, மாயாவிற்கு கோபம் பொத்து கொண்டுவந்துவிட்டது.
“என் வெங்கியை மங்கின்னு சொல்லுவ…மங்கின்னு சொல்லுவ” என்று மாயா இவளை திருப்பி அடிக்க, அவர்கள் நட்புக்காலம் இப்படி கலகலப்பாக கழிந்தது.
ஸ்ரீக்கு இதெல்லாம் நினைப்பு வரவும், அதிகமாக அழுகைதான் வந்தது.
அவள் ஏன் தன்னை இப்படியொரு சிக்கலில் சிக்க வைத்துவிட்டு போனாள் என்று எண்ணி அழுதிருந்தவளுக்கு அப்போதுதான் உரைத்தது. தான் வெங்கட்டின் தோளில் சாய்ந்துதான் அழுது கொண்டிருக்கிறோம் என்று.
ஒரு வேளை இந்த காட்சியை மாயா எங்கிருந்தாவது கண்ணுக்கு தெரியாமல் பார்த்து கொண்டிருந்தால்… யோசிக்கும் போதே… அவளுக்கு தூக்கிவாரி போட்டது.
அவன் கரத்தை அவசரமாக வலிக்கி விட்டு தள்ளி வந்து அமர்ந்து கொண்டவள் தன் கண்ணீரை துடைத்து கொண்டு அவன் முகம் பார்த்து, “வெங்கட் ப்ளீஸ்… நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்… சொல்லியே ஆகணும்… இதுக்கு மேல என்னால சமாளிக்க முடியாது” என்றாள்.
“சொல்லு ஸ்ரீ” என்றவன் அமைதியாக கேட்க,
“நான் இதை சொன்னா உங்களுக்கு நான் பைத்தியம் லூசு இப்படியெல்லாம் தோணலாம்… ஆனா” என்றவள் தயங்கியதை பார்த்து,
“அப்படியெல்லாம் எனக்கு தோணுது… நீ விஷயத்தை சொல்லு” என்றான்.
“மாயாவும் நானும் பிரெண்ட்ஸ் உங்களுக்கு தெரியும் இல்ல?” என்றவள் ஆரம்பிக்க,
“இப்போ ஏதுக்கு மாயா பேச்சை எடுக்கிற” என்றவன் கேட்க,
“ப்ளீஸ் வெங்கட்… கொஞ்சம் அமைதியா கேளுங்களேன்” என்றாள். அதன் பின் அவன் அவள் பேச்சில் இடையிடாமல் கேட்டான்.
முதலில் அவள் சொன்ன எதுவும் அவனுக்கு புரியவே இல்லை. பின்னரே மெல்ல மெல்ல அவள் சொல்வது அவனுக்கு கொஞ்சம் புரிய வர,
“ஏய் ஏய்… இரு… ஏதாவது பேய் படம் பார்த்துட்டு கதை சொல்லிட்டு இருக்கியா நீ” என்றான்.
“இது படக்கதை இல்ல… நிஜக்கதை… நடந்த கதை” என்று உறுதியாக சொன்னவளை மேலும் கீழுமாக பார்த்தவனுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
“அப்போ கல்யாணத்துக்கு சம்மதிச்சது நீ இல்ல… என்கிட்டே பேசனது பழகுனதும் நீ இல்லயா”
“இல்லவே இல்ல”
“ஆனா நான் பார்த்தது உன்னைத்தானே”
“ஆனா நீங்க பழகினது அவ கூடத்தான்”
“அவ எப்போ எப்படி உனக்குள்ள வந்தா?”
“அது எனக்கு தெரியாது”
“சரி அவ எப்போ உன்னை விட்டு போனா?”
“நம்ம ரிசப்ஷனுக்கு ஆரம்பிக்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி”
“அப்போ ரிசப்ஷன் அன்னைக்கு மிட் நைட்ல என்னை மாடிக்கு வர சொன்னது யாரு?”
“அது நான்தான்… ஆனா நான் சத்தியமா நீங்க நினைக்கிற மாதிரி விஷயத்துக்காக வர சொல்லல… உண்மையை சொல்லத்தான் வர சொன்னேன்” என்றவள் படபடப்பாக பேச அவளை தீவிரமாக முறைத்தவன்,
“ஏன் சொல்லல?” என்று கேட்டான்.
“நீங்கதான் என்னை சொல்ல விடலையே… நான் பேசறதுக்குள்ள நீங்கதான் கிட்ட வந்து… அப்ப கூட நான் மாயான்னு சொன்னே”
அதுக்கு மேல அவளிடம் விளக்கம் கேட்க முடியாமல் தலையை பிடித்து கொண்டான். அவனுக்கே குழப்பமாக இருந்தது.
பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கும் பைத்தியக்கார டாக்டருக்கே பைத்தியம் பிடித்திருந்தால்… என்ற நிலைமையில்தான் அவன் அப்போது இருந்தான்.
23

Quote from Marli malkhan on May 12, 2024, 11:36 PMSuper ma
Super ma