மோனிஷா நாவல்கள்
Nijamo Nizhalo - Episode 24
Quote from monisha on July 3, 2023, 2:56 PM24
பல மாதிரியாக யோசித்து பார்த்த வெங்கட், “ஆத்மான்னு ஒன்னு இருக்குங்கிறதையே என்னால நம்ப முடியல…இதுல அந்த ஆத்மா உனக்குள்ள வந்து என்கிட்ட பேசுச்சுன்னு நீ சொல்றதைச் சுத்தமா நம்ப முடியல” என்று உறுதியாகக் கூற,
“அப்போ நான் பொய் சொல்றேனா?” என்று அவள் சற்றே கோபமாகக் குரலை உயர்த்த, அவள் கண்களைப் பார்க்கும் போது அவள் பொய்யுரைப்பது போலவும் அவனுக்குத் தோன்றவில்லை.
“சரி நீ சொன்னது உண்மைன்னு வைச்சுக்கிட்டா… இப்போ மாயா எங்கே… எனக்கு அவளைக் காண்பி” என்று கேட்கவும், அவள் முகம் சுருங்கியது.
“அவ எங்கன்னு எனக்கும் தெரியல… அவ இப்போ என் கண்ணுக்கே தெரிய மாட்டுறா?”
அவளை யோசனையாகப் பார்த்தவன், “மாயாவோட ஆத்மாவை முதல் முதல நீ எப்போ பார்த்த?” என்று வினவ, சில நிமிட தயக்கத்திற்குப் பின் மாயாவின் ஆத்மாவை அவள் பார்த்த கதையைச் சொல்லத் தொடங்கினாள்.
“ஸ்கூல் முடிஞ்சுதும் அம்மாவுக்கு ஆஃபீஸ் வேலை ஏதாவது இருந்தா கிளம்ப லேட்டாகும்… அதுவரைக்கும் நான் மாயா வீட்டுல இருப்பேன்… இப்படி நான் மாயா வீட்டுக்கு நிறைய தடவைப் போயிருக்கேன்…
மாயாவோட தாத்தா ஸ்டீபன்ராஜ் ரொம்ப நல்ல டைப்… ஜாலியா பேசுவார் பழுகுவார்… குழந்தை மாதிரி எங்க கூட பேசி விளையாடுவார்
மாயாவும் அவரும் கிட்டத்தட்ட ஃபிரண்ட்ஸ் மாதிரிதான் இருப்பாங்க… எனக்கு அவங்களைப் பார்த்தா கொஞ்சம் பொறாமையா கூட இருக்கும்… எனக்கும் அந்த மாதிரி தாத்தா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு யோசிச்சு ஏங்கி இருக்கேன்
எனக்கு இந்த ஆத்மா பேய் பத்தி எல்லாம் இன்டிரஸ்ட் வந்ததுக்கு காரணம் கூட ஸ்டீபன் தாத்தாதான்…
அவர் ரூம்ல இந்த மாதிரி ஆத்மாக்கள் சம்பந்தமா நிறைய புக்ஸ் இருக்கும்… அதை பத்தி அவர் சொல்ற விஷயங்கள் எல்லாம் சுவாரசியமா இருக்கும்… இறந்து போன அவர் மனைவியோட ஆத்மாகிட்ட அவர் பேசி இருக்கிறதா கூட சொன்னாரு…
அவர் சொல்ல சொல்ல எனக்கும் கூட அதை பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும்னு ஆர்வமா இருந்துச்சு.
அங்கே போகும் போதெல்லாம் அவர்கிட்ட இருக்க அந்த புக்ஸ் எல்லாம் படிப்பேன்… இதை சம்பந்தமா தாத்தாகிட்ட நான் நிறைய கேட்பேன்… அவரும் சொல்லுவாரு.
அப்படி ஒரு நாள் நான் மாயா வீட்டுக்குப் போயிருந்த போதுதான் அந்த மோசமான ஃபைர் அக்ஸிடென்ட்” என்றவள் வார்த்தை அப்படியே தொக்கி நின்றது. பேச முடியாமல் அவள் தொண்டை அடைத்தது. பல வருடங்கள் முன்பு நடந்த சம்பவம்தான் என்றாலும் இப்போது அதைப் பற்றி நினைத்தாலும் அவளுக்கு உள்ளுர நடுங்கியது.
அவள் முக பாவனைகளை ஆழ்ந்து கவனித்திருந்தவன், “நீ அந்த ஆக்ஸிடென்ட் நடக்கும் போது அங்கே இருந்தியா ஸ்ரீ?” என்று கேட்க,
“ஆக்ஸிடென்ட் நடக்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் அங்கேதான் இருந்தேன்” என்றவள் உணர்வற்ற பார்வை பார்த்தாள். கண்ணீர் வரவில்லையே தவிர அவள் முகம் அப்பட்டமான சோகத்தைப் பிரதிபலித்தது.
“எக்ஸாம்ஸ் கிட்ட நெருங்கிட்டு இருந்துது… அம்மாவுக்கு ஏதோ ஆஃபீஸ் வேலை… லேட்டாகும்னு என்னை மாயா வீட்டுக்கு அனுப்பி வச்சாங்க.
நானும் மாயாவும் ரொம்ப நேரம் ஷட்டில் விளையாடிட்டு இருந்தோம்… இருட்ட ஆரம்பிச்சததும்தான் நாங்க வீட்டுள்ள வந்தோம்…
மாயாவோட அப்பா அம்மா இரண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க… எப்பவுமே அவங்க அப்படி சண்டை போடுவாங்கன்னு மாயா சொல்லி இருக்கா.
ஆனா அன்னைக்குக் கொஞ்சம் சத்தம் ஜாஸ்தியா இருந்துச்சு… எனக்கு அங்கே இருக்கவே சங்கடமா இருந்துச்சு.
நான் கிளம்புறேன் மாயான்னு சொன்னேன்… அவதான் கேட்கல… இதெல்லாம் எங்க வீட்டுல என்ன புதுசாவா நடக்குது… நீ போய் தாத்தா ரூம்ல இரு… நான் வர்றேன்னு சொல்லி அனுப்பி விட்டா.
நானும் தாத்தா ரூமுக்கு போயிட்டேன்… அவர் ரூம் ஒரே இருட்டா இருந்துச்சு… என்னடான்னு பார்த்தா தாத்தா ஏதோ போர்ட் மேல கேண்டில் எல்லாம் ஏத்தி வைச்சு என்னவோ பண்ணிட்டு இருந்தாரு.
என்ன தாத்தா பண்றீங்கன்னு கேட்டேன்… இது மூலமா ஆத்மாகிட்ட பேச முடியும்… பார்க்க முடியும்னு சொன்னாரு… அந்த போர்டை சுத்தி நாலு கேண்டில் ஏத்தி வைச்சிருந்தாரு…
நடுவுல இருக்க கேண்டில மட்டும் ஏத்தாம இருந்துச்சு... அந்த சென்டர் கேண்டிலை நாம இறந்த போன யாரோ ஒருத்தரோட ஆத்மாவை நினைச்சு போக்கஸ் பண்ணி பார்க்கணும்மா.
அப்படி நாம பார்த்து அந்த கேண்டில் அதுவா எரிய ஆரம்பிச்சிட்டா… நாம நினைச்ச ஆத்மா அங்கே வந்துருச்சுன்னு அர்த்தம்மா… சில நேரங்களில் அது நம்ம கண்ணுக்குத் தெரியும்னு கூட சொன்னாரு… ஆனா இதெல்லாம் விளையாட்டுக்கு பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டு இருந்தாரு.
அப்ப வெளியே இன்னும் சத்தம் ஜாஸ்தியாகிடுச்சு… தாத்தா முதல கண்டுக்கல… அப்புறம் ரொம்ப சத்தம் அதிகமாகவும்… நீ இங்கேயே இரு… நான் போய் பார்த்துட்டு வரேன்னு போனாரு.
தனியா என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்த நான் கொஞ்சம் விளையாட்டுத்தனமா நடுவுல இருக்க கேண்டிலை எறிய வைக்க ட்ரை பண்ணிட்டு இருந்தேன்.
ரொம்ப நேரம் நான் அதை மட்டும் போகஸ் பண்ணிட்டு இருந்தேன்… சுத்தி எனக்கு எந்த சத்தமும் கேட்கல… என்ன நடக்குதுன்னு கூட நான் கவனிக்கல.
அப்பன்னு பார்த்து தாத்தா திரும்பவும் ரூமுக்கு வந்தாரு… நெஞ்சை பிடிச்சிட்டுத் தரையில சாஞ்சுட்டாரு… என்னாச்சு தாத்தான்னு நான் அவர் கிட்ட போய் கேட்கவும்… கப்போர்ட்ல ஏதோ மாத்திரை இருக்கு எடுத்து குடுன்னு சொன்னாரு… நான் எடுத்து கொடுக்கிறதுக்குள்ள அவர்… அவர் அப்படியே மூச்சுப் பேச்சில்லாம…” இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.
“எனக்கு ஷாக்ல என்ன பண்றதுன்னு புரியல… தாத்தா தாத்தான்னு நான் அவரைப் போட்டு உலுக்கினேன்… அவர் எழுந்திருக்கவே இல்ல… அவர் செத்துட்டாருன்னு எனக்கு அப்போ தெரியல.
அப்பதான் சட்டுன்னு திரும்புறேன்… நடுவுல இருக்க கேண்டில் எரிஞ்சிட்டு இருந்துச்சு.
பகீர்னு ஆகிடுச்சு…
அப்போ… அப்போ என் முன்னாடி ஒரு வெள்ளை உருவம் வந்து நின்னுச்சு… உத்துப் பார்த்த போது… அது அது ஸ்டீபன் தாத்தா… தரையில அவரோட உடம்பு இருக்கு… அதுக்கு பக்கத்துலயே அவரோட உருவம் நிக்குது.
எனக்கு கொஞ்ச நேரம் ஒன்னும் புரியல…
சாருன்னு அவர் உருவம் என்னைக் கூப்பிட்டதும் நான் நடுங்கிப் போயிட்டேன்… என்கிட்ட அவர் ஏதோ சொன்னாரு.
எனக்கு பயத்துல எதுவும் கேட்கல… காதெல்லாம் அடைச்சிட்ட மாதிரி… அவ்வளவுதான்…. நான் ரூமை விட்டு அடிச்சுப்பிடிச்சு வெளியே ஓடும் போது தாத்தா சொன்னது என் காதுல விழுந்துச்சு… மாயாவை இங்கிருந்து கூட்டிட்டுப் போன்னு கத்தினாரு.
எனக்கு பதட்டத்துல ஒன்னும் புரியல… நான் ஓடியே போயிட்டேன்.
ஆனா நான் போன கொஞ்ச நேரத்துல” என்று நிறுத்தியவள் ரொம்பவும் சிரமமப்பட்டு வார்த்தைகளைக் கொணர்ந்து பேசினாள்.
“மாயாவோட அம்மா கிச்சன்ல போய் மண்ணெண்ணெய் ஊத்திக் கொளுத்திக்கிட்டாங்க.
அவங்க அப்பாவும் மாயாவும் அவங்களைக் காப்பாத்தப் போறதுக்குள்ள கேஸ் வெடிச்சு…” விம்மியபடி தொடர்ந்தாள்.
“அது சரியான பொட்டல் காடு… உதவிக்குக் கூட அக்கம் பக்கம் யாரும் இல்ல… விஷயம் தெரிஞ்சு அங்கே ஃபைர் இஞ்சின் வர்றதுக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு…” என்று சொல்லி முகத்தை மூடி அழுதவள்,
“அப்பவே மாயாவை அங்கிருந்து கூட்டிட்டு வந்திருந்தா அவ இன்னைக்கு உயிரோட இருந்திருப்பா…
நான் ஒரு சுயநலவாதி… அன்னைக்கு நான் பெரிய தப்பு செஞ்சுட்டேன்” என்றவள் உக்கிரமாகத் தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.
“ஸ்ரீ… என்ன பண்ற நீ?” என்று வெங்கட் அவள் கையைப் பிடித்து தடுக்க,
“இல்ல வெங்கட்… நான் செஞ்சது பெரிய தப்பு… நான் அவளைக் கூட்டிட்டுப் போயிருக்கணும்… அப்படி கூட்டிட்டுப் போயிருந்தா அவளைக் காப்பாத்தி இருந்திருக்கலாம்.
தேவையில்லாம அவ உயிர் போயிருக்காது” என்றாள்.
“ப்ச்… என்ன பேசுற நீ… அதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு… நடக்கணும்னு இருந்திருக்கு நடந்திடுச்சு”
“இல்ல வெங்கட்… என் கையில இருந்துச்சு… நான்தானே அவளைக் காப்பாதாம விட்டுட்டேன்” என்றவள் அழுகை அதிகமாக,
“ஸ்ரீ அழாதே… ப்ளீஸ்” என்று சமாதானம் செய்தவன் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்து,
“தண்ணிக் குடி” என்றான். தண்ணீர் குடித்தப் பின்னும் அவள் விசும்பிக் கொண்டே இருந்தாள். அவள் அழுகை மட்டுப்பட்டதும் வெங்கட் அவளிடம்,
“மாயாவோட ஆத்மாவை நீ முதல் தடவையா எப்போ பார்த்த ஸ்ரீ” என்றான்.
“அக்ஸிடென்ட் நடந்து முதல் வாரத்துல… அதுவும் நான்தான் அவளை வர வைச்சதே” அவன் புரியாமல் பார்க்க,
“தாத்தா வைச்சிருந்த அந்த போர்ட்ல இருந்த ஸ்டார்ஷேப் எல்லாம் வரைஞ்சுட்டு கேண்டில் ஏத்தி வைச்சு நான்தான் மாயாவைக் கூப்பிட்டேன்… எந்த நம்பிக்கைல செஞ்சன்னு எல்லாம் எனக்கு தெரியாது.
ஆனா செஞ்சுட்டேன்… மாயாவை வர வைச்சுட்டேன்” என்றவள் அழுத்தமாகச் சொல்ல,
அவளைக் கூர்மையாகப் பார்த்திருந்தவன், “அப்படிதான் நீ மாயாவோட ஆத்மாவைப் பார்த்தியா?” என்று கேட்க,
“ம்ம்ம்… அதுக்கப்புறம் மாயா என்னை விட்டுப் போகல… என் கூடத்தான் இருந்தா… நான் அவ கூடதான் பேசுவேன்… அவ கூடதான் விளையாடுவேன்… நான் தனியா பேசுறதா நினைச்சிட்டு எல்லோரும் என்னைப் பைத்தியம்னு நினைச்சுப்பாங்க.
எனக்கு அதை பத்தி எல்லாம் கவலை இல்ல… இப்ப வரைக்கும் அவளைத் தவிர வேற யாருமே எனக்கு ஃப்ரண்ட்ஸ் கிடையாது…
மாயா… மாயா இஸ் எவ்ரிதிங் டு மீ” ஸ்ரீ அழுத்தமாகச் சொல்லி முடிக்கும் போது அவள் விஷயத்தில் வெங்கட்டிற்கு ஓரளவு தெளிவு பிறந்தது.
இவள் நிச்சயம் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள். மாயாவின் பிரிவு இவளை ரொம்பவும் பாதித்திருக்க வேண்டும். இதில் அவள் சொன்ன ஆத்மா கதைகள் வெறும் கற்பனையாகவே இருக்க வேண்டும்.
இவள் மாயா போல தன்னிடம் நடந்து கொண்டது கூட இந்தக் காரணங்களால்தானோ? எதுவாக இருந்தாலும் அவனுக்கு அவள் மீது அந்த நொடி பரிதாபத்தைத் தாண்டி ஒரு பற்று வந்திருந்தது.
மாயாவின் இழப்பு தன்னைப் போலவே அவளையும் பாதித்திருக்கிறது என்ற காரணத்தினால் ஏற்பட்ட உணர்வாக இருக்கலாம்.
மொத்தத்தில் அவளுக்கு தன்னுடைய உதவி தேவை.
அவள் கண்களில் வடிந்திருந்த கண்ணீரை அவன் துடைத்து விடவும் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், “நீங்க நான் சொன்னதை நம்புறீங்களா வெங்கட்?” என்று கேட்க,
“நம்புறேன்” என்றவன் தலையசைத்தான்.
அந்த ஒரு வார்த்தையே அவள் மனதிற்குப் பெரிதும் ஆறுதலாக இருந்தது. அத்தனை நேரமிருந்த குழப்பம் கவலை அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டு மனம் லேசானது.
மாயாவிற்கு அடுத்தபடியாக ஒருவரிடம் தன் மனதில் உள்ளதை எல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறாள் என்றால் அது வெங்கட்டிடம்தான். அவள் உணராமலே அவள் மனம் அவனிடம் சரிந்து கொண்டிருந்தது.
அத்தனை சச்சரவுகளுக்குப் பிறகு சற்றே அவர்களின் இரவு அமைதியாகக் கழிந்தது. ஆனால் மல்லியின் இரவு மொத்தமாக அமைதியை இழந்துவிட்டிருந்தது.
ஸ்ரீ இப்படி பேசுவாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. எங்கே தப்பு நடந்தது என்று அவருக்குப் புரியவே இல்லை. தன்னுடைய தேர்வு தவறாகிப் போனதா? அப்படி தவறாகப் போயிருந்தால் இதில் வெங்கட்டின் வாழ்க்கை பாதிக்கப்படுமே… அதன் பின் நந்தா அவரை மன்னிக்கவே மாட்டார்.
மனம் கலங்கியிருந்த மல்லி உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார். உறக்கம் வருவதற்கானஅறிகுறியே இல்லை. தண்ணீர் குடிக்க எழுந்தவர் அருகே இருந்த பாட்டிலை கையிலெடுத்த போதுதான் எதேச்சையாக ஜன்னல் புறம் பார்த்தார்.
காற்றில் அசைந்து கொண்டிருந்த திரைசீலையைத் தாண்டி ஜன்னல் வழியாக ஒரு நிழல் போன்ற உருவம் தெரிந்தது. உற்றுப் பார்த்த போது அந்தக் கரிய உருவத்தின் சிவந்த கண்கள் மட்டும் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தன. மிக அருகில் தெரிந்தன. அது அவரைத் தீரா வஞ்சத்துடன் பார்த்தது.
அந்தக் கொடூர பார்வையின் தாக்கத்தில் மல்லி விதிர்விதிர்த்து போனார். அவர் கையிலிருந்த தண்ணீர் பாட்டில் நழுவிவிட, அடுத்த நொடி ஜன்னல் பின்னிருந்த அந்தக் கரிய உருவம் காணாமல் போனது.
24

Quote from Marli malkhan on May 12, 2024, 11:41 PMSuper ma
Super ma