மோனிஷா நாவல்கள்
Nijamo Nizhalo - Episode 6
Quote from monisha on May 11, 2023, 5:54 PM6
அடுத்த மாதமே மல்லி பாவம் பார்க்காமல் ரத்னாவை வேலையை விட்டு அனுப்பியிருந்தார். வெங்கட் எவ்வளவோ பேசிப் பார்த்தான். ஆனால் தன் முடிவிலிருந்து மல்லி மாறவில்லை.
இதனால் நந்தாவிற்கும் மல்லிக்கும் இடையில் இன்னும் அதிகமாக முட்டிக் கொண்டது.
“பாவம் ரத்னா… நான் செஞ்சதுக்குப் போய் ஏன் அந்தப் பொண்ணை வேலையை விட்டு அனுப்பின” என்று நந்தா வருத்தத்துடன் கேட்க,
“உங்களை அனுப்ப முடியாதே… அதான் அவளை அனுப்புறேன்” என்ற மல்லியின் பதிலில் நந்தாவிற்குக் கோபமேறியது.
“ஓ மேடமுக்கு அந்த நினைப்பு வேற இருக்கா?”
“வேண்டாம்… என்கிட்ட வீணா வம்புக்கு வராதீங்க… உங்ககிட்ட சண்டை போட எல்லாம் எனக்கு டைம் இல்ல… எனக்கு ஆயிரத்து எட்டு வேலை இருக்கு”
“எனக்கும் சண்டை போட எல்லாம் டைம் இல்லங்க மேடம்… உங்களுக்கு ஆயிரத்து எட்டு வேலைன்னா எங்களுக்கு ஆயிரத்து ஒன்பது வேலை இருக்கு… அதை பார்க்க இரண்டாயிரத்து முப்பத்து எட்டு சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்காங்க”
“எது… சப்ஸ்க்ரைபர்ஸா?”
“எஸ்… நந்தாஸ் கிச்சன்… நானும் என் மருமகள்களும் நடத்துற யூடியூப் சேனல்” என்றவர் பெருமையுடன் சொல்லிச் சட்டைக் காலரைத் தூக்க,
“இதெல்லாம் எவ்வளவு நாளா நடக்குது” என்று மல்லி முகம் சிவக்க கோபமாகக் கேட்டார்.
“ஒரு மூணு மாசமா?” என்றவர் அலட்டிக் கொள்ளாமல் பதில் சொல்ல,
“மூணு மாசமாவா?” என்று கேட்டு மல்லி அதிர்ந்தார்.
“எஸ்… இன்னைக்கு ஸ்பெஷலா பத்து வகையான உப்புமாக்கள் செய்வது எப்படின்னு போஸ்ட் போட போறோம்… நீ வேற ரத்னாவை வேலையை விட்டு அனுப்பிட்ட… உனக்கும் இது பயன்படும்… நிச்சயமா பாரு… பார்த்துட்டு சேனலை சப்ஸ்கிரைப் பண்ண மறந்துடாதே” என்றவர் சொல்லிவிட்டுச் செல்ல,
“ஐயோ ஐயோ ஐயோ” என்று மல்லித் தலையிலடித்துக் கொண்டு,
“இந்த மனுஷனுக்கு வயசாக ஆக ஆக புத்தி மழுங்கிட்டேபோகுது… இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ? கடவுளே” என்று எண்ணி கடுப்பாவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.
இதெல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றால் முதலில் வெங்கட்டிற்கு நல்லப் பெண்ணாகப் பார்த்து திருமணத்தை முடிக்க வேண்டும்.
ஆனால் அந்த ‘நல்லப் பெண்’ என்பதுதானே இப்போது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. ஒன்று கூட அவர் விருப்பத்திற்கு ஏற்ப அமையவில்லை. அழகு இருந்தால் படிப்பு சரியாக இல்லை. படிப்பிருந்தால் அழகு இல்லை. இது இரண்டும் பொருந்தி வந்தால் ஜாதகம் பொருந்தவில்லை.
எல்லாமே பொருந்தி வந்தால் பெண்ணின் குணம் மல்லிக்கு ஒத்துவரவில்லை. இப்படியாக இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. நந்தாவின் அளப்பறைகள் வேறு நாளுக்கு நாள் அதிகமானது.
வேலைக்கு சரியான ஆள் கிடைக்காமல் மல்லி தடுமாறிக் கொண்டிருக்க, நந்தாவோ எதைப் பற்றியும் கவலையில்லாமல் மருமகள்களுடன் சேர்ந்து தோசையை ரவுண்டாக ஊற்றுவது எப்படி? இட்லியை ஈஸியாகச் சுடுவது எப்படி? இடியாப்பத்தைச் சிக்கலில்லாமல் செய்வது எப்படி என்று வீடியோ போடுகிறேன் பேர் வழி என்று வீட்டை நாறடித்துக் கொண்டிருந்தார்.
பிரச்சனைக்கு மேல் பிரச்சனை என்று மல்லி மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில் பள்ளியிலிருந்து வீட்டிற்குப் புறப்பட்டு வந்தவரை இன்னும் டென்ஷன் படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்தேறியது.
மல்லி உள்ளே காலெடுத்து வைக்கும் போது, ‘இந்த வில்லி இருந்தாலும் ரொம்ப மோசம்’ என்ற வார்த்தையில் அவர் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார்.
‘இவ்வளவு ஈகோ கோபம் ஆகாது’ என்ற அர்ச்சனாவின் குரலில் மல்லிக்கு பிபி தாறுமாறாக ஏறியது.
‘உனக்கு தெரியாது… நீ ஆரம்பத்துல இருந்து பார்க்கல… இப்ப பண்றதெல்லாம் ரொம்ப கம்மி’ இது கணவனின் குரல். அவ்வளவுதான். மல்லி உண்மையில் வில்லியாகவே மாறி வந்தார்.
எல்லோரையும் ஒரு வழி செய்து விட வேண்டும் என்று அப்படியொரு ஆத்திரம் பொங்கியது.
நேராக உள்ளே வந்தவர் சோஃபாவில் அமர்ந்திருந்த மருமகள்களைப் பார்த்து, “யாருடி வில்லி… யாரை பார்த்துடி வில்லினு சொன்னீங்க” என்று எகிற, அர்ச்சனாவும் லலிதாவும் அதிர்ச்சியில் எழுந்து விட்டனர்.
“இப்போ என்னாச்சுன்னு நீ இவ்வளவு கோபப்படுற” என்று இடைபுகுந்த நந்தா அமைதியாகக் கேட்க,
“பேசாதீங்க… நீங்க மட்டும் பேசவே பேசாதீங்க… நேத்து வந்தவளுங்களோட சேர்ந்துக்கிட்டு நீங்களும்” என்று திரும்பி கணவரையும் ஒரு முறை முறைத்தார்.
“நீ என்ன ஏதுன்னு புரியாம பேசுற மல்லி”
“நான் எல்லாம் புரிஞ்சுதான் பேசுறேன்… இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது… உடனே நீங்க இரண்டு பேரும் உங்க புருஷன்களைக் கூட்டிட்டு இந்த வீட்டை விட்டு வெளியே போங்கடி” என்றார் சீற்றத்துடன்.
அரச்ச்னா லலிதாவின் முகத்தில் ஈயாடவில்லை. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பரிதாபமாகப் பார்த்திருக்க, “மல்லி போதும்… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன” என்று குரலை உயர்த்திய நந்தா,
“கொஞ்சம் டிவியைத் திரும்பி பாரு… நாங்கப் பேசிட்டு இருந்தது உன்னைப் பத்தி இல்ல… ‘மாமியாருக்கு மரியாதை’ சீரியல் வில்லியைப் பத்தி” என்றார்.
மல்லியின் முகம் கூம்பிவிட்டது. ‘மாமியாருக்கு மரியாதையா… என்ன கன்றாவி பேருடா இது’ என்ற யோசித்தபடி தொலைக்காட்சியைத் திரும்பி பார்த்தார்.
‘ஆமாம். அப்படியொரு சீரியல் ஓடிக் கொண்டிருந்தது. அப்போ நம்மதான் ஓவரா கற்பனை பண்ணிட்டோமா?’
அப்போது அந்த சேனலில் மருமகளை விட மேக்கப்பை அப்பிக் கொண்டிருந்த மாமியார், “இனிமே பொறுக்க முடியாது… வீட்டை விட்டு இப்பவே வெளியே போங்க” என்று சற்று முன் அவள் பேசிய அதே டைலாக்கை அந்த சீரியல் மாமியாரும் பேச, ஐயோ என்றானது மல்லிக்கு!
மல்லிதான் குப்புற விழுந்ததைக் காட்டிக் கொள்ளாமல், “இந்த மாதிரி சீரியல் பார்க்கிறதெல்லாம் ஒரு பொழப்பா?” என்று தன் பக்கத் தவறைப் பூசி மொழுகிவிட்டு அவர்களை சாட,
“நாங்களாச்சும் ஜஸ்ட் பார்க்கிறோம்… நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த சீரியல் வில்லியோட பெர்ஃபாமன்ஸ் அப்படியே பண்ணியே மல்லி” என்று நந்தா சொல்ல, மல்லிக்கு அவமானத்தில் உதடுகள் துடித்தன.
நந்தா அதோடு நிறுத்தவில்லை, “பேசாம உன்னை அந்த ரோலில் நடிக்க வைச்சு இருந்தா செமையா இருந்திருக்கும் மல்லி… என்ன ஒன்னு? அந்த மண்டை மேல பெருசா இருக்க ஜிலேபி கொண்டைதான் மிஸ்ஸிங்” என்று மனைவியை மரணமாக கலாய்த்து வைக்க, அர்ச்சனாவாலும் லலிதாவாலும் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
மருமகள் முன்பாக இப்படியொரு அவமானம் நிகழ்ந்துவிட்டதைத் தாங்க முடியாமல் மல்லி வேக வேகமாக மாடியறைக்கு விரைந்துவிட்டார்.
“என்ன மாமா நீங்க இப்படி பண்ணிட்டீங்க… எம்எல் ரொம்ப பாவம்” என்று சொல்லும் போதே அர்ச்சனாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“பின்ன…கொஞ்ச நஞ்சமா பேசுனா அவ? உடனே வீட்டை விட்டு வெளியே போகணும்னு குதிக்கிறா” என்ற நந்தா மேலும், “சரி… அவதான் அப்படி சீரியல் மாமியார் மாதிரி ஓவரா பேசுறான்னா… நீங்களும் சீரியலில் வர மானங்கெட்ட மருமகள்கள் மாதிரி அப்படியே ஷாக் ரியாக்ஷன் கொடுத்துட்டு நிற்குறீங்க…
ஒரு மானமுள்ள ரோஷமுள்ள மருமகள்னா டக்குன்னு பெட்டியை எடுத்துட்டுக் கிளம்ப வேண்டாமா?” என்று மருமகள்களையும் விடாமல் வார,
“எது… உங்கப் பிள்ளைங்களை நம்பி நாங்க தனிக் குடித்தனம் போகவா… நீங்க வேற போங்க மாமா… காமெடி பண்ணாதீங்க” என்றாள் அர்ச்சனா!
“ஏன்? என் புள்ளைங்கள நம்பித்தானே இரண்டு பேரும் கல்யாணம் கட்டிக்கிட்டு வந்தீங்க” என்றவர் மருமகள்களைப் பார்த்து கேட்க,
“அப்போ வீட்டை விட்டே வந்தோம்… இப்ப எல்லாம் அவங்களை நம்பி பக்கத்துல இருக்க கடைத்தெருவுக்குக் கூட போக முடியாது” என்றாள் லலிதா.
“வேலை வேலைன்னு வேலையைக் கட்டிக்கிட்டே அழுவுறாங்க மாமா அவங்க” என்று அர்ச்சனா சீரியல் கதையை விடவும் மொக்கையாக இருக்கும் தங்கள் சொந்த கதையைக் கூற,
“ஆமா ஆமா” என்று அவளுக்குப் பின்பாட்டுப் பாடினாள் லலிதா.
“பாத்ரூம் போகும் போது கூட லேப்டாப் கூடவே போறாங்க… மீட்டிங்னு போய் ரூம்ல உட்கார்ந்தா அப்படியே கிடையா கிடக்குறாங்க” என்று இருவரும் புலம்பித் தள்ளினர்.
“ஒருதடவை மீட்டிங் பிஸில உங்கப் புள்ள என்ன பண்ணாரு தெரியுங்களா? பக்கத்துல வைச்சு இருந்த தண்ணிப் பாட்டிலுக்கு பதிலா டேபிள் மேல குழந்தைக்கு வயித்து வலிக்காக வைச்சு இருந்த ஓமம் வாட்டரை குடிச்சிட்டு ஓமட்டிட்டு இருந்தாரு… எல்லாம் எங்க தலையெழுத்து… இரண்டுக்கும் எந்நேரமும் ஆஃபீஸ் ஆஃபீஸ் ஆஃபீஸ்தான்…” என்றாள் அர்ச்சனா!
நந்தா இதெல்லாம் கேட்டுக் கட்டுபடுத்த முடியாமல் சிரிக்க, “எங்க கஷ்டம் உங்களுக்குச் சிரிப்பா இருக்கா… வெங்கட் மாமாவும் நீங்களும் இருக்கிறதாலதான் நாங்க ஏதோ குழந்தைங்களை வைச்சுக்கிட்டு ஒரு மாதிரி அவசர ஆத்திரத்துக்கு சமாளிச்சிட்டு இருக்கோம்… இல்லன்னா உங்கப் புள்ளைங்கள நம்பி ஒரு ஆணியையும் புடுங்க முடியாது” என்றவள் அன்றைய எதார்தத்தைக் கூறினாள்.
இங்கே அர்ச்சனாவும் லலிதாவும் புலம்பிக் கொண்டிருக்க, மேலே மல்லி மருத்துவமனையிலிருந்து வந்த மகனிடம் நடந்த விஷயங்களை எல்லாம் ஒன்று விடாமல் புலம்பித் தீர்த்தார்.
“அப்பாவா இப்படி எல்லாம் பேசினாரு” என்றவன் அதிர்ச்சியாக,
“எல்லாம் அவளுங்கதான் ஏத்தி விட்டிருக்காளுங்க” என்று மல்லி கடுப்புடன் சொல்ல,
“இல்லம்மா அப்படி இருக்காது… அர்ச்சனாவும் லலிதாவும் ரொம்ப நல்ல டைப்” என்றான்.
“அப்போ நான்தான் வில்லிங்குறியா” என்றவர் மகன் புறம் கோபமாகத் திரும்ப, “நான் எங்கேம்மா அப்படி சொன்னேன்” என்றவன் தாயின் தோளை ஆதரவாக அணைத்துப் பிடித்துக் கொண்டு, “நீங்க அப்பா கூட சண்டை போட்டதால ரொம்ப அப்சட்டா இருக்கீங்க… அவரும் வீம்புக்குனாலும் உங்கக்கிட்ட பேச மாட்டேன்னு இருக்காரு”
“அவரு பேசலன்னு ஒன்னும் நான் அப்செட் ஆகல… அவருக்கே அவ்வளவு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்”
“சரி சரி… விடுங்கம்மா… ரிலேக்ஸ்” என்றவன் அவரை அமைதிப்படுத்திவிட்டு,
“வாங்க… நாம எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாம்… மால் காபி ஷாப் இப்படி எங்கேயாச்சும்” என்றான்.
“நம்ம பார்த்தசாரதி கோவிலுக்குப் போய்ட்டு வரலாம் வெங்கட்”
“ம்ம்ம்… போலாம் மா” என்றவன் திருவல்லிகேணியில் உள்ள பார்த்த்சாரதி கோவிலுக்கு தன் அம்மாவை அழைத்துச் சென்றான்.
மனம் அமைதி இல்லாமல் தவிக்கும்போது மல்லி அங்கேதான் வருவார்.
ஏதோ பெருமாளிடம் மட்டும் ஸ்பெஷல் பவர் இருப்பது போன்ற நம்பிக்கை மல்லிக்கு!
அவர் நம்பிக்கை பொய்யாகவில்லை. அந்த வெங்கேடேச பெருமாள்தான் இந்த வெங்கட்டின் வருங்கால மனைவியை மல்லிக்குக் காட்டப் போகிறார்.
கோவில் வாசல் வரை வந்தவன் மருத்துவமனையிலிருந்து அவசர அழைப்பு வரவும், “ம்ம்மா ஒரு பேஷன்ட்… கொஞ்சம் கண்ட்ரோல் இல்லாம நடந்துக்குறாங்களாம்… நான் அவசரமா போகணும்” தயக்கத்துடன் சொல்ல,
“முதல அதான் முக்கியம்… நீ போ… போய் பாரு… நான் டாக்ஸில போயிக்கிறேன்” என்று அவனை அனுப்பி வைத்தார்.
“சாரி ம்மா… உங்க கூட இவ்வளவு தூரம் வந்துட்டு” என்று வருத்தப்பட்ட மகனிடம், “இட்ஸ் ஓகே… நீ கிளம்பு வெங்கட்” என்றார்.
அம்மாவின் முகத்தை வருத்தமாகப் பார்த்துவிட்டு அவன் திரும்பி நடந்தான்.
அப்போது பூஜை கூடையை வாங்கிக் கொண்டு வந்த பெண்ணொருத்தி, தன் எதிரே வந்த வெங்கட்டைத் திகைப்புடன் பார்த்தபடி நின்றுவிட்டாள்.
அவள் உதடுகள், “வெங்கட்… வெங்கட்தானே அது” என்று முணுமுணுக்க, அவனோ அவசரமாக தன் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
“ம்ப்ச் பேசி இருக்கலாமோ?”
“எங்கேயோ அவசரமா போறாங்க?”
“ஆனா அது வெங்கட்தானே… இல்ல வெங்கி” தனியாக அவள் பாட்டுக்குப் பேசிக் கொண்டே நடந்தாள்.
கோவிலுக்கு வந்த பின்னும் அவள் திரும்பி திரும்பி பார்க்க அவன் கார் போன திசை கூட தெரியவில்லை. அவள் முகத்தில் ஒரு விதமான ஏமாற்றம் படர்ந்தது.
மீண்டும் திரும்பி கோவிலுக்குள் நுழைந்த போது மல்லி அவள் அம்மா திலகவதியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
6

Quote from Marli malkhan on May 11, 2024, 12:28 PMSuper ma
Super ma