மோனிஷா நாவல்கள்
Nijamo Nizhalo - Episode 7
Quote from monisha on May 12, 2023, 6:16 PM7
கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்த மல்லியின் முகத்தில் அப்படியொரு பிரகாசம். சந்தோஷம், களிப்பு. இப்படி என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம்.
டைகருடன் தோட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டிருந்த நந்தா,
‘அம்மாவும் மகனும் எங்கேயோ ஜோடியா போனாங்க… இப்ப இவ மட்டும் தனியா வரா’ என்று டைகரிடம் சொல்லிக் கொண்டே யோசனையுடன் நின்றார்.
கதவைத் தாண்டி மல்லி உள்ளே வருவதைப் பார்த்த டைகரோ எப்போதும் போல வாலையாட்டி லொள் லொள் என்றது.
மல்லி டைகரிடம் புன்னகை முகமாக, “பரவாயில்ல… நீயாவது இப்பவும் என்கிட்ட விசுவாசமா இருக்கியே?” என்று கணவனைக் குத்தல் பார்வை பார்த்துக் கொண்டே சொல்லிவிட்டு முன்னே செல்ல, நந்தாவிற்குக் கோபமேறியது.
“நானும் உன்னை மாதிரியே வாலாட்டிட்டு அவ பின்னாடி ஓடி வரணும்னு சொல்ல வராளாடா அவ” சற்றே காட்டமாக மனைவியின் காதில் விழும்படியாக அவர் சொல்ல,
அந்த நொடியே விறுவிறுவெனத் திரும்பி வந்த மல்லி டைகரைப் பார்த்து, “நான் அப்படியாடா சொன்னேன்” என்று கேட்க,
நந்தாவும் டைகரிடம், “அப்படிதானேடா அதுக்கு அர்த்தம்” என்று கேட்டு வைத்தார்.
“என்னைக் கேட்டா எனக்கென்ன டா தெரியும்” என்றது டைகர். லொள் லொள் என்ற தன் பாஷையில்!
அவர்கள் இருவர் பார்வையும் நெருப்பு ஜுவாலைகளாகத் தகிக்க, நல்ல வேளையாக அப்போது வெங்கட்டின் கார் உள்ளே வந்து அந்த நெருப்பை மேலும் படர விடாமல் தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டது.
இறங்கி வந்த வெங்கட்டைப் பார்த்ததும் டைகர், ‘என்னைக் காப்பாத்துடா வெங்கட்டு’ என்று அவன் மேலே பாய்ந்துவிட,
“ஏய் டைகர்… என்ன?” என்றவன் அதன் தலையை வருடிக் கொடுத்து அமைதிப்படுத்தினான். அதேநேரம் தன் பெற்றோர்களின் முகங்களைப் பார்த்தே ஏதோ சரியில்லை என்பதைக் கணித்தவன்,
“ஏன் இங்கே நிற்குறீங்க இரண்டு பேரும்?” என்று வினவ,
“நான் டைகரை வாக்கிங் கூட்டிட்டுப் போயிட்டு இருக்கேன்” என்று நந்தா மீண்டும் தோட்டத்திற்குள் செல்லும் போதே,
“நில்லு வெங்கட்… நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்று மல்லி சத்தமாகக் கூறவும் அந்த ‘நில்லு’ வெங்கட்டிற்கு அல்ல… தனக்கு என்பது நந்தாவிற்கு புரிந்து நின்று விட்டார்.
‘திரும்பியும் முதல இருந்தா’ என்று டைகர் சோர்ந்து படுத்துவிட்டான்.
வெங்கட் ஒன்றும் புரியாமல், “முக்கியமான விஷயமா… சரி வாங்க உள்ளே போய் பேசலாம்” என,
“இல்ல… இங்கே இப்பவே பேசணும்” என்றவர் அழுத்தமாக நந்தாவின் காதில் விழும்படி, “நான் உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கேன் வெங்கட்… பொண்ணுனா அப்படி ஒரு பொண்ணுடா… அழகு அறிவு… அடக்கம்னு எல்லாமே நிறைஞ்ச பொண்ணு” அந்தக் குரலில் அப்படியொரு பெருமை நிரம்பி வழிந்தது.
“ஓ” என்ற வெங்கட்டிற்கு இது எப்போது நிகழ்ந்தது என்று புரியவில்லை. கோவிலுக்குப் போகும் வரை கூட இது பற்றி எதுவும் சொல்லவில்லை என்றவன் யோசிக்க,
“பொண்ணு என்ன படிச்சிருக்கான்னு கேட்க மாட்டியா வெங்கட்?” என்று கேட்டார் மகனிடம். இதெல்லாமே வாசலில் நின்றபடியே கேட்க வேண்டுமா என்று யோசனையாக இருந்த போதும்,
“சொல்லுங்கம்மா… என்ன படிச்சு இருக்காங்க?” என்று அவனும் பெயருக்கென்று கேட்டு வைத்தான்.
“இங்கே நம்ம வேதால எஞ்சினியரிங் முடிச்சுட்டு… மாஸ்டர்ஸ் டிகிரி ஆஸ்திரேலியா மெல்போர்ன் யுனிர்வஸிட்டில படிச்சிட்டு வந்திருக்காடா” என்றவர் சொன்ன தோரணையில் அப்படி ஒரு அளவில்லா பெருமை.
அவ்வப்போது திரும்பி கணவனை நக்கல் பார்வை பார்த்து கொண்டே அவர் சொல்ல நந்தாவின் முகத்திலோ எவ்வித உணர்வும் தென்படவில்லை.
மேலும் மல்லி வியப்புடன், “அவ ஏதோ ரிசர்ச் பண்ணிட்டு இருக்காளாம்… இந்தச் சின்ன வயசுல புக்ஸ் எல்லாம் எழுதி இருக்காளாம்” என, அவனும் தலையசைத்துக் கேட்டுக் கொண்டான்.
“என்னடா தலையைத் தலையை ஆட்டிட்டு இருக்க… பொண்ணோட பேர் என்னன்னு கேட்க மாட்டியா?” என்றதும்,
“சொல்லுங்கம்மா” என்றவன் குரலில் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. ஆனால் மல்லியோ சந்தோஷ பூரிப்புடன், “அவ பெயர் ஸ்ரீலட்சுமிடா… எப்படி … உன் பேருக்குப் பொருத்தமா இல்ல… வெங்கட் ஸ்ரீலட்சுமி” என்றவர் புன்னகைத்தார். அவனும் சிரமமப்பட்டு அவருக்காகப் புன்னகைத்தான்.
“சரி சரி நீ உள்ளே வா… மத்ததெல்லாம் உள்ளே போய் பேசிக்கலாம்” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.
வெங்கட் குழப்பமான மனநிலையுடன் அப்படியே நின்றுவிட அப்போது மகன் அருகே வந்த நந்தா, “உங்க அம்மா பேசிட்டுப் போறத பார்த்தா… நாளைக்கே இன்விடேஷன் கார்ட் அடிச்சு உன் கையில் கொடுத்திருவா போல” என்றார்.
அவன் அவரைப் புரியாமல் பார்க்க, “பார்த்து வெங்கட்… உங்க அம்மா டிஸிபிளின் டிக்னிட்டின்னு பேசிக்கிட்டே ஏதாவது உருப்படாத பொண்ணா பார்த்து உன் தலையில் கட்டிடப் போறா… ஜாக்கிரதையா இரு” என்றார்.
வெங்கட் கோபத்துடன், “அம்மா அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்கபா… சும்மா நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்க” என்றான்.
“நான் உன் நல்லதுக்குதான் சொல்றேன்”
“என் நல்லதைப் பத்தி அம்மாவுக்கு அக்கறை இருக்காதா என்ன? எனக்கு அவங்க மேல முழு நம்பிக்கை இருக்கு… அவங்க எந்தப் பொண்ணைப் பார்க்கிறாங்களோ அந்தப் பொண்ணை நான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றவன் தீர்க்கமாகச் சொன்னான்.
“அப்போ உங்க அம்மா சொன்னா… பொண்ணு யாருன்னு தெரியாம கூட தாலிக் கட்டிடுவியாடா?”
“கட்டுவேனே” என்றவன் மேலும், “எனக்கு என்ன மாதிரி பொண்ணைக் கட்டி வைக்கணும்னு அவங்களுக்குத் தெரியாதா? அவங்க பார்த்து முடிவு பண்ணாலே போதும் ப்பா” என்று சொல்லிவிட்டு சென்ற மகனைப் பார்த்திருந்த நந்தாவிற்கு அதிர்ச்சியாகவும் கொஞ்சம் கவலையாகவும் இருந்தது.
இந்நிலையில் மல்லி சொன்ன பெண்ணைப் பற்றி நந்தா அர்ச்சனாவிடமும் லலிதாவிடமும் சொல்ல, இந்த தகவல் ஒரே நாளில் வீடு முழுக்கப் பரவிவிட்டது.
அர்ச்சனா மூலமாக சர்வுக்கும், லல்லி மூலமாக கபிலுக்கும் என்று தொடர்ந்து சின்னவர்கள் வரை சென்றிவிட்டது.
சர்வேஷ் அண்ணனிடம் கைப்பேசியில் அழைத்து, “யாரு அண்ணா அந்த ஸ்ரீலட்சுமி? ஃபோட்டோ இருந்தா அனுப்பி விடேன்… நாங்களும் எங்க அண்ணி எப்படி இருக்காங்கனு பார்ப்போம் இல்ல” என்று கேட்டான்.
“எனக்கு தெரியாது சர்வேஷ்… அம்மா என்கிட்ட ஃபோட்டோ எதுவும் காட்டல” என்று அவனை சமாளித்துவிட்டு அழைப்பைத் துண்டித்த சில நிமிடங்களில் கபில் லைனில் வந்து அதே கேள்வியைக் கேட்டு அவன் உயிரை எடுத்தான்.
போதாக்குறைக்கு வீட்டிற்கு வந்தால் அர்ச்சனாவும் லலிதாவும், “யாரு மாமா அந்த ஸ்ரீலக்ஷ்மி… எங்கக் கிட்ட சொல்லக் கூடாதா?” என்று படுத்தி எடுக்க, அவனுக்குத் தெரியாத தகவலைக் கேட்டால் அவன் என்னதான் செய்வான்.
சின்ன வாண்டுகள் கூட, “பெரிம்மா பேர் சி…லச்சுமியா” என்று கேட்டு வைக்க, ‘இது என்னடா வம்பா போச்சு’ என்று அவன் தவிப்புற்றான்.
ஸ்ரீலட்சுமி கதையை ஆரம்பித்தது என்னவோ மல்லி. ஆனால் அவர் அதனை மறந்துவிட்டு ஸ்போர்ட்ஸ் டே விழாவில் பிஸியாகவிட்டார். மாட்டிக் கொண்டுத் தவித்தது என்னவோ வெங்கட்தான்.
ஆனால் அதோடு முடியவில்லை.
நந்தா எல்லோருக்கும் ஒரு படி மேலே போய், “அந்த ஸ்ரீலட்சுமியோட அட்ரெஸ் கொடு… நானே நேர்ல போய் விசாரிச்சுக்கிறேன்” என, அவனுக்குக் கடுப்பிலும் கடுப்பானது.
“ஐயோ அப்பா… உங்க முன்னாடி அம்மா அன்னைக்கு சொன்னதுதான்… அதுக்கு மேல எனக்கும் ஸ்ரீ லட்சுமி யாரு எந்த ஊருன்னு எதுவும் தெரியாது… என்னை விட்டுடுங்க… ப்ளீஸ்… எனக்கு ஆயிரத்து எட்டு வேலை இருக்கு” என்றவன் அவரிடமிருந்து தப்பி வந்து அவன் அறைக்குள் அடைந்துவிட்டான்.
அப்போதுதான் மேஜை மேல் அவன் அம்மாவின் ஸ்கூல் பைல்களின் வழியே வெளியே நீட்டிக் கொண்டிருந்த காகித உரையில் ‘ஸ்ரீலட்சுமி’ என்ற பெயர் மட்டும் வெளியே தெரிந்தது.
உண்மையிலேயே திருமணத்தைப் பற்றியெல்லாம் அவனுக்கு பெரிதாக எதிர்பார்ப்பு கனவெல்லாம் இல்லை. ஆனால் இந்த ஒரு வாரமாக எல்லோரும் அந்தப் பெயரைச் சொல்லிச் சொல்லி அவன் மனதில் அதை ஆழமாகப் பதிய செய்துவிட்டனர்.
இப்போது அவனுக்கே இந்த ஸ்ரீலட்சுமி யார் எப்படி இருப்பாள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிகுந்துவிட்டது.
சில நிமிடங்கள் எடுக்கலாமா பார்க்கலாமா என்று தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தியவன் பின் ஒரு முடிவுடன், அந்த உரையைப் பிரித்துப் பார்த்தான்.
அந்தப் பெண்ணின் தகவல்களுடன் சேர்த்து அதில் அவள் புகைப்படமும் இருந்தது.
‘ஸ்ரீ லட்சுமி’ என்ற பெயர் உருவாக்கிய எதிர்பார்ப்பை அவளுடைய படம் கொஞ்சமும் குறைத்துவிடவில்லை. இன்னும் கேட்டால் கொஞ்சம் அதிகப்படியாகவே இருந்தாள்.
அனைத்து லட்சணங்களும் பொருந்தியிருந்த அவள் முகத்தை தன்னையும் மறந்து ரசித்து பார்த்திருந்தவன் ஒரு நொடி திகைப்புற்றான்.
‘இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே?’
“எங்கே எப்போது பார்த்தோம்” என்று அவன் மூளையைக் குடைந்து யோசிக்கும்போது, அவன் நினைவுக்கு வந்தது. மீண்டும் அவள் தகவல்களைப் புரட்டிப் பார்த்தான். அவனுக்கு அவளுக்கும் வயது வித்தியாசம் ஒரு சில மாதங்கள்தான்.
அம்மாவின் பெயர் திலகவதி என்று இருந்தது.
‘ஓ! இவ திலகா மிஸ்ஸோட பொண்ணு லக்ஷ்மியா?’
ஒன்பதாம் வகுப்பிலிருந்து இருவரும் ஒன்றாகதான் படித்தார்கள். திலகவதி ஆசிரியருடன் அவன் அம்மாவிற்கு நல்ல ஒரு நட்பு இருந்தது.
அவனுக்குத் தெரிந்த வரை லக்ஷ்மி ரொம்பவும் அமைதியான பெண். கொஞ்சம் பயந்த சுபாவம். சத்தமாகப் பேசிக் கூட அவன் பார்த்ததில்லை. ஏன்? அவள் வாய் திறந்து பேசியதைப் பார்த்தாக கூட அவனுக்கு நினைவில்லை.
நன்றாகப் படிக்கக் கூடியவள்தான். எனினும் ஏதோ ஒன்று அவனை நெருடியது. இவளையா அம்மாவிற்குப் பிடித்துப் போனது.
‘அம்மாவுக்குப் பிடிச்சிருந்தா அதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்’ என்றவன் மீண்டும் அதே இடத்தில் ஸ்ரீலட்சுமியின் தகவல் அடங்கிய காகிதத்தை வைத்துவிட்டான்.
அன்று மாலையே அதே காகித உரையை எடுத்து வந்து மகனிடம் நீட்டிய மல்லி, “ஜாதகம் எல்லாம் பார்த்துட்டு உன்கிட்டஃ போட்டோ காண்பிக்கலாம்னு நினைச்சேன் வெங்கட்… நான் நினைச்ச மாதிரியே உங்க இரண்டு பேருக்கும் எல்லா பொருத்தமும் பொருந்தியிருக்கு… ஜோசியரே அம்சமான ஜாதகம்னு சொல்லிட்டாரு… அப்புறம் ஸ்ரீ லட்சுமி வேற யாரும் இல்ல… உன் கூட படிச்சப் பொண்ணுதான்…நம்ம திலகவதி மிஸ்ஸோட பொண்ணு” என்றவர் மேலும்,
“இந்த கவர்ல டீடைல்ஸ் ஃபோட்டோஸ் எல்லாம் இருக்கு… உனக்குப் பிடிச்சிருக்கான்னு பார்த்துட்டுச் சொல்லு வெங்கட்…” என, அவனும் புதிதாகக் கேட்பது போல தலையைத் தலையை ஆட்டி வைத்தான்.
“ஆனா பொண்ணுக்கு உனக்கும் ஒரே வயசு… அதுதான் கொஞ்சம்” என்றவர் தயங்க,
“இப்ப பெண்களும் நிறைய படிக்கிறாங்கமா… பெருசா சாதிக்கணும்னு நினைக்கிறாங்க … அதனால வயசு வித்தியாசமெல்லாம் இந்தக் காலகட்டத்துல ஒரு பெரிய விஷயம் இல்ல” என்றவன் அதனை மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டான்.
மகனின் விளக்கத்தில் மல்லிக்கு சந்தோஷமாக இருந்தது. இளம் வயதிலேயே தன் பெற்றோர்கள் தனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் என்று இப்போதும் மல்லிக்கு வருத்தம்தான். அதனால் மல்லிக்கு ஸ்ரீயின் வயது ஒரு பொருட்டாக இல்லை.
“சரி… இந்த டீடைல்ஸ் எல்லாம் உங்க அப்பாகிட்ட காண்பிச்சுடு”
“நானா?”
“ம்ம்ம்… அப்படியே நாளைக்குப் பொண்ணு பார்க்க போறோம்னு உங்க அப்பாகிட்ட சொல்லிடு”
“நாளைக்கேவா?”
“நாளைக்கு ஈவனிங்தான்… உனக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கா?”
“அப்படி எல்லாம் இல்ல” என்றவன் லேசான தயக்கத்துடன் இழுக்கவும் மல்லி அதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் முடிவெடுத்துவிட்டார். அதனை நடத்தியே தீருவார் என்ற ரீதியில் அவர் ஏற்பாடுகளைச் செய்ய தொடங்கிவிட்டார்.
வெங்கட்டிடம் இருந்த ஸ்ரீ லட்சுமியின் தகவல்கள் நந்தாவிடம் சென்றது. தற்சமயம் அவள் புகைப்படம் அவர்கள் குடும்பத்தில் எல்லோர் கைகளிலும் வலம் வந்தன.
அடுத்த நாள் மாலை மல்லி தயாராகிவிட்டு மகனுக்கு உடுத்தி கொள்ள, வேட்டிச் சட்டை, ப்ரேஸ்லட், தங்க ஸ்டேப் உள்ள கைக்கடிகாரம் என்று எடுத்துக் கொடுத்துக் போட்டுக் கொள்ள சொல்ல, அவனுக்கு சங்கடமாகிப் போனது.
“ஜஸ்ட் பொண்ணு பார்க்கிற சடங்குதானே… நான் கேசுவல்ஸ் வரேனே” என்றவன் சொல்ல சொல்ல, மல்லி கேட்கவில்லை. அவர் எடுத்துக் கொடுத்த எல்லாவற்றையும் அவனை அணிய செய்துவிட்டே மறுவேலைப் பார்த்தார்.
“உங்க அப்பாவைச் சீக்கிரம் கூப்பிடு… கிளம்பணும்” என்றவர் பரபரக்க,
“இன்னுமா நீங்க இரண்டு பேரும் பேசிக்கல” என்று கேட்டான்.
“மச்… அவர்கிட்ட மனுஷன் பேசுவானா? நீ முதல அவரை கூப்பிடு… நாம கிளம்பணும்” என்ற மல்லி தன் பிடிவாதத்திலிருந்து கொஞ்சமும் இறங்கி வாராமல் நிற்க, அவனுக்கு வருத்தமாக இருந்தது.
“அப்பா… கிளம்பிட்டீங்களா?” என்றவன் வாசலில் நின்றபடி கேட்க.
“ஓ… கிளம்பியாச்சே” என்றபடி வாசலைத் தாண்டிக் குதித்தாள் அந்த வீட்டின் குட்டி தேவதை அமிர்தா!
“அமிர்தா குட்டி… நீங்களும் வரீங்களா?” என்று வெங்கட் ஆனந்த பூரிப்புடன் கேட்கும்போதே அணிவகுப்பாக சவீதா நகுல் சகாதேவ் வந்து நின்றனர்.
மல்லி புரியாமல் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, “அண்ணா உங்களுக்கு வேட்டிச் சட்டை சூப்பரா இருக்கு… செம ஸ்மார்ட்டா இருக்கீங்க” என்றபடி சர்வேஷ் வந்து நின்றான்.
அவனைத் தொடர்ந்து கபில் வர, “நீங்களும் வரீங்களாடா?” என்று வெங்கட் ஆச்சரியப்படும்போதே,
“ஹ்ம்ம்… ஆஃபீஸ்ல எவ்வளவு கஷ்டப்பட்டு பெர்மிஷன் கேட்டு வந்திருகோம் தெரியுமா?” என்றார்கள்.
“ஆமா… அது ஒரு பெரிய சாதனைன்னு சொல்லிட்டுத் திரியுறீங்க” என்று கணவனைக் கடுப்படித்துக் கொண்டே அர்ச்சனா வந்து நிற்க, லலிதாவும் அவளுடன் வந்தாள்.
நந்தா கடைசியாக வர மல்லி மகனைக் கோபமாகப் பார்த்து, “நான் உங்க அப்பாக்கிட்ட மட்டும்தானேடா சொல்ல சொன்னேன்” என்று உஷ்ணப் பார்வையை வீச,
“இல்லம்மா நான் அப்பாக்கிட்ட மட்டும்தான்” என்றவன் பதிலுரைக்கும்போதே,
“வாங்க வாங்க… எல்லோரும் கார்ல ஏறுங்க… டைம் ஆகுது” என்று நந்தா பரபரப்பாக எல்லோரையும் முன்னே கிளப்பிக் கொண்டு செல்ல, மல்லி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“என்னடா இது? இவங்க எல்லாம் எதுக்கு டா?” என்று அவர் மகனை முறைத்துக் கொண்டு நிற்க,
“டேய் வெங்கட்… என்ன இங்கேயே நிற்குற… போய் காரை எடு… நேரமாகல” என்று வெங்கட்டையும் நந்தா விரட்ட அவன் தப்பித்தால் போதுமென்று ஓடிவிட்டான்.
மல்லியின் கோபம் இப்போது கணவன் புறம் திரும்ப அதனை அவர் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், “என்ன நீ… கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இங்கேயே நின்னுட்டு இருக்க… பசங்க எல்லாம் கார்ல ஏறிட்டாங்க பாரு… வா வா கிளம்பலாம்” என்று மனைவியின் தோளை அணைத்துப் பிடித்துக் கொண்டு கார் அருகே நகர்த்திப் போக,
“ஐயோ கையை எடுங்க” என்று மல்லி விலகி நின்றார்.
நந்தா புன்னகையுடன் கார் கதவைத் திறந்துவிட்டு மல்லியைப் பார்க்க அவர் ஏறாமல் கணவனை முறைத்துக் கொண்டு நின்றார்.
“என்ன மல்லி இது… பையனுக்குப் பொண்ணு பார்க்கப் போயிட்டு இருக்கோம்… இப்போ போய் நீ இப்படி ரொமென்டிகா என்னை லுக்விட்டுட்டு இருக்க” என்று கேட்டு வைக்க,
“எது? ரொமென்டிகாவா” என்றவர் முகம் அஷ்டகோணலாக மாற,
“நான் உன்னைப் பொண்ணு பார்க்க வந்தபோது கூட நீ இப்படிதான் என்னைப் பார்த்த…அந்தப் பார்வையிலதானே” என்றவர் பேசி முடிப்பதற்குள், “கடவுளே!” என்று தலையிலடித்துக் கொண்டு காரில் ஏறிவிட்டார்.
நந்தா பின்னிருந்த காரில் அமர்ந்திருந்த சர்வேஷிடம், “பசங்களை எல்லாம் ஏன் இவ்வளவு இடுக்கமா உட்கார வைச்சு இருக்க… எல்லோரும் வாங்க… பெரியப்பா கார்ல ஏறிக்கோங்க” என்றவர் அழைத்ததுதான் தாமதம்.
அமிர்தா, சவீதா, நகுல், சகாதேவ் என்று நால்வரும், “ஜிஎம் கொஞ்சம் தள்ளிப் போங்க” என்றபடி மல்லியைத் தள்ளிக் கொண்டு வந்து அமர்ந்தனர்.
“ஜிஎம் மா?அப்படினா?”
“ம்ம்ம்… கிரேன்ட்மதர் ஷார்ட் ஃபார்ம்தான் ஜிஎம்… தாத்தாதான் சொல்லிக் கொடுத்தாரு” என்று அமிர்தா விளக்கமளிக்க, மல்லியின் முகம் கடுகடுத்தது.
முன்னிருந்த கண்ணாடி வழியாக மல்லி முறைப்பதைக் கண்டும் காணாதது போல நந்தா, “ம்ம்ம் கிளம்பு வெங்கட்” என்றார்.
இத்தனை வருடத்திற்குப் பிறகு முழு குடும்பம் சகிதமாக வெளியே போகிறோம் என்பதில் வெங்கட்டிற்கு அப்படியொரு சந்தோஷம்.
தந்தையை அர்த்த புன்னகையுடன் பார்த்துவிட்டு காரை இயக்கினான்.
7

Quote from Marli malkhan on May 11, 2024, 2:49 PMSuper ma
Super ma