மோனிஷா நாவல்கள்
Paruvameithi - 17
Quote from monisha on June 28, 2022, 5:02 PMஒன்றிரண்டு ஆண்களை அல்ல, ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்தையுமே ஆளுமை மற்றும் அறிவான ஆணை தேர்ந்தெடுக்கும் பெண்ணின் மரபணு வேட்டை குணம் அச்சுறுத்தியது.
இதனால் ஆண்கள் எல்லாம் கூடி, ஒற்றுமையாக ஓர் ஆட்ட விதியை தீர்மானிக்கவில்லை என்றால் எங்கிருந்தோ வரும் எவனோ ஓர் அந்நியனின் மரபணு வளத்திடம் தோற்று போகக் கூடும் என்று ஆண்கள் அனைவரும் சேர்ந்து ஒரு விதியை உருவாக்கினார்கள்.
ஆனானப்பட்ட அந்த மரபணு விதி என்ன தெரியுமா?
பல ஆண்கள் ஒரே பெண்ணை தேர்ந்தெடுத்தாலும், அந்தப் பெண் அவர்களில் ஒருவனை ஆதரித்து தம்பதிகளாகக்கூடி உறவு ஏற்படுத்திய பிறகு, வேறு எவனும் அவளிடம் விந்தணு முதலீடு செய்ய முயல்வது தண்டிக்கக்கூடிய குற்றமாகும். தேர்ந்தெடுத்த ஆணை தவிர பிறரின் விந்தணுக்களைப் பெண் ஏற்பதும் குற்றமாகும்.
இந்த புதிய விதி ஆண்களின் ஆதங்கங்களை ஆற்றிவிட, இந்த ஒரே விதி அவர்களை மரபணு நிர்மூலத்திலிருந்து காக்கும் என்ற நம்பிக்கையில் நிம்மதியடைந்தார்கள்.
இப்படி ஆண்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியதால் இந்த ஆட்ட விதி மிக புனிதமான ஒன்றாக கருதப்பட்டது. இந்த விதியேற்பு வைபவத்தை ‘திருமணம்’ என்றொரு பெரிய விழாவாக கொண்டாடினார்கள்.
இதனால்தான் எல்லாவித சமுதாயங்களிலும் நகர்ப்புறம், கிராமப்புறம் முன்னேறிவை, பின்தங்கியவை. படிப்பறிவுள்ளவை, படிப்பறிவற்றவை என்று எந்த பாகுபாடின்றி இந்த விதியேற்பு விழாவை முன்னின்று நடத்துவது ஆணாக மட்டும்தான் இருக்கிறது.
தொடரும்...
17
அட்டைபெட்டிகளையும் மூட்டைகளையும் பிரித்து சாமான்களை எடுத்து அடுக்கி வைக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கியதில் கனிக்கு மாயனின் நினைவு சுத்தமாக மறந்து போனது.
நிம்மியும் வாசுவும் உடன் துணை இருந்து உதவியதில் அவளுக்கு வேலை பளுவும் தெரியவில்லை. அதுவும் அவர்களின் கலகலப்பான பேச்சுக்களில் நேரம் போனதும் தெரியவில்லை. வேலைகளை முடித்து அடுத்த நாள் விடியற்காலை பாலும் காய்ச்சிவிட்டாள்.
“என்ன கனி? இன்னைக்கே ஸ்கூலுக்கு வர போறியா?”
“ஆமா ம்மா… இதோ குளிச்சி டிபன் செஞ்சிட்டா முடிஞ்சுது”
“நீ எதுக்கு டிபன் எல்லாம் செஞ்சி கஷ்டப்பட்டுட்டு இருக்க” என்று நிம்மி அக்கறையாக சொல்லவும்,
“இல்ல இருக்கட்டும் ம்மா… நான் பார்த்துக்கிறேன்” என்று கனி மறுத்தாள்.
“என் சமையல் அவ்வளவு மோசமாவா இருக்கு?”
“ஐயோ! என்னம்மா நீங்க? நான் அப்படி சொன்னேனா?”
“அப்படினா இன்னைக்கு நீ எங்க கூடதான் சாப்பிடணும்… கிளம்பி ரெடியாகி கீழே வந்துடு… புரிஞ்சுதா?” என்று திட்டவட்டமாக சொல்ல,
“சரி ஒகே… வரேன்” என்றவள் சங்கடமாக புன்னகைத்தாள்.
“ம்ம்ம்… அப்படி” என்று விட்டு கீழே இறங்கி சென்றார். வந்த இரண்டு நாளில் அத்தனை நெருக்காமாக பழகவிட்ட இந்த தம்பதிகளை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.
அதேநேரம் இவர்களின் அன்பு தொல்லைகள் ஒரு மாதிரி பயத்தையும் கொடுத்தது. நெருக்கமாக பழகிவிட்டு இவர்களும் ஒரு நாள் பிரிந்து போய்விட்டால்… மீண்டும் பழையபடிக்கு அந்த கொடுமையான தனிமைக்கு பழக்கப்பட வேண்டும்.
திருநாவும் அப்படிதான் செய்தான். அதற்கு யாரிடமும் ரொம்பவும் இழையாமல் கொஞ்சம் ஒதுங்கியே இருந்துவிடுவது மேல் என்று எண்ணிய போதும் அவளால் அது முடியவில்லை. அன்பை நிராகரிக்க முடியுமா?
நிம்மியும் வாசுவும் கனிக்கு அள்ள அள்ளக்குறையாத அன்பை வாரி வழங்கினார்கள். சொந்த மகளை போல நடத்தினார்கள்.
கனி அத்தை படத்தின் முன்பு விளக்கேற்றி வணங்கிவிட்டு தன் கைப்பையுடன் தயாராகி கீழே வர,
“ஆ… கனி வா வா…” என்று சோபாவில் அமர்ந்து செய்திதாளை வாசித்து கொண்டிருந்த வாசு அதனை மடித்து வைக்க,
“சாப்பிட்டீங்களா பா” என்று புன்னகை முகமாக கேட்டாள்.
“எல்லா ரெடி… சாப்பிட வேண்டியதுதான்… வா ஒண்ணா சாப்பிடுவோம்” என்றபடி எழுந்தவர் நேராக சமையலறைக்குள் நுழைந்து,
“என்ன நிம்மி டார்லிங்… பொங்கல் ரெடியா… எடுத்துட்டு போய் வைக்கலாமா?” என்று அவர் கேட்பது கனிக்கு வெளியே கேட்கவும் அவள் சிரித்து கொண்டாள். இவர்கள் இருவரும் பேசி கொள்வதே அத்தனை ரசனையாக இருந்தது.
வாசு ஒரு ஹாட்பேக்கை எடுத்து வந்து வைக்க, “நீங்க உட்காருங்கபா… நான் எடுத்து வந்து வைக்கிறேன்” என்று கனி தன் தோள் பையை கழற்றிவிட்டு வர,
“நோ பிராப்ளம்… நீ உட்காரு” என்று மீண்டும் சமையலறைக்குள் சென்று தட்டுக்கள் எடுத்து வந்தார். “கொடுங்கபா” என்று கனி அதனை பெற்று கொண்டாள்.
பின்னே வந்த நிம்மி, “நடுவுல டான்ஸ் ஆடாதீங்க… சாம்பார் சூடா இருக்கு… ஊத்திக்க போகுது” என்று கந்தல் துணியில் சாம்பார் பாத்திரத்தை எடுத்து வந்து டேபிள் மீது வைக்க,
“ஆஆஆ…. சாம்பார் மணக்குது… சீக்கிரம் பொங்கல் வை நிம்மி” என்றபடி ஆவலுடன் வாசு அமர, கனி புன்னகையுடன் அவருக்கு பரிமாறினாள்.
சூடான சாம்பாரில் பொங்கலை பிசைந்தபடி, “நீயும் உட்காரு ம்மா… சாப்பிடு” என்று சொல்ல கனியும் அமர்ந்து கொண்டு, “ஆமா ஆமா… நெய் பொங்கல் வாசனை… என்னையும் இழுக்குது” என்றாள்.
அதன் பின்பு எல்லோரும் பொங்கலில் கரைந்து போனதில் யார் குரலும் எழவில்லை. வாசு மட்டும் தட்டை சுத்தமாக துடைத்துவிட்டு, “இன்னும் கொஞ்சம் பொங்கல் வை நிம்மி” என்று கெஞ்சுதலாக பார்க்க,
“போதும் போதும்… ஒழுங்கா தட்டை எடுத்ததுட்டு போய் போடுங்க” என்று கண்டிப்புடன் சொன்னார் நிம்மி.
“கொஞ்சோண்டு வை நிம்மி”
“இதுவே ஜாஸ்தி… முடியவே முடியாது”
“என்ன ம்மா நீங்க… கொஞ்சமா வைக்கலாமே” என்று கனி வாசுப்பாவிற்கு ஆதரவாக பேச,
“உனக்கு தெரியாது… ஏற்கனவே ஐயாவுக்கு பிபி சுகர் எல்லாம் ஏறி போயிருக்கு” என்றபடி சாப்பிட்டுவிட்டு எழுந்து, “கொடுங்க இப்படி” என்று கணவனின் தட்டையும் பிடுங்கி கொள்ள, வாசுவின் முகம் சுருங்கி போனது.
“சுகர் பிபின்னு சொல்லியே ரொம்ப அநியாயம் பண்றாமா… ஏதோ நீ வந்ததால்தான் இந்த நெய் பொங்கல் எல்லாம்… இல்லனா தினை, வரகு, சாமைனு ஏழு நாளும் சிறுதானிய கஞ்சிதான்” என்றவர் புலம்ப,
“உங்க நல்லதுக்காகதானே பா” என்று கனி பேசும் போது நிம்மி வெளியே வரவும், “ஷ்ஷ்” என்று வாசு ஜாடை செய்ய,
“ஒரு டூ மினிட்ஸ்… இரு நான் என் பேக் எடுத்துட்டு வந்துடுறேன்… நாம கிளம்பலாம்” என்றுவிட்டு நிம்மி உள்ளே சென்றார். கனி கை கழுவி கொண்டு வரவும் வாசு அவள் அருகே வந்து ரகசியமாக,
“கனி நீ இங்கேயே சாப்பிட்டினா எனக்கும் அப்பப்போ நெய் பொங்கல் ஊத்தப்பம்… எல்லாம் கிடைக்கும்” என்று அவர் பாவமாக முகத்தை வைத்து கொண்ட கேட்கவும் புன்னகைத்தவள்,
“நான் உங்களுக்கு இதை விட நல்ல யோசனை சொல்றேன்… அம்மா ஏதாவது செஞ்சா கூட சைலன்டா சாப்பிடிட்டு மாடிக்கு வந்துடுங்க… எனக்கு நிறைய வெரைட்டி தெரியும்… நான் உங்களுக்கு செஞ்சி தர்றேன்” என்றாள்.
“வாவ்… இந்த டீலிங் நல்லா இருக்கே” என்று வாசு உற்சாகமாக,
“என்ன டீலிங்?” என்று கேட்டபடி வெளியே வந்தார் நிம்மி.
“என்ன டீலிங்… நாங்க டீச்சிங் பத்தி இல்ல பேசிட்டு இருந்தோம்” என்ற வாசு கனியை பார்த்து, “என்ன கனி? ஆமாதானே” என்று கண்ணசைக்க,
“ஆமா… அப்பா டீச்சிங் பத்திதான் கேட்டுட்டு இருந்தாரு” என்று சமாளிக்க, வாசு கள்ளத்தனமாக புன்னகைத்தார்.
“சரி சரி கிளம்பலாமா கனி” என்று நிம்மி கேட்க, “ஒகே மா” என்று கனியும் அவருடன் புறப்பட்டாள். இருவரும் பேசி கொண்டே நடந்து சென்றனர்.
“நீங்க ரெண்டு பேரும் கியூட்டான பேர் ம்மா... சத்தியமா உங்களை மாதிரி நான் யாரையுமே பார்த்தது இல்ல.. அதுவும் வாசு அப்பா கூட பேசிட்டு இருந்தா… சிரிச்சிட்டே இருக்கலாம்”
“அவர் அப்படிதான்… எப்பவும் கலகலப்பா பேசிட்டு இருப்பாரு… ஆனா வாழ்க்கைல அவரை மாதிரி கஷ்டம் அனுபவிச்சுவங்க யாருமே இருக்க மாட்டாங்க கனி
வாசு… தன்னோட வாழ்க்கையோட முக்கால்வாசி இளமையை தொலைச்சவரு… அதனாலதான் இப்படி சிரிக்க சிரிக்க பேசி தான் வயசையும் குறைச்சிருக்கிறாரு… மனசால தன்னைத்தானே இளமையா வைச்சுக்க பாக்கிறாரு” என கனி அதிர்ச்சியுடன்,
“என்ன ம்மா சொல்றீங்க?” என்று கேட்டாள்.
“ம்ம்ம்… வாசுவுக்கு நிறைய படிக்கணும்னு கனவு இருந்துச்சு… சின்ன வயசுல இருந்தே இங்கலீஷ்ல பூந்து விளையாடுவாரு… ஆனா அவர் ஆசைப்பட்ட மாதிரி எதுவுமே நடக்கல… அவரு பத்தாவது முடிக்கும் போது அவங்க அம்மாவுக்கு முடக்கு வாதம் வந்திடுச்சு… இதனால மனசோடைஞ்சு அவங்க அப்பாவும் குடிச்சு குடிச்சு தான் உடம்பை கெடுத்துக்கிட்டாரு… கொஞ்ச நாளில அவருமே படுத்த படுக்கையாகிட்டாரு…
வாசுவுக்கு இரண்டு அண்ணன் ஒரு அக்கா… அந்த நேரத்துல அண்ணாங்களுக்கு கல்யாணம் ஆகி இருந்துச்சு… குடும்பத்துல பெருசா அப்போ வருமானமும் இல்ல… அவங்க யாரும் உதவ முன் வரல… அவரோட படிப்பு நின்னு போச்சு…. வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை… பக்கத்து ஊர்ல இருக்க கல் கம்பனில வேலைக்கு போனாரு… வேலைக்கு போயிட்டே கிடைக்கிற பழைய இங்கலீஷ் நாவல்ஸ் எல்லாம் படிப்பாரு… அவரோட அக்கா… வீட்டுல இருந்து அம்மா அப்பாவை பார்த்துக்கிட்டா
இதுக்கு இடையில அவங்க அண்ணன் பொண்டாடிங்க சண்டை போட்டுட்டு ஆளுக்கு ஒரு பக்கம் பிரிஞ்சு போயிட்டாங்க… சாப்பாட்டுக்கே கஷ்டமாகி போச்சு… வாசுதான் ஏதேதோ வேலை செஞ்சு கொஞ்சம் குடும்ப சொத்தை எல்லாம் வித்து எப்படியோ அக்காவை கட்டி கொடுத்தாரு… அப்புறம் அப்பா அம்மாவை பார்த்துக்கிற பொறுப்பு அவர் தலைல விழுந்துடுச்சு… அவருக்கு அப்பவே இங்கலீஷ்ல நல்ல நாலஜ்… வீட்டுல இருந்தபடி அம்மா அப்பாவை பார்த்துக்கிட்டு நிறைய தமிழ் புக்ஸ் இங்கிலீஷ்ல டிரன்ஸலேஷன் பண்ணி கொடுத்து சம்பாதிச்சாரு…
இதுக்கு இடையில அவர் கல்யாணத்துக்கு பார்த்த பொண்ணுங்க யாரும் இப்படி படுத்த படுக்கையா இருக்க மாமியார் மாமனாரை பார்த்துக்க விருப்பப்படல… அப்படியே காலமும் ஓடி போச்சு வயசும் ஓடி போச்சு… அவரோட முப்பது நாலு வயசுல அம்மா இறந்துட்டாங்க… நாற்பது வயசுல அப்பா இறந்து போயிட்டாரு
அதுவரைக்கும் அம்மா அப்பாவை பார்த்துக்கிற பொறுப்பாவது இருந்துச்சு… அவங்களும் போன பிறகு தனிமை மட்டும்தான் மிஞ்சிச்சு பாவம்… இந்த நிலையில அவரோட அண்ணன் தம்பி… அக்கா யாருமே அவரை கூட சேர்த்துக்கல… மனுஷன் தனிச்சு போயிட்டாரு
இந்த தனிமைல இருந்து தப்பிக்க ஒரே வழின்னு பேப்பர்ல மணமகள் வேணும்னு விளம்பரம் கொடுத்தாரு… நான் எதாச்சையாதான் பார்த்தேன்… எனக்கு அப்போ வயசு முப்பது ஏழு இருக்கும்… என்னோட நாலு தங்கச்சிங்களை கல்யாணம் பண்ணி கொடுத்திட்டு கிட்டத்தட்ட நானும் அவர் நிலைமைலதான் இருந்தேன்
என் வேலை மட்டும்தான் எனக்கு சப்போர்ட்… சரின்னு பதில் கடிதம் போட்டேன்… அவரும் பதிலுக்கு கடிதம் போட்டாரு… இரண்டு பேருக்கும் பிடிச்சு போச்சு… கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணோம்… சொந்த அண்ணன் தங்கச்சிங்களே கிண்டல் பண்ணாங்க… இந்த வயசுல உங்களுக்கு கல்யாணம் தேவையான்னு
ரொம்ப தாமதமானாலும்… நாங்க இனிமேயாச்சும் எங்களை பத்தி யோசிக்கணும்னு முடிவு பண்ணோம்… சிம்பிளா கல்யாணத்தை முடிச்சுக்கிட்டோம்… கொஞ்ச நாளில் நான் என் வேலையை இந்த ஊருக்கு மாத்திக்கிட்டு வந்துட்டேன்… இப்போ நாங்க எங்க வாழ்க்கையை வாழ்ந்துட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கோம்” என்றவர் சொல்லி முடிக்க,
“அப்போ… உங்களுக்கு பசங்க” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“குழந்தை வேண்டாம்னு நாங்க இரண்டு பேரும் முடிவு பண்ணோம்… இந்த வயசுல குழந்தையை பெத்துக்கிட்டு நாளைக்கு அந்த புள்ளைங்களுக்கு நாங்க பாரமாகிட கூடாது பாரு” கனியின் கண்கள் கண்ணீரால் நிரம்பிவிட்டன. இங்கே ஒவ்வொரு மனிதனுக்கு ஒவ்வொரு பிரச்சனை இருக்கிறது. எல்லோரும் அதை கடந்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பிரச்சனைதான் பெரிது என்று நாம்தான் தேவையில்லாமல் தனக்குத்தானே பச்சாதப்பட்டு நொந்து போகிறோம்.
“என்ன கனி? சைலன்ட் ஆகிட்ட”
“ஒன்னும் இல்லமா” என்றாலும் அவள் கண்களில் நின்ற கண்ணீரை பார்த்தவர்,
“எதுக்கு இந்த பீலிங்… நானும் வாசுவும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம்… ஒருத்தர்காக ஒருத்தர் வாழுறோம்… பசங்களை படிக்க வைக்கணும்… பெரியாளாக்கணும்… அவங்க வாழ்க்கையை செட்டில் பண்ணனும் இப்படி எங்களுக்கு எந்த கவலையும் இல்ல… என்ன ஒன்னு? நீண்ட ஆயுளும் ஆரோக்கியமுமா நாங்க இரண்டு பேரும் சேர்ந்து இன்னும் ரொம்ப வருஷம் ஒண்ணா வாழணும்… செத்தாலும் இரண்டு பேரும் ஒண்ணாவே போய் சேர்ந்துடணும்” என்றார்.
“ஏன் மா இப்படி எல்லாம் பேசுறீங்க… நீங்க இரண்டு பேரும் ரொம்ப வருஷம் ஆரோக்கியமா இப்படியே சந்தோஷமா வாழ போறீங்க” என,
“தேங்க்ஸ் கனி” என்றார்.
இப்படியாக அளவளாவி கொண்டே அடுத்த தெருவிலிருந்த ஆரம்ப நிலை பள்ளிகூடத்தை நெருங்கிய சமயம் வழியிலிருந்த தேநீர் கடையிலிருந்த நபர்கள் சிலர், “வணக்கம் மிஸ்” என்று நிம்மியை பார்த்து கும்பிடு போட, “ம்ம்ம்ம் வணக்கம்” அவர் புன்னகையாக தலையசைத்தார்.
அவர்கள் பார்வை பின் கனியின் புறம் திரும்பியது.
“இவங்கதான் நம்ம ஊருக்கு வந்திருக்க புது மிஸ்ஸா?” என்றவர்கள் விசாரிக்க,
“ஆமா” என்று பதிலளித்தார் நிம்மி.
“ஓ… ஆனா இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு” என்று ஒருவன் கனியை குறுகுறுவென பார்த்து வைக்க அவளுக்கு உள்ளுர பதட்டமேறியது.
“இரண்டு நாள் முன்னாடிதான் ஊருக்கே வந்தாங்க” என்று நிம்மி பதிலளித்துவிட்டு நகர, கனி தலையை தாழ்த்தி கொண்டு முன்னே சென்றுவிட்டாள்.
பள்ளி கட்டிடத்தை அடைந்ததும் கனி மெல்ல திரும்பி நோக்க, அவர்கள் அவளை பற்றிதான் ஏதோ தங்களுக்குள்ளாக உரையாடி கொண்டிருப்பதாக தோன்றியது.
மீண்டும் பார்வையை உள்ளிழுத்து கொண்டாள். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல அது அவளுடைய கற்பனையாக கூட இருக்கலாம்.
‘அவங்களுக்கு நம்மல தெரிஞ்சிருக்காது’ என்று தனக்குத்தானே சொல்லி ஆசுவாசப்படுத்தி கொண்டவளுக்கு, ‘அப்படி தெரிஞ்சாதா என்ன? நான் ஏன் பயப்படணும்’ என்று தன்னை தைரியப்படுத்தி கொள்ளும் போது,
“கனி” என்று நிம்மி தோளில் கை வைத்தார்.
“ஏன் இங்கயே நிற்குற?” என்றவர் கேட்டதும்,
“இல்ல ஒன்னும் இல்லமா” என்ற போதும் அவள் முகம் அப்பட்டமான பயவுணர்வை காட்டியது.
அதனை ஊன்று கவனித்த போதும் நிம்மி எதுவும் கேட்டு கொள்ளவில்லை. “சரி வா… உன் க்ளேஸ காட்டுறேன்” என்று அழைத்து சென்றவர்,
“ஸ்கூல இருக்கும் போது மட்டும் என்னை மேடம்னு கூப்பிடு” என, அவளும் சரியென்றாள்.
நிம்மி அவளை ஐந்தாவது வகுப்பிற்குள் அழைத்து சென்றார். எல்லாமே தனித்தனியாக நின்ற ஒற்றை கட்டிடங்கள். அவளுக்கு அந்த இடம் புதிதில்லை என்றாலும் இப்போது அந்த பள்ளி கட்டிடத்தின் தோற்றம் முற்றிலும் புதிதாக இருந்தது.
பெரும்பாலும் இத்து போன சுவருகளும் உடைந்த பெஞ்சுகளும் பெயர்ந்த கரும்பலகைகளாகதான் இருக்கும். அவள் படிக்கும் போது அப்படித்தான் இருந்தது. கழிவறைகள் இருந்தாலும் அது பயன்படுத்தக் கூடிய நிலையில் இருக்காது. பெரும்பாலும் பள்ளி கட்டிடத்திற்கு பின்னே இருக்கும் மரங்களின் அருகேதான் அவர்கள் சிறுநீர் கழிப்பது எல்லாம்.
ஆனால் இப்போது இருக்கும் பள்ளி கட்டிடத்தை கனி வியப்படங்காமல் பார்த்தாள். வாயிலில் இருந்த அறிவிப்பு பலகையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சிறப்பாக செயல்படும் மாணவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.
அதுவும் ஒவ்வொரு வகுப்பறையும் மிக சுத்தமாகவும் சுவர்களில் பாடம் சம்பந்தப்பட்ட ஓவியங்கள் திருக்குறள்கள் மற்றும் வாய்ப்பாடு சுவரொட்டிகள் என்று அத்தனை கட்டுக்கோப்பாகவும் சுத்தமாகவும் பராமறிக்கப்பட்டிருந்தன.
நான்காம் வகுப்புகளில் நுழைந்த போது ஒவ்வொரு ஆங்கில எழுத்தின் ஒலிக்கு நிகரான தமிழ் எழுத்துக்கள் வரிசையாக சார்ட்களில் எழுதி ஒட்டப்பட்டிருந்தன. இதனால் மாணவர்களுக்கு ஆங்கில எழுத்தும் அதன் உச்சரிப்பும் மிக இலகுவாக மனதில் பதியும்.
மாணவர்கள் உட்காரும் பெஞ்சுகளும் ஓரளவு நன்றாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேல் கழிப்பிடம் சுத்தமாக இருந்தது. இதெல்லாம் நிச்சயமாக அரசாங்கத்தால் மட்டும் நடக்க வாய்ப்பே இல்லை. பெரும்பாலும் நகரத்து பள்ளிகூடங்களில் கிடைக்கும் சலுகைகளில் கால்வாசி கூட கிராமப்புற பள்ளிகளில் கிடைப்பதில்லை.
நகர்புறங்களில் கூட பொருளாதார ரீதியாக மேல்மட்டத்தில் இருக்கும் ஏரியா பள்ளிகளில் கிடைக்கும் சலுகைகள் அடிமட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு சென்று சேர்வதில்லை.
அந்தளவு ஏற்றதாழ்வு மிகுந்த சமூகம் நம்முடையது. ஒரு வேளை இதெல்லாம் நம்முடைய கிராமப்புற பள்ளிகளில் சாத்தியம் என்றால் அது அங்கு தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் முயற்சித்து செய்தால்தான் உண்டு. அது கூட இவ்வளவு சிறப்பாக முடியுமா என்பது கேள்விகுறிதான்.
நிம்மிதான் இவை அத்தனைக்கும் காரணம் என்பது சந்தேகமின்றி கனிக்கு தெரிந்தது. இன்னும் இன்னும் அவர் மீதான் மதிப்பு கூடியது.
மேலும் நிம்மி கனியை அழைத்து சக ஆசரியர்கள் மற்றும் இரண்டு துப்பரவு பணியாளர்கள், சத்துணவு சமைப்பவர் என அங்கு பணிபுரியும் அனைவரையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதற்கு பிறகு பள்ளி தொடங்கி தமிழ் தாய் வாழ்த்தி பாடி முடிந்து வகுப்புக்கள் தொடங்கின.
ஒரளவு கணிசமான அளவில் அவள் வகுப்பில் மாணவர்கள் இருந்தார்கள். முதல் நாள் அறிமுக படலமாகவும் மாணவர்களின் மனநிலையையும் அவர்களின் அறிவுதிறனையும் புரிந்து கொள்வதற்காக ஒரு தாளை எடுத்து அவர்களின் லட்சியம் பற்றி சில வரிகள் எழுத சொன்னாள்.
அதன் அறிவுபூர்வமான சில விளையாட்டுக்கள் பேச்சுக்கள் என்று அந்த மாணவர்களை முழுவதுமாக புரிந்து கொள்ள செலவிட்டாள். இப்படியாக அன்றைய நாள் சுமுகமாக கழிய, மணியடித்து மாணவர்கள் சென்ற பின் அவர்கள் எழுதி தந்த தாள்களை பிரித்து படிக்கலானாள் .
தப்பும் தவறுமாக எழுதி இருந்தாலும் கூட ஒவ்வொருவரிடமும் தெளிவான சிந்தனைகளும் நோக்கங்களும் இருந்தன. அது இருந்தால் போதும். அவர்களை எப்படியாவது வழிக்கு கொண்டு வந்துவிடலாம்.
அப்போது அந்த வகுப்பை சுத்தம் செய்ய வந்த துப்பரவு பணியாள பெண்மணி, “கிளம்பலயா மிஸ்” என்று விசாரிக்க,
“மேடம் வந்ததும் போகணும்” என்றவள் பதிலளிக்க, அவர் துடைப்பத்தை தட்டி துப்பரவு செய்து கொண்டே,
“எந்த ஊரு மிஸ் நீங்க?” என்று விசாரித்தார். அந்த கேள்வி சட்டென்று அவள் தொண்டையை அடைத்தது.
அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பதை பார்த்து, “மிஸ்… உங்களைத்தான்… எந்த ஊருன்னு கேட்டேன்” என்று சத்தமாக கேட்கவும்,
“இதே ஊர்தான்” என்றாள்.
“இதே ஊரா… நான் உங்களை பார்த்ததே இல்லையே”
“பிறந்தது எல்லாம் இங்கேதான்… ஆனா என்னை மெட்ராஸ்ல கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க… பதினாறு பதினேழு வருஷம் கழிச்சு இப்பதான் வேலை மாத்தலாகி திரும்பியும் இங்கே வரேன்”
“அப்படியா… அப்போ உங்க அம்மா அப்பா?” என்று கேட்டு கொண்டிருக்கும் போதே நிம்மி வந்து நின்றார். “கனி கிளம்பலாமா?” என்று கேட்டு கொண்டு.
கனிக்கு அப்போதுதான் மூச்சே வந்தது. ‘என்ன ஆளுங்க நீங்க’ என்ற கேள்வி வருவதற்கு முன்பாக அங்கிருந்து அகன்றுவிட்டாள் நல்லது என்று தோன்றியது.
உடனடியாக, “போலாம் மேடம்” என்று தன் பையை எடுத்து கொண்டு அவள் வெளியேற,
“வள்ளி… பெருக்கிட்டு கிளேஸ் ரூம் எல்லாம் மறக்காம பூட்டிடு” என்று விட்டு அவரும் வெளியே வர கனி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒரு வழியாக அவருடன் வீட்டிற்கு போய் சேர்ந்துவிட்டாள்.
ஆனால் எத்தனை நாளைக்கு இப்படி ஓடி ஒளிய முடியும். நிச்சயமாக அவளை பற்றி உண்மை விரைவில் தெரியத்தான் போகிறது. அப்படி தெரிந்த பிறகு ஊர்காரர்கள் சாதாரணமாக எடுத்து கொள்வார்களா அல்லது பிரச்சனை செய்வார்களா? ஒரு வேளை பிரச்சனை செய்தால் அதனை எப்படி தனியாக சமாளிக்க போகிறோம். இப்படியாக அவள் மூளை யோசித்து யோசித்து குழம்பியது.
ஆனால் அவள் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை.
அடுத்த வந்த ஒரு வாரம் சுமுகமாக கழிந்துவிட்டது. ஒரளவு மாணவர்களுடன் அவள் நன்றாகவே பழகிவிட்ட போதும் சிலர் கொஞ்சம் எடக்கு முடுக்கு செய்யும் மாணவர்களாக இருந்தனர். ஏற்கனவே இது போன்ற அனுபவம் அவளுக்கு முந்தைய பள்ளியிலேயே இருந்ததால் அவர்களை சமாளிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நினைத்தாள். ஆனால் அதுதான் அவளை பெரிய வம்பில் மாட்டிவிட்டது.
ஒன்றிரண்டு ஆண்களை அல்ல, ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்தையுமே ஆளுமை மற்றும் அறிவான ஆணை தேர்ந்தெடுக்கும் பெண்ணின் மரபணு வேட்டை குணம் அச்சுறுத்தியது.

Quote from sembaruthi.p on June 28, 2022, 6:30 PMநிம்மி ம்மா உங்களுக்கு இப்படி ஒரு சோக பிளாஷ்பேக் குடுத்துட்டாங்க மோனிஷா..
என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம் கனி..
நிம்மி ம்மா உங்களுக்கு இப்படி ஒரு சோக பிளாஷ்பேக் குடுத்துட்டாங்க மோனிஷா..
என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம் கனி..
Quote from Thani Siva on June 28, 2022, 6:53 PMதம்பதிகளுக்கு எவ்ளோ மனகஷ்டம் அதை அவர்கள் மறைத்து சந்தோசமா வாழப்பழகிட்டார்கள்
தம்பதிகளுக்கு எவ்ளோ மனகஷ்டம் அதை அவர்கள் மறைத்து சந்தோசமா வாழப்பழகிட்டார்கள்
Quote from Marli malkhan on May 7, 2024, 1:16 AMSuper ma
Super ma