மோனிஷா நாவல்கள்
Paruvameithi - 21
Quote from monisha on July 7, 2022, 4:36 PMஜனிக்கும் போது எல்லா கருவுமே பெண்பாலாகத்தான் இருக்கிறது. அதனால்தான் மரபணு ரீதியாக ஆண் என நிர்ணயிக்கப்பட (45 X குரோமோசோம் + 1 ஒரே ஒரு Y குரோமோசோம்) குழந்தைகளுக்கு மார்பகங்கள் முளைக்கின்றன.
இந்த மார்பகங்கள் ஆணின் உடம்பில் அவசியமற்ற அம்சங்கள்தான் என்றாலும், அவர்கள் பெண்ணாக ஜனித்ததற்கு அவை ஓர் அடையாளம்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் எல்லா வித்தியாசத்துக்கும் காரணமே டெஸ்டோஸ்டிரோன்தான்! இதன் ஆண்மைப்படுத்தல் படலம், சிசுவின் எல்லா திசுக்களிலும் அமலாகிறது.
தோலின் மென்மை, நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மை, தசைகளின் திண்மை, எலும்புகளின் நீளம், குரல் எலும்பின் அகலம், சிவப்பணுக்களின் எண்ணிக்கை, நுரையீரலின் கொள்ளளவு, இனப்பெருக்க உறுப்புகளின் அமைப்பு என்று எந்த திசுவும் விட்டு வைக்கப்ப்படாமல் மொத்த உடம்பும். இதில் முக்கிய மாற்றம் மூளைக்குள் ஏற்படுவதுதான்.
ஒரு சராசரிப் பெண் தான் செய்யும் எல்லா வேலைகளையுமே சுமாராக செய்தால் போதும் என்று திருப்திப்படுவாள் – சமையல் சுமார், விவசாயம் சுமார், விலங்கு பராமரிப்பு சுமார், வீட்டு நிர்வாகம் சுமார் என்றாலும் அவளுக்கு சந்தோஷமே
ஆனால் வெறும் சுமார் செயல்பாடெல்லாம் ஆணுக்குத் திருப்தி தராது. சின்ன வட்டத்தினுள் ஆழ ஊடுருவி, வேட்டை வேட்கை நிறைந்த, முந்தியிருக்க முயலும் அவன் போக்கு அவனை மேலும் போராடி முன்னேற தூண்டுகிறது. அதனால் ஒரே சிந்தனையில் ஈடுபட்டு, அந்த சிந்தனை வேட்டையில் சந்தோஷம் கொண்டு முந்திக்கொண்டே போனான்.
தொடரும்...
21
தன் பிறந்த ஊருக்கு வாழாவெட்டியாக போகக் கூடாது என்ற எண்ணிய கன்னிகை இறுதியில் கணவனை இழந்த விதவையாக திரும்ப வேண்டியிருந்தது. ஆனால் ஊருக்கு திரும்பிய பிறகு நடந்த எதுவும் அத்தனை உவப்பாக இல்லை.
அவளின் தமையன் காசிக்கு திருமணமான விஷயமே அப்போதுதான் தெரிந்திருந்த நிலையில் அவர்களுக்கு ஐந்து மாத குழந்தை வேறு இருந்தது. இதெப்படி சாத்தியம் என்று அவளுக்கு புரியவே இல்லை.
அதுவும் அவளுக்கு திருமணமாகியே ஒரு வருடம் முடிந்திருக்காத நிலையில்…
“எனக்கு கல்யாணம் பண்ணி அனுப்புன கையோட மொத்தமா என்னை தலைமுழுகிட்டீங்களா? நான் என்னம்மா பண்ண உங்களுக்கு” என்று கனி தன் அம்மாவிடம் பொறுமினாள்.
“இங்க நடந்த கூத்தெல்லாம் உனக்கு தெரியாது கனி” என்று சாந்தி நடந்த விஷயங்களை எல்லாம் மகளிடம் விவரிக்கலானார்.
“உனக்கு கல்யாணம் ஆன அடுத்த வாரமே… உங்க அண்ணன் பக்கத்து ஊர்ல இருந்து இவளை இழுத்துக்குன்னு வந்துட்டான்… வரும் போதே மகராசி வயித்த தள்ளினுதான் வந்தா… இதுல அந்த பொண்ணு வேற சாதி” என்று நிறுத்தி குரலை தாழ்த்தி அவள் சாதியை குறிப்பிட்ட போது,
“என்னம்மா சொல்ற?!” கனி அதிர்ந்தாள்.
“ஆமா கனி… எங்க எல்லோருக்கும் வெலவெலத்து போச்சு… என்ன பண்றதுன்னே தெரியல… இரண்டுத்தயும் துரத்தி விடவும் முடியல… விசயம் மட்டும் வெளியே தெரிஞ்சுதுனா உங்க அண்ணனை துண்டு துண்டா வெட்டி கூறு போட்டுடு வானுங்க
எங்கயாச்சும் வெளியூர் அனுப்பி விட்டிருலாம்னு பார்த்தா தம்புடி காசு இல்லாம… பிள்ளைதாச்சி பொண்ணை வைச்சிட்டு எப்படி பிழைப்பானோன்னு யோசிச்சு இங்கே நம்ம குல தெய்வ முன்னாடி ஒரு மஞ்ச கயறு கொடுத்து தாலி கட்ட வைச்சுட்டோம்… நம்மாளுங்க தவிர ஊருக்குள்ள யாருக்கும் இந்த விசயம் தெரியாது… அன்னைல இருந்து இந்த பொண்ணை நம்ம வூட்டுக்குள்ளயே மறைச்சு வைச்சிருந்தோம்” என்றதும் அதிர்வுடன் பார்த்தவள், “மறைச்சு வைச்சிருந்தீங்கனா? எத்தன நாளைக்கு” என்று வினவ,
“அந்த புள்ளை குழந்தை பெத்து எடுக்கிற வரைக்கும்” என்றார். கனிக்கு தலையே சுற்றியது.
“எப்படி ம்மா?”
“நிமிசத்துக்கு நிமிசம் செத்து செத்து பிழைச்சோம்டி… அந்த புள்ளய விட்டு அங்கிட்டு இங்கிட்டு என்னால நவுற முடியல கனி… அதான் உன்னை வந்து பார்க்க கூட முடியல”
அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு வந்தால் அங்கொரு கொடுமை ஜிங்கு ஜிங்கு என்று ஆடி கொண்டிருந்ததாம். தன் நிலைமையை விட இவர்கள் நிலைமை படுமோசமாக இருக்கு போல.
கனி தன் தாயிடம், “சரி இப்போ என்னதான் ஆச்சு… பிரச்சனை முடிஞ்சுதா இல்லயா?” என்று கேட்க,
“இரண்டு மாசம் முன்னாடி ஊருக்குள் விஷயம் தெரிஞ்சு பெரிய வம்பாயிடுச்சு… இனிமே உங்க அப்பாவை வெட்டியான் தொழில் பார்க்க கூடாதுன்னு சொல்லி புட்டாங்க”
“அட கடவுளே!”
“மனுஷன் உடைஞ்சு போயிட்டாரு… அப்புறம் ஊர்காரங்க காலில எல்லாம் விழுந்து மன்னிப்பு கேட்ட புறவுதான் போனா போகுதுன்னு… சுடுகாட்டுல பிணத்தை வேணா எரிக்கலாம்… ஆனா ஊருக்குள் மட்டும் வர கூடாதுன்னுட்டாங்க” நடந்ததை கேட்ட கனியின் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடிற்று. ஈனமானமில்லாத இப்படியொரு வாழ்க்கையை வாழ வேண்டுமா? சை! அவள் உள்ளுர பொறுமி கொண்டிருந்தாள்.
சாந்தி தொடர்ந்தார். “கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்துச்சு… உங்க அண்ணி வீட்டுல எப்படியோ உங்க அண்ணனை மன்னிச்சுட்டாங்க… அப்புறம் அவன் வெட்டியான் தொழில் செய்ய கூடாதுன்னு கடன் போட்டு ஒரு லோட் வண்டி ஏற்பாடு பண்ணி கொடுத்திருக்காங்க… சாராய காயச்சிற புழைப்ப எல்லாம் வுட்டுட்டு இப்பதான் உங்க அண்ணன் பொறுப்பா இருக்கான்
இந்த ஒரு மாசமாதான் கொஞ்சம் நிம்மதியா மூச்சு விடுறோம் … அதுக்குள்ள நீ இப்படியொரு நிலைமைல வந்து நிற்குற… நாம கும்பிடுற சாமிக்கு அப்படி என்ன நாம மேல கோபமோ தெரியல… சோதனை மேல சோதனையா கொடுத்திட்டு இருக்கா”
சாந்தியின் புலம்பலையும் வேதனையையும் கேட்டிருந்த கனி இதற்கு மேல் தான் அனுபவித்த வலிகளை வேறு அவர்களிடம் பகிர்ந்து சிரமப்படுத்த வேண்டாமென்று எண்ணி கொண்டாள்.
இந்நிலையில் அங்கே வந்த நாளிலிருந்து காசியின் மனைவி ஜெயந்திக்கு கனியை கண்டாலே பிடிக்கவில்லை. அது அவளின் பார்வையிலும் ஒவ்வொரு செயலிலும் தெரிந்தது.
ஒரு நாள் அழுது கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை கனி தூக்கி சமாதானம் செய்யவும், ஜெயந்தி வெடுக்கென்று அவளிடமிருந்து குழந்தையை பிடுங்கி கொண்டு சென்றுவிட்டாள்.
ஏனென்று கனிக்கு புரியவில்லை. உடனடியாக சாந்தியிடம் வந்து நடந்தவற்றை கூற,
“உன்னை இல்ல… உங்க அப்பாவை கூட அவ புள்ளைய தூக்க விடுறது இல்ல… நானும் குழந்தைக்கு உடம்பெல்லாம் ஊத்துறதோட சரி” என்றார்.
“ஏன்மா அப்படி? நீங்க என்ன பண்ணீங்க… இன்னும் கேட்டா அவங்கள கூட இருந்து பார்த்துக்கிட்டது நீங்கதானே”
“அதெல்லாம் வந்த புதுசல நல்லாத்தான் இருந்துச்சு… எப்போ அவங்க அம்மா அப்பா கூட சமாதானம் ஆச்சோ அப்பத்துல இருந்துதான் இபப்டி”
“அதுக்கு எதுக்கு இங்கே இருக்கிறது… அண்ணனையும் கூட்டிகிட்டு அவங்க அம்மா வீட்டுல போய் இருந்துக்க வேண்டியதுதானே” என்று கனி கடுப்புடன் கூற,
“அப்படியும் செய்ய முடியாது… அதுலயும் பிரச்சனை இருக்கு… அவங்க இவங்கள மன்னிச்சிட்டாங்க… ஆனா ஏத்துக்கல… இவங்கள ஏத்துக்கிட்டா அவங்க சொந்தகாரங்க எல்லாம் அவங்கள தள்ளி வைச்சிருவாங்களாம்… பேத்தியை பார்க்கணும்னா ஏதாச்சும் ஆளவிட்டு சொல்லி அனுப்பு வாங்க… இவ புள்ளைய தூக்கினு அவங்க சொல்ற இடத்துல போய் காட்டிட்டு வருவா” என்றார்.
கனிக்கு இந்த கதையெல்லாம் கேட்க கேட்க எரிச்சலாக வந்தது. முக்கியமாக அண்ணியுடன் சுத்தமாக ஒத்து போகவில்லை. ஏதாவது சண்டையும் சச்சரவும் நிகழ்ந்து கொண்டே இருந்தது.
இரவு அண்ணன் வீட்டிற்கு வந்ததும் அண்ணிக்காரி இவளை பற்றி வத்தி வைக்க, “புருஷனை இழந்துட்டு வந்திருக்குது பாவம்… நீதான் கொஞ்சம் அனுசரிச்சு போயேன்” என்று விட்டான். அவ்வளவுதான்.
“நான் என் பெத்தவங்கள எல்லாம் விட்டு நீதான் முக்கியம்னு வந்திருக்கேன்… ஆனா உனக்கு உன் குடும்பதான் முக்கியம் இல்ல… நான் இப்பவே என் புள்ளய தூக்கிட்டு வீட்டை விட்டுட்டு போறேன்” என்று குழந்தையை தூக்கி கொண்டு வெளியேற, அண்ணன் அப்பா அம்மா எல்லோரும் அவள் காலில் விழாத குறையாக கெஞ்சி சமாதானம் செய்து அந்த பிரச்சனையை முடித்து வைத்தனர்.
அந்தச் சம்பவத்திற்கு பிறகு என்ன நடந்தாலும் யார் தப்பு செய்திருந்தாலும் கனிக்குதான் அறிவுரை வழங்கப்பட்டது. அவள்தான் குற்றவாளி ஆக்கப்பட்டாள்.
இதெல்லாம் பெண்களின் அவல நிலை. இந்த சமுதாயம் சூட்டும் வாழாவெட்டி விதவை என்ற பட்டம் கொண்டவர்களுக்கு புகுந்த வீடும் சொந்தமில்லை. பிறந்த வீடும் சொந்தமில்லை.
பிறந்த வீட்டில் தன்னுடைய நிலையை தெளிவாக புரிந்து கொண்ட கனி தேவை இல்லாமல் அண்ணியுடன் பிரச்சனை வைத்து கொள்ள வேண்டாமென்று ஒதுங்கி இருந்தாள்.
ஆனால் விதி அவளை விடாமல் துரத்தி கொண்டிருந்தது. என்றுமில்லாத திருநாளாக அன்று காசி கனியிடம் வந்து, “உங்க அண்ணி நடந்துக்கிறதை எல்லாம் நீ ஒன்னும் மனசுல வைச்சுக்காதே” என, அவள் ஆச்சரியமானாள்.
ஏதோ சிறுவயதில் சேர்ந்து விளையாடியதோடு சரி. வளர்ந்த பிறகு தமையன் தங்கை உறவெல்லாம் அவர்களுக்கு இடையில் இருந்ததே இல்லை.
எப்போதும் அரை போதை நிலையிலிருக்கும் அண்ணினிடம் அவளுக்கு பெரிதாக மதிப்பும் இல்லை. அன்பும் இல்லை. இதென்ன புதிதாக இன்று இப்படி பவ்வியமாக பேசுகிறான் என்று யோசிக்கும் போதே காசி மெல்ல மெல்ல தான் பேச வந்த விஷயத்திற்கு வந்தான்.
“டவுன்ல சந்திரன் ட்ரேடர்ஸ் கடைலதான் டைல்ஸ் லோர்ட் அடிப்பேன்… யாருமே எனக்கு லோர்ட் கொடுக்காத போது அவர்தான் எனக்கு உதவினாரு”
“இப்ப எதுக்கு இதெல்லாம் என்கிட்ட சொல்ற”
“விஷயத்தை கேளு கனி” அவள் அமைதியாக அவனை பார்க்க
“அவர் கூட உன்னை மாதிரிதான்… பாவம் இரண்டு வருஷம் முன்னாடி பொண்டாட்டி இறந்துட்டாங்க” என்றதும் கனிக்கு புரிந்துவிட்டது.
“இதோட நிறுத்திக்கோ… நீ எங்க வர்றனு எனக்கு புரிஞ்சிடுச்சு… எனக்கு இரண்டாவது கல்யாணம் எல்லாம் வேண்டாம்” என்றவள் முடிவாக சொல்லிவிட்டு நகர்ந்துவிட,
“கனி நான் சொல்றதை கேளு” என்று காசி அவளை சம்மதிக்க வைக்க எவ்வளவோ முயன்றும் நடக்கவில்லை.
அதன் பின்பு வீட்டில் அடுத்த பிரச்சனை வெடித்தது.
ஜெயந்தி மாமியாரிடம், “ஏன் உங்க பொண்ணு… கல்யாணத்துக்கு சம்மதிச்சா என்னவாம்… காலம் பூரா அவளுக்கு நாங்க தண்டச்சோறு போடணுமா?” என, அதனை கேட்ட கனிக்கு அவமானமாக இருந்தது. இரவெல்லாம் தனியாக அழுதாள்.
அழுது கொண்டிருந்த மகளை பார்த்த சாந்தி எழுந்து வந்து அருகில் அமர்ந்தபடி, “இந்த அவமானமெல்லாம் உனக்கு தேவையா… பேசாம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடுமா… அண்ணன் சொன்னதை எல்லாம் பார்த்தா நல்ல வரன்தான்” என்று பேசி பேசி ஒருவாறு அவளை சம்மதிக்க வைத்துவிட்டார்.
“அவங்களும் ஆதிதிராவிடர்தான்… ஆனா என்ன... அவங்க குடும்பத்துல அரசியல இருக்காங்க… நல்ல சொத்து” என்று மாப்பிளையின் சொத்து மற்றும் பதவி பற்றி எல்லாம் விவரித்த தமையன், அவனுக்கு முப்பத்து எட்டு வயதாவதையும் பன்னிரண்டு வயதிலும் பத்து வயதிலும் இரண்டு குழந்தைகள் இருப்பதையும் சொல்லவில்லை.
திருமணத்திற்கு முந்தைய நாள்தான் அவளுக்கு இந்த விவரங்கள் எல்லாம் தெரிந்தன. அதேநேரம் இந்த திருமணம் அவள் மீதான அக்கறையின் பெயரில் எல்லாம் நிகழ்த்தப்படவில்லை. அண்ணனின் வேலையும் வியாபாரமும் செழிக்க இப்படியொரு மனிதனின் ஆதரவு தேவையாக இருந்தது.
இந்த திருமணம் நடந்தால் ஒரு வேளை அவன் வாழ்க்கை செழிக்கலாம். ஆனால் அவள் வாழ்க்கை என்னவாகும். பத்தொன்பது வயதில் பன்னிரெண்டு வயது பிள்ளைக்கு தாயாக வேண்டும். தன்னை விட இருபது வயது மூத்தவனுக்கு தாரமாக வேண்டும்.
தன் பெற்றோர்கள் கூட தன் நிலைமையிலிருந்து யோசிக்கவில்லை என்பதைதான் அவளால் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை.
மாப்பிள்ளை வீட்டின் குலதெய்வ கோவிலில் எளிய முறையில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விடியற்காலை திருமணம்.
எப்படி யோசித்தாலும் இந்த திருமணத்தை செய்து கொள்ள அவள் மனம் ஒப்பவில்லை. அப்படி இந்த திருமணம் நடந்துவிட்டால் அவளுக்கென்று ஒரு வாழ்க்கையே இல்லாமல் போய்விடலாம்.
எது கொடுத்த தைரியாமோ? அண்ணன் பர்ஸிலிருந்த பணத்தை எடுத்து கொண்டு இரவோடு இரவாக யார் கண்களிலும் படாமல் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டாள்.
விடியற்காலை புறப்பட்ட பேருந்தில் ஏறி சென்னை வந்தவளுக்கு அங்கிருந்த ஒரே போக்கிடம் பிரபுவின் வீடுதான். அவர்களை தேடி வந்த போது வீட்டை காலி செய்துவிட்டதாக தகவல் கிடைத்து என்ன செய்வதென்று புரியாமல் அவள் நடுவீதியில் தவித்து நின்றிருந்த போதுதான் காயத்ரியை பேருந்து நிறுத்தத்தில் கண்டாள்.
அப்போதுதான் அவளுக்கு மூச்சே வந்தது. “காயு” என்று அவளிடம் ஓடி செல்ல,
“அண்ணி… இங்கே எங்கே நீங்க” என்று அவளை கண்டதும் வியப்புற்றாள் காயத்ரி.
“அது… நம்ம வீட்டுக்குதான் வந்தேன்… வீடு காலி பண்ணிட்டதா சொன்னாங்க”
“ஆமா அண்ணி… அந்த வீட்டை காலி பண்ணிட்டு பழைய குடித்தன வீட்டுக்கு வந்துட்டோம்… இப்போ மேலே போர்ஷன்” என்றவள் தெரிவித்து விட்டு பின் வருத்தத்துடன்,
“அண்ணன் போன பிறகு… வீட்டுல நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு… அப்பா எங்கேயோ சொல்லிக்காம கொல்லிகாம போயிட்டாரு… நான் நைட்ல தனியா இருப்பேன்னு பயத்துல அம்மாவும் பழைய வேலைய விட்டாங்க” என்று பெருமூச்சுடன் சொல்லி டிக்கும் போது பேருந்து வந்து நிற்க,
“பஸ் வந்திருச்சு… சரி சரி நீ போ” என்று அவளை அனுப்பிவிட்டு கனி அம்பிகாவை பார்க்க வீட்டிற்கு வந்தாள். அவள் வாயிலில் வந்து நின்றதை பார்த்ததும் அம்பிகா திகைப்புற்ற அதேநேரம்,
“வா… உள்ளே வா… தனியாவா வந்த” என்று விசாரித்தார்.
“ஆமா அத்தை… தனியாதான் வந்தேன்… எனக்கு வேற எங்க போறதுன்னு தெரியல” என்றவள் அம்பிகாவிடம் நடந்தவற்றை கூற அவர் அதிர்ச்சியடைந்தார்.
கனி மேலும் அவர் கரத்தை இறுக பற்றி கொண்டு, “என்னை போன்னு சொல்லிடாதீங்க அத்தை… நான் இனிமே உங்க கூடவே இருக்கேன்… வீட்டு வேலை எல்லாம் செஞ்சி தர்றேன்… ஏதாவது வேலைக்கு கூட போறேன் அத்தை” என்று கெஞ்சினாள்.
அம்பிகாவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அவளை எவ்வளவோ அவமானப்படுத்தியும் மட்டம் தட்டியும் இருக்கிறார். அப்படி இருக்கும் போது அவள் தன்னை நம்பி வந்திருப்பது எப்படி என்று அவருக்கு புரியவில்லை.
அதேநேரம் யாராவது கை கொடுக்க மாட்டார்களா என்று அவருமே தவித்திருந்த நிலையில், கனி வந்து உடனிருக்கிறேன் என்றது உண்மையில் ஆறுதலாகதான் இருந்தது.
அம்பிகாவும் தான் வேலை செய்து கொண்டிருந்த எக்ஸ்போர்ட் கம்பெனியில் கனியையும் வேலைக்கு சேர்த்துவிட்டார். அன்றிலிருந்த கனியின் வாழ்க்கை நிறையவே மாறியது. நிறையவே தன்னை மாற்றியும் கொண்டாள்.
பிறர் தயவில் வாழ கூடாது என்று முடிவெடுத்தாள்.
இந்த நிலையில்தான் படிப்பை முடித்த கையோடு காயத்ரி சொல்லாமல் கொள்ளாமல் தான் காதலித்தவனை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட, அதுதான் அம்பிகாவின் வாழ்க்கையில் விழுந்த மிக பெரிய அடி.
மகளின் துரோகத்தால் உடைந்து நொறுங்கியவரை கனிதான் மீட்டெடுத்தாள். உறவு முறையை தாண்டி அவர்களுக்குள் ஒரு ஆழமான நெருக்கமும் பிணைப்பும் உருவானது.
கனி அதன் பிறகுதான் படிக்க வேண்டுமென்ற அவளுடைய விருப்பத்தை சொல்ல, அம்பிகா அவளுக்கு உதவினார். அவள் தன் லட்சியத்தை அடைய வழித்துணையாக மாறினார்.
இருவரும் அதன் பிறகு தெரு தெருவாக வத்தல் வடகம் விற்பதில் தொடங்கி தையல் வேலை செய்வது டிபன் கடை நடத்தியது என்று அவர்கள் செய்யாத வேலைகளே கிடையாது. ஆனால் அவர்களின் பொருளாதார நிலையை எதுவும் உயர்த்தவில்லை.
எனினும் அவர்கள் தளரவில்லை. தங்கள் வாழ்வதாரத்திற்காக ஏதாவது ஒன்றை முயன்று கொண்டே இருந்தார்கள். கனி தனது படிப்பை தொடர்ந்தாள். படிப்படியாக முன்னேறினாள். ஒவ்வொரு அடியிலும் பாலியல் சீண்டல்கள் தொடங்கி துரோகங்கள் துயரங்கள் என்று நிறைய சறுக்கல்கள் சிக்கல்களை சமாளித்துதான் அவள் முன்னேறினாள்.
‘எண்ணியது எண்ணியாங்கு எய்துப’ என்பது போல இறுதியாக கனி தான் எண்ணிய இலக்கையும் அடைந்தாள். அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று வேலையையும் பெற்றாள்.
ஆனால் இத்தனை சிரமப்பட்டு அவள் அடைந்த வெற்றியை கூட அவளின் பெற்றோர்கள் அங்கீகரிக்கவில்லை எனும் போது அவர்களை சென்று பார்த்து என்னவாக போகிறது.
ஒரு வேளை அவர்களின் விருப்பப்படி அந்த திருமணத்தை அவள் செய்து கொண்டிருந்தால் இந்த அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெற்றிருக்க முடியுமா? நிச்சயம் முடியாது.
ஆனால் இந்த சமுதாயத்தை பொறுத்தவரை பெண் படித்தாலும் படிக்காவிட்டாலும் திருமணம் ஒன்றுதான் அவளின் இலக்காக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது.
ஏன்? திருமணம் அல்லாத வேறெந்த சாதனையும் சந்தோஷமும் அவள் வாழ்வில் இருக்க கூடாதா? இப்படியாக ஏதேதோ யோசனைகள் கனியின் மூளைக்குள் உருண்டோடி கொண்டிருக்க, வார இறுதி விடுமுறை நாட்களும் நிம்மதி இல்லாமல் போனதுதான் மிச்சம்.
அடுத்த நாள் காலை பள்ளிக்கு புறப்பட்டு தயாரான பிறகு அவளுக்கு மாதவிலக்கு வந்துவிட்டது. ஏற்கனவே எரிச்சலான மனநிலையில் இருந்தவளுக்கு இது இன்னும் கடுப்பை கிளப்பியது.
மீண்டும் குளித்து உடை மாற்றி கொண்டவள் அவள் செய்து வைத்திருந்த இட்லியை ஒரு வாய் கூட உண்ண முடியாமல் அதனை டிபன் பாக்ஸில் கட்டி எடுத்து கொண்டாள்.
நிம்மி அவளை பார்த்ததுமே ஒருவாறு அவளின் மனநிலையையும் உடல் நிலையையும் புரிந்து கொண்டுவிட்டார்.
“நீ பேசாம இன்னைக்கு வீட்டுல இருந்திக்கோ கனி” என்று சொல்ல,
“அதெல்லாம் ஒன்னும் இல்லமா… ஸ்கூலுக்கு வந்து பசங்கள பார்த்துட்டா நான் ஒகே ஆகிடுவேன்” என்றாள்.
ஒரு வேளை அன்று அவள் வீட்டில் இருந்திருந்தால் நடக்கவிருந்த பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். ஆனால் விதியின் தீர்மானத்தை யார் தடுத்து நிறுத்துவது.
பள்ளிக்கு வந்து சேர்ந்ததும் கனி ஓருவாறு சமாளித்து கொண்டுவிட்டாள். ஆனாலும் ஒரு மாதிரி சமநிலை இல்லாத மனநிலையுடனே இருந்தாள்.
உணவு இடைவேளை நேரம். குழந்தைகள் எல்லாம் மைதானத்தில் அங்கேயும் இங்கேயுமாக ஓடி கொண்டிருந்தனர்.
அங்கே வந்த கனி ஓரமாக நின்று அழுது கொண்டிருந்த சின்ன பெண்ணை பார்த்து,
“என்ன ம்மா… ஏன் இங்க நின்னு அழுதிட்டு இருக்க” என்று விசாரிக்க, அவள் பதிலேதும் சொல்லாமல் அழுதபடியே இருந்தாள்.
கனி அவளிடம் குனிந்து, “என்னாச்சு… விழுந்திட்டியா… அடிப்பட்டுடுச்சா?” என்று அன்பாக விசாரிக்க,
“உஹும்” என்றவள் மெல்ல நிமிர்ந்து நோக்கி,
“என் பாவடையை கிழிச்சிட்டான் மிஸ்… என்கிட்ட வேற இல்ல… இது ஒன்னுதான் இருக்கு” என்று தன்னுடைய சீருடையின் கிழிந்த பாகத்தை காட்ட ஒரு கணம் கனிக்கு அவளின் சிறு வயது ஞாபகங்கள் எட்டி பார்த்துவிட்டு சென்றன.
கனி அவள் கண்களை துடைத்துவிட்டு, “நான் உனக்கு இந்த மாதிரி இரண்டு செட் டிரஸ் வாங்கி தர்றேன்… அழ கூடாது… சரியா?” என்று சமாதானம் செய்யவும் அந்த சின்னவளின் அழுகை மட்டுப்பட்டிருந்தது.
கனி மேலும், “ஆமா… கிழிச்சிட்டான்னு சொன்னியே… யார் கிழிச்சது” என்று விசாரிக்க அவள் நிமிர்ந்து சுற்றிலும் தேடலாக பார்த்துவிட்டு, “மிஸ் மிஸ் அந்த பையன்தான்” என்று சுட்டிகாட்டினாள்.
அவள் சுட்டிக்காட்டியது கனியின் வகுப்பு மாணவன்தான். ஐந்தாம் வகுப்பில் இருந்தாலும் அவனுக்கு வயது கூட இருக்கும். வந்த நாளிலிருந்து பார்க்கிறாள் அவன் இப்படி ஏதாவதொரு அடாவடித்தனம் செய்கிறான்.
கனிக்கு அங்கே அவனை பார்த்ததும் சரேலென்று கோபமேற, “நாகராஜ் இங்கே வா” என்று அழைத்தாள்.
அவன் அசையாமல் அப்படியே நின்றிருக்க, “இங்கே வர போறியா இல்லையா?” என்று அவள் மிரட்டவும் அவன் தெனாவட்டாக அவள் அருகே வந்து நிற்க,
“ஏன் டா அந்த பொண்ணோட டிரஸ கிழிச்ச?” என்றதும்,
“நான் கிழிக்கல மிஸ்” என்றவன் அதே தெனவாட்டுடன் பதிலளித்தான்.
ஆனால் அந்த சின்ன பெண், “இல்ல மிஸ் இவன்தான்” என்று அடித்து சொன்ன நொடி அவன் ஆத்திரத்துடன், “ஒத்த… வாயை மூடுறி” என்று எகிறினான்.
கனி நிற்பதை கூட பொருட்படுத்தாமல் அவன் அந்த பெண்ணை நிந்திக்கவும், அவளின் கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது. நிறைய அவளும் இது போன்ற நிந்தனைகளை கடந்த வந்திருக்கிறாள். அதே வார்த்தை ஒரு சிறுவனின் வாயிலிருந்து வரவும் அவளால் தன்னை கட்டுப்படுத்தி கொள்ளவே முடியவில்லை. அவளுக்குள் அடக்கப்பட்டிருந்த பல வருட கோபங்களும் மொத்தமாக திரண்டுவிட்டன.
“என்ன வார்த்தைடா பேசுன?” என்று சீறலாக கேட்டு அங்கேயே அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டாள். அவள் அடித்த வேகத்தில் அவன் கீழே விழுந்துவிட்டான்.
மைதானத்தில் சுற்றி கொண்டிருந்த மாணவர்கள் எல்லாம் அந்த காட்சியை பார்த்து அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டனர்.
ஜனிக்கும் போது எல்லா கருவுமே பெண்பாலாகத்தான் இருக்கிறது. அதனால்தான் மரபணு ரீதியாக ஆண் என நிர்ணயிக்கப்பட (45 X குரோமோசோம் + 1 ஒரே ஒரு Y குரோமோசோம்) குழந்தைகளுக்கு மார்பகங்கள் முளைக்கின்றன.

Quote from chitti.jayaraman on July 7, 2022, 8:15 PMIppo padikira pasamga ippadi dan pesitu irukanumga teachers ku madippu illama pochi, kani oda vazhkai la nimmadi ku idame illa pola pavam
Ippo padikira pasamga ippadi dan pesitu irukanumga teachers ku madippu illama pochi, kani oda vazhkai la nimmadi ku idame illa pola pavam
Quote from sembaruthi.p on July 7, 2022, 11:48 PMஇவன்மேல்ல்லல்ல்லல் ஜாதி காரன் பையனா.. இதனால தான் அடுத்த பிரச்சனையா... கனி இதையும் தாண்டி வருவா.. எங்க ஹீரோவை காட்டவே இல்லை
இவன்மேல்ல்லல்ல்லல் ஜாதி காரன் பையனா.. இதனால தான் அடுத்த பிரச்சனையா... கனி இதையும் தாண்டி வருவா.. எங்க ஹீரோவை காட்டவே இல்லை
Quote from Thani Siva on July 8, 2022, 7:43 PMஎவ்ளோ சின்ன பையன் பேசுவதை பாரு அடிக்காம என்ன பண்ணுவாங்களாம்....
அடித்ததால் இனி பிரச்சனை பெரிதாகும் ....கனி சந்திக்காத பிரச்சனையா ...பாப்போம் அவங்களா...கனியா என...
எவ்ளோ சின்ன பையன் பேசுவதை பாரு அடிக்காம என்ன பண்ணுவாங்களாம்....
அடித்ததால் இனி பிரச்சனை பெரிதாகும் ....கனி சந்திக்காத பிரச்சனையா ...பாப்போம் அவங்களா...கனியா என...
Quote from Marli malkhan on May 7, 2024, 11:03 AMSuper ma
Super ma