மோனிஷா நாவல்கள்
Paruvameithi - 24
Quote from monisha on July 12, 2022, 6:19 PMஅறிவே இல்லாத பெண் ஒரு மோசமான படுக்கைத் துணை மட்டுமல்ல. அவள் ஒரு மட்டமான தாயும் கூட. காரணம் தாய்மை என்பது கற்று கொள்ள வேண்டிய ஒரு குணம்தானே தவிர, தானாக வருகிற சுபாவம் அல்ல. பெண்ணாக பிறந்த ஒரே காரணத்தால் யாரும் பிறவியிலேயே சிறந்த தாய் ஆகிவிட முடியாது.
குழந்தை வளர்ப்பு என்ற கலையைப் பிறரிடமிருந்துதான் கற்று கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் எதையும் உருப்படியாகக் கற்று கொள்ள அறிவு என்ற கருவி வேண்டுமே!
மனித பெண்ணோ தனக்கு அறிவு என்ற ஆற்றல் இருப்பதையே அறியாதவள் ஆயிற்றே! தன்னுடன் உறவு கொள்ளும் ஆணுக்கு பிள்ளையை ஈன்று தருவதை தவிர வேறு எதுவும் அறியாத பெண், எப்படி ஒரு சிறிந்த தாயாக இருக்க முடியும்?
இப்படி ஆண்களும் பெண்களும் சொதப்பிய சொதப்பலில் ஏகபட்ட மூடநம்பிக்கைகள், முறைகேடுகள், முட்டாள்தனமான பழக்கவழக்கங்கள் உருவாகிவிட சிசு மரணமும் தாய் மரணமும் மடமடவென அதிகரித்தது.
ஏராளமான பெண்கள் பிரசவத்திற்கு பிறகு இறந்து போனார்கள். ஒரு வயதை தாண்டுவதற்குள் எத்தனையோ குழந்தைகள் இறந்ததில், மனித ஜனத்தொகை கணிசமாக சரிந்ததில், (Dark Ages) இருண்ட காலம் என்று வரலாற்று யுகமும் வந்தது.
தொடரும்...
24
மாயன் தன் நண்பன் குமரனிடம் பைக் சாவியை தந்துவிட்டு அவனுடைய கார் சாவியை பெற்று கொண்டு, “காரை சாய்ந்திரமா கொண்டாந்து விட்டுட்டு பைக்கை எடுத்துக்கிறேன்டா” என,
“அதெல்லாம் பரவாயில்ல மச்சான்… நீ காலையில கூட கொண்டாந்து வுடு” என்று விட்டு பைக்கை எடுத்து கொண்டு சென்றுவிட்டான்.
காரின் அருகே நடந்த வந்த மாயன் சாலையின் ஓரமாக நின்றிருந்த கனியிடம், “கார்ல ஏறு… கிளம்பலாம்” என,
“நான் உன் கூட வரல… நீ எனக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம்” என்றவள் திருத்தமாக சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள்.
அவன் கைகளை கட்டி கொண்டு, “ஏன் நீ இப்படி சொல்றன்னு எனக்கு புரியுது… நேசிக்கிறேன் காதலிக்கிறேன்னு கண்ட மேனிக்கு உளறானே… இவன் உதவி செஞ்சு… நம்ம அதை ஏத்துக்கிட்டா… இதான் சாக்குன்னு இவன் பாட்டுக்கு நம்ம வாழ்க்கைல நுழைஞ்சி ஏதாச்சும் குளறுபடி பண்ணிடுவானோன்னு பயப்படுற… அதானே” என, தன் பார்வையை அவன் புறம் திருப்பினாள். அவன் சொன்னதை அப்படியே அவள் விழிகளும் பிரதிபலித்தன.
மெல்லிய புன்னகை தவழ்ந்தது அவன் இதழ்களில்…
“நீ பயப்படாதே… அப்படிலாம் நான் செய்ய மாட்டேன்… ஏதோ ஆதங்கத்துல மனசுல கிடந்ததை எல்லாம் உன்கிட்ட கொட்டிட்டேன்… மத்தபடி வேற எந்த மாதிரி நினைப்பும் இப்போ என் மனசுல இல்ல… உன்னை தொல்லை பண்ற எண்ணமும் எனக்கு இல்ல”
அவள் அவனை நம்பாத பார்வை பார்த்தாள்.
“மனுஷனை கொஞ்சமாச்சும் நம்பு” என்றான்.
“நீ பேசுற விதமே எனக்கு பிடிக்கல… என்னால உன்னை நம்ப முடியாது… நிச்சயமா நீ வேற எதுக்கோ அடி போடுற” என்றதும் மீண்டும் அவன் உதடுகள் பிரிந்து பற்கள் பளிச்சிட்டன.
“எதுக்கு அடி போடுறேன்? தெளிவா சொல்லு” என்றவன் கேட்க, அவள் அவனை உருத்து பார்த்தாள்.
“இத பாரு கனி… உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு… இருக்கணும்னா… நான் அதை எப்பவோ செஞ்சி இருப்பேன்… இந்நேரம் நீ என் புள்ளையங்களுக்கு அம்மாவா இருந்திருப்ப” என்றவன் அலட்சியமாக சொல்ல,
“எது?” என்று அவள் குரல் சீறியது. கோபத்தில் பெரிதாகிய அவள் விழிகளை கொஞ்சமும் தயக்கமின்றி நேராக நோக்கியவன்,
“நீ வயசுக்கு வந்த கையோடு எங்க வூட்டுக்கு வந்து… அத்தை… அதான் உங்க அம்மா… சம்பந்தம் பேசுச்சு… நான்தான் நீ படிச்சு முடிக்கணும்னு தள்ளி போட்டேன்
ஏன் அந்த பிரபுவை பேசி முடிக்கிறது முன்னாடி கூட என்னைய உனக்கு கட்டி வைக்கணும்னுதான மாமா முதல சொல்லுச்சு… அப்பவும் வேண்டாம்னு சொன்னது நான்தான்… ஏன் னா எனக்கு தெரியும்… என்னை உனக்கு சுத்தமா பிடிக்காதுன்னு” என்றவன் தெளிவாக பேசினான்.
அவள் கோபம் மட்டுப்பட்டு புருவங்கள் யோசனையுடன் சுருங்கின. அவன் சொல்வதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இப்போது இதை எல்லாம் சொல்வதன் மூலம் அவன் எதை சாதித்து கொள்ள பார்க்கிறான் என்றுதான் புரியவில்லை.
அவளை பார்வையால் அளவிட்டவன், “இத பாரு… நம்ம தனிப்பட்ட பிரச்சனையை அப்புறம் பேசி முடிச்சுக்கலாம்… இப்போ உன் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டணும்… அந்த முடிவு உனக்கானது மட்டும் இல்ல… நம்ம சமூகத்துக்கானது… படிச்சு முன்னேறி வரணும்னு நினைக்கிற நம்மாளுங்களுக்கு நீ ஒரு முன்னுதாரணமா இருக்கணும் கனி
அதுக்கு நீ கண்டிப்பா இந்த ஊர்ல இருக்கணும்… இவையங்க நம்ம மேல காட்டுற அதிகாரத்தையும் தீண்டாமையையும் அடக்கணும்… ஒன்னும் இல்லாம ஆக்கணும்… அப்படி மட்டும் செஞ்சுட்டா… அதுதான் வளர்ந்து வர நம்ம பசங்களுக்கு நாம கொடுக்குற நம்பிக்கை… முக்கியமா உன்னை துரத்தணும்னு நினைக்குறவங்களுக்கு நாம ஏற்படுத்துற பயம்
உண்மையிலேயே இதெல்லாம் நடக்கணும்னு நீ நினைச்சா என் கூட வா… இல்லையா கிளம்பி உன் வழியை பார்த்துட்டு போயிட்டே இரு” என்றவன் தெளிவாக பேசிவிட்டு காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.
அவன் பேசியதை எல்லாம் கேட்ட கனிக்கு அவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் மிக மிக நியாயமாகப்பட்டது. இவர்களின் அதிகாரத்தையும் அடக்கு முறையையும் பார்த்து பயந்து ஓட கூடாது. அப்படி ஓடினால் திரும்ப திரும்ப இவர்கள் துரத்தி கொண்டே இருப்பார்கள்.
மாயன் சொன்னது போல எதிர்த்து நின்று போராட வேண்டும். தனக்கு நேர்ந்த அவமானங்களை இனி வரும் நம் சந்ததிகளுக்கு நாம் நடக்கவிட கூடாது. அதற்காகவாவது இவர்கள் எதிர்த்து நிற்க வேண்டும். நின்று காட்ட வேண்டும்.
போராடிதான் பார்ப்போமே! ஒரு ஓரத்தில் கொஞ்சமாக அவன் மீது நம்பிக்கை பிறந்தது.
அப்படி எங்கேதான் கூட்டி செல்கிறான்… பார்ப்போமே என அமைதியாக காரின் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அவனிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் வேண்டாமென்று அவள் அமைதியாக வர, அவனுமே அந்த அமைதியை கடைபிடித்தான்.
சில நிமிட தூரங்களில் கனியின் கண்கள் சொருகி கொண்டு வரவும் அவள் அபப்டியே சாய்ந்த மேனிக்கு உறங்கிவிட்டாள். வண்டியை ஓட்டி கொண்டே அவளை திரும்பி நோக்கியவனுக்கு அவனின் வலி நிறைந்த பால்ய காலங்கள் நினைவுகளில் எழும்பின.
“அப்பா இன்னைக்கு ஸ்கூல் இருக்கு பா… நான் போகணும் பா”
“ஊருக்குள்ள பெரிய சாவு… நீ போயிட்டா எவன்டா என் கூட பறை அடிப்பான்… த்தூ தேறி… பொழைப்ப பார்ப்பியா… அதை வுட்டுட்டு ஸ்கூலுக்கு போறேன்… மயிருக்கு போறேன்னு…” என்று அவனுடைய புத்தக பையை தூக்கி வீசிவிட்டு பறையை அவன் கையில் திணித்தான் முனியப்பன். மாயனின் தந்தை.
பறையடிப்பதுதான் உன் தொழில். அதுதான் உனக்கான அடையாளம். அது மட்டுமே உனக்கான வாழ்வாதாரம் என்று முனியப்பன் மாயனின் மூளைக்குள் அடித்து அடித்து ஏற்றிய போதும் அவனால் அதனை ஏற்க முடியவில்லை.
அதை எல்லாம் மீறி கொண்டு மாயனுக்கு நிறைய படிக்க வேண்டும் சாதிக்க வேண்டுமென்று கனவுகளும் ஆசைகளும் இருந்தன. ஆனால் அவன் கனவின் மீது முனியப்பன் ஆணிகளை அறைந்து சிலுவையில் ஏற்றிவிட்டார்.
மாயன் குடும்பம் மிகச் சிறியது. அவனும் அவன் பெற்றோர்களும்தான். ஆனால் அவன் வாழ்க்கை போராட்டம் மிக பெரியது. கிடைக்கும் வருமானத்தில் பாதியை கூட முனியன் வீட்டிற்கு கொடுத்ததில்லை. மொத்தமாக குடித்துவிடுவார்.
செவ்வந்தி அன்பான தாய். ஆனால் ஒட்டி உலர்ந்து போன கன்னங்களும் குழி விழுந்து கண்களுமாக நோயுற்ற நிலையில்தான் எப்போதும் காட்சியளிப்பார்.
கையில் பண நடமாட்டம் இருந்தால் போதும். முனியன் குடித்துவிட்டு வந்து மனைவியையும் மகனையும் அடித்து உதைப்பார். அப்படி அடித்து இரண்டு முறை செவ்ந்தியின் வயிற்றிலிருந்த கரு கலைந்து போனது. இன்னும் இன்னும் அவர் உடல் நிலை மோசமானது.
அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மாத்திரைகளுடன் சேர்த்து சத்தான உணவுகளை சாப்பிட சொல்லி அறிவுறுத்தினர். வருமானமே இல்லாமல் சத்தான உணவுக்கு எங்கே போவதாம்.
இதனால் மாயன் பள்ளி முடிந்ததும் டவுனில் இருக்கும் கார் பழுது பார்க்கும் நிலையத்தில் இரவு வரை பணி புரிந்துவிட்டு வார இறுதியில் கிடைக்கும் கூலியில் அம்மாவிற்கு தேவையான மருந்து காய்கறிகளை வாங்கி வருவான்.
இந்த விஷயம் தன் தந்தைக்கு தெரியாமல் பார்த்து கொள்வான். தெரிந்தால் அந்த பணத்தையும் பிடுங்கி கொண்டு போய் குடித்துவிடுவார்.
‘ஸ்கூலுக்கு போறேன்னு ஊர் மேய்ஞ்சிட்டு வரியா டா…” என்று தாமதமாக வீடு வந்து சேரும் மகனை அவர் அடிக்கவும் உதைக்கவும் செய்வார். ஒன்றுமே பேசாமல் அத்தனை அடிகளையும் வாங்கி கொள்வான்.
செவ்வந்தி மகனுக்காக பரிந்து கொண்டு வந்தால் அவருக்கும் செமத்தியாக விழும். முனியன் தூங்கிய பிறகுதான் அந்த வீடே அமைதி கோலம் பூணும். அதன் பின் மாயன் தான் வாங்கிய அடிகளையும வலிகளையும் தூக்கி தூர எறிந்துவிட்டு முகத்தை கழுவி கொண்டு விளக்கை ஏற்றி வைத்து இரவெல்லாம் படிப்பான்.
“கொஞ்ச நேரமாச்ச்சும் தூங்கு ராசா?” என்று செவ்வந்தி அக்கறையாக சொல்ல,
“தூக்கம் வந்தா நானே படுத்துக்கிறேன்மா” என்று அவனால் முடிந்த வரை படிப்பான்.
அவனுடைய கஷ்டங்களை புரிந்து கொண்ட ஆசிரியர் ஒருவர், “நீ எப்படியாவது எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணிடு மாயா… நீ காலேஜ் சேர்ந்து படிக்கிறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்” என்றார். அந்த எண்ணத்தை மனதில் கொண்டு இன்னும் வெறித்தனமாக படித்தான்.
ஆனால் முனியன் அதையும் உள்புகுந்து கெடுத்துவிட்டார்.
தங்களுக்கு நேரும் அவமானங்களை இவர்களை போன்ற வெறிபிடித்த ஆண்கள் தன்னுடைய பிள்ளைகள் மீதும் மனைவியின் மீதும் காட்டு மிராண்டித்தனமாக காட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
“அப்பா இன்னைக்கு எக்ஸாம் பா… ரொம்ப முக்கியமான எக்ஸாம் பா… இன்னைக்கு மட்டும் போயிட்டு வந்துடுறேன் பா” என்று அவன் அவர் காலை பிடித்து கெஞ்சி அழுதான். முனியப்பன் மனம் இறங்கவில்லை.
செவ்வந்தி, “அவன் கஷ்டப்பட்டு படிச்சிருக்கான்யா” என்று கெஞ்சி பார்த்தார். ஆனால் முனியன் அவனை பறையடிக்க அழைத்து செல்வதென்று பிடிவாதமாக இருந்தார்.
செவ்வந்தி ஆத்திரத்தில், “அவன் போகட்டும் விடுயா” என்று கணவனை இழுத்து தள்ளிவிட்டு, “நீ போ ராசா” என்று அவன் புத்தக பையை மாட்டி அனுப்பிவைக்க, முனியனுக்கு வெறிபிடித்து போனது.
அந்த நொடியே அவனுடைய புத்தக பையை பிடுங்கி தீயிட்டு கொளுத்திவிட்டார். அதிலிருந்த தேர்வுக்கான அனுமதி சீட்டும் சேர்ந்து எரிந்து போனது.
மாயன் அந்த நெருப்பை அணைக்க போராட செவ்வந்தி கணவனை சகட்டு மேனிக்கு அடித்தார்.
“அடிங்க தாயோளி” என்று அவர் மனைவியை வெறித்தனமாக தாக்க, மாயன் எவ்வளவோ தடுக்க முயற்சி செய்தான். ஆனால் அவனால் முடியவில்லை.
“முனி அண்ணன்… அண்ணியை போட்டு அடிக்குது போல… நீ போய் என்னன்னு கேளுயா” என்று சாந்தி பதற, “நான் போய் கேட்டா அவன் இன்னும் காட்டாத்தனமா அவங்கள அடிப்பான்… நாம அந்த பக்கம் போவாம இருக்கிறதுதான் நல்லது” என்று கன்னியப்பன் முதற்கொண்டு யாரும் முனியனை எதுவும் கேட்கமாட்டார்கள்.
முனியன் போன்ற காட்டுமிராண்டித்தனமான மனிதர்களுக்கு வெறி பிடித்துவிட்டால் எதற்கும் யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள். மாயானாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
முனியப்பன் அடித்ததில் செவந்திக்கு வலிப்பு வந்துவிட, “பா பா… அம்மாவை அடிக்காத பா… நான் வரேன் பா… நான் உன் கூட வரேன்… அடிக்காதேபா” என்று அழுது கதறி அவர் காலை பிடித்து கொண்ட அந்த இளம் வயது மாயனின் வலியும் வேதனையும் சாதாரணமானது அல்ல.
வலிப்புடன் சாய்ந்து வாயில் நுரைதள்ளி கொண்டிருந்த தாயின் கையில் இரும்பு துண்டை கொடுத்த மாயன் அதன் பின் தன் தந்தையுடன் சென்று பறையடித்தான். தன்னுடைய ஒவ்வொரு வலியையும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் அந்த பறையின் மீது காட்டினான்.
ஆங்காரமாக ஆக்ரோஷமாக அடித்து காட்டினான்.
இறுதி சடங்குகள் முடித்து அன்று தூக்கி சென்று எரிக்கப்பட்ட பிணத்துடன் சேர்த்து படித்து பெரிதாக சாதிக்க வேண்டுமென்ற தன் ஆசைகளும் கருகி வெந்து சம்பலாவதை மாயன் கண் கூடாக பார்த்தான்.
அவனுடைய அத்தனை மோசமான ஏமாற்றங்களுக்கு பிறகும் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிர்பந்தம் இருந்தது. அம்மாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தான் வேலை செய்த மெக்கானிக் ஷெட்டில் நிரந்தரமாக பணியில் சேர்ந்துவிட்டான்.
இதெல்லாம் ஒரு புறமிருக்க செவந்திக்கு கனியை மாயனுக்கு மணம் செய்து வைக்க வேண்டுமென்ற கொள்ளை ஆசை. அதனை எப்போதும் அவனிடம் பிராஸ்திபித்து கொண்டே இருப்பார்.
“கனி புள்ளைய உனக்கு கட்டிவைச்சிட்டா போதும்… நான் நிம்மதியா கிடப்பேன்… வேற ஒன்னும் ஆசை இல்லடா கண்ணு எனக்கு” என்றவர் ஓயாமல் சொல்லி சொல்லியே அவனுக்குள் கன்னிகையின் மீது காதல் மலர்ந்துவிட்டது.
கனியை பார்க்கும் போதெல்லாம் அவன் மனதில் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்கும். அவனுடைய வாலிபம் செழிக்க அவள் மீதான காதலும் செழித்து வளர்ந்தது.
தினமும் கனி பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு அவள் தன் தோழியுடன் பேசி சிரித்து அரட்டையடித்தபடி வருவதை பார்த்து ரசித்து கொண்டு வருவான்.
அவ்வப்போது அவளும் அவனை பார்ப்பது போன்று தோன்றும். ஆனால் ஆந்த பார்வையில் தேங்கியிருக்கும் உணர்வு என்ன என்றுதான் அவனால் பிரித்தறிய முடியாது. முறைச்சிட்டு போறாளா? இல்ல சிரிச்சிட்டு போறாளா? இப்படி அவன் மனதிற்குள்ளாக பட்டிமன்றம் நடத்தி கொண்டிருப்பான்.
அப்படியாக அவனுக்குள் காதல் என்ற காட்டாற்று நதி கட்டுப்பாடில்லாமல் கரைபுரண்டோடிய சமயத்தில்தான் கனி பூப்பெய்தினாள். அவனுடைய உலகமே அழகாய் மாறியது.
என்னவென்று சொல்ல முடியாத ஒரு சந்தோஷ சாரலில் நனைந்தான். அவளுக்காகவே தான் இந்த உலகில் ஜனித்ததாக நினைத்து கொண்டான். அவள்தான் என்னுடைய எல்லாம் என்று ஒரு கனவுலகத்தில் மிதந்தான்.
கனியை தன்னுடைய வருங்கால மனைவியாக கற்பனை செய்து கொண்டவன் ஆசை ஆசையாக அவளுக்கென்று பார்த்து பார்த்து புடவை வளையல் எல்லாம் வாங்கி வைத்தான்.
ஆனால் அவளோ மிக சாதாரணமாக அவன் வாங்கி வந்த புடவையை தூக்கி தூர எரிந்துவிட்டாள். அவன் நொறுங்கி போய் நின்றான்.
அந்த ஏமாற்றத்தை தாங்க இயலாமல் வீட்டின் மூலையில் ஒடுங்கி கிடந்த மகனை கண்ட செவந்தி, “மாயா… கனி உன்னை பிடிக்காம எல்லாம் அப்படி செய்யல… அந்த புள்ளைக்கு படிக்கணும்னு விருப்பம்டா… அதான் எங்க கல்யாணம் பண்ணி வைச்சுட போறாங்குற பயத்துல அப்படி நடந்துக்கிச்சு” என்றதும் அவன் மனம் இதுதான் காரணமா என்று ஒருவாறு சமாதானம் ஆகிவிட்டது.
உடனடியாக பழைய உற்சாகத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தவன், “கனி படிக்கட்டும் மா… அத்தைகிட்ட சொல்லுங்கமா… அவன் என்ன வேணா படிக்கட்டும்… எவ்வளவு வேணா படிக்கட்டும்… அவ படிப்புக்கு ஆகுற செலவை கூட நான் சம்பாதிச்சு தரேன்மா… படிப்பு முடிச்ச பிறகு கல்யாணத்தை பத்தி பேசிக்கலாம்” என்றான்.
மகன் சொன்னதை கேட்டு நெகிழ்ந்து போன செவ்வந்தி அதனை சாந்தியிடம் சொல்லவும்தான் அவர் சமாதானமாகி மீண்டும் கனியை பள்ளிக்கு அனுப்ப சம்மதித்தார்.
இந்நிலையில்தான் கனிக்கும் அருள்மொழிக்கும் பழக்கம் உண்டானது. அவள் பேருந்தில் அவனுடன் சிரித்து சகஜமாக பேசியதை பார்த்த மாயனுக்கு கொதித்தது. பொறாமையில் மனம் எரிந்தது.
அவள் கண்களில் செறிந்த ஈர்ப்பை அருள்மொழியால் உணர முடியாவிட்டாலும் மாயானால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அப்போதுதான் அவளுக்கு தன்னை பிடிக்கவே இல்லை என்பதையும் அவன் அறிந்து கொண்டுவிட்டான்.
அந்த கணமே அவன் தன்னுடைய காதுலுக்கும் கொல்லி வைத்துவிட்டான்.
இருந்தும் அவளை பார்க்கும் போதெல்லாம் சாம்பலாகி போன அவன் காதல் மீண்டும் உயிர்பெற்று எழுந்து கொள்வதை அவனால் தடுக்க முடியவில்லை.
அதுவும் திரும்ப திரும்ப கனி நீ யாரு என்று கேட்டு கண்களிலும் வார்த்தையிலும் வெறுப்பை வாரி இறைக்கும் போது, அவனுடைய காயங்கள் குத்தி கிளறப்பட்டன.
அந்த நிலையில் சிலிர்த்து எழுந்து கொண்ட தன் உணர்வுகளை அடக்க முடியாமல்தான் அவளிடம் காதல் அது இது என்று உளறி கொட்டிவிட்டான்.
இப்போதும் அவளுக்காக அவன் மனம் துடிக்கிறது. தவிக்கிறது. கண்கள் கலங்கி கண்ணீர் பெருக, எதிரே சாலைகள் மங்கியது. அந்த உணர்வில் வழியில் வந்த வேகத்தடையை அவன் கவனிக்காததில் கார் சற்று எம்பி குதித்துவிட்டது.
உறங்கி கொண்டிருந்த கனி நிலைத்தடுமாறி முன்னே சாய போகவும் அவனுடைய கரம் அவள் விழாமல் தடுத்துவிட்டன. அதிர்ச்சியில் விழித்து கொண்ட கனி அவன் கையை அவசரமாக தட்டிவிட்டாள்.
“விழ போன… அதான்” என்றவன் விளக்கம் தரும் போது அவன் விழியில் நின்றிருந்த நீரை அவள் கவனிக்க, அவன் அந்த நொடியே தன் பார்வையை திருப்பி கொண்டான்.
அவளை நேராக பார்க்கும் அவனுடைய ஆழம் மிகுந்த விழிகடலில் துளி கூட முரட்டுத்தனங்கள் இல்லை.
தன் மூளைக்குள் வரித்து வைத்திருக்கும் மாயன் என்ற பிம்பத்திற்கும் அருகே அமர்ந்திருக்கும் இந்த நிஜ ரூபத்திற்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கிறதோ? என்று முதல் முறையாக அவனை பற்றி அவள் யோசித்தாள்.
அறிவே இல்லாத பெண் ஒரு மோசமான படுக்கைத் துணை மட்டுமல்ல. அவள் ஒரு மட்டமான தாயும் கூட. காரணம் தாய்மை என்பது கற்று கொள்ள வேண்டிய ஒரு குணம்தானே தவிர, தானாக வருகிற சுபாவம் அல்ல. பெண்ணாக பிறந்த ஒரே காரணத்தால் யாரும் பிறவியிலேயே சிறந்த தாய் ஆகிவிட முடியாது.

Quote from sembaruthi.p on July 12, 2022, 7:17 PMகனி மாயனை புரிஞ்சிக்க முயற்சி செய்வாளா... மாயன் என்ன பண்ரராருன்னு இன்னும் நீங்க சொல்லல...
கனி மாயனை புரிஞ்சிக்க முயற்சி செய்வாளா... மாயன் என்ன பண்ரராருன்னு இன்னும் நீங்க சொல்லல...
Quote from chitti.jayaraman on July 12, 2022, 7:33 PMMayan enna da ithu ivlo kashtam ah da nalla padichi iruka vendiaya oruthan ah padikama pannitane un appa ah potu thallama vittiye da, avanoda padikira asai um love um nera verama pochi pavam dan kani avanai pathi nee thappana ennathoda dan iruka nu thonudu adai mathikitu avan solra pechai kelu avan unaku thunai un kuda irundu vazhi nadathalam,
Mayan enna da ithu ivlo kashtam ah da nalla padichi iruka vendiaya oruthan ah padikama pannitane un appa ah potu thallama vittiye da, avanoda padikira asai um love um nera verama pochi pavam dan kani avanai pathi nee thappana ennathoda dan iruka nu thonudu adai mathikitu avan solra pechai kelu avan unaku thunai un kuda irundu vazhi nadathalam,
Quote from Thani Siva on July 13, 2022, 6:24 PMகனி மாயனின் நல்ல மறுபக்கத்தை சீக்கிரம் காண்பாளோ??
கனி மாயனின் நல்ல மறுபக்கத்தை சீக்கிரம் காண்பாளோ??
Quote from Marli malkhan on May 7, 2024, 11:28 AMSuper ma
Super ma