மோனிஷா நாவல்கள்
Paruvameithi - 26
Quote from monisha on July 15, 2022, 11:15 AMசிசு கொலையில் அடிபடாமல் வளர்ந்த பெண் குழந்தைகளும் இரண்டாம் பிரஜையாக கருதப்பட்டனர்.
ஆண்களுக்கு எத்தனையோ உரிமைகள். ஒரே ஒரு கடமை. பெற்றவர்களை பாதுகாப்பது. ஆனால் பெண்களுக்கு பல கடமைகள், எந்த உரிமையும் இல்லை.
அவள் நிர்கதியாக, நிராயுதபாணியாக, நாதியற்று தனியே வாழ்வை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த அவல நிலையே அவளை சில ஆயுதங்களை உருவாக்கி வாழ்வை வெல்ல தூண்டியது.
அப்படியென்ன ஆயுதங்களை உருவாக்கினாள் பெண்!
பெண்கள் உபயோகித்த முதல் மாற்று வழிதான் ஆண் முகமூடி!
இதுவொரு சுவாரஸ்யமான யுக்தி.
சொல்பேச்சை கேட்கும் ஆணை வைத்து அவனை ஆட்டிப்படைத்து தான் நினைத்ததை எல்லாம் சாதித்து கொள்ள வேண்டும். இப்படியாக ஆண்களை பின்னிருந்து இயக்கியவர்களில் ஒரு பிரபல உதாரணம் cleopatra க்ளியோப்பாட்ரா. கிரேக்க பெண்.
இந்திய வரலாற்றிலும் இருக்கிறார்கள். மகாபாரத சத்தியவதி முதல் இராமாயாண கைகேயி வரை வரலாற்றையே மாற்றி அமைத்த பெண்மணிகள்.
26
கனியும் மாயனும் அவர்கள் ஊர் காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர் .
“கனி… நீ நடந்த எல்லாத்தையும் கம்பிளைன்டா சார்கிட்ட எழுதி கொடு… அவங்கள சும்மா விட கூடாது” என்றான் மாயன். தொந்தி பெருத்து போயிருந்த அந்த ஆய்வாளரின் முகம் இருளடர்ந்து போனது. புகார் கொடுக்க கனி வருவாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
தேவையில்லாமல் இதில் தன் தலை வேறு உருள போகிறதா என்ற அவரின் ஆயாசமான பார்வையையும் சிந்தனையையும் மாயன் துல்லியமாக படித்துவிட்டான்.
“என்ன சார்… கம்பிளைன்ட் ரெஜிஸ்டர் பண்ணுவீங்களா?” என்று சந்தேகமாக பார்க்க,
“கம்பிளைன்ட் எடுத்துகிறதை பத்தி இல்ல… ஆனா இதுல உங்களோட தப்பும் இருக்கு” என்று சூட்சமமாக பேசியவர் கனியை நோக்கி,
“மிஸ்… நீங்களும் அந்த பையனை எல்லோர் முன்னாடியும் அடிச்சு அவமானப்படுத்தினது தப்புதானே… இந்த கேஸ் ரெஜிஸ்டர் பண்ணா உங்க வேலைக்கும் பிரச்சனை வரலாம்… பார்த்துக்கோங்க” என்று எச்சரிக்கை தொனிக்க கூற, கனியின் முகம் சுருண்டுவிட்டது.
ஆனால் மாயனுக்கு சுர்ரென்று கோபமேறியது.“அது எங்க பிரச்சனை சார்… நாங்க பார்த்துக்கிறோம்… நீங்க கேஸ் ரெஜிஸ்டர் பண்ணுங்க” என்று அவன் உறுதியாக சொல்ல,
“ஊர்காரங்க கூட தேவை இல்லாத பிரச்சனை எதுக்கு? பேசாம வேறு ஊருக்கு மாத்தலாகிட்டா எந்த தொல்லையும் இருக்காது இல்ல” என்று அவர் கனியை குறி வைத்து மீண்டும் பேச,
“நீங்க சொல்ற மாதிரியே செஞ்சுடலாம்… அதேபோல நீங்களும் எந்த ஊருக்கு மாத்தலாகி போறன்னு சொன்னீங்கனா அதையும் சேர்த்து செஞ்சுடலாம்” என்று மாயன் அதிரடியாக பதிலளித்தான்.
அந்த ஆய்வளாரின் முகம் உக்கிரமாக மாறியது.
“என்ன மிரட்டுறியா… நான் பொறுமையா பேசிட்டு இருந்தா நீ திமிரா பேசுற… உன்னை உள்ளே தூக்கி போட்டு நார் நாரா உரிச்சுடுவேன் பார்த்துக்கோ” என்றதும் கனி பதறிவிட்டாள்.
ஆனால் மாயன் அசட்டையாக, “சரி உள்ள தூக்கி போடுங்க… கை வசம் ஏதாச்சும் கேஸ் வைச்சிருப்பீங்களே… கஞ்சா கடத்துனேன்… கள்ளச்சாராயம் காசினேன்… அந்த மாதிரி எதையாவது போடுங்க” என,
கனி அவனிடம், “என்ன பேசிட்டு இருக்க மாயா நீ… ஏதாவது பெரிய பிரச்சனை ஆக போகுது” என்று குரலை தாழ்த்தி எச்சிரிக்கை செய்தாள்.
“உனக்கு இதெல்லாம் புரியது கனி… இவங்களுக்கு எல்லாம் நம்மள மாதிரி ஆளுங்கனாலே எளக்காரம்தான்… நம்ம தப்பே செய்யலானாலும் ரவுடி பொறுக்கின்னு நமக்கு முத்திரை குத்திடுவாங்க… நீ என்னை பத்தி நினைச்சிட்டு இருக்க மாதிரி” என்றவன் சந்தடி சாக்கில் அவளையும் சேர்த்து குத்தினான்.
இதற்கிடையில் அந்த ஆய்வாளர் நக்கலாக, “ஆமா ஆமாம்… இவர பெரிய உத்தம புத்திரரு… நாங்க இவர் மேல பொறுக்கின்னு முத்திரை வேற குத்திரமாக்கும்…
ஏற்கனவே நீ ஒரு ஆளு கையை வெட்டிட்டு மூணு வருஷம் ஜெயில களி தின்னவன்தானே டா நீ” என, கனி விக்கித்து போனாள்.
“அது முடிஞ்சு போன கேஸ்… இப்போ இந்த கேஸ ரெஜிஸ்டர் பண்ண போறீங்களா இல்லையா?” என்று மாயன் பிடித்த பிடியில் நிற்க அவர் கனியின் புறம் திரும்பி நயமாக பேசினார்.
“இத பாரும்மா… நீ இவன் சொல்றதை கேட்காதே… கேஸ் அது இதுன்னு இவன் பாட்டுக்கு கிளப்பி விட்டுட்டு போயிடுவான்… அப்புறம் பிரச்சனை உனக்குதான்… கோர்ட் கேஸ்னு அலையணும்… அது இல்லாம நீ வேற தனியா இருக்க… ஏதாச்சும் தப்பா கிப்பா நடந்துட்டா?” என்றவர் அக்கறையுடன் பேசியது போல காட்டிலும் அது அப்பட்டமான மிரட்டல் என்று அவளுக்கு புரிந்து ஒரு மாதிரி எரிச்சல் உணர்வு ஏற்பட்டது.
எத்தனை காலத்துக்கு பெண்களை இப்படி பயமுறுத்தியே எதுவும் செய்யவிடாமல் அடக்கி வைத்திருக்க போகிறார்கள் என்று கனி எண்ணி கொண்டிருக்கும் போதே மாயன் கொதிப்புடன், “தப்பா நடந்துட்டாவா… என்னை மீறி எவனாச்சும் கனியை நெருங்கிடுவானுங்க… கொலை பண்ணிடுவேன் அவனுங்கள” என்றான்.
கனி அவனை அதிர்ச்சியுடன் நோக்க அந்த ஆய்வாளர் எழுந்து நின்று கொண்டு, “போலிஸ் ஸ்டேஷன் உள்ளேயே வந்து கொலை பண்ணிடுவேன்னு மிரட்டுறியா… மவனே உன்னை ஒரு வழி பண்ணிடுவேன்” என்று பொங்க,
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க மிரட்டல… கேஸ் கொடுத்தா தப்பாயிடும்… அப்படி ஆயிடும்னு சொல்லல… நீங்க செஞ்சா சரி… நாங்க செஞ்சா தப்பா” என்றவன் பதில் கேள்வி கேட்க,
“ஆமா அப்படிதான்… நான் இந்த கேஸ எடுக்க மாட்டேன்… உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்றவர் கனியிடம் திரும்பி,
“ஒழுங்கா இந்த ஊரை விட்டு மாத்தலாகி போற வழிய பாரு” என, மாயன் சீற்றத்துடன் எழுந்து நின்று கொண்டு,
“அப்போ நாங்க நல்ல மதிப்பான வேலையே செய்ய கூடாது… செய்ய விடமாட்டீங்க… அப்படிதானே?” என்று பல்லை கடித்து கொண்டு கேட்டான்.
“எவன் எவன் எங்கெங்க இருக்கணுமோ அவன் அவன் அங்கங்கதான் இருக்கணும்” என்றவர் அவனை முறைத்து பார்க்க மாயன் அவன் பார்வைக்கு நேராக மாட்டியிருந்த காந்தியின் புகைப்படத்தை பார்த்து இகழ்ச்சியாக புன்னகைத்தான்.
“எனக்கு வேலை இருக்கு… கிளம்புங்க” என்று ஒரு பைலை எடுத்து வைத்து கொண்டு அதில் தலையை விட்டு கொள்ள, கனி மாயனை பார்த்தாள்.
அந்த ஆய்வாளரை பார்த்த மாயன், “அப்போ நாங்க கிளம்பணும்?!” என்று சூசகமான பார்வையுடன் கேட்க,
“கிளம்புங்க” என்று நிமிர்ந்து பார்க்காமல் அலட்சியத்துடன் சொன்னார்.
“சரி வா கனி நம்ம கிளம்புவோம்” என்றவன் சொல்லவும் கனி அவனை புரியாமல் பார்க்க, அந்த ஆய்வாளரின் முகத்தில் வெற்றி புன்னகை மிளிர்ந்தது.
அவளை அழைத்து கொண்டு வெளியேறிய மாயன் உடனடியாக தன் கைப்பேசி எடுத்து பேசினான். கனி அவனை யோசனையுடன் பார்க்க,
“இப்போ நம்ம என்ன பண்றது?” என்று கேட்டாள்.
“வெயிட் பண்ணுவோம்”
“அந்த இன்ஸ்பெக்டர்தான் போ ன்னு துரத்துறானே”
“திரும்ப கூப்பிடுவான்” என்று மாயன் சொன்ன அடுத்த பத்தாவது நிமிஷம் கான்ஸ்டபிள் ஒருவர் வெளியே வந்து,
“இன்ஸ்பெக்டர் உங்களை கூப்பிடுறாரு” என, மாயன் கனியை அர்த்த புன்னகையுடன் பார்த்துவிட்டு உள்ளே நடந்தான். கனி அவனை பின்தொடர அந்த ஆய்வாளரின் முகம் சுருங்கி போயிருந்தது.
மாயன் அவர் எதிரே வந்து நின்று, “நாங்களா மரியாதையா கம்பிளைன்ட் கொடுத்தா வாங்கிக்க மாட்டீங்க… இதுக்குன்னு உங்க மேலதிகாரிங்க பேசணும்… அப்படிதானே?” என்று குத்தலாக கேட்க,
“கம்பிளைன்ட் எழுதி கொடுங்க” என்றார் கடுப்புடன்.
கனி புகாரினை எழுதி கொடுக்க, அதனை முழுவதுமாக படித்து பார்த்தவர், “விசாரணைக்கு அவங்களை கூப்பிட்டுடு உங்களுக்கு போன் பண்ணி சொல்றோம்” என,
“கூப்பிடுங்க… ஆனா திரும்பியும் அவங்க கனிகிட்ட ஏதாவது பிரச்சனை பண்ணா… அப்புறம் நீங்கதான் அதுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்… பார்த்துக்கோங்க” என்று மாயன் திருத்தமாகவும் எச்சிரிக்கையாகவும் சொல்லிவிட்டு, “போலாம்” என்றான் கனியிடம்.
காரில் ஏறி அமர்ந்ததும், “நான் உன்னை வீட்டுல விட்டுட்டு கிளம்புறேன்… போலிஸ் ஸ்டேஷன்ல இருந்து கூப்பிட்டா எனக்கு போன் பண்ணு… நான் வந்து உன்னை கூப்பிட்டு போறேன்… என் நம்பர் நிம்மி மேடம் கிட்ட இருக்கும்” என்று அவன் பேசி கொண்டே வர, அவள் பதில் பேசாமல் அமைதியாக வந்தாள்.
காரை அவர்கள் வீட்டு வாயிலை கொண்டு வந்து நிறுத்த, அவள் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள். இன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவள் மூளைக்குள் சுற்றி சுழன்று கொண்டிருந்தன. மாயனை பற்றி அந்த ஆய்வாளார் சொன்னது வேறு அவளை மேலும் பயமுறுத்தியிருந்தது.
“கனி… கனி…ஈஈ” என்று மாயன் சத்தமாக அழைக்கவும்தான் அவள் இயல்பு நிலைக்கு திரும்பினாள். கார் அவர்கள் வீட்டு வாயிலில் நிற்பதை பார்த்துவிட்டு அவசரமாக இறங்கி கொண்டாள்.
“நிம்மி மேடம்கிட்ட சொல்லிடு… நான் கிளம்புறேன்” என, அவன் முகத்தை பார்க்காமல் அவள் மௌனமாக தலையசைக்க,
“ஒன்னும் டென்ஷனாகிக்காதே எல்லா ரெண்டு நாளில சரியாயிடும்” என்றவன் தைரியம் உரைக்க, அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
அவள் அதற்கும் தலையை மட்டும் அசைக்க ஆழமாக அவளை ஒரு பார்வை பார்த்தவன், “சரி வரேன்” என்று விட்டு கிளப்பி சென்றுவிட்டான்.
அவனை பற்றிய யோசனையுடன் அவள் செருப்பை கழற்றி கொண்டு வாயிற்படியில் காலை வைத்த போதுதான, ‘சை… இவ்வளவு ஹெல்ப் பண்ணி இருக்கான்… நான் ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம அவனை அனுப்பிவிட்டேனே’ என்ற எண்ணம் எழுந்தது.
“கனி வந்துட்டியா?” என்று வெளியே எட்டி பார்த்த நிம்மி,
“மாயன் எங்கே?” என்று கேட்டார்.
“அது… இப்பதான் கிளம்பினான்” என்றாள்.
“அதுக்குள்ள கிளம்பிட்டானா? உள்ளே கூப்பிட்டு இருக்கலாம் இல்ல” என்று நிம்மி கவலையுடன் வெளியே எட்டி பார்க்க, கனியின் முகம் தொங்கி போனது.
“சரி… நீ உள்ளே வா” என்று நிம்மி அவள் தோளை தட்டி உள்ளே அழைத்து கொண்டு சென்று, “என்ன நடந்துச்சு கனி” என சோபாவில் அமர வைத்து பொறுமையாக விசாரித்தார்,
அவள் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்புவிக்க வாசுப்பா உடனே,
“நல்ல வேளை… மாயன் தம்பி வந்துச்சு… இல்லனா இந்த பிரச்சனையை நாம எப்படி சமாளிச்சி இருப்போம்” என்று சொல்ல, கனி மையமாக அவர்களை பார்த்து,
“உங்களுக்கு எப்படி மாயனை தெரியும்?” என்று யோசனையுடன் கேட்க,
“இந்த ஊர்ல மாயனை தெரியாதவன் யாராவது இருக்காங்களா என்ன?” நிம்மி பதில் உரைத்தார்.
“நான் ஊருக்கு வந்த அன்னைக்கு பறை அடிச்சிட்டு இருந்தான்” என்றவள் தயக்கத்துடன் இழுக்க,
“அதானே அவன் தொழில்… ஊர்ல எங்கு சாவு விழுந்தாலும் பந்தல், ஐஸ் பாக்ஸ், பறை அடிக்குறது… எல்லாம் அவன்தான் ஏற்பாடு பண்ணுவான்” என்றார் நிம்மி.
அவள் ஆச்சரியத்துடன், “இந்த வேலை எல்லாம் செஞ்சுட்டு எப்படி கட்சி தலைவர் வரைக்கும் தெரிஞ்சு வைச்சு இருக்கான்” என்றாள்.
“நீதானே அவன் மாமா பொண்ணு… அப்புறம் எங்களை தோண்டி துருவி அவனை பத்தி கேட்டுட்டு இருக்க” என்று வாசு கனியை நக்கல் செய்தார்.
“நீங்க வேற பா… நான் இந்த ஊர் பக்கம் வந்தே ரொம்ப வருஷமாகுது… இதுல அவனை எங்க நான் பார்த்தேன்… கடைசியா நான் பார்க்கும் போது ஏதோ வேலைக்குதான் போயிட்டு இருந்தான்… பெருசா படிக்க கூட இல்லன்னுதான் நினைக்கிறேன்”
“மாயன் என்ன படிச்சிருக்கான்னு எனக்கும் தெரியாது கனி… ஆனா எல்லோருக்கும் உதவிற நல்ல மனசு அவன்கிட்ட இருக்கு… ஸ்கூல படிக்கிற எஸ் ஸி பசங்க படிக்க அவன் நிறைய உதவி செய்றான்… இங்க மட்டும் இல்ல… சுத்து வட்டாரத்துல இருக்க இந்த மாதிரி பசங்க படிக்க நிறைய உதவி செய்றான்னு கேள்விப்பட்டேன்…
போன வருஷம் கூட ஒரு பதினெட்டு வயசு பொண்ணு… அந்த பொண்ணுக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசையாம்… என்னை அந்த பொண்ணு வீட்டுக்கு கூட்டிட்டு போய் பேச வைச்சு கல்யாணத்தை நிறுத்தினது இல்லாம… அந்த பொண்ணு மேல படிக்க உதவி எல்லாம் செஞ்சான்… என்னால முடிஞ்ச உதவியை நானும் செஞ்சேன்… அப்பத்தான் எனக்கும் மாயன் நல்ல பழக்கமானான்” என்று நிம்மி சொல்வதை எல்லாம் விரல்களை பின்னி கொண்டு கனி ஆழ்ந்த சிந்தனையுடன் கேட்டு கொண்டிருந்தாள்.
வாசு பட்டென்று, “மாயன் இவ்வளவெல்லாம் நல்லவனா இருக்கான்… ஆனா நீ ஏன் அவனை கல்யாணம் பண்ணிக்கல” என்று கேட்டுவிட கனி அவரை அதிர்ச்சியாக பார்த்தாள்.
“என்ன பேசுறீங்க நீங்க” என்று நிம்மி கணவனை முறைக்க,
“இல்ல நிம்மி… இவங்க ஆளுங்க எல்லாம் பெரும்பாலும் உறவுமுறைலதான் கல்யாணம் பண்ணுவாங்க… அதான் கேட்டேன்” என்றார்.
ஒருவன் கையை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு சென்று வந்தவனை தான் கல்யாணம் வேறு செய்து கொண்டிருக்க வேண்டுமா?
எரிச்சலுடன் அவர்கள் இருவரின் உரையாடலை கேட்டு கொண்டிருந்தவள், “தப்பா எடுத்துக்காதீங்க… எனக்கு ஒரு மாதிரி தலைவலியா இருக்கு… நான் மேலே போறேன்” என்று எழுந்து கொள்ள,
“ரொம்ப வலிக்குதா… மாத்திரை எடுத்துட்டு வந்து தரவா?” என்று நிம்மி அக்கறையாக கேட்க,
“சுடு தண்ணி போட்டு குடிச்சா சரியாயிடுமா” என்று வாசுவும் தன் பங்குக்கு வைத்தியம் கூற,
“எனக்கு கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்… நான் மாடிக்கு போறேன்” என்றவள் அதற்கு பின் அங்கே நிற்கவில்லை. விறுவிறுவென மாடிக்கு ஓடிவிட்டாள்.
கலைந்திருந்த அவள் வீட்டு பொருட்கள் எல்லாம் பழையபடி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. எல்லாம் நிம்மி வாசுப்பாவின் வேலையாகதான் இருக்கும். அதை பார்த்ததும் ஆசுவாசமாக இருந்தது. சமையலறைக்குள் சென்று ஒரு காபியை போட்டு கொண்டு வந்து அமர்ந்தவளின் நினைப்பு முழுக்க, மாயன்… மாயன்… மாயன் என்று அவனே நிறைந்திருந்தான். என்ன மாதிரியான மனிதன் இவன் என்றுதான் அவளுக்கு இன்னுமே பிடிபடவில்லை. கதை எழுதுகிறேன்… கையை வெட்டுகிறேன்…
பறையடிக்கும் இவன் பெரிய அரசியல் பிரமுகரை தெரிந்து வைத்திருக்கிறான்.
கெட்டவனா? இல்லை கெட்டவனாக வாழும் நல்லவனா?
எப்படியாக இருந்தாலும் சரி… இந்த பிரச்சனை முடிந்ததும் இவன் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று எண்ணி கொண்டாள்.
அடுத்த நாள் காலையிலேயே காவல் நிலையத்திலிருந்து அவளை வர சொல்லி அழைப்பு வந்தது. மாயனிடம் இந்த தகவலை நேரடியாக உரைக்க தயங்கி கொண்டு நிம்மியிடம் கைபேசியை கொடுத்து தெரிவிக்க சொன்னாள்.
அவரிடமிருந்து விஷயத்தை அறிந்தவன், “கனிக்கிட்ட ஒரு நிமிஷம் போனை கொடுங்க மேடம்” என,
“உன்கிட்ட பேசணுமா?” என்று அலைப்பேசியை கொடுத்துவிட்டு அவர் நகர்ந்துவிட,
அவள் தவிப்புடன், “ம்ம்ம் சொல்லு” என்றாள் வேண்டா வெறுப்பாக.
“நேரா ஸ்டேஷனுக்கு உன் பைக்ல வந்துடுவதானே? இல்ல நான் வரட்டுமா?” என்றவன் கேட்க,
“இல்ல வேண்டாம்… நான் வந்துடுவேன்… சரி போனை வைச்சுடுவா?” என்றவள் அவசர அவசரமாக பேசிவிட்டு அவன் அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன்னதாக அழைப்பை துண்டித்துவிட்டாள்.
சிசு கொலையில் அடிபடாமல் வளர்ந்த பெண் குழந்தைகளும் இரண்டாம் பிரஜையாக கருதப்பட்டனர்.

Quote from chitti.jayaraman on July 15, 2022, 1:21 PMKani nee panrathu sari illaiye avanai en ippadi thappa ninaikira unaku dan avan help panran nu terialiya unnai vida ivan dan rumba kashta pattu irukan eppavum unnoda kannothathula irundu parkatha avanoda nilamai ah yosichi par mayan ah puriyum,
Kani nee panrathu sari illaiye avanai en ippadi thappa ninaikira unaku dan avan help panran nu terialiya unnai vida ivan dan rumba kashta pattu irukan eppavum unnoda kannothathula irundu parkatha avanoda nilamai ah yosichi par mayan ah puriyum,
Quote from sembaruthi.p on July 15, 2022, 5:47 PMஎன்ன யோசனை ஏன் மாயனை தவிர்க்கிற கனி.. அது போக்குல போகட்டும். என்னா ஆகுதுன்னு பாக்கலாம்..
எங்களுக்காவது மாயனை பற்றி முழுசா சொல்லிடலாமே
என்ன யோசனை ஏன் மாயனை தவிர்க்கிற கனி.. அது போக்குல போகட்டும். என்னா ஆகுதுன்னு பாக்கலாம்..
எங்களுக்காவது மாயனை பற்றி முழுசா சொல்லிடலாமே
Quote from Thani Siva on July 23, 2022, 2:40 PMமாயனை புரிந்து கொள்ள மறுக்கிறாளே கனி ......
இவன் நல்லதொரு வேலைலையில் இருக்கிறானா (மறமுகமாக)
மாயனை புரிந்து கொள்ள மறுக்கிறாளே கனி ......
இவன் நல்லதொரு வேலைலையில் இருக்கிறானா (மறமுகமாக)
Quote from Marli malkhan on May 7, 2024, 12:05 PMSuper ma
Super ma