மோனிஷா நாவல்கள்
Paruvameithi - 5
Quote from monisha on June 1, 2022, 1:38 PMமிருக ஆணை விட மனித ஆண் புத்திசாலியாக மாறியதன் விளைவு, மனித மூளை பெரிதானது. இந்த பெரிய மூளை அபாரமானது மட்டுமல்ல. ரொம்பவே பாரமானதும் கூட.
இந்த பெரிய மூளையை முக்கி பிள்ளையை பெற்றெடுப்பதற்குள் மனித தாய் ஓய்ந்தே போய்விடுகிறாள். இந்த சிக்கலையும் சுலபமாக தீர்க்க மானுட மரபணுக்கள் வழிவகுத்தன.
முதல் வழி. பெரிய தலை பாப்பாவை பிரசவிக்க தோதாக பெரிய சைஸ் இடுப்பு தேவை என தாயின் இடுப்பு எலும்பை அகலச் செய்தன. இடுப்பு அகன்றதால் அதனோடு இயைந்திருந்த தொடை எலும்புகள் உட்புறமாக திரும்பி கொண்டன. அதனால்தான் இன்றுவரை பெண்களால் வேக நடை ஓட்டம் எல்லாம் அத்தனை லாவகமாக செய்ய முடிவதில்லை. ஆணின் வேகத்தை எட்டவும் முடிவதில்லை.
இரண்டாவது வழி. அடுத்த பதிவின் தொடர்ச்சியில்...
*****************************************************************************
5
“ஆன்… அவ்வளவுதானா? இன்னும் இருக்கா… நீங்க அதெல்லாம் சொல்லிட்டீங்க… திரும்ப சொன்னதையே சொல்லாதீங்க ஐயரே!” என்று கனி மேஜை மீதொரு வெள்ளை தாளை வைத்து எழுதி கொண்டே,
“நீங்க சொன்னதெல்லாம் நான் வாங்கி வைச்சிடுறேன்… நீங்க லேட் பண்ணாம நேரத்தோடு வந்திருங்க” என்றபடி அழைப்பை துண்டித்துவிட்டு காயத்ரிக்கு அழைத்து பேசினாள்.
“ஆன் காயு… எல்லோருக்கும் சொல்லிட்டியா… எத்தனை பேர் வராங்க” என்று கேட்க,
“அண்ணி… ஈஈ” என்று இழுத்தவள், “எனக்கு தெரிஞ்ச சொந்தகாரங்க வரைக்கும் ஃபோன் பண்ணேன்… ஆனா யாரும் வர்ற மாதிரியே பேசல… தூரமா இருக்கு… முக்கியமான வேலை இருக்கு… வீட்டில விசேஷம்னு ஆளுக்கொரு காரணம் சொல்றாங்க” என்றாள்.
கனி இதை எதிர்பார்த்தாள். அம்பிகா பெரிதாக உறவினர்கள் யாரிடமும் இணக்கமாக இருந்ததில்லை. அவர்களும் ஒரு நாளும் இவரின் எந்த கஷ்டத்திலும் உதவியதுமில்லை. கீழே விழும் போது சிரித்தவர்கள் சுயமாக எழுந்து நிற்கும் போது ஏசினார்கள்.
கடைசி காலத்தில் தன் பாடையை தூக்க நாலு பேராவது வேண்டுமென்று அவர் ஒருநாளும் யாரிடமும் விட்டு கொடுத்து பணிந்து போனதுமில்லை. கஷ்டத்தில் உதவாத நட்பும் உறவும் தேவையில்லை என்று நிர்தாட்சண்யமாக அம்பிகா தூக்கி போட்டார். கடைசி வரை அவர் தனி மனுஷிதான்.
“அண்ணி என்னாச்சு சைலன்ட் ஆகிட்டீங்க”
“ஒன்னும் இல்ல… வராதவங்களை பத்தி விடு காயு… வரேன்னு சொன்னவங்க மட்டும் எத்தனை பேர்னு கணக்கு போட்டு சொல்லு” என்று விசாரிக்க,
“அதான் அண்ணி… பெரியம்மா பெரியப்பா… அப்புறம் மஞ்சு அத்தை வீட்டுல… அப்புறம் எங்க வீட்டுல… சேர்ந்தாப்ல பத்து பதினைஞ்சு பேர்தான்… ஏன் அண்ணி… உங்க வீட்டுல இருந்து யாராச்சும் வராங்களா?” என்றவள் கேட்க அமைதியாக கேட்டிருந்த கனி,
“சாவுக்கே வரலையாம்… இதுக்கா வர போறாங்க… அதை விடு… இங்கே என் கூட வேலை பார்க்கிற டீச்சர்ஸ் ஒரு பத்து பேர் வருவாங்க… அப்படினா ஒரு இருபது பேர்னு சமைச்சா போதும் இல்ல” என்று கேட்டாள்.
“ஆ… போதும் அண்ணி”
“நைட்டு சாப்பாடும் காலைல டிபனும் ஒரு பத்து பதினைஞ்சு பேருக்கு செய்யணும்… மதியம் வடை பாயசத்தோட சாப்பாடு… அது மட்டும்… இருபத்து அஞ்சு பேருக்கு செஞ்சிக்கலாம்” என்றவள் சொல்வதை கேட்ட காயத்ரி,
“என்ன அண்ணி… எல்லாம் நம்மளே வா செய்ய போறோம்” என்று தயக்கத்துடன் இழுத்தாள்.
“அதெல்லாம் என்னால தனியா செய்ய முடியாது… அத்தை மட்டும் இருந்தா ஒரே ஆளா நூறு பேருக்கு கூட சமைப்பாங்க… ஆனா நமக்கெல்லாம் அவ்வளவு திறமை இல்ல…
நான் ஊர்ல ஒருத்தங்க கிட்ட சொல்லி இருக்கேன்… அவங்க வந்து எல்லாம் செஞ்சு கொடுத்திடுவாங்க”
காயத்ரி தயங்கியபடி, “அப்புறம் அண்ணி காசு… ஏதாச்சும்” என்று கேட்க ,
“ஏன் நிறைய வைச்சி இருக்கியா தர போறியா?” என்று எள்ளலாக கேட்டாள் கனி.
“இல்ல அண்ணி… யோகிகிட்ட கேட்டு”
‘அப்படியே கொடுத்துட்டுதான் மறுவேலை பார்ப்பான்’ என்று மனதில் எண்ணி கொண்டதை வாய் விட்டு சொல்லாமல்,
“என்கிட்ட இருக்கு… நான் பார்த்துக்கிறேன்… நீ நேரத்தோட வந்து சேர்ந்தா மட்டும் போதும்… ஆமா உன் வீட்டுல இருந்து எல்லோரும் நைட்டே வந்திருவாங்க இல்ல… இல்ல… இதுக்கும் உன் புருஷன் ஏதாச்சும் எடக்கு முடக்கு பண்றாரா?”
“என்னவோ அண்ணி… வர்றேன்னுதான் சொல்லி இருக்காங்க… ஆனா கடைசி நிமிஷத்துல என்ன சொல்வாங்களோன்னு இருக்கு”
“என்னடி… இதுக்கு கூட வரலன்னா… அப்புறம் எதுக்குதான் வருவாங்களாம்… உன் புருஷன் ஏதாச்சும் ஏடாகுடம் பண்ணா… நான் சொல்றதை கேளு… பேசாம பிள்ளைங்கள கூட்டிட்டு கிளம்பி வந்திரு”
“அண்ணி என்ன சொல்றீங்க” என்றவள் அதிர,
“நீ கம்முனு வந்து பத்து நாள் இரு… உன் புருஷன் அடங்கி ஒடுங்கி வரானா இல்லையான்னு மட்டும் பாரேன்” என்றவள் கடுப்புடன் முற்றத்தின் தூணில் சாய்ந்தபடி பேசி கொண்டிருக்கும் போதே, வாயிலில் புல்லட் சத்தம் கேட்டது.
‘திருநாவா?’ என்றவள் மனதில் நினைக்கும் போதே அவன் கதவை திறந்து உள்ளே நடந்து வந்து கொண்டிருக்க,
“காயு உன்கிட்ட நான் அப்புறம் பேசுறேன்” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டு அவன் எதிரே வந்து நிற்பதை கண்டுகொள்ளாமல் பதட்டத்துடன் வெளிவாசலை எட்டி பார்த்தாள்.
“நான் இங்கே நிற்குறேன் மிஸ்… நீங்க என்ன அங்கே பார்க்குறீங்க” என்றவன் முகமெல்லாம் புன்னகையாக கேட்க,
“இல்ல ஒன்னும் இல்ல” என்றவள் நாற்காலியை எடுத்து போட்டு,
“உட்காருங்க” என்றாள்.
அவன் அமர எத்தனிக்கும் போது, “இருங்க இருங்க” என்று அவனை நிறுத்திவிட்டு நாற்காலியை இன்னும் முன்னே இழுத்து போட்டு,
“இப்படி உட்காருங்க” என்றாள்.
“என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி டென்ஷனா இருக்கீங்க” என்றபடி அவன் நாற்காலியில் அமர்ந்தான். முதலிரண்டு முறை வந்த போதிருந்த பதட்டம் அவனுக்கு இப்போது இல்லை. சகஜமான பாவனையில் அமர்ந்தான். கண்கள் அவளை ஆழமாக அளவெடுத்தன.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல… நீங்க காபி குடிக்கிறீங்களா… எடுத்துட்டு வரவா” என்றவள் கேட்கவும்,
“ம்ம்ம் குடிக்கிறேனே” என்றதும் அவள் முகம் சுருண்டது. இம்முறை அவள் சும்மா பெயருக்கென்றுதான் கேட்டாள். அவளுடைய கவலையே எதிர்வீட்டாமாள் எங்கே நிற்கிறாள் என்றுதான்.
அவள் வாசலை எட்டி பார்த்தபடியே சமையலறை சென்று பாலை காய்ச்சி கொண்டிருக்கும் போது பின்னிருந்து, “கனி” என்ற அழைக்க, அவள் பதறி திரும்பினாள்.
அவனோ சுவற்றில் சாய்ந்தபடி கம்பீரமாக நின்றிருந்தான். அவனது உதடுகளில் உதிர்ந்த புன்னகையும் ஆளை விழுங்கும் பார்வையும் அவளின் தனிமையை மிரட்டியது.
வயிற்றில் ஒரு மாதிரி ஜில்லிப்பு உணர்வு ஏற்பட, “கனி ஏன் அப்படி பார்க்குறீங்க” என்று கேட்கவும்தான் அவளுக்கு சூழ்நிலை உரைத்தது.
“நீங்க ஏன் இங்க வந்தீங்க… நான் காபி போட்டு எடுத்துட்டு வருவேன் இல்ல”
“சும்மா கம்பெனிக்கு பேசிட்டு இருக்கலாம்னு… ஸ்கூல கூட இப்படியெல்லாம் பார்த்து பேச சான்ஸ் கிடைக்கிறது இல்ல… கிடைச்சாலும் பேச முடியறது இல்ல” என்றவன் தன் ஏக்க உணர்வை பிராஸ்தாபிக்க,
“நீங்க போய் உட்காருங்களேன்… நான் காபி எடுத்துட்டு வரேன்” என்றாள் தவிப்புடன்.
“ஏன் நான் இங்கே நிற்க கூடாதா?” என்ற கேள்வியுடன் அவன் பார்வை அவளை ஆழம் பார்க்க, அவளுக்கு எரிச்சல் மூண்டது.
“நில்லுங்களேன்… எங்க வேணா நில்லுங்க… உங்களுக்கு என்ன சார்… நீங்க ஆம்பளை… ஆனா நான் அப்படியா… நான் பொம்பளை… அதுவும் தனியா இருக்க பொம்பளை… பார்க்கிறவன் கேட்குறவன் கற்பனைக்கு எல்லாம் நான் தானே பதில் சொல்லணும்…
யார் வேணா என்னை என்ன வேணா பேசட்டும்னு என்னால இருக்க முடியாதுபா… நான் ஒரு ஸ்கூல் டீச்சர்… என் பசங்களுக்கு நான் ஒரு நல்ல முன்னுதரணமா இருக்க விரும்புறேன்… அவங்களுக்கு நான் ஒழுக்கத்தை கத்து தரணும்னா நான் அதுக்கு ஒழுக்கமானவளா இருக்கணும் இல்ல” என்றவள் படபடவென பட்டாசு போல வெடித்து முடிக்கும் போது பாத்திரத்திலிருந்து பால் பொங்கி வெளியே ஊற்றியது.
அவள் அதனை அவசரமாக திரும்பி அணைக்கவும் அவன் முகத்தை தொங்க போட்டு கொண்டு வெளியே சென்றான்.
அவள் எட்டி பார்த்து, “திருநா போயிடாதீங்க… காபி குடிச்சிட்டு போங்க” என, அவன் கடுப்புடன் நின்றான்.
“ஏன் நிற்குறீங்க… உட்காருங்க… ஏதோ பேச வந்துட்டு சொல்லாமலே போனா என்ன அர்த்தம்” என்றவள் காபியை நீட்ட அவன் அவளை எகத்தாளமாக பார்த்து,
“எதுக்கு… அப்புறம் உங்களைதான் தப்பா பேசுவாங்க மிஸ்” என்றவன் திரும்பி நடக்க,
“அதெல்லாம் பேச மாட்டாங்க… வாச கதவுக்கு நேராதான் உங்க சேர் இருக்கே… அதனால அவங்களா எதுவும் கற்பனை பண்ணிக்க முடியாது” என்றவள் சொன்ன போதுதான் அவள் நாற்காலியை ஏன் அங்கே இழுத்து போட்டாள் என்று புரிந்தது.
“உட்காருங்க சார்… காபி குடிங்க” என்றவள் இப்போது இளகிய பார்வையுடன் அவனை நோக்கினாள்.
அமைதியாக அமர்ந்து காபியை பருகியவன், “ஆக்சுவலி நான் எதுக்கு வந்தேனா… அம்மாகிட்ட உங்களை பத்தி சொன்னேன்… அம்மா முதல கொஞ்சம் தயங்கினாங்க… அப்புறம் ஒகே சொல்லிட்டாங்க
என்கிட்ட உங்களை பார்க்கணும்னு சொன்னாங்க… அடுத்த வாரம் ஊருக்கு வராங்க உங்களுக்கு ஓகேனா அம்மாவை இங்கே கூட்டிட்டு வரேன்” என்று மெதுவாக பார்வையை உயர்த்தி கேட்கவும்,
“கூட்டிட்டு வாங்க… அத்தையோட காரியம்தான் இந்த வாரத்துல முடிஞ்சிட போகுதே” என்றாள்.
“ஆ அப்புறம் கனி” என்று அவளை யோசனையாக பார்த்தவன், “உங்க வீட்டுல உங்க சைட்ல இருந்து பேச பெரியவங்க யாராச்சும் இருந்தா வர சொல்லுங்களேன்” என்றான்.
“எனக்கு அத்தை மட்டும்தான்… வேற யாரும் பெரியவங்குன்னு இல்ல”
“சொந்தக்காரங்க”
“இருக்காங்க… ஆனா எனக்குன்னு பேச யாரும் வந்து நிற்க மாட்டாங்க” என்ற போது அவள் குரல் கம்மியது. தொண்டையை அடைத்தது. அவன் முன்னே அழுதுவிட கூடாது என்று அவள் சமாளித்து கொண்ட போதும் அவள் வார்த்தைகளின் வலியை அவனால் உணர முடிந்தது.
சில நிமிட மௌனத்திற்கு பின் திருநா எழுந்து நின்று, “பரவாயில்ல… யார் இல்லன்னாலும் நான் உங்க கூட இருக்கேன் கனி” என, அவள் உதட்டில் மெல்லிய புன்னகை உதிர்ந்தது.
“சரி நான் வரேன்” என்றவன் வாசலை கடக்கும் போது, “திருநா” என்று அழைத்தவள், “இனிமே எதுன்னாலும் கொஞ்சம் போன்ல பேசுங்க… என் நம்பர்” என்றவள் சொல்ல எத்தனிக்கும் போது
“இருக்கு… கால் பண்றேன்” என்றவன் புன்னகையுடன் அவளை பார்த்து சொல்லிவிட்டு தன் புல்லட்டில் ஏறி விரைந்துவிட்டான்.
அவன் போகும் திசையை நின்று நிதானித்து பார்த்தவள் எதிர் வீட்டாம்மள் செல்பேசியை காதில் வைத்து ஜோடனை செய்வதை பார்த்து சிரித்துவிட்டு உள்ளே சென்றாள்.
அவன் பேசியதை எல்லாம் வைத்து உடனடியாக ஒரு கற்பனை கோட்டையை கட்டி கொள்ள அவள் விழையவில்லை என்றாலும் அது அவளின் எதிர்காலத்திற்கான ஆரம்ப அஸ்திவாரமாக ஆழமாக அவள் மனதில் வேரூன்றிதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
அதன் பின் செல்பேசி மூலமாக அவளை தொடர்பு கொண்டு பேசியவன் தூக்கமில்லாத அவளின் இரவுகளை தனதாக்கி கொண்டதோடு இல்லாமல் அவளின் தனிமையை தூரமாக விரட்டி அடித்துவிட்டான்.
இரண்டு நாளாக கதை கதையாக பேசி தீர்த்தவர்களுக்கு இன்னும் இன்னும் பேச கடலளவு விஷயம் இருந்தது. ஆனால் நேரம்தான் இல்லை.
அத்தையின் காரியத்திற்காக காயத்ரியின் கணவனும் குழந்தைகளும் வீட்டிற்கு வந்திருக்க, “ரிலேட்டிவ்ஸ் வந்திருக்காங்க திருநா… நாம அப்புறமா பேசலாம்” என்று அன்றுதான் கொஞ்சம் கைப்பேசிக்கு ஓய்வு கொடுத்தாள்.
“உன் மாமியார் மாமனார் வரலையா காயு” என்று கனி தேநீர் கலந்து கொண்டே கேட்க,
“காலையில கார்ல வருவாங்க… எல்லாம் பெரிய ராஜா வீட்டு பரம்பரை… இங்க எல்லாம் வந்து தங்குனா அவங்களுக்கு வசதி பத்தாதாம்… ஏசி இருக்காதாம்” என்று புலம்பி கொண்டே அவள் தயாரித்த தேநீரை எடுத்து சென்று கணவனுக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்தாள்.
அதன் பின் கனி தன் நாத்தியின் குழந்தைகளுடன் ஆர அமர அமர்ந்து விளையாடி கொண்டிருந்தாள். ஒரே ஆட்டமும் பாட்டமும் என்று அன்று அந்த வீடே அமர்களப்பட்டது.
அவர்கள் ஓடி விளையாடுகிறேன் பேர்வழி என்று முற்றத்தை சுற்றி சுற்றி ஓடி அரட்டையடித்து கொண்டிருக்க, “ஏய் எதையாவது உடைக்க போறீங்க” என்று காயு எச்சரிக்க,
“இருக்கட்டும் விடு காயு… குழந்தைங்கதானே… விளையாடட்டும்” என்று கனி அவர்கள் அந்த வீட்டில் வளைய வருவதை பார்த்து மனதார மகிழ்ந்தாள்.
குழந்தைகள் வாழும் வீடு தெய்வங்கள் வாழும் வீடு என்பது சத்தியமான வார்த்தை. அன்றுதான் அத்தனை பெரிய வீட்டிற்கு கலையே வந்தது போலிருந்தது.
அத்தை உயிருடன் இருந்த போது பேரன் பேத்திகளை இங்கே அழைத்து வர வேண்டுமென்று அவ்வளவு ஆசைப்பட்டார். ஆனால் யோகிதான் வீம்பாக மறுத்துவிட்டான்.
‘பாருங்க அத்தை… எல்லாத்தையும் பார்த்து பார்த்து அடுக்கி வைப்பீங்க… உங்க பேரனும் பேத்தியும் ரணகள படுத்துறாங்க பாருங்க’ என்று அவர் படத்தை பார்த்து மானசீகமாக மனதிற்குள் சொல்லி கொண்ட போது அவள் கண்களில் கண்ணீர் தளும்பியது.
அன்றைய மாலை பொழுது ஆரவாரமாக கழிய அந்த வாண்டுகள் இரண்டையும் யோகிதான் மிரட்டி உள்ளே அழைத்து கொண்டு போய் படுக்க வைத்தான். யாரிடமும் சிரித்து பேச மாட்டான். ஆந்தை போல் எப்போதும் உர்ரென்ற ஒரு பார்வை. குழந்தைகளிடம் கூட அப்படிதான் இருக்க வேண்டுமா என்று கனிக்கு தோன்றும்.
போயும் போயும் இவனை எப்படி காயத்ரி காதலித்தாள் என்று அவள் மனதில் எழுந்த கேள்வியை ஒருநாளும் அவள் கேட்டதில்லை.
குழந்தைகளுடன் யோகி உள்ளே இருந்த படுக்கையறையில் படுத்து கொள்ள முற்றத்தின் ஓரமாக பாயை விரித்து போட்டு நாத்தியும் அண்ணியும் படுத்து கொண்டனர்.
காற்று சிலுசிலுவென்று அடிக்க, “இங்க எல்லாம் ஏசியே தேவை இல்ல அண்ணி” என்றாள் காயத்ரி.
“அதென்னவோ உண்மைதான்… ஆமா காயு… நீ இல்லாம குழந்தைங்க தூங்குவாங்களா… நீயும் பேசாம உள்ளே படுத்துக்கோயேன்”
“அதெல்லாம் தூங்கிடுவாங்க… காலைலதான் எல்லா சேட்டையும் நைட்ல எல்லாம் கப்சிப்னு ஆயிடுவாங்க… அவங்க அப்பா இருக்காரு இல்ல”
“ஏன் காயு… உன் புருஷன் எப்பவும் சிடுசிடுன்னுதான் இருப்பாரா? உன்கிட்ட கூட சிரிச்சு பேச மாட்டாரா?” என்று கனி தன் மனதில் உறுத்தி கொண்டிருந்த கேள்வியை கேட்டுவிட
“அப்படி எல்லாம் இல்ல அண்ணி… அவங்க வீட்டு சொந்தகாரங்க வந்தா நல்லா சிரிச்சு பேசுவார்… அதுவும் அவங்க அக்கா பசங்க எல்லாம் வரும் போது அவரை பார்க்கணும் நீங்க… ஆளே மாறி போயிருப்பாரு… எல்லாத்துக்கும் மேல யோகி ஒன்னும் அவ்வளவு மோசமெல்லாம் இல்ல
நல்ல மாதிரிதான்… என்னை நல்லாதான் பார்த்துக்கிறாரு… அம்மா அப்படி பேசிட்டாங்கன்னுதான் அவங்க மேல கோபம்… மத்தபடி பொண்ணுங்க விஷயத்துல எல்லாம் அவரை மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது தெரியுங்களா” என்றவள் கணவனை பற்றி பாராட்டு பத்திரம் வாசிக்க தொடங்கவும் கனி எரிச்சலடைந்தாள்.
“அதானே… புருஷன் எப்படி இருந்தாலும் இந்த பொண்ணுங்க விட்டு கொடுக்கவே மாட்டீங்களே” என்று சொல்லி கொட்டாவி விட்டபடி, “எனக்கு தூக்கம் வருதுபா… குட் நைட்” என்று திரும்பி படுத்து கொண்ட போது கனியின் யோசனை எங்கெங்கோ நகர்ந்தது.
காயத்ரி சொல்வது போல யோகி பெண்கள் விஷயத்தில் அத்தனை யோக்கியமானவனா?
இப்போதும் அன்று நடந்த சம்பவம் அவளுக்கு கனவா நினைவா என்று குழப்பமாக இருந்தது. ஒருமுறை காயத்ரி குளியலறையில் வழுக்கி விழுந்து காலை உடைத்து கொண்டாள். அவளின் மகன் சசி அப்போது எட்டு மாத குழந்தை.
அவளின் மாமியாரோ அண்ணன் மகனின் கல்யாணத்துக்கு போயே தீர வேண்டுமென்று பிடிவாதமாக நின்றார். யாருமே உதவிக்கு இல்லாமல் காயத்ரி அவதியுற்ற போதுதான் வேறு வழியில்லாமல் கனி உதவிக்கு சென்று அவர்கள் வீட்டில் தங்கினாள்.
அம்பிகா மீது யோகிக்கு கோபம் என்பதால் அவர் வருவதை அவன் விரும்பவில்லை. இரண்டு நாட்கள்தானே என்றுதான் சென்றாள். ஒரு நாள் கூட அவளிடம் அவன் முகம் கொடுத்து பேசவில்லை. நிமிர்ந்து அவளை பார்த்தது கூட இல்லை.
இரவு நேரங்களில் கணவன் மனைவி ஒரு அறையிலும் அவள் தனி அறையிலும் படுத்த கொண்ட போதுதான் அந்த கேவலமான சம்பவம் நடந்தது.
அவள் ஆழ்ந்து உறக்கத்தில் இருந்தாள். சட்டென்று அவள் உள்ளுணர்வு உந்தவும் கொஞ்சமாக அவள் விழிப்படையும் போது யாருடைய மூச்சு காற்றோ அவள் முகத்தில் உஷ்ணமாக மோதியது.
அவள் அடித்து பிடித்து எழுந்து கொள்ள முயலும் போது அவளை அசைய விடாமல் அந்த கரங்கள் மூர்க்கமாக அவளை அணைத்து பிடித்து கொண்டதில் அவளால் நகர முடியவில்லை. கத்தி கூப்பாடு போடுவதற்கு முன் அந்த உருவம் அவள் உதட்டை கவ்வி கொண்டன. மிகவும் பிராயத்தனப்பட்டு அவள் போராடி அந்த உருவத்தை விலக்கி எழுந்து விளக்கை போட்ட போது அங்கே எந்த மனிதனின் அரவமும் இல்லை.
அவள் பதறி துடித்து, “காயு காயு” என்று அவர்கள் அறை கதவை தட்டிய போது யோகிதான் வந்து திறந்தான்.
சாதாரணமாக அவளை ஏறிட்டவன், “காயு தூங்குறா… என்ன வேணும்… இந்நேரத்துல எதுக்கு இப்படி கதவை தட்டினீங்க… குழந்தை வேற தூங்குறான்” என்று எரிச்சலுடன் மொழிய, அவளுக்கு புரியவில்லை.
ஒரு வேளை தான் ஏதாவது கனவு கண்டு பயந்துவிட்டோமோ என்று எண்ணி, “இல்ல ஒன்னும் இல்ல” என்று அமைதியாக திரும்பிவிட்டாள். தண்ணீர் குடித்துவிட்டு படுக்கையில் படுத்தவளுக்கு இரவெல்லாம் உறக்கம் வரவில்லை. மீண்டும் அந்த உருவம் வருமோ என்று பயந்தபடியே புரண்டு கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் ஏதேதோ காரணம் சொல்லி அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டாள். நடந்த விஷயத்தை பற்றி அம்பிகாவிடம் மேலோட்டமாக தெரிவிக்க, அவரோ ஏதோ காத்து கருப்பு அடித்திருக்கும் என்று கோவிலுக்கு அழைத்து சென்று பூசாரியை வைத்து வேப்பிலை அடிக்க வைத்து விபூதி இட்டுவிட்டார்.
இப்போது அந்த சம்பவத்தை பற்றி நினைத்தாலும் அவள் உடல் முழுவதும் கூசி போகும். அது உண்மையில் காத்து கருப்பின் வேலையென்று தோன்றவில்லை. யோகியை தவிர அப்போது அந்த வீட்டில் வேறு ஆண்களும் இல்லை.
அவள் இந்த யோசனையில் இருக்கும் போது ‘க்ளங்’ என்ற சத்தத்துடன் அவள் கைபேசியில் குறுந்தகவல் வந்து விழுந்தது. எடுத்து பார்த்தாள்.
திருநாதான், ‘தூங்கிட்டியா கனி’ என்று கேட்டு அனுப்பி இருந்தான். அந்த நொடி உள்ளுர குமைந்து கொண்டிருந்த உஷ்ணமெல்லாம் அணைந்து உள்ளம் குளிர்ந்து போனது.
மிருக ஆணை விட மனித ஆண் புத்திசாலியாக மாறியதன் விளைவு, மனித மூளை பெரிதானது. இந்த பெரிய மூளை அபாரமானது மட்டுமல்ல. ரொம்பவே பாரமானதும் கூட.

Quote from jamunarani on June 1, 2022, 5:41 PMயோகி மாதிரி ஆட்களையெல்லாம் நிஜத்தில் எதுவும் பண்ண முடியலைனாலும் கதையிலாவது ஏதாவது பண்ணுங்க
யோகி மாதிரி ஆட்களையெல்லாம் நிஜத்தில் எதுவும் பண்ண முடியலைனாலும் கதையிலாவது ஏதாவது பண்ணுங்க
Quote from chitti.jayaraman on June 1, 2022, 7:54 PMGayatri ku yogi eppadi nu teriala nallavan nu ninaichitu iruka ippadi irukuravan eppavum pondatti kitta nallavan ah nadichitu irupan ledu kettavan, thiru kuda ivalai purimjikuvana nu doubt ah iruke, nice update dear thanks
Nalla enjoy pannumga pa
Gayatri ku yogi eppadi nu teriala nallavan nu ninaichitu iruka ippadi irukuravan eppavum pondatti kitta nallavan ah nadichitu irupan ledu kettavan, thiru kuda ivalai purimjikuvana nu doubt ah iruke, nice update dear thanks
Nalla enjoy pannumga pa
Quote from Thani Siva on June 9, 2022, 8:26 PMயோகிதான் கனிகிட்ட வாலாட்டி இருப்பான் 😡
இவனுங்களை எல்லாம் என்ன செய்தால் தகும்..... ச்சை .......😡😡😡😡
யோகிதான் கனிகிட்ட வாலாட்டி இருப்பான் 😡
இவனுங்களை எல்லாம் என்ன செய்தால் தகும்..... ச்சை .......😡😡😡😡
Quote from Marli malkhan on May 6, 2024, 11:53 PMSuper ma
Super ma