You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rajeshwari karuppaiya - நானும் நாவலும்

இந்த பதிவை குறித்த உங்கள் கருத்து
சிறப்பு
மிக சிறப்பு
Quote

வாழ்த்துக்கள் ராஜேஸ்வரி

உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். 

உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.

 

Uploaded files:
  • th-7.jpg
Quote

வணக்கம்...

நான் ராஜேஷ்வரி...

எங்க ஊரு ஒரு சின்ன கிராமம்.. பேருந்து வசதி கூட அப்போவெல்லாம் கிடையாது.. டிவி கூட இல்லாத காலகட்டம்.. கதைகள்னா என்னனே தெரியாமதான் வளர்ந்தேன்..

கதைகள் பற்றிய முதல் அறிமுகம் எங்க அம்மாச்சி வீட்டுல தான் கிடைச்சுது.. எங்க மாமா நிறைய படிப்பாங்க.. அந்த கால சிறுவர் மலர் எல்லாம் பெட்டிக்குள்ள அடுக்கி வச்சிருப்பாங்க.. எதேச்சையா அதை கிளறும் போது ஒரு கதை தலைப்பு காமெடியா இருக்கவும் படிச்சேன்.. மூன்று முட்டாள்கள் கதை.. இப்போ வரைக்கும் அந்த கதை நல்லா நியாபகமா இருக்கு..

அப்பிடி சின்ன சின்ன கதைகள் படிச்சிட்டு இருந்த சமயம் முதல் முறையா ராஜேஷ்குமார் நாவல் படிக்க ஆரம்பிச்சேன்.. அப்போ ஆரம்பிச்சது இந்த புத்தக பைத்தியம்..

ஒவ்வொரு முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கும் புத்தகம் படிக்கவே அம்மாச்சி வீட்டுக்கு போவேன்.. இப்படி நாவல்கள் மேல் இருந்த ஆர்வம் அடுத்து கட்டத்திற்கு போனது ரமணிச்சந்திரன் அம்மாவோட லாவண்யா நாவல் மூலமா தான்..

அது தான் வெறும் கிரைம் ஸ்டோரீஸ் மட்டுமே என் விருப்பமா இருந்ததை மாற்றி குடும்ப கதைகள் பக்கம் திருப்பியது.. அப்பயும் கல்லூரி நூலகத்தோடே என்னோட நாவல் படிக்கறதும் முடிஞ்சிடும்.. வீட்டிலும் ரொம்ப கண்டிப்பு.. கதை புத்தகம் படிக்க கூடாது.. வாய் விட்டு பாடக் கூடாது.. இப்படி நிறைய கண்டிஷன்ஸ்..

நாவல்கள் என்னுடைய வாழ்க்கைல முக்கியமானதா மாறியது கல்யாணத்துக்கு பிறகு தான்.. என்னோட முதல் குழந்தை வயிற்றில் இருக்கும் போது தண்ணி கம்மியா இருக்குனு எட்டாவது மாசத்துலயே பெட்ல அட்மிட் பண்ணிட்டாங்க..

அப்போ என்னோட மைண்ட் ரிலாக்ஸா இருக்க முழு காரணம் ரமணி அம்மா புத்தகங்கள் தான்... ட்ரிப்ஸ் போட்ட கை வலிச்சாலும் பரவாயில்லைனு வெறிகொண்டு படிச்ச நேரம் அது..

அதன் பிறகு ஒரு வருடம் பாப்பாவை கவனிக்கறதுலயே போயிருச்சு..

இருபது வயதிலயே  கல்யாணம் பண்ணி முதல் திருமண நாள் வரும் முன்னாடியே குழந்தையும் பெத்தாச்சு.. மனதளவில் எதற்கும் தயாராக இல்லாத காலத்தில் நிறைய ரெஸ்பான்சிபிலிட்டி தலையில் விழவும் ரொம்ப திணறிட்டேன்..

மண்ணோட மண்ணா மக்கி போகவும் துணிஞ்சு அதற்கும் தைரியம் இல்லாமல் கோழையாகி வாழ்க்கையை எதிர் கொள்ள பயந்து பதறி யாரிடமும் எதையும் சொல்ல முடியாம கிட்டத்தட்ட அரைப் பயித்தியம் போலவே ஆக இருந்த நிலையில் எனக்கு கிடைச் வரம் பொக்கிஷம் எல்லாமே புத்தகங்கள் தான்..

எனக்கு வாழ்க்கையை புரிய வச்சு கொஞ்சம் கொஞ்சமாய் செதுக்கிய சிற்பி புத்தகங்கள் தான்.. என்னோட ஒவ்வொரு அசைவிலும் செயலிலும் கண்டிப்பா நான் படிச்ச நாவல்களின் தாக்கம் நிச்சயம் இருக்கும்..

இப்போவெல்லாம் நிறையவே மறியாச்சு.. எதையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கறது முதற்கொண்டு என்னை ரொம்பவே ப்ராக்டிகலா மாத்திருக்கு...

இதுவரைக்கும் நிறைய இழப்புகள் இருந்தாலும் எதற்கும் நான் நிறைய வருத்தப்பட்டதோ அழுததோ கிடையாது... எதையும் எடுக்கற மனப் பக்குவம் தந்தது புத்தகங்கள் தான்..

ஆனால் என்னை நெகிழ வைக்கிற அழ வைக்கிற உரிமை நாவல்க்கு மட்டுமே இருக்கு.. சில கதைகள் படிக்கும் போது வேதனை அதிகம் ஆகி தொண்டையில் நிறுத்தி அதையும் மீறி கண்ணீர் விட்ட தருணங்கள் நிறைய இருக்கு..

என்னுடைய இரவுப் பொழுதுகளை விடிய விடிய ஆட்கொண்ட நாவல்கள் நிறைய இருக்கு.. சிறு பிள்ளையாய் மாறி கண்ணீர் வர வயிறு வலிக்க விழுந்த விழுந்து சிரிக்க வைத்த நாவல்கள் மிக மிக அதிகம்..

என் ஊனாகி உயிராகி என்னுள் நிறைந்து நிற்கின்றன புத்தகங்கள்.. என் குழந்தைகளுக்கு ஈடாய் அவற்றை நேசிக்கிறேன்.. உயிர் மூச்சாய் சுவாசிக்கிறேன்..

கதைகள் படிக்காம என்னோட நாட்கள் முழுமை பெறாது.. இன்னும் எத்தனை வருஷங்கள் வாழ போறேன்னு தெரியாது.. ஆனால் நிறைய நாவல்கள் படிக்கவாச்சும் இன்னும் நிறைய நிறைய ஜென்மங்கள் வேணும்..

உள்ளம் நிறைய பற்று வைத்து

இதயம் நிரம்ப சுவாசித்து

ஒவ்வொரு நாவலிலும்

புதிதாய் ஜென்மம் கொண்டு

பல நூறு ஜென்மங்கள் இதுவரை

எடுத்துவிட்டேன்..

இன்னும் நூறாயிரம்

ஜென்மம் கொள்ள

ஆசை கொண்டேன்..

 

நன்றி 💖💖💖

Quote

#நானும்நாவலும்

//உள்ளம் நிறைய பற்று வைத்து இதயம் நிரம்ப சுவாசித்து ஒவ்வொரு நாவலிலும் புதிதாய் ஜென்மம் கொண்டு பல நூறு ஜென்மங்கள் இதுவரை எடுத்துவிட்டேன்.. இன்னும் நூறாயிரம் ஜென்மம் கொள்ள ஆசை கொண்டேன்..//

மிக அருமையான வரிகள் மனபக்குவத்தை புத்தகங்கள் தருகிறது என்பதை நானும் மிகவும் ஆழமாக நம்புகிறேன். ராஜேஷ்வரியின் பதிவு அற்புதம். நன்றி

You cannot copy content