மோனிஷா நாவல்கள்
selvarani - நானும் நாவலும்
Quote from monisha on October 25, 2020, 6:52 PMவாழ்த்துக்கள் செல்வராணி
உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
வாழ்த்துக்கள் செல்வராணி
உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
Uploaded files:Quote from Selvi pandiyan on October 30, 2020, 12:19 PMநான் எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து படிக்கும் பழக்கம் இருக்கு.அப்பா பத்திரிகை ஏஜெண்ட் எடுத்து இருந்ததால் இந்தியாவில் வெளியாகும் அத்தனை புத்தகங்களும் கடைக்கு வரும்.அப்பா சிறந்த படிப்பாளி.அம்மாவுக்கு படித்து காட்டுவார். கொஞ்சம் நான் வளர்ந்ததும் படிக்கும் வேலை என்னுடையது.ஏற்ற இறக்கங்களுடன் படிக்க சொல்லிக்கொடுப்பார்.
பைண்ட் பண்ணிய கதைகள் எங்க வீட்டில் அடுக்கப்பட்டிருக்கும்.மாந்தருள் ஒரு மாணிக்கம்...காந்திஜியின் கதை,தியாகபூமி,பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்,ராமகிருஷ்ண பரமஹம்சரின் கதைகள்,அருட்பெரும் ஜோதி வள்ளலாரின் கதைகள்,காஞ்சி பெரியவரின் கதைகள் இப்படி படித்து சொல்லவேண்டும்.அப்படியே சித்திரக்கதைகள் எனக்கு படிக்க கொடுப்பார்.அப்படி ஆரம்பித்த வாசிப்பு வயதிற்கு ஏற்றபடி வளர்ந்தது.முதலில் படித்த அம்புலிமாமாவில் இருந்து குமுதம் பத்திரிகையில் கடல்கன்னி என ஒரு சித்திரக்கதை ,விகடனில் வரும் ஜோக்குகள்,அப்படியே சிறு கதைகள்,தொடர்கதைகள்,நாவல்கள் என பரிணாமம் எடுத்தது!
சாவி அவர்களின் வாஷிங்டனில் திருமணம் கதை மட்டும் வீட்டுக்கு யார் வந்தாலும் ஆயிரம் முறையாவது அப்பா படிக்க வைத்திருப்பார்!ரசித்து அனைவரும் கேட்க சிரித்து சிரித்து மகிழ்ந்திருப்பார்.அப்போது ராணி பத்திரிகையில் வரும் குரங்கு குசலா,கல்கண்டு பத்திரிகையில் வரும் துணுக்குகள்,இப்படி படித்தவள் தமிழ்வாணன் அவர்களின் சங்கர்லால் வஹாப் கதையில் மயங்கி துப்பறியும் கதையில் ஆர்வம் கொண்டு துப்பறியும் சாம்பு என கொஞ்ச நாள் படித்தேன்.பின்னர்தான் ராணிமுத்து அறிமுகம்.எக்கச்சக்கமான கதைகள்,எழுத்தாளர்கள் அறிமுகம் ஆகியது அப்போதுதான்.மணியன் அவர்களின் தேன் சிந்தும் வானம்,குரும்பூர் குப்புசாமியின் பார் பார் பட்டணம் பார்,சிவசங்கரியின் எதற்காக,ஏன் ,இப்படி ஆரம்பித்து குமுதம் விகடனில் இவர்களின் தொடர் படிக்க ஆரம்பித்தேன்.பின்னர் என் வாசிப்பு விரிவடைந்தது.
இதயம் பேசுகிறது பத்திரிகையில் மணியனின் தொடர்கதைகள்,பயணக்கட்டுரைகள்,அதற்கு முன் அவர் விகடனில் எழுதிய இதய வீணை(இது திரைப்படமாக வந்தது),உன்னை ஒன்று கேட்பேன்,உண்மை சொல்ல வேண்டும் ,சிவசங்கரியின் நாற்பத்தேழு நாட்கள்,தொடர்ந்து அவரின் பல நாவல்கள்..மலையின் மறு பக்கம்,பாலங்கள்,சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது ,அவன் அவள் அது ,வாஸந்தியின் நாவல்கள்,இந்துமதியின் நாவல்கள்,உஷாசுப்ரமணியம்,ஜோதிர்லதாகிரிஜா இப்படி பெண்கள் எழுத்துகளிலிருந்து சுஜாதாவின் பக்கம் திரும்பினேன்.என் பதின்ம வயதில் அவர் எழுத்துகளில் தீராத மயக்கம்!அவர் கதைகள் பற்றி சொல்ல தேவையில்லை.கணேஷ் வசந்த்!வசந்தை லவ் பண்ணாதவர்களும் உண்டோ!?நைலான் கயிறு,வசந்தகாலக்குற்றங்கள்,பிரிவோம் சந்திப்போம்,கனவுத்தொழிற்சாலை,விஞ்ஞானக்கதைகள்,ரத்தம் ஒரே நிறம் எல்லாம் அவரின் மாஸ்டர் பீஸ்கள்.புஷ்பா தங்கதுரையின் கதைகள் படித்துதான் இப்படியும் கதைகள் இருக்குன்னே தெரியும்!அன்னிக்கு அவை ஆபாசமாக தெரிந்தது!இன்று சில கதைகள் படிக்கும் போது சிரிப்புதான் வருது!அவரின் இன்னொரு பரிமாணம் ஶ்ரீ வேணுகோபாலன் என்னும் பெயரில் எழுதிய திருவரங்கன் உலா!ரா கி ரங்கராஜன் அவர்களின் பட்டாம்பூச்சி,ஜெனிபர்,லாரா,ஹேமா ஹேமா,பி வி ஆர் அவர்களின் கிண்டி ஹோல்டான்,சென்ட் ரல் இப்படி விரிந்த வாசிப்பு ஆன் லைன் அறிமுகம் ஆனதும்,அமுதா ப்ளாக்கில் இன்று நமக்கு பரிச்சயமான அத்தனை எழுத்தாளர்களும் அறிமுகம்.அப்படியே தொடர்கிறது வாசிப்புகள்.
திருமணத்துக்கு பின் தான் ரமணி சந்திரனின் நாவல்கள் அறிமுகம்.லைப்ரரியில் ஆரம்பித்து அவரின் எழுத்தில் மயங்கி கிடந்தது ஒரு காலம்!வயதின் முதிர்ச்சிக்கு ஏற்ப இன்று அவ்வவகை கதைகள் ஆர்வமில்லை!பெண்களை அப்யூஸ் பண்ணி வரும் கதைகள்,வில்லன் போன்ற நாயகர்கள் ,அடங்கி கிடக்கும் பெண்கள் ,ஆர் சி அவர்களின் கதைகளை அரைத்து புதிதாக தரும் கதைகளில் ஆர்வம் இல்லை.சலிப்பு தட்டிடுச்சு!இன்றும் புதிதாக நிறைய பேர் அசத்துகிறார்கள்.பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை .யாருக்கும் வருத்தம் வரக்கூடாது.ஆனால் என் விமர்சனங்களில் என்னை கவர்ந்த கதைகளை பாராட்டி விடுகிறேன்.சரித்திரக்கதைகளில் என் பேவரிட் பொன்னியின் செல்வன்,சாண்டில்யனின் கதைகள்.பாலகுமாரனை விட்டுட்டு இந்த அனுபவம் முடியாதே!அவரின் அத்தனை கதைகளும் நல்லாருக்கும்.இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா அவரின் திரையுலக அனுபவங்களை அழகா சொல்லியிருப்பார்.ஒரு உடையார்,இரும்புக்குதிரைகள்,தாயுமானவன்,ஆனந்த வயல்,அனுராதா ரமணனின் அட்டகாசமான கதைகள் ..சிறை அந்த காலத்தில் ஒரு பெண்ணியம் பேசும் கதை!இன்னும் நினைவுக்கு பல கதைகள் வரவில்லை.கி ரா அவர்களின் எழுத்து எஸ் ராமகிருஷ்ணன் ,வண்ணதாசன் மதன் இப்படி சற்று மாறுபட்ட எழுத்துகளும் படிப்பதுண்டு.
கதை படிப்பதால் யாரும் கெட்டு போய்விட மாட்டார்கள் என சில கருத்துகள் கண்ணில் பட்டது.என் பதில் கதைகள் நம் மனதில் ஆழப்பதிந்து விடுகிறது.அதன் தாக்கம் எவ்வளவு நாட்களானாலும் மறைவதில்லை.சமூக அக்கறை கண்டிப்பாக எழுத்தாளர்களுக்கு வேண்டும் என்பது என் கருத்து.
நான் எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து படிக்கும் பழக்கம் இருக்கு.அப்பா பத்திரிகை ஏஜெண்ட் எடுத்து இருந்ததால் இந்தியாவில் வெளியாகும் அத்தனை புத்தகங்களும் கடைக்கு வரும்.அப்பா சிறந்த படிப்பாளி.அம்மாவுக்கு படித்து காட்டுவார். கொஞ்சம் நான் வளர்ந்ததும் படிக்கும் வேலை என்னுடையது.ஏற்ற இறக்கங்களுடன் படிக்க சொல்லிக்கொடுப்பார்.

Quote from monisha on November 1, 2020, 9:53 PMwow seriously excellent
வாசிப்பு என்பது மிக பெரிய பயணம்.. உங்கள் வாழ்க்கை பயணத்தோடு அந்த வாசிப்பு பயணமும் உங்களுடன் இணைந்து தொடர்ந்திருக்கிறது. எத்தனை எழுத்தாளர்கள் கதைகள்... உங்க நினைவாற்றல் பார்த்து ஆச்சரியப்படுவதா அல்லது லயித்து படிக்கும் உங்கள் வாசிப்பு திறனை பாராட்டுவதா என்று தெரியவில்லை. அருமை செல்வா க்கா
wow seriously excellent