மோனிஷா நாவல்கள்
Shamili Dev's Ennai ma(r)nanthayo-1
Quote from monisha on April 23, 2020, 12:32 PMவணக்கம் மக்களே!
என்னை மண(ற)ந்தாயோ- ஒரு இயல்பான காதல் மற்றும் குடும்ப கதை.
படித்து மறவாமல் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் ஆதரவை தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு....
**********
கெட்டிமேளம் கெட்டிமேளம்
விஜய ஸ்ரீ மஹால்
வண்ண மின்விளக்கு தோரணங்களால் மின்னி கொண்டிருந்தன.
மேளதாள சத்தங்களில் பிரமுஹுர்த்ததில் நடக்க தயாராகி கொண்டிருந்தது அவர்களின் திருமணம்.
த்ரிஷ்யமாலா வெட்ஸ் பிரபா...
அந்த மண்டப்பத்தின் பிரமாண்ட வாயிற்புறத்தில் பூவலங்கரங்களால் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்தன மணமக்களின் பெயர்கள்!
உள்ளே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டம் நிரம்பி வழிய, முஹுர்த்த வேளை நெருங்க மணமேடையில் வந்தமர்ந்தாள் அந்த அழகிய காரிகை த்ரிஷ்ய மாலா!
யாக குண்டத்தின் முன் குனிந்த தலையுடன் திருமண பெண்ணிற்கே உரிய நாணத்துடன்...
ஆம். அதை நாணம் என்று தான் அங்குள்ள அனைவரும் நினைத்துக்கொண்டிருப்பர்.
ஆனால் த்ரிஷ்யமாலாவிற்கு மட்டும் தான் தெரியும் அவள் நாணத்தினால் தலைகுனிய வில்லை. தான் எடுத்த முயற்சி அனைத்திலும் தோல்வியுற்ற வேதனையிலும் அவமானத்திலும் தலையை குனிந்து அமர்ந்து கொண்டு இருந்தாள் என்று.
பிரபா வேட்டி சட்டையில் ஆணுக்கே உண்டான கம்பிரத்துடன் மணமேடையை நோக்கி வந்து கொண்டு இருந்தான். எப்பொழுதும் வசீகரம் குடிகொள்ளும் அவன் முகம் இன்று குழப்பத்தை தத்தெடுத்து கொண்டது.
த்ரிஷ்யாவின் மனதில் என்ன உள்ளது என்று அவனால் கணிக்க முடியவில்லை. தன்னை கண்டாலே நெருப்பை உமிழும் அவள் கண்கள் இப்பொழுதெல்லாம் இரக்கத்தாலும் வேதைனையாலும் கரைந்துகொண்டிருப்பதன் ரகசியம் அவனுக்கு புலப்படவே இல்லை.
ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பயிற்சி ஆசிரியராக பணி புரிந்து வருகிறான். அதே நிறுவனித்தில் பயிற்சி மாணவர்களாக இருப்பவர்கள் நல்ல பதிப்பெண்கள் எடுத்தால் அவர்களுக்கு பயிற்சி ஆசிரியாக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
விரும்பாதவர்கள் தொழில்நுட்பவியலாளராக தம் பணியை தொடரலாம். பிரபாவிற்கு கற்பித்தல் கை வந்த கலை. பிடித்தமானதும் கூட. அதனால் அவன் பயிற்சி ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்துக்கொண்டான்.
இந்த நிலையில் த்ரிஷ்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அவன் பெற்றோரிடம் தெரிவித்தான். பிள்ளை என்றுமே தவறான முடிவு எடுக்க மாட்டான் என்று அசையா நம்பிக்கை வைத்திருந்த சந்தான கிருஷ்ணன் உடனே பெண் வீட்டாரிடம் பேசி இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்.
இங்கு தான் பிரபாவிற்கு இடித்தது. த்ரிஷ்யமாளவிற்கு அவனை அறவே பிடிக்காது. எப்படியும் அவள் எளிதில் சம்மதிக்க போவதில்லை என்று தான் அவன் நினைத்தான். அப்படி அவள் சம்மதிக்காத பட்சத்தில் அவளுக்கு எதிராக இருக்கும் சில சாட்சியங்களை வைத்து மிரட்டியாவது சம்மதிக்கவைக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் எந்த காரணம் கொண்டும் அவளை விட்டுக்கொடுக்க அவன் தயாராக இல்லை
அவளாக சம்மதித்தாளா இல்லை பெற்றோர்கள் வற்புறுத்தினார்களா என்று குழப்பமாய் இருந்தது. எதுவாக இருந்தாலும் இன்று தெரிந்து விடப்போகிறது என்று அப்போதைக்கு அமைதி அடைந்தான். அவள் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏன் தலையை கூட நிமிரவில்லை.
"ஷியாம் ஹேய் ஷியாம்! கழுத்து வலிக்கலையா உனக்கு? இல்லனா தூங்கிட்டியா?"என்று நக்கல் தொனியில் கேட்டவன் அவளை பார்த்து நகைத்தான்.
த்ரிஷயமாலாவை ஷியாம் என்று தான் அவன் அழைப்பான். ஆசையாக அல்ல வெறுப்பேற்றுவதற்காக!
வேறு சமயமாக இருந்திருந்தால் அவள் கழுத்தில் கொண்டிருந்த மாலையை கொண்டே அவனை துவம்சம் செய்து இருப்பாள். அவளின் பெயரை இப்படி யார் சுருக்கி அழைத்தாலும் அவளுக்கு பிடிக்காது. அனால் இன்று நிலைமை முற்றிலும் வேறு.
அவனை ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி ஒரு புறம் என்றால் எப்படியெல்லாம் சந்தோஷமும் குதூகலமும் நடக்கவேண்டிய அவள் திருமணம் இப்படி தன்னை களையிழக்க செய்கிறதே என்ற சுயபச்ச்தாபம் ஒருபுறம்.
அவளை அப்படி கிண்டல் செய்ததற்கு அவளுக்கு கோபம் வரும் அல்லது குறைந்த பட்சம் அவள் அக்னி பார்வை கொண்டு தன்னை எரிக்க முயற்சிப்பாள் என்றவன் நினைத்திருக்க, அவன் எண்ணத்திற்கு நேர்மாறாக அவள் தலையை கூட நிமிராமல் இருந்தது அவனுக்கு அதிர்ச்சியை அளித்தது.
என்னதான் வற்புறுத்தல் பேரில் திருமணத்திற்கு சம்மதித்தாலும் பிறவி குணம் என்பது மாறாதே. அல்லது இவள் குணமே இதுதானோ.
தான் தான் இவளை புரிந்துகொள்ளாமல் இருந்து விட்டோமோ? இல்லை இல்லை. இதன் பின்னணியை தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தான்.
அதற்குள், "கெட்டிமேளம் கெட்டிமேளம் மாங்கல்யத்தை கட்டுங்கோ" என்று ஐயர் கூற அவள் கழுத்தில் மஞ்சள் கயிற்றை அழகாய் பூட்டினான். அவன் தாலியை கட்டும் பொழுது அவள் கழுத்தில் அவன் விரலால் வேண்டும் என்றே போட்ட கோலம் அவள் உடலை ஒரு நிமிடம் சிலிர்க்க செய்தது. அதற்கு பிறகு நடந்த சம்பிரதாயம் எதுவும் அவள் கவனத்தில் நிற்கவில்லை.
அன்று இரவு எப்பொழுது வரும் என்று அவர்கள் இருவருமே காத்துகொண்டு இருந்தனர். அனால் அது காதலாலோ இல்லை ஆசையினாலோ இல்லை. இருவருக்குமே கேட்கவேண்டிய பேசவேண்டிய விஷயங்கள் நிறையவே இருந்தது.
ஆனால் அந்த நேரம் வந்த பொழுது வேண்டியதை பேசுவதோ கேட்பதோ அவ்வளவு எளிமையாக இல்லை. சினிமாவில் வருவது போல் பால் சோம்பும் கையுமாகவெல்லாம் அவள் நிற்கவில்லை.
அவள் அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி நேராக தன் படுக்கையில் சென்று படுத்துகொண்டாள். தூக்கம் வரவில்லை என்றாலும் கண்களை அழுத்தமாக மூடி கொண்டாள்.
பிரபா அந்த அறையில் இருப்பதையோ அந்த அறையில் அலங்காரத்தையோ எதையும் அவள் பொருட்படுத்தியது போல் தெரியவில்லை.
பிரபாவிற்கு தன் கோபத்தை கட்டுப்படுத்தவது மிகவும் சிரமமாக இருந்தது. அதற்குள் அவன் மனசாட்சி அவனை கேலி செய்தது.
"டேய் பிரபா. நீ வேற என்ன எதிர்பார்க்க முடியும் அதுவும் இவகிட்ட. அமைதியா படுத்துட்டாளேன்னு சந்தோஷ படுவியா. அவ சாமியாடா ஆரம்பிச்ச உனக்கு கல்யாண நாள் அன்னைக்கே பாலு தான்"
'கரெக்ட்டு தான். ஆனாலும் எனக்கு அவ கோபத்தை தாங்குற சக்தி இருக்கு. அமைதிய கொஞ்சம் கூட தாங்க முடியல.'
'அதுக்கு சும்மா படுத்துட்டு இருக்குற சிங்கத்த தூக்கி மடில போட்டுக்க போறியா? வேணாம் டா' என்று மீண்டும் அவன் மனசாட்சி எச்சரித்தது. இருந்தாலும் பிரபாவின் மனம் கேட்கவில்லை.
'ஷியா... ம்ம்க்கும் காலைல ஏதோ நல்ல மூட்ல இருந்துட்டா. இப்போ வேளைக்கு ஆகாது.' என்று எண்ணி கொண்டவன் வெகுஜாக்கிரதையாக,
"த்ரிஷ்யமாலா" என்று அழைத்தான்.
பயத்தினாலோ இல்லை அவளை அதிர விட கூடாது என்ற அக்கறையினாலோ ரொம்பவும் மெதுவாக அழைத்தான். அவள் கண்களை இன்னும் இறுக்க மூடிக்கொண்டாள். இம்முறை அவன் பொறுமையிழந்து "த்ரிஷ்யா" என்று உரக்க அழைத்தான்.
அவள் மிரண்டு எழுந்துமிரளும் விழிகளுடன் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
பயமா? என் த்ரிஷ்யவிற்கா? நம்ப முடியவில்லை அவனால்.
பொறுமையுடன், "என்ன ஆச்சுமா? ஏன் என்னவோ போல் இருக்க?" என்று கேட்டான்.
"ம்ஹும்... ஒண்ணுமில்ல" என்று மெல்லிய குரலில் மிரட்சியோடு பதிலளித்தாள்.
"இல்லயே உன்முகத்தை பார்த்தாலே தெரியுது. என்னவோ சரியில்ல என்னனு சொல்லு" என்று கேட்டான்.
அவள் அவனை ஒரு புரியாத பார்வை பார்த்து வைத்தாள்.
"இவன் என்ன? நம்மள பத்தி எல்லாம் தெரிஞ்ச மாதிரி கேள்வி கேக்குறான். கல்யாணம் பேசி முடிச்சதுலேர்ந்து இப்போ வரைக்கும் ஒரு தடவை கூட நம்ம கூட பேச முயற்சி கூட பண்ணல. இப்போ என்னடானா ரொம்ப நெருங்கி பழகின மாதிரி பேசுறான். ச்சே பேசுறார். மனசுல கூட மரியாதை குடுக்கணும்." யோசித்து கொண்டே அவனை நிமிர்ந்து பார்க்கும்போது அவள் திடுக்கிட்டாள்.
அவன் முகம் அவளுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. அவள் விலக முயற்சிக்கவில்லை. உள்ளூர சில்லிட்டது. எங்கே இன்றும் தான் எடுத்த முயற்சியில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் தொற்றிக்கொண்டது.
அவனிடம் உண்மையை சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவனை தன்னை நெருங்கவிடக்கூடாது என்பதில் அவள் மிகவும் கவனமாக இருந்தாள்.
அவளின் மோனத்தையே சம்மதமாக எடுத்துக்கொண்டு அவன் மேலும் நெருங்கினான்.
'டேய் பிரபா இதாண்டா சான்ஸு. இதை விட்ட இந்த வேதாளம் எப்போ முருங்க மரம் ஏறும்னு தெரியாது. அப்பறம் இந்த ஜென்மத்துல நீ ப்ரஹ்மச்சாரியவே வாழ்க்கையை ஒட்டவேண்டியது தான்.'
இவ்வாறாக எண்ணிக்கொண்டே அவளது கன்னங்களை அவன் கைகளால் ஏந்தி கொண்டான்.த்ரிஷ்யா சங்கடமாக உணர்ந்தாள். இவன் கைகளில் இப்படியே சிறையுண்டு கிடந்தாள் என்ன என்று அவள் மனம் ஏங்கியது. ஆனால் அப்படி ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை அவளுக்கு இனி அமைப்போவதில்லை என்று வருந்தியவள்,
"பிலீஸ்ங்க வேண்டாம்" என்றவள் தன்னை நிதானப்படுத்தி கொண்டு மெதுவாக கூற,
"வேண்டாம்னா இணைக்கு வேண்டாமா இல்லை என்னைக்குமே வேண்டாமா" என்று சற்றே கடுப்பாக கேட்டான் பிரபா.
அவன் குரலில் இருந்தது கோபமா கிண்டலா என்று அவளால் உணரமுடியவில்லை.
ஆனால் அவன் குரலும் கேட்ட விதமும் அவளை அச்சுறுத்தியது. அவனே மேலும் தொடர்ந்தான்.
"எனக்கு தெரியும் டி. நீயாவது மனசுவந்து என்கூட வாழறதாவது. கல்யாணத்துக்கு நீ சம்மதிச்ச உடனே அப்படியே நான் ஒன்னும் குளுர்ந்துபோய்டல. எந்த குண்டை எப்போ போடபோறியோனு யோசிச்சுட்டே தான் இருந்தேன். இப்போ தான் எனக்கு நல்லா புரியுது. என்ன கல்யாணம் பண்ணி என்கூடவே இருந்து என்ன டார்ச்சர் பண்ணி காலம் முழுக்க தனிக்கட்டையாவே வாழவைக்கும்னு பிளான் பண்ணிட்ட அதானே?'
அவள் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. அவனே மேலும் தொடர்ந்தான்.
"வாயல என்ன வாட்டர்மெலானா... வெச்சுருக்க பேசித்தொல. எப்பப்பாரு மூச்சுவிடாம பேசுவியே இப்போ மட்டும் ஏன் அமைதியா இருக்க." என்றவன் எரிச்சலாக,
அவள் ஒரே ஒரு கேள்வியை தான் கேட்டாள். அதுவே அவன் தலையில் இடியை போட்டது போல இருந்தது.
"நா.. நாம இதுக்கு முன்னாடி பேசி இருக்கோமா?" என்று தயக்கத்தோடும் மிரட்ச்சியோடும் அவள் கேட்டு வைக்க, பிரபா அதிர்ச்சியில் அப்படியே கல்லாக சமைந்துவிட்டான்.
share your comments please
வணக்கம் மக்களே!

இவ்வாறாக எண்ணிக்கொண்டே அவளது கன்னங்களை அவன் கைகளால் ஏந்தி கொண்டான்.
த்ரிஷ்யா சங்கடமாக உணர்ந்தாள். இவன் கைகளில் இப்படியே சிறையுண்டு கிடந்தாள் என்ன என்று அவள் மனம் ஏங்கியது. ஆனால் அப்படி ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை அவளுக்கு இனி அமைப்போவதில்லை என்று வருந்தியவள்,
"பிலீஸ்ங்க வேண்டாம்" என்றவள் தன்னை நிதானப்படுத்தி கொண்டு மெதுவாக கூற,
"வேண்டாம்னா இணைக்கு வேண்டாமா இல்லை என்னைக்குமே வேண்டாமா" என்று சற்றே கடுப்பாக கேட்டான் பிரபா.
அவன் குரலில் இருந்தது கோபமா கிண்டலா என்று அவளால் உணரமுடியவில்லை.
ஆனால் அவன் குரலும் கேட்ட விதமும் அவளை அச்சுறுத்தியது. அவனே மேலும் தொடர்ந்தான்.
"எனக்கு தெரியும் டி. நீயாவது மனசுவந்து என்கூட வாழறதாவது. கல்யாணத்துக்கு நீ சம்மதிச்ச உடனே அப்படியே நான் ஒன்னும் குளுர்ந்துபோய்டல. எந்த குண்டை எப்போ போடபோறியோனு யோசிச்சுட்டே தான் இருந்தேன். இப்போ தான் எனக்கு நல்லா புரியுது. என்ன கல்யாணம் பண்ணி என்கூடவே இருந்து என்ன டார்ச்சர் பண்ணி காலம் முழுக்க தனிக்கட்டையாவே வாழவைக்கும்னு பிளான் பண்ணிட்ட அதானே?'
அவள் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. அவனே மேலும் தொடர்ந்தான்.
"வாயல என்ன வாட்டர்மெலானா... வெச்சுருக்க பேசித்தொல. எப்பப்பாரு மூச்சுவிடாம பேசுவியே இப்போ மட்டும் ஏன் அமைதியா இருக்க." என்றவன் எரிச்சலாக,
அவள் ஒரே ஒரு கேள்வியை தான் கேட்டாள். அதுவே அவன் தலையில் இடியை போட்டது போல இருந்தது.
"நா.. நாம இதுக்கு முன்னாடி பேசி இருக்கோமா?" என்று தயக்கத்தோடும் மிரட்ச்சியோடும் அவள் கேட்டு வைக்க, பிரபா அதிர்ச்சியில் அப்படியே கல்லாக சமைந்துவிட்டான்.
share your comments please
Uploaded files:
Quote from Krishnapriya Narayan on April 23, 2020, 1:33 PMSuper.
Good start Shamili.
Keep going.🤩
Super.
Good start Shamili.
Keep going.🤩
Quote from Shamili Selvaraj on April 23, 2020, 4:29 PMமிக்க நன்றி _/\_
மிக்க நன்றி _/\_