மோனிஷா நாவல்கள்
Shamili Dev's Ennai ma(r)nanathayo-11
Quote from monisha on May 16, 2020, 2:07 PM11
த்ரிஷ்யா அலறிய அலறலில் பிரபாவுமே பயந்துதான் போனான். அவனுக்கு ஒரு நிமிடம் தன் கண்களையே தன்னால் நம்ப முடியவில்லை. நித்தமும் அவன் கனவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் தேவதை இன்று அவன் கண்முன் விழுந்துகிடக்கிறாள் என்பதை.
கண்களை மீண்டும் அழுந்த துடைத்துக்கொண்டு பார்த்தான். த்ரிஷ்யா விழுந்துகிடந்த தோற்றம் ஒரு அழகிய பதுமை படுத்த நிலையில் இருப்பதை போன்று அவனுக்கு தோன்றியது. மெல்ல தன்னை சுதாரித்து கொண்டு ஒருவாறு எழுந்து நின்ற த்ரிஷ்யா அமைதியாக திரும்பி நடக்க முயன்றாள்.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
'இவன் பிரபான்னா அப்போ அந்த வீட்டுல தூங்கிட்டு இருக்கறது யாரு ? இப்போ எப்படி இவனிடம் இருந்து தப்பிப்பது' என்று யோசித்தவள் மனதில் சட்டென்று பாத்திமா ஞாபகம் உதித்தது.
'இவள் எங்கே போய்விட்டாள். இங்கேயே இருந்து யாரவது வருகிறார்களா இல்லயான்னு தானே பார்க்க சொன்னோம்.' என்று எண்ணமிட்டபடியே சுற்றும் முற்றும் ஆராய்ந்தாள்.
அதற்குள் பின்னாலிருந்து, "ஏய்" என்று ஒரு குரல் உசுப்பியது. அங்கே பிரபா அவளை அதட்டியபடி கோபமாக முறைத்துக்கொண்டு நின்றான்.
"நீ இந்த நேரத்துல இங்க என்ன பண்ற. கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா? மணி என்ன தெரியுமா?" என்று கேட்டவன் அப்பொழுது தான் மேல இருந்து வரும் அலறல் சத்தத்தை கவனித்தான்.
அதிர்ச்சியும் சந்தேகமுமாக மீண்டும் அவளை ஏறிட்டான். "ஏய்... நீ இப்போ என் வீட்டுல இருந்து தானே ஓடிவந்த.. மேல என் நண்பன் கத்திக்குட்டு இருக்கான். என்ன செஞ்ச அவனை?" என்றவன் குரல் ரௌத்திரமாக ஒலித்தது.
த்ரிஷ்யா மனதிற்குள் 'டீயூப் லைட்டுக்கு எல்லாம் இப்போ தான் உரைக்குதா?' என்று நினைத்தவள், "நீயே மேல போய் பாத்துக்கோ என்று திரும்பி நடக்கலானாள்"
அதற்குள் அவன் அவளின் இடது கையை பிடித்து இழுத்த இழுப்பில் அப்படியே அவன் மீது சரிந்து விழப்போன த்ரிஷ்யா லாவகமாக சமாளித்து நின்று பின் ரௌத்திரமாக அவனை முறைத்தாள்.
"எவ்வளவு தைரியம் இருந்தா என் கைய பிடிப்ப?" என்று கோபமாக கேட்டபடியே த்ரிஷ்யா தன் வலதுகை கொண்டு பிரபாவை அறைய ஒங்க அந்த கையும் அவன் கைச்சிறைக்குள் அகப்பட்டுக்கொள்ள அவள் இரண்டு கைகளையும் சேர்த்து இழுத்து அவளை அவனுடன் அணைத்தபடி நெருக்கமாக சிறைப்படுத்தி கொள்ள, த்ரிஷ்யாவின் முதுகு அவன் மார்பின் மேல் உரசியபடி இருக்க அவளின் இரு கைகளையும் இடை பகுதியில் வைத்து பிடித்துக்கொண்டிருந்தான்.
த்ரிஷ்யாவின் இதயம் ஒருநொடி நின்று பின் துடித்தது. பிரபாவின் கைசிறைக்குள் அகப்பட்டுக் கொண்டவள் தற்காப்பு காலையில் பிளாக் பெல்ட் வாங்கியவள் என்று கூறினாள் யாரால் நம்ப முடியும். அவள் பயின்ற கராத்தே ஜூடோ எதுவும் இப்போழுது அவளுக்கு கை கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட அவள் கற்றகலைகள் அனைத்தும் மறந்து போனவள் போல் ஒரு படபடப்புடன் நின்று கொண்டிருந்தாள்.
'இவனின் தொடுகையில் நான் இவ்வளவு பலவீன படுகிறேனா?' என்று எண்ணியவளுக்கு தன்னை நினைத்து தனக்கே வியப்பாக இருந்தது. அந்த வியப்பு பயமாக மாறி அது கோபமாக விஸ்வரூபம் எடுத்தது.
'என்னை இவன் பலவீனப்படுத்த நினைக்கிறான். அதுக்கு இந்த த்ரிஷ்யா ஒருநாளும் அனுமதிக்க மாட்டா' என்று மனதிற்குள் நினைத்தவள் தன் இருகைகளையும் உயர்த்தி லாவகமாக அவனிடம் இருந்து விலகி கைகளை முறுக்கி திருப்ப அது தானாக அவன் கைச்சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது.
உடனே த்ரிஷ்யா கைமுஷ்டிகளை இறுக்கி அவன் வயிற்று புறம் ஓங்கி குத்த முயல, பிரபா அவளை லாவகமாக பிடித்து மீண்டும் தன் கைகளுக்குள் சிறைப்படுத்தினான்.
"என்ன ஷ்யாமா கத்துகிட்ட மொத்த வித்தையையும் என்கிட்ட இறக்கிடலாம்னு பாத்தியா. ச்சு ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதா? இன்னும் பயிற்சி வேண்டுமோ?" என்று ராகத்துடன் இழுத்து அவளுக்காக பரிதாபப்பட்டு பேசியவனின் குரலில் பரிகாசம் தான் நிறைந்திருந்தது.
அவன் பேச்சில் இருந்த பரிகாசம் அவாளின் கோபத்தை சீண்டிவிட அதற்கும் மேல் அவன் அவளை, "ஷ்யாமா " என்று அழைத்தது அவளை வெறியேற்றி விட்டிருந்தது.
"யாரது ஷ்யாமா? என் பேரு த்ரிஷ்யா" என்று கோபத்துடன் கர்ஜித்தாள்.
"அதுவா. த்ரிஷ்யாமாலானு தான் உன் பேர் அட்டெண்டன்ஸ்ல இருந்தது. இவ்வளவு பெரிய பேரா இருக்கேனு நான் தான் நடுவில இருக்கியா ஷ்யாமவ மட்டும் எடுத்துக்குட்டேன்." என்று கிறக்கமாக வந்தது பிரபாவின் குரல்.
அவள் பேச்சில் இருந்த குறிப்பில் அவளுக்கு ஏதோ புரிவது போல் தோன்ற மேலும் மேலும் கோபத்தில் அவள் முகம் சிவக்க தொடங்கியது.
இவை எதையும் பொருட்படுத்தாத பிரபா அவளை கைப்பிடியொடு இழுத்துக்கொண்டு சென்று மாடியில் இருந்த தன் வீட்டை அடைந்தான். அங்கு அவனின் நண்பன் கைகளை இருந்து கண்கள் மேல் வைத்து அழுத்தமாக பிடித்துக்கொண்டு, "எரியுதே எரியுதே" என்று அலறிக் கொண்டிருந்தான்.
இதனை கண்டு த்ரிஷ்யாவை சீற்றமாக முறைத்தவன் அந்த வீட்டிலிருந்த இன்னொரு அறையை திறந்து அதனுள் த்ரிஷ்யாவை தள்ளி கதவை தாழிட்டான். பின் நண்பனிடம் வந்து நின்றவன்
"என்னடா சரவணா? என்ன ஆச்சு?" என்று பதட்டமாக வினவினான்.
ஆனால் சரவணன் கண்களில் கைவைத்த படியே, "ஆஹா மச்சான் வந்துட்டியா... என்னை காப்பாத்துடா... நான் வீட்டுக்கு ஒரே புள்ளடா... கல்யாணம் ஆகி நாலு நல்லது கெட்டது கூட பார்க்காம போய் சேந்துடுவேன் போல இருக்கே. எப்படியாவது என்னை காப்பாத்துடா" என்று புலம்பி தீர்த்துவிட எதுவும் புரியாத அவன் பேச்சு பிரபாவிற்கு எரிச்சல் ஊட்டியது.
"அடச்சே முதல்ல என்ன ஆச்சு உனக்கு ... என்ன நடந்ததுனு சொல்லுடா லூசு." என்று கேட்டான் சலிப்புடன்.
"ஏதோ ஒரு மோகினி பிசாசுடா என் மேல மிளகாய் தண்ணிய வாரி இரைச்சுட்டு போயிடுச்சு. அப்பவே சொன்னேன். இந்த வீட்ல பேய் இருக்குனு நீதான் கேக்கல." என்ற சரவணனின் தொடர் புலம்பலை கேட்க பிரபா அங்கு இல்லை.
பிரபா அந்த அறையிலிருந்த குளிர்சாதன பெட்டியிலிருந்து ஐஸ்கட்டிகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் நிரப்பி பின் அதில் சிறிது தண்ணீரை ஊற்றியவன் அதனை தன் நண்பன் முன் வைத்து அவன் கண்களில் இருந்த கைகளை விளக்கி அவன் முகத்தை அந்த தண்ணீரில் ஒரு முறை மூழ்கவைத்து பின் நிமிர்த்தினான்.
இப்படியே மீண்டும் மீண்டும் செய்தபிறகு சிறிது சிறிதாக சரவணன் முகம் மற்றும் கண் எரிச்சல் குறைந்தது.
பிறகு ஒரு கிண்ணத்தில் சந்தனத்தை குழைத்தவன் அதனை அவன் முகத்தில் பூசிவிட்டு அங்கிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து அவன் எடுத்துவந்து வெள்ளரிக்காயை நறுக்கி அவன் கண்களில் வைத்தான். சிறிது நேரம் அவனை அப்படியே படுத்திருக்கும் படி கூறியவன் திடீரென்று கதவு தட்டும் ஓசை கேட்கவே அதனை திறந்த பிரபா வாசலில் பாத்திமாவை கண்டான்.
அவளை கண்ட மாத்திரத்தில் மீண்டும் பிரபாவின் கோபம் தலைதூக்க, "ஒஹோ... இணைப்பிரியா தோழிகள் ஒன்று சேர்ந்து திட்டம் போட்டு தான் இந்த வேலைய பார்த்திருக்கீங்களா?" என்று கேட்டான்.
அதற்குள், "யாருடா பிரபா அது?" என்று கேட்ட நண்பனை அடக்கியவன், "நீ கொஞ்சம் நேரம் அமைதியா இரு. உனக்கு அப்புறமா எல்லாம் டீடைலா சொல்றேன்" என்று கூறி பாத்திமாவிடம் திரும்பியவன்,
"நான் உங்க கிட்ட சத்தியமா இதை எதிர்பார்க்கவில்லை பாத்திமா... உங்க தோழியையும் தான். அவள் என்னதான் முரட்டுத்தனமா நடந்துக்கிட்டாலும் நீங்க ரெண்டு பெரும் நேர்மையானவங்கனு நினைச்சேன். அதை பொய்யாக்கிடீங்களே." என்று வருத்தமாக வினவினான்.
"இல்ல சார். அது நாங்க... நாங்க செஞ்சது தப்பு தான். த்ரிஷ்யாவோட செயின் எடுக்க தான்."
"ஒஹோ... திருட்டுத்தனமா?" என்று உரக்க கேட்டான் அது உள்ளறையில் இருக்கும் த்ரிஷ்யாவிற்கு விழ வேண்டும் என்பதற்காகவே.
"டேய். பிராடு.. யாருடா திருடங்க... என் செயினை நீ திருடி வைச்சுக்குட்டு என்ன பிளாக்மெயில் பண்ணதும் இல்லாம என்னையே திருடின்னு சொல்றியா?" என்று த்ரிஷ்யாவும் உறக்கமாகவே கத்தினாள்.
உள்ளிருந்து வந்த த்ரிஷ்யாவின் குரலை கேட்ட பாத்திமா பதட்டம் அடைந்தாள்.
"சார் சார்... ப்ளீஸ் சார்... அவளை விட்டிருங்க.. இனிமே உங்க பக்கமே வராம அவளை நான் பார்த்துக்குறேன். "
'அய்யயோ.. அப்படியெல்லாம் பண்ண இந்த அழாகான ராட்சசிய நான் எப்படி கரெக்ட் பண்றது' என்று மனதிற்குள் எண்ணியவனின் காதில் அப்போது விசில் சத்தம் கேட்டது.
உள்ளறையில் இருந்த த்ரிஷ்யா தன் பாக்கெட்டில் இருந்த விசிலை எடுத்து ஊதிவிட்டு, "ஹெல்ப்!! ஹெல்ப்!!" என்று கத்த துவங்கிவிட்டாள்.
பாத்திமாவிற்கும் அப்பொழுது தான் தன் கையில் இருந்த விசிலே நினைவிற்கு வந்தது. பின் தன் தோழியை பின் பற்றிய படியே அவளும் விசிலை அடித்து அதே போல், "ஹெல்ப்!! ஹெல்ப்!!" என்று கூக்குரலிட்டு கத்தினாள்.
இவர்களில் செயலை பார்த்த பிரபா தன் சிரிப்பை அடக்கிக்கொள்ள பெரும்பாடு பட்டான். பின் த்ரிஷ்யா இருந்த அறையை நெருங்கியவன்,
"ப்ளீஸ் த்ரிஷ்யா என் மானத்தை வாங்கிடாத.. நான் கதவை திறந்து விட்டுவிடுறேன்" என்று கூறிய படியே கதவை திறக்க, அந்த கதவு வழியே மிளகு தூள் காற்றில் சிதற அந்த அறையில் இருந்த பாத்திமாவும் சரவணனும் மிளகின் நெடியால், "அச் அச் " என்று இரண்டு முறை தும்பினார்கள்.
ஆனால் கதவருகே பிரபாவை எதிர்பார்த்து கையில் இருந்த பெப்பர் ஸ்பிரேவை உபயோகப்படுத்திய த்ரிஷ்யாவின் கண்கள் ஏமாற்றத்தினால் சுருங்கியது. இவள் இது போல் செய்யக்கூடியவள் தான் என்று யூகித்த பிரபா கதவின் இடது புறம் சுவற்றில் ஒரு கையை ஊன்றியபடி இன்னொரு கைகளால் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு நின்றான்.
த்ரிஷ்யா அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டு நிற்க, மெல்ல முகத்தில் இருந்து துணியை விளக்கியவன் பழைய சினிமா பட வில்லனை போல சிரிக்கத்தொடங்கினான்.
"சின்ன பசங்கன்றது சரியாதான் இருக்கு. விசில்,பெப்பர் ஸ்பிரே... பாத்திமா உண்மையை சொல்லு. இதெல்லாம் உன் அறிவாளி பிரெண்டோட ஐடியா தானே? " என்று பிரபா நக்கலாக கேட்டு சிரிக்க த்ரிஷ்யாவின் முகத்தில் அனல் பறந்தது.
பிரபாவே மீண்டும் தொடர்ந்து, "சரி செயினை திருட வந்தீங்க.. நான் தெரியாம தான் கேக்குறேன். இப்போ திரும்ப எப்படி காம்ப்ஸ்க்கு போவீங்க" என்று தீவிரமாக கேட்டான்.
பெண்கள் இருவருக்கும் அவன் கேள்வியில் அர்த்தம் புரியாமல் விழித்தனர்.
பின் பாத்திமா, "ஏன்... ஏன் போகமுடியாது? சனிக்கிழமை 8 மணிக்கு மேல காம்ப்ஸ்க்குள்ள போயிட்டு வரலாம் இல்லா?" என்று பதட்டத்துடன் கேட்டாள்.
"ம்ம்ம்... கேம்பஸ விட்டு 8 மணிக்கு மேல வெளில போகலாம்... ஆனா திரும்பி வரலாம்னு யார் சொன்னது?"
"என்ன சார் சொல்றீங்க?"
"கடவுளே!! இதுகூட தெரியாம தான் இவ்வளவு எச்சரிக்கையா பொருளெல்லாம் எடுத்துட்டு வந்தீங்களா... 8 மணிக்கு மேல கேம்பஸ் விட்டு போக அனுமதிக்கறதே வார இறுதியில் ஊருக்கு போகிறவர்கள் எட்டு ஒன்பது ஏன் பன்னிரண்டு மணிக்கு கூட ரயிலில் செல்ல வேண்டி இருக்கும் என்பதற்காக தான்... நீங்க உங்க இஷ்டத்துக்கு வெளியில் சுற்றி தெரிவதற்காக இல்ல. இப்போ நீங்க திரும்பி போன உங்கள கண்டிப்பா அனுமதிப்பாங்க... ஆனா உங்க பேர்ல உங்க ஹோம் மேனேஜர் டிசிப்ளினரி ஆக்ஷ்ன் எடுப்பார். சந்தேகமாக இருந்தாள் நீங்களே கேம்பஸ் போய் தெரிஞ்சுக்கோங்க" என்று கூறி அசட்டையாக தோளைக் குலுக்கினான் பிரபா.
அவன் சொல்வது உண்மையாகவே இருக்கும் என்று பெண்கள் இருவருக்கும் தோன்றியது. மேலும் இதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று பரிசோதிக்க கேம்பஸ் வரை சென்றால் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதும் அதற்குமேலாக தந்தை ஆனந்தராஜின் முகத்தில் அவர்களால் விழிக்கவே முடியாது என்ற உண்மை சுட அவசரப்பட்டு அவர்கள் செய்யாத இந்த காரியத்தை எண்ணி வெட்கி தலைகுனிந்தாள் பாத்திமா.
த்ரிஷ்யாவின் முகத்தில் கவலை ரேகை படிந்த போதிலும் பிரபாவின் முன்னிலையில் அதனை காட்ட மனமின்றி முகத்தை திரும்பிக் கொண்டு விறைப்புடன் நின்றாள்.
இந்த உரையாடல்கள் பெரும் சலனத்தை ஏற்படுத்த முகத்தில் எரிச்சல் குறைந்திருந்த படியால் கண்களை திறந்த மூவரையும் கவனித்துக்கொண்டிருந்த சரவணனிற்கு ஓரளவு விஷயம் புரிந்தது.
அவன் பிரபாவை பார்த்து, "டேய் பிரபா... இவங்கள பார்த்த பாவமா இருக்குடா... நாம ஏதாச்சும் ஹெல்ப் பண்ணலாம்" என்றான்.
பிரபா அவனை முறைத்துக்கொண்டே, "பைத்தியமாடா உனக்கு... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேய் மோகினி பிசாசுனு கத்தினியே.. அது வேற யாரும் இல்ல... இதோ நிற்குறாங்களே. இந்த மேடம் தான் உன் மூஞ்சுல மிளகாய் தூள் தண்ணிய வீசியது." என்று த்ரிஷ்யாவை காண்பித்து கூறினான்.
த்ரிஷ்யா அவனை தர்மசங்கடத்துடன் பார்த்து, "சாரி ஜி .. நான் இவன்னு தப்பா நினைச்சு உங்க மேல ஊத்திட்டேன். வெரி சாரி" என்று கூறி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டாள். அந்த முகத்தை கண்ட சரவணன் மீதும் பிரபாவிடம் திரும்பி, "சரி பரவாயில்ல மச்சி... ஏதோ நீனு நெனச்சு தான் தெரியாம பண்ணிட்டாங்க... பாத்தா பாவமா இருக்கு விடு மச்சி" என்று கூறினான்.
பிரபாவிற்கு த்ரிஷ்யாவை பார்த்து அவன் பாவம் என்று கூறியதை தாங்கவே முடியவில்லை.
"ஏன் சொல்லமாட்ட... உன்னையெல்லாம் அப்படியே கண்ணேறிஞ்சு கபோதி ஆகட்டும்னு விட்டிருக்கனும் .. போனா போகுதுனு பிரஸ்ட் எயிட் பண்ணேன் பாரு.. எனக்கு இதுவும் தேவை தான்" என்று கோபத்துடன் ஆரம்பித்து, "சரி இப்போ என்ன பண்ணலாம்னு சொல்ற" சலிப்புடன் கேட்டான் பிரபா.
"இவங்க வேணும்னா இன்னைக்கு நைட் இங்கயே தங்கிக்கட்டும். " என்று சரவணன் கேட்க, "வாட்...?" என்று அந்த அறையில் இருந்த மற்ற மூவரின் குரலும் ஒருசேர ஒலித்தது.
த்ரிஷ்யாவும் பாத்திமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள பிரபாவோ, "டேய் என்னடா ஒளறிட்டு இருக்க. வயசு பொண்ணுங்கல இங்க எப்படி தங்க வைக்கிறது அறிவில்லாம பேசுறியே... நீ கொஞ்சம் அமைதியா இரு?" என்று கூறி தன் நண்பனை அடக்க முயன்றான்.
"அவங்க ரெண்டு பெரும் அந்த ரூம்ல தாழ் போட்டுக்கிட்டு தூங்கட்டும்.. நாம இங்க படுத்துக்கலாம். என்ன சொல்ற?" என்று சரவணன் விடாமல் கேட்க மற்ற மூவரின் முகத்தில் குழப்பரேகைகள் படர்ந்தன.
பின் த்ரிஷ்யா பாத்திமா காதில் ஏதோ கூற பாத்திமா தயக்கத்துடன் பிரபாவை ஏறிட பிரபா, "உங்களுக்கு எங்க மேல நம்பிக்கை இருந்தா அவன் சொல்ற மாதிரி நீங்க இங்க தூங்கலாம்... இல்லனா உங்க இஷ்டம்" என்று கூறி முடித்தான்.
த்ரிஷ்யாவிற்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும் அவர்களுக்கு வேறு வழியும் இல்லாது போகவே இதற்கு இருவரும் சம்மதிக்க அந்த இன்னொரு அறையும் தூங்குவதற்கு ஏதுவான ஒரு படுக்கை அறையாகவே மாற்றப்பட்டது. பிரபா தான் அவர்களுக்கு முடிந்த அளவிற்கு அந்த அறை சௌகரியமாக அமையவேண்டும் என்று பார்த்து பார்த்து எல்லாவற்றையும் செய்தான். இதனை கண்ட த்ரிஷ்யாவிற்கு அவனை நினைத்து பெரும் ஆச்சரியமாக இருந்தது.
உங்கள் கருத்தை மறவாமல் தெரிவியுங்கள்- நன்றி
11

Uploaded files:
Quote from நலம் விரும்பி !!.. on May 16, 2020, 5:41 PMஎங்கே பிடித்தீர்கள் நாயகியை . ரொம்ப பயங்கரம் .. ரொம்பவும் பயங்கரமான தன்னம்பிக்கை கொண்ட நாயகி , very very interesting episode ..
எங்கே பிடித்தீர்கள் நாயகியை . ரொம்ப பயங்கரம் .. ரொம்பவும் பயங்கரமான தன்னம்பிக்கை கொண்ட நாயகி , very very interesting episode ..