மோனிஷா நாவல்கள்
Shamili Dev's Ennai ma(r)nanthayo-13
Quote from monisha on May 24, 2020, 8:07 PM13
ஒரு வாரம் பயிற்சி முடிந்த நிலையில் அடுத்த வாரத்தின் முதல் நாளன்று பயிற்சி அறையில் இருந்த பெரும்பான்மையான பெண்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரே ஒரு ஆசிரியர் பிரபாதான். நேரம் சரியாக ஒன்பது மணி. ஆனால் அறைக்குள் பிரபாவிற்கு பதில் வேறொரு ஆசிரியர் நுழைந்திருந்தான். அவன் நம் வாசகர்களுக்கு நன்கு அறிந்த பிரபாவின் நண்பன் சரவணன் தான்.
பிரபாவை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்த அந்த பயிற்சி வகுப்பிலிருந்த பெண்கள் அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஒரே ஒரு பெண்ணை தவிர. அது த்ரிஷ்யாவே அன்றி வேறு யாராக இருக்க முடியும்.
அந்த வாரம் முழுவதுமே த்ரிஷ்யா வேறு மாதிரியான உணர்வுகளில் சிக்குண்டிருந்தாள். அன்றைய இரவு பாத்திமா மற்றும் பிரபாவின் உரையாடலை கேட்டதிலிருந்து த்ரிஷ்யாவின் மனதில் பலவிதமான உணர்வுகள் அலைமோதிக் கொண்டிருந்தன. அவளுக்கு அந்த நொடி தான் எந்த மாதிரி உணர்கிறோம் என்று ஒரு நிலையான முடிவிற்கும் வரமுடியவில்லை.
ஆனால் அவள் மனம் ஒரு சில நேரங்களில் மட்டும் குழப்பம் ஏதும் இன்றி நிம்மதியாக உணர்ந்தது. அது பிரபா பயிற்சி அறையில் இருக்கும் நேரம் மட்டுமே. அவனை பார்க்கும் பொழுது அவனை மட்டுமே முழுமையாக நிறைத்திருக்கும் அவளின் மனம் அவன் அகன்றதும் வெறுமையாக மாறியது.
இதற்கிடையில் அந்த ஒருவார பயிற்சிக்கான தேர்வு அந்த வார சனிக்கிழமை நடைபெற்று அதில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும் அவரவர் சொந்த ஊரில் உள்ள அதே நிறுவனத்தின் கிளை அலுவலகங்களில் பணிக்கு நியமித்திருந்தனர்.
தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு மீண்டும் ஒரு மாதகாலம் வேறு சில கணித மொழிகளில் பயிற்சி அளிக்க தொடங்கி இருந்தது அந்த நிறுவனம்.
அந்த ஒரு வாரத்தில் த்ரிஷ்யாவும் பாத்திமாவும் பயிற்சி அறையில் இருக்கும் சில பணியாளர்களோடு நல்ல நட்புறவு வளர்த்துக்கொண்டனர்.
இந்நிலையில் அன்று காலை தோழிகள் இருவரும் பயிற்சி அறையில் நுழைந்ததும் எங்கு பார்த்தாலும் ஒரே பெயர்தான் ஒலித்து கொண்டிருந்தது. அது பிரபா!! பிரபா!! பிரபா!! மட்டும் தான்.
போதாக்குறைக்கு த்ரிஷ்யாவின் அருகில் ஒரு பெண், "ஐயோ இன்னைக்கும் பிரபா சார் தான் வரணும். இன்னைக்கு வேற லாங்குவேஜ் ட்ரைனிங்காம். வேற சார் வந்துட்டா அப்பறம் நான் எப்படி பிரபாவை பார்க்குறது" என்று புலம்பிக்கொண்டிருந்தாள். பெரும்பான்மையான பெண்களும் அதே எண்ணத்தில் தான் இருந்தனர்.
த்ரிஷ்யாவிற்கு தூக்கிவாரி போட்டது. 'நானும் இவங்கள மாதிரி யோசிக்கிறேனா? பத்தோட பதினொன்னா? சே சே அந்த பிரபா யாரோ எவனோ? செயின் கொடுத்ததோடு அவன் சாப்டர் முடிஞ்சுது. அவனை நான் எதிர்பார்கலை. அவன் இல்லாததால் எந்த கப்பலும் மூழிகிவிட போவதில்லை.' என்று தனக்கு தானே விளக்கம் கூறிக்கொண்டாள்.
இவ்வாறாக யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது சரவணன் உள்ளே நுழைய த்ரிஷ்யா, "அப்பாடா... அந்த பிரபா வரல இப்போ தான் எனக்கு நிம்மதியாய் இருக்கு" என்று பாத்திமாவிடம் சற்று உரக்கவே கூறிக் கொண்டிருந்தாள்.
அவளை மேலிருந்து கீழ் நிதானமாக பார்த்த பாத்திமா, "ஓ.. இன்னைக்கு பிரபா வரக்கூடாதுன்னு நினைத்து தான் இவ்வளவு அழகா அலங்காரம் பண்ணிகிட்டியா?" என்று கேட்க த்ரிஷ்யா ஒரு நொடி பதில் சொலௌல முடியாமல் திணறி போனாள். ஆனால் உடனே சுதாரித்து கொண்டு,
"யார் சொன்னா? நான் எப்பவும் போல தான் வந்திருக்கேன். உன் கண்ணுல தான் ஏதோ கோளாறு?" என்று முடித்தாள்.
மீண்டும் அவளை சந்தேகமாக பார்த்த பாத்திமா அவளை பார்த்து கிண்டலாக சிரித்தாள்.
"என்ன? சந்தேகமா பாக்குற. நிஜமாவே எனக்கு பிரபா வராதது நிம்மதி தான்."
"இருக்கலாம். ஆனா அந்த நிம்மதி ஏன்னு தான் யோசிக்குறேன்."
"இதுல யோசிக்க என்ன இருக்கு. எனக்கு அவனை பிடிக்கல"
"அதுவும் காரணமா இருக்கலாம். இல்லனா இங்க இருக்குற பெண்களோட கண்ணு பிரபா மேல இனி விழாதுனு நினைச்சு சந்தோஷத்துல கூட இருக்கலா...ம்." என்று பாத்திமா ராகமாக கூறி முடிக்க த்ரிஷ்யா தன் வழக்கமான அனல் பார்வையை வீசினாள்.
ஆனால் மனதிற்குள் மட்டும், 'இவ கண்ணுல எதுவுமே தப்பிக்காதே' என்று எண்ணி அலுத்துக்கொண்டாள்.
இதற்கிடையில் அந்த பயிற்சி அறையில் நுழைந்த சரவணன் ஒரு சில நாட்களிலேயே தன் நகைச்சுவை பேச்சினாலும் சுலபமாக பாடம் கற்பிக்கும் தன் திறமையினாலும் அங்குள்ள அனைவர் மனத்திலும் இடம்பிடித்திருந்தான். இதனால் ஒரு அளவு அந்த பெண்களின் மனதில் பிரபா இல்லாத ஏமாற்றம் மட்டுப்பட்டதென்றே கூறலாம்.
இவ்வாறாக இரண்டு வாரம் கழிந்த நிலையில் ஒரு ஞாற்றுக்கிழமை பாத்திமாவும் த்ரிஷ்யாவும் அருகில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்றிருந்தனர்.
கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்த வந்து நில மண்டபத்தில் அமர்ந்த தோழிகள் இருவரின் மனத்திலும் நிம்மதி குடிகொண்டது. பின் அங்கே உள்ள தியானமண்டபத்தில் கண்மூடி அமர்ந்திருந்தாள் த்ரிஷ்யா. அவள் கண்திறந்த பார்க்கும் திசையில் தேவேந்திரனே வருகிறானோ என்று சந்தேகம் கொள்ளும் விதமாக பிரபா வெண்ணிற வேட்டி சட்டையில் கம்பீரமாக தன் நண்பன் சரவணனுடன் பேசி சிரித்தபடியே நடந்து வந்தான்.
த்ரிஷ்யா ஏதோ வசியத்திற்கு கட்டுண்டவள் போல் மெய்மறந்து நிற்க அவள் பார்வை சென்ற திசையை கண்ட பாத்திமாவின் முகத்தில் புன்னகை அரும்பியது. உதட்டோர சிரிப்புடன் பாத்திமா த்ரிஷ்யா காதில் கிசுகிசுத்தாள்.
"மன்மதனே நடந்து வரமாதிரி இருக்கு இல்ல த்ரிஷ்யா?" என்ற பாத்திமாவின் கேள்விக்கு தன்னையும் மறந்து ஆமாம் என்பது போல் தலையசைத்து வைத்தாள்.
த்ரிஷ்யா பின் சட்டென்று அவளின் கேள்வியில் அர்த்தம் புரிபட அவசரமாக இல்லை என்று தலையசைத்து வைத்தாள். பின் தன்னுடைய நிலை தனக்கே குழப்பம் அளிக்க திரு திருவென்று விழித்தபடி உதட்டை கடித்துக்கொண்டு மௌனமானாள்.
கோவிலுக்குள் செல்ல எத்தனித்த பிரபா மற்றும் சரவணனை அங்கிருந்த ஒரு பத்து வயது சிறுவனின் குரல் தடுத்தது.
"அண்ணா அண்ணா ரெண்டு நாளா சாப்பிடல அண்ணா. ரொம்ப பசிக்குது அண்ணா. காசு கொடுங்க அண்ணா"
"உன்னோட அப்பா அம்மா எங்க?"
"அப்பா இல்ல அம்மா மட்டும் தான். அம்மாவால நடக்க முடியாது அண்ணா"
"நீ தமிழா தம்பி".
"அம்மா தமிழ் அப்பா கன்னடம் அண்ணா."
"ஏதாச்சும் அரசு பள்ளில சேர்ந்து படிச்சா சாப்பாடு போடுவாங்களே அங்கேயே."
"நான் தினமும் பள்ளிக்கு போய் படிக்குறேன் அண்ணா. அங்கேயே சாப்பாடு போடுவாங்க. ஆனா அம்மாக்கு சாப்பாடு கிடைக்காது இல்ல. அதனால ஸ்கூலுக்கு போயிட்டு சாய்ந்தரத்துல வந்து பிச்சை எடுப்பேன் அண்ணா."
"சரி அப்போ உனக்கு வேலை கொடுத்தா செய்வியா?"
"சொல்லுங்க அண்ணா செய்யறேன்."
"ஒரு நிமிடம் என்கூட வா" என்று கூறி பிரபா அந்த சிறுவனை கோவிலுக்குள் அழைத்து சென்றது விளக்குகள் ஏற்றப்படும் மேடைக்கு. அங்கே எரிந்து முடிந்திருந்த விளக்குகளை எடுத்துக்கொண்டு அந்த சிறுவனை அழைத்து கொண்டு வெளியில் வந்தவன் சில எலுமிச்சைகளையும் சாம்பலையும் வாங்கி வந்து அவன் கையில் வைத்து சாம்பல் மூலமாக அந்த விளக்குகளை சுத்தம் செய்ய சொன்னான்.
அவன் ஏன் இதை செய்ய சொல்கிறான் என்று புரியவில்லை என்றாலும் அந்த சிறுவன் அவன் சொன்னதை மறுக்காமல் செய்தான்.
பின் அங்கிருந்த ஒரு பலகையை எடுத்துவந்து கோவில் வாசலில் அவனை உட்காரவைத்து அந்த பலகையில் விளக்குகளை அடுக்கினான். மேலும் எண்ணெய் பாக்கெட் மற்றும் திரிக்கட்டுகளை வாங்கிவந்து அந்த பலகையில் வைத்தவன் அதிலிருந்த விளக்குகளில் எண்ணெய் ஊற்றி திரியை மூழ்க வைத்தான்.
"தம்பி. இனிமே இது தான் உன் கடை. தினமும் இதே மாதிரி எறிந்த விளக்குகளை எடுத்து வந்து சுத்தம் செய்து அடுக்கி வைத்து விற்றுக் கொள்... எலுமிச்சைகளை கூட பாதியாக வெட்டி பிழிந்து விளக்குகளை சுத்தம் செய்ய பயன்படுத்திக்கொண்டு மீதும் உள்ள எலுமிச்சையில் கூட எண்ணெய் ஊற்றி திரி இட்டு விற்றுக்கோள்.
உன் தாயும் இதில் உனக்கு உதவி செய்யமுடியும். இதில் வரும் லாபம் கொண்டு உங்கள் தாயின் பசியை போக்குவது உன் திறமை" என்று கூறிவிட்டு பிரபா திரும்பி பாராமல் தெய்வ சன்னதியை அடைந்தான்.வழிபாடு முடிந்து வெளியில் வந்த நண்பர்கள் இருவரும் த்ரிஷ்யா மற்றும் பாத்திமாவை கண்டு இன்ப அதிர்ச்சியில் திளைத்தனர்.
"சூப்பர் சார். அந்த பையனுக்கு ஒரு நல்ல வழிகாட்டிட்டீங்க" என்று பாத்திமா பிரபாவை பாராட்ட த்ரிஷ்யா முகத்தை திருப்பி கொண்டு நின்றாள்.
"என்ன பாத்திமா. இப்போ நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு உன் பிரென்ட் இப்படி மூஞ்சிய தூக்கி வைச்சுட்டு இருக்குற?"
"ஏன் பாத்திமா? உங்க சார் இப்போ பண்ண நல்ல விஷயத்துக்கு அவரை பாராட்டியே ஆகணுமாம்? அதிகபட்சம் அவர் பண்ண நல்ல விஷயம் பிச்சை எடுத்துட்டு இருந்த ஒரு சின்ன பையனை இப்போ குழந்தை தொழிலாளி ஆக்கியிருக்கார். அவ்வளவு தான். இவர் தான் ரொம்ப வசதியானவர் ஆச்சே. இதுக்கு பதிலா இவங்க டிரஸ்ட் மூலமா ஏதாச்சும் ஹெல்ப் பண்ணலாம்ல" என்று எரிச்சலுடன் கூறினாள் த்ரிஷ்யா.
அவள் கேள்விக்கு புன்னகை செய்த பிரபா அவளுக்கு பொறுமையுடன் விளக்கம் அளித்தான்.
"அது தான் கோபமா? டிரஸ்ட் மூலமா அவனுக்கு கல்வி விடுதி உணவு எல்லாம் ரெடி பண்ணலாம். அவங்க அம்மாவை கூட மாற்றுத்திறனாளிகள் முகாம்ல வைச்சு பார்த்துக்கலாம். ஆனா இதெல்லாம் செய்த அவன் என்னவெல்லாம் இழக்க நேரிடும் தெரியுமா? தன்னம்பிக்கை, அம்மா பையன் அப்படிங்குற ஒரு குடும்ப உணர்வு. எல்லாத்தையும் தாண்டி இந்த வேலைய பத்தி அவன் அவங்க அம்மாகிட்ட சொன்ன அவங்களே இந்த வேலைய எடுத்து நடத்த முன் வருவாங்க. வாழ வழியே இல்லனு
நினைச்சு நிராசையில தான் அவங்க பையன் பிச்சை எடுக்கறத கூட யோசிக்காம அவங்க வீட்டுலயே இருக்காங்க. இந்த வேலை அவங்களுக்கு ஒரு மாற்றம் தரும்னு நான் நம்புறேன்."அவன் பேச பேச அதில் உள்ள உண்மை புரிந்து பதில் பேசமுடியாமல் வாயடைத்து நின்றாள் த்ரிஷ்யா. அவனை நினைத்து அவள் மனம் பெருமை கொள்வதை அவளால் தடுக்க முடியவில்லை.
ஒரு சின்ன சிரிப்புடன், "சாரி" என்றாள்.
உடனே வானத்தை பார்த்த பிரபா, "ஒடுங்க ஒடுங்க... உடனடியாக இடியுடன் கூடிய மழை பெய்ய போகுது?"
என்றான் பரபரப்புடன்.ஒன்றும் புரியாமல் மற்ற மூவரும் திகைத்து நிற்க அவன் த்ரிஷ்யாவை மட்டும் பார்த்த கண்ணடித்து சிரித்தான்.
அவன் கேலி புரிந்த அவனை முறைக்க நினைத்த த்ரிஷ்யா அது முடியாமல் சிரித்துவிட்டாள். அந்த சம்பவம் முதல் அங்கிருந்த நால்வருக்குள்ளும் ஒரு அழகான நட்புறவு மலர்ந்தது. காலம் சக்கரமாக சுழல அவர்களின் நட்பு மேலும் நெருங்கிய நட்பாக வளரத்தொடங்கியது.
அந்த நட்புணர்வின் பெயரில் அவர்களுக்குள் சில வழிமுறையிலும் வகுத்துக்கொண்டனர். அது அவர்கள் நால்வரும் வார நாட்களில் பயிற்சி வளாகத்தில் பேசிக் கொள்வதில்லை என்றும் வார இறுதியில் ஒன்றாக வெளியில் சந்தித்து கொள்வதென்றும் முடிவு செய்திருந்தனர். இந்நால்வரில் ஆண்கள் இருவரும் ஆசிரியராக இருக்கும் பட்சத்தில் அவர்களில் நட்புறவால் பெண்களின் பயிற்சி மற்றும் தேர்வுகளில் எந்த வித தவறான கண்ணோட்டமும் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவே இந்த மாதிரியான ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையே பெரும்பாலும் தோழிகள் இருவருக்கும் மற்ற இருவர் மீதும் நம்பிக்கையையும் நன்மதிப்பும் வளர செய்வதாய் அமைந்தது.
இந்நிலையில் த்ரிஷ்யா பிரபாவை மீண்டும் வெறுக்கும் நாளும் வந்தது.
நண்பர்கள் நால்வரும் ஒரு ஞாயிற்று கிழமை ஒன்றாக சேர்ந்து பெங்களூருக்கு சென்று சுற்றிப்பார்க்க முடிவு செய்தனர். காலை முதல் சுற்றி திரிந்துவிட்டு மதியவேளையில் உணவருந்தி கொண்டிருந்தனர்.
அப்பொழுது சரவணன் திடீரென்று, "உங்க ரெண்டு பேரோட பேமிலி போட்டோஸ காட்டுங்களேன். உங்க அம்மா அப்பாவ பார்கலாம் இல்ல." என்று கேட்டான்.
அப்பொழுது த்ரிஷ்யா அவள் தொலைபேசியில் இருந்த ஒரு புகைப்படத்தை காண்பித்தாள்.
அதில் த்ரிஷ்யா மற்றும் அவள் தாய் தந்தையுடன் சேர்த்து பாத்திமா மற்றும் அவளின் தாய் ஒன்றாக நின்றிருந்தனர்.
"என் குடும்பம் அவ குடும்பம்னு தனியா எதுவுமே இல்ல. நாங்க ரெண்டு பெரும் ஒரே குடும்பம் தான்." என்று கூறினாள் த்ரிஷ்யா.
"அப்போ உங்க ரெண்டு பேர் குடும்பம் கூட நட்புணர்வோட இருகாங்கனு சொல்லுங்க... சூப்பர்" என்று கூறி சரவணன் கை தட்ட அதற்கு பதிலாக பாத்திமா மறுப்பாக தலையசைத்து,
"எங்க அம்மா அவ வீட்ல வேலை செய்தவங்க" என்றால் தலையை குனிந்துகொண்டே. இதை கேட்டு
கோபமாக அவளை முறைத்த த்ரிஷ்யா,"அதெல்லாம் பழைய கத சரவணன். நீ உன் பேமிலி போட்டோவ காட்டு" என்று கேட்டாள்.
சரவணனும் அவன் குடும்ப புகைப்படத்தை காட்டியபின் பிரபாவை கண்களாலேயே தேடினான்.
"இதுக்கு தான் வேற ஹோட்டல் போலாம்னு சொன்னேன். ஸெல்ப் சர்வீஸ்னு எவ்வளவு நேரம் பிரபா வெயிட் பண்றன் பாருங்க கியூல".
"சரி பரவாயில்ல விடு சரோ. அவன் வர வரைக்கும் நம்ம அவன் போன்ல இருந்து அவன் பேமிலி போட்டோஸ பார்த்துட்டு இருக்கலாம்." என்று கூறிய த்ரிஷ்யா சகஜமாக அவன் கைபேசியை எடுத்து அதிலிருந்த புகைப்படங்களை பார்க்க துவங்கினாள்.
தொடர்ந்து அதிலிருந்த அவனின் தாய் தந்தை மற்றும் தங்கை அப்பா புகைப்படங்களை பார்த்தவள் கடைசியாக ஒரு புகைப்படம் கண்ணில் பட அதிர்ச்சியில் சிலையாக சமைந்துவிட்டாள்.
இன்னும் சில நேரங்களில் ஒரு பெரிய புயல் தன் வாழ்வில் வீச போவதை அறியாத பிரபா சிரித்து கொண்டே தன்னோட மற்ற மூவரின் உணவு தட்டையும் கையில் ஏந்தியபடி அவர்கள் இருந்து மேஜையை நோக்கிவந்து கொண்டிருந்தான்.
13
ஒரு வாரம் பயிற்சி முடிந்த நிலையில் அடுத்த வாரத்தின் முதல் நாளன்று பயிற்சி அறையில் இருந்த பெரும்பான்மையான பெண்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரே ஒரு ஆசிரியர் பிரபாதான். நேரம் சரியாக ஒன்பது மணி. ஆனால் அறைக்குள் பிரபாவிற்கு பதில் வேறொரு ஆசிரியர் நுழைந்திருந்தான். அவன் நம் வாசகர்களுக்கு நன்கு அறிந்த பிரபாவின் நண்பன் சரவணன் தான்.
பிரபாவை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்த அந்த பயிற்சி வகுப்பிலிருந்த பெண்கள் அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஒரே ஒரு பெண்ணை தவிர. அது த்ரிஷ்யாவே அன்றி வேறு யாராக இருக்க முடியும்.
அந்த வாரம் முழுவதுமே த்ரிஷ்யா வேறு மாதிரியான உணர்வுகளில் சிக்குண்டிருந்தாள். அன்றைய இரவு பாத்திமா மற்றும் பிரபாவின் உரையாடலை கேட்டதிலிருந்து த்ரிஷ்யாவின் மனதில் பலவிதமான உணர்வுகள் அலைமோதிக் கொண்டிருந்தன. அவளுக்கு அந்த நொடி தான் எந்த மாதிரி உணர்கிறோம் என்று ஒரு நிலையான முடிவிற்கும் வரமுடியவில்லை.
ஆனால் அவள் மனம் ஒரு சில நேரங்களில் மட்டும் குழப்பம் ஏதும் இன்றி நிம்மதியாக உணர்ந்தது. அது பிரபா பயிற்சி அறையில் இருக்கும் நேரம் மட்டுமே. அவனை பார்க்கும் பொழுது அவனை மட்டுமே முழுமையாக நிறைத்திருக்கும் அவளின் மனம் அவன் அகன்றதும் வெறுமையாக மாறியது.
இதற்கிடையில் அந்த ஒருவார பயிற்சிக்கான தேர்வு அந்த வார சனிக்கிழமை நடைபெற்று அதில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும் அவரவர் சொந்த ஊரில் உள்ள அதே நிறுவனத்தின் கிளை அலுவலகங்களில் பணிக்கு நியமித்திருந்தனர்.
தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு மீண்டும் ஒரு மாதகாலம் வேறு சில கணித மொழிகளில் பயிற்சி அளிக்க தொடங்கி இருந்தது அந்த நிறுவனம்.
அந்த ஒரு வாரத்தில் த்ரிஷ்யாவும் பாத்திமாவும் பயிற்சி அறையில் இருக்கும் சில பணியாளர்களோடு நல்ல நட்புறவு வளர்த்துக்கொண்டனர்.
இந்நிலையில் அன்று காலை தோழிகள் இருவரும் பயிற்சி அறையில் நுழைந்ததும் எங்கு பார்த்தாலும் ஒரே பெயர்தான் ஒலித்து கொண்டிருந்தது. அது பிரபா!! பிரபா!! பிரபா!! மட்டும் தான்.
போதாக்குறைக்கு த்ரிஷ்யாவின் அருகில் ஒரு பெண், "ஐயோ இன்னைக்கும் பிரபா சார் தான் வரணும். இன்னைக்கு வேற லாங்குவேஜ் ட்ரைனிங்காம். வேற சார் வந்துட்டா அப்பறம் நான் எப்படி பிரபாவை பார்க்குறது" என்று புலம்பிக்கொண்டிருந்தாள். பெரும்பான்மையான பெண்களும் அதே எண்ணத்தில் தான் இருந்தனர்.
த்ரிஷ்யாவிற்கு தூக்கிவாரி போட்டது. 'நானும் இவங்கள மாதிரி யோசிக்கிறேனா? பத்தோட பதினொன்னா? சே சே அந்த பிரபா யாரோ எவனோ? செயின் கொடுத்ததோடு அவன் சாப்டர் முடிஞ்சுது. அவனை நான் எதிர்பார்கலை. அவன் இல்லாததால் எந்த கப்பலும் மூழிகிவிட போவதில்லை.' என்று தனக்கு தானே விளக்கம் கூறிக்கொண்டாள்.
இவ்வாறாக யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது சரவணன் உள்ளே நுழைய த்ரிஷ்யா, "அப்பாடா... அந்த பிரபா வரல இப்போ தான் எனக்கு நிம்மதியாய் இருக்கு" என்று பாத்திமாவிடம் சற்று உரக்கவே கூறிக் கொண்டிருந்தாள்.
அவளை மேலிருந்து கீழ் நிதானமாக பார்த்த பாத்திமா, "ஓ.. இன்னைக்கு பிரபா வரக்கூடாதுன்னு நினைத்து தான் இவ்வளவு அழகா அலங்காரம் பண்ணிகிட்டியா?" என்று கேட்க த்ரிஷ்யா ஒரு நொடி பதில் சொலௌல முடியாமல் திணறி போனாள். ஆனால் உடனே சுதாரித்து கொண்டு,
"யார் சொன்னா? நான் எப்பவும் போல தான் வந்திருக்கேன். உன் கண்ணுல தான் ஏதோ கோளாறு?" என்று முடித்தாள்.
மீண்டும் அவளை சந்தேகமாக பார்த்த பாத்திமா அவளை பார்த்து கிண்டலாக சிரித்தாள்.
"என்ன? சந்தேகமா பாக்குற. நிஜமாவே எனக்கு பிரபா வராதது நிம்மதி தான்."
"இருக்கலாம். ஆனா அந்த நிம்மதி ஏன்னு தான் யோசிக்குறேன்."
"இதுல யோசிக்க என்ன இருக்கு. எனக்கு அவனை பிடிக்கல"
"அதுவும் காரணமா இருக்கலாம். இல்லனா இங்க இருக்குற பெண்களோட கண்ணு பிரபா மேல இனி விழாதுனு நினைச்சு சந்தோஷத்துல கூட இருக்கலா...ம்." என்று பாத்திமா ராகமாக கூறி முடிக்க த்ரிஷ்யா தன் வழக்கமான அனல் பார்வையை வீசினாள்.
ஆனால் மனதிற்குள் மட்டும், 'இவ கண்ணுல எதுவுமே தப்பிக்காதே' என்று எண்ணி அலுத்துக்கொண்டாள்.
இதற்கிடையில் அந்த பயிற்சி அறையில் நுழைந்த சரவணன் ஒரு சில நாட்களிலேயே தன் நகைச்சுவை பேச்சினாலும் சுலபமாக பாடம் கற்பிக்கும் தன் திறமையினாலும் அங்குள்ள அனைவர் மனத்திலும் இடம்பிடித்திருந்தான். இதனால் ஒரு அளவு அந்த பெண்களின் மனதில் பிரபா இல்லாத ஏமாற்றம் மட்டுப்பட்டதென்றே கூறலாம்.
இவ்வாறாக இரண்டு வாரம் கழிந்த நிலையில் ஒரு ஞாற்றுக்கிழமை பாத்திமாவும் த்ரிஷ்யாவும் அருகில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்றிருந்தனர்.
கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்த வந்து நில மண்டபத்தில் அமர்ந்த தோழிகள் இருவரின் மனத்திலும் நிம்மதி குடிகொண்டது. பின் அங்கே உள்ள தியானமண்டபத்தில் கண்மூடி அமர்ந்திருந்தாள் த்ரிஷ்யா. அவள் கண்திறந்த பார்க்கும் திசையில் தேவேந்திரனே வருகிறானோ என்று சந்தேகம் கொள்ளும் விதமாக பிரபா வெண்ணிற வேட்டி சட்டையில் கம்பீரமாக தன் நண்பன் சரவணனுடன் பேசி சிரித்தபடியே நடந்து வந்தான்.
த்ரிஷ்யா ஏதோ வசியத்திற்கு கட்டுண்டவள் போல் மெய்மறந்து நிற்க அவள் பார்வை சென்ற திசையை கண்ட பாத்திமாவின் முகத்தில் புன்னகை அரும்பியது. உதட்டோர சிரிப்புடன் பாத்திமா த்ரிஷ்யா காதில் கிசுகிசுத்தாள்.
"மன்மதனே நடந்து வரமாதிரி இருக்கு இல்ல த்ரிஷ்யா?" என்ற பாத்திமாவின் கேள்விக்கு தன்னையும் மறந்து ஆமாம் என்பது போல் தலையசைத்து வைத்தாள்.
த்ரிஷ்யா பின் சட்டென்று அவளின் கேள்வியில் அர்த்தம் புரிபட அவசரமாக இல்லை என்று தலையசைத்து வைத்தாள். பின் தன்னுடைய நிலை தனக்கே குழப்பம் அளிக்க திரு திருவென்று விழித்தபடி உதட்டை கடித்துக்கொண்டு மௌனமானாள்.
கோவிலுக்குள் செல்ல எத்தனித்த பிரபா மற்றும் சரவணனை அங்கிருந்த ஒரு பத்து வயது சிறுவனின் குரல் தடுத்தது.
"அண்ணா அண்ணா ரெண்டு நாளா சாப்பிடல அண்ணா. ரொம்ப பசிக்குது அண்ணா. காசு கொடுங்க அண்ணா"
"உன்னோட அப்பா அம்மா எங்க?"
"அப்பா இல்ல அம்மா மட்டும் தான். அம்மாவால நடக்க முடியாது அண்ணா"
"நீ தமிழா தம்பி".
"அம்மா தமிழ் அப்பா கன்னடம் அண்ணா."
"ஏதாச்சும் அரசு பள்ளில சேர்ந்து படிச்சா சாப்பாடு போடுவாங்களே அங்கேயே."
"நான் தினமும் பள்ளிக்கு போய் படிக்குறேன் அண்ணா. அங்கேயே சாப்பாடு போடுவாங்க. ஆனா அம்மாக்கு சாப்பாடு கிடைக்காது இல்ல. அதனால ஸ்கூலுக்கு போயிட்டு சாய்ந்தரத்துல வந்து பிச்சை எடுப்பேன் அண்ணா."
"சரி அப்போ உனக்கு வேலை கொடுத்தா செய்வியா?"
"சொல்லுங்க அண்ணா செய்யறேன்."
"ஒரு நிமிடம் என்கூட வா" என்று கூறி பிரபா அந்த சிறுவனை கோவிலுக்குள் அழைத்து சென்றது விளக்குகள் ஏற்றப்படும் மேடைக்கு. அங்கே எரிந்து முடிந்திருந்த விளக்குகளை எடுத்துக்கொண்டு அந்த சிறுவனை அழைத்து கொண்டு வெளியில் வந்தவன் சில எலுமிச்சைகளையும் சாம்பலையும் வாங்கி வந்து அவன் கையில் வைத்து சாம்பல் மூலமாக அந்த விளக்குகளை சுத்தம் செய்ய சொன்னான்.
அவன் ஏன் இதை செய்ய சொல்கிறான் என்று புரியவில்லை என்றாலும் அந்த சிறுவன் அவன் சொன்னதை மறுக்காமல் செய்தான்.
பின் அங்கிருந்த ஒரு பலகையை எடுத்துவந்து கோவில் வாசலில் அவனை உட்காரவைத்து அந்த பலகையில் விளக்குகளை அடுக்கினான். மேலும் எண்ணெய் பாக்கெட் மற்றும் திரிக்கட்டுகளை வாங்கிவந்து அந்த பலகையில் வைத்தவன் அதிலிருந்த விளக்குகளில் எண்ணெய் ஊற்றி திரியை மூழ்க வைத்தான்.
"தம்பி. இனிமே இது தான் உன் கடை. தினமும் இதே மாதிரி எறிந்த விளக்குகளை எடுத்து வந்து சுத்தம் செய்து அடுக்கி வைத்து விற்றுக் கொள்... எலுமிச்சைகளை கூட பாதியாக வெட்டி பிழிந்து விளக்குகளை சுத்தம் செய்ய பயன்படுத்திக்கொண்டு மீதும் உள்ள எலுமிச்சையில் கூட எண்ணெய் ஊற்றி திரி இட்டு விற்றுக்கோள்.
உன் தாயும் இதில் உனக்கு உதவி செய்யமுடியும். இதில் வரும் லாபம் கொண்டு உங்கள் தாயின் பசியை போக்குவது உன் திறமை" என்று கூறிவிட்டு பிரபா திரும்பி பாராமல் தெய்வ சன்னதியை அடைந்தான்.
வழிபாடு முடிந்து வெளியில் வந்த நண்பர்கள் இருவரும் த்ரிஷ்யா மற்றும் பாத்திமாவை கண்டு இன்ப அதிர்ச்சியில் திளைத்தனர்.
"சூப்பர் சார். அந்த பையனுக்கு ஒரு நல்ல வழிகாட்டிட்டீங்க" என்று பாத்திமா பிரபாவை பாராட்ட த்ரிஷ்யா முகத்தை திருப்பி கொண்டு நின்றாள்.
"என்ன பாத்திமா. இப்போ நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு உன் பிரென்ட் இப்படி மூஞ்சிய தூக்கி வைச்சுட்டு இருக்குற?"
"ஏன் பாத்திமா? உங்க சார் இப்போ பண்ண நல்ல விஷயத்துக்கு அவரை பாராட்டியே ஆகணுமாம்? அதிகபட்சம் அவர் பண்ண நல்ல விஷயம் பிச்சை எடுத்துட்டு இருந்த ஒரு சின்ன பையனை இப்போ குழந்தை தொழிலாளி ஆக்கியிருக்கார். அவ்வளவு தான். இவர் தான் ரொம்ப வசதியானவர் ஆச்சே. இதுக்கு பதிலா இவங்க டிரஸ்ட் மூலமா ஏதாச்சும் ஹெல்ப் பண்ணலாம்ல" என்று எரிச்சலுடன் கூறினாள் த்ரிஷ்யா.
அவள் கேள்விக்கு புன்னகை செய்த பிரபா அவளுக்கு பொறுமையுடன் விளக்கம் அளித்தான்.
"அது தான் கோபமா? டிரஸ்ட் மூலமா அவனுக்கு கல்வி விடுதி உணவு எல்லாம் ரெடி பண்ணலாம். அவங்க அம்மாவை கூட மாற்றுத்திறனாளிகள் முகாம்ல வைச்சு பார்த்துக்கலாம். ஆனா இதெல்லாம் செய்த அவன் என்னவெல்லாம் இழக்க நேரிடும் தெரியுமா? தன்னம்பிக்கை, அம்மா பையன் அப்படிங்குற ஒரு குடும்ப உணர்வு. எல்லாத்தையும் தாண்டி இந்த வேலைய பத்தி அவன் அவங்க அம்மாகிட்ட சொன்ன அவங்களே இந்த வேலைய எடுத்து நடத்த முன் வருவாங்க. வாழ வழியே இல்லனு
நினைச்சு நிராசையில தான் அவங்க பையன் பிச்சை எடுக்கறத கூட யோசிக்காம அவங்க வீட்டுலயே இருக்காங்க. இந்த வேலை அவங்களுக்கு ஒரு மாற்றம் தரும்னு நான் நம்புறேன்."
அவன் பேச பேச அதில் உள்ள உண்மை புரிந்து பதில் பேசமுடியாமல் வாயடைத்து நின்றாள் த்ரிஷ்யா. அவனை நினைத்து அவள் மனம் பெருமை கொள்வதை அவளால் தடுக்க முடியவில்லை.
ஒரு சின்ன சிரிப்புடன், "சாரி" என்றாள்.
உடனே வானத்தை பார்த்த பிரபா, "ஒடுங்க ஒடுங்க... உடனடியாக இடியுடன் கூடிய மழை பெய்ய போகுது?"
என்றான் பரபரப்புடன்.
ஒன்றும் புரியாமல் மற்ற மூவரும் திகைத்து நிற்க அவன் த்ரிஷ்யாவை மட்டும் பார்த்த கண்ணடித்து சிரித்தான்.
அவன் கேலி புரிந்த அவனை முறைக்க நினைத்த த்ரிஷ்யா அது முடியாமல் சிரித்துவிட்டாள். அந்த சம்பவம் முதல் அங்கிருந்த நால்வருக்குள்ளும் ஒரு அழகான நட்புறவு மலர்ந்தது. காலம் சக்கரமாக சுழல அவர்களின் நட்பு மேலும் நெருங்கிய நட்பாக வளரத்தொடங்கியது.
அந்த நட்புணர்வின் பெயரில் அவர்களுக்குள் சில வழிமுறையிலும் வகுத்துக்கொண்டனர். அது அவர்கள் நால்வரும் வார நாட்களில் பயிற்சி வளாகத்தில் பேசிக் கொள்வதில்லை என்றும் வார இறுதியில் ஒன்றாக வெளியில் சந்தித்து கொள்வதென்றும் முடிவு செய்திருந்தனர். இந்நால்வரில் ஆண்கள் இருவரும் ஆசிரியராக இருக்கும் பட்சத்தில் அவர்களில் நட்புறவால் பெண்களின் பயிற்சி மற்றும் தேர்வுகளில் எந்த வித தவறான கண்ணோட்டமும் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவே இந்த மாதிரியான ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையே பெரும்பாலும் தோழிகள் இருவருக்கும் மற்ற இருவர் மீதும் நம்பிக்கையையும் நன்மதிப்பும் வளர செய்வதாய் அமைந்தது.
இந்நிலையில் த்ரிஷ்யா பிரபாவை மீண்டும் வெறுக்கும் நாளும் வந்தது.
நண்பர்கள் நால்வரும் ஒரு ஞாயிற்று கிழமை ஒன்றாக சேர்ந்து பெங்களூருக்கு சென்று சுற்றிப்பார்க்க முடிவு செய்தனர். காலை முதல் சுற்றி திரிந்துவிட்டு மதியவேளையில் உணவருந்தி கொண்டிருந்தனர்.
அப்பொழுது சரவணன் திடீரென்று, "உங்க ரெண்டு பேரோட பேமிலி போட்டோஸ காட்டுங்களேன். உங்க அம்மா அப்பாவ பார்கலாம் இல்ல." என்று கேட்டான்.
அப்பொழுது த்ரிஷ்யா அவள் தொலைபேசியில் இருந்த ஒரு புகைப்படத்தை காண்பித்தாள்.
அதில் த்ரிஷ்யா மற்றும் அவள் தாய் தந்தையுடன் சேர்த்து பாத்திமா மற்றும் அவளின் தாய் ஒன்றாக நின்றிருந்தனர்.
"என் குடும்பம் அவ குடும்பம்னு தனியா எதுவுமே இல்ல. நாங்க ரெண்டு பெரும் ஒரே குடும்பம் தான்." என்று கூறினாள் த்ரிஷ்யா.
"அப்போ உங்க ரெண்டு பேர் குடும்பம் கூட நட்புணர்வோட இருகாங்கனு சொல்லுங்க... சூப்பர்" என்று கூறி சரவணன் கை தட்ட அதற்கு பதிலாக பாத்திமா மறுப்பாக தலையசைத்து,
"எங்க அம்மா அவ வீட்ல வேலை செய்தவங்க" என்றால் தலையை குனிந்துகொண்டே. இதை கேட்டு
கோபமாக அவளை முறைத்த த்ரிஷ்யா,
"அதெல்லாம் பழைய கத சரவணன். நீ உன் பேமிலி போட்டோவ காட்டு" என்று கேட்டாள்.
சரவணனும் அவன் குடும்ப புகைப்படத்தை காட்டியபின் பிரபாவை கண்களாலேயே தேடினான்.
"இதுக்கு தான் வேற ஹோட்டல் போலாம்னு சொன்னேன். ஸெல்ப் சர்வீஸ்னு எவ்வளவு நேரம் பிரபா வெயிட் பண்றன் பாருங்க கியூல".
"சரி பரவாயில்ல விடு சரோ. அவன் வர வரைக்கும் நம்ம அவன் போன்ல இருந்து அவன் பேமிலி போட்டோஸ பார்த்துட்டு இருக்கலாம்." என்று கூறிய த்ரிஷ்யா சகஜமாக அவன் கைபேசியை எடுத்து அதிலிருந்த புகைப்படங்களை பார்க்க துவங்கினாள்.
தொடர்ந்து அதிலிருந்த அவனின் தாய் தந்தை மற்றும் தங்கை அப்பா புகைப்படங்களை பார்த்தவள் கடைசியாக ஒரு புகைப்படம் கண்ணில் பட அதிர்ச்சியில் சிலையாக சமைந்துவிட்டாள்.
இன்னும் சில நேரங்களில் ஒரு பெரிய புயல் தன் வாழ்வில் வீச போவதை அறியாத பிரபா சிரித்து கொண்டே தன்னோட மற்ற மூவரின் உணவு தட்டையும் கையில் ஏந்தியபடி அவர்கள் இருந்து மேஜையை நோக்கிவந்து கொண்டிருந்தான்.
Quote from நலம் விரும்பி !!.. on May 24, 2020, 9:30 PMபுயல் கரையை கடக்கும் போது , மழை பொழியுமா இல்லை கரையை துவம்சம் செய்யுமோ !!
புயல் கரையை கடக்கும் போது , மழை பொழியுமா இல்லை கரையை துவம்சம் செய்யுமோ !!