You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Shamili Dev's Ennai ma(r)nanthayo-25

Quote

25

"பாத்திமாவுக்கு துரோகம் பண்ணினேனா? நானா? குட் ஜோக்." என்று கூறி கை தட்டி சிரித்த பிரபா அவள் அருகில் வந்து அவள் கன்னத்தைக் கிள்ளத் துள்ளி குதித்து பின்னடைந்து நின்று அவனை முறைத்தாள்.

"இவ்வளவு வருஷம் ஆகியும் உங்க அப்பா உன்னை புரிஞ்சுக்கல பாரேன். அது தான் எல்லா விஷயத்தையும் விட அல்டிமேட் காமெடி."

அவன் கூற்றின் அர்த்தம் புரியாமல் விழித்தாள் அவன் மனைவி.

"இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாம என் அப்பாவை பத்தி பேசுற."

"பின்ன என்ன த்ரிஷ்யா. உங்க அப்பா தான் சொன்னாரு. நீ ரொம்ப புத்திசாலியாம். நீ எந்த ஒரு முடிவு எடுத்தாலும் கரெக்ட்டா தான் இருக்குமாம்."

"அவர் சொன்னதுல உனக்கு ஏதாச்சும் சந்தேகம் இருக்கா என்ன?"

"சந்தேகமா? கன்பார்மா அவர் சொன்னது தப்பு தான். பெத்த பொண்ணையே அவருக்கு கெஸ் பண்ண தெரியல. இந்த லட்சணத்துல அவர் ஒரு ஆர்மி ஆபீசர் வேற." என்று கூறி கையை வாய் மீது வைத்து அடக்க மாட்டாமல் சிரித்தான்.

த்ரிஷ்யாவிற்கு சுறுசுறுவென்று கோபம் தலைக்கேறியது. அவள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் கை முஷ்டியை இறுக்கினாள்.

"வேணாம் பிரபா. பிரச்சனை உனக்கும் எனக்கும் தான். தேவை இல்லாம என் அப்பாவை ஏன் இதுல இழுக்குற? அவரை பத்தி பேச உனக்கு எந்த வித தகுதியும் இல்ல. அவர் என்ன செஞ்சாலும் என்ன சொன்னாலும் அது கரெக்ட்டா தான் இருக்கும்.அவர் எல்லாரையுமே கரெக்ட்டா கெஸ் பண்ணுவார்.என்னைக்குமே அவர் தப்பான முடிவு எடுத்ததில்லை."

"நீ சொல்றது உண்மை இல்ல."

"உண்மை தான்"

"இல்ல"

"ஆமா"

"அப்போ உங்க அப்பா என்ன செஞ்சாலும் கரெக்ட். அப்படி தானே."

"ஆமா"

"அப்போ உங்க அப்பா என்ன நம்புறாரே. அது கூட கரெக்ட் தானே?"

"ஆமா" என்று கூறிய பின்னரே அவள் கூறிய வார்த்தையின் அர்த்தம் புரிய அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
இந்த விதமாக அவன் தன்னை மடக்கிவிடுவான் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

அவளின் நிலையறிந்த பிரபா அவள் அருகில் வந்து அவளின் தோளைத் தொடச் சட்டென்று அவள் விலகி நின்றாள்.

"ஒத்துக்குறேன். நீங்க ரொம்ப பெரிய புத்திசாலின்னு. பேசியே என்னை மடக்கிட்டீங்க? இப்படி தான் என்னோட அப்பாவை கூட ஏமாத்தி இருப்பீங்க." என்று கூற இம்முறை பிரபா தன் பொறுமையை இழந்தான்.

"ஆமாண்டி. நான் தான் பாத்திமா வாழ்க்கையை அழிச்சேன். இப்போ உன்னால என்ன பண்ண முடியும். போடி" என்று கூறி ஒரு வேகத்தில் அவளைத் தள்ளிவிட அவள் நிலை தடுமாறி சுவற்றில் சாய்ந்து விழும் முன்னரே பிரபாவின் கை அவளைத் தாங்கியது.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்து அடுத்த நொடி அவள் அவனின் இறுக்கமான அணைப்பிலிருந்தாள்.

"ஏன்மா இப்படி எல்லாம் பண்ற. உண்மையை புரிஞ்சுக்க முயற்சிகூட பண்ணாம உன்னையும் வருத்தி இப்படி என்னையும் வேதனை படுத்துறியே?"

அவள் அவனை விட்டு விலகவில்லை. ஆனால் அவளது வார்த்தைகள் அவனின் நெஞ்சை ஈட்டியால் துளைத்தது.

"யாரை எப்படிப் பேசி சரி கட்டணும் உங்களுக்கு நல்லாவே தெரியுது. அது உங்களுக்கு கை வந்த கலை. இல்லையா? எல்லா பொண்ணுங்களையம் இப்படிப் பேசி தான் உங்க வலைல விழ வைப்பீங்களா?" என்று கேட்ட அடுத்த நொடி அவன் அவளை விட்டு விலகி நின்றான்.

"ச்சீ... நீ என்ன அவ்வளவு மட்டமா நினைக்குறியா? இந்த நெஞ்சுல உன்னைத் தவிர வேற யாரையுமே நான் கனவுல கூட நினைச்சதில்ல டீ. அதனால தானோ என்னவோ அந்த நெஞ்சையே நீ இன்னைக்கு ஈட்டியால் குத்தி கிழுச்சுட்டு இருக்குற"

"உன் கிட்ட போய் நான் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன் பாரு. நீ ஒரு கல்லா பிறந்து இருக்கவேண்டியவ பெண்ணா பிறந்து இன்னைக்கு என்னை உயிரோட கொன்னுட்டு இருக்குற. இதுக்குமேல உனக்கு எந்த விதமாகவும் தன்னிலை விளக்கமும் கொடுக்க நான் தயாரா இல்ல. இனி நீ இங்க இருந்து என்னை கொல்லணும்னு நினைக்குற உன் முயற்சியைத் தொடர்ந்து செய். அப்படி இல்லாம உன் வீட்டுக்கே நீ போகணும்னு நினைச்சாலும் தாராளமா போகலாம். இனி உன்னோட எந்த விஷயத்துலையும் நான் தலையிட மாட்டேன்." என்று கூறிவிட்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

அவன் வெளியேறும் பொழுது அறைந்து சாத்தப்பட்ட கதவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் த்ரிஷ்யா. அவனது நெருக்கம் எந்தளவு அவளைப் பாதித்ததோ அதை விட அதிகமாக அவனது விலகல் அவளைப் பாதித்தது. கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்கவும் உணர்வில்லாதவளாக நின்றுகொண்டிருந்தாள்.

அன்று முதல் அவள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. பிரபா அவளது அறைக்கு வருவதே இல்லை. மூன்று வேளையும் உணவு அவளது அறைக்கே வந்து சேர்ந்தது. அங்கு வேலை செய்யும் பெண் அவள் உணவு முழுவதும் உண்ட பின்னரே அந்த அறையை விட்டு வெளியேறினாள். இது அனைத்தும் பிரபாவின் ஏற்பாடு தான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் அவளின் மனம் அமைதியின்றி தவித்தது.

இவ்வாறாக இரண்டு நாட்கள் கழிந்துவிட, ஜோதி த்ரிஷ்யாவின் அறைக்குச் சென்றார்.

படுக்கையிலிருந்த த்ரிஷ்யா அவரை பார்த்தவுடன் எழ முயன்றவளைத் தடுத்து மீண்டும் படுக்கையில் அமரவைத்தார்.

"என்ன மா? என்ன ஆச்சு?" என்று கேட்டுப் பரிவாக அவளது கூந்தலை வருடியவரைக் காண்கையில் அவளுக்கு தன் தாயின் நினைவு வந்தது.

"உனக்கும் பிரபாவுக்கும் என்ன பிரச்சனையா வேணா இருக்கட்டும். அதுக்காக நீ இப்படி ரூம்லயே அடைஞ்சு இருக்கறது நல்லாவா இருக்கு?" என்று கூற த்ரிஷ்யா அவசரமாக அவரை நிமிர்ந்து பார்த்தாள். அவளைப் பார்வையைப் புரிந்தவராகச் சிறு புன்னகையுடன்,

"என்னக்கு கல்யாணம் ஆகி முப்பது வருஷம் ஆச்சு இது கூட புரியலன்னா எப்படி? சரி அதை விடு. உனக்கு இந்த வீட்டுல பிரபா மட்டும் தான் இருக்கான்னா? நானும் மாமாவும் இல்லையா? எங்களை ஏன் மா அவாய்ட் பண்ற?" என்று கேட்டார். 

"இல்ல அத்தை. அப்படி எல்லாம் எதுவும் இல்ல."

"சரி. நீ வேணும்னா கொஞ்சம் நாள் அம்மா வீட்ல போய் இருந்துட்டு வா? இந்த மாதிரி நேரத்துல அம்மாவை தான் தேடும் மனசு." என்று கூற த்ரிஷ்யா அவரை கட்டி அணைத்துக் கொண்டாள்.

"ரொம்ப தாங்க்ஸ் அத்தை" என்று உணர்ச்சி பொங்கும் குரலில் கூறினாள்.

துணிப் பையை எடுத்துக்கொண்டு தாய் வீட்டுக்குத் தயாராக நின்ற த்ரிஷ்யாவின் மனது பிரபாவை தேட அதற்காக அவள் மனது தன்னையே நொந்துகொண்டது.

'இப்போ எதுக்காக அவனை தேடுற. அவன் ஒரு மோசமான பொறுக்கி. அவன் உனக்கும் உன் அன்புக்கும் தகுதி இல்லாதவன்'  என்று ஒரு குரல் அவள் மனதில் ஒலிக்க 

'அவரை பார்த்த பொண்ணுங்க பின்னாடி சுத்துற மாதிரி இருக்கா உனக்கு? உன் மேல இவ்வளவு அன்பு வைச்சு இருக்காரு. ஒரு வேளை அம்மா பயந்த மாதிரி உனக்கு ஞாபகம் வந்த உடனே நிகழ்காலத்துச் சம்பவம் எல்லாம் மறந்து போய் இருந்தா கூட பரவாயில்லை. ஆனா அப்படி நடக்கலையே. உனக்கு இப்போ எதுவும் மறக்கல. பிரபா கல்யாணத்துக்கு அப்புறம் உன்ன கண்ணுக்குள்ள வைச்சு பார்த்துக்குட்டான். அதெல்லாம் கொஞ்சமாவது நினைச்சு பாரு.' மறுகுரல் வாதாடியது.

'இல்ல. நீ மறந்துட்ட... அன்னைக்கு மைசூரோட கடைசி நாளை மறந்துட்ட' என்று மீண்டும் ஒரு குரல் ஒலிக்க தலையை பிடித்துக்கொண்டு தரையில் சரிந்தாள்.

அவளுக்கு அந்த கடைசி நாள் கண்முன் நிழலாடியது.

'இல்ல நான் இப்போ எதையும் ஞாபக படுத்திக்குற நிலைமைல இல்ல. இதுக்கு மேலும் இந்த வீட்ல இருந்தா பைத்தியம் பிடிக்கறது உறுதி.' என்று நினைத்தவளாக அவசர அவசரமாக ஜோதியிடம் கூறிவிட்டு அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.

பதட்டமாக வீட்டினுள் நுழைந்த பிரபா நேரே தன் தாயைத் தேடிச் சென்றான்.

"அவ எங்கம்மா போன?"

"எவ"

பிரபா கண்களைச் சுழற்றினான்.

"அதான் உங்க மருமக."

"ஓஹோ.. என் மருமகளா? சரி என் மருமக எங்க போன உனக்கு என்ன? நீ ஏன் அதை கேட்குற?"

"நான் கேட்காம வேற யார் கேட்பா?"

"எந்த உரிமைல கேட்ப?"

"அம்மா"

"சும்மா இங்க வந்து கத்தா. பதில் சொல்லு."

"அவ என் மனைவி. அவகிட்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு."

"ஓ. அப்படினா எங்க போனான்னு உன் பொண்டாட்டிக்கு ஃபோன் போட்டு கேளுடா. என்கிட்டே எதுக்கு முறைச்சுக்குட்டு நிற்குற?" என்று ஜோதி கேட்க, அப்பொழுது தான் அங்கு நுழைந்த சந்தானகிருஷ்ணன் விஷயத்தை ஓரளவுக்கு யூகித்துக் கொண்டார்.

பிரபாவின் முகத்திலிருந்த பதட்டத்தைக் கண்டவர் அவனது தோளில் கை வைத்து அவனைச் சாந்தப்படுத்தினார்.

"டேய். கல்யாணம் ஆன பிறகு புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வர்றதும் சகஜம். அப்படி சண்டை வந்த பொண்டாட்டி அம்மா வீட்டுக்கு போறதும் சகஜம். சரி உன் பிரச்சனை இப்போ என்னன்னு சொல்லு."

அவர் வார்த்தையிலிருந்த அர்த்தம் புரிய அப்பொழுதே அவன் மனம் தெளிவடைந்தது. மிகவும் எளிதாக மருமகள் இருக்கும் இடத்தை மகனுக்குச் சுட்டிக்காட்டிய கணவனை முறைத்தார் ஜோதி.

"நான் எதுவும் சொல்லலாமா. என் புள்ள புத்திசாலி அவனே கண்டு பிடிச்சுட்டான்." என்று கூறி கண் சிமிட்டினார்.

அவர்களில் உரையாடலைக் கேட்க பிரபா அங்கு இல்லை. அவசரமாக வீட்டை விட்டுக் கிளம்பினான்.

அங்கு ஆனந்தராஜின் வீட்டில் பிரபாவிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

"என் மாமா இப்படி பண்ணீங்க?"

"என்ன என்ன பண்ண சொல்ற பிரபா. அவன் உண்மையா புரிஞ்சுக்கணும். அதான் புரிஞ்சுக்காம தான் சொல்றது தான் சரின்னு நிற்குறா? அவளை இங்க தங்க வைச்ச இன்னும் உங்க இரண்டு பேருக்குள்ள விரிசல் அதிகமாகும்னு தான் இப்படி செஞ்சேன்."

"இல்ல மாமா. என்ன இருந்தாலும் நீங்க நான் வர வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாம். அவளுக்கு ஆபத்து இருக்கு. அவளை இப்படி பொறுப்பில்லாம தனியா அனுப்பி இருக்கீங்க."

"இப்போ எதுக்கு பிரபா இப்படி பதட்ட படுறீங்க. அவளை என் கார்ல என் டிரைவர் கூட தான் அனுப்பி இருக்கேன். நான் உடனே டிரைவர்க்கு போன் பண்றேன்." என்று கூறி டிரைவரை அழைத்து ஃபோனில் பேசியவர் அதிர்ச்சியில் அப்படியே தரையில் அமர்ந்தார்.

அவரின் அருகில் ஓடிவந்த பிரபா, "என்ன மாமா? என்ன ஆச்சு?" என்று கேட்டான்.

"யாரோ நாலு பேர் டிரைவரை அடிச்சுட்டு போட்டுட்டு த்ரிஷ்யாவை தூக்கிட்டு போய்ட்டாங்களாம்." என்று கூறி பிரபாவின் தலையில் இடியை இறக்கினார்.

அதற்குள் பிரபாவின் பேசி சிணுங்கியது. அதில் பேசிய பிரபாவிற்கு அடுத்த இடி காத்திருந்தது.

"பிரபா என்ன ஆச்சு?" என்று அவர் கேட்க, "பாத்திமாவை ஹாஸ்பிடல்ல காணுமாம் மாமா" என்று பதில் வந்தது.

You cannot copy content