மோனிஷா நாவல்கள்
Shamili Dev's Ennai ma(r)nanthayo-27
Quote from monisha on August 11, 2020, 7:54 PM27
கதவை உடைக்க ஆணை பிறப்பித்தவனின் கைப்பேசி சிணுங்கியது.
"அய்யயோ! பாஸ் வேற ஃபோன் பன்றாரு. டேய் டேவிட் சீக்கிரம் கதவை உடை" என்று தனது கூலியாட்களிடம் கூறியவன் பாஸின் அழைப்பை ஏற்றான்.
"ஹலோ! சொல்லுங்க பாஸ்."
"என்ன சிவா? நான் சொன்ன வேலை முடிஞ்சுதா இல்லையா?"
"ஆஹ் ஆஹ். முடிஞ்சுது பாஸ். ரெண்டு பேரையும் தூக்கியாச்சு பாஸ். நாங்க த்ரிஷ்யாவை கூட்டிட்டு வந்துட்டோம். ஹாஸ்பிடலுக்கு அனுப்பின கார் இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் இங்க வந்துடும்."
"ஓ ஓகே. த்ரிஷ்யா பத்திரமா இருக்காளா?" என்று மறுமுனையில் கேட்கச் சிவா அதிர்ச்சி அடைந்தான்.
'எப்படியும் பாஸ் வர்றதுக்குள்ள அவளை பிடிச்சுடலாம்.' என்று மனதில் நினைத்தவன் "அவ என்கிட்ட தான் பாஸ் இருக்கா" என்று கூறவும் அந்த டேவிட் என்பவன் கதவை உடைக்கவும் சரியாக இருந்தது.
அந்த சத்தம் கேட்டு வாசல் பக்கம் சிவா திரும்ப அவ்வளவு நேரம் அவனிடம் கைபேசியில் உரையாடி கொண்டிருந்த அவனது தலைவன் அந்த அறை வாசலில் நின்று கொண்டிருந்தான். அதுவும் த்ரிஷ்யா அவனுக்கு அருகில் காணப்பட அது அவனுக்கு இருமடங்கு அதிர்ச்சியை அளித்தது. அவன் தான் ராஜசேகரின் மகன் மகேஷ். அவன் ஒரு மிருகத்தைப் போல் உறுமிக் கொண்டிருந்தான்.
"அவ உங்கிட்ட பத்திரமா இருக்கானா அப்போ இவ யாரு?" என்று கூறியபடி அவளது முடியை பிடித்து இழுத்துவந்து கீழே தள்ளினான்.
இருந்தும் த்ரிஷ்யா முயன்று தன்னை நிதானப்படுத்திக்கொண்டு எழுந்து நின்றாள்.
"பாஸ்.. அது இவ எப்படி உங்ககிட்ட...?" என்று சிவா திக்கித் திணற,
"நான் உன்னை கேள்வி கேட்டா நீ என்னை கேள்வி கேட்குறியா? அவளை ரூம்ல அடிச்சுட்டு நீங்க வெளில காவல் இருக்கணும்னு சொன்னா அவளை வெளில விட்டுட்டு நீங்க இரண்டு பேரும் அறைக்குள்ள என்ன பல்லாங்குழி விளையாடிட்டு இருக்கீங்களா?" என்று கர்ஜித்தான்.
"இல்ல பாஸ். எங்களை ஏமாத்திட்டு இவ வெளில ஓடிட்டா."
"சீ. இதை சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்ல. ஒரு புள்ளத்தாச்சி பொம்பள. அவளை பிடிக்க வக்கில்ல"
என்று அந்த சிவாவை மகேஷ் வசைபாட திடீரென்று த்ரிஷ்யா சிரித்துவிட்டாள்.மூவரும் அவளைத் திரும்பிப் பார்க்க த்ரிஷ்யா சிரித்தபடியே அவனுக்குப் பதில் அளித்தாள்.
"உன்னோட ஆளுங்க லட்சணம் உன்னை மாதிரி தானேடா இருக்கும்."
"ஹேய். உனக்கு என்னை பற்றி தெரியாது. என்னை வெறியேத்தின இங்கயே உன்னை கொன்னு புதைச்சுடுவேன்."
"உன்னை பற்றி தெரிஞ்சுக்க என்ன டா இருக்கு? நீ ஒரு ஊர் பொறுக்கி. உங்க அப்பன் ஒரு தெரு பொறூக்கி. உங்க அப்பன் சின்ன குழந்தைங்க கிட்ட தன்னோட ஆம்பள தனத்தை காட்டினவன். அவனுக்கு பொறந்த நீ மட்டும் என்ன காமராஜாராவா இருக்க போற ."
இந்த வார்த்தைகள் அவனுக்கு எண்ணிலடங்கா கோபத்தை உண்டு பண்ணியது. கை முஷ்டிகள் இறுக அவளை முறைத்தவன் வேகமாக சென்று அவளது கன்னத்தில் அறைய அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாதவளாய் தரையில் விழுந்தாள்.
அதற்குள் அந்த அறைக்குள் இருவர் பாத்திமாவுடன் நுழைந்தனர். மருத்துவரின் உதவியால் ஓரளவு சுயவுணர்வு பெரும் நிலையை அடைந்திருந்ததால் பாத்திமா தனக்கு ஏதோ தீங்கு நினைக்கவே அங்கு அழைத்து வந்திருப்பதை அவளது மனம் உணர தொடங்கியது.
அதனால் தனது கைகளை அவர்களிடம் இருந்து விடுவிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
பாத்திமாவை கண்ட உணர்ச்சி மிகுதியால் கலங்கிய த்ரிஷ்யா அவசரமாக அவளிடம் ஓடிச் செல்ல முயல அவளது முயற்சியை உணர்ந்த டேவிட் மற்றும் சிவா அவளைப் பிடித்து நிறுத்தினர்.
"விடுடா. என்னை விடு...... எங்களை விட்டுடு மகேஷ். அதான் உனக்கு நல்லது. வீணா தப்பு மேல தப்பு பண்ணி கடைசியில உங்க அப்பன் மாதிரி உன் வாழ்க்கையையும் அழிச்சுக்காத."
"என்னது? எங்க அப்பன் அவன் வாழ்க்கையை அவனே அழிச்சுக்காட்டானா? இல்லடி. உங்க அப்பன் பாதி அழிச்சான் உன் புருஷன் முழுசா அழிச்சான்." என்று கூற த்ரிஷ்யாவின் பார்வை கூர்மையானது.
"என்னடி ஒண்ணுமே தெரியாத மாதிரி முழிக்குற? நீயும் உன் அப்பன் மட்டும் இல்ல டி. அந்த பிரபாவோட அப்பனும் எங்களுக்கு எதிரி தான். என் அப்பன் சின்ன சின்னதா ஏதோ தப்பு பண்ணிட்டு இருந்தான். ஒதுக்குரவ்ன். அதெல்லாம் எங்களுக்காக பொறுத்துப் போய் இருக்கலாம். ஆனா சொந்த தம்பி குடும்பத்தையே வீட்டை விட்டு துரத்திட்டான் அந்த சந்தான கிருஷ்ணன். அந்த ஆள் என்னையும் எங்க அம்மாவையும் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம வெளில தள்ளிட்டான்."
"பசி பட்டினியா ஒரு நாள் இருந்து இருக்கியா டீ நீ. வீட்டை விட்டு துரத்தின கொஞ்ச நாள்ல என் அப்பாவை விட்டுட்டு என் அம்மா என்னை கூட்டிட்டு வந்துட்டாங்க. என் அம்மா ஏழ்மையால கொஞ்சம் நஞ்சம் இருக்குற சாப்பாட எனக்கு போட்டுட்டு பசில அவங்க உயிரை விட்டுட்டாங்க. நியாயமா வாழ நினைச்ச எனக்கு இந்த உலகம் ஏழ்மையைத் தான் பிச்சையா போட்டுது. இங்க சாம தான வேதம் எதுவும் எனக்குச் சோறு போடல. குறுக்கு வழிதான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது. குறுக்கு வழில போனேன். கோடி கோடியா சம்பாதிச்சேன். பெரு புகழ் எல்லாமே கிடைச்சுது. அப்போ தான் ஒரு நாள் என் அப்பன் என்ன தேடி வந்தான். "
"அந்த பாத்திமா நீ உங்க அப்பா எல்லாரும் சேர்ந்து அந்த ஆள் மூஞ்சில ஆசிட் உத்தி அந்த ஆள துரத்தி விட்டதா சொன்னான். எனக்கு அம்மா தான் இல்ல. என்ன அப்பனாச்சும் என்கூட இருக்கணும்னு நினைச்சேன். அந்த ஆள் உங்கள பழிவாங்கணும்னு துடிச்சான். அதுக்காக உங்கள வேவு பாக்க உங்க கேம்பஸ் உள்ளேயே ஒரு ஆள வெச்சு இருந்தோம். அப்போ தான் பிரபா உங்க பின்னாடி சுத்துற விஷயம் தெரிஞ்சுது. ஏற்கனவே பிரபா குடும்பத்தை பழிவாங்குற வேறில இருந்தேன். "
"அதுக்காக என் அப்பன் கூட நான் தான் டி ஆள அனுப்பி வைத்தேன். ஆனா அந்த ஆள அந்த பிரபா குத்துயிரும் கொலை உயருமா கொண்டு போய் காட்டுல போட்டான். என் ஆளுங்க தான் விஷயத்தைச் சொல்லி அந்த ஆள திரும்ப தூக்கிட்டு வந்து சேர்த்தாங்க." அவன் சொல்வதைக் கேட்கக் கேட்க த்ரிஷ்யா காதில் தேனை ஊற்றுவது போல் இனிமையாகவே இருந்தது. இருந்தாலும் பிரபாவை கொலை செய்ய முயன்றதை எண்ணி வெட்கி வேதனை கொண்டாள். அவன் மேலும் தொடர்ந்தான்.
"அந்த பிரபாவை கொல்றது எனக்கு ஒரு பிரச்சனையே இல்ல. ஆனா அவன் உடனே செத்துட்டா எனக்கு என்ன லாபம். இன்னைக்கு அம்மா அப்பா இரண்டு போரையும் இழந்து தனி ஆளா நின்னு நான் படர வேதனை அவனும் உன் அப்பனும் படனும். அதுக்கு உங்க உன்னையும் இவளையும் காரோட தூக்கணும்னு முடிவு பண்ணேன். ஆனா நீ மட்டும் தான் அந்த கார்ல போன. உன்னையாவது கொல்லணும்னு நினைச்சேன். அன்னைக்கு தப்பிச்சுட்ட. ஆனா இன்னைக்கு என் கையால தாண்டி உனக்கு சாவு." என்று கூறியவன் மீண்டும் த்ரிஷ்யாவின் கூந்தலைக் கொத்தாகப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் அவளது தலையை சுவரில் முட்டினான்.
வலிதாங்க முடியாமல் த்ரிஷ்யா அலறியதை கேட்ட பாத்திமாவின் கண்களில் கண்ணீர் தானாக வழிந்தோடியது.
மேலும் மகேஷ் அவளைக் கீழே தள்ளி அவளது வயிற்றில் காலை வைத்து மிதக்க தன் காலை உயர்த்தினான்.
இதைக் கண்ட பாத்திமா வேகமாகத் தன்னை பிடித்து இருந்தவர்களை உதறித் தள்ளினாள். எங்கிருந்து அவளுக்கு அத்தகைய பலம் வந்தது என்று அவள் அறியாள். வேகமாக மகேஷிடம் ஓடிச் சென்று அவனை பலம் கொண்டு பிடித்து தள்ளினாள்.
எதிர்பாராத இந்த தாக்குதலால் மகேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தான். த்ரிஷ்யா கிடைத்த அந்த இடைவேளையில் எழுந்து சென்று பாத்திமாவை இறுக அணைத்துக்கொண்டாள்.
அவள் அணைப்பு மேலும் மேலும் இறுகியதை உணர்ந்த பாத்திமா தன்னை அறியாமல் த்ரிஷ்யாவை அணைத்துக்கொண்டாள்.
எழுந்த நின்ற மகேஷ் அவர்களைப் பார்த்து உதட்டைச் சுழித்தான்.
"ஓஹோ. உன்னை இவ காப்பாத்துறாளா? அப்படியே ஒட்டி பிறந்த இரட்டை பிறவிங்க. அப்படினா இரண்டு பேரும் ஒன்னா பொய் சேருங்க." என்று கூறி அவர்களை நெருங்க முயன்றவனைத் தடுத்து அவனுக்கு நியாயத்தைப் புரிய வைக்க முயன்றாள் த்ரிஷ்யா.
"ஒரு நிமிஷம் மகேஷ். நான் உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்குறேன். அதற்கு மட்டும் நல்லாயோசிச்சு பதில் சொல்லு. அதுக்கு அப்புறம் நீ எங்க இரண்டு பேரையும் என்ன வேணா பண்ணிக்கோ."
"உன் அப்பன் பாத்திமாவோட அம்மாவை இரண்டாந்தாரமா கல்யாணம் செஞ்சது உனக்குத் தெரியுமா?"
"என் அம்மா துரத்தி விட்டுட்டாங்க. அனாதையா இருந்த என் அப்பா அவ அம்மாவை கல்யாணம் செஞ்சுக்குட்டாரு. இதென்ன ஊர்ல உலகத்துல நடக்காததா?"
"சரி உன் அப்பா உன்கிட்ட எங்க அப்பா அவர் மூஞ்சுல ஆசிட் உத்தானதா சொன்னாருன்னு சொன்ன. அவர் ஏன் அப்படி செய்யணும்?."
அவன் ஒரு விரக்தியுடன் கூடிய சிரிப்பை உதிர்த்தான்.
"பாத்திமாவுக்கு உன் அப்பாவை தான் ரொம்ப பிடிக்குமாமே. அதே மாதிரி உன் அப்பனுக்கு பாத்திமாவோட அம்மாவை ரொம்ம்ம்ப பிடிக்குமாமே. இதை என் அப்பன் கண்டு பிடிச்சுட்டான். அதனால அந்த ஆள் என் அப்பன் மூஞ்சில ஆசிட் ஊத்திட்டான். ஏய் இதெல்லாம் இப்போ எதுக்கு பேசிட்டு இருக்க. உன் அப்பனும் உன் புருஷனும் பண்ணதுக்கு இன்னைக்கு நீங்க இரண்டு பேரும் தான் தண்டனை அனுபவிக்க போறீங்க. மேல பேசாதே"
"இல்ல மகேஷ். உன் அப்பா பச்சையா பொய் சொல்லி இருக்கான். அவன் பாத்திமா ஒரு சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காம..." என்று அவள் கூறி முடிக்கும் முன்னரே அவளை ஓங்கி அறைந்தான்.
"உன்னை பேச விட்டா நீ இஷ்டத்துக்கு கதை சொல்லுவ. டேய் இவளை இழுத்துட்டு பின் பக்கம் வாங்கடா." என்று கூறியவன் முன்னே சென்றுவிட்டான்.
த்ரிஷ்யா பாத்திமாவை காண அவளது கண்கள் அலைபாய்ந்துகொண்டே இருந்தது. அவளது முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள் உதிர்ந்தன.
தனக்கு தானே பேசிக்கொள்பவளைப் போல் "இல்ல. வேணா. ப்ளீஸ் என்ன விட்டிருங்க. வேணாம்." என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்தாள் நிகழ்காலத்தில் இருக்கும் ஆபத்தைப் பற்றி கவலைப் படுபவளைப் போல் தெரியவில்லை. இறந்தகாலத்தில் நடந்து நிகழ்வில் நடந்த ஒரு ஆபத்தான சம்பவத்தைக் கண்டு மிரளுபவளை போல் காணப்பட்டாள். இவை எதையும் பொருட்படுத்தாத மகேஷின் ஆட்கள் அவர்கள் இருவரையும் இழுத்துச் சென்றனர்.
அவர்கள் அந்த வீட்டில் பின் புறத்தை அடைந்தனர். சுற்றி இருந்த வாழை தோப்பு அழகுறக் காணப்பட்டாலும் அந்த நிலையில் தோழிகள் இருவருக்கும் ஒரு ஆபத்து நிறைந்த வனத்தைப் போலக் காட்சி அளித்தது.
அந்த வாழை மரங்களைத் தாண்டி அவர்கள் சென்று அடைந்த இடத்தில் ஒரு விதமான துர்மணம் வீசியது. அந்த பகுதியில் ஒரு பெரிய குழி தோண்டப்பட்டிருந்தது. அந்த குழியை எட்டிப் பார்த்த த்ரிஷ்யா அதிர்ச்சி அடைந்தாள். ஏனெனில் அந்த குழியில் ஒரு சடலம் இருந்தது.
27

என்று அந்த சிவாவை மகேஷ் வசைபாட திடீரென்று த்ரிஷ்யா சிரித்துவிட்டாள்.
மூவரும் அவளைத் திரும்பிப் பார்க்க த்ரிஷ்யா சிரித்தபடியே அவனுக்குப் பதில் அளித்தாள்.

Quote from நலம் விரும்பி !!.. on August 12, 2020, 7:04 PMVery interesting episode ,but where is hero ?
Very interesting episode ,but where is hero ?