You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Shamili Dev's Ennai ma(r)nanthayo-6

Quote

இந்த பதிவிற்கான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் User ஆக Register செய்யாமல் Chat box ல் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ள இயலும். 

Happy reading😍

நன்றி

ஷாமிலி தேவ்.

*********

6

பிரபாவும் த்ரிஷ்யாவும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.

த்ரிஷ்யா பிரபாவின் மார்பில் தலைசாய்த்தபடி படுத்திருக்க, அவன் அவளை தன் கையணைப்பில் பிணைத்தபடி உறங்கி கொண்டிருந்தான்.

எங்கேயோ வெகுதூரத்தில் ஒரு பாடல் ஒலி கேட்கவும் பிரபாவின் உறக்கம் களைந்தது.

அந்த பாடல் அவன் கைப்பேசியின் ரிங்டோன் என்பது புரியவும்,
தன் மனைவியின் தூக்கம் களையாமல் மெல்ல அவளின் தலையணையில் படுக்கச்செய்துவிட்டு தன் கைபேசியின் அழைப்பை ஏற்றான்.

"ஹலோ சொல்லுடா சரவணா.. என்னடா விடிய காலையிலேயே .... அஹ்ஹ்ஹ? ரொம்ப டயர்டா இருக்கு ... என்ன விஷயம் னு சீக்கிரம் சொல்லிட்டு ஃபோன வை..."

"என்ன மச்சி தங்கச்சி அடி பின்னிட்டாங்க போல... அதான் டையார்டா இருக்கியா?"

"அடியா.. என்னடா உளறிட்டு இருக்க?"

"நான் ஒளறிட்டு இருக்கேனா... ஏன் சொல்லமாட்டா... த்ரிஷ்யா எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்கன்னு தெரியல... என்ன பண்ண போராளோனு பேச்சுலர்ஸ் பார்ட்டில உளறிட்டு இருந்தது நீயா இல்ல நானா?"

"ஓஹோ அதுவா... மச்சி...

தகுடுதனா... திறனனா... னா...." என்று வாயாலையே பாட்டிசைக்க எதிர்புறத்தில் மௌனம்!

"புரியலையா மச்சீ...உன் தங்கச்சிய கரெக்ட் பண்ணிட்டேன் டா ..." என்று பிரபா சொல்லி முடித்த மறுகணம்
அவனின் உயிர் நண்பன் சரவணன் விழுந்து விழுந்து சிரிக்கும் சத்தம் கேட்டது.

"என்ன இவனுக்கு அதிர்ச்சில பைத்தியம் புடிச்சுடுச்சா... டேய் இப்போ எதுக்கு இப்படி விடாம சிரிக்குற..."

"மச்சி... நீ நயன்தாராவை கரெக்ட் பண்ணிக் கவுத்துட்டேனு சொன்னாகூட நான் நம்புவேன்.. ஆனா என் தங்கச்சிய.. வாய்ப்பே இல்ல..யார் காதுல பூ சுத்துற..."

"நீ நம்பளனு இப்போ யாரும் அழல...நானே நையிட்டெல்லாம் தூங்கவே இல்ல.. இப்போ தான் ஒரு அரைமணி நேரமா தூங்குறேன்... என்ன வெறுப்பேத்தாம ஃபோனை வை ..."

"அய்யய்யயோ ..அப்படியே இவர் நைட் எல்லாம் ப்ரஸ்ட் நைட் கொண்டாடின மாதிரி தூங்கவே இல்லையாமே.. யார்கிட்ட ரீல் சுத்துற.... உண்மையை ஓத்துக்கோ... நானே வந்து உன்ன ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போறேன்"

இப்பொழுது தான் என்ன சொன்னாலும் அவன் கிண்டல் செய்யும் மனநிலையில் இருக்கிறான் என்று பிரபாவுக்கு நன்றாக புரிந்தது. அதனால் பிரபா தன் கைபேசியை அணைத்துவிட்டு த்ரிஷ்யாவின் பக்கம் திரும்பியவன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்துவிட்டான்.

ஏனெனில் அவள் அப்பொழுது விழித்துக்கொண்டு அவனை தான் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

'அய்யய்யோ நம்ம பேசினதை எல்லாம் முழுசா கேட்டுட்டாளா... இவ பாக்குறாளா மொறைகுராளானே தெரியலையே... அவ்வ்வ்வ்' என்று வடிவேல் பாணியில் மனதிற்குள்ளேயே அழுது கொண்டிருந்தாள்.

"முடிஞ்சுடுச்சா..." என்று அவள் கேட்ட தொனியில்,

"என்ன... என்ன முடிஞ்சுடுச்சா..?." என்று தட்டுத்தடுமாறி திரு திருவென விழித்தான் நம் வீர தீர பிரபா.

"பேசிமுடிச்சுடீங்களானு கேட்டேன்..."

"ஆஹ்... முடிஞ்சுச்சு" அவள் மரியாதையுடன் அந்த "ங்க" போட்டு பேசியவுடன் தான் அவனுக்கு மூச்சே வந்தது.

அவள் திடீரென்று அவனை அப்படி முறைப்பதுபோல் பார்த்ததும் அவனுக்கு ஒரு நிமிடம் அவளுக்கு பழைய நினைவுகள் திரும்பி வந்துவிட்டதோ அல்லது அவனின் நண்பனிடம் பேசியதை கேட்டிருப்பாளோ என்று சந்தேகத்தால் மூச்சே நின்றுவிட்டது போல் இருந்தது.

இரண்டில் ஒன்று நடந்திருந்தாலும் அவன் நண்பன் சொன்னது போல் தான் நடந்திருக்கும்..

த்ரிஷ்யா அப்போது அவன் மனநிலை புரியாமல்,

"என்ன மன்னிச்சுடுங்க" என்றாள்.

"மன்னிப்பா எதுக்கு மா?" என்று அவனும் ஒன்றும் புரியாமல் கேட்க,

"இல்ல. நேத்து நான் அப்படி கத்தி...."

"ஆமாம்ல.. கரெக்ட்.. எனக்கு இப்போ தான் ஞாபகத்துக்கு வருது... " என்று கூறியவனின் குரலில் இப்போழுது குறும்பும் குதூகலமும் எட்டிப்பார்த்தது.

"உன்னை மன்னிக்கலாம் ஆனா கொஞ்சம் செலவாகுமே பரவாலையா.."

"செலவா.. புரியல..." அவன் ஏதோ வேற்றுமொழியில் பேசுவது போல் புரியாமல் விழித்தாள் அவன் மனைவி.

"ஐயோ உனக்கு எதுவுமே தெரியல... கவலைப்படாத... உனக்கு எத்தனையோ நாள் ப்ரோக்ராம்மிங் சொல்லி குடுத்திருக்கேன்.. அதே மாதிரி இதையும் சொல்லிகுடுக்குறேன்" என்று சொல்லி கண்ணடித்தவன் அவளை நெருங்கி அவள் கன்னத்தை மென்மையாக வருடத் தொடங்கிவிட்டான்.

அப்பொழுது தான் த்ரிஷ்யாவிற்கு அவன் பேச்சும் செயலும் புரிந்தது. அவனது இந்த குறும்புத்தனத்தை உள்ளுக்குள்ள விரும்பினாலும்.. முகத்தை கோபமாக வைப்பதுபோல் காட்டிக்கொண்டு அவன் கையை விளக்கித்தள்ளினாள்.

"ஐயோ விடுங்க.. உங்களுக்கு சீரியஸா பேசவே தெரியாதா?" என்று சலிப்புடன் கேட்டாள்.

"நோ பேபி.. நான் இதைவிட சீரியஸா பேசினதே இல்ல" என்று தீவிரமாக கூறினான் அவளின் கணவன்.

"ஹ்ம்ம் அது எனக்கு நல்லாவே தெரியும்... " என்று கேட்டவளின் கண்களே வெட்கப்படுகிறாள் என்று அவனுக்கு காட்டிக்கொடுத்தது.

உடனே, "நம்ம எதுல விட்டோம்... ஆஹ் மன்னிப்பு.. நான் உன்ன மன்னிக்கணும்னா ஒரு கண்டிஷன்.. நேத்து விட்டதுலேர்ந்து இப்போ கண்டின்யூ பண்ணனும்.. வாவாவா" என்று அவசர படுத்தியவன் அவளை இருகைகளாலும் வாரி அணைத்துக்கொண்டான்.

த்ரிஷ்யாவிற்கு அவன் கைசிறையிலுருந்து வெளிவருவது அவ்வளவு எளிதாக இல்லை. இரும்புப்பிடி போல் இருந்தன.

"பிலீஸ்ங்க..காலைலயே வேணாமே"

"அப்போ இன்னைக்கு நைட் ஓகேவா " என்று கேட்டான் சூட்சமமாக...

த்ரிஷ்யா தலையை குனிந்துகொண்டு, "ஹ்ம்ம்" என்றுமட்டும் சொன்னாள்.

பிரபா குனிந்துருந்த தன் மனைவியை பார்த்தான்... தனக்கு எப்படி இவள் மீது காதல் வந்தது என்று யோசிக்கத்தொடங்கி விட்டான். நெருப்பை நெருங்க யாருமே விரும்பமாட்டார்கள்.

த்ரிஷ்யாவை நெருப்பு என்று சொன்னாள் அதுமிகையாகாது. அவளுடன் நட்புணர்வு கொண்டவர்களை கூட ஒரு அடி தள்ளிவைத்து பழகுவது தான் அவள் சுபாவம். அவள் அதிகமாக நெருங்கி பழகும் ஒரே நபர் அவள் தோழி பாத்திமா தான்.

எது செய்தாலும் அந்த விஷயம் ஒரு சவாலாக அமையவேண்டும் என்று நினைக்கும் ரகம் தான் பிரபா. அதனால் தானோ என்னவோ பிரபா த்ரிஷ்யா என்னும் நெருப்பை நெருங்க ஆவல் கொண்டான். அவனின் காதல் எவ்வளவு தீவிரமாகி இருக்கிறது என்றால் அந்த தீயில் இறங்கி சாம்பலாகவும் அவன் ஆசைகொண்டான்

அவனின் இந்த யோசனை நிலையை உணர்த்த த்ரிஷ்யா இந்த இடைவேளையை பயன்படுத்தி அவனை தள்ளிவிட்டு ஓடிவிட்டாள்.

"ஓடுறியா ஓடு ஓடு... எவ்வளவு நாளைக்குனு நானும் பார்க்குறேன்" என்று அவளை கிண்டல் செய்தான். அவனின் சிரிப்பொலி மட்டும் அவளை துரத்திச்சென்றது.

இரவு முழுக்க தூங்காமல் கவலையில் ஆழ்ந்திருந்த சீதாபாரதி சிரிப்பும் வெட்கமுமாக மாடி அறையிலுருந்து படிக்கட்டில் இறங்கி வந்து கொண்டிருந்த தன் மகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் திளைத்து நின்றார்.

இதற்குள் செய்தித்தாளை தீவிரமாக படித்துக்கொண்டிருந்த த்ரிஷ்யாவின் தந்தை ஆனந்தராஜ் தாளிலிருந்து கண்களை அகற்றாமலேயே,

"சொல்ல சொல்ல கேக்காம பொலம்பிட்டே இருந்தியே.. இப்போ பாத்தியா என் பொண்ண.. " என்று சிரித்துக்கொண்டே தன் மனைவியின் பூரிப்பை பார்த்துக் கிண்டல் செய்தார்.

"சரி சரி அமைதியா இருங்க. உங்க பொண்ணுக்கு கேட்டிரப்போகுது. ..." என்று கணவனை அடக்கினார் சீதாபாரதி.

கீழே இறங்கியதும் தான் த்ரிஷ்யாவிற்கு தாய் தந்தை அங்கே இருப்பதன் நினைவே வந்தது. தன் புன்னகையை அடக்கிக்கொண்டு அவர்களை நெருங்கினாள்.

அவர் த்ரிஷ்யாவை குளித்துவிட்டு அப்படியே பிரபாவிற்கு தேவையானதை செய்யதுதருமாறு அறிவுரை செய்தார்.

'அய்யயோ மறுபடியும் அந்த ரூமுக்கா.. நான் போக மாட்டேன் பா' என்று மனதிற்குள் நினைத்தவள் அதை வெளியில் சொல்ல முடியாமல் தன் தாயின் சொற்களை மீறவும் முடியாமல் விழித்து கொண்டு நின்றாள்.

"என்ன முழிச்சுட்டு இருக்க.. சீக்கிரம் போமா" என்று அவர் அவசரப்படுத்த வேறுவழின்றி மீண்டும் தன் அறையை நோக்கி நடந்தாள்.

தயக்கம் வெட்கம் பூரிப்பு என்று அனைத்தையும் ஒரு சேர மகளின் முகத்தில் பார்த்த சீதா அவருக்கு தன் மகளின் வாழ்க்கையை பற்றிய கவலை முழுமையாக அகன்றது.

மீண்டும் தன் அறைக்குள் வந்த த்ரிஷ்யாவை சீண்டாமல் விட்டுவிட்டால் அவன் பிரபாவே இல்லையே..

சீண்டல்கள் கொஞ்சல்கல் கிண்டலோட மூன்று மணிநேர போராட்டத்திற்கு பின் ஒருவழியாக தானும் குளித்து தயாராகி அவனையும் தயாராக அழைத்து வருவதற்குள் த்ரிஷ்யாவிற்கு பாதி ஜீவன் போய்விட்டது...

"பூர்வஜென்மத்துல நான் ஏதோ உங்களுக்கு பெரிய பாவம் பண்ணி இருக்கேன் போல..
அதான் இப்போ மொத்தமா சேர்த்து வைச்சு என்னை செய்றீங்க" என்று தன் கணவனை பார்த்து சலிப்புடன் கூறினாள் த்ரிஷ்யா.

"பூர்வ ஜன்மத்துக்கலாம் ஏன் பேபி போற... இந்த ஜென்மத்துலயே என்ன நிறைய அலையவிட்டிருக்க...." என்று அவனிடம் இருந்து பதில் வந்தது...

அவள் ஏதோ கூறவரும் முன்பே அவள் வாயை கைகளால் மூடி,."நீ ஒரு ஆணியையும் கேட்கவேணாம்.. ஆல்ரெடி மணி பத்து ஆயிடுச்சு" என்று கூறி அவளை கீழே அழைத்து வந்திருந்தான்.

உணவருந்தும் மேசையில் உணவுகள் தயார் நிலையில் இருந்தன. அதுவும் வகை வகையான மாமிச உணவுகள்.

"என்ன அத்தை இது... பறக்கறதுல விமானமும் மிதக்கரதுல கப்பலும் தான் மிஸ்ஸிங் போல.. " என்று கிண்டல் செய்தான் பிரபா..

"என்ன தம்பி பண்றது... என் பொண்ண சமாளிக்க உங்களுக்கு தெம்பு வேணாமா?" என்று மகளை வம்புக்கு இழுத்தார் சீதா.

த்ரிஷ்ய பிரபாவை பார்த்தாள். அவன் சிரிப்பை அடக்க படாத பாடு பட்டுக்கொண்டிருந்தான். முந்தைய இரவில் இதே வார்த்தையை அவன் கூறியது நினைவிற்கு வந்தது.

அவளோ, "அப்பா பாருங்க பா அம்மாவ" என்று தன் தந்தையை துணைக்கு அழைத்தாள்.

"இதெல்லாம் என்ன மா.. இவளாச்சும் ஒரு ஏழு இல்ல எட்டு வகைல தான் சமைச்சிருக்கா... ஆனா எங்க மாமியார் சும்மா பதினாறு வகைல சமைச்சு வைச்சிருந்தாங்க. அப்படினா பார்த்க்கோ நான் எவ்வளவு சமாளிக்க வேண்டியிருந்ததுனு" என்று சிரிக்காமல் தன் மனைவியை வம்பு செய்தார்.

இதனை கேட்டு மூவரும் சிரித்துவிட்டனர். பிறகு தான் சீதாவிற்கு தன் கணவன் தன்னை தான் கிண்டல் செய்கிறார் என்று புரிந்தது. சிரிப்பை நிறுத்திவிட்டு கோபமாக அவர்க்கு ஒரு விரலில் பத்திரம் காட்டினார் அவர்.

இப்படி சிரிப்பும் குதுகலமுமாக சென்றது அன்றைய காலை பொழுது. பின் சீதா இருவரையும் அருகில் உள்ள லக்ஷ்மிநாராயணன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவரும்படி அனுப்பினார்.

பிரபாவும் த்ரிஷ்யாவும் கோவிலை அடைந்தனர். பிரபா த்ரிஷ்யாவை கோவிலுக்கு அனுப்பிவிட்டு தான் அர்ச்சனை கூடை வாங்கிவருவதாக சொல்லி பூக்கடையை நோக்கி நடந்தான்.

கோவிலுக்குள் சென்ற த்ரிஷ்யா அங்கு இருந்த கொடிமரத்தை பார்த்துக்கொண்டு நின்றாள். தனக்கு வாரம் ஒரு முறை இந்த கோவிலுக்கு வந்து செல்லும் வழக்கம் இருந்ததாக தன் தாய் சொன்னது நினைவிற்கு வந்தது. அதே போல் இந்த கோவிலுக்கும் தனக்கும் ஏதோ நெருக்கம் இருப்பது போல அவளும் உணர்ந்தே இருந்தாள்.

இந்நிலையில் யாரோ த்ரிஷ்யாவை இடித்துகொண்டுவந்து நின்றனர். அவள் யாரென்று திரும்பி பார்த்தாள். ஒரு பெண். அவளை பார்த்தால் புத்தி சுவாதீனம் இல்லாதது போல் இருந்தது. இவள் ஏன் இங்கு தனியாக நிற்கிறாள் என்று த்ரிஷ்யா யோசித்துக்கொண்டிருந்தாள்.

அதற்குள் பிரபா அர்ச்சனை கூடையோடு உள்ளே நுழைந்தான். அங்கே த்ரிஷ்யாவுடன் இன்னும் ஒரு பெண் நிற்பததை கண்டான். அந்த பெண்ணின் முகத்தை பார்த்தவன் அப்படியே அதிச்சியில் சிலையாய் சமைந்துவிட்டான்.

 

Uploaded files:
  • ennaimaranthayo.jpg
Quote

ஆரம்பம் கொஞ்சம் அதட்டல் ஆனால் தற்போது  அசத்தல் கதையின் பகுதி.

monisha has reacted to this post.
monisha

You cannot copy content