மோனிஷா நாவல்கள்
shamili Dev's Ennnai ma(r)nanathayo - 10
Quote from monisha on May 13, 2020, 10:30 PMமுந்தைய பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவர்க்கும் நன்றி. இதோ அடுத்த பதிவு உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
-shamili
10
பிரபா சென்றதும் த்ரிஷ்யாவும் பாத்திமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
பாத்திமாவிற்கு த்ரிஷ்யா மேல் கோபம் தான். ஆனால் அவளை திட்டுவதிலும் எந்த பயனும் இல்லை என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே எதுவும் பேசாமல் இருந்தாள்.
இருவரும் மதிய உணவை வாங்கி வைத்துக்கொண்டு அதனை உண்ணாமல் மௌனகதியில் இருந்தனர்.
பின் த்ரிஷ்யா பாத்திமாவை பார்த்து,
"என்ன டி எதுவுமே பேசமாட்டேங்குற? இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லு" என்று பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்
பாத்திமாவிற்கு சுள்ளென்று கோபம் வந்தது. பதில் ஏதும் சொல்லாமல் அவளை தீவிரமாக முறைத்தாள்.
"ப்ளீஸ் டி எனக்கு உன்னை விட்ட யார் இருக்கா?" என்று இறைஞ்சுதலாக வந்தது த்ரிஷ்யாவின் குரல்.
அதற்கு மேல் பாத்திமாவால் அவள் கோபத்தை இழுத்து வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் இவள் இப்படி செய்ததின் விளைவை எண்ணுகையில் அவளால் மன அமைதி அடையவும் முடியவில்லை. அதனால் அவள் செயலில் காரணத்தை வினவினாள்.
"ம்ம்ம். என்கிட்ட மட்டும் அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு செய்றதெல்லாம் அடப்பாவினு சொல்றமாதிரி செய். உனக்கு கடினமா இருந்தா நானே அவர் ஷர்ட்ட துவைச்சு இருப்பேன் இல்ல... ஏன் இப்படி பண்ண?"
த்ரிஷ்யா இதற்கு பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக புன்னகைத்தாள்.
இதனை கண்ட பாத்திமாவோ, "நான் இங்க கேள்வி கேட்டுகிட்டு இருக்கேன். நீ என்னடா என்றால் சிரிச்சுட்டு இருக்குற", என்று கோபமாக சீறினாள்.
"இல்ல பாத்திமா... எனக்கு பிரச்சனை அவர் செயினை எடுத்துக்கொண்டு போனது இல்ல.. நீ இவ்வளவு நேரம் என்ன திட்டாம இருந்தது தான்... அப்பாடா.. இப்போ தான் மனதிற்கு திருப்தியாக இருக்கு." என்று பெருமூச்சு ஒன்றை உதிர்த்து சிரிக்கலானாள் நம் நாயகி.
பாத்திமாவும் முயன்று அவளை முறைக்க எண்ணி அது முடியாமல் சிரித்துவிட்டாள். பெண்கள் இருவரும் இப்படி சிரித்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் பாத்திமா குழப்பமாக அவளின் தோழியை பார்க்க அதை கவனித்த த்ரிஷ்யா என்னவென்று வினவினாள்.
"இல்ல திரஷ்யா. நிஜமாவே உனக்கு செயினை பற்றிய கவலை இல்லையா? எதையும் முன் எச்சரிக்கையுடன் யோசிக்காமல் நீ செயல் படமாட்டா. ஆனா இந்த விஷயத்தில மட்டும் அவசரப் பட்டுட்டியோனு தோணுது"
"கவலை இல்லாம எப்படி டி இருக்கும். அனால் நான் யோசிக்காமல் எதையும் செய்யவில்லை."
"பொய் சொல்லாதே. நீ எப்படியும் சாரை ஏமாத்தி அந்த செயினை வாங்கிவிடலாம்னு தானே நினைச்ச."
"உண்மை தான். ஆனால் நான் அதை மட்டுமே முழுதா நினைக்கல. மேரே பாஸ் பிளான் பி ஹெ"
"ஆமா நீ தமிழ்ல பேசினாலே புரியாத மாதிரி தான் இருக்கும். இதுல ஹிந்தி வேற. என்ன அது பிளான் பி?"
"அந்த செயினை எப்படியோ அவன் வீட்டுலையே போய் எடுத்துட்டா?"
பாத்திமா அதிர்ச்சியில் அசையாமல் அவளை பார்த்தாள். பின், "ஒரு ராணுவ அதிகாரியோட பொண்ணு மாதிரியா பேசுற?" என்று கடுப்புடன் கேட்க அவள் தோழியோ,
"ராணுவ வீரர்களே தன் நாட்டை காப்பாற்றவும் எதிரி படைகளை அழிக்கவும் அந்த நாட்டிற்கு சென்று ரகசியபோர் தொடுப்பார்களாம். நான் என்ன அவன் பொருளையா திருட போறேன். என் செயினை எடுத்துக்கொண்டு வரப்போறேன்" என்று கூறி தான் செய்யும் செயலுக்கு நியாயம் கற்பித்தாள்.
"நீ சொல்வது தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கும் கதை. இதற்கு சார் சொன்னதை செய்து செயினை வாங்கிக்கொண்டிருக்கலாம். எப்படியும் அவர் சட்டை அப்படி ஆனதற்கு நீ தானே காரணம்."
"எதேது.. நீயே போய் அவருடன் சேர்ந்து எனக்கெதிராக போர்க்கொடி தூக்குவ போல"
"எனக்கென்னவோ அவரை பார்த்த நல்ல விதமா தான் தெரியுது. நீ தான் அவர்கிட்ட தேவை இல்லாம வம்பு பன்றியொன்னு தோணுது. ஏன் இதுக்கு முன்னாடி ஸ்கூல் காலேஜ்ல எல்லாம் நம்ம லேட்டா வந்ததற்கு வெளியே நிற்க வைத்ததில்லையா? அப்போதெல்லாம் சிரிப்பும் கிண்டலுமா சந்தோஷமா தானே நின்னோம். உனக்கு அங்க இருந்த டீச்சர்ஸ் மேல எல்லாம் கோபமே வரலையே... இப்போ என்ன புதுசா?" என்று தன் மனதில் இருந்த சந்தேகத்தை வெளிப்படையாக கேட்டாள் பாத்திமா.
"நீ சொல்றது ஒரு வகைல உண்மை தான். என்னனு தெரியல.. எனக்கு அவனை பார்த்தாலே இரிட்டேட் ஆகுது... ஆனா ஒன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும். அவன் என்ன சீண்டி விட்டு வேடிக்கை பாக்குறான்... சரி அதைவிட்டு பிளான் பீல நீ இருக்கியா?"
"இதென்ன கேள்வி? தப்போ சரியோ உன்ன விட்டுட்டு நான் என்னைக்கு இருந்திருக்கேன். ஆனா அவர் வீட்டை நாம எப்படி கண்டுபிடிக்க போறோம்?"
"இது ஒரு பெரிய விஷயமா? இன்னைக்கு வெள்ளிக்கிழமை. எப்படியும் அவன் சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பி விடுவான். அவனை தொடர்ந்து போனா அவன் வீடு தெரிந்து விட போகுது. வார நாட்களின் தானே நாம எட்டு மணிக்கு மேல கேம்பஸ விட்டு வெளிய போகக்கூடாது. நாளைக்கு சனிக்கிழமை தானே. நாளைக்கே இரவே போய் செயினை எடுத்துட்டு வந்துடுவோம்."
"இவ்வளவு ரிஸ்க் தேவையா? கொஞ்சம் யோசி டி"
"இல்ல பாத்திமா. இதை செய்து தான் ஆகணும். அவன் அந்த செயினை வைத்து இன்னும் என்னவெல்லாம் மிரட்ட போகிறான்னு தெரியாம நிம்மதி இல்லாம என்னால அலைய முடியாது. அது மட்டும் இல்ல. அப்படி அவன் மிரட்டலுக்கு நான் பணியும்படி நேர்ந்தால் அது என் ஈகோவுக்கு விழும் மிகப்பெரும் அடி"
"புரியுது... ஆனால் அவர் ஓருவேளை சனி ஞாயிறு லீவு தானேனு ஊருக்கு கிளம்பிட்டா?"
"அப்படி ஒன்னு இருக்குதோ. சரி இந்த முயற்சியை செய்து பார்ப்போம். ஒருவேளை இந்த வாரம் ஊருக்கு போய்ட்டா... அடுத்த வாரம் இன்னொரு பிளான் போடுவோம்."
"பிளான் எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா மாட்டினா சங்கு தான்."
"என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்.. டோன்ட் ஒர்ரி!" என்று அசட்டையாக சொன்ன தோழியை இமைக்காமல் பார்த்தாள் பாத்திமா.
இது தான் த்ரிஷ்யா. எந்த விஷயத்திற்கும் பயப்படவோ கலங்கவோ மாட்டாள். அவள் தந்தையின் வளர்ப்பு. அதனாலேயே பாத்திமாவிற்கு த்ரிஷ்யா என்றாள் பிரியம். அது மட்டும் இன்றி அவள் வாழ்க்கையில் அவள் மீளவே முடியாதோ என்று நினைத்த பெரும் துன்பத்திலிருந்து அவளை மீட்டெடுத்து புது வாழ்க்கை அளித்தவன். அதை எண்ணும் பொழுது அவள் தன் தோழிக்காக தன் உயிரையே கொடுத்தாலும் தவறு இல்லை என்றே நினைத்தாள்.
தோழிகள் இருவரும் அவர்கள் தீட்டிய திட்டத்தை நிறைவேற்ற அன்று இரவு பிரபாவை பின் தொடர்ந்து சென்றனர். பிரபா சென்று வர சிரமம் இல்லாத படி பயிற்சி வளாகத்திலிருந்து இரண்டாவது தெருவிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தான். அதனால் அவன் சென்றடைந்த வீட்டை அடையாளம் கண்டவுடன் அவன் வீட்டில் நுழைய கூடிய குறிப்பான சிலவழிகளை கண்டறிந்துவிட்டு தோழிகள் இருவரும் நினைத்ததை விட விரைவாகவே பயிற்சி மையத்தை அடைந்தனர்.
அடுத்த நாள் இரவு பிரபா சென்ற வீட்டை அடைந்த தோழிகள் இருவரும் அந்த வீட்டினுள் சத்தமின்றி நுழைந்தனர். அங்கு பிரபா போர்வையை முகம் வரை போர்த்திக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இதனை கண்ட தோழிகள் முகத்தில் ஒரு வெற்றி புன்னகை உதிர்ந்தது. பின் இருவரும் ஓசை படாமல் அந்த வீட்டை முழுக்க அலசி ஆராய்ந்தனர். எங்கு தேடியும் செயின் மட்டும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
அதற்குள் பிரபா தூக்கத்திலேயே திரும்பி கொஞ்சம் ஒருக்களித்து படுத்துகொண்டான். அப்பொழுது அவனின் போர்வை விலகியதை கண்ட த்ரிஷ்யா அவன் சட்டைப் பையை கவனிக்கலானாள் .
'ஒருவேளை செயினை இவன் ஷர்ட் இல்லனா பாண்ட் பாக்கெட்டில் வைத்திருப்பானோ?' என்று யோசித்தவள் மெல்ல அவனை நெருங்கினாள். ஆனால் அவன் ஒருக்களித்து படுத்திருந்ததால் அவனை தொடாமல் அவன் சட்டைப் பையினுள் கைவிட்டு எடுப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.
இருந்தாலும் த்ரிஷ்ய இன்னும் கொஞ்சம் அவனை நெருங்கி விரல்களை மட்டும் அவன் சட்டைப் பைக்குள் திணிக்க முயன்றாள். அவ்வளவு தான். அறைவினாடிக்குள் த்ரிஷ்யா பிரபாவின் கையணைப்பில் இருந்தாள். இந்த திடீர் தாக்குதலில் த்ரிஷ்யா திக்கு முக்காடி போனாள். அவனது கைப்பிடி மேலும் மேலும் இறுகிக்கொண்டே போனது.
அவனை விட்டு விலக அவள் எடுத்த முயற்சிகள் எல்லாம் எறும்பு மலையை முட்டுவது போல் ஒன்றுமில்லாமல் போனது. அப்பொழுது த்ரிஷ்யா பிரபாவை பார்க்க அவன் அப்பொழுது கண்களாலேயே அவளை விழுங்கு கிறவன் போல கிறக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனின் முகம் மேலும் அவளை நெருங்க அவன் கண்கள் அவள் கண்களில் இருந்து இறங்கி உதடுகள் மேல் பதிந்தது.
அவனின் இந்த பார்வையை கண்ட த்ரிஷ்யாவின் நா உலர்ந்துபோனது போல் இருந்தது. அவள் மெல்ல மெல்ல அவனின் கைப்பிடியில் இருந்து விலகும் முயற்சியை கைவிட்டாள். அவள் பார்வை அவன் பார்வையினுள் மூழ்கி போனதாகவே அவள் உணர்ந்த அந்த தருணம் பிரபாவின் உதடுகள் அவள் உதடுகளை தனதாக்கி கொண்டது.
"நோ...!!!!." என்ற சத்தத்துடன் அலறித்துடித்து எழுந்து அமர்ந்தாள் த்ரிஷ்யா. அவளுக்கு வேகமாக மூச்சு வாங்கியது. ஒரு நிமிடம் அவள் தான் இருக்கும் இடத்தை சுற்றி பார்த்தாள். அந்த இடம் இருட்டாக இருந்த போதிலும் அது அவர்களின் விடுதி அறை என்பதை அவள் உட்கார்ந்து இருக்கும் கட்டில் மெத்தை நிரூபித்த பிறகு தான் த்ரிஷ்யாவிற்கு மூச்சே விட முடிந்தது.
அறையின் விளக்கை எரியவிட்டவள் திரும்பி பார்க்க அருகே அவள் தோழி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
இது கனவு தான் என்று தெரிந்து நிம்மதி அடைந்த போதிலும் அவளுக்கு இந்த மாதிரி கனவு வர அந்த பிரபா தான் காரணம் என்று அவளின் கனவிற்கும் அவனையே குற்றவாளியாக கருதி அதற்கு சரியான தண்டனையையும் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு உறங்க முயற்சி செய்தாள். ஆனால் கண்களை மூடியதுமே அவன் முத்தமிட அருகில் வந்த தோற்றம் கண்முன் வந்து இம்சிக்க அன்றைய இரவு அவளிற்கு தூங்கா இரவாகவே அமைந்தது.
காலையில் தோழியின் முகத்தில் இருந்த சோகத்தை கவனித்த பாத்திமா அதன் காரணம் வினவ அவளிடம் தன் கனவை பற்றி கூறினாள் த்ரிஷ்யா. கொஞ்சம் இலை மறை காய் மறையாகத்தான். ஏனென்றால் அவளுக்கு அந்த நினைப்பே என்னவோ போல் இருக்கும் பொழுது எங்கனம் தன் தோழியிடம் முழுவதுமாக பகிர்ந்து கொள்வது .
ஆனால் பாத்திமா பெண் ஆயிற்றே. அவளுடைய உணர்வுகளை சரியாக கணித்த அதே நேரம் அவளுடைய இந்த எரிச்சலும் கவலையும் தேவையற்றது என்று புரியவைத்தாள்.
"இது ஒன்னும் இல்ல த்ரிஷ்யா. உனக்கு அவர் மேல முதலில் இருந்தே நல்ல இம்ப்ரெஷன் இல்ல. அதனால் அவர் மேல வெறுப்பு அதிகமா இருக்கு. இதனால் வரும் விளைவுகள் தான் இவை எல்லாம். நீ இப்படி தேவையற்ற வன்மமும் வெறுப்பும் வளர்த்துக் கொள்வது சரினு எனக்கு தோணல."
அத்துடன் அந்த விஷயத்திற்கு அப்பொழுது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தது. வந்ததில் இருந்து பாடம் பயிற்சி என்று சுற்றிக்கொண்டு இருந்ததால் அவர்களால் அந்த பயிற்சி மையத்தை சரிவர சுற்றி பார்க்க முடியவில்லை. அன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் இருவரும் அந்த மையத்தை சுற்றி பார்க்க முடிவு செய்தனர்.
அந்த மையத்தில் இரண்டு பயிற்சி பகுதிகள் மற்றும் எட்டு உணவு மையங்களுடன் சேர்ந்து ஒரு (ரிக்கிரியேஷன் பிளாக்)பொழுதுபோக்கு தொகுதியும் இருந்தது. அதனுள் நீச்சல் குளம், டேபிள் டென்னிஸ் கோர்ட், வாலிபால் கோர்ட், பாஸ்கெட் பால் கோர்ட், பில்லியார்ட்ஸ் என்று பலவிதமான விளையாட்டு இடங்கள் அமைக்க பட்டிருந்தன. அது மட்டும் இன்றி அவர்கள் அந்த பயிற்சி தொகுதிக்கு செல்லும் வழியில் பெரிய குளம் ஒன்று அமைக்க பட்டு அதன் மேல் நடந்து செல்லும் பாலமும் அமைக்க பட்டிருந்தது. அந்த இடம் எங்கும் மரங்கள், செடிகளில் பூக்கள் என்று பூத்துகுலுங்கின. அதே நேரம், நடை பாதை எங்கும் நத்தை, கம்பிளி பூச்சிகளுடன், அட்டை பூச்சிகளும் ஊர்ந்து சென்று கொண்டிருப்பதை பார்க்க உண்மையாகவே ஏதோ காட்டிற்குள் இருப்பது போன்ற ஒரு பிரமை தோன்றியது.
தோழிகள் இருவருக்கும் அந்த மையம் முற்றிலும் சுற்றி பார்க்கவே மாலையாகி விட்டிருந்தது. என்னதான் த்ரிஷ்யா தன் விசித்திரமான கனவின் நினைவில் இருந்து மீளமுடியாமல் தவித்த போதிலும், அவள் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. அதன்படி, த்ரிஷ்யா பிரபாவின் வீட்டிற்குள் நுழைவதற்கான திட்டத்தை வகுத்து அதனை தன் தோழியிடமும் பகிர்ந்துகொண்டாள்.
"எனக்கென்னவோ இந்த பிளான்" என்று பாத்திமா கூறி முடிக்கும் முன்னரே த்ரிஷியா அவள் வாயை தன் கைகளால் பொத்தினாள்.
"நெகட்டிவா எதுவும் சொல்லி என் கான்பிடென்ஸ உடைக்காத... நான் சொல்றபடி செஞ்சா எந்த பிரச்சனையும் வராது" என்று த்ரிஷ்யா கூறியதை கேட்டு பாத்திமா வேறு வழி இன்றி தலையை ஆட்டிவைத்தாள்
இரவான பிறகு தோழிகள் இருவரும் திட்டமிட்ட படியே முந்தைய நாள் பிரபாவை தொடர்ந்து சென்று கண்டறிந்த வீட்டை அடைந்தனர். பிரபா குடி இருந்த வீடு இரண்டு மாடி கட்டிடங்களை கொண்டது. அதில் அவன் முதல் தளத்தில் வசித்து வந்தான். பெண்கள் இருவரும் கீழ் தலத்தில் நின்று உரையாடிக்கொண்டிருந்தனர்.
"த்ரிஷ்யா உன்னை எப்படி டி தனியா மேல அனுப்புறது. நானும் வரேனே?"
"எதுக்கு மாட்டினா ரெண்டு பேரா சேர்ந்து மாட்டிக்கலாம்னு பாக்கறியா? நம்ம ஒரு ஆண்பிள்ளை வீட்டுக்குள்ள ரசியமா போறோம். ரொம்ப எச்சரிக்கையா இருக்கனும். உன் கையில் கொடுத்த பெப்பர் ஸ்பிரே, கத்தி, விசில் எல்லாம் பத்திரமா வைச்சுருக்கியா?"
"ஹ்ம்ம் என்னோட ஹாண்ட் பாகில் இருக்கு? நீ?"
"ஹே ரூம்ல உன்கண்முன்னாடி தானே என் பாண்ட் பாக்கெட்ல வெச்சேன். "
"சரி சரி சீக்கிரம் வந்துடு பத்திரம்."
"நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு இல்ல. நான் வர இருபது நிமிடத்திற்கு மேல ஆனா நீ விசில் அடிக்கணும். ஒரு வேலை நான் விசில் அடிச்சாலும் நீ ஹெல்ப்!! ஹெல்ப்!!னு கத்தி விசில் அடிக்கணும். "
"சரி ஓகே" என்று கூறி கட்டை விரலை உயர்த்தி தன் தோழியை வழியனுப்பி வைத்தாள் பாத்திமா.
த்ரிஷ்யா மேல் தளத்தில் இருக்கும் பிரபாவின் வீட்டை அடைந்ததும் முன் தினம் அவள் கவனித்த வைத்திருந்த ஏ/சி வெண்டை பரிசோதிக்கலானாள். அதில் இருந்த விசிறி சுற்றிக்கொண்டிருந்தது.
'அப்பாடா ஏ/சி ஓடுது. அப்போ அவன் உள்ளே தான் இருக்கான். நல்லவேளை இவன் ஊருக்கு போய் இருந்தான் என்றால் நம்ம பிளான் சொதப்பி இருக்கும்.' என்று த்ரிஷ்யா நிம்மதியுற்றாள்
பின் 'என்ன இங்க நடுராத்திரியில் தவிக்கவிட்டுட்டு நீ குலு குலுனு ஏ/சி லையா தூங்கிற. இரு இரு ' என்று மனதிற்குள் பொருமியவள் ஏ/சி குளிர்ச்சியை நிறுத்தும் முயற்சியில் இறங்கினாள்.
நல்லவேளையாக அது கொஞ்சம் பழைய மாதிரி ஏ/சி என்பதால் அந்த வெண்டிலேட்டர் முழுமையாக கம்பியினால் மூடப்பட்டிருக்கவில்லை. அதனுள் ஒரு குச்சியை நுழைக்கும் அளவிற்கு சின்ன சின்ன சந்துகள் இருந்தன. த்ரிஷ்யா அந்த வெண்டிலேட்டர் அருகில் சென்று அதனுள் சுற்றிக்கொண்டிருந்த விசிறியின் இடையில், தலை பாகம் மட்டும் கொத்தாக பஞ்சினால் சுற்ற பட்டிருந்த குச்சியை இறக்கியதில், அவ்வளவு நேரம் சுற்றிக்கொண்டிருந்த விசிறி நின்றுவிட்டது.
அவள் எதிர்பார்த்தது போல உள்ளிருந்தவன் ஜன்னலை திறந்து வைத்துவிட்டு போய் படுத்துகொண்டான்.
இதற்கு தான் ஏ/சி வெண்டை நிறுத்தியதே. எப்படியும் ஏ/சி வேண்டில் உள்ள விசிறியின் ஓட்டத்தை நிறுத்தினால் ஏ/சி ஓடிக்கொண்டிருந்தாலும் அதிலிருந்து குளிர்காற்று வராது. பின் அவனாக எழுந்து ஜன்னல் கதவை திறப்பான் என்று த்ரிஷ்யா எதிர்பார்த்திருந்தாள்.அந்த வீட்டு ஜன்னல் நடுவில் கம்பிகள் இல்லாமல் மாடர்ன் ஸ்டைல் என்ற பெயரில் பாதுகாப்பு இன்றி அமைக்கப்பட்டு இருந்தது. அதுவே உள்ளே செல்ல வசதியான வழி என்று த்ரிஷ்யா முந்தைய நாளே கண்டறிந்து அதற்கேற்ப திட்டங்களை தீட்டினாள். தன் திட்டம் நினைத்தவாறே நடந்தேறியதை கண்ட த்ரிஷ்யா 'யாஹூ.. ' என்று தனக்கு மட்டும் கேட்கும் குரலில் மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டாள். பின் அவன் மீண்டும் தூங்குவதற்கு ஒரு அரைமணிநேரம் அவகாசம் கொடுத்துவிட்டு பிறகு அவள் ஓசைப்படாமல் ஜன்னல் வழியே அந்த அறையினுள் நுழைந்தாள்.
அது இரண்டு அறை மற்றும் ஒரு கழிப்பறை கொண்ட வீடு என்பதாலும் அங்கு பெரிதாக பொருட்கள் ஏதும் இல்லாததும் அவர்கள் தேடிவந்ததை கண்டுபிடிப்பதற்கு சுலபமே என்று எண்ணினாள். ஆனால் அவளின் செயின் எங்கு தேடியும் அகப்படவே இல்லை.
திடீரென்று த்ரிஷ்யாவிற்கு அந்த சந்தேகம் வந்தது.
'ஒருவேளை நம்ம கனவில் யோசிச்சது போல் அவன் ஷர்ட் பாக்கெட்லயே செயின் இருந்தால்?' என்று யோசித்தவள் தலையை பலமாக உலுக்கிக்கொண்டாள். 'ஊம்ம்ம் அது அங்க இருந்தா கூட அவன் கிட்ட நெருங்கி எந்த விஷப் பரீச்சையும் நாம் வெச்சுக்க கூடாது. ப்ராட்!! பக்கி!! எங்க தான் என் செயினை வைத்தானோ?' என்று எரிச்சலுடன் புலம்பி கொண்டிருந்த போது திடீரென்று அவளுக்கு ஒரு விபரீத யோசனை தோன்றியது.
உடனே பக்கத்து அறைக்கு சென்றவள் அங்கு ஒரு பெரிய மேஜை மீது அடுப்பு மற்றும் சமையல் சாமான்கள் வைக்கப்பட்டு இருந்ததை கண்டாள். பின் அங்கிருந்து ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் மிளகாய் தூளை போட்டு கலக்கினாள். பின் பிரபா இருந்த அறைக்கு சென்றவள் போர்வையினுள் தூங்கிக்கொண்டிருந்தவன் மீது அந்த மிளகாய் தண்ணீரை ஊற்றி விட்டு மின்னல் வேகத்தில் வேகமாக ஜன்னல் மீதேறி குதித்தாள்.
தண்ணீர் பட்டவுடன் உள்ளே இருந்தவன் அலறிய அலறல் அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது. அதி வேகமாக படிக்கட்டில் இறங்கி ஓடிய போது யார் மீதோ மோதிய த்ரிஷ்யா நிலை தடுமாறி கீழே விழுந்தாள்.
இந்த எதிர்பாராத திடீர் மோதலால் எதிரே வந்தவனும் சற்று நிலை தடுமாறி சுவற்றை பிடித்துக்கொண்டு நின்றான். அப்பொழுது அந்த தெரு மின்விளக்கின் உதவியால் கொஞ்சமே கொஞ்சம் தெரிந்த வெளிச்சத்தில் மோதியவன் முகத்தை பார்த்த த்ரிஷ்யா பேய்யை பார்த்தது போல் அலறத்தொடங்கிவிட்டாள்.
ஏனெனில் அங்கு சுவற்றில் சாய்ந்து நின்றவன் சாட்சாத் பிரபாவே தான்!
முந்தைய பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவர்க்கும் நன்றி. இதோ அடுத்த பதிவு உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

இதற்கு தான் ஏ/சி வெண்டை நிறுத்தியதே. எப்படியும் ஏ/சி வேண்டில் உள்ள விசிறியின் ஓட்டத்தை நிறுத்தினால் ஏ/சி ஓடிக்கொண்டிருந்தாலும் அதிலிருந்து குளிர்காற்று வராது. பின் அவனாக எழுந்து ஜன்னல் கதவை திறப்பான் என்று த்ரிஷ்யா எதிர்பார்த்திருந்தாள்.
அந்த வீட்டு ஜன்னல் நடுவில் கம்பிகள் இல்லாமல் மாடர்ன் ஸ்டைல் என்ற பெயரில் பாதுகாப்பு இன்றி அமைக்கப்பட்டு இருந்தது. அதுவே உள்ளே செல்ல வசதியான வழி என்று த்ரிஷ்யா முந்தைய நாளே கண்டறிந்து அதற்கேற்ப திட்டங்களை தீட்டினாள். தன் திட்டம் நினைத்தவாறே நடந்தேறியதை கண்ட த்ரிஷ்யா 'யாஹூ.. ' என்று தனக்கு மட்டும் கேட்கும் குரலில் மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டாள். பின் அவன் மீண்டும் தூங்குவதற்கு ஒரு அரைமணிநேரம் அவகாசம் கொடுத்துவிட்டு பிறகு அவள் ஓசைப்படாமல் ஜன்னல் வழியே அந்த அறையினுள் நுழைந்தாள்.
அது இரண்டு அறை மற்றும் ஒரு கழிப்பறை கொண்ட வீடு என்பதாலும் அங்கு பெரிதாக பொருட்கள் ஏதும் இல்லாததும் அவர்கள் தேடிவந்ததை கண்டுபிடிப்பதற்கு சுலபமே என்று எண்ணினாள். ஆனால் அவளின் செயின் எங்கு தேடியும் அகப்படவே இல்லை.
திடீரென்று த்ரிஷ்யாவிற்கு அந்த சந்தேகம் வந்தது.
'ஒருவேளை நம்ம கனவில் யோசிச்சது போல் அவன் ஷர்ட் பாக்கெட்லயே செயின் இருந்தால்?' என்று யோசித்தவள் தலையை பலமாக உலுக்கிக்கொண்டாள். 'ஊம்ம்ம் அது அங்க இருந்தா கூட அவன் கிட்ட நெருங்கி எந்த விஷப் பரீச்சையும் நாம் வெச்சுக்க கூடாது. ப்ராட்!! பக்கி!! எங்க தான் என் செயினை வைத்தானோ?' என்று எரிச்சலுடன் புலம்பி கொண்டிருந்த போது திடீரென்று அவளுக்கு ஒரு விபரீத யோசனை தோன்றியது.
உடனே பக்கத்து அறைக்கு சென்றவள் அங்கு ஒரு பெரிய மேஜை மீது அடுப்பு மற்றும் சமையல் சாமான்கள் வைக்கப்பட்டு இருந்ததை கண்டாள். பின் அங்கிருந்து ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் மிளகாய் தூளை போட்டு கலக்கினாள். பின் பிரபா இருந்த அறைக்கு சென்றவள் போர்வையினுள் தூங்கிக்கொண்டிருந்தவன் மீது அந்த மிளகாய் தண்ணீரை ஊற்றி விட்டு மின்னல் வேகத்தில் வேகமாக ஜன்னல் மீதேறி குதித்தாள்.
தண்ணீர் பட்டவுடன் உள்ளே இருந்தவன் அலறிய அலறல் அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது. அதி வேகமாக படிக்கட்டில் இறங்கி ஓடிய போது யார் மீதோ மோதிய த்ரிஷ்யா நிலை தடுமாறி கீழே விழுந்தாள்.
இந்த எதிர்பாராத திடீர் மோதலால் எதிரே வந்தவனும் சற்று நிலை தடுமாறி சுவற்றை பிடித்துக்கொண்டு நின்றான். அப்பொழுது அந்த தெரு மின்விளக்கின் உதவியால் கொஞ்சமே கொஞ்சம் தெரிந்த வெளிச்சத்தில் மோதியவன் முகத்தை பார்த்த த்ரிஷ்யா பேய்யை பார்த்தது போல் அலறத்தொடங்கிவிட்டாள்.
ஏனெனில் அங்கு சுவற்றில் சாய்ந்து நின்றவன் சாட்சாத் பிரபாவே தான்!
Uploaded files:
Quote from நலம் விரும்பி !!.. on May 14, 2020, 10:14 AMட்வீஷ்ட் ஆரம்பம் . யார் காதல் , கலாட்டா செய்தாலும் பாதிக்கப்படுவது நண்பர்கள் மட்டுமே ..
ட்வீஷ்ட் ஆரம்பம் . யார் காதல் , கலாட்டா செய்தாலும் பாதிக்கப்படுவது நண்பர்கள் மட்டுமே ..