மோனிஷா நாவல்கள்
Solladi Sivasakthi - Episode 10
Quote from monisha on December 30, 2024, 3:28 PM10
மதிப்புக்குரியவன்
முன்பு ஒரு முறை சிவசக்தி சந்திக்க நேர்ந்த மோசமான நிகழ்வும், அப்பொழுது அவன் செய்த உதவியுமே அவளுக்கு அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டிற்று.
கல்லூரியில் கடைசி வருடத் தேர்வு நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. சிவசக்தி தேர்விற்குப் படித்துத்தான் எழுத வேண்டும் என்பதில்லை. அவள் படிப்பதைவிடத் தன் நண்பர்களுக்குப் பாடங்களை விளக்குவதன் மூலமே அவள் பயின்று விடுவாள்.
எல்லோருமே கல்லூரி நாட்களின் முடிவையும் வரப் போகும் தேர்வையும் எண்ணி வருந்திக் கொண்டிருந்தனர். அந்தத் தருணத்தில் சக்திக்கு கிடைக்கப்பெற்ற செய்தி எதிர்பாராத விதமாய் அவள் அண்ணன் அருணின் மரணம்.
அருண் கட்டிடக் கலை பொறியியல் பயின்றவன். சில மாதங்கள் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்தான். சில கால அனுபவத்திற்குப் பின்னர்த் தானே சொந்தமாய் ஒரு நிறுவனம் தொடங்கி அதற்கான முழு முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
ஆனால் எதிர்பாராத விதமாய் அவன் கட்டிக் கொண்டிருந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்து தவறி வீழ்ந்து அந்தக் கணமே உயிர் துறந்தான்.
சிவசக்தியினைத் தாங்கி நின்ற தூணாகவே அருண் இருந்தான் என்றே சொல்ல வேண்டும். இன்று அவனின் இறப்பு சக்தியின் தன்னம்பிக்கையை உடைத்தெறிந்தது.
திவ்யாவோ நிறைமாத கர்ப்பிணியாய் கணவனை இழந்து நொறுங்கிப் போயிருக்க சக்தியும் அவளைத் தேற்ற முடியாமல் உடைந்துப் போனாள். சிவசக்தி இல்லத்தில் இருந்த பெண்கள்தான் சக்திக்கும் திவ்யாவிற்கும் ஆறுதலாய் இருந்து வந்தனர்.
அத்தனை சீக்கிரத்தில் சரி செய்துவிடக் கூடிய இழப்பல்ல அருணின் மரணம். திவ்யா தன் பெற்றோர்களை விட்டு அருணை நம்பியே வந்திருந்தாள். ஆனால் இன்று எல்லாவற்றையும் மறந்து திவ்யாவின் பெற்றோர் மகளின் சோகத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.
திவ்யாவின் தாய், தந்தையினருக்கு அருணின் மரணம் சோகத்தை விடக் கோபத்தையே அதிகமாய் உருவாக்கியது.
மகள் இப்படி நிராதவாய் நிற்க திவ்யாவின் தந்தை சக்தியிடம்,
“என் பொண்ணோட வாழ்க்கையே உன் அண்ணன் அழிச்சிட்டானே... இப்ப வயித்துல பிள்ளையோட அநாதரவா நிக்க வைச்சிட்டீங்களே?” என்று கண்ணீரோடு அவளைத் தூற்றினார்.
அது உண்மையிலேயே ஒரு தந்தையின் உணர்வுப்பூர்வமான வலி என்றாலும் அதில் சக்தியின் தவறென்ன? அண்ணனின் இழப்பைத் தாங்கி கொள்ளவே முடியாத பட்சத்தில் திவ்யாவின் தந்தையின் கோபம் அவளை அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. திவ்யாவை அவள் பெற்றோர்கள் உடன் அழைக்க அவள் சக்தியை தனியாய் விட்டுப் போக மறுத்தாள்.
சக்தி தன் அண்ணியிடம்,
“நீங்க உங்க அம்மா, அப்பாவோட போங்க... இந்த மாதிரி நேரத்தில நீங்க அவங்க கூடதான் இருக்கனும்... என்னைப் பத்தி கவலை படாதீங்க... நான் ஹாஸ்டல் போயிடுவேன்... எக்ஸேம்ஸ் முடிஞ்சதும் நம்ம இல்லத்தில போய்த் தங்கிப்பேன்” என்றாள்.
“இல்ல சக்தி“ என்று திவ்யா ஏதோ சொல்ல சக்தி அவளைப் பேசவிடாமல் வற்புறுத்தி அவள் பெற்றோருடன் பெங்களூர் அனுப்பிவைத்தாள்.
பிரச்சனை எல்லாம் அதற்குப் பிறகுதான் தொடங்கியது. அருண் கன்ஸ்டிரங்க்ஷன்ஸ் எடுத்துச் செய்து கொண்டிருந்த பெரிய பிராஜகட் அப்படியே ஸ்தம்பித்தது. அந்தப் பிராஜகட்டுக்காக அவன் பணம் பெற்ற கம்பெனி இப்போது நெருக்கடித் தந்தது.
பாதியில் முடிக்கப்படாமல் நின்று கொண்டிருக்கும் அந்தக் கட்டிடம் முடிவுறாமல் அதன் லாபத்தைப் பெற முடியாது. இந்நிலையில் அந்தக் கட்டிட வேலை மீண்டும் தொடர பணம் தேவையாக இருந்தது. அதை ஏற்பாடு பண்ணுமளவுக்கு சக்திக்கு வயதும் இல்லை. அதற்குரிய அனுபவமும் இல்லை.
அருண் தெரியாமலோ தெரிந்தோ செய்த தவறு தன் தொழிலுக்காகச் சிவசக்தி இல்லத்தை அடைமானம் வைத்து தன் பணத்தைப் பெற்றதுதான். அந்த இல்லம் சிவசக்தியின் பெயரில்தான் இருந்தது. அவளிடம் இது குறித்த விவரம் சொல்லாமல் அருண் வாங்கிய கையெழுத்தையும் அவள் மறந்திருந்தாள்.
அருண் சுயதொழில் செய்ய வேண்டுமென்ற அவன் கனவிற்காகப் பலரின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக மாற்றினான். இது குறித்த செய்தியை இல்லத்தில் உள்ளவர்களுக்கு எப்படிச் சொல்லுவது என்று சக்தி வேதனையுற்று இருந்தாள்.
அருண் பணம் பெற்ற நிறுவனம் இப்போது சிவசக்தி இல்லத்துக்கான உரிமை அல்லது கடன் பெற்ற தொகையைக் கேட்டு நெருக்கடி தந்தது. அந்தச் சூழ்நிலையில் இது பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் திண்டாடினாள்.
அந்த நிறுவனரிடம் சக்தி இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்க, அவளுக்குக் கிடைக்கப்பெற்றதோ பத்து நாள். அந்த நிறுவனரிடம் பேசிவிட்டு வந்த சக்தி இப்பொழுது பணத்திற்காக ஏற்பாடு செய்வதா இல்லை இன்னும் ஒரு வாரத்தில் வரப்போகும் தேர்வில் கலந்து கொள்வதா என்ற யோசித்துக் கொண்டே வந்து ஒரு உயரமான நபரின் மீது மோதினாள்.
உடனே அவர்தான் நம் நாயகன் என்று வாசகர்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.
“சாரி” என்று சொல்லிவிட்டு அவள் அவனைக் கடந்து சென்றாள்.
அவன் மீண்டும் சக்தியின் பின்னோடு வந்து,
“நீங்க எஸ். எஸ் காலேஜ் ஸ்டூண்டட்தானே ?“ என்று வினவினான்.
அவன் யாரென்றே தெரியாத பட்சத்தில் சக்தியை அவன் தெரிந்தவன் போல் கேட்க குழப்பமாய், “ஆமாம்” என்றாள்.
“அந்த இன்டர் காலேஜ் கல்சுரல்ஸ் பேஷன் ஷோ வின்னர்... ரைட்” என்றான்.
சக்தி பதிலேதும் பேசாமல் தலையசைத்தாள்.
“நைஸ் மீட்டிங் யூ” என்று அவன் கை நீட்ட அவளோ விருப்பமே இன்றிக் கைகுலுக்கிவிட்டு, “ஐ நீட் டு கோ” என்று சொல்லிவிட்டு சக்தி புறப்பட்டாள்.
சக்தியின் மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணமெல்லாம் எப்படிச் சிவசக்தி இல்லத்தை மீட்பது என்பதுதான். அதற்காக உதவிக் கேட்டு தன் தாய் மகேஷ்வரியின் தோழி சங்கீதாவிடம் உதவிக் கேட்க சென்றாள். ஆனால் சங்கீதா கேஸ் விஷயமாக வெளியூர் சென்றிருக்க அந்த முயற்சியும் தோல்வி.
சக்தி துவண்டு போய் இல்லத்தை அடைந்த போது அவளுக்காக வேறொரு பிரச்சனை காத்துக் கொண்டிருந்தது. அந்த நிறுவனத்தில் சந்தித்த அந்த நபர் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.
அவனைத் தான் பார்த்ததை நினைவு கூர்ந்தவள் எதற்காக அந்த நபர் தன்னைத் தேடி வந்திருக்கிறான் என்ற கேள்வியோடு சக்தி அவனிடம் பேசினாள்.
“ஹாய் சக்தி... ஐம் அர்ஜுன்... உங்க அண்ணன் அருண்... பைனான்ஸ் வாங்கின அந்தக் கம்பெனியோட ஒன் ஆஃப் தி ஷேர் ஹோல்டர்... உங்க பிராப்பளத்துக்கு என்னால சொல்யுஷன் தர முடியும்” என்றான்.
சக்தி புருவங்களை உயர்த்தி, “எப்படி?” என்று கேட்டாள்.
“நான் ஒரு பெரிய அட்வட்டைஸிங் கம்பெனி வைச்சிருக்கேன்... நீங்க எங்க கம்பெனி மாடலா ஜஸ்ட் டூ இயர்ஸ் அக்ரீமன்ட் ஸைன் பண்ணுங்க... உங்க அண்ணன் கம்பெனி பிராஜக்ட் முடியறதுக்கான பணத்தை நான் கொடுக்கிறேன்.
அந்தப் பிராஜக்ட் கம்பிளீட் ஆகிட்டா உங்களுக்கு வர லாபத்தை வைச்சு நீங்க இந்த வீட்டை மீட்டிடலாம்... என்ன சொல்றீங்க சக்தி...” என்று தான் நினைத்ததைச் சொல்லி முடிக்க சக்தியின் முகம் வெளுத்துப் போனது.
ஒரு பிரச்சனைக்கான தீர்வு இன்னொரு பிரச்சனையாக இருந்தது. அவள் பதில் சொல்ல முடியாமல் தயங்கி நிற்க,
“உங்க பிரச்சனைக்கு இதை விடப் பெட்டர் சொல்யூஷன் இல்ல சக்தி... இந்த மாதிரி வாய்ப்பு எல்லோருக்குமே கிடைக்காது... ரியல்லி யு ஆர் டேலன்டட்... அதனாலதான் தேடிவந்து இப்படி ஒரு ஆஃபர் கொடுக்கிறேன்” என்றான்.
சக்தி முடிவெடுக்க முடியாமல், “நான் யோசிக்கனும்” என்றாள்.
அவன் லேசாய் நகைத்துவிட்டு,
“இதுல யோசிக்க என்ன இருக்கு... இது பெரிய சேன்ஸ்” என்றான்.
“நான் பைஃனல் இயர் எக்ஸேம்ஸ் எழுதனும்” என்று சக்தி தன் நிலைமையைப் புரிய வைக்க அர்ஜுன் மேலும் மேலும் அவளுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தான்.
“நீங்க அக்ரிமன்ட் ஸையின் பண்ணிட்டு எக்ஸேம்ஸ் எழுதிட்டி வாங்க” என்று சொல்ல சிவசக்தி மௌனமாய் நின்றாள்.
“ஒகே சக்தி... இன்னைக்கு நைட் நல்லா யோசிச்சி நாளைக்கு முடிவு சொல்லுங்க... நீங்க சொல்லப் போற பதில்தான் இந்த வீடு உங்களுக்கு இருக்கனுமா வேண்டாமான்னு டிசைட் பண்ணும்...” என்று அவன் மிரட்டலாகச் சொல்லிவிட்டு புறப்பட்டான்.
அவன் உதவி செய்வதாகச் சொல்லி அவளின் இக்கட்டான சந்தர்ப்பத்தைச் சாதகமாக்கிக் கொள்ளவே வந்தான். இப்போது நிலைமை மோசமாகி சிவசக்தியின் கழுத்தை இறுக்கியது.
சிவசக்தி இல்லம் வெறும் வீடாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் பல பெண்களுக்கான ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்தப் பிரச்சனை சிவசக்தி இல்லத்தில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் ஜெயாவிடம் தொலைப்பேசி மூலமாகத் தன் கவலையைச் சொல்லி வேதனைப்பட்டாள்.
ஜெயாவுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. இறுதியாய் சக்தி தன் வழியை விதியே தீர்மானிக்கட்டும் என அந்த நிறுவனத்திற்கு அர்ஜுனை பார்க்கச் சென்றாள்.
நடப்பது நடக்கட்டுமே என்று சக்தி அக்ரிமென்ட்டில் ஸைன் போட்டு பிரச்சனையை முடிவு பெற செய்யலாம் என்று எண்ணினாள். அது அவள் வாழ்வில் எத்தனை பெரிய விளைவை ஏற்படுத்தினாலும் அதைச் சந்திக்க அவள் தயாராக இருந்தாள். ஆனால் அன்று அந்த அலுவலகத்தை சக்தி அடைந்த போது நிலைமையே தலைகீழாய் மாறியது.
அர்ஜுன் அலுவலகத்தில் சக்தி அவனைப் பார்க்க அறைக்குள் நுழைந்தாள். சக்தியை பார்த்ததும் அவன் முகம் மாறியது.
“உட்காருங்க சக்தி” என்றான்.
சக்தி நேரடியாகத் தான் வந்த விஷயத்தைச் சொன்னாள்.
“நான் அக்ரிமேன்ட்ல ஸைன் பன்றேன்... அட் தி சேம் டைம் நான் எக்ஸேம்ஸும் அட்டென்ட் பண்ணனும்” என்றாள்.
“நோ நீட் சக்தி... உங்களுக்கு மாடலிங்ல இன்டிரெஸ்ட் இல்ல என்னும் போது எதுக்கு?... வேண்டாம் பரவாயில்ல” என்றான்.
“நீங்க என்ன சொல்ல வர்றீங்க?!” என்று குழப்பமாய்க் கேட்டாள்.
“சக்தி... நீங்க தேவையில்லாம டென்ஷனாக வேண்டாம்... வீட்டுப் பத்திரம் தானா உங்க கைக்கு வந்துறோம்... அப்புறம் நான் தப்பா ஏதாச்சும் பேசி இருந்தா சாரி” என்று அர்ஜுன் சொல்ல சக்திக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. அவள் வீட்டை அடைந்த போது அவள் அண்ணன் கம்பெனியின் மேனேஜர் அமர்ந்திருந்தான்.
அந்த மேனேஜர் அருண் கன்ஸ்ட்ரக்ஷன்ஸை வேறொரு கம்பெனி சொந்தமாக மாற்றிக் கொண்டு அதற்கான பணத்தைத் தருவதாகச் சொன்னான். சக்திக்கு நடப்பதெல்லாம் மாயமாய்த் தோன்றியது. மேனேஜர் மேலும் அந்தப் பணத்தின் மூலம் வீட்டையும் மீட்டுவிடலாம் என்றான்.
ஒரே இரவில் அவளை மூழ்கடித்துவிடுமோ என்றிருந்த பிரச்சனைகள் இப்போது கண்களுக்குத் தெரியாமல் மறைந்துவிட்டன. இவை எல்லாம் எப்படி நடந்ததோ என்ற குழப்பத்தோடு சக்தி தன் அறைக்குள் நுழைய, அவளின் படுக்கையின் மீது ரோஜா பூக்களும் ஒரு கடிதமும் இருந்தது.
சக்தி வெளியே வந்து மற்றவர்களிடம் விசாரிக்க,
“யாரோ உன்கிட்ட கண்டிப்பா கொடுக்கச் சொல்லி கொடுத்துட்டு போனாங்க” என்று பதில் கிடைத்தது.
சக்தி தன் அறைக்குள் சென்று கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.
“மை டியர் சக்தி,
நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டேன். ரொம்பவும் வருத்தத்திற்குரிய விஷயம்... நடந்ததை நம்மால் மாத்த முடியாது. மனசை திடப்படுத்திட்டு உன்னோட பைஃனல் எக்ஸேம்ஸல கவனத்தைச் செலுத்து. தைரியமா இரு. எப்பவுமே நான் உன் கூடவே இருப்பேன்.
ஆல் தி பெஸ்ட் பாஃர் யுவர் எக்ஸேம்ஸ்” என்று அவன் கையெழுத்தோடு முடிந்திருந்த கடிதத்தைப் பார்த்த போது சக்தியின் கண்கள் கண்ணீரால் நிரம்பின.
அதுவரையில் அவன் தன்னிடம் விளையாடிக் கொண்டிருக்கிறான் என்று அவள் நினைத்திருந்தாள். அந்த எண்ணம் இப்போது முற்றிலுமாய் மாறி முகம் தெரியாத அவன் மீது மதிப்பு உண்டானது.
அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அன்றிலிருந்து மலையென வளர்ந்தது. ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவே இல்லை.
அவனின் உருவம் எப்படி இருக்கும் என்ற ஆயிரமாயிரம் கற்பனைகள் அவளுக்குள் தோன்றி மறைந்தன. இத்தனை நாளுக்கான காதத்திருப்பு நாளை முடிவு பெற்றுவிடும். ஆனால் அவனை நேருக்கு நேராய் சந்தித்துத் தன் மனதில் உள்ளதை வெளிக்காட்டத் தயங்கினாள்.
சக்திசெல்வன் நாளை சிவசக்தியின் கண் முன்னே தோன்றி அவர் தொடங்கிய கண்ணாமூச்சி விளையாட்டை முடித்துவிடுவார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்தச் சந்திப்பு அவர்கள் காதல் பயணத்தைத் தொடங்குமா என்பதை யாம் அறியோம்.
10