மோனிஷா நாவல்கள்
Solladi Sivasakthi - Episode 13
Quote from monisha on January 3, 2025, 5:14 PM13
சிவசக்தி இல்லம்
பல நதிகள் ஒன்றிணைந்த சமுத்திரமே சிவசக்தி இல்லம் என்று சொல்லலாம். எங்கேயோ பிறந்து பல கரடு முரடான பாதைகளில் பயணித்துப் பின்னர்த் தூற்றப்பட்டுத் தூய்மையிழந்து பயணப்பட்ட அந்த நதிகள் எல்லாம் சமுத்திரத்தில் சென்று சங்கமிக்கிறது.
அதே போல் பல மோசமான சூழ்நிலைகளைக் கடந்து வழித்தவறி வலியோடு ஒன்றிணைந்த பல பெண்கள் சங்கமித்தது சிவசக்தி இல்லத்தில். அங்கே வாழும் எல்லாப் பெண்களுமே தங்களுக்கென்ற ஒரு உறவுமுறையை வளர்த்துக் கொண்டு ஜாதி மத இன வேறுபாடுகளின்றி ஒரு சமுத்துவம் நிறைந்த குடும்பமாய்த் திகழ்ந்தனர்.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நிறையச் சோகப் பின்னணிகள் இருந்த போதும் அவற்றை எல்லாம் அந்த வீடு மறக்கடித்தது. அங்கே யாரையும் கண்ணீரோடு பார்க்கவே முடியாது. எங்கே பார்த்தாலும் பேச்சு சத்தமும், சிரிப்பு சத்தமும் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
பார்வதியம்மாள் அந்த இல்லத்தின் மூத்த பெண்மணி. அங்கே இருக்கிற எல்லாப் பெண்களுக்கும் தாயென்றே சொல்லலாம். ஆனால் தன் வாழ்வில் இல்லற சுகத்தை அனுபவிக்காத முதிர் கன்னி. குடும்பத்திற்காக ஓடி ஓடி தன் வாழ்க்கையையும் வயதையும் தொலைத்துவிட்ட பார்வதி திருமணம் ஆன தன் தம்பி தங்கையால் நிராகரிக்கப்பட்டாள். அவள் பிறகு விரக்தியோடு சிவசக்தி இல்லத்தில் இணைந்து கொண்டாள். இன்று அந்த வீட்டின் எல்லாப் பெண்களையும் வழிநடத்துபவள்.
மரியா அந்த இல்லத்தில் எல்லோருக்குமான தமக்கை. பதினைந்து வயதில் காதலெனும் மாயைக்குள் சிக்குண்டு தாயாகியவள். தாய்மை என்பது கடவுள் பெண்களுக்கு அளித்த வரமா சாபமா என்பது புரியாத புதிர்தான். அவளின் மகள் ஆனந்தி இன்று மருத்துவப் படிப்பின் கனவோடு பன்னிரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள்.
ஞானசரஸ்வதி குழந்தையைப் பெற்றெடுக்க முடியாமல் மலடி என்ற பட்டம் சூட்டப்பெற்றுக் கணவனால் கைவிடப்பட்டவள்.
கமலம் குடிகார கணவனுக்கு வாக்கப்பட்டுக் கடைசியில் அவன் நோய்வாய்ப்பட்டு இறந்து போகப் பாதுகாப்புக்கென அந்த இல்லத்தை வந்தடைந்தாள். இன்று அந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கு ருசிகரமான சமையல் செய்யும் காரிகை.
வனிதா காதலித்துக் குடும்பத்தை எதிர்த்துத் திருமணம் முடித்தவள். மாமியார் கொடுமை, கணவனின் கண்டு கொள்ளாமை அவற்றைச் சகித்துக் கொள்ளமுடியாமல் துணிவோடு திருமண உறவை உதறி எறிந்தாள். பலமுறை அவள் கணவன் அழைத்தும் நான் காதலித்தவன் நீ இல்லை என்று நிராகரித்துவிட்டு நம்பிக்கையோடு வாழ்பவள்.
அவளின் மூன்று வயது மகன் கண்ணன் அந்த வீட்டின் ஒரே ஆண் பிள்ளை. எல்லாருக்கும் செல்ல பிள்ளை. நிறையத் தொல்லை செய்யும் பிள்ளை. வீட்டில் உள்ள எல்லாப் பெண்களையும் ஆட்டிவைக்கும் சேட்டைக்காரன்.
இவர்கள் தாம் இப்போதைய சக்தியின் ஆதரவான நெருங்கிய உறவுகள். அவர்கள் எல்லோரும் தங்களின் சுயவேலைகளின் மூலமாகச் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தனர். இன்னும் சில பெண்கள் சிவசக்தி இல்லத்திற்கு வந்த பின் அவர்கள் வாழ்க்கை சீரமைக்கப் பெற்று அவர்கள் குடும்பத்தோடு இணைந்திருக்கின்றனர்.
விமான நிலையத்தில் இருந்து பயணித்து சக்தி இரவு வெகுநேரம் கழித்து இல்லத்தை வந்தடைந்தாள். சக்தி கதவினை தட்ட ஆனந்தி கதவை திறந்தாள். திறந்த மாத்திரத்தில் சிவசக்தியின் கழுத்தை கட்டிக் கொண்டு,
“உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணேன் அக்கா” என்றாள்.
சக்தி அவள் முதுகினில் தடவியபடி,
“இன்னுமா நீ தூங்கல ஆனந்தி ?” என்றாள்.
“நாளைக்கு எக்ஸேம்... அதான் படிச்சிட்டிருந்தேன்”
“ம்ம்ம்… நீ போய்ப் படி” என்று சக்தி அவள் எடுத்து வந்த பேகை ஓரமாய் வைத்து விட்டு அந்த அறையிலிருந்த சோபாவில் சாய்ந்தபடி அமர்ந்து கொண்டாள்.
“இன்னைக்கு வரன்னு சொல்லவே இல்ல... ஏன் டல்லா இருக்கீங்க... என்னக்கா... மூட் ஆஃபா ?” என்று ஆனந்தி சக்தியின் அருகில் வந்தமர்ந்தபடி கேட்டாள்.
“நான் இன்னைக்கு வருவேனான்னு எனக்கே தெரியாது... எனக்குக் கொஞ்சம் டயர்டா இருக்கு... அவ்வளவுதான்... இப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கேன்” என்று சோர்வோடு சொன்னாள் சக்தி.
“சரி சாப்பாடு எடுத்துட்டு வரவா ?” என்று ஆனந்தி பரிவோடு கேட்டாள்.
“எனக்கு ஒண்ணும் வேண்டாம்... நீ போய்ப் படி” என்று அவள் தோள்களைத் தட்டி போகச் சொன்னாள் சக்தி. நம்முடைய உறவுமுறைகளே பல நேரங்களில் இயந்திரத்தனமாய் இருக்க ஆனந்திக்கும் சக்திக்குமான சகோதரத்துவம் அற்புதமாய் இருந்தது.
இருளெனும் போர்வையை விலக்கிக் கொண்டு ஆதவன் விழித்தெழ சக்தியின் மனோநிலை வீட்டில் உள்ள எல்லோரின் அக்கறையாலும் விசாரிப்பினாலும் கொஞ்சம் தெளிவுபெற்றது.
சக்தி தன் அறையில் உள்ள கப்போர்ட் கதவிலிருந்த பொருட்கள் எல்லாம் கலைக்கப் பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியானாள்.
சக்தி வனிதாவிடம் நேராய் வந்து,
“அந்தக் கண்ணன் எங்க?... என் திங்க்ஸ் எல்லாத்தையும் கலைச்சதில்லாம என் புக்ஸ் எல்லாத்திலயும் கிரயான்ஸ்ல கிறுக்கி வைச்சிருக்கான் கா”என்று கோபம் கலந்த வருத்தத்தோடு சொன்னாள்.
“எனக்கு இதுக்கும் சம்பந்தமில்ல சக்தி... அவன் எப்போ இதெல்லாம் செஞ்சான்னு எனக்கும் தெரியல... ஆள வேற காணோம்” என்று வனிதா பதிலுரைத்தாள்.
அந்த வீட்டில் அத்தனை பெண்கள் இருந்தும் அவன் ஒருவனைச் சமாளிக்க முடியாமல் எல்லோருமே திணறினர். சக்தி வீட்டைச் சுற்றிலும் தேட அவன் எங்கே ஒளிந்திருக்கிறான் என்று அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
“டே... கண்ணா எங்க இருக்க? ... வந்துரு... அப்புறம் உதைதான்... பாத்துக்கோ” என்று சக்தி கோபமாய் அழைக்க,
அவன் கண்ணன் என்ற பெயருக்கு ஏற்றாற் போல் மாயமாய்த் தம் சேட்டைகளைச் செய்து விட்டு மறைந்து கொண்டான்.
“ஆனந்தி” என்று சக்தி அழைக்க,
“என்னக்கா?” என்று வினவியபடி வந்தாள் ஆனந்தி.
“நான் வாங்கிட்டு வந்த சாக்லேட்ஸ் பேக்ல இருக்கு எடுத்துட்டு வா” என்று சத்தமாய்ச் சொல்ல சக்தியின் தந்திரம் நன்றாகவே வேலை செய்தது.
கண்ணா தானாகவே வெளியே வந்து, “எனக்குச் சக்தி” என்றான்.
“தர்றேன் நிறையத் தர்றேன்... மாட்டினாயா... கண்ணா பக்கத்தில வந்திரு” என்று சக்தி அவன் பின்னாடி ஓட்டம் பிடித்தாள்.
“என் கப்போர்ட்டை எதுக்கடா கலைச்ச?... ஓடாத... வந்தன்னே... நிறையச் சாக்லேட்ஸ் தருவேன்” என்றாள்.
இந்த முறை அவன் சுதாரித்துக் கொண்டு,
“போ சக்தி... நீ பொய் சொல்ற” என்று சொல்லியபடி தோட்டத்திற்குள் ஓட அங்கே பார்வதியம்மா பின்னாடி ஒளிந்து கொண்டு,
“பாட்டி... சக்தி என்னை அடிக்க வர” என்றான்.
“என்ன சக்தி குழந்தை மாதிரி... அவன் கூட மல்லுகட்டிட்டு” என்று பார்வதிம்மா கேட்க சக்தி கண்ணனை பிடிப்பதிலேயே குறியாக இருந்தாள்.
“குழந்தைங்கனா அப்படிதான் இருக்கும்... சக்தி நீ போ” என்று பார்வதி கொஞ்சம் மிரட்ட இம்முறை சக்தி அமைதியானாள்.
“நோ சாக்லேட்ஸ் பாஃர் யூ” என்று கண்ணனை பார்த்து உரைத்துவிட்டு சக்தி வீட்டிற்குள் சென்றாள்.
சக்தி சோபாவில் மூச்சு வாங்கியபடி அமர்ந்திருக்க,
“அவனுக்குச் செல்லம் ஜாஸ்தியா இருக்கு” என்று புலம்பினாள்.
அந்தச் சமயத்தில் கண்ணன் பயந்து கொண்டே சக்தியை நெருங்கி வந்தான்.
“சாரி சக்தி” என்று மழலையாய் கேட்டபடி தோட்டத்தில் மலர்ந்திருந்த சிவப்பு வண்ண ரோஜா பூவை அவளிடம் நீட்டினான்.
சக்தியை சமாதானப்படுத்த பார்வதி அவனுக்குச் சொல்லித் தந்த யுக்தி. சக்தியின் முன்பு கண்ணன் ரோஜாப் பூவை நீட்டியபடி நிற்க அவள் தன்னை அறியாமலே கண்ணீர் வடித்தாள்.
கண்ணனின் செயல் சக்திசெல்வன் பற்றிய நினைவைத் தூண்டிவிட சக்தி எதுவும் பேசாமல் பூவை வாங்கிக் கொண்டாள்.
“சாக்லேட்ஸ்” என்று கண்ணன் கை நீட்டப் பதில் ஏதும் பேசாமல் சக்தி சாக்லேட் ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு அவள் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.
இவ்வளவு நேரமாய்க் கட்டுப்படுத்தி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் கண்ணீராய் வெளிப்பட்டது. அழக் கூடாது என்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள எண்ணிய போதும் அது அவளை மீறிக் கொண்டு வெளிப்பட்டது.
சக்திசெல்வனைத் தான் சுலபமாய் மறந்து விடுவோம் என்ற அவள் எண்ணம் பொய்யாகப் போனது. சக்தி தான் கடைசியாய் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவனின் மனோநிலை என்னவாயிருக்கும் என்று அவள் வேதனையுற்றாள்.
சிவசக்தி அவனை வார்த்தைகளால் காய்ப்படுத்திவிட்டு இப்போது அவள் வலியால் துடிக்க, காயப்பட்ட சக்திசெல்வனோ கோபம் குறைந்து இன்னும் திடமாகவே இருந்தான்.
எதையும் செய்யும் தைரியத்தைக் குணமாய்க் கொண்டு குறைவில்லா செல்வத்தோடு பிறந்த நம் நாயகனுக்கு அமைந்த சக்தி செல்வன் என்ற பெயர் வெகு பொருத்தமாய் இருந்தது.
பெரும் பணமும் எல்லோரையும் ஆட்டிவைக்கும் பதவியும் கொண்ட இத்தகைய பின்னணியில் வளரும் ஒரு ஆண் எத்தகையவனாய் இருப்பான் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். திமிரு, அலட்சியப் போக்கு, பொறுப்பின்மை, பெண் பித்து, போதை பழக்கம் என இருப்பது வழக்கமான ஒன்றே. ஆனால் சக்திசெல்வன் வழக்கத்திற்கு மாறானவன்.
எல்லாவற்றிலும் பொறுப்போடும் துடிப்போடும் செயல்படுபவன். உதவி செய்வதில் வள்ளலாகவும் செலவு செய்வதில் கஞ்சனாகவும் இருப்பான்.
அவதார புருஷன் ராமனின் வாக்கியம் ஒன்று”சிந்தையாலும் வேறொரு பெண்ணைத் தொடேன்” சக்தியும் அந்த எண்ணம் கொண்டவனே. பெண்மையை மதிக்கத் தெரிந்தவன். ஒருவளிடமே தன் மனதை பறிகொடுத்து அவளையே திருமணம் முடிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவன். அந்த எண்ணத்தைதான் சிவசக்தி தூள் தூளாய் நொறுக்கிவிட்டுப் போனாளே.
இத்தகைய மெய்சிலிர்க்க வைக்கும் குணங்களை சக்தி கொண்டிருப்பதன் காரணம் அவனின் தாய் மீனாக்ஷி. அரசியலில் ஈடுபட்ட போதும் தன் ஒரே மகனின் வளர்ப்பில் சின்னத் தவறை கூட மேற்கொள்ளாமல் கவனமாய்ப் பார்த்துக் கொண்டாள். சக்தி தன் தந்தை மோகன் ராமை பார்ப்பதும் ஏன் அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பதைக் கணிப்பதுமே இயலாது காரியம்.
சக்தியின் முன்னோடி அவன் தாய் மட்டுமே. மீனாக்ஷி வாசுதேவன் அரசியல் சதுகரங்கத்தில் கை தேர்ந்தவள். மோகன் ராமின் பணம் தம் அரசியல் வாழ்க்கையின் பலமென அவனைத் திருமணம் முடித்தாள். அவள் திருமணம் ஆனபின்பு தன் தந்தையின் பெயர் வாசுதேவனைத் தான் மாற்ற மாட்டேன் என்ற வைராக்கியம் கொண்டவள்.
பல ஆண்களைத் திறமையாய் அரசியல் விளையாட்டில் கையாளும் ஆளுமை திறமையைக் கொண்ட தன் தாயினைப் பார்த்து வளர்ந்தவன் சக்திசெல்வன். அத்தகைய பெண்ணாய் சிவசக்தி தோற்றமளிக்க அவளிடம் காதல் வயப்பட்டான். இன்று காயமும் பட்டு அதற்கான தீர்வை தீவரமாய் யோசித்துக் கொண்டிருந்தான்.
சக்திசெல்வன் அவனின் விசாலமான அறையிலிருந்த கண்ணாடித் தொட்டியில் நீந்திக் கொண்டு இருக்கும் மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிவசக்தி சொன்ன வார்த்தையை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தான்.
அவனின் ஞாபகங்களைத் தடைசெய்தபடி கதவு தட்டும் ஓசை கேட்க, “கம்மின்” என்று தன் பார்வையை மீன்களின் மீதிருந்து எடுக்காமலே குரல் கொடுத்தான்.
ஒரு பெண் மரியாதையும் கொஞ்சம் மிரட்சியையும் ஏற்படுத்த மடிப்பான சேலையும் தலையில் கொண்டையும் கம்பீரமாய் உள்ளே நுழைந்தாள். அந்த நடையும் அந்த மிடுக்குமே சொன்னது அவர்தான் மீனாக்ஷி வாசுதேவன் என்று.
“என்னாச்சு சக்தி... எனி பிராப்பளம்?” என்று மீனாக்ஷி தன் மகனை நோக்கி கம்பீரமாய்க் கேட்க,
“நத்திங்” என்று அவரை நிமிர்ந்து பார்க்காமலே உரைத்தான்.
“நீ பொய் சொல்ற... சக்தி... ஏதோ விஷயம் இருக்கு” என்று மீனாக்ஷி தீர்க்கமாக உரைத்தாள்.
இப்போது சக்தி சிரித்தபடி,
“யூ ஆர் ரைட் மாம்... பட் அதை எப்படி...?” என்று சொல்லத் தடுமாறினான்.
மீனாக்ஷி புன்னகை செய்தபடி அவன் அருகில் வந்து, “என்கிட்ட சொல்ல யோசிக்கிறன்னா... ஆச்சர்யமா இருக்கு... என்ன விஷயம் சக்தி” என்றார்.
“ஒரு பெரிய டெசிஷன் எடுத்திருக்கேன்... அதுக்கு நீங்க ஒகே சொல்லனும்” என்றான்.
“ம்... சொல்லு சக்தி”என்றார் புன்னகை மாறாமல்.
“நான் கொஞ்ச நாளைக்கு இன்டிப்பென்டெட்டா இருக்க விரும்பிறேன்மா... ஒரு சாதாரணமான வாழ்க்கையை வாழ ஆசைப்படறேன்... தட் மீன்ஸ் இந்த மனி, ஸ்டேட்டஸ், லக்ஸூரி, எக்ஸ்ஸட்டிரா... எக்ஸ்ஸட்டிரா... இதெல்லாம் இல்லாம... நான் நானா” என்று சக்தி சொல்ல மினாக்ஷியின் கண்கள் அகல விரிந்தன.
13