மோனிஷா நாவல்கள்
Solladi Sivasakthi - Episode 16 & 17
Quote from monisha on January 8, 2025, 6:43 PM16
நட்பின் தொடக்கம்
ஜெயா சக்தியின் அருகில் வந்து
“சக்தி இங்க என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்றியா?” என்று கேட்டாள்.
“அத நீ இந்த ஹீரோ சார்கிட்ட கேளு ஜெயா” என்று சொன்னதும் ஜெயாவிற்கு இப்போது ஓரளவிற்கு நடந்தவை விளங்கியது.
அவள் முகத்தில் புன்னகை மலர சக்தி செல்வனை நோக்கி,
“சூப்பர்... அது நீங்கதானா... சொல்லவே இல்லயே... யூ ஆர் ரியலி கிரேட்... சக்திக்கும் உங்களுக்கும் பெயர் பொருத்தம் அமோகம்” என்று சொல்ல சக்திசெல்வன் இதழ்கள் விரிந்தன.
சிவசக்தியோ கோபத்தோடு ஜெயாவை பார்த்து,
“ஸ்டாப் டாக்கிங் நான்ஸன்ஸ்” என்றாள்.
“நீதான் நான்ஸென்ஸ் மாதிரி பேசிட்டிருக்க... சக்தி சார்கிட்ட என்ன பிரச்சனை உனக்கு”என்று ஜெயா கோபமாகக் கேட்டாள்.
இப்படி இரண்டு தோழிகளும் எதிரெதிராய் நின்று முறைத்துக் கொண்டிருந்தனர்.
உடனே சக்தி செல்வன் இம்முறை எழுந்து நின்றபடி,
“ஜெயா ப்ளீஸ்” என்று அவன் அவளைப் பேச வேண்டாமெனச் சொல்லாமல் சொல்ல சக்திக்குக் கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது.
“நாங்க பிரண்டஸ்... நீங்க எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வர வேண்டாம்... அதுவும் இல்லாம நீங்க யாரு?... உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்றாள்.
“கரெக்ட் சக்தி... ஆனா அந்தக் கேள்வியை நீ என்கிட்ட கேட்க கூடாது... உன்கிட்டியே கேட்டுக்கோ... நமக்குள்ள என்ன சம்பந்தமுமில்லன்னா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிஎன்கிட்ட எதுக்குக் கோபப்பட்ட...
நான் இங்க வேலைக்குச் சேர்ந்தா உனக்கென்ன?... உன் வேலையைப் பாத்துட்டு போ... பிடிக்கலன்னா... வேலையை விட்டுவிட்டு போ... அதை விட்டுவிட்டு எதுக்கு இந்தக் குதிகுதிச்சிட்டிருக்க... உன் பிரச்சனையே இதுதான்... கோபம் வந்தா உனக்கு மூளை வேலை செய்ய மாட்டேங்குது...” என்றான் இயல்பான முகபாவத்தோடு!
மேலும் சிவசக்திக்கு வெறுப்பு உண்டாக,
“போதும் நிறுத்துங்க சக்தி... நீங்க உங்க லிமிட்டை தாண்டி பேசிட்டிருக்கீங்க... என்னைப் பத்தி விமிர்சனம் பண்ண உங்களுக்கு உரிமையே இல்லை”என்று அழுத்தமாய் உரைத்தாள்.
“அதேதான்... நான் எங்க இருக்கனும் இருக்கக் கூடாதுன்னு சொல்ல உனக்கும் உரிமை இல்லை...” என்று சக்தி இப்போது சினம் மிகுதியால் சொல்லிவிட்டு தன் கூர்மையான விழிகளால் அவளை நோக்கினான்.
“நீங்க எங்கவேன்னா இருந்துட்டு போங்க... என் வழில நீங்க தேவையில்லாம தலையிட்டு தொல்லை கொடுக்கிறீங்க”
“ஹெலோ... நான் ஒண்ணும் உனக்குத் தொல்லை கொடுக்கல... நீதான் இப்போ தேவையில்லாம வந்து எனக்குத் தொல்லை கொடுக்கிற”
ஜெயாவிற்கு இவர்கள் சண்டையை எப்படி நிறுத்துவது என வழி தெரியாமல் விழித்தாள்.
“தி கிரேட் மீனாக்ஷி வாசுதேவன் மோகன்ராமுக்கும் பிறந்த ஒரே புத்திரனுக்கு இங்க வந்து வேலை செய்ய வேண்டிய அவசியமென்ன...?”
“நீதான் அதுக்குக் காரணம்” என்று சக்திசெல்வன் பளிச்சென்று உரைக்க,
“வாட்?” என்று கேட்டபடி சக்தி அதிர்ச்சியோடு முறைத்தாள்.
“யூ கான்ட் சர்வைவ் வித்அவுட் மனி அன் ஸ்டேட்டஸ்னு சொல்லி என்னை நீ இன்ஸல்ட் பண்ணல... மறந்திட்டியா... இப்போ என்னைப் பாத்து என்ன அவசியம்னு கேட்கிற?”
சிவசக்தி இப்போது பேசமுடியாமல் அமைதியானாள்.
'அப்பாடா... புயல் அடிச்சி ஓய்ந்த மாதிரி இருக்கு' என்று ஜெயா எண்ணி பெருமூச்சுவிட்டாள்.
அதற்குள் சக்திசெல்வன் சிவசக்தியை நோக்கி, “ஏன் ஸைலன்ட் ஆயிட்ட... பதில் சொல்லு சக்தி” என்றான்.
“நான் சொன்ன விஷயத்தை இவ்வளவு சீரியஸா எடுத்துப்பீங்கன்னு நான் நினைக்கல... நான் சொன்னது உங்க மனசை காயப்படுத்தி இருந்தா ஐம் வெரி ஸாரி... நான் அப்படிச் சொன்னது தப்புதான்... பட் ப்ளீஸ் இங்கிருந்து போயிடுங்க... நான் ஜோதி சார்கிட்ட பேசிக்கிறேன்” என்று தன் குரலை தாழ்த்தி சிவசக்தி பொறுமையாக எடுத்துரைத்தாள்.
“ஸில்லியா பேசாதே சக்தி... நீ சொன்ன விஷயம் என்னை டிஸ்டர்ப் பண்ணுச்சு... ஏன்?... இந்த மனி ஸ்டேட்டஸ் எல்லாம் இல்லாம என்னால இருக்க முடியாதான்னு தோணுச்சு... ஒய் நாட்... சேலஞ்சிங்கான மேட்டர்... ட்ரை பண்ணலாம்னு நினைச்சேன்... நான் இங்க இருக்கேன்... இப்போதைக்கு ஐ ஹேவ் நத்திங்... சிம்பிள் மேன்... பட் என் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு... ஐ கேன் மேனேஜ்...” என்றான்.
சிவசக்தி அப்படியே அவன் தன்னம்பிக்கையான பேச்சில் வியந்தபடி வாயடைத்துப் போய் நிற்க ஜெயாவோ புன்னகையோடு,
“சூப்பர் சக்தி சார்... ரொம்பக் கட்ஸ் உங்களுக்கு” என்றாள்.
சிவசக்தி இப்போது அமைதியாய் மெல்லிய புன்முறுவலோடு,
“உங்க ஆட்டிடியுட் பார்த்து நான் இம்பிரஸ்ஸாயிட்டேன்னு சொல்றதா... இல்ல என் பிடிவாதத்தைப் பிடிச்சிட்டு தொங்கிறதான்னு எனக்குத் தெரியல... ஆனா இப்பவும் சொல்றேன்... காதலுங்கிற வார்த்தை மேல எனக்குத் துளி கூட நம்பிக்கை இல்லை... அது சந்தோஷத்தை விட வலியைத்தான் அதிகமாகக் கொடுக்கும்... அதனாலதான் நான் அன்னைக்கு ஏர்போர்ட்ல நீங்க கேட்டதுக்கு நோன்னு சொன்னேன்” என்றாள்.
“என் மேலையும் தப்பு இருக்கு சக்தி... அன்னைக்கு ஏர்போர்ட்ல நான் அப்படி உன்னை டென்ஷன் பண்ணி... என் லவ்வை சொல்லிருக்கக் கூடாது... அந்த நேரத்தில உன்னால மட்டும் என்ன பண்ணிருக்க முடியும்... நீ யோசிக்கிறதுக்குக் கூட டைம் கொடுக்காம எஸ் ஆர் நோன்னு சொல்ல சொன்னது... நியாயமில்ல...
ஆனா இப்போ நான் இங்க இருக்கப் போகிற இந்தக் கொஞ்ச நாட்கள் நீ என்னைப் புரிஞ்சிக்கிட்டு என் காதலை ஏத்துக்கலாம்... இல்லன்னா நான் உன் நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டு உன்னை விட்டு விலகிப் போகலாம்... அதுவரைக்கும் நாம பிரண்டஸ்ஸா இருப்போமே” என்று சக்தி செல்வன் சொல்ல,
ஜெயா சிரித்துக் கொண்டே, “இது நல்ல டெசிஷன்... சக்தி ஒத்துக்கோ” என்றாள்.
சிவசக்தி ரொம்ப நேரம் யோசித்த பிறகு தயக்கத்தோடு தலையாட்டினாள்.
“நீங்க மீனாக்ஷி மேடமோட சன்னா சக்தி சார் ?” என்று ஜெயா தன் சந்தேகத்தை சக்தி செல்வனிடம் கேட்க,
“ஆமாம் ஜெயா... ஆனா ப்ளீஸ் சக்தி சார்னு கூப்பிடாதே... கால் மீ சக்தி” என்றான்.
“சக்தின்னு கூப்பிட்டா குழப்பம் வரும்... அதனால சக்தி ப்ரோன்னு கூப்பிடறேன்” என்று ஜெயா சொல்ல சக்தியும் ஆமோதித்தான்.
மூவரும் ஒருவாறு இயல்பான மனநிலைக்கு வர சிவசக்தி மட்டும் லேசான தவிப்போடு இருந்தாள். ஜெயா சக்தி செல்வனைத் தன் வீட்டிலேயே தங்கிக்கச் சொல்ல அதனால் ஜோதி சாருக்கு அவனைப் பற்றித் தெரிந்துவிடும் என மறுத்தான். சக்தி சாத்தியமா என்று விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் நம் நாயகனை தன் வீட்டில் தங்கும்படி சொன்னாள்.
“அதெப்படி முடியும்?!” என்று ஜெயா அதிர்ந்தாள்.
“நோ... சக்தி... இட்ஸ் ஒ. கே... நான் பாத்துக்கிறேன்...” என்று சக்தி செல்வன் சொல்ல,
“எங்க வீட்டு மாடில தனியா ஒரு ரூம் இருக்கு... நீங்க அங்க ஸ்டே பண்ணிக்கங்க... எனக்கு நீங்க நிறைய உதவி செஞ்சிருக்கீங்க... நான் செய்யற சின்ன உதவியா இது இருக்கட்டுமே... ப்ளீஸ் டோன்ட் ஸே நோ...” என்றாள்.
சக்தி செல்வன் மௌனமாய் யோசிக்க, “அங்கே முழுக்க லேடிஸ்தான்... உங்களுக்குக் கம்பெனி கொடுக்க ஒருத்தன் இருக்கான்... பட் அவனுக்கும் மூணு வயசுதான்” என்று சொல்லி ஜெயா சிரித்தாள்.
ரொம்ப நேரம் தயங்கிய பிறகு சிவசக்தி இல்லத்தில் தங்க சக்திசெல்வன் சம்மதித்தான்.
இங்கே குழப்பம் முடிவடைந்த அதே நேரத்தில் மீனாக்ஷி வாசுதேவன் அறியப் போகும் தகவல் பெரும் குழப்பத்தை அவளுக்குள் ஏற்படுத்தியது. மீனாக்ஷி தன் விசாலமான அலுவலக அறையின் சோபாவில் அமர்ந்தபடி லேப்டாப்பை தட்டிக் கொண்டிருந்தாள். அப்போது கதவு தட்டப்பட மீனாக்ஷி தலையை நிமிராமல், “கம்மின்” என்றார்.
உள்ளே வந்த நபரைப் பார்த்த மீனாக்ஷி ஆர்வத்தோடு நிமிர்ந்து உட்கார்ந்து,”முரளி... உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்”என்றார்.
“குட் ஈவினிங் மேடம்”
“சக்தி எங்க இருக்கான்னு டீடைல்ஸ் தெரிஞ்சிதா... முரளி?”
“எஸ்... மேடம் ஒரு ஸ்கூல்ல டீச்சரா ஜாயின் பண்ணி இருக்கிறார்” என்றான்.
“கரெக்டா தெரியுமா முரளி ?” என்று சந்தேகமாய்க் கேட்டார்.
“நல்லா தெரியும் மேடம்...” என்றான்.
“எதுக்கு டீச்சரா போய்?... அவனோட தகுதிக்கு... ஏன் இப்படிப் பண்ணிட்டிருக்கான்?” என்று மீனாக்ஷி தனக்குத் தானே குழம்பி கொள்ள முரளி சற்று தயங்கியபடி,
“மேடம் இன்னொரு மேட்டர்” என்றான்.
“ம்... சொல்லுங்க முரளி” என்று மீனாக்ஷி ஆர்வமாய்க் கேட்க,
“சக்தி சார் அவர் லவ் பண்ண பொண்ணுக்காகதான் இப்படி எல்லாம் செய்றாரு... அந்தப் பொண்ணு அங்க டீச்சரா வேலைப் பார்க்கிறாங்க” என்றான்.
மீனாக்ஷி இல்லை என்பது போல் தலையசைத்து,
“டோன்ட் ஜோக்... இருக்கவே இருக்காது... நோ சேன்ஸ்” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.
“மேடம்... உண்மையாகவே சார் அங்கே போனதுக்குக் காரணம் அதான்” என்று மீண்டும் அவன் அழுத்தமாய் உரைத்தான்.
“நோ முரளி... நிச்சியமா இருக்காது... ஏதோ தப்பான இன்ஃபர்மேஷன்” மீனாக்ஷி நம்ப மறுத்தாள்.
“இல்ல மேடம்... சார் லவ் விஷயம் உண்மைதான்... நானுமே பல தடவை விசாரிச்சிட்டேன்” என்று திரும்பத் திரும்ப முரளி நம்பகமாய் உரைக்க,
இப்போது மீனாக்ஷியின் முகப்பாவனை லேசாக மாறி இருந்தது. அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று அவர் மனம் தீர்க்கமாய்ச் சொன்னது. சக்தி மீனாக்ஷியிடம் இயல்பாக எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்வான். ஆனால் தன்னிடம் மறைத்து ஒரு பெண்ணிற்காகத் தன் ஆடம்பரங்களை எல்லாம் விட்டுச் சென்றிருப்பது ஒரு விதமான கலக்கத்தை அவருக்குள் ஏற்படுத்தியது.
முரளியின் முகத்தைப் பார்த்து, “அந்தப் பொண்ணோட பேர் என்ன?” என்று கேட்டார்.
“சிவசக்தி... ஸோஸியல் டீச்சரா இருக்காங்க... அதுவும் இல்லாம எஸ். எஸ். காலேஜில படிச்ச ஓல்ட் ஸ்டூடண்ட்” என்று முரளி உரைத்தான்.
இந்தத் தகவல் மீனாக்ஷியை நம்புவதற்கான வாய்ப்பு இருக்குமோ என்று தோன்றியது. தன்னையும் பிரிந்து விவரத்தைச் சொல்லாமல் இந்தச் சிவசக்தியை தேடிப் போயிருக்கிறான். அப்படி என்ன அவளிடம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சிவசக்தியின் முழுவிவரத்தை போட்டோவோடு கொண்டுவரும்படி முரளியை பணித்தார்.
அதீதமான அன்பு யாரிடம் இருந்தாலும் அதில் உரிமை போராட்டம் தொடங்கிவிடுகிறது. சிவசக்தியை பற்றித் தெரிந்து கொள்வதன் மூலமாக மீனாக்ஷியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சிவசக்தி எந்தத் தைரியத்தில் நம் நாயகனை இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறாளோ? தெரியவில்லை. அவனுக்குமே அங்கே தங்க தயக்கமாய் இருந்தது. இருவருமே பள்ளியிலிருந்து புறப்பட்டு நடந்து வரும் வழியில் விவாதித்துக் கொண்டே வந்தனர்.
“சக்தி உனக்குச் சிரமம் வேண்டாம் நான் பாத்துக்கிறேன்” என்று சக்திசெல்வன் அங்கே தங்க தயங்கினான்.
“நான் ஒண்ணும் உங்க மேல இருக்கிற அக்கறையில இங்க கூட்டிட்டு வரல... ஜஸ்ட் நான் உங்களுக்குச் செலுத்த வேண்டிய நன்றி கடனுக்காக... அவ்வளவுதான்”என்று புரியும்படி சிவசக்தி அழுத்தமாய் உரைத்தாள்.
“இப்படி எல்லாம் நீ செய்வதன் மூலமா நமக்குள்ள இருக்கிற நன்றிக்கடன் தீர்ந்திராது” என்று சக்திசெல்வன் சொல்லிவிட்டுச் சிரித்தான்.
“ஓ... அப்போ நீங்க நல்லெண்ணத்தில உதவல... என்கிட்ட எதையோ எதிர்பார்த்துதான் உதவனிங்க... இல்ல” என்று சந்தேகப் பார்வை பார்த்தாள்.
“யாருக்குப் பிரச்சனை வந்தாலும் நான் பதிலுதவி எதிர்பார்க்காம உதவிறது என்னோட வழக்கம்... ஆனால் உன்கிட்ட மட்டும்தான் பிரதிஉபாகாரம் எதிர்பார்க்னும்னு தோணுது சக்தி”என்று சொல்ல அவள் காதலுக்காக அவன் ஏங்குவது அவன் விழியில் தெரிந்தது.
அதைத் தெளிவாய் கணித்த சிவசக்தி அலட்சிய பார்வையோடு,
“நீங்க எதிர்பார்க்கிறது எல்லாம் என்னால செய்ய முடியாது... வீடு வந்துருச்சு... உள்ளே என்ன நடந்தாலும் கொஞ்ச நேரத்துக்கு ரியாக்ட் பண்ணிக்காதீங்க”என்று அதிகாரமாய் உரைத்தாள்.
“அப்படின்னா? ... என்ன சக்தி ரொம்பப் பயம்முறுத்திற?” என்று கேள்வி குறியோடு சக்திசெல்வன் பார்க்க,
“கொஞ்சம் அப்படிதான் இருக்கும்” என்று புன்னகையித்தாள்.
“எனக்கு நீ உதவி செய்ய நினைக்கிறியா இல்ல பழி வாங்க நினைக்கிறியா?” என்று மேலே செல்லாமல் நின்றபடி கேட்டான்.
“இரண்டுமேதான்” என்று உரைத்துவிட்டு முன்னேறி நடந்தபடிசிவசக்தி வீட்டின் வாசலை அடைய அவள் முகம் லேசாய்க் கலக்கமுற்றது.
சிவசக்திக்குப் பிரச்சனையில் வலியச் சிக்கி கொள்வது வழக்கம்தானே. சக்திசெல்வனுக்கும் இங்கே புது அனுபவம் காத்திருக்கிறது.
17
மஞ்சள்வெயில்மாலையிலே
சிவசக்தி எப்படி எல்லாரிடமும் பேசி சக்திசெல்வனைப் பற்றிச் சொல்லி இங்கே தங்க வைப்பது என்றெண்ணிக் கொண்டே திறந்திருந்த கதவிற்குள் நுழைந்தாள்.
சிவசக்தி சக்திசெல்வனின் புறம் திரும்பி உள்ளே வரச் சொல்லி மௌனமாகத் தலையசைத்தாள்.
கண்ணன் வீட்டை வளைய வந்தபடி விளையாடிக் கொண்டிருந்தான். உள்ளே வந்த சக்தியை பார்த்ததும் அருகில் ஓடி வந்து அவள் புடவையை இழுத்தான்.
“என்ன கண்ணா!” என்று அவன் உயரத்திற்குக் குனிந்து அவள் கேட்க
“சக்தி... சாக்லேட் கொடு” என்றான் அதிகாரமாக!
“எப்ப பாரு சாக்லேட்... ஓடிப் போயிடு” என்று அதட்டினாள்.
அதற்குள் சக்திசெல்வன் தன் பேக்கடில் இருந்த சாக்லேட்ஸை கைகளில் காண்பிக்கக் கண்ணன் ஓடிவந்து அதை எடுத்துக் கொண்டான். கண்ணனை சக்திசெல்வன் தூக்கிக் கொள்ள வீட்டில் உள்ளவர்கள் எங்கே என்று சக்தி யோசித்துக் கொண்டிருந்தாள்.
சமையலறையிலிருந்து கமலா வெளியே வந்து சக்திசெல்வனைப் பார்த்தபடி சிவசக்தியிடம் அதிர்ச்சியோடு,
“யாரு பாப்பா இது?” என்று வினவினாள்.
“தெரிஞ்சவருக்கா” என்றாள் சிவசக்தி.
அவள் மேலும் சக்திசெல்வனை ஆச்சர்யமாகப் பார்க்கும் கமலத்தை நோக்கி,
“சரிக்கா... எங்கே யாரையும் வீட்டில காணோம் ?” என்று கேட்க,
“கோவிலுக்குப் போயிருக்காங்க...” என்று பதிலுரைத்தாள்.
“நீங்க போலயா?”
“நீயும் ஆனந்தியும் ஸ்கூல்ல இருந்து வர நேரமாச்சே... போதாக் குறைக்கு இந்தக் கண்ணன் தூங்கிட்டிருந்தான்... அதான் நான் போகல... சரி நான் போய் உங்களுக்குக் காபி எடுத்துட்டு வர்றேன் பாப்பா” என்று கமலா சிந்தனையோடு உள்ளே சென்றாள்.
சக்திசெல்வன் சிரித்தபடி, “பாப்பாவா!” என்றான்
“உங்களுக்கு அது ரொம்ப முக்கியமா?” என்றாள் சிவசக்தி கண்களை உருட்டியபடி!
“ஏன் தெரிஞ்சவருன்னு சொன்ன... ப்ஃரண்டுன்னு சொல்லிருக்கலாம் இல்ல” என்றான்.
“லிஸன் மிஸ்டர். சக்தி... நாம ப்ஃரண்டஸ் எல்லாம் இல்ல... ஸ்கூல்ல அந்த ஜெயா சண்டைக்கு வருவான்னு நீங்க சொன்னதுக்குத் தலையாட்டினேன்... புரிஞ்சிதா?” என்று இறுக்கமான முகத்தோடு உரைத்தாள்.
சக்தி புருவத்தை உயர்த்தியபடி பதில் ஏதும் பேசாமல் சிரித்தான். ஆனால் அவன் மனதில்
‘என்னை ப்ஃரண்டுன்னு சொல்ல உனக்கு அவ்வளவு தயக்கமா இருக்கா?’ என்று எண்ணிக் கொண்டான்.
சிவசக்தி அவனைச் சோபாவில் அமரச் சொல்லிவிட்டு அவள் சமையலறைக்குள் செல்ல சக்தி செல்வன் கண்ணனை மடியில் அமர்த்தியபடி,
“உங்க பேரு கண்ணனா?” என்று தலையை அசைத்துக் கேட்க, “ம்” என்று சாக்லேட்டை ருசித்தபடியே தலையாட்டினான்.
“உனக்குச் சாக்லேட்ஸ்தான் ரொம்பப் பிடிக்குமா?” என்று வினவினான்.
“ஆமாம்... ஆனா எனக்குச் சக்தியை பிடிக்காது” என்று கண்ணன் சொன்னதைக் கேட்டு சக்தி செல்வன் தன்னை அறியாமல் சிரித்தான். பிறகு புன்னகையோடு, “ஏன் பிடிக்காது?” என்று கேட்டான்.
“சக்தி சாக்லேட்ஸே வாங்கித் தரமாட்டா... சண்டைதான் போடுவா” என்றான்.
“உன்கிட்டயுமா?... என் கிட்டயும் சக்தி சண்டைதான் போடிறா” என்றான்.
“எதுக்கு?” என்று கண்ணன் சக்திசெல்வனைக் கேட்க,
“நம்ம இரண்டு பேரும் ஒரே இனம்... அதான்” என்று தோள்களைக் குலுக்க, அந்தப் பதில் கண்ணனுக்குப் புரியவில்லை என்றாலும் சமையலறையில் இருந்து காபியோடு வந்த சிவசக்திக்கு புரிந்து போனது. அவள் தலையைத் தூக்கியபடி முறைத்துக் கொண்டு நின்றாள்.
“இப்ப ஏன் முறைக்கிற... உண்மையைதானே சொன்னேன்” என்றான் சக்திசெல்வன்.
காபியை நீட்டியபடி, “எல்லோரும் வந்தா எப்படிப் பேசிறதுன்னு நானே டென்ஷன்ல இருக்கேன்... இப்போ என்னைப் பத்தி கமன்ட் அடிக்கிறது உங்களுக்கு ரொம்ப முக்கியமா?!” என்றாள்.
“நன்றி கடனை தீர்க்கிறன்னு... நீதானே என்னை இங்க கூட்டிட்டு வந்த... இப்போ சமாளி” என்றான்.
“சமாளிச்சு தொலையறேன்... உனக்கு எப்பவும் இதே வேலை சக்தி” என்று தன்னைத்தானே சிவசக்தி கடிந்து கொள்ள, “என்ன சொன்ன?” என்று சக்திசெல்வன் கேட்டான்.
“எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்” என்று சலித்துக் கொண்டே வாசல் கதவோரம் போய் நின்றபடி அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
சில நிமிட காத்திருப்புக்குப் பிறகு பார்வதியம்மாவுடன் மற்ற பெண்களும் வந்தனர். சிவசக்தியை பார்த்து அவர்கள் புன்னகையோடு வர அவள் அப்போதைக்குச் சிரிக்கும் நிலையில் இல்லை.
“ஏன் சக்தி வாசலில் நிக்கிற” என்று மரியா சொல்லி அவள் தோள்களைப் பற்றி உள்ளே அழைத்து வந்தாள். சோபாவில் அமர்ந்திருக்கும் சக்தி செல்வனைப் பார்த்து மரியாவும் ஞானசரஸ்வதியும் அதிர்ச்சியாகப் பார்க்க அவன் தயக்கமாய் எழுந்து நின்று கொண்டான். பார்வதி கண்களாலேயே சக்தியை பார்த்து யாரென அதட்டலாய் வினவினாள்.
“ஸ்கூல்ல புதுசா ஜாயின் பண்ணி இருக்கிற மேக்ஸ் டீச்சர்... பெயர் சக்தி செல்வன்... ரொம்பத் தெரிஞ்சவரு... நம்பிக்கையானவர்... கொஞ்ச நாளைக்கு மாடில இருக்கிற ரூம்ல ஸ்டே பண்ணிக்கட்டுமே” என்று தயங்கி தயங்கிச் சொல்ல பார்வதி பதில் ஏதும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டாள்.
மற்ற பெண்களும் சக்தியின் செயலை குறித்து லேசான குழப்பத்தோடு நோக்க சிவசக்தி சக்திசெல்வனைப் பார்த்து, “வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு பார்வதியின் அறைக்குள் நுழைந்தாள்.
அவளின் நுழைவைப் பார்த்த மரியா அருகில் வந்து,
“சக்தி இதென்ன புதுப் பழக்கம்?... ஆம்பளைங்கல இல்லத்தில் தங்க வைக்கிறது” என்று அதட்டல் தொனியில் கேட்டார்.
வீட்டில் உள்ள மற்றவர்களை விட ஆண்களை மரியா அதிகம் வெறுத்தாள். சிறுவயதில் நிகழ்ந்த ஏமாற்றம் ஆறாத காயமாய் இன்னும் அவள் மனதில் பதிந்திருந்தது.
“ஒண்ணும் பிரச்சனை வராது... கொஞ்சம் நாளைக்குதான்” என்றாள் சக்தி.
பார்வதியின் முகத்தில் கோபம் தாண்டவமாட,
“என்ன ஏதுன்னு யார்க்கிட்டயும் ஒரு வார்த்தை கூடச் சொல்லாம ஒருத்தரை கூட்டிட்டு வீட்டுக்கு வந்து நின்னிட்டிருக்க... உனக்குத் தெரிஞ்சவர் சரி... ஆனா இல்லத்தில் இருக்கிறவங்களைப் பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சியா... இத்தனை பெண்கள் இருக்கிற இடத்தில எப்படிச் சக்தி?!” என்று சொல்லி பார்வதி திட்டவட்டமாய் மறுத்தார்.
“மேலே ரூம் தனியாதானே இருக்கு... அதனால எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்காதும்மா” என்றாள்.
மரியா எரிச்சலோடு, “நீ பேசிறது எனக்கு ஒண்ணும் சரியா படல சக்தி” என்றாள்.
“எனக்கு முக்கியமான நேரத்தில உதவி செஞ்சிருக்காரு... இன்னைக்கு அவருக்கு உதவி தேவைப்படும் போது நான் செய்யனும் இல்லயா” என்று சிவசக்தி கெஞ்சலாய் கேட்க,
“நீ உதவி செய்றன்னு எல்லாருக்கும் உபத்திரவம் பண்ற” என்று மரியா சொல்ல பார்வதியும்,
“அவ சொல்றது சரிதான்” என்று ஆமோதித்தார்.
“நான் பெங்களூர் டிரெயின்ல இருந்து விழுந்து அடிப்பட்ட போது மிஸ்டர். சக்தி செல்வன்தான் என்னைக் காப்பாத்தினாரு... அவர் இல்லன்னா... நான் இப்போ இல்லை... ஸோ ப்ளீஸ்ம்மா... யோசிச்சு பாருங்களேன்” என்று மீண்டும் தவிப்போடு அனுமதி கேட்டாள்.
மரியாவும் பார்வதியும் இதைக் கேட்டு வியந்தனர். இப்பொழுது பார்வதிக்கு மறுக்க மனம் வரவில்லை. அவள் சிறிது நேரம் நன்றாக யோசித்த பின் அந்த அறைக் கதவின் சாவியை சக்தியிடம் நீட்டியபடி,
“சரி சக்தி... இருக்கச் சொல்லு... ஆனா கீழே எல்லாம் வரக் கூடாது... மேலே ரூம்லதான் இருக்கனும்... யாருக்கும் டிஸ்டப்பன்ஸா இருக்கக் கூடாது” என்றார்.
மரியா வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்கவில்லை எனினும் அவளுக்கு இந்த முடிவில் உடன்பாடில்லை.
சக்தி சாவியோடு வெளியே வந்த போது ஆனந்தி பள்ளியிலிருந்து வந்திருந்தாள். காலையில் சக்திசெல்வன் பாடம் எடுத்த விதம் பிடித்துப் போக ஆனந்தி அவனிடம் ஆர்வமாய்ப் பேசிக் கொண்டிருந்தாள். ஆனந்தியின் செயலை பார்த்து மரியா மகளை அதட்டலாய் உள்ளே அழைத்தாள்.
சக்திசெல்வனை எல்லோரும் வித்தியாசமாய்ப் பார்த்தனர். சிலர் வெறுப்பாய், சிலர் ஆச்சர்யமாய், சிலர் கோபமாய் என்று ஆளுக்கொரு பாவனையில் பார்க்கத் தன்னைச் சிவசக்தி நன்றாய் பழிவாங்கிவிட்டால் என்றே அவனுக்குத் தோன்றியது. அவன் இங்கே தங்கக் கூடாது என்று நினைக்கையில் சிவசக்தி சாவியுடன் வந்து மாடியறைக்கு அழைத்தாள்.
சிவசக்தியின் வார்த்தையை மறுக்க முடியாமல் அவனும் பின்னோடு சென்றான்.
மேல் மாடியில் பூச்செடிகள் வழியேற அழகாய் பூக்களோடு சிரித்த வண்ணம் இருக்க ஒரு ஓரமாய்ச் சிறு அறை தனித்து இருந்தது. அந்த அறை ஒரு அலுவலக பாணியில் இருக்கச் சிவசக்தி அவன் புறம் திரும்பி, “இந்த ரூம் ஓகேதானே ?” என்றாள்.
அவன் அந்த அறையைச் சுற்றி பார்த்துக் கொண்டிருக்க அங்கே பெரிய பெரிய சட்டப் புத்தகங்கள் நிறைய இருந்தன. ஒரு கப்போர்ட்டில் இருந்த புத்தகத்தைக் காலி செய்து தூக்கி மேலே அடுக்கியபடி,
அவனிடம்,“இந்த ரூம் எங்கம்மா ஆபிஸா யூஸ் பண்ணது... அவங்க போன பிறகு இந்த ரூமை நாங்க யாராச்சும் கெஸ்ட் வந்தா யூஸ் பண்ண வைச்சிருந்தோம்” என்றாள்.
சக்திசெல்வன் அவளின் செயல்களைக் கவனித்தபடி,
“எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி என்னை ஏன் நீ இங்க தங்க வைக்கனும்... இது வெறும் நன்றிக்கடன்தானா?” என்று கேட்டு அவள் மன எண்ணத்தை அறிய நினைத்தான்.
“ஆமாம்... வேறு ஒண்ணுமில்லயே... அப்படி ஏதாவது இருந்து... நான் அதை மறைக்கனும்னு நினைச்சா... ஏன் தைரியமா உங்களை இங்க கூட்டிட்டு வந்து தங்க வைக்கனும்... என் மனசுல நீங்க நினைக்கிற மாதிரியான எண்ணம் துளி கூட இல்லை” என்று சிவசக்தி சொல்லிக் கொண்டிருக்க,
அந்தச் சமயத்தில் அவசரத்தில் அடுக்கி வைத்த புத்தகங்கள் சரியாக நிற்காமல் நிலைதடுமாறி அவை மீண்டும் அவள் மீதே சரிந்து விழப்பார்த்தது.
“அய்யோ” என்று நகராமல் தலையைக் கவிழ்ந்து கொள்ளப் புத்தகங்கள் மடமடவெனச் சரிந்தன. தன் மேல் எதுவும் விழவில்லையே என்று சிவசக்தி நிமிர்ந்து நோக்க சக்திசெல்வன் அவள் மீது விழாமல் தடுத்து தானே அவற்றைத் தாங்கிக் கொண்டான்.
பின்பு சக்தி செல்வன் தலையைத் தேய்த்தபடி,
“இப்படிதான் அடுக்குவாங்களா... அட்லீஸ்ட் விழப் போறது தெரிஞ்சி நகர்ந்திருக்கலாமே ?” என்றான்.
“என்மேல விழுந்தா விழுந்திட்டுப் போது... நீங்க ஏன் நடுவில வந்தீங்க”என்றாள்.
“உனக்கு என்னைப் பிடிக்கலனாலும் சரி... உனக்கொரு பிரச்சனைன்னா என்னால நின்னுட்டு வேடிக்கை பார்க்க முடியாது... என்னன்னு தெரியல... நீ அவசரத்தில செய்யற எல்லாம் காரியமும் என் தலையிலதான் வந்து விடியுது” என்று சொல்லிக் கொண்டே அவன் அறையை விட்டு வெளியேறினான்.
அவன் ஒவ்வொரு முறை தனக்கு நேரும் விபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றுகிறான். ஆனால் தான் ஒருமுறை கூட அவனிடம் சரியாக நன்றி கூடச் சொன்னதில்லையே. மாறாகக் கோபத்தையே காட்டிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் சிவசக்திக்கு வர அவளுக்குள் குற்றவுணர்வு அழுத்தியது.
சிவசக்தி அறைக்கு வெளியே வந்து அவனை நோக்கி, “தேங்க்ஸ்” என்றாள்.
“இவ்வளவு யோசிச்சி சொல்ற தேங்க்ஸ் எனக்கு ஒண்ணும் தேவையில்லை” என்று சக்திசெல்வன் பாராமுகமாய் நிற்க சிவசக்தி தன் தவறை உணர்ந்தவளாய் மௌனமானாள்.
இருவரும் சில நேரங்கள் அமைதியாக யோசனையில் ஆழ்ந்தனர்.
அந்தத் தருணத்தில் அந்தி சாய்வதை அறிவிக்கச் சூரியன் தன் செந்நிறத் துகள்களை வீசி வானில் ஓவியம் படைத்துவிட்டு பிரியா விடைப் பெற்றுக் கொள்ள, அந்த அபரிமிதமான அழகிய காட்சியை சக்திசெல்வன் தலைதூக்கிப் பார்த்தபடி நின்றான்.
அவனின் செயலை சிவசக்தி கவனித்தவளாய்,
“ஹெலோ மிஸ்டர்.சக்தி என்னாச்சு?” என்று கேட்டாள்.
“தேங்க்ஸ் சக்தி” என்றான்.
“எதுக்கு?”
“ஏசி ரூம்லேயே இருந்துட்டு... எப்பவுமே ஆபிஸ் வொர்க்... மீட்டிங்... பிஸின்ஸ் பத்தி யோசிச்சிட்டு... எப்பவுமே கார்லயே டிராவல் பண்ணிட்டு... என்ன வாழ்கை... நிறைய விஷயத்தை மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது... ரிலேக்ஸ்டா...
இந்த மாதிரி நிதமானமா ஒரே ஒரு மாலை நேரம் கூட இருந்ததில்ல... நீ அன்னைக்கு அப்படிப் பேசாலன்னா... ரியலி இன்னைக்கு நான் இப்படி ஒரு அழகான தருணத்தை ரசிக்க முடிஞ்சிருக்காது “ என்றான்.
சிவசக்தி அவன் பேசியதை கேட்டு ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் உணர்ச்சிவசப்படும் அளவிற்கு என்ன நேர்ந்துவிட்டது என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தன்னுடைய இயந்திரத்தனமான வாழ்க்கையை விடுத்து மேல்மாடியில் சாவகாசமாய் நின்று கொண்டு அழகான அந்த மஞ்சள் வெயில் மாலைப் பொழுதை தன் காதலியுடன் நின்று ரசிப்பது அவனுக்கு உண்மையிலேயே அதுவரை கிடைத்திராத அரிய அனுபவம். அதன் அழகை நம் நாயகனால் மட்டுமே உணர முடியும்.
16