மோனிஷா நாவல்கள்
Solladi Sivasakthi - Episode 26

Quote from monisha on January 22, 2025, 10:00 PM26
காதல் வானவில்லோ!
ரிஷி சென்றபின் சக்திசெல்வன் அறைமயக்கத்தில் அவன் தோள்களில் சாய்ந்தபடி இருந்த சிவசக்தியின் கன்னத்தில் தட்டி, “சக்தி” என்று குரல் கொடுக்க,
“விஜய் ராஸ்கல்... என்னடா கலந்து கொடுத்த?” என்று புலம்பினாள்.
“யாரு அந்த விஜய்... அவன் எதையாச்சும் கலந்து கொடுத்தா... நீ எதுக்குக் குடிச்ச... கொஞ்சங் கூடக் காமன் ஸென்ஸே இல்லயா உனக்கு?” என்று உரிமையோடு கடிந்து கொண்டான்.
“காமன் ஸென்ஸ் இருந்துச்சு... எப்போ சக்தின்னு ஒரு இடியட்டை லவ் பண்ணேன்னோ... அப்போவே என் புத்தி... என் ஸென்ஸ்... எல்லாமே மழுங்கிடிச்சு” என்று உளறினாள்.
“போதையில இருந்தா கூட என்னைத் திட்டிறதுல மட்டும் தெளிவா இருக்க... அதெப்படி... தப்பெல்லாம் நீ செய்வ... ஆனா பழியை மட்டும் என் மேல தூக்கி போடிற” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கே வேலை செய்யும் இரண்டு பெண்கள் வர அவர்களிடம் சிவசக்தியை அழைத்துச் சென்று தன்னுடைய அறை சாவியைத் தந்து அங்கே படுக்க வைக்கச் சொன்னான்.
அந்தப் பெண்கள் இருவரும் சாவியை வாங்கிக் கொண்டு அவன் செயலை கண்டு ஆச்சர்யமாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி சிவசக்தியை அழைத்துச் சென்றனர். ஆனால் அவளைச் சமாளிப்பது அவர்களுக்குச் சுலபமான காரியமாக இல்லை.
ரிஷியும் சக்திசெல்வனின் நடத்தையைச் சந்தேகமாய்ப் பார்த்தான். எந்தப் பெண்ணைப் பார்க்க விருப்பமில்லாமல் சில நிமிடம் முன்னர்த் தவிர்த்தானோ அந்தப் பெண்ணை இப்போது அவன் தன் அறையில் தங்க வைக்கச் சொல்கிறானே என்று எண்ணமிட்டுக் கொண்டான்.
சக்திசெல்வன் ரிஷியின் பார்வையை உணர்ந்தபடி,
“தேவையில்லாத என்னைப் பத்தின கற்பனை எல்லாம் விட்டுட்டு உங்க வேலையை மட்டும் பாருங்க... அப்புறம் மிஸ். ஜெயா வருவாங்க... என்னைப் பத்தின எந்த விஷயமும் சொல்லாம சிவசக்தியை அனுப்பி வையுங்க” என்றதும் ரிஷி தன் பாஸின் கணிப்புத் திறனை எண்ணி மெச்சியபடி, “ஒகே சார்” என்றான்.
இவ்வாறு சொல்லிவிட்டு சக்திசெல்வன் புறப்பட யத்தனித்தான். தான் இந்த நிலைமையில் சக்தியுடன் தங்குவது சரியில்லை என்று எண்ணமிட்டபடி வெளியேற முற்பட்டான்.
அந்தச் சமயத்தில் ரிஷிக்கு சிவசக்தியை சமாளிக்க முடியவில்லை என்று அந்தப் பெண்கள் கால் செய்தனர். அவர்கள் சொன்ன செய்தியை ரிஷி தன் பாஸ் சக்தியிடம் உரைக்க அவன் என்னவென்று புரியாமல் தன் அறை நோக்கி விரைந்தான்.
அங்கே அந்தப் பெண்கள் சிவசக்தியிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அவளோ நான் அறைக்குள் வரவே மாட்டேன் என்பது போல் தலையாட்டி தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
“ஓ மை காட்” என்று அதிர்ச்சியோடு சக்தி அருகில் செல்ல சிவசக்தி அந்தப் பெண்களிடம், “இது எந்த இடம்?” என்று மயக்க நிலையிலேயே வினவினாள்.
“ஹோட்டல் எஸ். எஸ் மேடம்” என்று ஒரு பெண் உரைக்கச் சிவசக்தி அதைக் கேட்டு விட்டு,
“கரெக்ட்... அந்த எஸ். எஸ்ஸைதான் நான் பார்க்க வந்தேன்... உடனே அவனை வரச் சொல்லுங்க... ரைட் நவ்... இங்க அவன் என்னைப் பார்க்க வரனும்... அப்பாயின்மென்ட் கொடுப்பான்... ஆனா மீட்டிங்ல இருக்கன்னு அவாயிட் பண்ணுவானா... இதுதான் எஸ். எஸ்ஸோட நாணயமா... அஸ்க் ஹிம் டூ கம் நவ்” என்று அந்த மயக்கத்திலும் அவள் அழுத்தமாய்ச் சொன்னாள்.
அந்த ஹோட்டலின் எம். டியாக இருப்பவனை அவள் அப்படி மரியாதை இல்லாமல் அவன் பக்கத்தில் நிற்கும் போதே பேசுவதைக் கண்டு அங்கே வேலைச் செய்யும் இரு பெண்களும் வித்தியாசமாய் அவனை நோக்கினார். சக்திசெல்வன் அவளின் செயலால் அவர்கள் முன்னிலையில் தன் மானம் போகிறதே என எண்ணியபடி கண்ணசைத்து அந்தப் பெண்களைப் போகச் சொன்னான்.
பின்னர் அவன் சிவசக்தியிடம் இறங்கியபடி காதோரமாய்,
“ப்ளீஸ்... சக்தி எழுந்திரு... மானத்தை வாங்காதே” என்று பொறுமையாய் சொல்லிப் பார்த்தான்.
அவள் அவனை நிமிர்ந்தும் நோக்காமல் இல்லை என்பது போல் தலையசைத்தபடி,
“மாட்டேன்... அந்த எஸ். எஸ்ஸை நான் இப்பவே பார்க்கனும்” என்று அடம்பிடித்தாள்.
“சக்தி... சொல் பேச்சை கேளு” என்று அவள் கைகளைப் பிடித்து எழுப்ப முயற்சி செய்ய அவள் அவன் கைகளை உதறிவிட்டு,
“இடியட் யாருடா நீ... நீ எதுக்கு என் கையைப் பிடிக்கிற... நான் வரமாட்டேன்... முதல்ல அந்த எஸ். எஸ்ஸை கூப்பிடு” என்றாள்.
சக்திசெல்வன் அவள் வார்த்தையைக் கேட்டுப் பொறுமை இழந்தவனாய் அவள் தவடையைப் பிடித்து அவன் முகத்தின் புறம் வலுக்கட்டாயமாகத் திருப்பி,
“யாருடி இடியட்... நல்லா பாரு... நான்தான் எஸ். எஸ்... நான்தான் உன்னோட சக்தி... பார்த்திட்டியா... எழுந்திரு” என்றான் மிரட்டலாக.
சிவசக்திக்கு அது எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது. அவனைப் பிரிந்து மாதங்கள் கடந்துவிட மீண்டும் அவனின் முகம் அவளை ஸ்தம்பிக்க வைத்தது. அவளின் விழிகள் அவனிடம் நிலைக்கொண்டுவிட சக்திசெல்வன் பெருமூச்சுவிட்டபடி, “வேற வழியே இல்லை” என்று சொல்லி தன் காதலியை தன் இரு கரத்தால் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றான்.
சிவசக்தி அவன் மீதான பார்வையைக் கண நேரம் கூட அகற்றாமல் பார்த்தபடியே இருந்தாள்.
சக்திசெல்வன் அவளைத் தாங்கி சென்றபடியே, “எப்ப பார் அவசரத்தில் இந்த மாதிரி எதையாச்சும் பன்றதே வேலையா போச்சு... நீ எப்பதான் திருந்துவ... நீ இப்படிப் போதையில் இருக்கும் போது நான் உன் பக்கத்தில் இருந்தா பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க... நீ தூங்கி எழுந்துக்கோ... நான் கிளம்பிறேன்” என்று சொல்லி அவளைப் படுக்கையில் கிடத்திவிட்டு நிமிர போனவனின் சட்டையை ஒரு கையால் சிவசக்தி கெட்டியாகப் பிடித்து இழுக்க அதிலிருந்த பட்டன் அறுந்து வீழ்ந்தது.
அத்தனை நெருக்கத்தில் அவள் முகம் அவனைச் சலனப்படுத்த தன்னைச் சமன்படுத்திக் கொண்டு அவன் அவள் கரத்தை விலக்கிவிட்டு நிமிர்ந்தான்.
அப்போது சிவசக்தி எழுந்து அமர்ந்தவளாய், “சக்தி... வெயிட்” என்று அழைக்க அவள் அதிர்ச்சியிலிருந்து மீண்டபடி அவனை நோக்கினாள்.
அவளின் குரலில் இருந்த தெளிவைக் கண்டு சக்திசெல்வன்,
“போதை தெளிஞ்சிடுச்சா... கோபப்படப் போறாளே... கத்தி ஊரைக் கூட்டுவாளோ... இப்ப என்ன பண்ணலாம்?” என்று பயந்தபடி யோசிக்கத் தொடங்கினான்.
சிவசக்தி சிந்தனையோடு, ”இது கனவுதானே?!” என்று வினவினாள்.
சக்திசெல்வன் நிம்மதி பெருமூச்சுவிட்டபடி 'நல்லதா போச்சு' என்று மனதில் எண்ணியவன் “ஆமாம் கனவுதான்” என்று அவளிடம் ஆமோதித்தான்.
உடனே அவள் முகத்தை மூடி அழ ஆரம்பிக்க,
“சக்தி என்னாச்சு... அழாதே ப்ளீஸ்... என்னால நீ அழறதை பார்க்க முடியல...” என்று வேதனையோடு அவளைச் சமாதானம் செய்ய அவள் அருகில் அமர்ந்தான்.
அவள் உடனே தன் அழுகையை நிறுத்துவிட்டு சக்திசெல்வனின் புறம் திரும்பி
“ஏன்டா இப்படிப் பண்ண?” என்று கேள்வி எழுப்பினாள்.
“என்னது டாவா???” என்று சக்திசெல்வன் அதிர்ச்சியோடு அவளைப் பார்க்க,
“ஆமான்டா... நான் என்னடா பாவம் செஞ்ச உனக்கு...” என்று அவன் காலரை பிடித்து உலுக்கினாள்.
“சக்தி ரிலேக்ஸ்” என்று அவள் கையை விலக்கி விட அவளோ மீண்டும் அவன் மீது சாய்ந்தபடி அழ ஆரம்பித்தாள். இப்படிச் சிவசக்தி கோபத்தையும் அழுகை உணர்ச்சியையும் மாறி மாறி வெளிப்படுத்த அவனால் அவளைச் சமாளிக்க முடியவில்லை.
“சக்தி... நாம இப்படி ஒரே ரூம்ல இருந்தா தேவையில்லாம எல்லாரும் தப்பா பேசுவாங்கமா... என்னைப் பத்தி சொன்னா பரவாயில்லை... உனக்கும் கெட்ட பேரு... ப்ளீஸ்... நீ ரிலாக்ஸா ரெஸ்ட் எடு... நான் கிளம்பிறேன்” என்று சொல்லி சிவசக்தியை விலக்கிவிட்டு எழுந்தவனின் கையைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டாள்.
“என்னை ஏமாத்திட்டு போறியா சக்தி... நான் என்ன தப்பு செஞ்சன்னு எனக்குச் சொல்லிட்டு போ” என்றாள்.
“நீ தப்பு செஞ்சன்னு யார் சொன்னது?”
“அப்புறம் ஏன் நான் சொல்ல வந்ததைக் கூடக் கேட்காம என்னை நீ விட்டுவிட்டு போன...” என்று சிவசக்தி கேட்க அவளின் தேக்கி வைத்திருந்த காதலின் வலியையும் ஏக்கத்தையும் அப்போது அவளின் கண்களில் அவனால் உணர முடிந்தது.
தான் அப்படி அவளை நிராகரித்ததினால் அவள் எந்தளவுக்குக் காயப்பட்டிக்கிறாள் என்பதை எண்ணியபடி அதற்கு மேல் நடப்பது நடக்கட்டும் என்று அவள் அருகில் அமர்ந்து அவளின் வேதனை நிரம்பிய முகத்தை நிமிர்த்தி
“தப்புதான் சாரி... இப்ப உன் மனசில இருக்கிறதைச் சொல்லு சக்தி... நான் கேட்கிறேன்” என்றான் ஆர்வத்தோடு!
சிவசக்தி சிரித்துவிட்டு. “நான் சொல்லும் போது கேட்டீங்களா... இப்ப நீங்க கேட்கும் போது நான் சொல்லனுமா?” என்றாள்.
சக்திசெல்வன் மீண்டும் தவிப்போடு,
“அய்யோ விளையாடாத சக்தி... நீ உன் காதலை எப்ப சொல்லுவன்னு ஏங்கிட்டிருந்தவன் நான்... ஆனா நானே நீ சொல்ல வந்ததைச் சொல்ல விடாம பண்ணிட்டேன்... திரும்பியும் எனக்குக் கடவுள் ஒரு சேன்ஸ் அமைச்சு கொடுத்திருக்காரு.
அதை நான் தவற விட விரும்பல... நீ உன் காதலை சொல்லப் போற அந்த நொடிக்காகக் காத்திட்டிருக்கேன் சக்தி... ப்ளீஸ் சொல்லு” என்று அவள் மிருதுவான கன்னங்களை ஏந்தியபடிக் கெஞ்சினான். அவனின் ஏக்கத்தை இப்போது அவள் நிராகரிக்கும் விதமாய்
“நோ... நான் சொல்ல வந்தா நீ பாட்டு பாடச் சொல்லுவ... மாட்டேன்... போ” என்று தலையசைத்தாள்
“பாட்டா... அய்யோ... தப்புதான்... சாரி சக்தி... இந்தத் தடவை பாட்டெல்லாம் பாடச் சொல்லமாட்டேன்... நீ சொல்லு” என்றான்.
“நோ... எனக்குத் தூக்கம் வருது... நான் காலையில சொல்றேன்” என்று சிவசக்தி தன்னை மீறிக் கொண்டு வந்த மயக்கத்தால் அப்படியே படுக்கையில் சாய்ந்து கொண்டாள்.
“சக்தி... ப்ளீஸ்... காலையில உனக்குப் போதை தெளிஞ்சிரும்... நீ அப்புறம் என்கிட்ட கோபப்பட்டுச் சண்டைதான் போடுவ” என்று சிவசக்தியை நிமிர்த்தி உட்கார வைத்துத் தவிப்போடு எழுப்பினான்.
இப்போது உண்மையிலேயே அவள் சொல்வதைக் கேட்கும் ஆவல் சக்திசெல்வனுக்கு அதிகரித்திருந்தது. ஆனால் இப்போது அவள் பிடிகொடுக்காமல் நடந்து கொள்ள அறைமயக்கத்தில் இருந்த சிவசக்தியிடம்,
“ஒகே நீ எதுவும் சொல்ல வேண்டாம் நான் கிளம்பிறேன்” என்று சக்திசெல்வன் அவளை விட்டு எழுந்து கொண்டான்.
சிவசக்திக்கு அவனின் செயல் அந்தப் போதை நிலையிலும் அவளை வேதனைப்படுத்தியது. மீண்டும் அவனைப் பார்க்க முடியாதோ என்ற தவிப்பில் முயற்சித்துப் படுக்கையிலிருந்து எழுந்து அவனைப் போக விடாமல் கரத்தைப் பற்றி நிறுத்தியவள்,
“சக்தி... ப்ளீஸ் டோன்ட் கோ... நான் உன்னைக் காதலிக்கிறேன்டா” என்று பளிச்சென்று உரைத்த மறுகணமே அவள் அவனை இறுகஅணைத்துக் கொள்ள, சக்திசெல்வன் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தான்.
அவளின் கரத்தை விலக்கிக் கொள்ளவும் முடியாமல் அந்த இன்பகரமான தருணத்தை அனுபவிக்கவும் முடியாமல் சிலையெனச் சமைந்தான்.
சிவசக்தி அப்படியே சக்திசெல்வனை அணைத்தபடியே நிற்க முதல்முறையாய் ஒரு பெண்ணின், அதுவும் தான் உயிராக நினைக்கும் காதலியின் அணைப்பு தன் கண்ணியத்தைக் கரைந்து போகச் செய்வதை அவன் விரும்பாமல் மெலிதாக “ப்ளீஸ்... சக்தி விடு” என்று தவிப்போடு உரைத்தான்.
சிவசக்தி பிடிவாதமாக, “நோ... வே விட்டா... நீ போயிடுவ” என்று சொல்லியபடி அவனை விடுவிக்க விரும்பாமல் அவளின் கரங்கள் இன்னும் இறுக்கமானது. அவனுடைய பிரிவால் உண்டான வேதனை ஒரு புறமும் அவளை நிலைத்தடுமாறச் செய்த போதை மறுபுறமும் அவளை அவ்விதம் நடந்து கொள்ளச் செய்தது.
அவள் மேலும் நிறுத்தாமல் அவனைக் கட்டியணைத்தபடியே,
“காதல் ஒரு பைத்தியகாரத்தனம்னு நினைச்சிட்டிருந்தேன்... இப்போ என்னையும் அந்தப் பைத்தியகாரத்தனத்தைச் செய்ய வைச்சிட்ட இல்ல... நீ ஜெய்ச்சிட்ட... உன் காதல் முன்னாடி நான் தோற்றுப் போயிட்டேன் சக்தி... அதைதான் நீ எதிர்பார்த்த” என்று சொல்லிவிட்டு அவன் மார்பில் முகத்தைப் புதைத்தபடி கதறி அழ,
அவள் கண்களில் வழிந்து நீர் அவனின் சட்டையை நனைக்க, அதற்கு மேல் அவளைத் தவிக்கவிட மனமில்லாமல் தன் கரங்களால் அவனும் அவளை அரவணைத்துக் கொண்டான்.
சிவசக்தியின் காதலுக்காக ஏங்கிக் காத்திருந்தவனுக்கு அந்தத் தருணம் நெகிழ்ச்சியாய் இருந்தது. எண்ணிலடங்கா இன்பத்தில் அவன் திளைத்தபடி இருக்க அந்த நொடி உண்மையில் கனவோ என்று அவனுக்குச் சந்தேகம் எழுந்தது.
சிவசக்தி சிறிது நேரம் அமைதியாய் இருந்த பின் அவள் சிவந்திருந்த கண்களால் அவன் முகத்தை நிமிர்ந்து நோக்க அவன் மனமும் அவள் பார்வையால் வேதனையில் மூழ்கியது. அவளோ அப்போது அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு,
“நான் உன்னைக் காதலிக்க மாட்டேன்னு சொன்னதுக்காக என்னை நீ நல்லா பழி வாங்கிட்டல ... என்னை வேதனைப்படுத்தி அழவைச்சு பார்க்கனோம்ங்கிற உன் எண்ணம் இப்போ நிறைவேறிடுச்சுல சக்தி?” என்று அவள் கொஞ்சம் கோபமாய்க் கேள்வி எழுப்ப, அத்தனை நேரம் அவன் அனுபவித்த இன்பமெல்லாம் நொடி நேரத்தில் கரைந்து போனது.
“என்ன சக்தி பேசிற... நான் உன் மேல உயிரையே வைச்சிருக்கிறேன்டி... உன்னைப் போய் நான் பழி வாங்க நினைப்பேனா?” என்று அவன் புரியாமல் கேட்க,
சிவசக்தி சிணுங்கியபடி, “போடா நீ பொய் சொல்ற... நான் உன்னை நம்பமாட்டேன்” என்று சொல்லி விலகி வந்தாள்.
“சத்தியமா இல்லடி... உன்னைக் கஷ்டபடுத்திப் பார்க்கனும்னு நான் கனவில கூட நினைச்சதில்ல... புரிஞ்சிக்கோ” என்றான்.
“நிஜமாவா?” என்று அவள் கேட்டுவிட்டு அலட்சியத்தோடு சிரிக்க,
சக்திசெல்வன் அவளைத் தன்னிடமிருந்து பிரித்து
“ஏன்டி சிரிக்கிற... என் வார்த்தையில உனக்கு நம்பிக்கை இல்லயா?” என்று அவளின் கண்களைப் பார்த்துக் கேட்டான்.
அவனின் விழிகளைப் பார்த்ததும் அவள் அசட்டுத்தனமாய், “டூ யூ லவ் மீ”என்று கேட்க,
சக்திசெல்வன் சினத்தோடு, “என்னடி கேள்வி இது... நான் உன்னை எந்த அளவுக்கு லவ் பன்றேன்னு உனக்குத் தெரியாது?” என்று பொங்கினான்.
அவனின் வார்த்தையைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அவள் அழுத்தமாய், “டூ யூ லவ் மீ ஆர் நாட்... ஸே எஸ் ஆர் நோ?” என்று அந்தப் போதையிலும் அவள் தெளிவோடும் தீர்க்கமாகவும் கேட்க
சக்திசெல்வன் சலித்துப் பெருமூச்செறிந்து “எஸ்... ஐ லவ் யூ” என்றான்.
சிவசக்தி அவன் காலரை பிடித்து அவள் வசமிழுத்து “தென்... கிஸ் மீ...” என்று அவன் இதழ்களை நெருங்கினாள்.
சிவசக்தியா இப்படிக் கேட்கிறாள் என்று சக்திசெல்வன் அதிர்ந்து போனான். போதை ஒருத்தரை இத்தகைய நிலைக்கு ஆட்படுத்துமா என்று எண்ணியவன்,
“வேண்டாம் சக்தி... நீ இப்போ நிதானத்தில இல்ல” என்று சொல்லி அவளை விட்டு விலகினான்.
அவள் விடாமல் மேலும் அவன் கழுத்தை இறுகப் பற்றியபடி குறும்புத்தனமான புன்னகையோடு,
“நீ கொடுக்கலன்னா என்ன... நான் கிஸ் பண்றேன்” என்று சொல்லி சிவசக்தி அவனை நெருங்கி வர சக்திசெல்வனுக்கு அவளின் நெருக்கம் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. போதாக் குறைக்கு அவளின் அழகிய இதழ்கள் அவன் மனதை வெகுவாய்ச் சலனப்படுத்தியது.
அவனும் தன்னை மறந்த நிலையில் முத்தமிட நெருங்க அவனின் உள்ளுணர்வு,
‘வேண்டாம் சக்தி... ஷீ இஸ் நாட் இன் கான்ஸியஸ் நவ்’ என்று எச்சரிக்க அவன் சுதாரித்துக் கொண்டு அவளின் இதழ்களைக் கை வைத்து மூடியபடி,
“நோ சக்தி... இப்ப நீ அறைபோதையில இருக்க... வேண்டாம்” என்று தடுத்தான்.
எத்தனை நேரம் இப்படிக் காதலியின் நெருக்கத்தில் இருந்து தன் மனக்கட்டுபாடை காக்க முடியும் என்று அவன் தவிப்புற,
அவள் தன் இதழ்களை மூடியிருந்த அவன் கைகளைத் தட்டிவிட்டு மேலும் அவன் கோபத்தைத் தூண்டும் விதமாய்,
“முடியாதுங்கிற வார்த்தையே என் அகராதியில் இல்லன்னு சொன்ன... தி கிரேட் சக்திக்கு... கிஸ் பண்றளவுக்குக் கட்ஸு இல்லையோ?!” என்று தள்ளாடியபடி கேட்டுப் புருவத்தை உயர்த்தி ஏளனமாய்ப் பார்த்தாள்.
சக்திசெல்வனுக்கு அவளின் பார்வையும் பேச்சும் அவனின் ஆண்மையைத் தூண்டிவிடச் சீற்றத்தோடு அவளைக் கொஞ்சம் ஆவேசமாய்த் தன்புறம் இழுத்துக் கரத்தை பிடித்து,
“என்னடி சொன்ன... கட்ஸு இல்லையா... நான் முடியாதுன்னு எப்போடி சொன்னேன்... வேண்டாமனுதான் விலகிப் போறேன்... நீ விடமாட்ட இல்ல... தென் இட்ஸ் யுவர் பேஃட்” என்று சொல்லி முழுவதுமாய் அவளைத் தன்வசப்படுத்திக் கொண்டு ஆவேசமாய் அவளின் முகத்தில் முத்த மழையைப் பொழிந்து அவளை நனைக்கச் சிவசக்தி அவனின் முத்த கடலில் மூழ்கித் தத்தளித்தாள். அவள் தவிப்பாலும் நாணத்தாலும் அவனிடமிருந்து விடுபட முயற்சி செய்ய அவன் அவளை லேசில் விடுவதாக இல்லை.
இருவருக்கிடையிலான அந்த உணர்ச்சி போராட்டம் வெகு நேரம் நீடிக்க அவள் மூச்சு வாங்கியபடி அவனைத் தள்ளிவிட்டு பிரயாத்தனப்பட்டு விலகி வந்தாள்.
அவள் தள்ளிவிட்ட மறுகணமே சக்திசெல்வன் தன் தவறை உணர்ந்தபடி தலையில் கைவைத்துக் கொண்டான். அத்தனை நேரம் தான் காப்பாற்றிய கண்ணியம் எல்லாம் நொடிப் பொழுதில் கரைந்து போனதை எண்ணி வருத்தமுற்றான்.
பின்னர்ச் சற்று நிதானித்து ஏன் இந்தளவுக்குத் தான் உணர்ச்சிவசப்பட்டோம் என்று யோசித்தபடி சிவசக்தியை அவன் விழிகள் தேட அவளோ அந்த நிகழ்வில் இருந்து மீண்டு வரமுடியாமல் படுக்கையின் மீது அமர்ந்தபடி தன் இரு கரத்தால் முகத்தை மூடிக் கொண்டிருந்தாள்.
அவளின் நிலையைப் பார்த்து குற்றவுணர்வோடு,
‘ஏன் இப்படிச் செஞ்சோம்... சக்திக்கிட்ட போய் எப்படி நான் இப்படி நடந்துக்கிட்டேன்... சே... அவ தன்னை அறியாம சொன்ன வார்த்தையைப் போய்ப் பெரிசுப் பண்ணி... எப்படி ஒரு தப்பை பண்ணிட்டேன்...?’ என்று தன்னைத்தானே வெறுப்போடு கடிந்து கொண்டான்.
அத்தனை நேரம் குழந்தைத்தனமாய்ப் பேசிக் கொண்டிருந்தவள் இப்போது தான் செய்த காரியத்தால் பேச்சற்று அமைதியாய் அமர்ந்திருப்பது அவன் மனதைத் துளைத்து எடுத்தது.
அவளை எப்படி எதிர்கொள்வது என்று குழம்பியபடி வெகு நேரம் தவிப்போடு நின்றிருந்தவன், பின் மெல்லச் சென்று அவள் அருகில் அமர்ந்தான். தன்னைப் பற்றி அவள் என்ன எண்ணிக் கொண்டிருப்பாளோ என்ற அச்சத்தோடு,
“சக்தி... ஐம் ரியலி சாரி” என்றான்.
உடனே அவள் பதில் பேசாமல் அவனின் தோள் மீது தலைசாய்த்துக் கொள்ள, அவன் மனம் அப்போது குற்றவுணர்வில் மீண்டு ஒருவாறு நிம்மதிப் பெற்றது.
“சக்தி” என்று அவன் மீண்டும் அழைக்க, “ம்ம்ம்” என்று மெலிதாய் குரல் மட்டும் கொடுத்தாள்.
“என் மேல கோபமா?” என்று அவன் தயங்கியபடி கேட்க,
அவள் “ஐ லவ யூ சக்தி” என்றாள்.
சக்திசெல்வன் புரியாமல் அப்போது அவள் முகத்தைத் திரும்பிப் பார்க்க அவள் விழிகள் சொருகிக் கொண்டிருந்தன. அவன் உடனே படுக்கையில் தலையணையைச் சரி செய்து அவள் தலையைச் சாய்த்துப் படுக்க வைத்தான்.
அவளை விட்டுச் செல்ல மனமின்றி அவளருகிலேயே அமர்ந்து கொண்டு,
“ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி சக்தி... உன்னை நான் ரொம்பக் கஷ்டப்படுத்திறேன்... பட் ப்ளீஸ் எனக்காக இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ... எல்லாமே சரியாயிடும்... அதற்குள் நீ உன் இலட்சியத்தில் ஜெயிக்கனும் சக்தி... அதுதான் என்னோட விருப்பம்” என்று உறங்கிக் கொண்டிருந்தவளிடம் தன் மனோஎண்ணத்தைப் பரிமாறிக் கொண்டிருந்தான்.
அவனின் அருகாமையில் சிவசக்தி கவலையின்றி நித்திரையில் ஆழ்ந்தாள். ஆனால் விடிந்த பின் அவனைக் காண முடியாமல் நடந்தவை கனவா நிஜமா எனக் குழம்பி தவிக்கப்போகிறாள்.
இவ்வளவு காதலை அவள் தனக்குள் தேக்கி வைத்திருந்தாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.
உண்மையிலேயே அவள் தெளிவான நிலையில் இருந்திருந்தாள் நிச்சயம் இந்த அணைப்பும் கிடைத்திருக்காது. அவளின் காதலையும் இந்தளவுக்கு வெளிப்படையாக உரைத்திருக்கமாட்டாள. அவளுக்கே உரிய ஈகோவும் கோபமும் அவளைச் சொல்லவிட்டிருக்காது.
நாளை வெகுதூரம் நாட்டைவிட்டுப் பயணிக்கப் போகும் இந்த நேரத்தில் மீண்டும் அவளுக்குள் ஏமாற்றத்தை விதைக்க வேண்டாம் எனச் சக்திசெல்வன் நினைத்தான். இது இப்போதைக்குக் கனவாகவே இருக்கட்டும் என்று எண்ணியபடி சிவசக்தியின் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.
திடீரென வானில் தோன்றிய வானவில்லாய் அவளின் காதல் வண்ணமயமாய்ப் பிரகாசித்து அவனை இன்ப கடலில் மூழ்கடித்தது. அடுத்த நிமிடமே வானவில் இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகக் கூடும்
சிவசக்தியின் இந்த ஆழமான காதலை கண்டு வியந்தவன், அதற்கு நிகரான வெறுப்பையும் அவளிடமிருந்து காணப்போகிறான்.
26

Quote from Marli malkhan on February 16, 2025, 10:59 PMSuper ma
Super ma