You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Solladi Sivasakthi - Episode 5

Quote

5

அவனைத் தேடி ஒரு பயணம்

 

சக்தியின் குரல் கேட்டதும் மறுபுறத்தில்

“எப்படி இருக்க சக்தி?... இப்ப பெயின் குறைஞ்சிருக்கா... நல்லா நடக்க முடியுதா... ஆர் யூ ஓகே நவ்?” என்று அவனது கனிரென்ற குரல் மென்மை தன்மையோடு வெளிப்பட்டது.

“யா... ஐம் ஆல்ரைட்” என்று சக்தி ஏளனமாய்ப் பதிலளித்தாள்.

“நானே போஃன் பண்ணிருக்கலாம்... ஆனா நான் போஃன் பன்றதை நீ விரும்பலன்னா... அதான் நம்பர் அனுப்பினேன்... உன் போஃனிற்காக நான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டிருந்தேன்” என்று சொல்லும் போதே அதில் அவன் மனம் புரிந்தது.

மறுபுறத்தில் சக்தி “இப்பவும் நான் விரும்பி எல்லாம் கால் பண்ணல... நீங்க எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கீங்க... என் உயிரை காப்பாத்தினதையும் சேர்த்து... ஸோ... அதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லதான் கால் பண்னேன்...

நீங்க செஞ்ச உதவிக்கெல்லாம் தேங்க்ஸுன்னு ஒரு வார்த்தையில சொல்லிட முடியாது... பட் என்ன பன்றது... இப்போதைக்குத் தேங்க்ஸ்னு மட்டும்தான் என்னால சொல்ல முடியும்” என்றாள்.

“நான் உன் தேங்க்ஸை எதிர்பார்த்து இந்த உதவி எல்லாம் செய்யல சக்தி”

“பின்ன வேற என்ன எதிர்பார்க்கிறீங்க மிஸ்டர்ர்ர்...?” என்று இழுத்துவிட்டு, “வாட்ஸ் யுவர் நேம்?” என்று சக்தி ஆர்வத்தோடு வினவினாள்.

மறுபுறத்தில் லேசான நகைப்புச் சத்தம் கேட்க, “நிச்சயமா சொல்றேன்... ஆனா இப்ப இல்ல... நாம ரெண்டு பேரும் நேர்ல மீட் பண்ணும் போது” என்று சொல்ல சக்தியின் முகத்தில் சலிப்புத் தட்டியது.

சக்தி அவனைப் பார்க்கும் ஆர்வத்தில்,”அப்போ வாங்க மீட் பண்ணலாம்” என்று பளிச்சென்று கேட்க,

“சாரி சக்தி... நான் இப்போ டெல்லியில் இருக்கேன்... ரிடன் வர டென் டேஸ் ஆகும்” என்றான் தயக்கத்தோடு!

“ஸோ வாட்... நீங்க நினைச்சா வர முடியாதா என்ன?” என்று தீர்க்கமாய்க் கேட்டாள்.

“உனக்காக நிச்சயம் வருவேன்... பட் என் சிட்டுவேஷன் அப்படி இருக்கு... அன்டஸ்டேன்ட் சக்தி” என்று கொஞ்சம் தாழ்மையாய் உரைத்தான்.

“நான் போகிற இடத்துக்கெல்லாம் ரோஸஸ் அனுப்பி இரிடேட் பண்ணுவீங்க... பட் நேர்ல வர சொன்னா மட்டும் தயங்குறீங்க” என்று குரலை உயர்த்திக் கேட்டாள்.

“சக்தி காம் டவுன்... நான் சமாளிக்கிறதுக்காக அப்படிச் சொல்லல... புரிஞ்சிக்கோ” என்று அவன் அவள் கோபத்தைக் குறைக்க முயற்சி செய்தான்.

“ஓகே... அப்போ நான் டெல்லிக்கு வர்றேன்... மீட் பண்ணலாம்” என்று சக்தி சொல்ல மறுபுறத்தில் அவனிடம் அமைதி நிலுவியது.

“வாட்... மிஸ்டர்... பதிலே காணோம்?!” என்று சக்தி மீண்டும் கேட்டாள்.

“சக்தி... ஆர் யூ சீரியஸ்?” என்று அவன் கேள்வியில் ஆச்சர்யமும் சந்தேகமும் கலந்திருந்தது.

“யா… ஐம்” என்றாள் தீர்க்கமாக!

“நவ் ஒன்லி யுவர் கெட்டிங் வெல்... இந்த நேரத்தில இவ்வளவு தூரம் டிராவல் பண்ணனுமா?!” என்றான் கேள்வி குறியோடு.

“என் நிலையமையைப் பத்தி நீங்க கவலை பட வேண்டாம் மிஸ்டர்... உங்களுக்கு ஓகேவான்னு மட்டும் சொல்லுங்க”

அவன் யோசித்து விட்டு,

“நாம மீட் பண்ண போற அந்த ஸ்பெஷல் மொமன்டுக்காக... நான் வெயிட் பண்ணிட்டிருக்கேன் சக்தி... கம் சூன்” என்று களிப்புடன் உரைத்தான்.

அத்தகைய களிப்பு சக்தியிடம் இல்லை.

“நானும் அந்த ஒரு மொமன்டுக்காகதான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்” என்றுசொல்லி விட்டு,

‘அந்த நாளை நீ மறக்கவே முடியாத மாதிரி பன்றேன்’ என்று சக்தி மனதில் நினைத்துக் கொண்டாள்.

“இங்க நீ வருவதற்கான ஏற்பாடு எல்லாம்” என்று அவன் சொல்லும் போதே சக்தி உடனே,

“நீங்க எதுவுமே செய்ய வேண்டாம்... ஐ கேன் மேனேஜ்” என்றாள்.

“வெல்... பட் டிக்கெட் நான் ஸென்ட் பண்றேன்... ப்ளீஸ் டோனட் சே நோ” என்றான்.

சக்தி சில நொடிகள் மௌனமாய் இருந்து விட்டுப் பின்,

“தட்ஸ் ஓகே... அனுப்புங்க... பட் ஒன் லாஸ்ட் திங்... அங்கேயும் உங்க கண்ணாமூச்சி விளையாட்டைக் காட்டாதீங்க... ரைட் “ என்றாள் அதிகார தொனியில்.

“நிச்சயம் மாட்டேன்” என்றான்.

“ஓகே... நாம நேர்ல மீட் பண்ணி பேசுவோம்... பை” என்று சக்தி சொல்ல,

“ஓகே சக்தி... ஐம் ஈகர்லி வெயிட்டிங் டு சீ யூ” என்று எதிர்புறத்தில் அவனும் சொல்ல, அவள் இணைப்பைத் துண்டித்தாள்.

சக்தி அவன் பேசிய விதத்தை வைத்து அவன் மன ஓட்டத்தை ஓரளவுக்குப் புரிந்து கொண்டாள். இன்று அவள் கேட்ட குரலிலிருந்த வசீகரம் அவளைக் கொஞ்சம் நிலைதடுமாறவே செய்தது. குரல் மட்டுமே இல்லை. பேசிய விதத்திலும் நேர்த்தியும் தெளிவும் இருந்தது.

அப்படிப்பட்டவன் எப்படி இருக்கக் கூடும் என்று என்னதான் சிந்தித்தாலும் பாராத முகத்தை அவள் எப்படி நினைவுகூற முடியும். இந்த எண்ணம் ஒரு புறம் இருக்க, அவன் முன்பு தான் எந்தக் காரணத்துக்காகவும் இறங்கிப் போய்விடக் கூடாதென்று சக்தி திடமாக எண்ணிக் கொண்டாள்.

அவன் தன்னை இதுவரை தவிக்கவிட்டதற்கு எல்லாம் சேர்த்து அவனைச் சந்திக்கும் தருணத்தில் பழி தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணினாள்.

மீண்டும் தன் கைப்பேசியை எடுத்து அவள் தோழி ஜெயாவிற்கு அழைப்பு விடுத்தாள்.

மறுபுறத்தில் அழைப்பை ஏற்ற ஜெயா,

“என்ன சக்தி... என்னாச்சு ?... நானும் உனக்கு ட்ரை பண்ணிட்டிருக்கேன்... கான்டெக்ட் பண்ண முடியல” என்றாள்.

நடந்த அந்த மோசமான நிகழ்வை எல்லாம் சக்தி சுருக்கமாய்ச் சொல்லி முடிக்க,

“ஓ மை காட்! இப்போ ஒண்ணும் பிரச்சனை இல்லையே” என்று பதட்டத்தோடு கேட்டாள் ஜெயா.

“இல்ல ஜெயா... ஐம் ஓகே”

“எப்படியோ ஹீரோ சார் உன்னைக் காப்பாத்திட்டாரு” என்றாள்.

“சும்மா ஹீரோன்னு சொல்லாதே... ஹீரோன்னா நேருக்கு நேரா வரனும்... இப்படி ஒலிஞ்சி விளையாடக் கூடாது” என்றாள் சக்தி கோபமாக!

“உனக்குப் பிரச்சனை வரும் போதெல்லாம் உன்னைக் காப்பாத்தினா அவன்தான்டி ஹீரோ... சின்னதாய் ஒரு உதவி செஞ்சிட்டு நம்மை அவங்க காலடியில் வைச்சுக்கனும்னு எதிர்பார்க்கிற ஆம்பிளைங்க கூட்டத்தில... ஹீ இஸ் அ ஹீரோ... நீ இம்பிரெஸ் ஆனியோ இல்லையோ... ஐம் இம்பிரெஸ்ட்” என்றாள் ஜெயா.

“உன் ஹீரோ புராணத்தை நிறுத்து... நான் சொல்றதை கேளு... நான் கொடுக்கிற போஃன் நம்பரை... நம்ம ஸ்கூல் ஸ்போட்ஸ் டேக்கு வந்தாங்களே... டீ. சி காயத்ரி... அவங்க கிட்ட கொடுத்து டிரேஸ் பண்ண சொல்லி... அவன் டீடைல்ஸை கண்டுபிடிச்சுட்டு எனக்குக் கால் பண்ணு” என்றாள் சக்தி.

“ஹீரோ சார் நம்பரா சக்தி?” என்று ஜெயாவின் குரலில் ஆர்வம் நிரம்பியது.

“ஆமாம்”

“ஏ லூசு... அவருக்கே போஃன் பண்ணி டீடைல்ஸ் கேட்க வேண்டியதுதானே”

“அவன் சொல்ல மாட்டிறான் ஜெயா... அவன் பேரை கூட என்னை நேர்ல் பாத்துதான் சொல்லுவானாம்... அதான் அவனைப் பத்தின டீடைல்ஸை நானே தெரிஞ்சிகிட்டு அவன் முன்னாடி போய் நின்னு அவனை நோஸ் கட் பண்ணனும்” என்றாள்.

“உனக்கு உதவி செஞ்சவங்களை நோஸ் கட் பண்றதுதான் உனக்குத் தெரிஞ்ச நாகரிகமா?!” என்று ஜெயா கோபமாய் வினவினாள்.

“ஸ்டாப் இட் ஜெயா... உதவியும் செஞ்சிட்டு கூட உபத்திரமும் செய்றான்... நீ எனக்கு உதவுவியா... இல்ல நானே பாத்துக்கட்டுமா?” என்றாள்.

“உன்னையும் உன் பிடிவாதத்தையும் மாத்தவே முடியாது... ஓகே... பண்ணித் தொலைக்கிறேன்... நான் காய்திரி மேடம்கிட்ட உனக்காகப் பேசிறேன்... ஆனா ஒண்ணு... இது செம சேன்ஸ்... நீ இந்தத் தடவை ஹீரோ சாரை மிஸ் பண்ணிட்ட... உன் லைஃப் வேஸ்ட்” என்றாள் ஜெயா.

சக்தி சத்தமாய்ச் சிரித்துவிட்டு,

“ஓ ரியலி... அப்போ கண்டிப்பா... ஹீ இஸ் நாட் இன் மை லைஃப்” என்று உறுதியோடு உரைத்தாள்.

ஜெயா பெருமூச்சுவிட்டபடி, “எப்படியோ போ” என்று வெறுப்போடு சொன்னாள்.

சக்தி பேசி முடித்த பின்அழைப்பை துண்டித்துவிட்டு இன்னும் ஆழமாய்ச் சிந்திக்கத் தொடங்கினாள். அவள் அவனை நிராகரிக்க வேண்டும் என்பதில் ரொம்பவும் தீர்க்கமாய் இருந்தாள். ஆனால் அந்த முடிவு அவனைச் சந்தித்த பிறகு மாற்றமடையுமோ என்னவோ?!

காலையில் அவன் சொன்னதைப் போல் ப்ஃளைட் டிக்கேட் வீடு தேடி வந்தது. அதைப் பார்த்த திவ்யா அதிர்ச்சியானாள். சக்தியிடம் அவள் எடுத்த முடிவைக் குறித்துக் கொஞ்சம் அதிகாரமாய்ச் சண்டையிட்டாள்.

திவ்யாவின் பயமே அவள் தனியாய் அத்தனை தூரம் செல்லப் போகிறாள் என்றுதான். நாம் ஏற்கனவே சொன்னது போல சக்திக்குக்  கொஞ்சம் அசட்டுத் தைரியம்.

அன்று மாலையில் விமானம் ஏறுவதற்காகப் புறப்படும் முன் திவ்யாவிடம் ஏதோ ஒரு பத்திரத்தை கொடுத்தாள்.

“என்ன சக்தி இது?” என்று திவ்யா கேள்வி எழுப்பினாள்.

“நம்ம தங்கியிருந்த வீட்டுப் பத்திரம்... அண்ணி” என்றாள் சக்தி

“இதை எதுக்கு என்கிட்ட?”

“உங்க பேர்ல மாத்திட்டேன்... பாப்பாவுக்கும் உங்க எதிர்காலத்துக்கும் உதவியா இருக்கும்”

“ஏன் சக்தி... இப்படி எல்லாம் பன்ற ? அந்த வீடு உங்க அம்மா கஷ்டபட்டு கட்டினது... அது உன் லைஃப்க்கு உதவியா இருக்கும்”

“இல்ல அண்ணி... எங்கம்மா எனக்காகக் கொடுத்துட்டு போனதா நான் நினைக்கிறது என்னோட தன்னம்பிக்கையும் தைரியமும்தான்...

இதை நான் உங்களுக்குக் கொடுத்ததிற்குக் காரணம் நீங்களும் பாப்பாவும் என்னைக்கும் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது. அது உங்க அம்மா, அப்பா, தம்பியாவே இருந்தாலும் சரி” என்று சக்தி சொல்ல,

திவ்யா அவளைக் கண்ணீரோடு கட்டியணைத்துக் கொண்டாள். அவளின் பிடிவாதத்தைத் திவ்யாவால் மாற்ற முடியவில்லை.

ஜெகதீஷ் தான் விமான நிலையம் வரை துணைக்கு வருவதாகச் சொல்லியும் சக்தி மறுத்துவிட்டு தனியாகவே விமான நிலையத்தை அடைந்தாள்.

சிவசக்தி அவளின் செயலை எண்ணி அவளே வியப்புற்றாள். முகம் தெரியாத ஒருவனைத் தேடி தான் எந்தத் தைரியத்தில் இத்தனை தூரம் செல்ல இருக்கிறோம்.

அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலின் காரணமாகவே நேரப் போகும் எதைக் குறித்தும் கவலையில்லாமல் அவளுக்கே உரிய அசட்டுத் தைரியத்தோடு தன்னந்தனியே அந்தப் பயணத்தை மேற்கொண்டாள்.

சக்தி ஏறிய விமானம் நம் தலைநகரம் டெல்லி வரை பயணிக்க ஆயத்தமானது. இந்தப் பயணம் அவர்களுக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கண்ணாமூச்சி விளையாட்டை முடிவுறச் செய்யுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காற்றில் மேகங்களுக்கிடையே அந்த விமானம் பறந்து கொண்டிருக்க சக்தி கல்லூரியில் மீண்டும் அவன் தன்னைக் குழப்பத்தில் ஆழ்த்திச் சென்ற அந்த நாட்களை எண்ணிக் கொண்டாள்.

You cannot copy content