மோனிஷா நாவல்கள்
Solladi Sivasakthi - Episode 7
Quote from monisha on December 27, 2024, 2:22 PM7
எதிர்பாராத விபத்து
“என்னாச்சு சக்தி... சத்தத்தையே காணோம்” என்று அமைதியாய் இருந்த சக்தியை அவன் கேட்டான்.
“அப்போ நான் உங்க பேரை கண்டுபிடிச்சாதான்... என் கண் முன்னாடி வருவீங்களா... மிஸ்டர்” என்றாள்.
“என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நீ உன் தோல்வியை ஒத்துக்கிட்டா... வருவேன்” என்றான்.
“அதெப்படி... முயற்சியே செய்யாம என்னால தோல்வியை ஒத்துக்க முடியும்... நெவர்” என்றாள் சக்தி தீர்க்கமாக.
“உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே உன்னோட தன்னம்பிக்கையும் புத்திசாலித்தனமும்தான்... அந்த உன்னோட ஸ்ப்ரிட்க்காக ஒரு க்ளூ தர்றேன்... ஆனா நீ அந்த ரோஸஸ்ஸை வாங்கிக்கனும்”என்றான்.
சக்தி அந்த நபரிடம் இருந்த பூக்களை வேண்டா வெறுப்பாய் வாங்கிக் கொண்டாள். அதில் எப்போதும் போல் வாழ்த்துரையாய் வெல்கம் சக்தி என்றிருந்தது.
“ஒகே... டெல் மீ த க்ளூ ?”என்று சக்தி ஆர்வத்தோடு கேட்டாள்.
“சொல்றேன்... பட் ஆன் ஒன் கன்டிஷன்... நீ என் பெயரை கண்டுபிடிக்கலன்னா... நாம மீட் பண்ணும் போது நான் என்ன சொல்றேனோ... அதை நீ அப்படியே மறுக்காம அக்ஸப்பெட் பண்ணிக்கனும்” என்றான்.
சக்தி உடனே, “நோ... நான் இதுக்கு ஒத்துக்கமாட்டேன்” என்றாள்.
அவன் சிரித்துவிட்டு, “என்ன சக்தி... உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டான்.
இப்போது சக்தியின் ஈ. கோ தூண்டப்பட அவள் சற்று நேரம் யோசித்துவிட்டு,
“சரி மிஸ்டர்... நான் ஒத்துக்கிறேன்... ஆனா நான் உங்க பேரை கண்டுபிடிச்சிட்டேன்னா... நான் என்ன சொன்னாலூம் நீங்க கேட்கனும்” என்றாள் சக்தி அழுத்தமாக.
“ஒகே சக்தி... டன்” என்று அவன் பயமின்றி உரைத்தான்.
“நவ் கிவ் மி த க்ளூ” என்று கேட்டாள்.
“ம்... தர்றேன்... நீ பெங்களூர் மெயில் டிரெயின்ல வந்த சீட் நம்பர் செக் பண்ணியே... ஞாபகம் இருக்கா சக்தி... அதுதான் க்ளூ” என்று அவன் சொல்ல, சக்தியின் முகம் துவண்டு போனது.
“இது க்ளூவா?” என்று சலிப்பாய் கேட்டாள்.
“நல்லா யோசிச்சு பார் சக்தி... யூ வில் கெட் இட்... பட் நீ கெஸ் பண்ணவே கூடாதுன்னு வேண்டிக்கிறேன்” என்றான்.
சக்தி புன்னகையோடு, “நான் நிச்சயம் முயிற்சி செஞ்சி கண்டுபிடிக்கத்தான் போறேன்” என்றாள்.
ஆனால் கொஞ்சம் கூட நினைவில் இல்லாத விஷயத்தை வைத்து எப்படி அவன் பெயரை கண்டுபிடிப்பது என்று மனதளவில் தளர்ந்து போனாலும் அதை அவனிடம் சிவசக்தி காட்டிக் கொள்ளவில்லை.
“எனி வே ஆல் தி பெஸ்ட்... சரி சக்தி நீ எங்க தங்க போற?” என்று அவன் கேட்க, அவள் தன் தோழி கீதா வீட்டில் தங்கப்போவதாகச் சொன்னாள்.
“ஒகே... நீ போயிட்டு ரிலேக்ஸ் ஆகிட்டு கால் பண்ணு” என்று அழைப்பை துண்டித்தான்.
அவனின் பிரதிநிதியாய் வந்த நபர் அவளுக்காகக் கார் வெயிட் பண்ணுவதாகச் சொல்ல, அவள் தான் டாக்ஸியில் செல்வதாகச் சொல்லி நிராகரித்துவிட்டு விமான நிலையத்தைக் கடந்து அவளின் தோழி கீதா வீட்டை அடைந்தாள்.
கீதாவும் சக்தியும் எப்போதும் கல்லூரியில் எதிர் எதிர் அணியில் இருந்தனர். ஆனால் இப்போது இருவருமே தங்கள் பிரச்சனைகளை மறந்து தோழிகளாய் மாறி இருந்தனர்.
கீதா ஒரு மென்ப்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்க அங்கேயே சில நண்பர்களோடு வீடு எடுத்துத் தங்கி இருந்தாள். கல்லூரி காலம் முடிவுற்ற போதும் இருவருக்கும் இடையிலான நட்பு இன்று வரை தொடர்பிலேயே இருந்தது. சக்தி இப்போது கீதாவின் அறைக்கதவை தட்டினாள்.
சக்தியை பார்த்ததும் கீதா அவளைக் கட்டியணைத்தபடி வரவேற்றாள். அங்கே கீதா தம் தோழிகளுக்கு எல்லாம் சிவசக்தியை அறிமுகம் செய்து பழைய நாட்களை நினைவுகூர்ந்து ஆர்வமாய் விளக்கிக் கொண்டிருந்தாள். முக்கியமாய் அந்தப் பேஃஷன் ஷோவை பற்றிச் சொல்லி சக்தியின் திறமையைப் பறைசாற்றினாள்.
வெகுநாட்களுக்குப் பிறகான அந்தச் சந்திப்பை கீதாவும் சக்தியும் ஆனந்தமாகவே அனுபவித்தனர்.
ஆனால் சக்தியால் முழுமையான அந்தத் தருணத்தை அனுபவிக்க முடியாமல் அவன் சொன்ன அந்த க்ளூவை நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள்.
கீதா அவளைக் கவனித்து விட்டு, “ஏதாவது பிரச்சனையா சக்தி?” என்று வினவினாள்.
“நத்திங்... ஒரு முக்கியமான ஆளை பார்க்கலாம்னு வந்தேன்... ஆனா பார்க்கிறதுக்கு அபாயின்மன்ட் கிடைக்கல” என்றாள்.
“நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணட்டுமா சக்தி ?” என்று கீதா கேட்க,
“அவசியம் ஏற்பட்டா... நானே கேட்கிறேன் கீதா“ என்று சக்தி தான் வந்த விஷயத்தைக் குறித்துச் சொல்ல தயங்கினாள்.
இரவு சக்திக்கென்று ஒரு படுக்கையை ஒதுக்கித் தந்து விட்டு கீதா வேறொரு பெண்ணோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டாள். அவனைப் பற்றிய நினைவு சக்தியை அலைக்கழிக்க அவளுக்கு உறக்கம் வந்தபாடில்லை.
மாறாய் அவன் பெயர் என்னவாயிருக்கும் என்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்த போது கல்லூரியில் ஒரு முறை மீண்டும் அவனைப் பார்ப்பதாகச் சொல்லி பிரச்சனையில் தான் சிக்கி கொண்டது சக்திக்கு நினைவுக்கு வந்தது.
அன்று சக்தியின் பிறந்த நாள். காலையிலிருந்து உற்சாகமும் ஆனந்தமுமாய் இருந்தாள் சிவசக்தி. அவள் ஹாஸ்டலில் இருந்ததினால் அன்று அவள் அண்ணன் அருண் நேரிலேயே வந்து செலவுக்குப் பணமெல்லாம் கொடுத்துவிட்டு புது உடை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போனான். சிவசக்தி அன்று ஜெயா மற்றும் சில நண்பர்களோடு பெரிய உணவகத்திற்கு வந்திருந்தாள்.
அவர்கள் கலகலவெனச் சந்தோஷமாகவே பேசி உண்டப்பிறகு அவர்கள் சாப்பிட்டதற்கான பணத்தைக் கொடுக்க நினைக்க ரோஜா பூங்கொத்து அவள் அமர்ந்திருந்த மேஜைக்கே வந்தது.
போதாக் குறைக்கு அவர்கள் சாப்பிட்டதற்கான பில் பணம் கட்டப்பட்டதாகச் சொல்ல சிவசக்திக்குக் கோபம் தலைக்கேறியது. அந்த உணவகத்தில் உள்ளவர்களை எல்லாம்,
“எனக்காகப் பணம் கொடுக்க அவன் யார்?” என்று கேட்டு கத்த ஆரம்பித்தாள்.
“சக்தி ப்ளீஸ் இது ஹோட்டல்” என்றாள் ஜெயா.
“நோ ஜெயா… இதை நான் விடுவதாயில்லை... நான் அவனை இப்போ பார்த்தே ஆகனும்” என்றாள் சக்தி கோபமாக!
சிவசக்தி கோபம் குறையாமல் கத்திக் கொண்டிருக்க அந்த உணவகமே ஸ்தம்பித்தது. கடைசியாய் உணவகத்திலிருந்த போஃன் ஒலிக்க,
“மேடம் போன் உங்களுக்குதான்“ என்றார் உணவகத்தின் மேனேஜர்.
“யாரு... நான் எதுக்குப் பேசனும்... அவனை இங்க வர சொல்லுங்க... பேசிறேன்” என்றாள் சக்தி பிடிவாதமாக!
அங்கே இருப்பவர்கள் எல்லோரும் என்ன சொல்வதென்று புரியாமல் நிற்க, ஜெயா மட்டும் சக்தியை பேசச் சொல்லி வற்புறுத்தினாள்.
கடைசியில் அவளின் பிடிவாதத்தை மாற்ற முடியாமல் ஜெயாவே போஃனை வாங்கிப் பேசினாள்.
“நீங்க யாரு ? ஏன் நேர்ல வரமாட்டிறீங்க... ஏன் சக்தியை இப்படி டென்ஷன் படுத்திறீங்க?!” என்று கேட்க,
மறுபுறத்தில் அவன் “இப்ப நான் வர முடியாது... எப்போ வரனமுன்னு கேட்டு சொல்லுங்க... நான் வர்றேன்” என்று அவன் சொல்ல அப்படியே அதைச் சக்தியிடம் சொன்னாள் ஜெயா.
சக்தி புருவங்கள் சுருங்க, “நைட் பன்னிரெண்டு மணிக்கு ஹாஸ்டல் பின்னாடி வரச் சொல்லு... இல்லாட்டி எப்பவுமே என் லைஃப்ல அவன் வரவே கூடாது” என்று சத்தமாய்ச் சொல்லிவிட்டு ஜெயாவிடம் இருந்த ரிசீவரை பிடுங்கி அவளே கீழே வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள். அவனுக்குப் பேச கூட வாய்ப்புக் கொடுக்காமல் சக்தி அழைப்பைத் துண்டித்தாள்.
ஜெயா சக்தியோடு ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தாள். சக்தியின் செயல் அவளுக்குப் புரியாத புதிராய் இருந்தது.
“லூசா சக்தி நீ... பன்னிரெண்டு மணிக்கு ஹாஸ்டலை விட்டு நீ எப்படி வெளியே போக முடியும்... எனக்குப் புரியல சக்தி... வாட்ஸ் ஆன் யுவர் மைன்ட்” என்றாள்.
“பகல் நேரத்தில நான் எங்க வரச் சொன்னாலும் அவன் கூட்டத்தோட கூட்டமா என்னை ஏமாத்திட்டு போயிட சான்ஸ் இருக்கு... அதுவும் இல்லாம நைட்ல யாரும் இருக்க மாட்டாங்க... அந்த நேரத்தில அவனை ஈஸியா அடையாளம் கண்டுப்பிடிச்சிடலாம்” என்றாள்.
“அந்த நைட்ல நீ எப்படிப் போகப் போற?” என்று கேட்டாள் ஜெயா.
“நான் இல்லமா... நாம... ஹாஸ்டல் சுவரேறி குதிச்சிதான்” என்றாள் சக்தி.
“என்ன விளையாடிறியா சக்தி... என்னை எதுக்கு இதுல மாட்டி விடற” என்றாள்.
“நாம பிரண்ட்ஸ் ஜெயா... எனக்காக இதைக் கூட நீ செய்ய மாட்டியா?” என்றாள் சக்தி.
“சக்தி... நாம மாட்டினா சஸ்பெண்ட எல்லாம் கிடையாது... நேரா டிஸ்மிஸ்தான... அவ்வளவுதான்... எங்கப்பா தோலை உரிச்சிடுவாரு” என்று ஜெயா தன் மனதில் உள்ள பயத்தை வெளிப்படுத்தினாள்.
“பயப்படாதே... நம்ம மாட்டவே மாட்டோம்... அவன்தான் இன்னைக்கு நம்மகிட்ட மாட்டப் போறான்” என்றாள் சக்தி.
ஜெயாவுக்கு சக்தியை பற்றி நன்றாகவே தெரியும். ஆனால் இம்முறை அவளின் அசட்டுத் தைரியம் ஜெயாவை கலங்கடித்தது.
அந்த இரவு நேரத்தில் அவர்கள் அறையில் இருந்த தோழிகளிடம் சொல்லிவிட்டு ஜெயாவும் சக்தியும் உண்மையிலேயே அப்படி ஒரு காரியத்தைச் செய்தனர்.
அவனைப் பார்க்க வேண்டுமென்று ஆர்வத்தில் சக்தி எடுத்த முடிவு கொஞ்சம் அதிகப் பிரசிங்கித்தனம்தான். அந்தச் சுவற்றை அவர்கள் தாண்டிய விதத்திலிருந்து அத்தகைய செயலை அவர்கள் ஏற்கனவே செய்திருப்பார்கள் போலும்.
ரொம்ப லாவகமாகவே ஏறி இரு தோழிகளும் குதித்தனர். அந்த ஆள் அரவமில்லாத இரவில் ரோட்டில் அவன் வருவானென்று சக்திக்கு இருந்த நம்பிக்கை ஜெயாவுக்குத் துளியும் இல்லை.
ஜெயா புலம்பியபடி இருக்க, அந்த இருளில் வந்த பைக் பெரும் சத்தத்தை எழுப்ப ஜெயா மிரண்டாள். அந்த வண்டியில் வந்த இளைஞன் அவர்களை நோக்கி வந்து நின்று “என்ன ரேட்?” என்றான்.
சக்தி கோபத்தோடு, “என்னடா சொன்ன... பொறுக்கி” என்று செருப்பைக் கழட்ட அவன் பைக்கை அங்கிருந்து நகர்த்தியபடி,
“பெரிய பத்தினி... இந்த நேரத்தில ரோட்டில நிக்கிற... வேற என்ன கேட்பாங்க?” என்று அவன் கத்திக் கொண்டே சென்றான்.
“எருமை... இந்நேரத்தில நின்னா... நீ என்ன வேணா கேட்பியா... போடா ராஸ்கல்... நீ ஏதாச்சும் போஸ்ட்ல முட்டிச் சாகத்தான் போற... பரதேசி” என்று அவள் கோபத்தில் சீறிக் கொண்டிருக்க,
ஜெயா அவளை ஆசுவாசப்படுத்தினாள். அந்தச் சமயத்தில் பயங்கரச் சத்தம் எழ, சக்தியும் ஜெயாவும் ஓடிச் சென்று பார்த்தனர். அந்த இளைஞன் தரையில் ரத்தம் வழிய ரோட்டில் விழுந்து கிடக்க அவன் பைக் தனியே அனாதையாய்க் கிடந்தது.
சக்தி ஓடிச்சென்று அவள் துப்பட்டாவினால் அந்த இளைஞனின் தலையில் வழிந்த குருதியை நிறுத்த முயற்சித்தாள். அந்த நேரத்தில் சுற்றிலும் யாருமே இல்லை.
“இப்ப என்ன பன்றது?” என்று ஜெயா பதட்டோடு கேட்டாள்.
அந்த நேரத்தில் காக்கி உடையில் வந்த செக்யூரட்டி, “என்னாச்சு” என்று விசாரித்தார். அந்தத் தோழிகள் நடந்தவற்றை விளக்கினர்.
அதற்குள் அங்த செக்யூரிட்டி வேகமாய் வந்த காரை நிறுத்தி ஹாஸ்பெட்டில் அழைத்துப் போக அவனை ஏற்ற சக்தியும் வேறுவழியின்றி ஏறிக் கொண்டாள்.
ஜெயா அவளை நோக்கி, “இதெல்லாம் நமக்குத் தேவையாடி ?“ என்று கேட்டாள்.
“நான் அப்படிச் சொல்லிருக்கக் கூடாது… இவன் நல்லபடியா பிழைச்சிக்கிட்டாதான் எனக்கு நிம்மதி” என்று அவன் தலையில் வழிந்த இரத்தை அழுத்திப் பிடித்தபடி உரைத்தாள்.
“இவன் குடிச்சிட்டு விழுந்தா நீ எப்படிப் பொறுப்பாக முடியும் சக்தி... இப்ப நாம எப்படி ஹாஸ்டல்குள்ள போறது... அதை யோசிச்சியா?!” என்றாள் ஜெயா.
“எல்லாத்துக்கும் அந்த முகம் தெரியாத இடியட்... ராஸ்கல்தான் காரணம்” என்று சக்தி கோபமாய் உரைத்தாள்.
அவர்கள் வந்த அதே காரில்தான் அந்த முகம் தெரியாத இடியட் இருந்தான் என்று சக்திக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
7