மோனிஷா நாவல்கள்
Solladi Sivasakthi - Episode 9
Quote from monisha on December 29, 2024, 4:14 PM9
அவளின் முடிவு
இரவெல்லாம் அவனைப் பற்றிய சிந்தனையால் பாதி நேரம் உறக்கமின்றிக் கழிந்துவிடப் பின்னர்க் கீதாவிடம் பேசியபடி இருக்கக் கதிரவன் தன் பணியைத் தாமதமின்றிச் செய்யத் தொடங்கினான்.
கீதா அலுவலகத்திற்குப் புறப்படாமல் சக்திக்காக விடுப்பு எடுத்துக் கொள்வதாகச் சொன்னாள். ஆனால் சக்தி அவளைக் கட்டாயப்படுத்தி அலுவலகத்திற்குப் புறப்படச் செய்தாள்.
இரவு நேரத் தூக்கத்தைச் சரிக்கட்ட சக்தி சூரியனின் ஒளிக்கீற்றுகளை நிராகரித்துவிட்டு அவளை மறந்து நித்திரையில் ஆழ்ந்தாள்.
சக்தியின் கைப்பேசி ரொம்ப நேரம் சக்திசெல்வனின் அழைப்பை அறிவித்து அறிவித்துக் களைத்துப் போனது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சக்திக்குக் கனவில் கைப்பேசியின் அழைப்பு மணி கேட்டு கொண்டிருப்பதாய் தோன்றியது.
மீண்டும் கைப்பேசி மணி ஒலிக்க இம்முறை சக்தியின் மனம் விழித்துக் கொள்ளத் தெளிவுப் பெறாமலே கண்களை மூடியபடி கைகளைத் துழாவி கைப்பேசி அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.
“ஹெலோ யாரு?” என்று கேட்டாள்.
“பெயர் சொல்லவா?” என்று சக்திசெல்வனின் கம்பீர குரல் ஒலிக்க, அடுத்தக் கணமே கண்களைத் திறந்து எழுந்து உட்கார்ந்துக் கொண்டாள்.
மீண்டும் அவன், “என்ன சக்தி... தூங்கிட்டிருந்தியா?!” என்று கேட்டான்.
“ம்ம்ம்” என்றாள்.
“என்ன விடிஞ்சி இவ்வளவு நேரமாச்சி... தூங்கிட்டிருக்க... நைட் தூங்காம ரொம்ப நேரம் யோசிச்சிட்டு இருந்தியோ?!” என்று கேட்டான்.
அவன் கண் காணாத இடத்தில் இருந்தபடி எல்லாவற்றையும் சரியாகவே கணித்து விடுகிறானே என்று சக்திக்குக் கோபம் வந்தது.
“நான் தூங்கினேன்... தூங்கல... உங்களுக்கு என்ன?” என்று கேட்டாள்.
அதே சமயத்தில் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க சக்தி போஃனில் அவனிடம், “ஒன் மினிட்... யாரோ காலிங் பெல் அடிக்கிறாங்க?” என்றாள்.
“யாரோ இல்ல சக்தி... அது நான்தான்” என்றான்.
சக்தி அதிர்ச்சியோடு, “ஆர் யூ சீரியஸ்?” என்று கேட்டாள்.
“கம்மான் சக்தி ஓபன் தி டோர்” என்றான்.
“என்ன விளையாடிறீங்களா... பேரை கண்டுபிடிச்ச பிறகுதானே மீட் பண்றதா டிசைட் பண்ணோம்” என்று கேட்டாள்.
“அப்போ நீ என் மேல நம்பிக்கை இல்லைன்னு சொன்னியா... அந்தக் கோபத்தில அப்படிச் சொல்லிட்டேன்... இட்ஸ் ஒகே... நீ என் பேரை கண்டுபிடிக்கலன்னா பரவாயில்ல... இப்போ கதவு திற... ஐம் வெயிட்டிங் அவுட் சைட்... ஓபன் தி டோர்”என்றான்.
“நோ... டீல் இஸ் அ டீல்… நாம பேசினது பேசினதுதான்... உங்க இஷ்டப்படி எல்லாம் என்னால ஆட முடியாது” என்றாள்.
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். நைட் டீரஸ் அணிந்து கொண்டு உறக்கத்தால் சிவந்த கண்கள் பொட்டில்லாத களை இழந்த முகம். அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலை விட அவன் முன்னாடி தான் இப்படியா போய் நிற்பது என்ற பெண்மைக்கே உரித்தான கவலை அவளை ஆட்கொண்டது.
“நீ டெல்லிக்கு என்னைப் பார்க்கத்தானே வந்த சக்தி” என்று கேள்வி எழுப்பினான்.
“சரி நம்ம மீட் பண்ணுவோம்... பட் இப்ப வேண்டாமே... ப்ளீஸ் கோ” என்று சக்தி கெஞ்சினாள்.
எதிர்புறத்தில் அவன் கலகலவென்று சிரித்தபடி,
“சீரியஸா நான் சொன்ன பொய்யை நம்பிட்டியா சக்தி... ஸோ சாரி” என்றான்.
“பொய்யா?!” என்று சக்தி பெருமூச்சுவிட்டாள்.
பின்னர்க் கோபத்தோடு,
“வாட்ஸ் யுவர் பிராப்ளம்? என்னை ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க? ஊர் உலகத்தில உங்களுக்கு வேற பெண்ணே கிடைக்கல” என்று தன் எரிச்சலை வெளிப்படுத்தினாள்.
அவன் சிரித்துவிட்டு, “ரிலேக்ஸ்... போய் முதல கதவை திற... நான் காலில் வெயிட் பண்றேன்” என்றான்.
சக்தி போய்க் கதவைத் திறக்க,
“மேம்... தீஸ் பிஃளவர்ஸ் ஆர் பாஃர் யூ” என்று ஒரு இளைஞன் அந்த அழகிய ரோஜா மலர்களை நீட்டினான்.
சக்தி இன்னும் எரிச்சல் மிகுதியால் பூக்களை வாங்கிக் கொண்டு கதவை படாரென்று மூடினாள்.
'ஹேவ் அக் கிரேட் டே சக்தி' என்று அந்த மலர்களின் நடுவில் உள்ள சீட்டில் எழுதியிருக்க, “என் நாளே நாசமா போச்சு... இதுல கிரேட் டே வேற” என்று சொல்லி அந்தப் பூங்கொத்தை தூக்கி வீசினாள்.
சக்தி போஃனை எடுத்து கோபமாய்,
“இந்த மாதிரி ரோஸஸ் அனுப்பிறதை இதோட நிறுத்துங்க... எனக்கு இரிட்டேட்டிங்கா இருக்கு” என்றாள்.
“இனிமே அனுப்ப மாட்டேன்... நெக்ஸ் டைம் நானே நேரில வந்து தர்றேன்... பட் நீ என் பெயரை கண்டுபிடிச்சிட்டியா சக்தி ?!” என்று கேட்டான்.
“இல்ல முயற்சி பண்ணிட்டிருக்கேன்... கண்டுபிடிச்சிருவேன்” என்று தயக்கமின்றி சக்தி பொய்யுரைத்தாள்.
இத்தனை நேரம் வரை அவன் பெயர் தெரிந்தாலும் அவள் அதை உச்சரிக்காமலே பேசியதும் இப்பொழுது சக்தி உரைத்த பொய்யும் சக்திசெல்வனை ஏமாற்றும் எண்ணம் போலும்.
“போகட்டும்... நாளைக்கு நாம கண்டிப்பா மீட் பன்றோம்... நீ என் பெயரை கண்டுபிடிச்சாலும் சரி கண்டுபிடிக்கலனாலும் சரி... ஆனா பேசினபடி யார் தோற்க்கிறமோ அவங்க ஜெய்ச்சிவங்க டிமேன்ட்டை அக்ஸ்ப்பெட் பண்ணிக்கிட்டே ஆகனும்... ரைட்” என்று அவன் சொல்ல சக்தி,
“என்ன டிமேன்டா இருந்தாலும் கேள்வி கேட்காம ஒத்துக்கனுமா?!” என்று கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்டதன் அர்த்தம் நம் நாயகனுக்குப் புரிந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் வாசகர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.
“எஸ் சக்தி... அதானே டீல்” என்று அவன் சொல்ல அந்தப் பதில் அவனுக்கே வினையாய் முடியப் போகிறது.
சக்தி தன் சந்தோஷத்தைக் குரலில் காட்டிக் கொள்ளாமல்,
“ஒகே நாளைக்கு மீட் பண்ணுவோம்... அதுக்குள்ள நான் உங்க பெயரை கண்டுபிடிக்க ட்ரை பன்றேன்” என்றாள்.
“ஒகே சக்தி... சீ யூ சூன்” என்று அவன் சொல்ல இருவருமே இணைப்பைத் துண்டித்தனர்.
சக்தி மனதில் இப்போது வேறு விதமான குழப்பம் ஆட்கொண்டது. அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் ஒருபுறம் இருந்தாலும் அந்தச் சந்திப்பு எத்தகையதாய் இருக்கும் என்று மனதிற்குள் அச்சம் தொற்றிக் கொண்டது.
அந்த நேரத்தில் ஜெயா போஃன் செய்ய அவளிடம் அவனைப் பற்றி எந்த விஷயத்தையும் சக்தி பகிர்ந்து கொள்ளவில்லை.
தான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அவன் கணிக்கிறானா? இல்லை அவனுக்குத் தகவலாய் செல்கிறதா? என்பது புரியாத புதிராய் இருக்கும் நிலையில் இது குறித்து சக்தி ஜெயாவிடமே பகிர்ந்து கொள்ளப் பயந்தாள்.
அன்று முழுவதும் சக்தி பதட்டத்தோடு இருந்த போதும் ஒரே ஒரு முடிவில் தெளிவாய் இருந்தாள். அது அவள் நாளை சென்னையைச் சென்றடைய வேண்டும். அவள் எதிர்பார்த்தது போல் இரவு ஏழு மணிக்கான விமானத்தில் செல்ல பயணச் சீட்டையும் ஏற்பாடுச் செய்தாள்.
அலுவலகத்தில் இருந்த வந்த கீதாவிடம் தான் நாளை சென்னை செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டதாகச் சொன்னாள்.
“நாளைக்கு நீ சக்தி சாரை மீட் பண்ணுவ இல்ல” என்று கேட்டாள் கீதா.
“எனக்குச் சக்தியை பார்க்கனும்... ஆனா நாங்க இரண்டு பேரும் சந்திச்சிக்கக் கூடாது” என்றாள் சக்தி.
“எனக்குப் புரியல” என்று கீதா குழப்பமடைந்தாள்.
“புரிகிற மாதிரி சொல்றேன்... ஆனா நாளைக்கு நீ எனக்கு ஒரு உதவி செய்யனும்” என்றாள்.
“ஏடாக்கூடாம ஏதாச்சும் கேட்காதடி” என்றாள் கீதா.
சக்தி தான் மனதில் யோசித்த வைத்த திட்டத்தைக் கீதாவிடம் பகிர்ந்து கொண்டாள்.
“ஓமை காட்... சக்தி இது நல்லதுக்கில்ல... எனக்கு ஓரளவுக்கு சக்தி சாரை பத்தி தெரியும்... அவருக்கு எதிலயும் தோற்கிறது சுத்தமா பிடிக்காது... தான் நினைச்சதை நடத்தியே ஆகனும்னு பிடிவாதமான ஆளு.
அதனாலதான் இப்பவரைக்கும் நீ அவரை நிராகரிச்சிர கூடாதுன்னு அவர் நேர்ல வர தயங்குகிறாருன்னு நினைக்கிறேன்... பட் நீ வேண்டாம்னு மட்டும் சொல்லிட்டா நிச்சயம் சக்தி சாருக்கு அது கோபமா மாறாலாம்... அது உனக்கே பிரச்சனையா திரும்பிடுமோன்னு எனக்குப் பயமா இருக்கு”என்று கீதா பதட்டத்தோடு உரைத்தாள்.
“இப்ப என்ன சொல்ல வேற?” என்று சக்தி அலட்சியமான தொனியில் கேட்க,
“நீ சக்தியை மீட் பண்ணிட்டு... அப்புறமா சென்னைக்குப் போ” என்றாள் கீதா.
“இல்ல கீதா அது சரியா வராது... என்ன பிரச்சனை வேண்ணா வரட்டும் நான் அதைச் சென்னையில போய்ப் பேஃஸ் பண்ணிக்கிறேன்” என்று சக்தி தீர்க்கமாகச் சொன்னாள்.
அதற்குப் பிறகு கீதாவால் அவளின் பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை. சக்திக்கும் உள்ளூர பயம் இருந்த போதிலும் யாரும் தெரியாத அந்த ஊரில் இருப்பதைவிடச் சென்னைக்குத் திரும்பிவிடுவதே தனக்குப் பாதுகாப்பு என்று எண்ணினாள்.
இதுநாள்வரை அவன் அவள் கண் முன்னே தோன்றாமலே அவளின் நன்மதிப்பைப் பெற்றிருந்தான். ஆனால் இன்று வரை அவன் காதலை அவளிடம் வெளிப்படுத்தியதே இல்லை.
நாளை அவனை நேரில் சந்திக்க நேர்ந்து காதல் என்ற ஒன்றை முன்னிறுத்தினால் முடியாது என்று நிராகரிக்கும் தைரியத்தை சக்தி இழக்க நேரிடலாம். அதற்கான ஆழமான காரணம் அவளிடம் இருந்தது.
சக்தியின் அண்ணன் அருணுக்கு நேர்ந்த விபத்து. மொத்தமாய் அவளின் லட்சியத்தை விடுத்துத் தடம் மாறி அடித்துச் செல்ல இருந்த அந்தப் பெரும் வெள்ளத்தில் இருந்து அவளை மீட்டெடுத்தவன்.
ஒரு பக்கம் குற்றவுணர்வு சக்தியை வாட்டி வதைத்தது. வீசி எரிந்த ரோஜாக்களை மீண்டும் கைகளில் எடுத்து மேஜை மீது வைத்தாள். சக்தியின் மனதிற்கும் மூளைக்குமான பெரும் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. சக்தியின் உறக்கத்தை நம் நாயகன் பறித்துக் கொண்டு வெகு நாளானது.
‘உன் உயிரை காப்பாத்தி... தொலைஞ்சி போக இருந்த உன் கனவை திருப்பிக் கொடுத்த அவனுக்கு நீ பிரதி உபகாரமாய் என்ன செய்யப் போற சக்தி?’ என்று சக்தியின் மனம் அவளிடம் கேள்வி எழுப்பியது.
9