மோனிஷா நாவல்கள்
Solladi Sivasakthi - Prefinal Episode

Quote from monisha on February 7, 2025, 11:36 AM34
சிவசக்தியின் சவால்
மீனாக்ஷி சிவசக்தியை அவளின் மனதை துளைப்பது போல உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிவசக்தியோ சக்தியை சந்திக்க இயலுமா என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அவர்களுக்கு இடையில் நிலவிய மௌனத்தை அப்போது மீனாக்ஷி கலைத்தார்.
“சிவசக்தி ஐ. எ. ஏஸ்... முதல் முயற்சியிலேயே உன் இலட்சியத்தில் வெற்றி பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.
சிவசக்தி அந்தப் பாராட்டினை எப்படி எடுத்துக் கொள்வதென்று புரியாமல், “தேங்க்யூ மேடம்” என்று சொல்லி மெலிதாய் புன்னகையித்தாள்.
“உன் இலட்சியத்தில் போராடி நீ ஜெய்ச்சிருக்கலாம்... ஆனால் நீ உன் காதலில் வெற்றி பெறுவது கஷ்டம்தான்” என்றார் மீனாக்ஷி அலட்சியமாக.
இத்தனை பெரிய காத்திருப்பைத் தாண்டி இப்படி ஒரு வார்த்தையைக் கேட்கவா தான் இங்கே வந்தோம் என்று எண்ணியபடி சிவசக்தி மீனாக்ஷியை பார்த்தாள்.
மேலும் மீனாக்ஷி தொடர்ந்து, “நீ சக்தியை உண்மையா காதலிச்ச என்பதை நான் மறுக்கல... ஆனா யதார்த்தத்தைப் புரிஞ்சிகிட்டு நீ உன் காதலை மறப்பதுதான் உங்க இரண்டு பேருக்கும் நல்லது” என்றார்.
“புரியல மேடம்... அது என்ன யதார்த்தம்?!” என்று சக்தி புரியாமல் கேட்டாள்.
“நீங்க இரண்டு பேரும் திருமணம் பண்ணி ஒன்றா வாழ்வது என்பது சாத்தியமே இல்லை என்பதுதான் யதார்த்தம்” என்று அழுத்தமாய் மீனாக்ஷி உரைக்க அவர் சொன்னது சக்தியின் மனதை இரண்டாய்ப் பிளப்பது போன்ற உணர்வைத் தோற்றுவித்தது.
எனினும் அவள் தன் மனதைரியத்தை விட்டுவிடாமல் இன்னும் அழுத்தமாக,
“ஏன் நாங்க இரண்டு பேரும் ஒண்ணா வாழ முடியாது?” என்று கேள்வி எழுப்பினாள்.
“எப்படி முடியும்... நீ ஐ. ஏ. எஸ் முடிச்சிருக்க... உனக்குப் போஸ்ட்டிங் எங்க போட்டிருக்காங்களோ அங்கதான் நீ வேலை செஞ்சாகனும்... அங்கயே இருந்தாங்கனும்... என் பையன் அவங்க அப்பாவோட பிஸ்னஸ்ஸை பாத்துக்கனும்... அவன் உலகம் பூரா சுத்துவான்... இந்தியாவில் இருக்கும் போது கூட அவன் உன் கூட நீ வேலை செய்ற இடத்தில வந்து இருக்க முடியாது... அவன் இருக்கிற இடத்தில உன்னாலையும் இருக்க முடியாது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி உங்க வாழ்க்கையில் என்ன சந்தோஷம் இருக்கப் போகுது... இந்த யதார்த்தம் உங்க திருமணத்திற்குப் பிறகான காதலை காணாமல் போக வைச்சிடும்... அதுக்கு நீங்க இப்பவே பிரிஞ்சிட்டா பெட்டர்… இல்லயா ?” என்று மீனாக்ஷி தெளிவாய் நிலைமையை விளக்கினார்.
சிவசக்தியின் முகத்தில் இதைக் கேட்டுக் கலக்கம் உண்டாகும் என்று மீனாக்ஷி நினைத்தார். ஆனால் சிவசக்தி இயல்பாய் புன்னகைப் புரிந்து விட்டு,
“நீங்க சொல்ற யதார்த்தை நானும் ஏத்துக்கிறேன்... அது மறுக்க முடியாத உண்மையும் கூட... நாங்க இரண்டு பேரும் திருமணம் பண்ணி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறது கூடக் கொஞ்சம் சவாலான காரியம்தான்.
என் காதலை காப்பாற்ற எந்தச் சவாலையும் சமாளிக்கிற மனதைரியம் எங்களுக்கு இருக்கு மேடம்... இந்தக் காரணங்களுக்காக எல்லாம் பயந்து எங்க காதலை நாங்க விட்டுக் கொடுக்கவே முடியாது...” என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தாள்.
“இன்னைக்கு விட்டு கொடுக்கலன்னா நாளைக்கு அந்தக் காதல் இல்லாமலே போயிடலாம்... இப்போ பிரிஞ்சிட்டா அது வெறும் காதல் தோல்வி... திருமணத்திற்குப் பிறகு பிரிவு ஏற்பட்டா உங்க வாழ்க்கையே தோல்வி... எது பெட்டர் ஆப்ஷன்னு நீயே யோசிச்சு பாரு” என்றார் மீனாக்ஷி.
சிவசக்தி மீண்டும் புன்னகைப் புரிந்துவிட்டு,
“எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கலன்னு யார் சொன்னது?!” என்று கேட்க மீனாக்ஷி அப்படியே அதிர்ந்து போய்
“நீ என்ன சொல்ற?” என்று சிவசக்தியை கேட்டாள்.
“எப்போ நான் சக்தியோட காதலை புரிஞ்சிக்கிட்டு மனதளவில் காதலிக்க ஆரம்பிச்சேனோ அப்பவே நான் சக்தியை என்னோட கணவராதான் பார்க்கிறேன்... இனிமே நடக்கப் போகிற திருமணம் ஊருக்கு எங்க உறவை அறிவிக்கிற சடங்கு மட்டும்தான் “ என்று பதில் உரைத்தாள்.
இதைக் கேட்ட மீனாக்ஷியின் உறுதி தளர்ந்தது. ஒருவரை ஒருவர் சந்திக்காமல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் சிவசக்தியின் காதலும் அவளின் உறுதியும் மீனாக்ஷியை நெகிழச் செய்தது.
“சக்தியும் நீயும் கடைசியா எப்போ போஃன்ல பேசிக்கிட்டீங்க” என்று மீனாக்ஷி வினவ,
“கடைசியா ஆறு மாசம் இருக்கும்... டிரெய்னிங் ரொம்பச் சீரியஸா போயிட்டிருந்தது... அவரும் ரொம்பப் பிஸியா இருந்ததால்... பேசிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிக்கிட்டோம்” என்றாள்.
“நீ இப்போ சக்தியை மீட் பண்ணும் போது அவன் வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி இருந்தா நீ என்ன பண்ணுவ?!” என்று மீனாக்ஷி சொல்லிவிட்டு வேறுவிதமான உணர்ச்சிகளைச் சிவசக்தியிடம் எதிர்பார்த்தாள்.
ஆனால் அவள் முகத்தில் சிறு சலனமும் கூடத் தென்படவில்லை. அவள் புன்னகையோடு,
“சக்தி வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணுவாருங்கிற பேச்சுக்கே இடமில்லை... அப்படி ஒண்ணு சாத்தியமே இல்லை” என்று தீர்க்கமாய் உரைத்தாள்.
“சாத்தியம் இல்லைங்கிறது அப்புறம்... அப்படி ஒரு சூழ்நிலை வந்தா என்ன பண்ணுவ?”
“அப்படி ஒரு சூழ்நிலை வராதுன்னு போது அந்தக் கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்லனும்... நீங்க இல்லை... சக்தியே நேரடியா வந்து நான் வேற ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு சொன்னா கூட நான் நம்பமாட்டேன்... அதுவும் நிச்சயம் பொய்யாகத்தான் இருக்கும்” என்று சக்தி சொல்ல மீனாக்ஷி தன் மகன் மீதான அவளின் ஆழமான நம்பிக்கையைக் கண்டு வியந்து மௌனமாகி விட,
அந்தச் சமயத்தில் சிவசக்தியை நோக்கி வேறொரு குரல்,
“நானே சொன்னாலும் நம்பமாட்டியா சக்தி?” என்றது.
அந்தக் குரல் சக்திசெல்வனுடையது என்று அறிந்து கொண்ட மறுகணம் காரின் முன்புறத்தில் அமர்ந்து அவன் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தாள். ஆச்சரியப்படுத்துவதிலும் அதிர்ச்சி தருவதிலும் அவனுக்கு நிகர் அவனே.
எத்தனை நாளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்திப்பு நிகழ்கிறது. இத்தனை நேரம் உறுதியோடு மீனாக்ஷியின் கேள்விக்கெல்லாம் பதில் உரைத்துக் கொண்டிருந்த சிவசக்தியின் விழிகளின் வழியே ஆனந்தத்தினால் வெளிப்படும் அந்த நீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் தன் முகத்தை மூடிக்கொண்டாள்.
அவளின் அமைதியும் வெளிப்படும் அழுகையும் சக்திசெல்வனையும் கலங்கடிக்க, “சக்தி... என்னாச்சு?” என்று பதறினான்.
இன்னும் மீனாக்ஷியால் அவர்களின் உண்மையான காதலை புரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா என்ன? மீனாக்ஷி சிவசக்தியின் நிலையைப் புரிந்து கொண்டவாறு அவள் தோள்களை ஆறுதலாய் தடவி,
“சிவசக்தி ரிலாக்ஸ்... என் மகனுக்கு உன்னை விடப் பொருத்தமான வேறு ஒரு பெண்ணை என்னால் நிச்சயம் கொண்டு வரவே முடியாது... அவனின் காதலை நீ உதாசீனப்படுத்திறியோன்னு நான் உன் மேல கோபப்பட்டேன்...
ஆனா நீ பேசினதைக் கேட்ட பிறகு எனக்கு நல்லா புரியுது... நீயும் சக்தியை எந்தளவுக்குக் காதலிக்கிறன்னு... அதுவுமில்லாம அவன் மேல நீ வைச்சிருக்கிற நம்பிக்கையைப் பார்க்கும் போது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... ஐ ஹேவ் நோ வார்ட்ஸ் டூ ஸே... நீதான் சிவசக்தி என் மருமகள்... நான் முடிவே பண்ணிட்டேன்...” என்று சொல்லிவிட்டு மீனாக்ஷி தன் மகனின் புறம் திரும்பி,
“உன் டெசிஷன்தான் கரெக்ட் சக்தி... நான்தான் சிவசக்தியை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்... இப்போ நீ ஹேப்பிதானே” என்று மீனாக்ஷி கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் சக்திசெல்வன் காரை நிறுத்தினான்.
மீனாக்ஷியின் வார்த்தைகளைக் கேட்டு சிவசக்தி இப்போது முகத்தைத் துடைத்துக் கொண்டு தெளிவுப்பெற்றிருந்தாள்.
சக்திசெல்வன், “தேங்க்யூ மாம்... தேங்க்யூ சோ மச்... ஐம் வெரி ஹேப்பி” என்று ஆனந்தத்தின் மிகுதியால் வார்த்தை வராமல் அவன் தத்தளிக்க,
சிவசக்தி கொஞ்சம் குழப்பத்தோடு நடந்த நாடகமெல்லாம் என்னவென்று புரியாமல் இருவரையும் நோக்க மீனாக்ஷி நடந்தவற்றை அவளிடம் விவரித்தாள்.
“சக்தி துபாயில் இருந்து வந்த பிறகு உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பிடிவாதமா இருந்தான்... என்னாலயும் என் முடிவை விட்டுக் கொடுக்க முடியல... கடைசியா அவன் என்கிட்ட... நீங்க சிவசக்திக்கிட்ட ஒருதடவை பேசுங்க… அப்படி உங்களுக்குப் பிடிக்கலங்கிற பட்சத்தில் நீங்க பார்க்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான்” என்று மீனாக்ஷி உரைக்கச் சிவசக்தி விவரிக்க முடியாத கோபத்தோடு அவனை முறைத்தாள்.
அவள் பார்வையின் தாக்கத்தைத் தாங்க முடியாமல்
“என்ன மாம் நீங்க இப்படிப் போட்டு கொடுத்திட்டீங்க?” என்று மீனாக்ஷியிடம் கேட்க,
அவள் சிரித்தபடி, “நீ சொன்னதைத்தான் சொன்னேன் சக்தி... இதுல என் தப்பு என்ன?” என்று உரைத்த மறுகணம் “மாம்” என்று சக்திசெல்வன் முகத்தைச் சுருக்கினான்.
“சரி சிவசக்தி... நான் கோவிலுக்குப் போறேன்... நீங்க இரண்டு பேரும் பேசிட்டுச் சீக்கிரம் வந்து சேருங்க...” என்று காரை விட்டு மீனாக்ஷி உத்தர சுவாமிமலை கோவிலை நோக்கி நடந்து சென்றாள்.
அப்போதுதான் சிவசக்தி கார் நின்றிருப்பது கோவில் வாசலில் என்பதைக் கவனித்தாள். சக்திசெல்வன் தன் இருக்கையில் இருந்து இறங்கி சிவசக்தியின் அருகில் வந்து அமர அவள் கோபத்தோடு முறைத்துக் கொண்டிருந்தாள்.
“இப்போ எதுக்குடி முறைக்கிற... என் மேல உனக்கு இருக்கிற அதே நம்பிக்கை எனக்கு உன் மேல இருக்காதா என்ன? அதனாலதான் அவங்களை உன்கிட்ட பேச வைக்க அப்படிச் சும்மா சொன்னேன்” என்றான்.
“வேறு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சும்மா கூடச் சொல்வாங்களா... உங்க அம்மா என்கிட்ட பேசிட்டு பிடிக்கலன்னு சொல்லி இருந்தா?”
“அதெப்படி சொல்லுவாங்க... நீ எங்கம்மாவை நிச்சயம் கன்வின்ஸ் பண்ணிடுவேன்னு எனக்கு நிறைய நம்பிக்கை இருந்துச்சு... அப்படிச் சொன்னாதான் அவங்களை உன்கிட்ட பேச வைக்க முடியும்னு தோணுச்சு... நான் நினைச்ச மாதிரியே நீதான் அவங்க மருமகன்னு சொல்ல வைச்சிட்டியே சக்தி... யூ ஆர் கிரேட்.
ஆனா என்ன... நீ அம்மாகிட்ட பேசும் போது நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னதும் பயந்துட்டேன்... எங்க செய்யினை எடுத்து காண்பிச்சிருவியோன்னு... அப்புறம் மாம் எனக்குத் தெரியாம இது எப்போன்னு கேட்டு டென்ஷனாயிருப்பாங்க” என்றுசொல்லி சிரித்தான்.
சிவசக்தி மெல்லிய புன்னகையோடு, “அதெப்படி காட்டுவேன்? எனக்கு அந்தளவுக்குக் கூட அறிவில்லையா என்ன?!” என்றாள்.
“அட்லாஸ்ட் இவ்வளவு போராட்டத்துக்குப் பிறகு நாம நினைச்சது நடந்திடுச்சு... அதுவும் என்னாலயே கன்வின்ஸ் பண்ண முடியாத எங்க மாமை நீ கன்வின்ஸ் பண்ணிட்ட சக்தி” என்று சொல்லியபடி பெருமிதத்தோடு அவள் முகத்தை அவன் புறம் திருப்பித் தன் கரங்களால் தழுவ, அவனின் தொடுகை வெகுநாளின் தவிப்பையும் ஏக்கத்தையும் போக்க விழிகளை மூடி அவள் அவனின் தீண்டலை ரசித்தாள்.
எத்தனை நீண்டதொரு பிரிவிற்குப் பின் இருவரும் நேரெதிரே சந்தித்துக் கொள்ள, அவளின் அழகோடு கூடிய கம்பீரம் அவன் மனதை வெகுவாய்ச் சலனப்படுத்தியது.
அவளின் மௌனத்தையும் மூடியிருந்த விழிகளையும் சிவசக்தியின் சம்மதமாகக் கருதி அவனின் வெகுநாளான காதல் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளின் இதழை தன் இதழ்களோடு பிணைத்துக் கொண்டான்.
வறட்சியால் தவித்த பூமியை வானவன் தன் மழைக்கரத்தால் நனைத்து உயிர்ப்பிப்பது போல அவனின் பிரிவால் வறட்சியுற்றிருந்த அவளின் உதடுகளை நனைத்து அவன் அப்போது உயிர்ப்பிக்க அவளுமே சிறிது நேரம் அவனின் முத்தத்தில் மெய்மறந்து போனாள்.
சட்டென்று தன்னிலைக்குத் திரும்பியவள் அவனை விலக்கிவிட்டு,
“இடியட்... இது கோவில் வாசல்” என்றாள்.
“இவ்வளவு நேரம் கழிச்சுதான் தெரிஞ்சிதா மேடம்... இது கோவில் வாசல்னு” என்று சொல்லி சிரித்தான்.
சிவசக்தி தன் முகத்தைக் கார் முன்னே கண்ணாடியில் பார்த்துச் சரி செய்து கொள்ள சக்திசெல்வன், “இப்போ என்ன பண்ணிட்டேன்னு... இவ்வளவு சீன்?” என்றான்.
“கார்ல போய்... அதுவும் கோவில் முன்னாடி... உங்களுக்குக் கொஞ்சங் கூட விவஸ்த்தையே இல்லயா?” என்று அவனை மீண்டும் கடிந்து கொண்டாள்.
சக்திசெல்வன் சிரித்தபடி, “இது முருகன் கோவில்... துரத்தித் துரத்தி வள்ளியை காதலிச்சுத் திருமணம் பண்ண காதல் கடவுள்... என் காதலுக்கும் அவரே முன்னோடி... அவருக்கு என் உணர்வுகள் நல்லா புரியும்... தப்பா ஒண்ணும் நினைச்சிக்க மாட்டாரு” என்றான்.
“எல்லாத்துக்கும் ஒரு காரணம் வைச்சிருக்கீங்க... நல்லா” என்று சிவசக்தி உரைக்க அவன் அவள் கோபத்தோடு கூடிய அழகை அமைதியாய் ரசித்துக் கொண்டிருந்தான்.
அவள் மேலும், “காதலுக்கு மட்டும் முன்னோடியா முருகன் இருக்கட்டும்... மத்தபடி இராமனை பின்பற்றுங்க... போதும்” என்றாள்.
சக்திசெல்வன் அவளின் கைகளைப் பிடித்தபடி “என் சிவசக்தியை தவிர வேறொரு பெண்ணைச் சிந்தையாலும் தொடேன்... ப்ராமிஸ்” என்று கம்பராமாயணத்தில் இராமனின் சபதத்தை சக்திசெல்வன் தனக்கு ஏற்றவாறு மாற்றிச் சொல்ல சிவசக்தி புன்னகையோடு, “தேங்க்யூ” என்று சொல்லி அவன் தோளில் ஆதரவாய் சாய்ந்து கொண்டாள்.
“இப்போ இது கோவில் வாசல் இல்லையா சக்தி ?” என்று சிவசக்தியை நோக்கி சக்திசெல்வன் கேட்க, “ஆமாம் இல்ல” என்று சொல்லியபடி அவள் எழுந்து கொண்டு, “வாங்க கோவிலுக்குப் போகலாம்” என்றாள்.
இருவரும் காரை விட்டு இறங்கி கோவிலை நோக்கி நடந்தனர்.
சக்திசெல்வனும் சிவசக்தியிடம் கோவில் படிகெட்டுகளை ஏறியபடி,
“இந்தக் கோவிலில்தானே என்னை நீ முதலில் பார்த்தல்ல?!” என்று வினவினான்.
“ம்... ஞாபகம் இருக்கு... நீங்க காரிலிருந்து இறங்கி விறுவிறுன்னு கோவில் படிகெட்டு ஏறிப் போனீங்களே” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏதோ நினைவு வந்தவளாய்,
“அது சரி... அன்னைக்கு ப்ஃளைட் டிக்கெட் எப்படி உங்க கைக்கு வந்துச்சு” என்றாள்.
“எப்படியோ... இப்ப அத பத்தி என்ன?!” என்று சக்தி சொல்ல சிவசக்தி அப்படியே அசையாமல் நின்ற இடத்திலேயே நின்று அவனை முறைத்தாள்.
“சரி வாடி... சொல்றேன்” என்று சக்திசெல்வன் அவள் கோபத்தை உணர்ந்தவனாய் அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.
“இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா?” என்று சிவசக்தி அழுத்தமாய்க் கேட்க,
“நான் பேஸஞ்சர் லிஸ்ட்டை செக் பண்ணேன்... அப்போதான் நீ டிக்கெட் புக் பண்ணி இருக்கேன்னு தெரிஞ்சது... உடனே கீதாவை கான்டெக்ட் பண்ணேன்”
அவன் முழுவதுமாய்ச் சொல்லி முடிக்கும் முன்னரே சிவசக்தி என்ன நடந்திருக்கும் எனக் கணித்துவிட்டு அதிர்ச்சி அடைந்தவளாய்,“அப்போ கீதாவா?” என்றாள்.
“இப்போ எதுக்கு ஷாக்காகிற... நான்தான் அவளைக் கம்பெல் பண்ணி எடுத்துக் கொடுக்கச் சொன்னேன்... அவளும் எவ்வளவோ உன்னைக் கோவில்லையே என்னை மீட் பண்ண வைக்கக் கம்பிரமைஸ் பண்ணா... நீ தேவையில்லாம பிடிவாதம் பிடிச்சா... அவ என்ன பண்ணுவா பாவம்” என்றான்.
“அவளை!” என்று சொல்லி போஃனை கைகளில் எடுத்து கீதாவுக்கு டயல் செய்ய சக்தி அவள் கையில் இருந்த மொபைலை பறித்துக் கொண்டான்.
“இந்த அவசர புத்திதானே வேணாங்கிறது” என்றான் சிவசக்தியை மிரட்டியபடி.
அவள் வேகமாய் முன்னேறிச் சென்று, “என்னை ஏமாத்திறதே உங்களுக்கு வேலையா போச்சு” என்றாள்.
படிகெட்டுகளை ஏறி அவளை முந்தியடித்து நின்ற சக்திசெல்வன் சிரித்தபடி, “ஏமாத்திறவங்களை விட ஏமாறவங்க மேலதான் தப்பு மிஸ். சக்தி” என்றான்.
“ஓ... அப்போ என் மேலதான் தப்பா?”
“புரிஞ்சா சரி” என்றான்.
சிவசக்தி கையைக் கட்டி நின்றபடி, “நீங்க ஏமாத்தி என்னை டென்ஷன் பண்ண மாதிரி நானும் உங்களை ஏமாத்தி டென்ஷனாக்கல... என் பேர் சிவசக்தி இல்ல” என்றாள்.
“அது உன்னால முடியாது... அதுவுமில்லாம இந்தப் பேரை விட வேற பேர் உனக்குப் பொருத்தமாவும் இருக்காது டியர்” என்றான் ஏளனமான புன்னகையோடு.
“முயற்சி செய்யாம நான் தோல்வியை ஒத்துக்கவே மாட்டேன்”
“ட்ரை பண்ணு சக்தி... பட் யூ கான்ட்” என்று விரல்களை அசைத்தான்.
“ஐ கேன்... இட்ஸ் அச் சேலஞ்ச்” என்றாள்.
“இந்தச் சக்திசெல்வனுக்கே சவாலா?” என்று திமிரான தோரணையில் அவன் அவளைப் பார்க்க,
அவளும் துளியளவும் விட்டுக் கொடுக்காமல் அதே தொனியில்,
“சவால்தான்... இந்தத் தடவை ஏமாறப் போறது நீங்கதான் மிஸ்டர். சக்திசெல்வன்” என்றாள்.
இப்படியே இருவரும் பேசியபடி படிகெட்டு ஏறிக் கோவில் பிரகாரத்தில் நுழைய உள்ளே மீனாக்ஷி நின்றிருந்தாள். இருவரும் தங்கள் விவாதத்தை வேறுவழியின்றி நிறுத்திவிட்டு அமைதியாயினர்.
எப்போதும் இவர்கள் காதலுக்கு இடையில் ஒரு போட்டி நிலவியபடியே இருந்தது.
அவனை அவள் ஏமாற்றுவது கொஞ்சம் கடினம்தான் எனினும் சிவசக்திக்கு அத்தகைய புத்திக்கூர்மையும் தைரியமும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
அந்த அழகிய காதல் ஜோடிகள் அவர்கள் காதல் பயணத்தை முடித்துக் கொண்டு திருமணப் பந்தத்தில் இணைவதற்கான ஏற்பாடுகளை மீனாக்ஷி தாமதமின்றி விரைவாய்ச் செய்யத் தொடங்கினாள். எல்லோருமே எதிர்பார்த்திருந்த அந்த அழகிய தருணம் பெரும் போராட்டம் பிரிவுகளைக் கடந்து வந்தடைந்தது.
34